ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தி மட்டும் இருந்தால் போதுமா?

Go down

பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Empty பக்தி மட்டும் இருந்தால் போதுமா?

Post by சிவா Fri Sep 23, 2011 4:42 am

பகவானிடம் பக்தி வைப்பது உயர்வான குணம்தான்; ஆனாலும், தன்னுடைய கர்மாக்களை (கடமைகளை) சரி வர செய்யாமல், பக்தி செய்தால் மட்டும் போதாது. கர்மாக்களால் உலகத்தை கட்டி நடத்துபவன் சர்வேஸ்வரன்; கர்மாக்களும், தர்மங்களும் அவனால் ஏற்படுத்தப்பட்ட ஆணை. அதை நிறைவேற்றாதவர்களுக்கு, அவன் தண்டனை அளிக்கிறான்.

ஒரு அரசன், அவன் மனைவி இருவரும் குருவிடம் உபதேசம் பெற்றனர். உபதேசம் பெறுவதற்கு முன் வரை, தினமும் ஏழை, எளியவர்களுக்கு உணவளித்து, அவர்களை திருப்தி செய்து வந்தான் அந்த அரசன். நிறைய தான, தர்மங்களும் செய்து வந்தான். உபதேசம் பெற்ற போது, "பக்தி தான் முக்கியம்...' என்று உபதேசித்தார் அந்த குரு. இதைக் கேட்ட அரசன், தான, தர்மம் செய்வதையே விட்டு விட்டான்.

பசி, தாகம் என்று வருபவர்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை. "ஹரி, ஹரி' என்று பக்தி செய்து கொண்டிருந்தான். அரசனும், அரசியும் அந்திம காலம் வந்து இறந்தனர்; ஆனால், இவர்களது ஆவி, பசி தாகத்தால் வருந்தியது; ஏழைகளின் பசி தாகம் இவர்களை துரத்தியது.

அப்போது எதிர்பட்ட வாமதேவர் என்ற முனிவரைக் கண்டு வணங்கி, இதன் காரணம் என்னவென்று கேட்டனர். முனிவரும், "நீங்கள் பசியுடன் வந்தவர்களுக்கு உதவாமல், உங்கள் பசியைப் போக்கி உண்டு களித்தீர்கள். ஹரி பக்தி செய்தால் மட்டும் போதாது; ஹரி எல்லா உயிர்களிலும் இருக்கிறார்.

"மற்ற உயிர்களிலுள்ள ஹரியை நீங்கள் நினைக்காமல் பக்தி செய்தீர்கள். துயரப்பட்டவர்களுக்கு உதவாமல், இன்ப வாழ்க்கை அனுபவித்தீர்கள். ஹரி பக்தி என்பது, உங்கள் சுயநலத்துக்காக செய்யப்பட்டதாகிறது. அதனால், பசி, தாகம் என்பவை உங்களைத் தொடர்ந்து வந்து துன்பப்படுத்துகிறது...' என்றார்.

பசி தாகத்தால் துன்பப்பட்ட அரசன், அரசி ஆகியோரது ஆவிகள், தங்களது சரீரங்கள் ஆற்றில் மிதந்து வருவதை கண்டு, அதையே புசித்துக் கொண்டிருந்தன. பசித்தவனுக்கு அன்னம் இடாமல் தானே உண்பவன், தன் சடலத்தையே தின்றவனாவான் என்பது நீதி.

இறந்து போன அரச தம்பதிகளுக்கு பக்கத்தில் பசி, தாகம் என்ற பிசாசுகள் விகாரமான உருவத்துடன் நின்று, இவர்களை பரிகாசம் செய்து கொண்டிருந்தன. இவர்களுக்கு பக்கத்தில் இரண்டு அழகிய மங்கையர் நின்று, கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் பிரக்ஞை என்ற நல்லறிவும், சிரத்தை என்ற நற்கருமத்தில் தளராத உறுதியும் உடையவர்கள். தான, தர்மம் என்ற கர்மாக்களை விட்டு விட்டு, வெறும் ஹரி பக்தி மட்டும் செய்து துன்பப்படும் அரச தம்பதிகளை கண்டு, அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தனர்.

இந்த விவரங்களை அறிந்த விஜ்ஜலன் என்ற கிளி பறந்தோடி சென்று, தன் பிதாவிடம் விவரம் சொல்ல, பிதாவும், வாசுதேவ ஸ்தோத்திரம் சொல்லிக் கொடுத்தது. விஜ்ஜலன் ஓடி வந்து, இந்த ஸ்தோத்திரத்தை சவம் தின்னும் அரச தம்பதிகளுக்கு சொல்ல, அவர்களும் இந்த ஸ்தோத்திரத்தை சொல்லி, பகவானை வேண்டினர்.

பகவான் எதிரில் தோன்றி சவம் தின்னும் பேய்களையும், அருகில் நின்ற பசி, தாகம் என்ற பிசாசுகளையும் நீக்கி, திவ்ய ஞானத்தை அவர்கள் அடையும்படி செய்தார். திவ்ய ஞானம் பெற்றவர்கள், திவ்ய விமானத்திலேறி வைகுண்டம் சென்றனர்.

இதிலிருந்து பக்தி மட்டும் இருந்தால் போதாது; தான, தர்மங்களையும், தன் கடமைகளையும் ஒழுங்காக செய்ய வேண்டும் என்று தெரிகிறதல்லவா?




ஆன்மிக வினா-விடை!

ஸ்ரீராமஜெயம், முருகன் துணை, ஓம் நமச்சிவாய என்றெல்லாம் எழுதுகின்றனரே... அதனால் என்ன பலன்?

பகவான் நாமாக்களை, 108 அல்லது 1008 முறை எழுதுவதால், மன அமைதி கிடைக்கும்.

வைரம் ராஜகோபால்


பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum