புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10 
91 Posts - 61%
heezulia
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10 
7 Posts - 5%
eraeravi
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10 
283 Posts - 45%
heezulia
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:15 am

First topic message reminder :

அல்லாஹ், வானவர், வேதம், நபிமார்கள், மறுமைநாள், விதி ஆகிய ஆறின் மீதும் முழுமையான நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிம்; மீதுள்ள கடமையாகும். இதில் ஒன்றை நம்பி, ஒன்றை எற்க மறுத்தாலும் ஒருவன் இறை நம்பிக்கையாளனாக முடியாது.

இந்த ஆறின் மீதும் முழுமையான நம்பிக்கை உள்ள ஒருவனே இறை நம்பிக்கையானன் என்ற பெயர் பெறலாம். இஸ்லாம் எனும் வட்டத்திற்குள் இருக்கலாம். இதில் எந்த ஒன்றை மறுத்தாலும் அவன் ‘இறை நம்பிக்கையாளன் இல்லை’ என இஸ்லாம் அறிவிக்கிறது.

மக்காவில் வாழ்ந்த இணைவைப்போர், அல்லாஹ்வை நம்பி இருந்தனர். இறை மறுப்பாளர்கள், நரகத்திற்குரியவர்கள் என அறிவிக்கப்பட்ட அபூஜஹல், அபூலஹப், உத்பா, ஷைபா போன்றோர் ‘அல்லாஹ்’வையும் கடவுள் என நம்பினர் என்பதை திருக்குர்ஆன் மூலமே நாம் அறியமுடிகிறது.

அவர்களைப் படைத்தது யார்? என அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று தான் கூறுவார்கள்… (அல்குர்ஆன் 43:87)

வானங்களையும், பூமியையும் படைத்தது யார்? ஏன அவர்களிடம் நீர் கேட்டால், ‘அல்லாஹ்’ என்று தான் பதில் கூறுவார்கள்.. (அல்குர்ஆன் 31:25. 39:38)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:32 am

1- புகை மூட்டம்

வானம் தெளிவான புகைகளை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும். இது கடுமையான வேதனையாக அமைந்திருக்கும்.. (அல் குர்ஆன் 44:10-11).

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம், இது ஒரு (இறை விசுவாசியை) ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். (இறை மறுப்பாளரை) பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது செவிப்பறை வழியாக புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்) பிராணி, மூன்றாவது தஜ்ஜால் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ மாலிக் (ரலி) நூல் - தப்ரானி.

மறுமை நாள் வரப்போகிறது என்பதை எடுத்துக் கூறும் பெரும் அடையாளங்களில் ஒன்று. வானிலிருந்து புகை வருவதாகும். அந்தப் புகை பூமியில் வசிப்போரைத் தாக்கும். இதில் இறைவனை நம்பி வாழும் முஸ்லிமையும் அந்தப் புகை தாக்கும். ஆனால், அதன் மூலம் ஜலதோஷம் அடைந்தால் ஏற்படும் சிரம அளவுக்கே மூஃமின் இருப்பான். ஆனால் இறைவனைப் புறக்கணித்து வாழ்ந்தவர்களை அந்தப் புகை நெருங்கும்போது அதை அவர்கள் சுவாசித்ததும் வயிறு ஊதி உடலும் பெருத்து காது வழியாக புகை வருவது தெரியும். கடுமையான சோதனையாக அது அமையும். இந்த புகை மூட்டச் சோதனை வருமாயின் மறுமை நாள் நெருங்கி விட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:35 am

2- அதிசயப் பிராணி

அவர்களுக்கு எதிரான தீர்ப்பு உறுதியாகும் போது இப்பூமியிலிருந்து ஒரு பிராணியை நாம் அவர்களுக்காக வெளிப்டுத்துவோம். அப்பிராணி அவர்களுடன் பேசும். (இதற்குக் காரணம்) மக்கள் நம் வசனங்களை நம்பாமல் இருந்தது தான் (அல் குர்ஆன் 527:82).

சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதும், நண்பகல் நேரத்தில் அந்தப்பிராணி மக்களுக்குக் காட்சி தருவதும் ஆரம்ப அடையாளங்களாகும். இவ்விரண்டில் எது முதலில் தோன்றினாலும் அதைக் தொடர்ந்து அடுத்ததும் தோன்றி விடும் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) நூல் - முஸ்லிம்.

மறுமையின் அடையாளங்களில் ஒன்றாக அதிசயப்பிராணி ஒன்று வரும் என்று அல்லாஹ்;வும், நபி (ஸல்) அவர்களும் சுட்டிக் காட்டுகிறார்கள். அந்தப் பிராணி பூமியிலிருந்து தான் வரும் என திருக்குர்ஆன் கூறுகிறது. வானிலிருந்து அல்ல, என்ற உண்மையோடு அந்தப் பிராணி திடீரென வரும் என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறுகின்றார்கள்.

மனிதர்கள் இதுவரை கண்டு கொண்டிருக்கக்கூடிய பிராணிகளில் சேர்ந்தது அல்ல என்பது மட்டும் விளங்க முடிகிறது. அதன் வடிவம் எப்படி இருக்கும் என்பதை தெளிவாக நமக்குத் தெரிவிக்கப்படாவிட்டாலும், அது பேசும் பிராணியாக இருக்கும் என்பதை மட்டும் விளங்க முடிகிறது. பேசும் பிராணியாக அது இருப்பதால்தான் அது அதிசயப் பிராணியாகவும் ஆகிறது.

அந்த அதிசயப் பிராணி வந்து விட்டால், மறுமையின் அடுத்த அடையாளமும் உடனே வந்து விடும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அதிசயப் பிராணி பற்றி நாம் நம்ப வேண்டுமே தவிர, அதன் வடிவம் அது பேசும் மொழி பற்றி கற்பனை செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. அது பகல் வேளையில் வரும் என்பதால் அதை அந்த நேரத்தில் இருப்போர் காணலாம், பேசலாம். அப்பிராணி வரும் நேரத்தில் மக்களில் இறை நம்பிக்கையற்றவர்களே அதிகம் இருப்பார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:36 am

3- மேற்கில் சூரியன் உதிப்பது

அதிசயத்தக்க அடையாளங்களில் இதுவும் ஒன்றாகும். மனிதன் இயலாத ஒன்றைக் குறிப்பிடும் போது சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கும் அது நடக்காது என்பார்கள். அந்த அளவுக்கு சூரியன் மேற்கே உதிப்பது என்பது இயலாத காரியம், ஆனால்…

‘சூரியன் மேற்கிலிருந்து உதிக்காமல் மறுமை நாள் ஏற்படாது. அதைக் கண்டதும் மக்கள் (இறைவனை) நம்புவார்கள். ஆனால் அதற்கும் முன்பே நம்பிக்கை கொள்ளாமல் இருந்தோருக்கு அப்போது கொள்ளும் நம்பிக்கை பயனளிக்காது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப+ ஹ{ரைரா (ரலி) நூல் - புகாரீ 6506.

மறுமை நாளின் நெருக்கத்தில் மேற்கிலிருந்து சூரியன் உதயமாகும். சூரியன் கிழக்கில் இருந்து உதித்தால் என்ன நடக்குமோ, அதுதான் மேற்கிலிருந்து உதித்தாலும் நடக்கும் என்று கருதிவிட முடியாது. இந்த மாற்றமான நிகழ்வு, பெரும் பயங்கரத்தை நிகழ்த்தி விடும்.

பூமி, சூரியனைச் சுற்றி வருகிறது. இதனால் இரவு பகல் ஏற்படுகிறது எனப் புரிந்து வைத்துள்ளோம் மணிக்கு ஆயிரம் மைல் வேத்தில் இந்த பூமி சுழன்று வருகின்றது. இந்த அதி தீவிர சுழற்சியின் போதுதான் சூரியன் கிழக்கில் உதிக்கிறது. திடீரென அந்த வேகச் சுழற்சியை நிறுத்தி எதிர் திசையில் சுற்ற வைத்தால் தான் சூரியன் மேற்கில் உதயமாக முடியும்.

நம் பயணம் செய்து கொண்டிருக்கக்கூடிய கார் 80 கிலோ மீட்டர் வேத்தில் செல்கிறது. அப்பொது நம் டிரைவர் திடீரென பிரேக் போட்டால் நாம் காரிலிருந்து தூக்கி எறியப்படுவோம், அல்லது காரே தலைகீழாகக் கவிழும் அதே கார் அதே வேகத்தில் திடீரென பின்னோக்கி ஓடினால் என்னவாகும்? விபத்து ஏற்படும் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா? மோசமான விளைவு ஏற்படும் அல்லவா?

இது மாதிரியே பூமியின் சுழற்சி திடீரென எதிர் திசையை நோக்கிச் சுழன்று, சூரியன் மேற்கே உதிக்குமானால், நாம் வாழும் கட்டிடங்கள் நொறுங்கி விழும். மலைகள் கூட தூள் தூளாகி விடும். அனைத்தின் செயல்பாடுகளும் இதரக் கோள்களும் தலைகீழ் மாற்றத்திற்குள்ளாகி உலகமே பேராபத்திலும், பேரழிவிலும் சிக்கிச் சீரழியும்.

இப்படி ஓர் அதிர்வை – அதிர்ச்சியை ஏற்படுத்தும் சூரியன் மேற்கில் உதயமாகின்ற நிலையும், மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:38 am

4- தஜ்ஜாலின் வருகை

‘நூஹ் (அலை) அவர்களுக்குப்பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தனது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ உபைதா (ரலி) நூல்கள் - திர்மிதீ, அபூதாவூத்.

‘ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல், (மறுமை) நாள் வரும் வரை தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : இம்ரான் இப்னு ஹ{சைன் (ரலி) நூல் - முஸ்லிம்.

‘தஜ்ஜால்’ எனும் கொடியவனின் வருகையும் நாளை மறுமை நாள் வருவதற்கு முன் அடையாளமாகும். இந்த தஜ்ஜாலின் வருகை, பரபரப்பை ஏற்படுத்தும் என்பதால்தான், இவனது வருகையை பெரிய விஷயமாக நபி (ஸல்) அவர்கள் கருதுகிறார்கள்.

தவறான அறிமுகம்.

தஜ்ஜால் பற்றி ஹதீஸ்களில் கூறப்படும் சில செய்திகள், நம் மனித அறிவுக்கு ஏற்றதாக இல்லை எனக் கருதும் சிலர், ‘தஜ்ஜால்’ என்பதற்கு ‘தீயசக்தி’ என்ற அளவில் மட்டுமே பெர் சூட்டுகின்றனர். பிரிட்டிஷார் கையில் உலகத்தின் பாதி இருந்தபோது, பிரிட்டனை சில மவ்லவிகள் ‘தஜ்ஜால்’ என்று வர்ணித்தனர். இன்னும் சிலரோ அவ்வப்போது முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சில நாட்டுத் தலைவர்களையும் கூட ‘தஜ்ஜால்’ என்று வர்ணித்தனர்.

இஸ்லாமிய மார்க்கத்தின் தொடர்புகளைக் குறைத்துக் கொண்டிருக்கிற சிலர் தங்களின் கற்பனைக் குதிரையில் உதித்த கதைகளை தஜ்ஜாலின் பெயரால் புனைந்து பரப்பி விட்டனர். ‘தஜ்ஜாலின் தலை வானத்துக்கும், கால் தரைக்குமாய் இருக்கும் அளவுக்கு வளர்ந்து இருப்பான். கடலின் நீர் அவனது கரண்டைக் காலுக்கும் கீழேதான் இருக்கும். கடலின் மீனைப் பிடித்து, சூரியனில் காட்டிச் சுட்டுத்தின்பான். பனை மரத்தை வேரோடுப் படுங்கி பல் தேய்ப்பான்’ என்று அவர்களின் கற்பனைகள் கூறுகின்றன. இவை எதுவும் உண்மை அல்ல!.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:38 am

சரியான அறிமுகம்

‘நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும், அல்லாஹ் ஒரு கண் ஊனமானவன் அல்லன், ஆனால் தஜ்ஜாலின் வலது கண் திராட்சை போன்று சுருங்கி இருக்கும்’ என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இன்னு மஸ்ஊத் (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

‘இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட எந்த ஒரு இறைத்தூதரும் தம் சமுதாயத்தவரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணனை எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அவன் ஒற்றைக் கண்ணன் அல்ல, அவனது இரு கண்களுக்குமிடையே ‘இறை மறுப்பாளன்’ என எழுதப்பட்டிருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் - புகாரீ 7131.

ஊனமடைந்த கண், மூக்கை ஒட்டிய ஓரத்தில் கடினமாக சதைக் கட்டி ஒன்று தொன்படும் என்றும் நபி (ஸல்) கூறி உள்ளனர் : நூல்கள் - முஸ்லிம், அஹ்மத்.

‘ஊனமடையாத கண், பச்சை நிறக் கண்ணாடிக் கற்கள் போல் அமைந்திருக்கம்’ ( அஹ்மத்).

‘அவன் வெள்ளை நிறத்தவனாக இருப்பான், அவனின் உடலமைப்பு கவர்ச்சியாக அமைந்திருக்கும்’ (அஹ்மத்).

‘சற்று குண்டான உடலுடையவனாக இருப்பான்’ (முஸ்லிம்).

‘பின்புறத்திலிருந்து பார்த்தால் அவனின் தலைமுடி அலை அலையாய் இருப்பதாகத் தெரியும் (அஹ்மத்).

‘பரந்த நெற்றியுடையவனாக இருப்பான்’ (பஸ்ஸார்)

‘குள்ளமாகவும் கால்கள் இடைவெளி அதிகம் உள்ளவனாகவும் இருப்பான்’ (அபூதாவ+த்).

தஜ்ஜால் பற்றிய சரியான அறிமுகம் இது. இது அல்லாத எந்த அறிமுகமும் சிலரால் கற்பனை செய்யப்பட்டதே என்பதை கருத்தில் கொள்க! ‘அவனின் ஒரு கண் ஊனம், மறுகண் பச்சை நிறக்கல் போல் இருக்கும்’ என்பதுதான் அவனது தோற்றத்தில் வித்தியாசமானவை ஆகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:39 am

தஜ்ஜால் எங்கு உள்ளான்

தஜ்ஜால் இனிமேல் பிறப்பவன் அல்ல. ஏற்கனவே பிறந்தவன் ஆவான். அவன் தற்போதும் இருந்து வருகிறான். இவனை, கிருத்துவராக இருந்து பின்பு இஸ்லாத்தில் இணைந்த தமீமத்தார் (ரலி) அவர்கள் நேரில் ஏதேச்சையாக கண்டுள்ளார்கள். அவனை தான் கண்ட விபரத்தை நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது அதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகாரம் செய்துள்ளனர். தஜ்ஜால் பற்றிய இதர விபரம் அந்த ஹதீஸ் மூலம் நமக்குப் புரிகிறது.

நபி (ஸல்) அவர்களின் (தொழுகைக்கான) அழைப்பாளர் ‘அஸ்ஸலாத்து ஜாமிஆ’ (தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது) என்ற அறிவித்தார். இதைக் கேட்ட நான் பள்ளிவாசலுக்குச் சென்றேன். நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். தொழுது முடிந்ததும், நபி (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டே மிம்பரில் அமர்ந்தார்கள். ‘அனைவரும் தொழுத இடத்திலேயே அமருங்கள்’ என்று கூறிவிட்டு ‘நான் உங்களை ஏன் கூட்டினேன் என்பதை அறிவீர்களா? என்று கேட்டார்கள், ‘அல்லாஹ்வும் அவனின் தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று நாங்கள் கூறினோம்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உங்களை அச்சுறுத்தவோ ஆர்வமூட்டவோ உங்களை நான் ஒன்று கூட்டவில்லi. தமீமுத்தாரி முன்பு கிருத்தவராக இருந்தார். அவர் வந்து இஸ்லாத்தில் இணைந்து விட்டார். தஜ்ஜால் பற்றி உங்களுக்குச் கூற வந்ததுக்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார். (அவர் என்னிடம் கூறியதை நீங்களும் கேளுங்கள்).

லக்ம், ஜுகாம் ஆகிய சமூகத்தில் முப்பது நபர்களுடன் கப்பலில் நான் பயணம் செய்தேன் (புயல் காரணமாக) ஒரு மாதகாலம் அலைகளால் அலைகழிக்கப்பட்டோம். சூரியன் மறையும் சமயம் ஒரு தீவில் ஒதுங்கினோம். கப்பலில் வைத்திருந்த சிறு தோணிகள் மூலம் அந்த தீவில் நுழைந்தோம். அப்போது உடல் முழுவதும் மயிர்கள் நிறைந்த ஒரு பிராணி எதிர் கொண்டது. அதிகமான மயிர்கள் காரணமாக அதன் மலஜலம் பாதைகளை (உறுப்புக்களைக்) கூட அவர்களால் அறிய இயலவில்லை.

அந்தப் பிராணியிடம் அவர்கள், ‘உனக்கு ஏற்பட்ட கேடே நீ என்ன பிராணி?’ என்று கேட்டனர். ‘ஜஸ்ஸாஸா’ என்று அது கூறிவிட்டு, ‘நீங்கள் இதோ இந்த மடத்தில் உள்ள மனிதனிடம் செல்லுங்கள், அவர் உங்களைக் காண்பதில் ஆர்வம் காட்டுவார்’ என்றும் அப்பிராணி கூறியது. அந்த மனிதனின் பெயரையும் கூறியது. அந்தப் பிராணி ஒரு பெண் ஷைத்தானாக இருக்குமோ என்று பயந்தோம்.

நாங்கள் அந்த மடத்தை நோக்கி விரைந்தோம். அங்கு சென்றதும் ஒரு மனிதனைக் கண்டோம். அவனைப் போன்ற ஒரு படைப்பை இதுவைர நாங்கள் பார்த்ததே இல்லை. இரண்டு கரண்டை கால்களுக்கும் முட்டுக்கால்களுக்கும் இடையே தலையைச் சேர்த்து கழுத்தில் இரும்பால் கட்டப்பட்டிருந்தான், ‘உனக்கு ஏற்பட்ட கேடே! ஏனிந்த நிலை’ என்று கேட்டோம்.

அதற்கு அந்த மனிதன் ‘(எப்படியோ) என்னைப் பற்றி அறிந்து விட்டீர்களே! நீங்கள் யார்? எனக் கூறுங்கள்’ என்றான். ‘நாங்கள் அரபியர்கள். ஒரு கப்பலில் நாங்கள் பயணம் செய்தபோது, ஒரு மாதம் கடல் அலையால் அலைகழிக்கப்பட்டோம். இப்போது தான் இந்த தீவிற்கு வந்தோம். அடர்ந்த மயிர்கள் நிறைந்த ஒரு பிராணியைக் கண்டோம். அது, நான் ஜஸ்ஸாஸா, இந்த மடத்தில் உள்ள மனிதரைப் பாருங்கள்’ என்று கூறியது. எனவே உம்மிடம் விரைந்து வந்தோம்’ என்று கூறினோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:39 am

‘பைஸான் என்ற இடத்தில் உள்ள பேரீத்தம் மரங்கள் பயனளக்கிறதா? என்று கூறுங்கள்’ என அந்த மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்று கூறினோம். அதற்கு அம்மனிதன் ‘விரைவில் அங்குள்ள மரங்கள் பயனளிக்காமல் போகலாம்’ என்றான். ‘சூகர் எனும் நீருற்றில் தண்ணீர் உள்ளதா? அங்குள்ளவர்கள் அத்தண்ணீரை விவசாயத்திற்கு பயன் படுத்துகிறார்களா? என்று கேட்டான். அதற்கு நாங்கள் ‘ ஆம், தண்ணீர் அதிகமாகவே உள்ளது. அங்குள்ளோர் அத்தண்ணீர் மூலம் விவசாயம் செய்கின்றனர்’ என்று கூறினோம்.

‘உம்மி சமுதாயத்தில் தோன்றக்கூடிய நபியின் நிலை என்ன? என்பதை எனக்குக்கூறுங்கள்’ என அம்மனிதன் கேட்டான். ‘அவர் மக்காவிலிருந்து புறப்பட்டு, தற்போது மதீனாவில் உள்ளார்’ என்று கூறினோம். ‘அரபியர்கள் அவருடன் போர் புரிந்தார்களா?’ என்று அம்மனிதன் கேட்டான். ஆம் என்றோம். ‘போரின் முடிவு எப்படி இருந்தது?’ என்று கேட்டான். ‘அவர் தன் அருகில் வசித்த அரபியரையெல்லாம் வெற்றி கொண்டு விட்டார்’ என்று கூறினோம். ‘அவருக்கு அவர்கள் கட்டுப்படுவதே சிறந்தது’ என்று அவன் கூறினான்.

நான் இப்போது என்னைப் பற்றிக் கூறுகிறேன். நான்தான் தஜ்ஜால். நான் (இங்கிருந்து) வெளிறே வெகு சீக்கிரம் எனக்கு அனுமதி தரப்படலாம். அப்பேது நான் வெளியே வருவேன். பூமி முழுதும் பயணம் செய்வேன். நாற்பது நாட்களில் எந்த ஊரையும் நான் அடையாமல் விட மாட்டேன். மக்கா, மதீனா இரு ஊர்களைத் தவிர. அந்த இரு ஊர்களும் எனக்கு தடுக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு ஊர்களுக்குள் நான் நுழைய முயற்சிக்கும் போதெல்லாம் தன் கையில் வாளுடன் ஒரு வானவர் என்னை எதிர் கொண்டு தடுப்பார். அதன் வழிகள் அனைத்திலும் அதைக் காண்கானிக்கின்ற வானவர்கள் இருப்பர்’ என்று அம்மனிதன் கூறினான்.

இவ்வாறு தமீமுத்தாரீ (ரலி) தன்னிடம் கூறியதாகக் கூறிய நபி (ஸல்) அவர்கள் தம் கைத்தடியை மிம்பரில் தட்டிவிட்டு, ‘இது (மதீனா) தூய்மையான நகரம், தூய்மையான நகரம்’ என்று கூறினார்கள். ‘இதே செய்தியை நான் உங்களிடம் கூறி இருக்கிறேன் தானே’ என்று மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதும், மக்கள் ‘ஆம்’ என்று பதில் கூறினர்.

அறிந்து கொள்க! நிச்சயம் அவன் சிரியா நாட்டின் கடல் பகுதியில் உள்ளான். அல்லது யமன் நாட்டின் கடல் பகுதியில் உள்ளான். இல்லை, இல்லை! அவன் கிழக்குத் திசையில் இருக்கிறான் என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பாளர் : பாத்திமா பின்த் கைஸ் (ரலி) நூல் - முஸ்லிம்.

தஜ்ஜால் என்பவனை பார்த்தோரில் முக்கியமானவர், தமீமத்தாரி (ரலி) அவர்கள் ஆவார். அவர்களும் கூட கடல் பயணத்தின் போது, புயலால் திசை மாறி, ஒரு தீவுக்கு ஒதுங்கியதால் அது எந்தப் பகுதி என்பதை சரிவர புரிந்து கொள்ள இயலாததால் குறிப்பிட்ட இடம் பற்றி அவர்களால் கூற இயலவில்லை. இதனால் தான் நபி (ஸல்) அவர்களும் கூட தமீமுத்தரி (ரலி) அவர்களின் தகவல் அடிப்படையில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்று அறிவிக்கிறார்கள். அவன் இருக்கும் இடம் இதுதான் என்பது தெளிவாக தெரியாவிட்டாலும், ஒரு கடல்கரைத் தீவில் அவன் இருக்கிறான் என்பது மட்டும் உறுதியாகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:39 am

தஜ்ஜால் ஒரு காஃபிர்

தங்களை நபி என்று வாதிடுவோர் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, அவர்களை ‘தஜ்ஜால்கள்’ என்று குறிப்பிடுகிறார்கள். எனவே இந்த தஜ்ஜாலை அவர்களில் ஒருவனாக கருதிவிடக் கூடாது.

பொதுவாக முஸ்லிம்களை வழிகெடுக்கும் பணியில் ஈடுபடுவோரில் ஒரு சாரார் தங்களையும் முஸ்லிம் என்று கூறிக் கொண்டே வழிகெடுப்பர். மற்றொரு சாராரோ தங்களை முஸ்லிம் எனக் கூறாமல் முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் வெளியேறச் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். நபி என்று கூறி வழிகெடுத்த தஜ்ஜால்கள் (பொய்யர்கள்) முதல் வகையினர். இந்த தஜ்ஜாலோ இதில் இரண்டாம் வகையினரைச் சேர்ந்தவன்.

‘தஜ்ஜாலின் நெற்றிக்கிடையே ‘காஃபிர்’ என்று எழுதப்பட்டிருக்கும். எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத அனைத்து மூஃமின்களும் அதைப் படிப்பார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹ{தைபா (ரலி) நூல்-முஸ்லிம்.

‘இஸ்பஹான் பகுதியைச் சேர்ந்த யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் வெளிப்படுவான்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் - அஹ்மத்.

தஜ்ஜால் இயற்கையிலேயே காஃபிர். யூதன் என்பதே சரி! தங்களை நபி என்று வாதிடுவோரை ‘தஜ்ஜால்’ எனக்குறிப்பிடுவது, அவனைப் போல் இவர்கள் குழப்பவாதிகளாகவும், பொய்யர்களாகவும் இருந்ததுதான். எனவே அவர்களில் ஒருவனாக இவனைக் கருதக் கூடாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:40 am

தஜ்ஜால் தன்னைக் கடவுள் எனக் கூறுவான்

‘தஜ்ஜால் பிறவிக் குருடையும், வெண் குஷ்டத்தையும், நீக்குவான் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான். மக்களிடம் ‘நானே கடவுள்’ என்பான். நீதான் என் கடவுள் என்று ஒருவர் கூறினால், அவன் சோதனையில் தோற்றவனாவான். ‘அல்லாஹ் தான் என் இறைவன்’ என்று ஒருவர் கூறி, அதிலேயே அவர் இறந்தால், அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டவர் ஆவார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி) நூல்கள்-அஹ்மத், தப்ரானி.

தன்னை கடவுள் எனக்கூறியும், கடவுளாக ஏற்க வேண்டும் என்று கூறியும் தஜ்ஜாலின் குழப்ப நிலைத் தொடரும்.

தஜ்ஜாலின் மாயா ஜாலங்கள்

‘வானத்திற்கு மழை பொழியுமாறு கட்டளையிடுவான், மழை பொழியும். பூமியை நோக்கி விளையச் செய்! என்பான், அது பயிர்களை முளைக்க வைக்கும்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - முஸ்லிம்.

கட்டுடல் உடைய ஓர் இளைஞனை அழைப்பான், அவனை இரண்டு துண்டுகளாக வாளால் வெட்டுவான். பிறகு அவனைக் கூப்பிடுவான், உடனே அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே பிரகாசமான முகத்துடன் உயிர் பெறுவான்’

‘ஒரு மனிதனைக் கொன்று அவன் உயிர்ப்பிப்பான், மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வாறு செய்ய இயலாது’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அன்சாரீ நபித் தோழர் நூல்-அஹ்மத்.

அவனைப் பின்பற்றியவர்கள் தவிர, மற்ற மக்கள் மிகவும் வறுமையின் பிடியில் இருக்கும்போது, அவனிடம் மலைபோல் ரொட்டி இருக்கும். அவனிடம் இரண்டு நதிகள் இருக்கும். ஒன்றை அவன் சொர்க்கம் என்பான், இன்னென்றை நரகம் என்பான். அவன் சொர்க்கம் எனக் கூறும் நதி, உண்மையில் நரகமாகும், அவன் நரகம் என்று கூறும் நதியோ சொர்க்கமாகும். மழை பொழிந்திட வானத்திற்கு கட்டளையிட்டதும், மக்கள் பார்க்கும் போதே மேகம் மழை பொழியும். ‘இதைக் கடவுளைத் தவிர வேறுயாரும் செய்ய முடியுமா?’ என்று கேட்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) அவர்கள் நூல் அஹ்மத்.

இப்படி பல அற்புதங்களைச் செய்யும் இவனின் வலையில் முஸ்லிம்களும் வீழ்வர். சுhதாரணமாக முஸ்லிமல்லாத ஒருவன் வந்து ஒரு அற்புதம் செய்து காட்டினால் ஈமானை இழந்து விடும் முஸ்லிம்களும் உண்டு. இவ்வாறு இருக்க பல அற்புதங்கள் செய்யும் தஜ்ஜாலை சில முஸ்லிம்களும் நம்புவர் என்பதில் ஆச்சரியம் இல்லையே!.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:40 am

தஜ்ஜாலை புறக்கணிப்போர் நிலை

‘…பின்னர் மக்களிடம் வருவான் (தன்னை கடவுள் என ஏற்கும்படி) அழைப்பான். அவனை மக்கள் ஏற்க மறுப்பார்கள். அவர்களை விட்டு அவன் விலகிச் செல்வான். காலையில் (அவனை ஏற்க மறுத்த) மக்கள், தங்களின் அனைத்துச் செல்வங்களையும் இழந்து நிற்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - முஸ்லிம்.

தஜ்ஜாலை ஏற்க மறுத்துப் புறக்கணிப்போர், அவனை ஏற்க மறுத்து விட்டால், தங்களின் சொத்தை இழக்க வேண்டியது வரும். இந்த நிலையை ஏற்படுத்துவதும் அவன்தான்.

தஜ்ஜாலிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை

‘தஜ்ஜாலிடம் தண்ணீரும், நெருப்பும் இருக்கும். மக்கள் எதைத் தண்ணீர் என்று காண்கிறார்களோ, அது சுட்டெரிக்கும் நெருப்பாகும். மக்கள் எதை நெருப்பு என்று காண்கிறார்களோ, அது சுவை மிகுந்த குளிர்ந்த தண்ணீராகும். உங்களில் ஒருவர் இந்த நிலையை அடைந்தால், நெருப்பு எனக் காண்பதில் விழட்டும்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹ{தைபா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

தஜ்ஜால் வாழும் காலம்

தஜ்ஜால் பூமியில் எவ்வளவு காலம் இருப்பான்? என்று நாங்கள் கேட்போது, ‘நாற்பது நாட்கள் இருப்பான். ஒரு நாள், ஒரு வருடம் போன்றும், மற்ற நாட்கள் சாதாரண நாட்கள் போன்றும் இருக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல்கள்; - முஸ்லிம், திர்மீதி.

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக