புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கேயும் எப்போதும் - விமர்சனம்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
எங்கேயும் எப்போதும்
இது நேற்று திருப்பூரில் நடந்தது.
காதல் தம்பதிகள். ஆறு வயதுப் பெண்குழந்தை. திருப்பூரில் தொழில் நிலைமை சரியில்லாததால் ஆறுமாதம் அங்கும் இங்கும் கடன் வாங்கியிருக்கிறார் கணவர். கடன் தொல்லை. அதனால் குடும்பச் சண்டை. சமாதானம் பேச சென்னையிலிருந்து வந்த உறவினர்கள் அவர்களை சென்னைக்கே வந்து குடியிருக்கச் சொல்கிறார்கள். பெண்ணுக்கு அது பிடிக்கவில்லை. அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு எதிரில்தான் பெண்ணின் தாய்வீடு. ஓடிச் சென்று ஓர் அறையில் புகுந்து தாளிட்டுக் கொள்கிறார். சிறிது நேரம் கழித்து இவர்கள் சென்று பார்க்க, சேலையை மாட்டி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
ஆபத்தான கட்டத்தில் இருக்கும் அவரை உடனே ஓர் ஆட்டோவில் ஏற்றி கொண்டு செல்கிறார்கள். கணவர் பின்னாலேயே இன்னொரு ஆட்டோவில் வருகிறார். வழியில் ஆம்புலன்ஸ் வர, ஆட்டோவை நிறுத்தி, உயிருக்குப் போராடும் அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்றுகிறார்கள். பின்னால் மற்றொரு ஆட்டோவில் வந்த அவரின் கணவர், தான் வந்த ஆட்டோவை நிறுத்தி, ஆம்புலன்ஸை நோக்கி ஓடுகிறார். பதட்டம். கவனமின்மை. எதிரில் வரும் ஒரு லாரி அந்தக் கணவர் மீது மோதுகிறது.
இருவரையும் ஒரே ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்கின்றனர். இருவரும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழக்கிறார்கள்.
அந்த ஆறு வயதுக் குழந்தையின் கதி????
விபத்து என்பது எங்கே-எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது. எங்கேயும் நடக்கலாம். எப்போதும் நடக்கலாம்.
--- --
விபத்து நடக்கும்போது, அதைக் கேட்கும்போதோ நமக்கு ஏற்படும் பதட்டமும், விளைவுகளும் எழுத முடியாது. எழுதினாலும் உணரமுடியாது. எங்கேயும் எப்போதும் நம்மை உணர வைக்கிறது. விபத்து நடக்கும் பேருந்தினுள்ளே நாமும் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. துவக்க காட்சியிலேயே அந்த விபத்தைக் காட்டி விடுகிறார்கள். எனினும், இடைவேளைக்குப் பின் அதைக் காட்டும்போது, தியேட்டரில் பலரும் பார்க்க இயலாமல் தலைகுனிந்து கொள்வதைக் கவனிக்க முடிந்தது. அவ்வளவு நேர்த்தியாக, அவ்வளவு ஆழமாக படமாக்கிய வேல்ராஜுக்கு சபாஷ்! அதே போல அதற்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் உழைத்தவர்களுக்கும் சல்யூட்! இன்னும் நடுங்குகிறது!
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்துக்கும், திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பேருந்துக்கும் விபத்து நடக்கும் காட்சியில் படம் தொடங்குகிறது. ஒரு பேருந்தில் அனன்யாவும், மற்றொரு பேருந்தில் ஜெய், அஞ்சலி, சர்வா-வும் பயணிக்கிறார்கள். அங்கிருந்து 4 மணி நேரம் முன்பு, அதிலிருந்து ஆறுமாதம் முன்பு என்று சர்வா-அனன்யா சம்பந்தப்பட்ட காட்சிகளையும், ஜெய்-அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகளையும் காட்டுகிறார் இயக்குனர். அந்த திரைக்கதை உத்தி ரசிக்க வைக்கிறது. விபத்தில் யாருக்கு என்ன நடக்கிறது என்பதே க்ளைமாக்ஸ்.
சர்வா-அனன்யா காட்சிகளில் அனன்யாவின் சந்தேகப்பேர்வழியான பாத்திரப்படைப்பை இயக்குனர் காட்சிப்படுத்திய விதம் அபாரம். ஒரு காட்சியில், பேருந்துக்காக நிற்கும் அனன்யா, ஓரடி பின் சென்று அங்கிருக்கும் பலகையில் அவர்களுக்கான பேருந்து எண் இருக்கிறதா என்று சரிபார்க்கிறார். மூன்று நான்கு செகண்ட் வரும் அந்தக் காட்சியில் அவரது சந்தேக புத்தியைப் பதிவு செய்த விதம் நன்று. அதே அனன்யா, விபத்தில் மருத்துமனையில் இருக்க, அங்கு வரும் அனன்யாவின் சித்தி சர்வா-வைப் பார்த்து ‘இவர் இருக்காரு.. அமுதாவுக்கு ஒண்ணும் ஆகிருக்காது’ என்று சொல்கிற வசனம் மூலம் எல்லாவற்றையும் புரிய வைத்து விடுகிறார்கள்.
ஜெய்-அஞ்சலி. ஒரு காதலியை இப்படி யாரும் சித்தரித்து நான் பார்த்ததில்லை. அஞ்சலியின் பாத்திரப் படைப்பும், நடிப்பும் இந்தப் படத்தின் மகாப் பெரிய ப்ளஸ். தன்னை உருகிக் காதலிக்கும் ஜெய்-யிடம் அவர் ஐ லவ் யூ சொல்லும் தொனி… இதுவரைக்கும் யாரும் இப்படிச் சொல்லிருக்க மாட்டார்கள். ஜெய்யின் நடிப்பும் கச்சிதம். படம் முழுவதும் அஞ்சலியை வாங்க போங்க என்றே அழைக்கிறார். ‘கட்டிக்கோ’ என்று அஞ்சலி சொல்ல, ‘கல்யாணத்துக்கு அப்பறம்க’ என்று ஜெய் சொன்னதும், அஞ்சலி ‘நீ கல்யாணத்துக்கு அப்பறம் கட்டிக்கோ.. நான் இப்ப கட்டிக்கறேன்’ என்று அணைத்துக் கொள்ளுமிடம் கவிதை. அந்தக் காட்சி மற்றும் பாடல் காட்சியில் மாண்டேஜ்கள் தவிர வேறெந்த இடத்திலும் அஞ்சலி, ஜெய்-யை காதல் பார்வையே பார்ப்பதில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து தன் அன்பை இறுதிக் காட்சி நடிப்பில் வெளிப்படுத்துகிறார். அவ்வளவு ஸ்ட்ரிக்டாக தான் இருப்பதற்கு அவர் சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளகூடியதாய் இருக்கிறது. அத்தனை யதார்த்தமான வசனங்கள்தான் காரணம்.
பாடல்கள் ஏற்கனவே ஹிட். நா.முத்துக்குமாரின் வரிகள் ஈர்க்கின்றன. மாசமா பாடலைத் தவிர பிற எல்லாமே மாண்டேஜ். கோவிந்தா, சொட்டச் சொட்ட நனைய வைத்தாய் பாடல்களின் காட்சிகள் ரசனையோ ரசனை. அதுவும் சொட்டச் சொட்ட பாடலில் அஞ்சலி தன் தோழிகளுடன் ஜெய் அறைக்குச் செல்லும் காட்சி கொள்ளை ரசனை.
படத்தில் பேருந்து சாலைகளில் செல்லும் வேகத்தைப் படமாக்கிய விதமும், அதற்கான பின்னணி இசைக் கோர்ப்பும் அபாரம். ஒரு காட்சியில் இரண்டு பெரிய வாகனங்களை ஆம்னி பஸ் இடது புறமாக சாலையில் இறங்கி முந்திச் செல்லும் காட்சியில் தியேட்டரில் பலர் ஐயோ அம்மா என்று கத்துகிறார்கள். இந்தப் படத்தை விஐபி-க்களுக்கெல்லாம் இல்லாமல் தனியார், அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு ஒரு ஸ்பெஷல் காட்சி போட்டுக் காட்டலாம். இது என் வேண்டுகோள்.
நேற்று வெளியான இன்னொரு படம் வந்தான் வென்றான். அது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இது வந்தது. வென்றது.
நன்றி பரிசல்காரன்.
http://www.parisalkaaran.com/2011/09/blog-post_17.html

Engeyum Eppodhum/2011/உலகசினிமா/தமிழ்/எங்கேயும் எப்போதும்.. கவிதையாக ஒரு தமிழ்படம்.
பல வருடங்களுக்கு முன் ஒரு சாலை விபத்து, என் மனதை ரொம்பவே கஷ்டபடுத்தியது..
பல வருடங்களுக்கு முன் ஜுனியர் விகடனில் அந்த செய்தி வந்த போது இரண்டு நாட்களுக்கு அதபற்றிய சிந்தனையாகவே இருந்தது...
அந்த முகம் தெரியாத அப்பாவி பெண்ணுக்காக நான் பிரார்த்தித்தேன்..
அந்த விபத்து கேரளாவில் நடந்தது.. ஏதோ இண்டர்வியூவுக்கு ஒரு 20 வயதுப்பெண் ஆட்டோவில் பயணிக்கும் போது ஒரு பெரிய கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து அந்த ஆட்டோ மீது விழுந்து விட, இடுப்புக்கு கீழே முழுதாக அந்த பெண்ணுக்கு உடல் உறுப்புகள் சிதைந்து விட்டது..ஆனாலும் மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது, தனக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்ப்பட ,சுற்றிலும் ஆண்கள் இருக்கும் போது எப்படி போவது? என்று அவள் துடித்ததும் இடுப்புக்கு கிழே சிதைந்து போன உடலோடு அந்த பெண்ணின் கதறல் எழுத்தில் எழுதி இருந்த போது எனக்கு அழுகையே வந்துவிட்டது...அந்த விபத்து நேரில் பார்க்கா விட்டாலும் அந்த செய்தியை படித்த போது மனது கணத்தது..
விழுப்புரம் பண்ருட்டி சாலையில் முதல்நாள் திருமணம் முடிந்த புதுமணத்தம்பதிகள் ஹனிமூனுக்கு மிகுந்த சந்தோஷத்துடன் காரில போய்கொண்டு இருக்க முன்னால் சென்ற லாரி சடன் பிரேக் அடிக்க புதுமணத்தம்பதிகள் இருவரும் ஸ்தலத்திலேயே
இறந்து போனார்கள்..
கனவுகள் நொடியில் நொறுங்கி போனது...காரணம் முன்னால் சென்ற லாரியின் டிரைவர் சாலை ஓரத்தில் குடிதண்ணீர் இருப்பதை பார்த்து விட்டு தண்ணி பிடிக்க எந்த அறிவிப்பும் இல்லாமல் சடன்பிரேக் அடிக்க எல்லாம் முடிந்து போனது.,..
நானே பல கட்டுரைகள் எனது தளத்தில் எழுதி இருக்கின்றேன்.. கடந்த வருடத்தில் ஒரு சாலை விபத்து லிஸ்ட் எடுத்தீர்கள் என்றால் நின்ற லாரியின் மீது வாகனங்கள் மோதி ஏற்ப்பட்ட விபத்துகள் அதிகம் என்ற ஒரு அறிக்கை கிடைக்கும்..
இரண்டு வாரத்துக்கு முன்பு திருச்சி அருகே அரசு பேருந்தில் 20 வருட அனுபவம் உள்ள டிரைவர் டிசல் சிக்கனத்துக்கு ஒன்வேயில் செல்ல, தனியார் பேருந்து அசுர வேகத்தில் மோத 14 பேருக்கு மேல் ஒரு நொடியில் இறந்து போனார்கள்..இறந்து போவதை காட்டிலும் உடல் உறுப்புகள் இழந்து போய், நடைபினமாய் இருப்பவர் பற்றிய கதைகள் ஏராளமாய் தமிழகத்தில் சுற்றிக்கிடக்கின்றன..
வேலூர் அருகே லாரியை முந்தி செல்ல முயன்ற கேபிஎன் தனியார் பேருந்து தன் கட்டு பாட்டை இழந்த காரணத்தால் கவிழ்ந்து தீப்பிடித்து 23 பேருக்கு மேல் கரிக்கட்டையாகி போனார்கள்..
எத்தனையோ பேரின் கனவுகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் தனிமனித தவறுகளால் ஒரு நொடியில் கலககலத்து போய் விடுகின்றன.. அப்படி கலகலத்து போவதை நெத்தியடியாகவும் கவிதையாகவும் எங்கேயும் எப்போதும் படத்தில் இயக்குனர் சரவணன் சொல்லி இருக்கின்றார்..ஹேட்ஸ் ஆப் சரவணன்.
================
எங்கேயும் எப்போதும் படத்தின் கதை என்ன?,
முதல் காட்சியிலேயே ஒரு தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகின்றது.. பலர் இரத்தசகதியாய்,உடல் உறுப்புகள் துண்டிக்க பட்டு கிடக்கின்றார்கள். பிளாஷ் பேக் விரிகின்றது.. திருச்சியில் இருந்து அரசு பேருந்து சென்னையை நோக்கியும்,சென்னையில் இருந்து தனியார் பேருந்து திருச்சி நோக்கியும் செல்ல அதில் பயணிக்கும் கதைமாந்தர்களோடு கதை விரிகின்றது...ஜெய், அஞ்சலி,சரவ் திருச்சி இருந்து புறப்படும் அரசு பேருந்திலும் அனன்யா சென்னையில் இருந்து கிளம்பும் தனியார் பேருந்திலும் கிளம்புகின்றார்கள்.. அவர்கள் விபத்து எனும்புள்ளியில் சந்திக்கும் முன் அவர்கள் நால்வரின் பிளாஷ் பேக்தான் படத்தின் சுவாரஸ்யம் ... அது என்ன என்பதை திரையில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்..
============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
ஹாலிவுட் பட நிறுவனமான பாக்ஸ் நிறுவனம் தமிழ் தயாரிப்பளர் இயக்குனர் முருகதாசோடு இணைந்து தயாரிக்கும் முதல் படமே பட்டையை கிளம்பி இருக்கின்றது..
யார்யா இந்த ஆளு பார்க்க தம்மாத்தோன்டு இருந்துக்குனு பட்டையை கிளம்பி இருக்கின்றாரே என்று ஆச்சர்யபடுத்தி இருக்கின்றார்..இயக்குனர் சரவணன்..
விமல் நடிக்க இருந்த படம்...இயக்குனருக்கும் விமலுக்க கருத்து வேறுபாடு காரணமாக ஒரு நல்ல படத்தை விமல் தவற விட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்....
முதலில் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்று ஆர்வத்தை ஏற்படுத்தியது கோவிந்தா பாடல்தான்.. அந்த பாடலில் இருந்த சென்னையின் லைவ்லிநஸ் மற்றும் ஒரு தென்மாவட்டத்து பெண்ணின் பார்வையில் சென்னையின் எதார்த்தங்களை ரொம்ப கியூட்டாக விவரித்த விதம்... நான் ரொம்பவும் ரசிக்க காரணம்..அந்த முதல் பதிவைவாசிக்க இங்கே கிளிக்கவும்.
இந்த படத்தின் டாப் மோஸ்ட் ஹீரோ கேமராமேன் வேல்ராஜ்தான் என்றால் அது மிகை இல்லை என்று சொல்லலாம்.. சென்னை மற்றும் திருச்சியின் லைவ்லிநஸ் திரையில் அப்படியே கொண்டு வந்து இருக்கின்றார்கள்..சின்ன சின்ன கியூட் ஷாட்டுகள் படத்தில் அதிகம்...
மிக முக்கியமாக பேருந்துகள் கிளம்பும் முன் அவைகள் எவ்விதமாக ஒரு நீண்ட நெடிய பயணத்துக்கு தயராகின்றன என்று சின்ன சின்ன ஷாட்டுகளில் விளக்கும் காட்சிகள் கவிதை..அதே போல ஒரு விபத்து ஏற்ப்பட்டதும், அது யார் யாருக்கு பதட்டத்தை ஏற்படுத்தும் யார் யார் அதை ரொம்ப சர்வசாதாரணமாக அனுகுவார்கள் என்று காட்சிபடுத்திய இடங்கள் அருமை.
சரவ் மற்றும் அனன்யா ஜோடியை நடிப்பாய் நான் பார்க்கவேயில்லை.. அவர்கள் நம்மோடு ஷேர் ஆட்டோ மற்றும் 37ஜியில் பயணிக்கும் சகபயணியாகவே மாறி இருக்கின்றார்கள். படத்தில் பெரும்பாலும் இரண்டு பேருக்கும் ஒரே காஸ்ட்யூம்தான்...அனன்யா கேரளா வரவு என்பது சில செழுமைகள் மூலம் எளிதில் உறுதிபடுத்திக்கொள்ள முடிகின்றது..எனக்கு அவரின் இரண்டு கண்கள் பிடித்து இருக்கின்றது..
முக்கியமாக பேருந்தில் பயணிக்கும் போது சரவ்வின் அப்பா கல்யாணத்துக்கு வற்புறுத்த இன்னும் மனதுக்கு பிடித்த பெண் தனக்கு கிடைக்கவில்லை என்று சொல்லும் போது அனன்யா கொடுக்கும் எக்ஸ்பிரஷன் கவிதை ரகம். சரவ்வின் மேன்லிநஸ் பெண்களை கிரங்க வைக்கும்.
படத்தில் எனக்கு தெரிந்து இன்னும் சிரப்பாக நடித்து இருப்பவர்கள்...ஜெய்,அஞ்சலி ஜோடிதான்.
ஜெய் தனக்கு கொடுத்த பாத்திரத்தை மிக கச்சிதமாக செய்து இருக்கின்றார்.. அந்த இன்னோசென்ட் அவருக்கு நன்றாகவே வருகின்றது.. வெல்டன் ஜெய் சான்சே இல்லை..
அஞ்சலிக்கு இந்த படம் ஒரு மைல் கல் கற்றது தமிழுக்கு பிறகு அங்காடி தெரு, இப்போது எங்கேயும் எப்போதும் என்று காலரை ச்சே சாரி.. ஜீன்சை இழுத்து விட்டு சொல்லிக்கொள்ளலாம். யப்பா என்ன நடிப்பு? என்ன நடிப்பு?? கடைசிவரை என்னோடு குப்பை கொட்டுவாயா? என்று கேட்டு விட்டு அப்படின்னா ஐ லவ்யூ என்று அலட்சியமாக சொல்லும் இடத்தில் அஞ்சலி சான்சே இல்லை.. அதே போல ஜெய்யை தானே கட்டிபிடிக்கும் இடத்தில் ஒரு சின்ன கியூட்நெஸ் அதில் இருப்பதை மறுக்க முடியாது.
ஆண் அடங்கி பெண் பொங்கும் கேரக்டர்.. ஜெய் அஞ்சலி ஜோடிக்கு நன்றாகவே ஒர்க்அவுட் ஆகின்றது... ஜெய் வீட்டில் அஞ்சலி தன் பிரண்ட்ஸ்சோடு சீட்டு ஆடும் போது,அஞ்சலி ஜெய் கையை எடுத்து தனது தோள் மேல் போட்டுக்கொள்ள, விளையாட்டின் போது அஞ்சலி முன் பின்னாக சாய்ந்து இயல்பாக ஆட, ஜெய்யின் கை ஆஞ்சலியின் மார்பகங்களில் படுவதையும், அதனால் ஜெய் கூச்சத்தில் தவிப்பதையும் விஷுவலாக காட்டாமல் ஜெய்யின் முக ரியாக்ஷனில் காட்டி இருப்பது செமை கியூட்..
படத்தின் டயலாக்குகள் அற்புதம் முக்கியமாக அனன்யா தன் அக்காவிடம் ஒரு நிமிடம் பெண் பார்க்க வந்து காபி கொடுத்து விட்டு பிடித்து இருக்கின்றது என்று சொல்லி திருமணம் செய்து கொண்டு இருக்கின்றாய்..ஆனால் நான் ஒரு நாள் அவனோடு பயணித்து இருக்கின்றேன் என்று சொல்வதும்... அஞ்சலி கோபம் வந்தால் உடனே கோபப்பட்டு விடு அதை விட்டு விட்டு ஏதாவது ஒரு நாளில் உனக்கா நான் எவ்வளவு விட்டு கொடுத்து இருக்கின்றேன் என்று சொல்லாதே என்று சொல்லும் உரையாடல்கள் வாழ்வியல் நிதர்சனங்கள்.
படம் முழுக்க சிரிக்க வைத்தவர்கள்.. அந்த ஆக்சிடென்ட் பார்ட்டை பிரித்து மேய்ந்து இருக்கின்றார்கள்..அப்படி காட்டும் போதும் அந்த காட்சிகளை பார்க்கும் தனிமனிதன் இன்னும் கவனமாக வாகனம் ஓட்ட அந்த டிடெய்லான விபத்து காட்சிகள் உதவும்...
அதே போல பேருந்தில் நமக்கு அறிமுகபடுத்தப்படும் சின்ன சின்ன கேரக்டர்கள் மனதில் நிற்கின்றார்கள்...
மிகை இல்லாத எதார்த்தை தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையோடு ரொம்ப நெருக்கமாக பதிவு செய்யப்படும் இது போலான படங்கள் வெற்றி பெறவைப்பது நமது கடமை..
படத்தில் இருக்கும் பெரிய லாஜிக் மிஸ்சிங் சென்னைக்கு நேர்முகதேர்வுக்கு வரும் அனன்யாவிடம் ஏன் செல்போன் இல்லை..???
மற்றபடி தமிழ்சினிமாவில் தனக்கு என்று தனி முத்திரை பதித்து இருக்கின்றார் இயக்குனர் சரவணன் வெல்டன்.
கேமராமேன் வேல்ராஜ் வெல்டன் மற்றும் ஆல்தபெஸ்ட்.
இசை... சத்யா.. வெல்டன்
எடிட்டிங்.. ஆன்டனி..வெல்டன் முக்கியமாக கோவிந்தா சாங் கட்டிங் மற்றும் சாலைகாட்சிகள் மற்றும் விபத்து காட்சிகயில் தனது கத்திரியால் ஷார்ப் பண்ணி இருக்கின்றார்.
படத்தின் என்ட் டைட்டிலை பார்த்தாலே இயக்குனரின் நோக்கம் புரிந்து இருக்கும்..
==========
படக்குழுவினர் விபரம்.
Directed by M. Saravanan
Produced by A. R. Murugadoss
Written by M. Saravanan
Screenplay by M. Saravanan
Starring Jai
Anjali
Ananya
Sharvanand
Music by Sathya
Cinematography Velraj
Editing by Anthony
Studio Murugadoss Productions
Fox Studios
Release date(s) 16 September 2011
Country India
Language Tamil
============
படத்தின் டிரைலர்...
இயக்குனர் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள்..
===============
பைனல்கிக்.
ஒரு படத்தில் சொல்லும் சமுக பிரச்சனைகளை துருத்திக்கொண்டு தெரிவது போல இல்லாமல் ,கதையின் ஊடே தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சனையை இயக்குனர் இந்த படத்தில் தேன் தடவி சொல்லி இருக்கின்றார்...
இந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்..
படம் முடியும் போது ..
அப்பா பயமா இருக்கும் வேகமா ஓட்டாதிங்கப்பா என்று வாய்ஸ் ஓவரில் குழந்தை சொல்லும் இடத்தில், இயக்குனர் பேர் போடும் போது நான் முதலில் கைதட்ட ,ஒட்டு மொத்த தியேட்டரே கைதட்டியதுதான் இந்த படத்தின் வெற்றியே...
===========
சத்தியம் தியேட்டர் டிஸ்கி..
நானும் நண்பர் நித்யாவும் தியேட்டரின் உள்ளே நுழைந்த போது நடிகர் ஜெய்யை சுற்றி ஒரு சின்ன கூட்டம் இருந்தது...
எனக்கு பக்கத்தில் நான்கு பெண்கள் உட்கார்ந்து அரட்டை அடித்த படி ஜாலியாக படம் பார்த்தார்கள்..நன்றாக சிரித்தவர்கள்.. கிளைமாக்சில் கர்சிப் வைத்து கண்களை துடைத்த படி மூக்கை உறிஞ்சி தள்ளினர்...
நாங்கள் உட்கார்ந்த ஐரோவிலேயே தமிழ் பதிவுலக பிரபலம் கேபிள் உட்காந்து படம் பார்த்து இருக்கின்றார்.. இடைவேளையில்தான் சந்தித்தோம்.....
படம் முடிந்து வெளியே வந்தால் அஞ்சலி , முருகதாஸ், சரவ், சிவகார்த்திகேயன்,ஏர்டெல் சூப்பர் சிங்கர் காம்பயரர் பேர் நினைவில்லை... பேர் எனக்கு நினைவு இருந்தது.. பட் தூது வருமா பாட்டுக்கு ஒரு நிகழ்ச்சியில் ஆடினார் அந்த பெண்.. அன்றில் இருந்து எனக்கு அவர் பெயர் மறந்து போனது..
நண்பர் நித்யா.. அஞ்சலி என்னங்க நேரில் பார்க்கும் போது இவ்வளவு மெலிசா இருக்காங்க என்று கேட்க..நீங்க நேரில் பார்ப்பதை விட திரையில் பெரிய பெரிய உருவமாக பார்த்து விட்டு அவர்கள் இயல்பான உருவத்தை நேரில் பார்க்கும் போது இந்த வியப்பு எல்லோருக்கும் ஏற்படும் என்று சொன்னேன்..
=========
ஹலோ ஜாக்கி
சொல்லுங்க
நான் கோயமுத்தூர்ல இருந்து சதிஷ் பேசறேன்.
சொல்லுங்க நண்பரே...
நீ சொல்லறது பக்கா லாஜிக்தான்..ஆனா திரையில் பார்க்கறது போலத்தான் ஷகிலா நேர்லயும் இருக்கறாங்க இது எப்படி?
ஹலோ.. ஹலோ.. சிக்னல் வீக் நண்பரே. நான் அப்பறம் கால் பண்ணறேன்..
================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
நன்றி ஜாக்கி சேகர் (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)
http://www.jackiesekar.com/2011/09/engeyum-eppodhum2011.html

- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
படத்தைப் பற்றி இவ்வளவு விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி.
விபத்து ஏற்பட்டு அதில் பிழைத்தவர்கள் வாழும் ஒரு சில மனிதர்களை நான் பார்த்து இருக்கிறேன்.அப்போது அவர்கள் சொல்வது இதற்கு இறந்தே போயி இருக்கலாம் என்பது தான்.காரணம் அவர்களின் வாழ்க்கை அவ்வளவு கொடியது.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
நாம் தினமும் பத்திரிகைகளில் படிக்கும் விபத்துக்களை பற்றிய செய்திதான் இப்படத்தின் மையக்கரு. படிக்கும் போது அதை வெறும் செய்தியாக மட்டும் பார்க்கும் நம் மனது, இந்த படத்தை பார்க்கும்போது ஏதோ நேரில் ஒரு விபத்தை பார்த்தது போலவும், இனி நாம் பேருந்துகளில் செல்லும் போது, இப்படி நடந்துவிடுமோ! என்று அஞ்சுகிற உணர்வை ஏற்படுத்தியிருப்பதுதான் இப்படத்தின் வெற்றிக்குறிய சிறப்பம்சம்.
திருச்சியில் இருந்து வேலை வாய்ப்புக்காக சென்னைக்கு வரும் அனன்யா, சூழ்நிலை காரணமாக ஷர்வானந்தை சந்திக்க நேரிடுகிறது. ஒரு நாள் முழுவதும் சென்னையில் ஷர்வானந்துடன் பயணிக்கும் அனன்யாவுக்கு ஷர்வானந்த் மீது காதல் ஏற்படுகிறது. இதே போல திருச்சியில் வேலைபார்க்கும் ஜெய்க்கும், அதே ஊரில் உள்ள அஞ்சலிக்கும் காதல் ஏற்படுகிறது. அஞ்சலியை தனது பெற்றொர்களுக்கு அறிமுகப்படுத்த தனது சொந்த ஊரான விழுப்புர மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு அழைத்து செல்கிறார் ஜெய். இதேபோல ஷர்வானந்த் மீது ஏற்பட்ட காதலால் அவரை சந்திக்க சென்னைக்கு அனன்யா வர, அதே மனநிலையில் சென்னையில் இருந்து திருச்சி செல்கிறார் ஷர்வானந்த்.
திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்தில் ஜெய்-அஞ்சலி ஜோடி, ஷர்வானந்த் வர, சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் பேருந்தில் அனன்யா வருகிறார். இவர்களுடன் மனைவியை பிரிய மனமில்லாத பாசமுள்ள கணவன், தனது ஐந்து வயது குழந்தையை முதல் முறையாக பார்க்க துபாயில் இருந்து வரும் தந்தை என நம் மனதில் பதியும் மற்ற கதாபாத்திரங்களும், பயணிக்கும் இந்த இரண்டு பேருந்துகளும் விழுப்புரத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிறது. பிறகு இதில் இருந்த காதல் ஜோடிகளின் நிலை என்ன? என்பதுதான் க்ளைமாக்ஸ்.
விபத்து என்ற ஒரு வரியை வைத்துகொண்டு ஒரு முழுநீள படத்தை சுவாரஸ்யமாக கொடுத்த அறிமுக இயக்குநர் சரவணின் திரைக்கதை யுக்திக்காக ஒரு பெரிய சபாஷ் போடலாம்.
அனன்யா-ஷர்வானந்த் ஜோடியின் காதல் இனிப்பு என்றால், அஞ்சலி-ஜெய் ஜோடியின் காதல் காரம் என்று சொல்லலாம். கண்களில் ஒருவித போதையை வைத்துகொண்டு அஞ்சலி பார்க்கும் விதமும், பேசும் விதமும் ஜெய்யை கட்டிப்போடுகிறதோ இல்லையோ, ரசிகர்களை கண்டிப்பாக கட்டிப்போடும். அஞ்சலியை வாங்க போங்க என்று அழைத்துகொண்டு காதலுக்காக ஏங்கும் ஜெய்யின் அப்பாவியான் நடிப்பும், நடுநடுவே அஞ்சலியை கலாய்க்கும் குசும்புத்தனமான நடிப்பும் தியேட்டரில் விசில் சத்தத்தை ஏற்படுத்துகிறது.
"அக்கா ஷேர் ஆட்டோ வில் போக சொன்னாங்க", "ஏழு ஸ்டாப்க்கு பிறகுதான் இறங்க சொன்னங்க" என்று ஷர்வானந்தை படுத்தும் அனன்யாவின் அழகிய சினுங்கல்களுக்கும் ரசிகர்கள் அடிமையாகிதான் போகவேண்டும். அனன்யாவின் திடீர் பந்தத்தை பாதியில் விட முடியாமல் பெருமூச்சு விட்டுகொண்டே அவருடைய இம்சையை ரசிக்கும் ஷர்வானந்தின் பாடி லாங்குவேஜ் அபாரம். எப்பவோ கோடம்பாக்கத்தில் குடியேறி இருக்க வேண்டியவர் சர்வா. இந்த முறை விட்டுடாதிங்க சார்.
இப்படி இந்த காதல் ஜோடிகளின் காட்சிகள் எப்படி நம்மை ரசிக்க வைக்கிறதோ அதை விட ஒரு படி மேலே வேல்ராஜின் ஒளிப்பதிவும் நம்மை ரசிக்க வைக்கிறது. பைபாஸில் பஸின் முன்புறம், ஓடும் பேருந்து பக்கத்தில் வரும் லாரியின் முன்புறத்தை காட்டி, அப்படியே பஸ்ஸின் அடியில் கேமராவை பயணிக்க வைத்து நம்மை வியக்க வைத்திருக்கிறார். இப்படி பல காட்சிகளில் நம்மை பரவசப்படுத்தியிருக்கும் வேல்ராஜ், சினிமாவில் நாம் பார்க்காத சென்னை பகுதியான கே.எம்.சி, சேத்துபட்டு போன்ற இடங்களிலும் தனது கேமராவை வைத்து, சென்னை வாசிகளை சந்தோசப்படுத்தியிருக்கிறார்.
சத்யாவின் பாடல்களும், பின்னணி இசையும் முன்னணியில் இருக்கிறது. படத்தில் இடம்பெறும் அத்தனை பாடல்களும் நம்மை முனுமுனுக்க வைக்கிறது. அதிலும் முக்கியமானது, ரசிகர்கள் யாரும் பாடலுக்கு தம்மடிக்க செல்லாமல் இருப்பதுதான்.
விபத்து காட்சியை முதலிலே காட்டாமல் இருந்திருந்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். இவர்களுக்கு, இப்படித்தான் விபத்து நடக்கப் போகிறது என்பது ரசிகர்களுக்கு முதலிலே தெரிந்துபோவதால், க்ளைமாக்ஸில் வரும் காட்சிகள் சிலருக்கு அலுப்பு தட்டுகிறது. மற்றபடி எங்கேயும் எப்போதும் அபாய பயணமாக இருந்தாலும், அனைவருக்கும் பிடித்த பயணம் தான்.
ஜெ.சுகுமார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காதல், பாசம், அன்பு அனைத்தையும் ஒரு விபத்து மாற்றிப் போடுவதால் மனித மனங்கள் நிலைகுலையும் இடம்தான் "எங்கேயும் எப்போதும்'.
நேர்முகத் தேர்வுக்காகத் திருச்சியிலிருந்து சென்னை வருகிறார் அனன்யா. அவரை அழைத்துப் போகவேண்டிய அக்கா அவசர வேலையாகக் காஞ்சிபுரம் போய்விட, தற்செயலாகப் பேருந்து நிலையத்துக்கு வரும் சர்வாவிடம் வந்து சேருகிறது அனன்யாவைப் பாதுகாக்கும் கடமை. கடமை வழக்கம் போலக் காதலில் முடிகிறது. தன் காதலைப் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கத் திருச்சிக்குப் பயணமாகிறார் அனன்யா.
இன்னொரு புறம் திருச்சியிலிருக்கும் அஞ்சலிக்கும் எதிர் வீட்டிலிருக்கும் ஜெய்கும் காதல். காதலியைத் தன் பெற்றோரிடம் அறிமுகப்படுத்த விழுப்புரம் மாவட்டம் அரசூருக்குப் பயணமாகிறார் ஜெய். அனன்யாவை திருச்சியில் தேடிக் கண்டுபிடிக்க முடியாத ஏமாற்றத்துடன் அதே பேருந்தில் சென்னைக்குத் திரும்புகிறார் சர்வா.
இந்த இரண்டு பேருந்துகளும் விழுப்புரம் அருகே நேருக்கு நேர் மோதிக்கொள்ள இந்த ஜோடிகளின் காதல் என்ன ஆனது என்பதைப் பதற வைக்கும் கிளைமாக்ஸ் காட்சியுடன் சொல்லி முடிக்கிறது படம்.
அஞ்சலி - ஜெய் ஜோடி திரைக்கதைக்கு கனகச்சிதமான பொருத்தம். தன்னைத் தொலைவில் இருந்தே ரசிக்கும் ஜெய்யிடம், எதிர்பார்க்காத தருணத்தில் அவரது அறைக்குள் புகுந்து பேசுவது, ""அங்கே போ, அவரைப் பாரு! இங்கே போ, இவரைப் பாரு!'' என ஜெய்யை அலைக்கழிப்பதும்,""என்னைக் காதலிக்கணும்னா இவ்வளவு பிரச்னைகள் இருக்குது. இதையெல்லாம் சமாளிக்க முடியும்னா என்னை காதலிச்சுக்கோ, அதுக்கு ஒரு மணி நேரம் வேணும்னாலும் டைம் எடுத்துக்கோ''ன்னு ஒவ்வொரு வசனத்திலும் பளிச்சென்று மனதைத் தொடுகிறார் அஞ்சலி.
கடைசி வரைக்கும் ""என்னங்க... சொல்லுங்க'' என்று மரியாதை நிமித்தமாகவே அஞ்சலியைப் பார்ப்பது, பேசுவது, பம்முவது என ஜெய்யும் ஈடு கொடுக்கிறார்.
சர்வா - அனன்யா ஜோடியின் காதல் ஒரு கவிதை. சென்னை நகர வீதிகளை ஆச்சரியம் கலந்து பார்க்கும் அனன்யா, சர்வாவையும் சந்தேகப்படும் இடங்களில், ரசிகனுக்கு மெல்லிய புன்னகை. ஐ.சி.யூ. வார்டில் சர்வா தன் காதலைச் சொல்ல, விரல் பிடித்து "உன் பெயரென்ன?' என்று கேட்கும் அனன்யா அற்புதம்.
இதுவரை முகம் பார்க்காத மகளை வெளிநாட்டு வேலையையும் துறந்து பார்க்கச் செல்லும் பாசமுள்ள தந்தை, திருமணம் முடிந்த சில நாள்களில் அதே காதலுடன் பயணிக்கும் தம்பதி, ஊர்ப் பஞ்சாயத்து தலைவர், காதல் ஸ்பரிசங்களுடன் பயணிக்கும் மாணவன் - மாணவி என ஒவ்வொரு பாத்திரமும் வாழ்வின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது.
திரைக்கதையில் திடீர் திடீரென்று காணப்படும் சடன் பிரேக் திருப்பங்களும், நிகழ்வுகளும் படத்தின் பலம். ஆனால் தொடர்ந்து தடதடக்க வேண்டிய திரைக்கதை பின்பாதியில் அடங்கி, ஒடுங்கி மாட்டு வண்டி வேகத்தில் நகர்வது பலவீனம். "கொட்டாவி' விட்டு சலித்துக் கொள்ள வைத்துவிட்டு, விறுவிறுப்பாக "க்ளைமேக்சில் கொட்டுவோம் முடித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். தூங்க விடாமல் பார்த்துக் கொண்டு விட்டார்.
"வழக்கமான காதல் சினிமா' என்று எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு இந்தப் படம் இனிய ஏமாற்றம்.
இயக்குநர் சரவணன் நம்பிக்கைக்குரிய வரவு என்றால், மனதைத் தொடுகிறது வேல்ராஜின் கேமிரா. சத்யாவின் இசையில் எல்லாப் பாடல்களும் மெலடி ரகம்.
படத்தின் முதல் பாதியிலேயே விபத்தின் அதீதப் பரபரப்பு முடிந்து விடுவதால் பின்பாதியில் ஏற்படும் நீண்ட பயணம் சற்றே அலுப்புத் தட்டுகிறது. குறிப்பிட்ட நாலு பேரை மட்டுமே சுற்றி சுற்றி வரும் திரைக்கதை என்பதால் சமயங்களில் திட்டுத் திட்டாய் தேங்கி நிற்கிறது.
சமீப காலத்திய திரைப்படங்களைப் பார்க்கும் போது ஒரு விஷயம் மனதை நெருடுகிறது. ரணகளமாகக் காதலைச் சித்தரிக்க நமது படைப்பாளிகள் ஆசைப்படுவது ஏன்? காதலைத் தோல்வியில் முடிப்பதன் மூலம் ஏதோ யதார்த்தத்தைச் சித்தரிப்பதாக இந்தப் படைப்பாளிகள் நினைக்கிறார்களா இல்லை சந்தோஷமாகக் காதல் ஜோடிகளை இணைக்க மனமில்லாத வக்கிரத்தனமா என்பதுதான் புரியவில்லை. "அங்காடித் தெரு', "மைனா' வரிசையில் இன்னொரு துல்லியல் காதல் கதை. ரணகளமான களங்களில், ரத்தத்தில் எழுதும் காதல்களை விட்டு, மயிலிறகாலும் கொஞ்சம் எழுதிப் பார்க்கலாம்.
தினமணி விமர்சன குழு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தினமலர் விமர்சனம்
பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹாலிவுட் பட நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார்ஸ் ஸ்டுடியோஸ்வுடன் இணைந்து தன் உதவியாளர் எம்.சரவணன் இயக்கத்தில் முதன்முதலாக தயாரித்திருக்கும் தரமான ப(பா)டம் தான் "எங்கேயும்... எப்போதும்..."
கதைப்படி சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு தனியார் ஆம்னிபேருந்து புறப்படும் அதே நேரத்தில், திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு அரசு சொகுசு பேருந்தும் புறப்படுகிறது. இரண்டு பேருந்துகளும் விழுப்புரம் அருகே எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாக, அதில் நிலைகுலைந்தும், உயிர் இழந்தும் போனவர்களது சொந்தகதை, சோக கதைகளுடன் சில, பல காதல் கதைகளையும், காமெடி காட்சிகளையும் இணைத்து கலக்கலாக கதை சொல்லி, கண்ணீரை வரவழைத்து விடுகிறார் இயக்குநர் சரவணன். சபாஷ் சரவணன்.
திருச்சியில் இருந்து அரசூர் நோக்கி சென்னை பேருந்தில் பிரயாணிக்கும் ஜெய்-அஞ்சலியின் காதலாகட்டும், சர்வானந்த்-அனன்யாவின் அறிமுகமும் அதைத்தொடர்ந்து அவர்களுக்குள் எழும் காதலுமாகட்டும், இன்னும் புதிதாய் திருமணமான ஒரு பிரியமான ஜோடியின் பிரியமுடியாத காதலாகட்டும், கண்டக்டரின் சதியால் பிரிந்து, பின் இணையும் பேருந்து இளம் காதலர் ஆகட்டும், அந்த சுட்டி குழந்தை ஆகட்டும், அதை அடக்கும் அழகு அம்மாவாகட்டும், அரசூர் ஊர் தலைவராகட்டும், அனன்யாவின் அழகு அக்காவாகட்டும், எல்லோருமே நச் என்ற பாத்திரத்தில், பளிச் என்று நடித்து ரசிகர்கள் மனதை டச் செய்து விடுகின்றனர். பலே, பலே!
ஜெய் முந்தைய படங்களை காட்டிலும் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். மற்றொருநாயகர் சர்வாவும் தானும் சளைத்தவர் இல்லை என நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார்.
நாலு வீடு தள்ளி மாடியில் இருந்து கை காட்டும் ஜெய்யை மடக்கி, காதலும் கண்டிப்பும் காட்டும் அஞ்சலி, ஜெய் உடனான காதலில் நடிக்கவே இல்லை, உண்மையை சொல்வதென்றால் ஜெய்யின் காதலியாக வாழ்ந்திருக்கிறார். எவ்வளவுதான் படித்திருந்தாலும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வரும் புதிதில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பயத்தை பிரமாதமாக தன் நடிப்பில் காட்டியிருக்கும் "நாடோடிகள்" அனன்யா, சர்வாவுடனான காதல் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
ஒவ்வொரு காட்சியிலும் ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு ஓவியம் என்றால், சத்யாவின் இசை, ஆரம்பகாட்சிகளில் ஏற்படுத்தும் விறுவிறுப்பு, கடைசி வரை பாடல் காட்சிகளிலும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் கூட்டி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
படம் முழுக்க எக்கச்சக்க காதல் ஜோடிகளுடன், இனிமையாக ரசிகர்களையும் பிரயாணம் செய்ய வைத்து, க்ளைமாக்ஸில் அந்த ஜோடியை பிரித்து விட்டாரே... இந்த ஜோடியை சேர விடவில்லையே... என எமனையும், இயக்குநர் எம்.சரவணனையும் சபிக்க வைத்திருப்பது தான் "எங்கேயும் எப்போதும்" படத்தின் பெரிய பலம்!
மொத்தத்தில் "எங்கேயும்... எப்போதும்..." படத்திற்கு நிச்சயம் "வெற்றிகளும்... விருதுகளும்..."

விபத்து - படிப்பவர்களுக்கு இது ஒரு செய்தி, ஆனால் பாதிப்புற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு, அவர்களின் குடும்பத்திற்கு ஏற்படும் நிரந்தர துயரம் இவைகள் ஈடுகட்ட முடியாதவை.
சமுதாயச் சிந்தனையுடன் கூடிய இதுபோன்ற படங்கள் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் என்பதில் சந்தேகமில்லை.
சமுதாயச் சிந்தனையுடன் கூடிய இதுபோன்ற படங்கள் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் என்பதில் சந்தேகமில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1