ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசிக்கு சோறு தந்தால் போதும்!

2 posters

Go down

பசிக்கு சோறு தந்தால் போதும்! Empty பசிக்கு சோறு தந்தால் போதும்!

Post by thillalangadi Fri Sep 16, 2011 10:48 pm

பசிக்கு சோறு தந்தால் போதும்! -தலையங்கம்


பொதுவாக நல்ல திரைப்பட பாடல்கள், நவரசங்களை மனிதனின் உள்ளத்தில் தோற்றுவிக்கும் வல்லமை படைத்தது. அந்தவகையில், பழைய காலத்து திரைப்பட பாடல்கள் ஒன்று இன்றும் கேட்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் தன்மை கொண்டதாகும். பசி கொடுமையால் வாடும் ஒரு குழந்தை பாடுவாள், `அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே, பாலும் பழமும் வேண்டாம் தாயே, பசிக்கு சோறு தந்தால் போதும்...' என்று பாடுவாள். இந்த பாடலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மகாகவி பாரதியார், `இனியொரு விதி செய்வோம்- அதை எந்த நாளும் காப்போம்; தனியொருவனுக் குணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாடினார்.

மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எப்போதுமே மிக உணர்ச்சிவசப்பட்டு, தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தழுதழுத்த குரலில் கூறுவார். ஒருமுறை எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும் சிறுவர்களாக இருந்தநேரத்தில், அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத நிலையில், அன்னை சத்யா அம்மையார் அழுதுகொண்டிருந்த நேரத்தில், பக்கத்து வீட்டில் உள்ள ஆறுமுகநாடார் என்பவரின் மனைவி ஒரு முறத்தில் அரிசி கொடுத்து, அதை வைத்து கஞ்சி சமைத்ததால்தான் பசி ஆறியது என்பார். அன்று பக்கத்து வீட்டு அம்மா அரிசி தரவில்லை என்றால், இன்று எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை என்று கூட்டங்களில் கூறுவார். அப்படி பசி கொடுமையை அறிந்த காரணத்தால்தான் தனக்கு ஏற்பட்ட நிலைமை, தமிழ்நாட்டில் எந்த சிறுவர்களுக்கும் ஏற்படக்கூடாது என்ற உணர்வில், `சத்துணவு திட்டத்தை' கொண்டு வந்தார்.

பெரியவர்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டாலும், அவர்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் ஒருபோதும் பட்டினி கிடக்கமாட்டார்கள். பள்ளிக்கூடத்தில் போய் சத்துணவை சாப்பிட்டு வயிற்றை நிறைத்துக்கொள்வார்கள் என்ற நிலையை ஏற்படுத்தினார். ஆனால், பிறந்ததில் இருந்தே வசதியோடு வாழ்ந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தனது ஆசான் எம்.ஜி.ஆர். குழந்தைகளின் பசியை ஆற்றினார். நான், பெரியவர்களின் பசியை ஆற்றுகிறேன் என்று சூளுரைத்து கடந்தமுறை ஆட்சிக்கு வந்த நேரத்தில், அதாவது 2002-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி கோவில்களில் `அன்னதான திட்டத்தை' செயல்படுத்தினார். வயிற்றில் பசியோடு ஈரத்துணியை கட்டிக்கொண்டு வருபவனால், கடவுளை நிச்சயமாக முழு மனதோடு வணங்க முடியாது. அவர் அன்று தொடங்கி வைத்த திட்டம் 362 கோவில்கள் முழு வீச்சில் நடந்து வந்தது. இந்த கோவில்களில் எல்லாம் மதியம் பசி ஆறியவர்கள் ஏராளம், ஏராளம். இப்போது மேலும் 106 கோவில்களில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளார். பசிப்பிணி போக்கும் இந்த திட்டம் மிகவும் போற்றுதற்குரியதாகும். இதில் பொதுமக்களின் பங்களிப்பு மிக மிக அவசியமாகும். தங்கள் வீடுகளில் உள்ள பிறந்த நாள், திருமண நாள் மற்றும் தங்கள் வீட்டில் நினைவுகூரும் மறைந்தவர்களின் நினைவு நாள், எல்லாவற்றிலும் திருக்கோவில்களில் அன்னதானம் அளிக்க மக்கள் முன்வரவேண்டும்.

முதல்-அமைச்சர் கொண்டுவந்த அற்புதமான திட்டத்தை இந்து கோவில்களோடு நிறுத்திவிடக்கூடாது. இதை ஒரு முன்மாதிரியாக கொண்டு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பிற மதத்தினரும் தங்கள் வழிபாட்டு தலங்களில் இதுபோன்ற அன்னதான திட்டத்தை செயல்படுத்தவேண்டும். நாட்டில் எத்தனையோ மணி மண்டபங்கள், நினைவாலயங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம்கூட இதுபோன்ற அன்னதான திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவர முன்வரவேண்டும். இலவச உணவு திட்டத்தின் மூலகர்த்தாவாக விளங்கிய எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் என்றாலும் சரி, மாம்பலம் நினைவு இல்லம் என்றாலும் சரி, `கருணை தெய்வம் கைகள் நீட்டி, அணைக்கத் தாவும் ஆலயம், காலமெல்லாம் திறந்து காணும், கதவில்லாத ஆலயம்!' என்றே அவர்பால் அன்புகொண்டவர்கள் எண்ணுகிறார்கள். மற்றவர்கள் பசியாற சாப்பிடுவதை கண்டு, மனமகிழ்ந்த எம்.ஜி.ஆரை போற்றும் வகையில், இங்கும் பசியோடு வருபவர்களுக்கு சாப்பாடு போடுவதுதான் அவரது நினைவை போற்றுவதாக அமையும்.

திருக்கோவில்களில் ஜெயலலிதா கொண்டுவந்த அன்னதான திட்டத்தைபோல, நல்ல உள்ளம் கொண்டவர்கள் அனைவரும், தங்கள் தங்கள் இடங்களில் இதுபோல `அன்னதான திட்டத்தை' தொடங்கி, பசிப்பிணி என்பது நிச்சயமாக தமிழ்நாட்டில் இல்லை என்ற கருணை செயல்களை தொடங்க வேண்டும் என்பதே, நல்ல உள்ளங்களின் கோரிக்கையாகும்.
Thanks - http://dailythanthi.com/article.asp?NewsID=674113&disdate=9/15/2011
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

பசிக்கு சோறு தந்தால் போதும்! Empty Re: பசிக்கு சோறு தந்தால் போதும்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 17, 2011 1:48 pm

[quote="thillalangadi"]பசிக்கு சோறு தந்தால் போதும்! -தலையங்கம்

மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எப்போதுமே மிக உணர்ச்சிவசப்பட்டு, தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தழுதழுத்த குரலில் கூறுவார். ஒருமுறை எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும் சிறுவர்களாக இருந்தநேரத்தில், அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத நிலையில், அன்னை சத்யா அம்மையார் அழுதுகொண்டிருந்த நேரத்தில், பக்கத்து வீட்டில் உள்ள ஆறுமுகநாடார் என்பவரின் மனைவி ஒரு முறத்தில் அரிசி கொடுத்து, அதை வைத்து கஞ்சி சமைத்ததால்தான் பசி ஆறியது என்பார். அன்று பக்கத்து வீட்டு அம்மா அரிசி தரவில்லை என்றால், இன்று எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை என்று கூட்டங்களில் கூறுவார். அப்படி பசி கொடுமையை அறிந்த காரணத்தால்தான் தனக்கு ஏற்பட்ட நிலைமை, தமிழ்நாட்டில் எந்த சிறுவர்களுக்கும் ஏற்படக்கூடாது என்ற உணர்வில், `சத்துணவு திட்டத்தை' கொண்டு வந்தார்."

மன்னிக்கவும்...சத்துணவுத் திட்டம் ....பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கொண்டுவரப்பட்டதாகும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum