ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை !

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை ! Empty இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை !

Post by krishnaamma Tue Sep 27, 2011 9:47 am

இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை ! Tamil_New_large_321053

ஒவ்வொரு மனிதனும், தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறான். ஒரு பிள்øளையை வளர்க்க பெற்றோர் செய்த தியாகத்திற்கு அளவே கிடையாது. அவர்கள் வாழும் காலத்தில், அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்வது எவ்வளவு அவசியமோ, அதுபோல அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகும் இந்த நன்றிக்கடனைத் தொடரவேண்டும் என்கிறது சாஸ்திரம். அதற்காக பிதுர்கடனை ஏற்படுத்தி வைத்தனர். தர்ப்பணம், பிதுர்காரியம், முன்னோர்கடன் என்று பல பெயர்களில் இதைக் குறிப்பிடுவர்.

நன்றியுணர்வோடு, அவர்கள் மறைந்த மாதத்தின் திதியன்று சிரத்தையுடன் (மறக்காமல் கவனமுடன் ) செய்தல் அவசியம் என்பதால் இதனை "சிரார்த்தம்' என்றும் சொல்வார்கள். தெய்வப்புலவர் திருவள்ளுவர், ""தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல், தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'' என்று திருக்குறளில் குறிப்பிடுகிறார். இதில் சொல்லப்படும் "தென்புலத்தார்' என்பது மறைந்த முன்னோரையே குறிக்கும். முன்னோர்களின் உலகம் தெற்கு திசையில் இருப்பதால், அவர்கள் வாழும் உலகத்தை "தென்புலம்' என்று குறிப்பிடுவர். தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் செய்வது அவசியம்.

சிலர் தை, ஆடி அமாவாசைகளில் மட்டும் கொடுக்கிறார்கள். ஒருவேளை, இதுவரை பிதுர் தர்ப்பணமே செய்யாமல் இருந்தால், மகாளாய அமாவாசையன்று அதைத் தொடங்கினால் மிகவும் சிறப்பு. இந்த தருணத்தில் தான் நமது முன்னோர் ஒட்டுமொத்தமாக பூமிக்கு வருவதாக ஐதீகம். தர்ப்பணத்தின் போது எள், ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றை பயன்படுத்துவர். இவற்றை பிதுர் தேவதைகள் முன்னோர்களுக்குக் கொண்டு சேர்த்துவிடுவர் என்கிறது சாஸ்திரம். பூலோகத்திற்கு தங்கள் பிள்ளைகளை பார்க்க வந்த முன்னோர் மீண்டும் பிதுர்லோகத்திற்கு இன்று திரும்புவதாக ஐதீகம். இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடுவதும், பிதுர் வழிபாடு செய்து அவர்களை வழியனுப்பி வைப்பதும், குடும்பம் செல்வச்செழிப்புடன் வாழவும், வாழையடி வாழையாய் தழைக்கவும் உதவும்.


Last edited by krishnaamma on Mon Oct 12, 2015 11:31 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை ! Empty Re: இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை !

Post by krishnaamma Tue Sep 27, 2011 9:48 am

இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை ! 120008000000

சூரியன் கன்னி ராசியில் புகும்போது (புரட்டாசி மாதம்) எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு செல்லும்படி உத்தரவிடுகிறார். அச்சமயம் நமது இறந்து போன பெற்றோர் அவர்களது பெற்றோர்களுடன் கூடி, நம்மைக் கண்டு ஆசிர்வாதம் செய்வதற்காக வருவார்கள். இந்நாள் மிகவும் புண்ணியமான மகாளய அமாவாசை ஆகும். இதற்கு முன்னதாக வரும் பவுர்ணமிக்கு அடுத்த நாள் (பிரதமை திதி) முதல், அமாவாசைக்கு அடுத்துள்ள பிரதமை வரை உள்ள நாட்கள் மகாளயபட்சம் எனப்படும். இந்த சமயத்தில் நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் வரும் பானி, மஹாபானி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும் திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்ததாகும்.

மகிமை மிக்க மஹாளய புண்ணிய காலம்: பிதுர்களை வணங்கும் புண்ணிய காலம் மஹாளயபட்சம் ஆகும். இந்த நாட்கள் பொதுவாக புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக் கப்படும். மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசிவழங்குவதற் காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். கருடபுராணம், விஷ்ணு புராணம், வராகபுராணம் போன்ற தெய்வீக நூல்கள் இந்த பட்சத்தின் பெருமையைப் போற்றிக் கூறியுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். இந்த பதினான்கு நாட்களும் பிதுர்வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம்.

முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது. ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. தெய்வப்புலவர் திருவள்ளுவர் இல்லறத்தார் கடமைகளில் முதல் கடமையாக முன்னோர் வழிபாட்டைக் (தென்புலத்தார் வழிபாடு) குறிப்பிடுகிறார். திருமணத்தடை, புத்திரப்பேறு இன்மை, கடன்தொல்லை, மனக்கவலை, நவக்கிரக தோஷங்கள் என்று வாழ்வின் அனைத்து விதமான சிரமங்களையும் போக்கும் ஈடுஇணையற்ற பிதுர் வழிபாட்டினை இம்மஹாளய புண்ணிய காலத்தில் செய்து பயனுடையதாக்குவோம்.

அமாவாசையில் அன்னாபிஷேகம்: திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியிலுள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் மகாளய அமாவாசை தினத்தன்று, சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து, பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுகின்றனர். அமாவாசைதோறும் அன்னாபிஷேகம் நடக்கும் விசேஷ தலம் இது. பொதுவாக சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் செய்வர். விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் எல்லா அமாவாசை நாட்களிலும் அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது. பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசை யன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள (தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், விளமல் கோயிலில் உள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசிர்வதிப்பர். மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பு. விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

பலன்: இந்நாளில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் அவர்களது பரிபூரண ஆசி கிடைக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை ! Empty செல்வம் அள்ளித்தரும் மகாளய அமாவாசை வழிபாடு

Post by krishnaamma Tue Sep 27, 2011 9:50 am

செல்வம் அள்ளித்தரும் மகாளய அமாவாசை வழிபாடு !

ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள் மகாளய அமாவாசை என அழைக்கப்படுகின்றது.

புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதயருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண் புகளையும் தரவல்லது. மகாள பட்ச காலத்தில் நமது பித்ருக்கள் (மூதாதையர்கள்) தங்க ரதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்களின் வழியாக பித்ரு தேவதைகளின் அனுமதியுடன் பூலோகத்தில் உள்ள தத்தமது சந்ததியர்களை காணவருகின்றார்கள்.

இவ்வாறு அவர்கள் வரும் இக் காலம் மகாளய பட்ச காலமாக போற்றப்படுகின்றது. (மகா+ஆலயம்=மகாளயம்). எனவே தினம் தினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட முடியாதவர்களும் இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வீட்டில் காலம் சென்ற மூதாதயரின் ஒருவரது படமேயாயினும் இருக்குமானால் அதன் முன் இக் காலத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு சாதம் செய்து படையல் இட்டு வழிபாடு செய்யலாம்.

அல்லது பழவர்க்கங்களில் ஏதாவது ஒன்றினை தினம் படைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தரலாம். பிடித்த பலகாரங்களை செய்து அவர்களுக்கு படைத்து எள் எண்ணெய் தீபம் தனியாக போட்டு வழிபாடு செய்ய வேண்டும். நம் முன்னோர்களை நினைத்து வயதானவர் களுக்கும் ஏழை முதியோர்களுக்கும் உணவு அளித்து அவர்களுக்கு துணிமணி தானம் தந்தால் நம் முன்னோர்கள் அதனைக் கண்டு மகிழ்ந்து நம் குலத்தவர்களை வாழ்த்துகின்றனர்.

மூதாதயரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென் கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிக நன்மைகள் கிடைக்கும். மகாளய பட்ச அமாவாசை வரும் 26-ந்தேதியாகும். அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரைகளில் அல்லது வீட்டின் வடகிழக்கு கிணற்றின் அருகில் மூதாதயர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால், "என்றோ ஒரு பாட்டன் மூலம் இன்று வரை நம்குலம்'' என்ற நிலையில் இருந்த நாம் இனி வரும் காலங்களில் நாம் பாட்டன்களாகவே இருக்கும் நிலையும் சந்ததியர்களின் வளர்ச்சியும் இருக்கும்.

கடவுளுக்கு நாம் செய்யும் பூஜையில் பத்தாயிரத்தில் ஒரு பங்கினைத்தான் நாம் நமது முன்னோர்களுக்கு செய்கின்றோம். கடவுளையே நமக்கு அடையாளம் காட்டிய அந்த அன்பு ஜீவிகள் நாம் செய்யும் பூஜையில் மகிழ்ச்சி அடைந்து நம்மை வாழ்த்துவதில் தெய்வத்திற்கு நிகரான வரம் தருகின்றார்கள். நாம் கடவுளிடம் செலுத்தும் அன்பைப் போல் நமது முன்னோர்களிடமும் செலுத்தினால் கை மேல் பலன் கிட்டும்.

`நமது முன்னோர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். பூமியில் வாழ்ந்து மடியும் நம் மூதாதையர்களின் பூத உடல் தான் மறைகிறது. ஆனால் ஆன்மாவானது தனது சூட்சும உருவில் இருந்து அருளாசி வழங்கி தன் குலத்தை காத்து வருகின்றார்கள். எனவே பித்ரு பூஜை நமது முன்னோர்களால் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வந்துள்ளது. நாமும் நமது மூதாதயரை எண்ணி பித்ரு பூஜையை செய்வதன் மூலம் மூதாதயரின் ஆசியோடு ஆனந்த வாழ்வு அடைவோம் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச் சேர்ந்த விஜய்சுவாமிஜி.
தொடரும் .....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை ! Empty Re: இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை !

Post by krishnaamma Tue Sep 27, 2011 9:51 am

தொடர்ச்சி...

நோயில் இருந்து விடுதலை:

பணம் உள்ளவர்கள் தான் ஆடம்பரத்துக்காக பூஜை செய்கின்றனர். நமக்கு ஏன் இந்த வேலை என யாரும் புறக்கணிக்க வேண்டாம். முடிந்த அளவு இந்த அமாவாசையில் நீங்கள் உங்கள் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய்களில் இருந்து விடுவிக்கும்.

பிதுர் தேவதைகள்:

நாம் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை வரவேற்கின்றோம்.

1. நம் பித்ருக்கள் (மண்),

2. புரூரவர் (நீர்),

3. விசுவதேவர் (நெருப்பு),

4. அஸீருத்வர் (காற்று),

5. ஆதித்யர் (ஆகாயம்)

என பஞ்ச பூத அம்ஸமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான் என கருட புராணம் விளக்கமாக கூறுகின்று. திரேதா யுகத்திலும், கிருதாயுகத்திலும் மகாளய பட்ச நாட்களில் மூதாதையர்கள் நேரில் தரிசனம் தந்து உணவு பெற்று வாழ்த்தி சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.

ஸ்ரீராமர் தன் தந்தையான தசரதனுக்கும், கிருஷ்ணன் தன் மூதாதயர் அனைவருக்கும் இவ்வாறு தர்பணம் செய்ததாக நமது இதி காசங்கள் கூறுகின்றன. ஆனால் இëக்காலத்திலோ சூரியனின் ஒளியை விட அதிக பிரகாசமாக உலாவரும் அவர்களை நம் கண்களால் காண இயலாத நிலையில் நமது வாழ்வியல் தன்மை அமைந்துள்ளதால் மானசீகமாக பூஜை செய்து, நாம் தரும் திதி நமது முன்னோர்களை மகிழ்விக்கின்றது.

இவ்அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழவர்க்கங்களை நிவேதனமாக வைக்கலாம். பலகாரம், சாதவகைகளையும் படையல் செய்யலாம். வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும் முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதர வற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள். வருங்காலத்தில் நீங்கள் வெற்றியாளர்களே!

புனித நீர் ஸ்தலங்கள்:

காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்கள் திதி தர ஏற்ற இடங்கள். நம் தமிழகத்தில் ராமேஸ்வரம், பவானி கூடுதுரை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு, உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் பித்ருக்களுக்காக நாம் பின்டம் பிடித்து தர்ப்பனம் செய்வது கூடுதல் பலன் தரவல்லது.

காருண்ய பித்ருக்கள்:

சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.

இவர்கள் "காருண்ய பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்''. எனவே மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை அன்று குறைந்தது ஒரு ஜோடி ஆண்-பெண் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நீங்கள் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவுங்கள் உங்கள் வாழ்வும், வம்சமும் சிறக்கும்.

பலன்கள்:

நீண்ட நாள் கடனாளியா நீங்கள்? இப் பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும். உத்தி யோகம் கிடைக்கும். உத்யோக உயர்வுகள் உண்டாகும். தடையாக இருந்த திருமண வாழ்வு சுகமாக தொடரும். திருமணத் தடை அகலும்.

இல்லறம் இனிக்கும் குழந்தைகள் கல்வியில் உயர்வு பெறுவர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். குழந்தை பாக்யம் கிட்டும், வியாபார அபிவிருத்தி உண்டாகும். குடும்ப சாபம் அகலும், செவ்வினைகள் அன்டாது. கால்நடை பெருக்கம், விவசாய அபிவிருத்தி ஏற்படும்.

சீரான மழை கிடைக்கும். அரசு பதவி கிடைக்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். புகழ் பரவும். புன்னகை தங்கும், பொன்நகை அதிகரித்து கிடைக்கும், குடும்ப ஒற்றுமையாக செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நிம்மதி நிலைக்கும்என்கிறார் விஜய்சுவாமிஜி.

நன்றி: மாலை மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை ! Empty Re: இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை !

Post by ரேவதி Tue Sep 27, 2011 9:56 am

இன்றுதான் அம்மாவிற்கு தர்ப்பணம் செய்து விட்டு வருகிறோம்............
தகவலுக்கு நன்றி அம்மா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை ! Empty Re: இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை !

Post by Manik Tue Sep 27, 2011 10:28 am

நான் இப்பதான் கோவிலுக்கு போய்விட்டு வருகிறேன்..... ஒவ்வொரு அமாவாசையும் தவறாது சிவன் கோவிலுக்கு சென்று விடுவேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை ! Empty Re: இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை !

Post by krishnaamma Wed Sep 28, 2011 8:33 am

ரேவதி wrote:இன்றுதான் அம்மாவிற்கு தர்ப்பணம் செய்து விட்டு வருகிறோம்............
தகவலுக்கு நன்றி அம்மா

நல்லது ரேவதி , அவங்க ஆசிகள் எப்பவும் உங்களுடனே இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை ! Empty Re: இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை !

Post by krishnaamma Wed Sep 28, 2011 8:34 am

Manik wrote:நான் இப்பதான் கோவிலுக்கு போய்விட்டு வருகிறேன்..... ஒவ்வொரு அமாவாசையும் தவறாது சிவன் கோவிலுக்கு சென்று விடுவேன்

ரொம்ப நல்லது மாணிக் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை ! Empty Re: இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை !

Post by krishnaamma Mon Oct 12, 2015 11:30 am

இந்த திரியையும் மேலே கொண்டு வருகிறேன் புன்னகை .......இன்று மஹாளய அமாவாசை!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை ! Empty Re: இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை !

Post by krishnaamma Mon Oct 12, 2015 11:30 am

மஹாளய அமாவாசை அன்று என்ன செய்யவேண்டும்?

புரட்டாசி மாதம் வருகிற அமாவாசையை  மகாளய பட்ச அமாவாசை என்றும்,  பித்ருக்களுக்கு தர்ப்பண வழிபாடுகள் செய்ய வேண்டிய தினம் என்றும் கொண்டாடுகிறோம்.  ஆனால் இதை ஏன் பௌர்ணமியில் தொடங்கி (செப் 9 முதல் 24 வரை) 15 நாட்கள் கொண்டாடுகிறோம் தெரியுமா?

நம்மை பெற்றவர்கள் பூத உடலை விடுத்தும் சூட்சும உடலுடன்  விண்ணுலகம் சென்று வாழ்கிறார்கள்.  ஆனால் அவர்களுக்கு வேண்டிய உணவை அவர்களே எடுத்துக் கொள்ள முடியாது.  இதனால் எமதர்ம ராஜன் அவர்கள் மீது பரிதாபப்பட்டு 15 தினங்கள் விடுமுறை அளித்து ”மண்ணுலகிற்குச் சென்று உங்கள் பிள்ளைகள் தரும் உணவை உண்டு வாருங்கள்” என்பார்.  அதனால் தான் நாம் 15 நாட்களை ”மகாளயபட்சம் ” என கொண்டாடுகிறோம்.

தங்கள் பிள்ளைகளிடம் உணவுடன் எள்ளும், நீரும் பெற்று தணியாத பசியையும் தீர்த்துக் கொண்டு அவர்களை ஆசிர்வத்துவிட்டு வரட்டும் என்று எமன் அனுப்பி வைக்கும் 15 நாளில் ஒரு நாளாவது (அவரவர் பெற்றோர் திதி தினம்) அவர்களுக்குத் தர்ப்பணமும் பிண்டமும் வைக்க வேண்டும். இந்த பதினைந்து தினங்களும்கூட பித்ரு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் மகாளைய அமாவாசை யிள்ளவது தர வேண்டும்.  திதியில் திவசம் செய்ய மறந்தவர்களும் மகாளயத்தில் அதைச் செய்யலாம்.


பித்ரு தர்ப்பணம் செய்தால் நமது முன்னோர்கள் சிறுவயதில் இறந்தவர்கள், பிறந்த உடன் இறந்த குழந்தைகள், துர்மரணம் ஆனவர்களுக்கு நல்ல கதி கிடைக்கும்.  இந்த நாட்களையும் மறந்தவர்கள் தீபாவளி அமாவாசைக்கு முந்திய 15 தினங்களில் தர்ப்பணம் செய்யலாம்.

இந்த நாட்களில் இறந்தவர்களுக்கு எள்ளும் நீரும் கொடுக்கவில்லை என்றால், “உனக்குச் சிரார்த்தம் செய்ய புத்திரன் இல்லாமல் போகட்டும். உனக்கு மண்ணுலகில் வாழும் போது இறுதிக் காலத்தில் உணவு கிடைக்காமல் போகட்டும்” என்று சாபம் கொடுத்து விட்டுச் செல்வார்கள் என்று சொல்லப்படுகிறது. அதனால் முடிந்தவரை இதை யாரும் தவற விடுவதில்லை.

இந்த நாளில் வீட்டில் செய்யும் பித்து பூஜையை விட கடல், நீர்நிலைகள், ஆலய புஷ்கரணியில் செய்யப்படும் பித்ரு பூஜையே சிறந்தது.

வீட்டில் எப்படிச் செய்வது?

வெளியில் செண்டு பித்ரு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இறந்து போன முன்னோர்களின் படத்தை வைத்து எள் தர்ப்பணம் செய்து அன்னம் உருட்டி மூன்று பிண்டங்கள் வைத்து அதை பித்ருக்களாக  வரித்துத தேங்காய் , பலம் உடைத்து ஆரத்தி எடுக்க வேண்டும்.  பிறகு காக்கைக்கு உணவு வைக்க வேண்டும்.  அது சாப்பிட்டதும் நம் பாதங்களை அலம்பிவிட்டு வீட்டுக்குள் வந்து மீண்டும் முன்னோர்களை வணங்கி விட்டு தலை வாழை இலையில் படையல் செய்து சாப்பிடலாம் .

தர்ப்பணம் செய்ய சிறந்த இடங்கள்:

நீர் நிலைகள், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம், பவானி கூடுதுறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம்

கடற்கரைத் தலங்கள்

ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடல்கள் சங்கமிக்கும் கன்யாகுமரி, பூம்புகார், வேதாரணியம், கோடியக்கரை

ஆலயங்கள்

திருப்பூந்துருத்தி, திலதர்ப்பணபுரி, திருவாலங்காடு, திருவள்ளூர்,  திருமயம், அரண்மனைப்பட்டி,  திரு நல்லாறு, திரு ராமேஸ்வரம்

மணிகர்ணிகா திருக்குளங்கள்

“வாரணாசிக்கு  காசியாத்திரை செல்பவர்கள் மணிகர்ணிகா காட்டில் பிண்ட பூஜை செய்தால் 16 தலைமுறைகள் திருப்தி அடைவார்கள் என்பது ஐதீகம்.  அதிலும் மகாளய அமாவாசையில் மனிகர்ணிகாவில் தர்ப்பணம் விடுபவர்களுக்கு பித்ருக்கள் நேரடியாக தோன்றி ஆசி கூறுவதாக ஐதீகம்.

காசியைத் தவிர தமிழ் நாட்டில் மதுரை  திருப்புவனம், திருச்சி திருவெள்ளறை, சென்னையில் திருநீர்மலை, திருவாரூர் அருகே வேதாரண்யத்திலும் மணிகர்ணிகா திருக்குளங்கள் உள்ளன .

(நன்றி : கே.குமாரசிவாச்சாரியார் | குமுதம் சிநேகிதி)


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை ! Empty Re: இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum