புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_m10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10 
80 Posts - 46%
heezulia
மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_m10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10 
76 Posts - 44%
mohamed nizamudeen
மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_m10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10 
5 Posts - 3%
prajai
மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_m10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10 
3 Posts - 2%
vista
மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_m10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_m10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10 
2 Posts - 1%
mini
மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_m10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10 
1 Post - 1%
Anthony raj
மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_m10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10 
1 Post - 1%
balki1949
மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_m10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_m10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_m10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10 
437 Posts - 57%
heezulia
மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_m10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10 
274 Posts - 36%
mohamed nizamudeen
மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_m10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10 
24 Posts - 3%
prajai
மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_m10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_m10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்

3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_m10மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 29, 2011 1:03 am

மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Img1110928041_1_1

அரசியலில் மறைக்கத் தெரிந்தவரே பிழைக்கத் தெரிந்தவர் என்றொரு சொற்றொடர் உண்டு. தெரிந்தாலும் காட்டிக்கொள்ளக் கூடாது, தெரிந்ததை தனக்கு சாதகமான நேரத்தில் அரசியலாக்கி, தனது வளர்ச்சிக்குத் தடையாக உள்ள தலைவரை காலி செய்துவிட்டு முன்னெற வேண்டும். இதையும் தானாக, நேரிடையாகச் செய்யக் கூடாது, இன்னொருவரை விட்டுச் செய்ய வேண்டும். இந்த வித்தையெல்லாம் தனக்கு கை வந்த கலை என்பதை, விமான பயணத்தில் அளித்த பேட்டியில் நிரூபித்திருக்கிறார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.

ஐ.நா. பொதுச் சபையின் 66வது கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு, விமானத்தில் நாடு திருப்பும்போது, தன்னோடு பயணித்த கிளிப் பிள்ளைகளுடன்... மன்னிக்கவும், பத்திரிகையாளர்களுக்கு மன்மோகன் சிங் அளித்த பேட்டியில், அவரிடம் கேட்கப்பட்ட வினாக்களுக்கு அவர் அளித்த பதில்தான் அவருடைய அரசியல் நிபுணத்துவத்தைக் காட்டுகிறது. பொருளாதார நிபுணராக அறியப்பட்டவருக்குள் இவ்வளவு சாமர்த்தியம் ஒளிந்திருக்கிறதா? ஆங்கில நாளிதழைப் படித்தபோது மிகுந்த வியப்பு ஏற்பட்டது!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், 2008இல் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் ‘பங்கு’ தொடர்பாக இப்போது நிதியமைச்சராக உள்ள பிரணாப் முகர்ஜி எழுதி பிரதமருக்கு அனுப்பிய ‘நோட்’டால் இரு அமைச்சர்களுக்கும் ஏற்பட்டுள்ள ‘இடைவெளி’ நாடறிந்த இரகசியமாகும். ஏனெனில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏலம் நடத்தி ஒதுக்கீடு செய்வதுதான் சரியாக இருக்கும் என்று சொல்லிவிட்டு, இருந்தாலும் இந்த பிரச்சனையை இத்துடன் முடிந்ததாக கருதிடலாம் என்று ப.சிதம்பரம் பிரதமருக்கு எழுதிய அனுப்பிய அறிக்கையும், அதனை ஏற்று பிரதமர், தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.இராசா, தன் இஷ்டம் போல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வழிவகுத்ததுமதான் கொடிகட்டுப் பறக்கும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலின் அடிநாதமாகும்.

நிதியமைச்சர் பிரணாப் அனுப்பிய ‘நோட்’ காரணமாக, அவருக்கும் சிதம்பரத்திற்கும் இடையே உருவான பனிப்போரும், அதன் காரணமாக ஒரு பக்கம் சிதம்பரம் சோனியா காந்தியை சந்தித்து தான் பதவி விலக தயார் என்று கூறியதும், தனது நோட்டு குறித்து விளக்க பிரணாப் முகர்ஜி நியூ யார்க்கிற்குப் பறந்து பிரதமரிடம் சந்தித்ததும் பெரும் செய்திகளானது. இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் வினவியதற்கு பிரதமர் அளித்த பதிலைப் பாருங்கள்: “நீங்கள் பேசும் அந்த பிளவு என்பதெல்லாம் ஊடகங்களில்தான் உள்ளது. இந்த அரசு மிகவும் ஒற்றுமையுடன் உள்ளது. அதற்குள் எந்த அதிருப்தியும் இல்லை. சிதம்பரத்திற்கும் பிரணாப் முகர்ஜிக்கும் இடையே மோதல் நடந்து வருவதாக ஊடகங்களில் வெளிவருவதில் எந்த உண்மையும் இல்லை” என்று மிக அழகாக சிரித்துக்கொண்டே முழு பூசணிக்காயை சக்சஸ்புல்லாக சோற்றில் மறைத்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் ஒவ்வொரு அமைச்சராக விழுங்கி வரும் நிலையில், வரிசையில் நிற்கும் அடுத்த நபர் சிதம்பரம் என்பது கண்கூடு. இன்றைக்கு தனது அமைச்சரவைக்கு வந்துள்ள ஆபத்து, நாளைக்கு தனது ஆட்சிக்கு வரும் ஆபத்து என்பதை நன்றாக புரந்துகொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், “இந்தப் பிரச்சனை (2ஜி) முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதானது. அதற்குப் பிறகு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் தேர்வு செய்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். எப்படி இருக்கிறது சமாளிப்பு!

2009ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 2ஜி அலைக்கற்றை ஊழல் என்பது மககள் அறியாத பிரச்சனையல்லவா? பிறகு மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் உட்கார வைத்துவிட்டார்கள் என்று கூறுவது, முந்தைய ஆட்சியில் நடந்த ஊழலுக்காக இன்றைய ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க முடியாது என்று கூற முடியுமா? இருந்தும் சாதிக்கிறார் மன்மோகன் சிங். பதவியின் மீதான அவரின் பற்று அந்தப் பதிலின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ளது.

“எங்களுக்கு மக்கள் 5 ஆண்டுக்காலம் ஆட்சி செய்ய வாக்களித்துள்ளார்கள். அதுவரை எதிர்க்கட்சிகள் பொறுமையுடன் இருக்க வேண்டும்” என்று கூறுகிறார். ஏதோ இந்திய மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தனித்த பெரும்பான்மை அளித்ததுபோல் பேசுகிறார் பிரதமர்! காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற இடங்கள் 200 தான். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் இவருடைய அரசு நகர்ந்துக்கொண்டிருக்கிறது. அதற்கே அவ்வப்போது நிறைய பணத்தை இறைக்க வேண்டியிருக்கிறது. உண்மையைக் கூறுவதென்றால், காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் அளவிற்கு மக்கள் தெளிவான வாக்கை அளிக்கவில்லை (Not a clear mandate) என்பதே உண்மையாகும்.

அதுமட்டுமல்ல, தனது ஆட்சிக்கும், பதவிக்கும் ஆபத்து வந்துள்ளதை நாட்டிற்கே ஆபத்து வந்துவிட்டது போல் பெரிதாக அளந்துள்ளார் மன்மோகன் சிங். இது இந்திரா காந்தி கடைபிடித்த சாணக்கியத்தனமல்லவா? தனது பதவிக்கு ஆபத்து வந்துபோது, நாட்டிற்கே ஆபத்து வந்துவிட்டதைப் போல் பரப்புரை செய்து (அப்போதும் ஊடகங்களின் துணை இருந்தது), அவசர நிலையை பிரகடனம் செய்து, ஜனநாயக அமைப்பிற்கு வாய்ப்பூட்டு போட்டார். “ஆட்சி செய்ய தங்களுக்கு மக்கள் தெளிவான வாக்களித்த பின்னரும், தேர்தலை நோக்கி எதிர்க்கட்சிகள் அழுத்தம் அளிப்பதால், நாட்டின் அரசியலை நிலைகுலையச் செய்ய சில சக்திகள் முயற்சிப்பதாக ஐயப்படுகிறேன்” என்றும் பூச்சிக்காட்டியுள்ளார். தனக்கு வந்த ஆபத்தை நாட்டின் அரசியல் அமைப்பிற்கே வந்த ஆபத்தாக சித்தரிக்கிறார். ஊழலால் நாடே நாறிக்கொண்டிருக்கிற நிலையில், மன்மோகன் சிங் அரசு இன்று மாலையே கூட பதவியில் இருந்து ஒழிந்துபோனால், அதற்காக நாட்டு மக்கள் கவலைப்படுவார்களா என்ன? இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் ஒழிவதை விட, இந்த ஊழல் ஆட்சி இன்றே ஒழிந்ததே என்று நிம்மதி பெருமூச்சுதான் விடுவார்கள்.

மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 29, 2011 1:04 am

பணவீக்கம் மட்டும்தான், மற்றபடி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகள் எல்லாம் வெற்றி பெற்றுள்ளன என்று கூறியுள்ளார். ஒவ்வொரு நாளும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துக்கொண்டெ இருக்கிறது. கடந்த ஆண்டு விலையோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் குறைந்தது 10 விழுக்காடு விலை உயர்ந்துள்ளதாக வாரா வாரம் - வியாழன் தோறும் அரசே அறிக்கை அளிக்கிறது. இது மொத்த விலை நிலவரம். சில்லரையில் வாங்கும் சாதாரண மக்களுக்கல்லவா தெரியும் இந்த விலையேற்றம் எத்தனை மடங்கு என்று. ஆனால் தனது ஆட்சியின் கொள்கை வெற்றி பெற்றுள்ளது என்று கூசாமல் கூறுகிறார். புள்ளி விவரங்களைக் கொண்டு ஏமாற்றும் பொருளாதார நிபுணர்களை வைத்துக்கொண்டு, இவர்கள் சொல்லுவதையெல்லாம் வெளியிட ஊடகங்கள் இருப்பதனால், நம்பிக்கையுடன் பேசுகிறார் மன்மோகன் சிங்!

“இந்த பிரச்சனைக்குரிய ஆண்டில் கூட, நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 முதல் 8.5 விழுக்காடாக இருக்கும்” என்று தன்னைத்தானே முதுகில் தட்டிக்கொடுத்துக் கொள்கிறார். ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 9 விழுக்காடு வரை நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி உள்ளதே, அப்படியானால் அதன் பலன் நாட்டு மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் கிடைத்திருக்க வேண்டுமல்லவா? உதாரணத்திற்கு இவர் பிரதமராக இருந்த இந்த ஏழு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 9 விழுக்காடு பொருளாதாரம் வளர்ந்துள்ளது என்றால், 2004-05வது ஆண்டிலிருந்து இன்று வரை இந்த நாட்ட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது கூட்டுக்கணக்காக ஒன்றரை மடங்கு வளர்ந்திருக்க வேண்டுமல்லவா? அதற்கான அத்தாட்சி எங்கு இருக்கிறது? நிரூபிக்க முடியுமா இந்த அரசால்? ஆனால், விலைவாசி இதே ஏழு நிதியாண்டுகளில் 70 விழுக்காடு உயர்ந்திருக்கிறதே, அதுவும் மொத்த விலை குறியீட்டில், பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது என்றால், விலைவாசி குறையுமா? உயருமா?

அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார பின்னடைவு அந்த நாட்டை நிலைகுலையச் செய்துள்ளது. அங்கு பொருளாதார வளர்ச்சி என்பதே இல்லை. மக்களின் வாங்கும் சக்தி குறைந்த காரணத்தினால் பொருட்களின் விலை மலிவாகிவிட்டதே. அதே நேரத்தில் கடந்த ஆண்டில் ஒரு மாதத்தில் மட்டும் தங்களுடைய நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5 விழுக்காடு அதிகரித்துள்ளதாக கூறிய அமெரிக்க அரசு, அதன் காரணமாக 5 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறியது. இதுவல்லவா பொருளாதார வளர்ச்சியின் விளைவு. அப்படி ஏதாவது ஒரு ஆண்டிலாவது வேலை வாய்ப்பு வளர்ச்சி அதிகரித்திருக்கிறது என்று இந்திய அரசால் கூற முடியுமா? இங்கு ஏற்படும் வேலை வாய்ப்பு வளர்ச்சி அனைத்தும் - தகவல் தொழில் நுட்பம், சேவைத் துறை உட்பட - அயல் நாட்டு நிறுவனங்கள் இந்திய நாட்டு நிறுவனங்களுக்கு அளித்துள்ள பணி வாய்ப்புகளால் கிடைத்தது மட்டுமே அல்லவா? மறுக்க முடியுமா?

கடன் சுமை தாங்காமல் ஒரு பக்கம் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள், மறுபக்கம் இந்தியாவின் நகரங்களில் நாளுக்கு நாள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஆயினும் நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது என்கிறார் பிரதமர். ஒருவேளை அவருக்குத் தெரிந்த பெருநிறுவனங்களின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சி என்று கூறுகிறாரோ?

இப்படியெல்லாம் கேள்வி எழுப்பும் முதன்மை ஊடகங்கள் இந்த நாட்டில் இல்லை. எனவே புள்ளி விவரத்தைக் கொண்டு மிகச் சுலபமாக ஏமாற்றிவிட முடிகிறது. அதனைத் தெளிவாகச் செய்கிறார் பொருளாதார நிபுணத்துவம் பெற்ற நமது பிரதமர் மன்மோகன் சிங்.

நாட்டின் பொருளாதார ‘வளர்ச்சி’க்கு இணையாக, ஒவ்வொரு ஆண்டும் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக மன்மோகன் சிங் நன்றாகவே வளர்ந்துள்ளார். இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் மிகவும் கவலைப்பட வேண்டும்.

கா.அய்யநாதன்

மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011
http://rsuresh.weebly.com

Postசுரேஷ் Thu Sep 29, 2011 2:21 am

நாட்டையும் நாட்டு மக்களையும் நன்றாக ஏமாற்றுகிறார்கள்............

கோபம்
சுரேஷ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சுரேஷ்

நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக