ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்

3 posters

Go down

வேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள் Empty வேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்

Post by சிவா Tue Sep 27, 2011 2:36 pm

இணையத்தில் நுழைந்து தளங்களைக் காண்கையில், நம் அனுமதி பெறாமல், ஸ்பைவேர்கள் எனப்படும் வேவு பார்க்கும் நிரல்கள் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து கொள்கின்றன. கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப்படும் தகவல்களை, ஸ்பைவேர் தயாரித்து அனுப்பியவர்களுக்கு அனுப்புகின்றன. மைக்ரோசாப்ட் அமைத்திடும் மலிசியஸ் ரிமூவல் டூல் மற்றும் பயர்வால்கள் இவற்றை ஓரளவு தான் தடுக்க முடிகிறது. மற்ற நிறுவனங்கள் தரும், ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர் நீக்கிடும் சாதனங்களும் முழுமையாக இவற்றின் முன் செயல்பட முடிவதில்லை. இதற்குக் காரணம் இத்தகைய பைல்களை தனிமைப்படுத்தி அறிய முடிவதில்லை என்பதுதான். இந்நிலையில் சில இணைய தளங்கள் இவற்றை நீக்கும் சேவையை நமக்குத் தருகின்றன. இவற்றைப் பயன்படுத்திப் பார்ப்பது நமக்கு எளிது தான். ஏனென்றால், இவற்றை டவுண்லோட் செய்து, பின்னர் இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டிய தில்லை. மேலும் ஆன்லைனில் இயங்கும் இந்த புரோகிராம்கள், தங்களுடைய சர்வர்கள் மூலமாக அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப் படுகின்றன. இவற்றின் செயல்வேகமும் மற்றவற்றைக் காட்டிலும் அதிகம். இவ்வகையில் செயல்படும் சிறந்த ஆன்லைன் ஸ்கேனர் மற்றும் ஸ்பைவேர் நீக்கும் சாதனங்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

1. எப்--செக்யூர் ஆன்லைன் ஸ்கேனர் (F-Secure Online Scanner): இந்த ஸ்கேனர் மூன்று வகையான செயல்முறைகளுடன், நமக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகிறது. அவை quick scan, full scan and my scan. இதன் உதவி பெற, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசரில் ஜாவா ஸ்கிரிப்ட் இயக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் அட்மினிஸ்ட் ரேட்டராகக் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்திருக்க வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் ஸ்கேனிங் மற்றும் ஸ்பைவேர் நீக்குவதற்கு சில பைல்களை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்திட, இந்த தளம் உங்கள் கம்ப்யூட்டரின் அட்மினிஸ்ட் ரேட்டர் அனுமதியினைக் கேட்கும். கம்ப்யூட்டர் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டு, வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்கள் அனைத்தும் நீக்கப்படும். ஸ்கேன் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.f-secure.com/en_EMEA-Labs/security-threats/tools/online-scanner

2. பிட் டிபண்டர் ஆன்லைன் ஸ்கேனர்/ குவிக் ஸ்கேன் (Bit defender Online Scanner/Quick Scan): பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பில் இயங்கும் அதே தொழில் நுட்பம் தான், இதிலும் இயங்குகிறது. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் தொகுப்புகளை நீக்குவதில், மிக வேகமாகச் செயல்படும் தன்மை கொண்டது. விண்டோஸ் மற்றும் மேக் இயக்க கம்ப்யூட்டர்களில் செயல் படுகிறது. இத்தளத்தில் நீங்கள் ஸ்கேன் செய்திடச் செல்ல வேண்டிய இணைய முகவரி: http://www.bitdefender.com/scanner/online/free.html

3. சைமாண்டெக் செக்யூரிட்டி செக் (Symantec Security Check): சோதனை செய்யப்படும் கம்ப்யூட்டர், இணையம் வழி வரும் வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களுக்கு வழி விடும் வகையிலான பிழைகளுடன் உள்ளதா என இந்த தளம் சோதனை செய்கிறது. கம்ப்யூட்டருக்குள்ளாகவே இருக்கக் கூடிய ஸ்பைவேர்களின் பயமுறுத்தல்களையும் சோதனை செய்கிறது. இதற்கான தள முகவரி: http://security.symantec.com/sscv6/WelcomePage.asp

4.ஈசெட் ஆன்லைன் ஸ்கேனர் (ESET Online Scanner): கம்ப்யூட்டர் பாது காப்பில் பயன்படுத்தப்படுகிற Threat Sense இஞ்சின் என்ற தொழில் நுட்பத்தினை இது பயன்படுத்துகிறது. பல நிலைகளில் அடுத்தடுத்து ஸ்கேன் செய்து பாதுகாப்பு அழிக்கும் தொழில் நுட்பம் இது. ஸ்பைவேர் மட்டுமின்றி, மற்ற மால்வேர், வைரஸ்களையும் கண்டறிந்து நீக்குகிறது. கம்ப்யூட்டரின் இயக்க வேகத்தினை மந்தப்படுத்தி, அதனை மற்ற வைரஸ்களின் தாக்குதல் களுக்கு உள்ளாக்கும் ஸ்பைவேர் களையும் பிற மால்வேர்களையும் நீக்கி, தனிமைப்படுத்திப் பின்னர் அழிக்கிறது. இந்த ஸ்கேனர் கிடைக்கும் தள முகவரி: http://go.eset.com/us/online-scanner

5.சி.ஏ. ஆன்லைன் த்ரெட் ஸ்கேனர் (CA Online Threat Scanner): ஸ்பைவேர் தொகுப்புகளை ஸ்கேன் செய்வதுடன், மால்வேர் மற்றும் வைரஸ்களையும் கண்டறிகிறது. தொடர்ந்து வெளிவரும் ஸ்பைவேர் மற்றும் வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றிற்கான சிக்னேச்சர் பைல்களுடன் அடிக்கடி அப்டேட் செய்யப்படுகிறது. மொத்தமாகக் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்வதுடன், சுருக்கிவைக்கப்பட்ட ஸிப் பைல்களில் உள்ள, பைல்களையும் தனித்தனியே இதன் மூலம் ஸ்கேன் செய்திடலாம். ஸ்கேன் செய்து பார்த்திடச் செல்ல வேண்டிய தள முகவரி: http://cainternetsecurity.net/entscanner/

6.பண்டா ஆக்டிவ் ஸ்கேன் 2 (Panda Active Scan 2.0): இயக்குவதற்கு மிகவும் எளிமையானது. கம்ப்யூட்டரைக் கெடுக்க அனுப்பப்படும் அனைத்து வகையான புரோகிராம்களையும் கண்டறிந்து நீக்குகிறது. இந்த வகையில் அதி நவீன தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. ஸ்கேன் முடிந்தவுடன், கம்ப்யூட்டரின் முழு பாதுகாப்பு நிலை குறித்த அறிக்கை ஒன்று நமக்குக் கிடைக்கிறது. இதற்கான தள முகவரி: http://www.pandasecurity.com/activescan/index/

கிளவுட் கம்ப்யூட்டிங் முறை பிரபலமாகி வரும் இந்நாளில், நவீன தொழில் நுட்பத்துடன் இயங்கும் இத்தகைய ஆன்லைன் ஸ்பைவேர் ஸ்கேனர்கள் மற்றும் வைரஸ் நீக்கி களைப் பயன்படுத்துவது நமக்குப் பாதுகாப்பான, எளிமையான செயல் பாடாக இருக்கும். அனைத்து பிரவுசர் களிலும் இவை செயல்படும் என்றாலும், இவற்றைச் செயல்படுத்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அண்மைக் கால பதிப்பினைப் பயன்படுத்துவது நல்லது. விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 பயன்படுத்தலாம். இவற்றைப் பயன் படுத்துவதனால், கம்ப்யூட்டரில் இன்ஸ் டால் செய்யப்பட்டிருக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை நீக்க வேண்டாம். தொடர்ந்த பாதுகாப்பிற்கு அவை தேவைப்படும்.

கம்ப்யூட்டர் மலர்


வேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள் Empty Re: வேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்

Post by aathma Tue Sep 27, 2011 4:37 pm

தகவலுக்கு மிக்க நன்றி சிவா

Online Scanner வைரஸ் புரோகிராம்களை கண்டறிவதுடன் தனது வேலையை நிறுத்திக்கொள்ளுமா ? அல்லது அந்த புரோகிராம்களை அழிக்கவும் செய்யுமா ?

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

வேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள் Empty Re: வேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Tue Sep 27, 2011 5:21 pm

அண்ணா இது போன்ற நச்சு நிரல்கள் உபுண்டு இயக்க தளத்திலும் செயல்படுமா...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள் Empty Re: வேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum