புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_m10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10 
284 Posts - 45%
heezulia
இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_m10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_m10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_m10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_m10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10 
19 Posts - 3%
prajai
இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_m10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_m10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_m10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_m10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_m10இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Sep 22, 2011 8:33 am


சென்னை, மே 19: சென்னை பழவந்தாங்கல் என்ஜிஒ காலனியில் உள்ள அந்த வீட்டைப் பார்ப்பவர்கள் யாரும் அது ஒரு எம்.எல்.ஏ.வின் வீடு என்றால் நம்பமாட்டார்கள். ஒரு மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட வீடு அது.

அந்த வீட்டில்தான் மதுரவாயல் தொகுதியில் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.பீம்ராவ் வசிக்கிறார்.

வீட்டிலும் அத்தியாவசியப் பொருள்களைத் தவிர ஆடம்பரப் பொருள்கள் எதுவும் இல்லை. விலை உயர்ந்த பொருள்களாக இரண்டைக் குறிப்பிடலாம்.

ஒன்று ஒரு பித்தளை தவலை. இரண்டாவது திமுக அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட இலவசக் கலர் டிவி. (அந்த டிவியும் பீம்ராவ் மனைவி பிடிவாதமாக வாங்கி வைத்ததாம்.)

இந்த எளிமையான வீட்டில் இருந்துதான் க.பீம்ராவ் கட்சி ரீதியாக சிறப்பாகப் பணியாற்றி வந்துள்ளதுடன், இப்போது தேர்தலிலும் சாதனை படைத்துள்ளார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதே தமிழகத்தில் பெரும் போராட்டம். பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்து வார்டுகள் இதற்குச் சரியான உதாரணம்.

இந்நிலையில்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான க.பீம்ராவ் பொது தொகுதியான மதுரவாயலில் நின்று வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கே.செல்வத்தைவிட பீம்ராவ் கூடுதலாக 24,011 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் இரண்டு சந்தோஷங்கள் கிடைத்திருப்பதாக க.பீம்ராம் கூறுகிறார்.

ஒன்று: "இன்னும் கூடுதலாக மக்கள் பணியாற்ற ஒரு பதவி கிடைத்திருக்கிறது. ஆனால்

இதைப் பதவி என்று நாங்கள் சொல்ல மாட்டோம். பொறுப்பு என்றுதான் சொல்வோம். இதன் மூலம் மக்களோடு இன்னும் நெருங்கிப் போகக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.'

இரண்டு: "புது பேன்ட் சட்டைகள் கிடைக்கின்றன. எம்.எல்.ஏ. ஆகிவிட்டதால் அழுக்கு சட்டையோடு எங்கும் போகக்கூடாது என்று தோழர்கள் நினைக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு பத்து பேன்ட் சட்டைகள் எடுத்துக் கொடுத்தார்கள். இதைப்போல பல தோழர்கள் புது பேன்ட் சட்டைகள் எடுத்து வருகிறார்கள். இது ஒரு பெரிய சந்தோஷம்' என்கிறார்.

புது பேன்ட் சட்டை கொடுக்கும்போது க.பீம்ராவ் கண்டிப்பாகத் தையல் கூலியையும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்.

இந்த முறையைச் சிலர் தவறாக நினைக்கக்கூடும். ஆனால் கட்சி ரீதியான அவர் நடைமுறை வாழ்க்கையைப் புரிந்தவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள்.

1983-ம் ஆண்டு வாலிபர் சங்கம் மூலம் பீம்ராவ் அரசியல் பணிக்கு வந்து, பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்திச் சிறை சென்றவர்.

இப்போது தென்சென்னை மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். முழு நேர கட்சி ஊழியர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியால் அளிக்கப்படும் மாதாந்திரப் படியான 3 ஆயிரம் ரூபாயே அவரின் வருமானம்.

முழு நேர கட்சி நிர்வாகிகளாக இருப்பவர்கள் வேறு பணிகளிலும் இருக்கக்கூடாது. இந்தப் பணத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல். 2 மகன்கள்; ஒரு மகள் என இவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். மற்றவர்கள் பள்ளி வகுப்புகளில் படித்து வருகிறார்கள். இவர்களின் கல்விச் செலவுகளை எல்லாம் உறவினர்களே கவனித்துக் கொள்கிறார்கள்.

எம்.எல்.ஏ.சம்பளம்: எம்.எல்.ஏ.க்களுக்குப் படிகளுடன் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம். இந்தச் சம்பளத்தால் பீம்ராவ் குடும்பம் வசதி பெறும் என்று நினைத்தால் அதுவும் தவறானதாகும். இந்தச் சம்பளம் அனைத்தும் கட்சிக்குச் சென்று அவருக்குக் கிடைக்கப்போவது வெறும் 5 ஆயிரத்து 600 ரூபாயே.

"சம்பளம் முழுவதும் கட்சிக்கே போய்விடுவதால் வருத்தமா?' என்றால் "சம்பளம் என்பது பொருட்டல்ல. எனக்கு மக்களுக்குப் பணியாற்றுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்பதுதான் கவலையாக இருக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரைக் காப்பாற்றுவதற்குப் போராடும் ஒரு மருத்துவரைப் போல நான் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்' என்று நினைக்கிறேன் என்றார்.

"பொது தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் வெற்றிபெற்று இருப்பதன் மூலம் தமிழகத்தில் ஜாதி கண்ணோட்டம் குறைந்து போய்விட்டது என எடுத்துக் கொள்ளலாமா?' என்று கேட்டால், "தமிழகம் முழுவதும் குறைந்து போய்விட்டது என்று எடுத்துக் கொள்ள முடியாது. நான் வெற்றிபெற்றது நகர்ப்புறத்தைச் சார்ந்த பகுதி. இங்கு ஜாதி எண்ணம் குறைந்திருக்கலாம்.

ஆனால் ஜாதி உணர்வாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. எந்தச் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறப்பான மக்கள் தொண்டு செய்பவர்களாக இருந்தால் அவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது.

ஜாதியற்ற சமுதாயத்தைக் காணவேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கொள்கை. அதில் வெற்றிபெறலாம் என்கிற நம்பிக்கையை என் வெற்றி ஏற்படுத்தி இருக்கிறது' என்கிறார் க.பீம்ராவ் எம்.எல்.ஏஇப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Mlahouse

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 22, 2011 9:17 am

மிகவும் பாராட்டவேண்டிய ஒரு செய்தி. முன்பு கக்கன் எபவர் ௨ முறை மந்திரியாக இருந்தும் குடிசையிலே வாழ்ந்தார் என்று கேள்விப்படுகிறோம். காங்கிரஸ் ஆட்சி போய் வெகுநாள் கழித்து டவுன்பஸ் க்காக கையில் ஒரு சாதாரண பையுடன் நிற்பார் என்றும் சொல்கிறார்கள்.அதன்பிறகு இந்த செய்திதான்.

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Sep 22, 2011 10:04 am

பாராட்டுகள்..

இந்த நல்லவரை அரசியல், பதவி உள்ளிட்டவை மாசுபடுத்திவிடாதிருக்கட்டும் ..




இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! 0018-2இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! 0001-3இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! 0010-3இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! 0001-3
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Sep 22, 2011 11:32 am

என் பாராட்டுகள். கால மாற்றம் இவரையும் மாற்றாமல் இருக்கட்டும்



இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Uஇப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Dஇப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Aஇப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Yஇப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Aஇப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Sஇப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Uஇப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Dஇப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Hஇப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 22, 2011 11:33 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 22, 2011 11:45 am

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்‌எல்‌ஏ க்கள் பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் எளிமையாகதான் வாழ்கிறார்கள்..!
இவங்களுக்கு ஒரு முறை வாய்ப்பளித்து பார்க்க வேண்டும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Sep 22, 2011 11:52 am

அருமை. இவர் நல்ல ஆரோக்யதுடன் நீடூடி வாழ்க.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Sep 22, 2011 1:52 pm

ஜீவா கக்கன் நல்லகண்ணு இன்னும் பலர்

கக்கன் ஒரு முறை மதுரை டவுன் பஸ்ஸில் சென்ற போதே இடம் இல்லாததால் நின்று கொண்டு சென்றார். ஒரு கல்லூரி மான்வர் அவரை அடயாளம் கொண்டு அவருக்கு தான் இருக்கையை தந்தார் ஆனாலும் அதை மறுத்து முதலில் வந்த கல்லூரி மாணவருக்கே அந்த இடம் உரியது என்றார்

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் இருந்த போது போதுவார்டில் தான் சிகிச்சை பெற்றார் இதை கேள்விப்பட்ட எம் ஜி ஆர் அவருக்கு தனி பிரிவு சிகிச்சைக்கு உத்தரவிட்டார் ஆனாலும் அதை ஒப்புக்கொள்ள மறுத்தார். ஜீவா கடைசிவரை குடிசை வீட்டிலே வாழ்ந்தார்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 3:12 pm

ஆதி திராவிட, தாழ்த்தப் பட்ட சமுதாயத்தில் பிறந்த கக்கன் என்பவரை நிறைய பேருக்கு தெரியாது.காரணம் அவருடைய எளிமை நேர்மை.காமராஜர் ஆட்சியில் அவர் மேடையில் இருக்கும் போது, கக்கன் அவர்கள் மேடைக்கு கீழே தரையில் சேர் போட்டு உட்கார்ந்து இருப்பாரம்.இன்றும் அவர் மந்திரிகள் மத்தியில் ஒரு எடுத்துக்காட்டாக, உதாரணபுருஷனாக விளங்குகிறார். அதற்குப் பின் இப்பொழு தான் ஒருவர் பற்றிய செய்தி. இவர்,அவருடைய வாழ்வில் எளிமையும் நேர்மையும் கடைப் பிடித்து மற்ற எம்‌எல்‌ஏ களுக்கு ஒரு முன் உதாரணமாக வாழ்ந்து தமிழினத்திற்கும், அவருடைய சமுதாயத்திற்கு பேர் புகழை சேர்க்க வேண்டுகிறேன்.இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.! Image010ycm
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Sep 22, 2011 3:22 pm

ஒரு முறை காமராஜ் ஐயா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தோழர் ஜீவா அவர்களின் தொகுதியில் ஒரு அரசு விழாவிர்க்கு சென்றார். அப்பொழுது காங்கிரஸ் மற்றும் கம்முனிஸ்டுகளுக்கு நல்வுரவு இல்லை. அதனால் விழா ஏற்பாடு செய்தவர்கள் ஜீவா பெயரை போடவில்லை மற்றும் அவரை அழைக்கவும் இல்லை. காமராஜ் விழா மேடை அடைந்ததும் கேட்ட முதல் கேள்வி ஜீவா இன்னும் வரலையா. விழா நிர்வாகிகள் விஷயத்தை கூறினார். கேட்ட காமராஜ் நேராக ஜீவாவின் குடிசைக்கு சென்று அவரை கையோடு அழைத்து வந்து விழா ஏற்பாடு செய்தவர்களின் செயலுக்காக தான் மன்னிப்பு கேட்டார்.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக