ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்!

+4
ஆளுங்க
இளமாறன்
மகா பிரபு
kitcha
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Empty 2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்!

Post by kitcha Sat Sep 17, 2011 5:59 pm

2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! 17-planet-two-suns-300


வாஷிங்டன்: பூமி சுற்றி வரும் சூரியனை விட சிறிய வடிவிலான 2 சூரியன்களையும் அதை சுற்றிவரும் கிரகத்தையும் குறித்த படங்களை கெப்ளர் விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

நாசா மூலம் விண்ணில் ஏவப்பட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் கெப்ளர் விண்கலம் அவ்வப்போது விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தும் படங்களை அனுப்புவது வழக்கம். கெப்ளர் விண்கலம் மூலம் பூமிக்கு அருகில் அல்லது தொலைவில் உயிர்வாழ ஏற்ற கிரகம் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறியவே அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கெப்ளர் விண்கலம் அனுப்பியுள்ள படங்கள் மூலம், ஒரு புதிய கிரகத்தையும் 2 சூரியன்களையும் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து 200 ஓளியாண்டு தூரத்தில் உள்ள இந்த கிரகத்திற்கு கெப்ளர் 16பி என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

இந்த கெப்ளர் 16பி கிரகத்தில் பாதியளவு பாறையும், பாதியளவு வாயுக்களும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு உயிரினம் வாழ முடியாத நிலையில் உள்ளதாக தெரிகிறது. கிரகத்தின் அளவு ஏறக்குறைய சனிக்கிரகத்தின் அளவையும், 2 சூரியன்களும், பூமியின் சூரியனை விட சிறியவை எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அதில் 1 சூரியன் பூமியின் சூரியனின் 69 சதவீத அளவையும், மற்றொன்று 20 சதவீத அளவையும் கொண்டுள்ளதாக தெரிகிறது. சூரியக் குடும்பத்தில் உள்ளது போல, சூரியன்கள் தன்னை தானே சுற்றிக் கொண்டே, அந்த கிரகத்தையும் சுற்றி வருகின்றன. இதனால் மூன்றிற்கு இடையே அவ்வப்போது கிரகணங்கள் ஏற்படுகிறது.

ஆனால் இம்மூன்றிற்கும் இடையேயான இயக்க வேகத்தை துல்லியமாக கணக்கிட முடியவில்லை. கெப்ளர் 16பி 2 சூரியன்களையும் சுற்றி வர 229 நாட்களை எடுத்து கொள்கிறது. வெள்ளி கிரகம் சூரியனை சுற்றி வர 225 நாட்களை எடுத்து கொள்கிறது.

கெப்ளர் ஆராய்ச்சியாளர் வில்லியம் புரூக்கி கூறுகையில், "சூரியக் குடும்பத்தை ஒத்த அநேக கிரகங்களும், சூரியன்களும் உள்ளது. அதில் சிலவற்றில் உயிர்வாழ தேவையான அம்சங்கள் அடங்கி இருக்கலாம் என்பதை கெப்ளர் அனுப்பியுள்ள படங்கள் மூலம் நிரூபணமாகிறது. அதன்மூலம் ஆராய்ச்சியாளர்கள் கடக்க வேண்டிய பாதை வெகுதொலைவு உள்ளது என தெரிகிறது", என்றார்.
தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Empty Re: 2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்!

Post by மகா பிரபு Sat Sep 17, 2011 6:27 pm

தகவலுக்கு நன்றி கிட்சா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Empty Re: 2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்!

Post by இளமாறன் Sun Sep 18, 2011 12:51 am

வாஷிங்டன், செப். 17-

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் “ஹெப்லர்” என்ற பெயர் கொண்ட விண்கலம் ஒன்றை விண்ணுக்கு அனுப்பினார்கள்.

இந்த விண்கலம் 2 சூரியன்கள் உள்ள கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த கிரகம் பூமியில் இருந்து 200 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளது. ஒளி வருடம் என்பது ஒளி ஒரு வருடத்தில் கடக்கும் தூரம் ஆகும். அதாவது 9 1/2 லட்சம் கோடி கி.மீட்டர் ஆகும்.

2 சூரியன்களை சுற்றி வர இந்த கிரகம் 229 நாட்களை எடுத்துக் கொள்கிறது. 2 சூரியன்கள் இருந்தாலும் இவை ஒரே திசையில் இருப்பதால் பூமியைப் போலவே இந்த கிரகத்திலும் பகல்-இரவு இருந்து வருகிறது. இதனால் ஒரு நாளைக்கு இரண்டு சூரிய உதயங்களும், இரண்டு சூரிய அஸ்தமனங்களும் நிகழ்கின்றன.

மேலும் இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இரண்டு சூரியன்களும் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன. இதனால் 20 நாட்களுக்கு ஒருமுறை கிரகணம் ஏற்படுகிறது. சூரியன்கள் இரண்டும் நமது பூமியில் காணப்படும் சூரியனை விடச் சிறியவை. ஒன்று ஆரஞ்சு நிறத்திலும், மற்றொன்று சிவப்பு நிறத்திலும் தோன்றி மறைகின்றன.

ஒன்று நாம் காணும் சூரியனைவிட முக்கால் பங்கிற்கும் குறைவான அளவை உடையது. மற்றொன்று கால் பங்கிற்கும் குறைவானது.

இந்த பிரபஞ்சத்தில் பல வகை சூரியன்களும் (நட்சத்திரங்கள்), கிரகங்களும் உள்ளன என்பதையே இது காட்டுகிறது. ஹெப்லர் விண்கலம் கண்டுபிடித்ததால் இந்த கிரகத்துக்கு “ஹெப்லர் 16பி” என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் கலிபோர்னியா கார்ல்சேகன் விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Empty இரு சூரியன்களுடன் ஒரு கோள்- விண்வெளி அதிசயம்

Post by ஆளுங்க Sun Sep 18, 2011 9:27 am

ஒரு இனிய காலைப் பொழுதில் வானத்தை அண்ணாந்து பார்க்கும் போது, இரண்டு சூரியன்களை பார்த்தால் எப்படி இருக்கும்?
2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! %25E0%25AE%2585%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AF%2588
சற்று கற்பனை செய்து பாருங்கள்!!


உண்மையில் அப்படி இரு சூரியன்கள் தெரியும் ஒரு கோள் இருக்கிறது.. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

ஒரு கற்பனை உண்மையாகிறது!!



அமெரிக்காவில் உள்ள நாசா ஆராய்ச்சி நிறுவனத்தால் "உயிர் வாழ தகுதியான
கோள்கள் தேடல்" என்ற ஆய்வுக்காக கெப்லர் (Kepler) என்ற விண்கலன்
செலுத்தப்பட்டுள்ளது. அந்த கெப்லர் விண்கலம் கண்டறிந்த ஒரு அதிசயத்தக்க
உண்மை தான் இந்த கோள்!!



2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Images

கெப்லர் 16 B என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோள், அருகருகில் இருக்கும் இரு சூரியன்களைச் சுற்றி வருகிறது.
பாறைகளாலும், வாயுக்களாலும் நிரம்பியுள்ள அந்த கோள் கிட்டத்தட்ட சனிக்கிரகத்தின்
அளவில் உள்ளது. அது இரு சூரியன்களையும் 10.4 கோடி கி.மீ தூரத்தில் இருந்து
கொண்டு சுற்றுகிறது!! (நம் வெள்ளி கிரகத்தின் தூரம்)


கெப்லர் 16 B சுற்றி வரும் சூரியன்கள் நம் பகலவனின் அளவில் இல்லை. ஒரு
சூரியன் சூரியனில் 20% எடையிலும், பெரிதொன்று 69% எடையிலும் உள்ளன.
கெப்லர் 16 B அவை இரண்டையும் ஒரு முறை சுற்ற 229 நாட்கள் ஆகிறது!!


2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Q அது மட்டுமல்ல, அவை ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கே வரும் போது, கிரகணங்கள் ஏற்படுகிறன.
பெரிய சூரியன் சிறியதை மறைப்பதால் ஒன்று, சிறியது பெரியதனை மறைக்க
முயல்வதால் ஒன்று, மற்றும் வெளிப்புற பொருட்களால் ஏற்படுவது ஒன்று!!






என்ன இப்போதே அங்கு சென்று இரு சூரியன்களை கண்டு களிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா?


ஆனால், அது அவ்வளவு எளிதல்ல!!





2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! A





கெப்லர் 16 B நம் பூமியில் இருந்து சுமார் 200 ஒளிஆண்டுகள் தொலைவில் உள்ளது (2 சங்கம் கி.மீ அதாவது, 200 கோடி கோடி கி.மீ!!).


மேலும், அந்த சூரியன்கள் மிகவும் வெப்பம் குறைவாய் உள்ளதால், அங்கு
தண்ணீர் இருக்க வாய்ப்பு இல்லையாம். எனவே, உயிர் வாழ முடியாத பூமி அது!!



எனினும், அதன் இயக்கத்தைப் பார்த்து மகிழ காணொளி இதோ:













ஆதாரம்: தி சன் , பிசி மேக் , பிபிசி

பி. கு:
1977 இல் வெளிவந்த "ஸ்டார் வார்ஸ்" (Star Wars) கதையில் இரு சூரியன்களைச் சுற்றும் டேட்டூஇன்
(Tatooine) என்ற கிரகம் வரும்.. இப்படி உண்மையில் ஒரு கிரகம் இருப்பதனை
அறிந்து தான் ஜார்ஜ் லூகாஸ் (ஸ்டார் வார்ஸ் எழுத்தாளர் ) எழுதி இருப்பாரோ?

என் வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!


Last edited by ஆளுங்க on Sun Sep 18, 2011 9:42 am; edited 1 time in total


2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Empty Re: 2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்!

Post by சிவா Sun Sep 18, 2011 9:37 am

அதிசயத் தகவல். பகிர்வுக்கு நன்றி ஆளுங்க.

ஆனால் காணொளி எனக்குத் தெரியவில்லை.


2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Empty Re: 2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்!

Post by ஆளுங்க Sun Sep 18, 2011 9:45 am

இப்போது முயற்சி செய்து பாருங்கள்!!

இல்லையேல், கீழே இன்னொரு பிரதி:




2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Empty Re: 2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்!

Post by kitcha Sun Sep 18, 2011 9:46 am

[youtube][/youtube]


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Empty Re: 2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்!

Post by சிவா Sun Sep 18, 2011 9:51 am

காணொளியைக் கண்டு ரசித்தேன். நன்றி!


2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Empty 2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்!

Post by ரபீக் Sun Sep 18, 2011 10:43 am

பூமி சுற்றி வரும் சூரியனை விட சிறிய வடிவிலான 2 சூரியன்களையும் அதை சுற்றிவரும் கிரகத்தையும் குறித்த படங்களை கெப்ளர் விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

நாசா மூலம் விண்ணில் ஏவப்பட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் கெப்ளர் விண்கலம் அவ்வப்போது விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தும் படங்களை அனுப்புவது வழக்கம். கெப்ளர் விண்கலம் மூலம் பூமிக்கு அருகில் அல்லது தொலைவில் உயிர்வாழ ஏற்ற கிரகம் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறியவே அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கெப்ளர் விண்கலம் அனுப்பியுள்ள படங்கள் மூலம், ஒரு புதிய கிரகத்தையும் 2 சூரியன்களையும் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து 200 ஓளியாண்டு தூரத்தில் உள்ள இந்த கிரகத்திற்கு கெப்ளர் 16பி என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

இந்த கெப்ளர் 16பி கிரகத்தில் பாதியளவு பாறையும், பாதியளவு வாயுக்களும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு உயிரினம் வாழ முடியாத நிலையில் உள்ளதாக தெரிகிறது. கிரகத்தின் அளவு ஏறக்குறைய சனிக்கிரகத்தின் அளவையும், 2 சூரியன்களும், பூமியின் சூரியனை விட சிறியவை எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அதில் 1 சூரியன் பூமியின் சூரியனின் 69 சதவீத அளவையும், மற்றொன்று 20 சதவீத அளவையும் கொண்டுள்ளதாக தெரிகிறது. சூரியக் குடும்பத்தில் உள்ளது போல, சூரியன்கள் தன்னை தானே சுற்றிக் கொண்டே, அந்த கிரகத்தையும் சுற்றி வருகின்றன. இதனால் மூன்றிற்கு இடையே அவ்வப்போது கிரகணங்கள் ஏற்படுகிறது.

ஆனால் இம்மூன்றிற்கும் இடையேயான இயக்க வேகத்தை துல்லியமாக கணக்கிட முடியவில்லை. கெப்ளர் 16பி 2 சூரியன்களையும் சுற்றி வர 229 நாட்களை எடுத்து கொள்கிறது. வெள்ளி கிரகம் சூரியனை சுற்றி வர 225 நாட்களை எடுத்து கொள்கிறது.

கெப்ளர் ஆராய்ச்சியாளர் வில்லியம் புரூக்கி கூறுகையில், "சூரியக் குடும்பத்தை ஒத்த அநேக கிரகங்களும், சூரியன்களும் உள்ளது. அதில் சிலவற்றில் உயிர்வாழ தேவையான அம்சங்கள் அடங்கி இருக்கலாம் என்பதை கெப்ளர் அனுப்பியுள்ள படங்கள் மூலம் நிரூபணமாகிறது. அதன்மூலம் ஆராய்ச்சியாளர்கள் கடக்க வேண்டிய பாதை வெகுதொலைவு உள்ளது என தெரிகிறது", என்றா
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Empty Re: 2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்!

Post by முகம்மது ஃபரீத் Sun Sep 18, 2011 10:56 am

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்! Empty Re: 2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தை அடைந்தது விண்கலம்
» வெள்ளி கிரகத்தை படம் பிடித்தது 'நாசா'வின் 'பார்க்கர்' விண்கலம்
» சிறிய கிரகத்தை ஆய்வு செய்து 7 ஆண்டுகளுக்கு பின் திரும்பியது ஜப்பான் விண்கலம்
» எடை கூடிய சிறுவர்களுக்கும் இருதய நோய் ஏற்படக் கூடிய அபாயம்
» எடை கூடிய சிறுவர்களுக்கும் இருதய நோய் ஏற்படக் கூடிய அபாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum