ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திகில் கதை !!

+6
aathma
உமா
dsudhanandan
வின்சீலன்
kitcha
ரேவதி
10 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

திகில் கதை !! - Page 4 Empty திகில் கதை !!

Post by ரேவதி Sat Sep 17, 2011 3:12 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே
இது மோகனன் என்பவர் எழுதிய திகில் கதை உண்மை சம்பவமும் கூட உங்களுக்குக்காக இதோ

********************

சங்கரும் ராமுவும் ஒரே சீராக டிவிஎஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நேரம் இரவு பனிரெண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்த்து.

அன்று அமாவாசையானதால் ஊரெங்கும் இருளடித்திருந்தது. பியூஸ் போனதால் தெருவிளக்குகள் தேமே என்று நின்று கொண்டிருந்தன.
டிவிஎஸ் வண்டி தெருவை விட்டு சாலையில் திரும்பியது. அந்த சாலையில் இவர்களது
வாகனத்தைத் தவிர வேறு எந்த வாகனமும் தென்படவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம்
வரையில் ஒரு வெளிச்சப் புள்ளிகூட கண்ணில் படவில்லை.
டிவிஎஸ்ஸின் வெளிச்சம் தார்ச்சாலையில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது.
‘குறுகிய பாலம் மெதுவாக செல்லவும்’ என்ற அறிவிப்புப் பலகையின் மேல் பட்ட
வெளிச்சம், இடது வளைவின் காரணமாக மின்னி மறைந்தது.
பாலம் மெல்ல மெல்ல இவர்களை நெருங்கிக் கொண்டிருந்தது. டிவிஎஸ் வண்டியின்
சத்தத்தினூடே தூரத்தில் நாய் ஒன்று குரைக்கும் சப்தம் மெலிதாகக் கேட்டது.
“டேய் சங்கரு... ஊர் போய் சேர்றதுக்கு... இன்னும் எவ்வளவு நேரம்டா..?”
என்று வண்டியை ஓட்டியபடியே கேட்ட ராமுவுக்கு வயது முப்பதிருக்கும்.
சங்கருக்கு ஒன்று விட்ட முறையில் மாமன்.
“ஆச்சி மாமா. இன்னும் ரெண்டு கிலோ மீட்டர்தான்..?” என்று சொன்ன சங்கருக்கு
வயது 20 இருக்கும். திடகாத்திரமான உடம்பு. பார்வைக்கு இந்திப்பட வில்லன்
போல இருப்பான்.
ராமுவும், சங்கரும் பண விஷயமாக சிங்கபுரம் வரை சென்றிருந்தனர். பணம்
வசூலாவதற்கு நேரமானதால் இருட்டிவிட்டது. அதனால்தான் இந்த நள்ளிரவில்
குன்றத்தூருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
குன்றத்தூரில் மாடுகளை வாங்கி விற்கும் தொழிலைச் செய்து வருபவர் சங்கரின்
அப்பா வேதாசலம். பணவசூலுக்காகத்தான் இருவரையும் சிங்கபுரம் வரை அனுப்பி
வைத்திருந்தார்.
பாலத்தின் மீது விர்ரென்று சென்று கொண்டிருந்த டிவிஎஸ், பாலத்தைக்
கடந்த்தும் திடீரென ஊமையாகி, மெதுவாய் தன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது.

“என்னடா இது வண்டி திடீர்னு நின்னுடிச்சி... பெட்ரோல் இருக்குல்ல..?” என்று ராமு கேட்டான்
“வரும் போதுதான் ரெண்டு லிட்டர் பெட்ரோல் போட்டேன். அதுக்குள்ள தீர்ந்து
போயிடுமா என்ன. அதெல்லாம் இருக்கு மாமா... வண்டியை என்கிட்ட கொடு மாமா நான்
பார்க்கிறேன்” என்றபடி டிவிஎஸ்ஸை கைப்பற்றினான் சங்கர். கிளட்ச்சை
பிடித்த படி வண்டியை உதைத்தான்.
வண்டியை பல முறை உதைத்தும் உசுப்பேத்தியும் பார்த்தான். ம்ஹீம் வண்டிக்கு
உயிர் வருவதாக இல்லை... ஏதோ டிபி நோயாளி குறட்டை விடுவதைப் போல
“டொர்..டொர்..டொர்..” என முனகியபடி முடங்கிப் போனது.
“தள்ளுடா நான் பார்க்கிறேன்...” என்ற ராமு டிவிஎஸ்ஸின் என்ஜின் பகுதிக்குள் கையை விட்டு சோக்கைத் தேடினேன்.
டிவிஎஸ்ஸின் வெளிச்சம்தான் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. அதன் இயக்கமும் நின்று போகவே எங்கும் இருள் மயமாயிருந்தது.
நல்லவேளையாக இருவரும் வெள்ளை சட்டை போட்டிருந்த்தால் இருவரின் உருவங்களும் தோராயமாக தென்பட்டது.
மின்மினி பூச்சிகள் ஆங்காங்கே வட்டமடித்துக் கொண்டிருந்தன. தூரத்தில்
இரண்டு நாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருந்த சத்தம் இருவரின் காதுகளிலும்
தெளிவாக விழுந்தது.



“டேய் ரொம்ப இருட்டா இருக்குது... ஏதாவது இருந்தா எடுடா..?”
“இந்தா மாமா பென் டார்ச்...”[/b]திகில் கதை !! - Page 4 Halloween_demons_138

[b]“ம்ஹீம்... என்ன ஆச்சிடா இந்த சனியன் புடிச்ச வண்டிக்கு... ச்சே…“ ராமு சலித்துக் கொண்டே டிவிஎஸ்ஸிற்கு உயிர் கொடுக்கப் பார்த்தான்.

ம்ஹீம்... ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்பது போல “ட்ர்ர்.. ட்ர்ர்… ட்ர்ர்…” என
குறட்டை சத்தம் மட்டும் கொடுத்துவிட்டு அப்படியே தூங்கிப் போனது.
ராமுவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சங்கர், பாலத்திற்கு இடது புறம் உள்ள இறக்கத்தில் பார்வையை ஓடவிட்டவன் சற்று நிதானித்தான்.
அந்த கும்மிருட்டிலும் அங்கே வெள்ளை வெளேரென ஒரு நிழலுருவம் படுத்துக்
கிடப்பது போல் சங்கருக்குத் தோன்றியது. “அடச்சே பிரம்மைடா…” என தனக்குத்
தானே ஆறுதல் சொல்லிக் கொண்டபடி பார்வையை வேறு பக்கம் திருப்ப
முயற்சித்தான். ஆனால் திருப்ப முடியவில்லை.
படுத்துக் கிடந்த நிழலுருவம் மெல்ல மெல்ல எழுந்து உட்கார ஆரம்பித்தது.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கருக்கு பயம் கவ்விக் கொண்டது...
“மாமா... மாமா... மாமா...” என ராமுவைக் கூப்பிட்டானே தவிர அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வரவில்லை.
அந்த உருவம் அவனையே பார்த்தபடி எழுந்து நின்றது.
ராமு அருகிலிருக்கிறான் என்ற தைரியத்தில் வாய் திறந்து “மாமா.. மாமா...
அங்க பாரு ஏதோ ஒன்னு வெள்ளையா தெரியுது…” என்று கத்தினான். அவன் கத்தியது
அவனுக்கு மட்டுமே கேட்டது. அவனுடைய வார்த்தைகளை பயம் விழுங்கிக் கொண்டது.
அவனுடைய உள்நாக்கு, வெளிநாக்கு என எல்லா நாக்கும் உலர்ந்து
போய்விட்டிருந்தது.
அந்த பயத்திலும் அந்த வெள்ளை உருவத்தை உற்றுப் பார்த்தான் சங்கர். அந்த
உருவம் பார்ப்பதற்கு மனித உருவம் போல தோன்றியது. அதன் முகம் பஸ்ஸில்
அரைபட்டதைப் போல மிகவும் நசுங்கிப் போயிருந்தது.
எழுந்து நின்ற உருவம் ஒரு கையை அவனை நோக்கி நீட்டியது. அப்போது சாலை ஓரமாக
நின்றிருந்த கம்பத்தின் மேல் உட்கார்ந்திருந்த ஆந்தை ஒன்று, அங்கிருந்த
அமைதியை கிழிப்பது போல், வேகமாய் அலறியபடி பறந்தோடியது.
ஆந்தையின் அலறலைக் கேட்டு திடுக்கிட்ட ராமு, சங்கரைப் பார்த்தபடி “டேய்
வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது... வண்டியைத் தள்ளு ஸ்டார்ட் ஆகுதான்னு
பார்ப்போம்…” என்றான்.
சில்லென்று வீசிக்கொண்டிருந்த இரவு நேரக் காற்று மட்டும் ராமு சொன்னதை
காதில் வாங்கிக் கொண்டது போல அவன் முகத்தை வருடி விட்டு போனது. தான்
சொன்னதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், சிலை போல சங்கர் நின்றிருப்பதை
பார்த்த ராமுவுக்கு கோபம் ஏற்பட்டது.
“டேய்... நட்டநடு ராத்திரியில, வெட்டவெளியில மாட்டிகிட்டிருக்கோம்... வண்டியத் தள்ளுடாங்கறேன்...” அப்போதும் சங்கர் திரும்பவில்லை.
“டேய் சங்கர் உங்கிட்டதாண்டா சொல்றேன்.. அங்க என்னடா பார்வை...” என்றபடி சங்கர் பார்த்த இடத்தை ராமுவும் பார்த்தான்.
அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. கோபம் தலைக்கேறவே... “டேய்…” என்றபடி சங்கரின் முதுகில் அடித்தான்.
அப்போதும் அவன் அசையாமலிருக்கவே... “டேய்.. சங்கர்... உன்னைத்தாண்டா...” என்றபடி அவனைப் பிடித்து உலுக்கினான்.

“மாமா... மாமா... மாமா...” என்றான்



"என்னடா..?" என்றபடி சங்கரின் முகத்தைப் பார்த்த ராமு அதிர்ந்து போனான்.
சில்லென்று காற்று வீசிக்கொண்டிருக்கையில் சங்கரின் முகம் குப்பென்று
வியர்த்துப் போயிருந்தது. அவனது கண்கள் பீதியில் இருந்ததை அந்த இரவிலும்
தெளிவாகத் தெரிந்தது.
“என்னடா மாப்ள... என்னடா..?” என்றான் ராமு

“மாமா.. அங்க ஏதோ வெள்ளையா ஒரு உருவம் தெரியுது மாமா..?” என்று சொன்னானே தவிர, அந்த திசையிலிருந்து அவன் பார்வையை திருப்பவே இல்லை.
அவன் சொன்ன இடத்தில் பென் டார்ச் அடித்துப் பார்த்த ராமுவிற்கு ஒன்றும்
தெரியவில்லை. “டேய்… இதுக்குத்தான் பேய் படம் எல்லாம் பாக்காதங்கறது. அங்க
ஒண்ணுமே இல்ல... ஏண்டா உளர்ற... நீ முதல்ல வண்டியைத் தள்ளு…” என்றபடி
வண்டியில் உட்கார்ந்து கொண்டான் ராமு.


Last edited by ரேவதி on Tue Sep 27, 2011 3:19 pm; edited 4 times in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


திகில் கதை !! - Page 4 Empty Re: திகில் கதை !!

Post by உமா Tue Sep 27, 2011 3:26 pm

பாதி கதையை படித்துட்டேன்.. பயம் கொஞ்ச ரிலாக்ஸ் செய்துவிட்டு மீதியையும் படிக்கிறேன் ரேவதி... அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

திகில் கதை !! - Page 4 Empty Re: திகில் கதை !!

Post by ரேவதி Tue Sep 27, 2011 3:54 pm

அனைத்தையும் போல்டில் இருந்து எடுத்து விட்டேன்
நன்றி நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திகில் கதை !! - Page 4 Empty Re: திகில் கதை !!

Post by சிவா Tue Sep 27, 2011 3:56 pm

ரேவதி wrote:அனைத்தையும் போல்டில் இருந்து எடுத்து விட்டேன்
நன்றி திகில் கதை !! - Page 4 678642

நன்றி ரேவதி. அனைத்துப் பதிவுகளிலும் இவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்! அனைவரும் விரும்பிப் படிப்பார்கள். திகில் கதை !! - Page 4 154550


திகில் கதை !! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திகில் கதை !! - Page 4 Empty Re: திகில் கதை !!

Post by ரேவதி Tue Sep 27, 2011 3:58 pm

சிவா wrote:
ரேவதி wrote:அனைத்தையும் போல்டில் இருந்து எடுத்து விட்டேன்
நன்றி திகில் கதை !! - Page 4 678642

நன்றி ரேவதி. அனைத்துப் பதிவுகளிலும் இவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்! அனைவரும் விரும்பிப் படிப்பார்கள். திகில் கதை !! - Page 4 154550
அப்படியே செய்கிறேன் திகில் கதை !! - Page 4 678642 திகில் கதை !! - Page 4 678642 திகில் கதை !! - Page 4 154550


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திகில் கதை !! - Page 4 Empty Re: திகில் கதை !!

Post by உமா Tue Sep 27, 2011 4:17 pm

ரேவதி wrote:அனைத்தையும் போல்டில் இருந்து எடுத்து விட்டேன்
நன்றி நன்றி

நல்லது.....
திகில் கதை !! - Page 4 Sister



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

திகில் கதை !! - Page 4 Empty Re: திகில் கதை !!

Post by ரேவதி Tue Sep 27, 2011 4:18 pm

உமா wrote:
ரேவதி wrote:அனைத்தையும் போல்டில் இருந்து எடுத்து விட்டேன்
நன்றி நன்றி

நல்லது.....
திகில் கதை !! - Page 4 Sister
இதை அன்றே சொல்லி இருக்கலாம் இல்லையா நான் அப்போதே நீக்கி இருந்திருபேனே திகில் கதை !! - Page 4 440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திகில் கதை !! - Page 4 Empty Re: திகில் கதை !!

Post by உமா Tue Sep 27, 2011 4:25 pm

ரேவதி wrote:
உமா wrote:
ரேவதி wrote:அனைத்தையும் போல்டில் இருந்து எடுத்து விட்டேன்
நன்றி நன்றி

நல்லது.....
திகில் கதை !! - Page 4 Sister
இதை அன்றே சொல்லி இருக்கலாம் இல்லையா நான் அப்போதே நீக்கி இருந்திருபேனே திகில் கதை !! - Page 4 440806

உன் கதையை இன்றுதான் நான் படிக்கவே வந்தேன்....சிவா அண்ணா சொல்வதற்க்கு முன்பே இதை நான் டைப் செய்தேன்...send கொடுக்கையில் modify save என்று ஆப்ஷன் வந்தது....அதன் பின்தான் சிவா அண்ணா பதில் பார்த்தேன்...பிறகு அதிலேயே என் பதிவை பேஸ்ட் செய்தேன்.... என்னால் போல்டான பொண்ட்களை படிக்க முடியாது ...இன்று தான் படிக்க வந்தேன்...பார்த்தேன் ..சொன்னேன்....சரியா.....


போல்ட் செய்யும் எழுத்துக்களை கொஞ்சம் பெரிய பாண்ட்களில் போட்டால் படிக்க ஈஸியா இருக்கும்...
சிறிய எழுத்துக்கள் சாதாரணமாக இருந்தாலே போதும்....

சியர்ஸ் சியர்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

திகில் கதை !! - Page 4 Empty Re: திகில் கதை !!

Post by ரேவதி Tue Sep 27, 2011 4:26 pm

உமா wrote:]

உன் கதையை இன்றுதான் நான் படிக்கவே வந்தேன்....

என்னது என்னுடைய கதையா அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திகில் கதை !! - Page 4 Empty Re: திகில் கதை !!

Post by உமா Tue Sep 27, 2011 4:27 pm

ரேவதி wrote:
உமா wrote:]

உன் கதையை இன்றுதான் நான் படிக்கவே வந்தேன்....

என்னது என்னுடைய கதையா அதிர்ச்சி

நீ பகிர்ந்த கதையை. ரேவதி....
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

திகில் கதை !! - Page 4 Empty Re: திகில் கதை !!

Post by ரேவதி Tue Sep 27, 2011 4:29 pm

உமா wrote:
ரேவதி wrote:
உமா wrote:]

உன் கதையை இன்றுதான் நான் படிக்கவே வந்தேன்....

என்னது என்னுடைய கதையா அதிர்ச்சி

நீ பகிர்ந்த கதையை. ரேவதி....
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
திகில் கதை !! - Page 4 Heureux3திகில் கதை !! - Page 4 Heureux3திகில் கதை !! - Page 4 Heureux3


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திகில் கதை !! - Page 4 Empty Re: திகில் கதை !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum