புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_lcapதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_voting_barதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
தமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_lcapதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_voting_barதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_lcapதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_voting_barதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
தமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_lcapதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_voting_barதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
தமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_lcapதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_voting_barதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_rcap 
10 Posts - 4%
prajai
தமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_lcapதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_voting_barதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_lcapதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_voting_barதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_lcapதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_voting_barதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_lcapதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_voting_barதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
தமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_lcapதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_voting_barதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
தமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_lcapதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_voting_barதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
தமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_lcapதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_voting_barதமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை


   
   
திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Sun Sep 18, 2011 3:54 pm

தமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  Kudankulam_340

கூடங்குளம் அணுஉலையை மூடிவிட வேண்டுமென்றும் அதனால் வரும் பேராபத்தும் பேரிழப்பும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது என்பதையும் நாம் பலமுறை எடுத்துச் சொல்லியாயிற்று. இதைப் பற்றி பல போராட்டங்களும் நடைபெற்று இன்றைய நாளில் இந்தப் போராட்டம் வலுப்பெற்று இருக்கிறது. அணு உலைகளினால் வரும் பேராபத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் நடந்த சுனாமிக்குப் பிறகு உலகம் கண்டிருக்கிறது. அது மீண்டும் அதைப் பற்றிய விவாதத்தை அரங்கிற்குள் கொண்டு வந்திருக்கிறது. இது நாம் விழித்துக் கொள்ளும் நேரம்.

நன்மைகள்!

kudankulam_340அணு உலை அமைப்பதினால் சில நன்மைகள் இருக்கின்றன என்றாலும் அது கொண்டு வரும் பேரழிவைக் காண்கிறபோது அது கொண்டு வரும் நன்மையே தேவையில்லை என்று சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு அணு உலையிலிருந்து அளவிட முடியாத ஆற்றல் வெளிவருவதனால் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்யவும், அதனால் நவீன உலகில் எல்லாரும் மின்சக்தியைப் பெற்று மிகவும் சுகமான வாழ்க்கை வாழ முடியும். அது மட்டுமல்ல மிகவும் குறைவான கார்பன்டை ஆச்சைடை வெளியிடுவதால், உலகம் வெப்பமடைவது தாமதப்படுத்தப்படும் போன்ற சில நன்மைகளைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

பேராபத்துகள்!

ஆனால் எல்லாவற்றைக் காட்டிலும் அணு உலை அமைப்பதனால் வரும் பேராபத்துகள் வருவது தவிர்க்க இயலாது. உடனே சிலர் சொல்லுவது - எதில் ஆபத்து இல்லை - பேருந்தில் விபத்து நடக்கிறது, விமானத்தில் விபத்து நடக்கிறது அதற்காக அதில் செல்லாமல் இருக்கிறோமா? நண்பர்களே, இது போன்ற விபத்துகள் அதில் பயணம் செய்பவர்களோடு போய்விடும். ஆனால் அணு உலை விபத்து என்பது அதையும் தாண்டி - தாண்டி.. உதாரணத்திற்கு, ரஷ்யா, செர்னோபிலில் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற அணு உலை விபத்தின் கோரம் இன்றும் இருக்கிறது - அதனால் கதிர்வீச்சுகள் நிறைந்த நீர், காற்று இன்றும் பல உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.

பாதுகாப்பானதா?

சிலர் சொல்லுகிறார்கள் விஞ்ஞானிகள் சொல்லிவிட்டார்கள் -அல்லது பிரதமர் சொல்லிவிட்டார், அமைச்சர்கள் சொல்லிவிட்டார்கள் - அணு உலை பாதுகாப்பானது என்று - அதுதான் கொட்டை எழுத்துகளில் மிக முக்கியமான செய்தியாக வருகிறது. பிரதமர் அது மட்டுமா சொன்னார், ஊழல் ஒன்றும் நடக்கவில்லை என்றும்தான் சொன்னார். அமைச்சர்கள் நாங்கள் எல்லாம் நாட்டுக்காக எங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்றும்தான் சொல்லுகிறார்கள். அதெல்லாம் உண்மையாகி விடுமா?

அணு உலை கட்டமைப்பு என்பது மிகவும் சிரத்தையோடு, பாதுகாப்பு வளையங்களை அமைப்பதில் சரியான முறையைப் பின்பற்றி அமைக்க வேண்டும். அப்படிப் பின்பற்றி அமைக்கப்பட்ட அணு உலைகள் கூட விபத்து ஏற்படும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம். அது செர்னோபிலாக இருக்கட்டும் அல்லது புகுஷிமா, தாய்ச்சி ஆக இருக்கட்டும். எந்த அணு உலையும் நூறு சதவீதம் பாதுகாப்பானது என்று யாரும் சான்றிதழ் கொடுக்க இயலாது. ஜப்பான்காரனாலேயே அந்த அளவுக்கு பாதுகாப்பான ஒன்றை அமைக்க முடியவில்லை. அதென்ன ஜப்பான்காரனாலேயே - அதனால்தானே நாம் அவர்களது பொருட்களையே போட்டி போட்டு வாங்குகிறோம்.

எனவே அதில் இம்மியளவு குறைந்தாலும் - அணு உலை விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். கல்மாடி கட்டிய ஒரு பாலம் விளையாட்டு தொடங்குவதற்கு முன்னரே இடிந்து விழுந்தது நமக்குத் தெரியும். அது மட்டுமல்ல மிகப் பெரிய திட்டங்களை செய்யும் யாராக இருந்தாலும் சில பெர்சென்ட்டுகள் கமிஷன் தொடங்கி அப்புறம், பயன்படுத்தும் கம்பியில் சில மில்லி மீட்டர் குறைத்துப் போட்டால் சில கோடிகள் நமக்கு மீளும் என்று திட்டமிடுபவர்களும், இரண்டுக்கு ஒன்று என்று கலவை இருக்க வேண்டுமென்றால் அதை மூணுக்கு ஒண்ணாக‌ப் போட்டால், இன்னும் சில கோடிகள் மிஞ்சும் என்றும் கணக்குப் போடும் நமது ஆட்களை நம்பி நாம் இந்த அணு உலைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினால் நம்மை விட மிகச் சிறந்த அறிவாளிகள் யாரும் இருக்க முடியாது.

கழிவுகளாலும் ஆபத்தா?

அதுமட்டுமல்ல - பேராபத்து அணுஉலை அமைப்பதில் மட்டுமல்ல - அணு சக்தி உருவாக்கத்தில் வெளிவரும் கழிவுகளைப் பாதுகாப்பது என்பதுதான் மிகப் பெரிய விடயாமாக இருக்கிறது. அணு உலை வெடிப்பதோ அல்லது அது வெளிவிடும் கதிர் வீச்சுகளால் ஆபத்து என்பதைப் போல இந்தக் கழிவுகளாலும் ஆபத்து என்பது உண்மை. இந்தக் கழிவுகளை ஏறக்குறைய 10,000 ஆண்டுகள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமாம். இது நம்ம ஊரில் நடக்கிற விஷயமா. கழிவுகளை எங்கே கொட்டிப் பாதுகாக்கப் போகிறார்கள்?

தமிழின அழிப்பு!

அதுமட்டுமல்லாமல் இந்த அணு மின்நிலயம் என்பது கூடங்குளத்திற்கான திட்டமும் அல்ல - ஏற்கனவே சில மாநிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்பு தமிழ்நாட்டில் குடிபுகுந்த திட்டம். இங்கே உள்ளவர்கள் உயிர் மட்டும் கிள்ளுக்கீரையா என்ன? ஏற்கனவே கல்பாக்கத்தில் கடந்த சுனாமியின்போது வெளிவராத செய்திகள் இன்னும் உண்டு. ஆக மொத்தம் வட தமிழகம் இப்போது தென் தமிழகம் என்று ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் அதனால் தமிழினத்தையும் அழிப்பதற்கான சதி என்றுதான் இதையும் அணுக வேண்டியிருக்கிறது. அணுகுண்டுகள் மூலமாக ஜப்பானில் ஏறக்குறைய இரண்டு லட்சத்திற்கு மேல் மக்கள் மாண்டு போனார்கள். அதைவிட அதிக இழப்பை அணு உலைகள் கொண்டு வரக்கூடும் என்பதை மனதில் வைத்துக் கொண்டால், இதன் பேராபத்தும் பேரழிவும் நம் மண்டைக்கு எட்டும். அதை விடுத்து அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பிக் கெட்டு அழிய முடியாது.

அப்புறம் எப்படித்தான் நாம் வளர்வது?

இதைப் பற்றிய அழிவைச் சொல்லுவதனால் நாம் வளர்ச்சி அடைவதைத் தடுக்கிறோம் என்றோ அல்லது மின்சக்தி உற்பத்திக்குத் தடையாக‌ இருக்கிறோம் என்றோ அர்த்தம் அல்ல. வருடம் முழுவதும் சூரியன் ஆட்சி செய்கிற இந்த மண்ணில் அதிலிருந்து மின் உற்பத்தி தயாரிப்பது என்பதை மிகவும் சிரத்தையோடு செய்து விட்டாலே போதும் என்பதே நமது வாதம். இயங்குகின்ற அணு உலைகளை இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் மூடி விடுவோம் என்று ஜெர்மனி முடிவு செய்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி இத்தாலியில் நடைபெற்ற ஒரு பொது வாக்கெடுப்பில் அணு உலைகள் அமைக்கக் கூடாது என்று தொண்ணூறு சதவிகித மக்கள் வாக்களித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார்கள். சூரிய ஒளி மிகவும் குறைவான நாட்களே குறைந்த சில மணி நேரங்களே தனது வீச்சைக் காட்டக் கூடிய நாடுகளே மாற்று வழிக்கான முயற்சியில் இறங்கியிருக்கும்போது நாம் அதற்கான முயற்சியில் இறங்குவதே சரி.

தேவையற்ற இழப்பை அழிவைச் சந்திக்கும் முன்பு நாம் விழித்துக் கொள்ளுவதே இப்போதையத் தேவை. இப்போது நடைபெறும் போராட்டத்தில் எல்லாரும் இணைவதும், அதனால் மாற்று முயற்சிகளுக்காக அனைவரும் குரலெழுப்புவதும் அவசியமாகிறது. நாமும் நமது சந்ததியினரும் அணுக்கதிர் வீச்சுகளால் பாதிக்கப்படாத காற்றைச் சுவாசிக்கவும், நீரைப் பருகவும் உரிமையுண்டு. அந்த உரிமையைத் தடுப்பதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. மக்களுக்காக மக்களால் என்பது உண்மையானால் - மக்கள் பிரதிநிதிகள் கட்டாயம் செவிசாய்த்துத்தான் ஆக வேண்டும்.


நன்றி கீற்று



தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 18, 2011 4:38 pm



சிந்திக்க வேண்டியவை ...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  Ila
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Sep 18, 2011 7:36 pm

ஆகா... என்ன அருமையான வாதம்!!
வாதத்தில் நம்மவரை வெல்ல யாரால் முடியும்??

சரி, என் மனதில் எழும் சில ஐயங்களுக்கு விடை கூறுவீர்களா??

* செர்னோபில் விபத்து நடந்தது 1968-இல். இந்த அணுமின் நிலையத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டது 20 ஆண்டுகள் கழித்து (1988). அப்போதே நிறுத்தி இருக்கலாமே?

* பல இடங்களிலும் விரட்டப்பட்ட பின் தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.. அப்போது இருந்த தமிழக முதல்வர் பிறர் ஏன் விரட்டுகிறார்கள் என்றூ ஆய்வு செய்த பின் அனுமதி மறுத்து இருக்கலாமே?

*அன்றே அணுஉலைகளால் ஏர்படும் கேடு பற்றி எடுத்துரைத்து பல சுற்றுச்சூழல்
ஆர்வலர்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர். ஆனால், அவர்கள் அனைவரும்
கலைத்து விடப்பட்டனர்! அவர்கள் ஏன் போராடினர் என்று அன்றைய தமிழக முதல்வர் உணரவில்லையா?

* செயல் திட்டம் 2004 ஆம் ஆண்டே இயற்றப்பட்டது. அப்போதே தடுத்து இருக்கலாமே?

* அது மட்டுமல்ல, கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக நடந்து கொண்டு இருக்கிறன!! இடையில் 5 ஆண்டுகள் தி.மு.க ஆட்சி செய்தது.. அப்போது தடுத்து நிறுத்தி இருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

* சரி, ஜப்பானில் சுனாமி வந்து அதன் கோரங்களை கண்ட பின் தான் நமக்கு உரைத்தது என்று கொள்வோம்!! அப்படி என்றாலும், அந்த பேரழிவு நிகழ்ந்த நாள் மார்ச் 2011. அப்போது, ஆட்சியில் இருந்த அரசு உடனே அவசர சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்தி நிறுத்தி இருக்கலாமே? ஏன் செய்யவில்லை?




தமிழினத்தை அழிக்கவே அணுஉலை கட்டப்பட்டதை இத்தனை காலம் ஏன் அனைவரும் கவனிக்க தவறினர்?

அணுஉலையை முன்பே மூடியிருந்தால், அதில் செலவிடப்பட்ட இந்திய மக்களின் வரிப்பணம் வேறு ஆக்க காரியங்களுக்கு செலவிடப்பட்டு இருக்கும் அல்லவா!! ஏன் அப்பாவி இந்தியர்களின் பணம் இப்படி வீணடிக்கப்படுகிறது???

சரி, தவறி விட்டோம்..

* தற்போது அணுஉலைப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் போராட்டம் ஏன்?

* வரைவுத் திட்டத்தில் படி, 2009 ஆம் ஆண்டே ஒரு அணு உலை செயல்பாடு
ஆரம்பித்து இருக்க வேண்டும். அப்படி எனில், இன்று அந்த உலையை மூட சொல்லி
போராட்டம் நடத்தப்பட்டு இருக்குமா?

* தற்போது, தி.மு.க ஆட்சியே நடந்திருந்தால், அணு உலை மூடப்பட போராட்டங்கள் நடக்குமா?

பி.கு:
மேற்கண்ட கேள்விகள் தர்க்க அடிப்படையில் எழுப்பப்பட்டவையே!

* அணுசக்தியின் விளைவுகள் குறித்து நன்றாக அறிந்ததால்,அணு சக்தியைப் பயன்படுத்துவது ஆபத்தானது என்பது தான் என் கருத்தும்!! இதைப் பலரும் பல ஆண்டுகளாக வலியுறுத்தியும், செவி கொடுத்து கேளாமல், இன்று ஏன் ஒரு இனத்தின் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது என்பது தான் என் கேள்வி!!

* இன்று கூடன்குளம் அருகில் நடக்கும் போராட்டத்தின் நோக்கமே வேறு. அது அங்கிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் தொடர்புடையது! அவற்றைத் தீர்க்காமல், அணுஉலை செயல்படுவதில் எனக்கும் உடன்பாடில்லை.

ஆனால், அதனை 'தமிழின எதிர்ப்பு' என்று சில தீய சக்திகள் தான் போராட்டத்தைத் திசை திருப்ப முயற்சி செய்கிறன.. அவற்றை நம்பாதீர்!!




தமிழினத்தை அழிக்கவே கூடங்குளம் பேரழிவு ஆலை  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 18, 2011 7:53 pm

சிந்திக்க வேண்டிய கட்டுரை என்றே தெரிகிறது. நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக