ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் தொழிலாளி!

5 posters

Go down

பாலியல் தொழிலாளி! Empty பாலியல் தொழிலாளி!

Post by jesudoss Sat Oct 01, 2011 11:55 am

"எப்படி இந்த விஷயத்தைக் கணவனிடம் சொல்லப் போகிறோம்...' என்று, திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள், சப்-இன்ஸ்பெக்டர் மாலதி.
காவல் துறையில், இடமாற்ற உத்தரவு வாங்குவது, அவ்வளவு சுலபம் இல்லை; அதற்கு, பல லட்ச ரூபாய் செலவாகும் என்று அவளுக்கு தெரியும். மதுரையில், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பணிபுரியும் அவள் கணவன், கை நிறைய சம்பளமும், பை நிறைய, "கிம்பளமும்' வாங்குபவன். எத்தனை லட்ச ரூபாய் ஆனாலும், தானே கொடுத்து விடுவதாகச் சொல்லி இருந்தான்.
திருமணமாகி, ஓர் ஆண்டு தனி தனியாக வாழ்ந்து, வார இறுதி நாட்களில், "சந்திப்பு' என்ற நிலைக்குப் பழகிக் கொண்ட பின், எல்லா நாளும் கணவனுடன் இருக்கலாம் என்ற செய்தி, மாலதிக்கு இனிக்கத்தான் செய்தது; ஆனால், அதற்கு இப்படி ஒரு விலையா?
தன்னுடைய இடமாற்ற உத்தரவுக்காகக் கேட்கப்பட்ட விலையை, கணவனிடம் சொல்வதா, வேண்டாமா என்ற குழப்பமும் இருந்தது. மாலதியின் புருஷன் மணி, இயற்கையிலேயே கோபக்காரன். இதைக் கேட்டு ஏதாவது அசம்பாவிதமாகச் செய்து விட்டால்...
மாலதியின் அலைபேசி அழைத்தது.
"ஏ.டி.எஸ்.பி., சேகர் பேசறேன்...'
"குட் மார்னிங் சார்!'
"சாஸ்திரி நகர்ல, ஒரு அபார்ட்மென்ட்ல மசாஜ்ங்கற பேர்ல, விபச்சாரம் நடக்கறதா தகவல் வந்துருக்கு!'
"எஸ் சார்!'
"பகல்லேயே நடத்தறாங்களாம். நீங்க சரியா, 11:00 மணிக்கு அங்க போங்க. கையும், களவுமா ஆளுங்களப் பிடிச்சிட்டு வந்துருங்க...'
"எஸ் சார்!'
மணி, 10:30 ஆகியிருந்தது. ஹெட் கான்ஸ்டபிள் பாண்டி வந்தவுடன் போகலாம் என்று தீர்மானித்தாள் மாலதி.
இந்தப் பாண்டிதான் அவளுக்கு ஆதரவாக இருக்கிறான். "மதுரைக்குப் பணி மாற்றம் வேண்டும்...' என்ற அவள் விண்ணப்பம், பல நாட்கள் கிடப்பிலேயே கிடந்தது. பாண்டிதான் அது இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து, அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே நகர்த்தினான். அந்த உத்தரவில் கையெழுத்து போடும் வல்லமையுடைய அதிகாரியின் மேஜைக்கு, அந்த விண்ணப்பம் போனவுடன், அவளை அழைத்துக் கொண்டு, அந்த அதிகாரியைப் பார்க்கப் போனான்.
அவனை வெளியே இருக்கச் சொல்லி, மாலதியிடம் தனியாகப் பேரம் பேசினார், அந்த உயர் அதிகாரி.
"நீங்க மதுரைக்கு டிரான்ஸ்பர் கேட்டிருக்கீங்க. பொதுவா, இதுக்கு இன்னிக்கு ரேட், இருபது லட்சம் ரூபாய்; ஆனா, உங்ககிட்ட நான் அதக் கேக்கப் போறதுல்ல!'
"அத' என்பதில், அவர் கொடுத்த அதிகப்படி அழுத்தம், அவர் எதைக் கேட்கப் போகிறார் என்பதை, அவளுக்குக் கோடிட்டு காட்டியது.
அசிங்கமாகச் சிரித்தபடி, அதைவிட அசிங்கமாகப் பேசினார் அதிகாரி...
"நான் அந்த விஷயத்துல கொஞ்சம் வீக். இல்ல, இல்ல... அந்த விஷயத்துல நான் ரொம்பவே, "ஸ்ட்ராங்!' சந்தேகம்ன்னா... பீச் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், செண்பகலட்சுமிகிட்ட கேட்டுப் பாருங்களேன்...
"அடுத்த வாரம் நான் கொடைக்கானல் போறேன். நீங்க என் கூட வரணும்; நாலே நாள் தான். உங்களுக்கு, "டூட்டி மார்க்' பண்ணச் சொல்லிடறேன். திரும்பி வந்தவுடன், உங்க, "டிரான்ஸ்பர் ஆர்டர்' ரெடியா இருக்கும்; என்ன சொல்றீங்க?'
என்ன சொல்வது?
"இப்போ ஒண்ணும் சொல்ல வேண்டாம்; ரெண்டு நாள் யோசிங்க. டிரான்ஸ்பர் வேணும்ன்னா இந்த நம்பருக்குப் போன் பண்ணுங்க. இப்ப நீங்க போகலாம்!'
பேய் அறைந்ததைப் போல் வெளியே வந்தாள் மாலதி. இதை யாரிடமும் சொல்லக் கூடாது என, கங்கணம் கட்டிக் கொண்டாள்.
அவள் சொல்லாமலேயே, கண்டுபிடித்து விட்டான் பாண்டி.
"பணம் தவிர, வேற எதாவது கேட்டாரா மேடம்?'
உயிரில்லாமல், தலையாட்டி, நடந்ததைச் சொன்னாள்.
"யதார்த்தமா யோசிச்சிப் பார்த்து முடிவெடுங்க மேடம். இந்தாளு சொன்னா, கரெக்டா செஞ்சிடுவாரு; அந்த விஷயத்துல நேர்மையான ஆளு!'
"என்ன எழவு நேர்மையோ...' என்று அலுத்துக் கொண்டாள் மாலதி.
"என்ன மேடம் யோசனையில இருக்கீங்க?'
பாண்டியின் பேச்சு, அவள் நினைவலைகளைக் கலைத்தது.
"பாண்டி... நாலு லேடி கான்ஸ்டபிள்களைக் கூட்டிக்கிட்டு, உடனே கிளம்பணும். "பிராத்தல்' ரெய்டு செய்யப் போறோம்...'
"எங்க மேடம்?'
"அடையாறு சாஸ்திரி நகர்ல...' விலாசத்தைச் சொன்னாள்.
"அங்க வேண்டாமே மேடம்' வழிந்தான் பாண்டி.
"ஏன்யா...'
"நான் அவங்க கஸ்டமர் மேடம்... எனக்கு ரெகுலரா ஒரு ஆள் வரும். சரோஜான்னு பேரு. சூப்பர்...'
"த்தூ... உனக்கெல்லாம் எவன்யா போலீஸ்ல வேலை கொடுத்தது?'
தன்னைத் தகாத உறவுக்கு அழைத்த உயரதிகாரியிடம் சொல்ல முடியாத வார்த்தைகளை, பாண்டியிடம் சொன்னாள் மாலதி.
மதியம், 1:00 மணி —
சாஸ்திரி நகரில், சற்று ஒதுக்குப்புறமாக இருந்த வீட்டில் நடத்திய அதிரடி சோதனையின் விளைவாக, நான்கு, "அழகி'கள் மற்றும், "தொழில்' நடத்திக் கொண்டிருந்த நடுத்தர வயதுப் பெண்மணியையும் ஜீப்பில் அள்ளிப் போட்டு, அழைத்து வந்தனர்.
மற்றவர்கள் அடங்கி, ஒடுங்கியிருக்க, பாண்டியின் ஆளான சரோஜா தான், துள்ளிக் கொண்டிருந்தாள்.
"யோவ் என்னய்யா... யாரும் வரமாட்டங்கன்னு சொன்ன?'
நெளிந்து கொண்டிருந்தான் பாண்டி.
"ஏய் மரியாதையாப் பேசு... அவரு, ஹெட் கான்ஸ்டபிள் தெரியும்ல?'
"அவரு என்னோட கஸ்டமர்; அது, உங்களுக்குத் தெரியும்ல?'
"வாய மூட்றி!'
"ஏன்க்கா கோச்சிக்கறீங்க?'
முன் சீட்டில் அமர்ந்திருந்த மாலதி திரும்பி, சரோஜாவின் முகத்தில் அடித்தாள். அடியின் வேகத்தில் நிலைகுலைந்து விழப் போனவளை, மற்ற பெண்கள் தாங்கிப் பிடித்தனர்.
"யாருக்கு யாருடி அக்கா? இன்னொரு தரம் அந்த வார்த்தையச் சொன்ன, அறுத்துருவேன்...'
"சரிக்கா.... இனிமே அப்படிச் சொல்லல...'
மீண்டும் ஒரு முறை, திரும்பி தன் பலத்தை எல்லாம் திரட்டி, சரோஜாவை அடித்தாள் மாலதி.
"இன்னொரு தரம் அந்த வார்த்தையக் கேட்டேன், கொலையே செஞ்சுருவேன்...'
ஸ்டேஷனுக்கு வந்தவுடன், மாலதி முன், தலையைச் சொறிந்தபடி நின்றான் பாண்டி.
"என்னய்யா?' மாலதியின் குரலில் எரிச்சல் இருந்தது.
"மேடம்... அந்தப் பொண்ண மட்டும் விட்ருவோம்... எனக்காக, ப்ளீஸ்!'
"ஏன்...' உன் ஆளுங்கறதுனாலயா? அப்படின்னா, அவள இங்கேயே வச்சி, மாலை மாத்தி, கல்யாணம் பண்ணிக்கோ. அவள விட்டுடறேன்; என்ன சொல்ற?'
லாக்-அப்பில் இருந்த சரோஜா, பலமாக கை தட்டினாள்.
"சூப்பர் யக்கோவ்!'
தன் கையில் இருந்த தடியை, சரோஜாவைப் பார்த்துத் தூக்கியெறிந்தாள் மாலதி.
தொய்ந்து போன முகத்துடன், விலகிச் சென்று விட்டான் பாண்டி.
"பாண்டி... எல்லாருக்கும் பிரியாணிப் பொட்டலமும், டீயும் வாங்கிக் கொடுத்துரு. நாளைக்குக் காலையிலதான் கோர்ட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போக போறோம். சாயங்காலமா எப்.ஐ.ஆர்., போட்டுக்கலாம்...'
சுரத்தில்லாமல், "சரி' என்றான் பாண்டி.
அவன் கையில், தனியாக, நூறு ரூபாயை வைத்தாள் மாலதி.
"உன் ஆளுக்கு ஏதாவது ஸ்பெஷலா வாங்கிக் கொடு...'
பாண்டியின் முகம் மலர்ந்தது.
"ஸ்டேஷன பார்த்துக்கோய்யா... நான் சாப்ட்டுட்டு வந்துடறேன். உன் ஆளோட பேசு; ஆனா, அத்துமீறாமல் பாத்துக்க... சரியா?'
"எஸ் மேடம்...'
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மாலதியின் கணவன் அவளை அழைத்தான்.
"போன விஷயம் என்னாச்சு?'
"அது, வந்து... வந்து...'
"ஏன் இழுக்கற... விஷயத்தச் சொல்லு. பணம் நிறையக் கேட்டாங்களா... எவ்வளவு கேட்டாலும் கொடுத்துருவோம்!'
"பணம் கேக்கலைங்க...'
"அப்புறம்?'
தட்டுத் தடுமாறி விஷயத்தைச் சொன்னாள் மாலதி. தன் கணவன் கோபம் வந்து, "காச் மூச்' என்று கத்தப் போகிறான் என்று நினைத்தாள். ஒரு வேளை, "இந்த போலீஸ் வேலையே வேண்டாம்; நான் சம்பாதிப்பதே நமக்குப் போதும்...' என்று சொல்லி விடுவான் என, எதிர்ப்பார்த்தாள். அப்படிச் சொன்னால், உடனே வேலைக்குத் தலை முழுகி, மதுரைக்கு ரயில் ஏறிவிட வேண்டியதுதான் என்றும் தீர்மானித்தாள்.
"அப்பா... என் வயத்துல பால வார்த்த செல்லம். 20 - 30 லட்ச ரூபாய் கேட்டிருவாங்களோன்னு பயந்து போயிட்டேன். நான் வீடு வாங்கறதுக்காக வச்சிருந்த பணத்தக் கொடுக்கணுமேன்னு நெனச்சேன். பைசா செலவில்லாம காரியம் முடியணும்ன்னு இருக்கு. வண்டியூர் மாரியம்மன நல்லாக் கும்பிட்டுக்கிட்டு, ஆபீசர் கூட போயிட்டு வந்துரும்மா!'
தன் சாப்பாட்டு இலையிலேயே வாந்தி எடுத்து விட்டாள் மாலதி.
அது எப்படி... ஒரே வாக்கியத்திலேயே, "சோரம் போ... மாரியம்மனைக் கும்பிட்டுக்கோ...' என்று, தன் கணவனால் பேச முடிகிறது?
கல்லாவில் அமர்ந்திருந்த ஓட்டல் முதலாளி ஓடி வந்தார்.
"நீங்க வேற இடத்துல போய் உக்காருங்க மேடம். உங்களுக்குப் புதுசா இலை போட்டு, சாப்பாடு போட சொல்றேன்...'
"வேண்டாம் சார்... என்னால சாப்பிட முடியாது; வயிறு சரியில்ல. நான் வர்றேன்...'
மாலை, 4:00 மணி வாக்கில், தன் காவல் நிலையத்துக்கு வந்து சேர்ந்தாள் மாலதி. லாக்-அப்பில் இருந்த சரோஜாவுடன், சல்லாபம் செய்து கொண்டிருந்த பாண்டி, அவளைப் பார்த்ததும், சட்டென்று விலகி ஓடி வந்து, விறைப்பாக ஒரு சல்யூட் வைத்தான்.
"என்ன மேடம்... சோர்ந்து போயிருக்கீங்க; சாப்பிடலையா?'
"சாப்பிட முடியல பாண்டி!'
"ஏன் மேடம்?'
தன் கணவன் சொன்னதை கூறினாள்.
"அப்புறம் என்ன மேடம்... அவரே ஓ.கே., கொடுத்துட்டார்ல, ஆபீசருக்குப் போனப் போட்டு, விஷயத்தச் சொல்லுங்க. காரியத்த முடிங்க மேடம். ஆபீசர்கிட்ட பேசும் போது, என்னப் பத்தி நாலு நல்ல வார்த்த சொல்லுங்க மேடம்...'
மாலதிக்கு வெறுப்பாக இருந்தது; ஸ்டேஷனுக்குள் இருக்கவே பிடிக்கவில்லை.
பால் வியாபாரிகள், சாலை மறியல் செய்து கொண்டிருப்பதாகத் தகவல் வரவே, உடனே கிளம்பிப் போய் விட்டாள் மாலதி.
இரவு, 7:00 மணிக்கு திரும்பி வந்த போது, லாக்-அப் கதவோடு ஒட்டி நின்றபடி, சரோஜாவைக் கொஞ்சிக் கொண்டிருந்தான் பாண்டி.
இந்தக் கழுதைகளை நாலு தட்டுத் தட்டி, விசாரித்து, எப்.ஐ.ஆர்., போடுவோம் என்று தீர்மானித்தாள் மாலதி.
விஷயத்தைச் சொன்னவுடன், லாக்-அப் அறைக்குள் மாலதிக்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டான் பாண்டி.
"சரியா சாப்பிடலையாக்கா... முகத்துல சுரத்தேயில்லையே!'
சரோஜா, "அக்கா பாட்டு' பாட ஆரம்பித்தவுடன், மாலதிக்கு எங்கிருந்துதான் அந்த கொலை வெறி வந்ததோ தெரியவில்லை. பாண்டி கையில் இருந்த லத்தியைப் பிடுங்கி, சரோஜாவின் வாயிலேயே போட்டாள்.
சரோஜாவின் சில பற்கள் உடைந்து, உதடு கிழிந்து, ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. நல்ல வேளையாக, சரியான சமயத்தில் தடுத்து நிறுத்தி விட்டான் பாண்டி. இல்லாவிட்டால், மாலதிக்கு இருந்த ஆத்திரத்துக்கு, சரோஜா, லாக்-அப்பிலேயே சமாதி ஆகியிருப்பாள்.
"காசுக்கு முந்தி விரிக்கிற கழுதைக்கு, என்னோட என்னடி அக்கா உறவு? இனி ஒரு தரம் அக்காங்கற வார்த்தையக் கேட்டேன், கொலை செய்துருவேன்...'
சரோஜாவுக்குத் தாங்க முடியாத வலி; கண்கள் நிரம்பி விட்டன. தன் கைகளால் அடிபட்ட வாயை மூடியபடி, மாலதியைக் கோபத்துடன் முறைத்துப் பார்த்தாள்.
"வேசித்தனம் செய்யறவளுக்கு அக்கா உறவு கேக்குதாக்கும்?'
அதற்கு மேல் சரோஜாவால் பொறுக்க முடியவில்லை. கையை வாயிலிருந்து எடுத்தாள்.
"நீ செய்யறது என்னவாம்?'
பூட்ஸ் அணிந்த தன் கால்களால், சரோஜாவின் இடுப்பில் மாறி, மாறி உதைத்தாள் மாலதி.
"சும்மா இரு கழுதை!' சரோஜாவை அடக்க முயன்று கொண்டிருந்தான் பாண்டி.
"நான் காசுக்காகப் படுக்கறது வேசித்தனந்தான்; நீ டிரான்ஸ்பருக்காக, ஆபீசரோட படுக்க நினைக்கிறது, பத்தினி விரதமா? நானாவது சோத்துக்கில்லாம செய்யறேன்; நீ இன்னும் சொகமா வாழணும்ன்னு செய்யற. அதுக்கு உன் புருஷனே உடந்தை!'
"த்தூ...' என்று சரோஜா துப்பிய போது, ரத்தத்தோடு சேர்ந்து அவளது உடைந்த பற்களும் கீழே விழுந்தன.
அவளை மிதிப்பதற்காக மாலதி தூக்கிய கால், அப்படியே அந்தரத்தில் நின்று கொண்டிருந்தது.
பின் மாலதி விடுவிடுவென்று வெளிய போய் விட்டாள்.
""பாண்டி... எல்லாத்தையும் வெளிய விட்ருய்யா. எப்.ஐ.ஆர்., போட வேண்டாம். மதியம் நாம அங்க போகும் போது, யாருமேயில்லன்னு சொல்லிரு; புரியுதா?''
மற்றவர்கள், விட்டால் போதும் என்று ஓடி விட்டனர். சரோஜா மட்டும் தயங்கி, தயங்கி மாலதியின் இருக்கைக்கு வந்தாள்.
நிமிர்ந்து பார்த்தாள் மாலதி. சரோஜாவின் உடம்பு அந்தத் தொழிலுக்கே உரித்தான வாளிப்புடன் இருந்தது என்றாலும், முகத்தில் அதீதமான வாட்டம் இருந்தது.
""புருஷன் தான் சொல்றானேன்னு ஏடாகூடமா எதுவும் செஞ்சிராதே; ஆம்பிளைங்க அத மறக்கவே மாட்டாங்க. நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது, "ஆபீசர் உன்ன அங்க தொட்டானா... இங்க தொட்டானா...'ன்னு அசிங்கமா கேட்டுக்கிட்டே இருப்பான்; நான் வர்றேன்க்கா!''
இந்த முறை சரோஜா, "அக்கா...' என்று அழைத்த போது, மாலதிக்குக் கொஞ்சம் கூடக் கோபம் வரவில்லை.
***
dinamalar


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பாலியல் தொழிலாளி! 154550 பாலியல் தொழிலாளி! 154550 பாலியல் தொழிலாளி! 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

பாலியல் தொழிலாளி! Empty Re: பாலியல் தொழிலாளி!

Post by மகா பிரபு Sat Oct 01, 2011 12:21 pm

சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பாலியல் தொழிலாளி! Empty Re: பாலியல் தொழிலாளி!

Post by ranhasan Sat Oct 01, 2011 12:42 pm

ரொம்ப நல்ல கதை ஜேசுதாஸ்... கதை படிக்கும்போதே கற்பனை ஓட்டத்தில் காட்சிகள் தெரிகின்றன... நல்ல திரைக்கதை... இறுதியில் சரோஜா பேசிய வசனம் மிகவும் அருமை.. பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி... மகிழ்ச்சி


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பாலியல் தொழிலாளி! Boxrun3
with regards ரான்ஹாசன்



பாலியல் தொழிலாளி! Hபாலியல் தொழிலாளி! Aபாலியல் தொழிலாளி! Sபாலியல் தொழிலாளி! Aபாலியல் தொழிலாளி! N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பாலியல் தொழிலாளி! Empty Re: பாலியல் தொழிலாளி!

Post by அருண் Sat Oct 01, 2011 2:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி பகிர்ந்தமைக்கு நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பாலியல் தொழிலாளி! Empty Re: பாலியல் தொழிலாளி!

Post by உதயசுதா Sat Oct 01, 2011 3:31 pm

இந்த கதை ஏற்கனவே போன வாரம் இங்க படிச்சா மாதிரி இருக்கே யேசுதாஸ்


பாலியல் தொழிலாளி! Uபாலியல் தொழிலாளி! Dபாலியல் தொழிலாளி! Aபாலியல் தொழிலாளி! Yபாலியல் தொழிலாளி! Aபாலியல் தொழிலாளி! Sபாலியல் தொழிலாளி! Uபாலியல் தொழிலாளி! Dபாலியல் தொழிலாளி! Hபாலியல் தொழிலாளி! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாலியல் தொழிலாளி! Empty Re: பாலியல் தொழிலாளி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum