ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்

Go down

சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் Empty சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்

Post by முஹைதீன் Sun Sep 25, 2011 3:46 pm




சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்: சோமாலிய மக்களுக்கு நாம் ஏன் உதவக்கூடாது?‏


ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் 640.000 பிள்ளைகளை பட்டினி மரணத்தின் விளிம்பு நிலைக்கு கொண்டு வந்துவிட்டதாக ஐ.நா அவசர அறிவப்பு விடுத்துள்ளது.

சோமாலியாவின் தெற்குப் பகுதியில் பட்டினி காரணமாக ஐந்து வயதுக்குட்டபட்ட சுமார் 29.000 பிள்ளைகள் கடந்த 90 தினங்களில் மரணித்துள்ளார்கள். பட்டினி வேகம் தொற்று நோய்போல பரவிக்கொண்டிருக்கிறது.


சோமாலியாவில் மட்டும் அடுத்த சில மாதங்களில் 640.000 பிள்ளைகள் பட்டினி மரணத்தை நெருங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏழுமாதமுள்ள சிறுமி ஒருத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவருடைய நிறை வெறும் 3.4 கிலோ மட்டுமே. ஐ.நாவின் வேண்டுகோள் பலமாக இருந்தாலும் அதற்கு உலகின் வளமுள்ள நாடுகள் பெரிதாக அக்கறை காட்டவில்லை.


ஆபிரிக்க கண்டத்தில் மிகவும் வறுமைப்பட்ட நாடாகவும் உலகிலேயே மிகவும் ஆபத்து மிக்க நாடுகளில் ஒன்றாகவும் இருப்பது சோமாலியா ஆகும். 1991ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தால் அப்போது ஆண்டு அவந்த அரசு கவிழ்ந்ததோடு பல விடுதலைப் போராட்ட இயக்கங்களும் ஆரம்பமாகியது.


பின்னர் அவ்வியக்கங்கள் அனைத்தும் தீவிரவாத அமைப்புகளாக மாறி இன ரீதியான அல்லது மதப் பிரிவின் ஆயுதக்குழுக்களாக மாறியது. இதனால் கொலைக்களமாக மாறியது சோமாலியா. அந் நாட்டில் உள்ள வறுமைக்கோட்டிற்கு மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளில் சென்று சரண்டைந்தனர். தமிழர்களைப் போல சோமாலியர்களும் தமது சொந்த நாட்டில் இருக்க முடியாது பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.


தற்போது சோமாலியாவில் இருக்கும் அரசானது மூன்றில் 1 பங்கு நிலத்தைக்கூட தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். உலக நாடுகள் அனைத்தும் சோமாலியாவை (FTT) அதாவது தோல்வியடைந்த நாடு என்று பொருட்பட அழைப்பார்கள். போராளிகள் ஒருபக்கம், தீவிரவாதிகள் ஒருபக்கம் மற்றும் அரசாங்கம் ஒருபக்கம் என இருக்கும் நிலையில் அங்கே உள்ள மனிதர்கள் நிலை படுமோசமாக இருக்கிறது. சத்தான உணவுகள் இன்றி மக்கள் இறப்பது என்றால் அது சோமாலியாவாகத் தான் இருக்கமுடியும்.


அளவுக்கு அதிகமான வெப்பம், மழை வீழ்ச்சி குறைவு எந்தப் பயிரையும் பயிரிட முடியாத நிலை என்பன போக 100 அடிக்கு வெட்டினால் கூட தண்ணீர் கிடைப்பது இல்லையாம். இப்படியும் ஒரு பூமியா ? என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
இங்கே இருக்கும் ஆடு மாடுகள் தொடக்கம் மனித இனம் வரை சொல்முடியாத துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். பிறந்த நாள் முதல் இதுவரை ஒரு பிஸ்கட் துண்டைக் கூடக் கடித்துப்பார்க்காமல் இறந்த குழந்தைகள் இங்கே தான் இருக்கிறார்கள். சாக்கிளேட் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகளும் இங்கே தான் இருக்கிறார்கள்.


சமீபத்தில் ரூய்டர்ஸ் செய்திச் சேவையானது வெளியிட்ட படங்கள் உலகை அதிரவைத்துள்ளது. பட்டினியால் செத்த குழந்தை இன்னும் சாகக்கிடக்கும் குழந்தை மற்றும் போசாக்கு குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள். ஈழத் நடந்த போரில் பல ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்தார்கள் நாம் மறுக்கவில்லை. ஈழத்து நிலங்கள் பொன் விளையும் பூமி அங்கே நீர் இருந்தது விவசாயம் இருந்தது. கடற்கரைகள் இருந்தன. ஆனால் சோமாலியாவில் ஒன்றுமே இல்லை. இதுதான் வித்தியாசம்.


உணவு இல்லை என்றால் கடிப்பதற்கு ஒரு கொய்யாக் காய் இல்லை மாம்பழம் அதுவும் இல்லாவிட்டால் ஒரு பப்பாப்பழமாவது எமது ஊரில் கிடைக்கும். ஆனால் சோமாலியாவில் பஞ்சு மட்டும் தான் மரமாக இருக்கிறது. சிலவேளைகளில் தினை கிடைக்கும். அதிலும் கஞ்சிவைத்தே உண்ண முடியும். இப்படியான நிலையில் வாழும் அம்மக்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, அங்கே இருக்கும் குழந்தைகளுக்காவது புலம் பெயர் வாழ் தமிழர்கள் உதவவேண்டும்.


தம்மாலான உலர் உணவுகளை வழங்கி பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கு 1 நேரச் சாப்பாடாவது கிடைக்கச் செய்யவேண்டும். சர்வதேச சூழலில் பணம் படைத்த மேற்குலக நாடுகள் சோமாலியாவை கண்டும் காணாததுபோல உள்ளனர். அங்கே எண்ணை வளம் இருந்திருந்தால் நான் நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு போய் நின்றிருக்கும் மேற்குலகம். ஆனால் அங்கே ஒன்றுமே இல்லையே..


உலகில் பரந்துவாழும் தமிழர்கள் கஷ்டம் என்றால், பட்டினி என்றால் இல்லை மரணபயம் என்றால் என்ன என நன்கு உணர்ந்தவர்கள். அதனால் அவர்கள் மனம் வைத்தால் இதனை ஒரு சிறிய உதவியாகச் செய்யலாம். தமது பிள்ளைகளுக்கு உணவுகளை வாங்கும்போது சோமாலிய பிள்ளைகளுக்கு ஒரு உலர் உணவை வாங்கி அதனை அங்கே அனுப்பிவைக்கலாம்.


இதனை தாய் தந்தையர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் சேர்ந்து செய்யவேண்டும். தமிழீழ பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து சோமாலியப் பிள்ளைகளுக்கு உணவுகளை அனுப்பிவைத்தால் சர்வதேச அளவில் தமிழ் சிறுவர்களின் நடவடிக்கை பாராட்டப்படும். தமிழர்களின் இரக்க குணத்தை உலகறியச் செய்ய , நாமும் ஒரு சோமாலியக் குழந்தைக்கு உணவு கொடுப்போம். தர்மம் தலைகாக்கும்.



-Abu Mymoona



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum