புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்! — வேளுக்குடி கிருஷ்ணன் - Page 2 I_vote_lcapகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்! — வேளுக்குடி கிருஷ்ணன் - Page 2 I_voting_barகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்! — வேளுக்குடி கிருஷ்ணன் - Page 2 I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram

54 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
Manimegala

2 Posts - 1%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்! — வேளுக்குடி கிருஷ்ணன் - Page 2 I_vote_lcapகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்! — வேளுக்குடி கிருஷ்ணன் - Page 2 I_voting_barகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்! — வேளுக்குடி கிருஷ்ணன் - Page 2 I_vote_rcap 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்! — வேளுக்குடி கிருஷ்ணன்

Page 2 of 2 Previous  1, 2

senthilmask80
senthilmask80
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Postsenthilmask80 Fri Sep 16, 2011 8:59 am

First topic message reminder :

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்! — வேளுக்குடி கிருஷ்ணன்

சுமார் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம், குழந்தைகள் 50, 60 மார்க்குகள் வாங்கினாலே ரொம்பவும் சந்தோஷப்படுவார்கள், பெற்றோர்கள். ”அடடா..! எம் புள்ள என்னமா மார்க் வாங்கி, பாஸாகியிருக்கான் பாருங்க!” என்று பார்ப்போரிடமெல்லாம் சொல்லிச் சொல்லி பூரித்து, குழந்தையை நடுக்கூடத்தில் நிற்க வைத்து, திருஷ்டி சுற்றிப் போடுவார்கள்.

அட… 90 மார்க்கே அந்தக் குழந்தை வாங்கியிருந்தாலும், ”ஏன், என்னாச்சு? பத்து மார்க் எதுல போச்சு? எங்கே கோட்டைவிட்டே? சரியா படிக்கலியா?” என்கிற கேள்விகள்தான் பெற்றோர்களிடம் இருந்து வருகின்றன. கால மாற்றங்கள், போட்டிகள் நிறைந்த வாழ்க்கை என்றாகிவிட்ட உலகம்தான் இன்றைய நிலை.ஆனால், இன்றைய காலமே வேறு! ‘60 மார்க்கெல்லாம் ஒரு மார்க்கா’ என்று அந்தக் குழந்தையை அவர்களின் வீட்டாரே இளக்காரமாகப் பார்க்கின்றனர். ”இப்படியெல்லாம் மார்க் எடுத்தா, எப்படி டாக்டராகிறது, எப்படி இன்ஜினீயர் ஆகுறது?” என்று அலுத்துக்கொள்கின்றனர்.

மனனம் செய்கிற திறனும், எதையும் சட்டென்று கிரகித்துக்கொள்கிற கூர்மையும் குழந்தைகளுக்கு இருந்தால், அவர்கள் எளிதில் அதிக மதிப்பெண்கள் வாங்கமுடியும். அப்படியான திறமையும் புத்திக்கூர்மையும் இருக்கவேண்டுமெனில், குழந்தைகளுக்குச் சின்ன வயதிலிருந்தே புராணங்களையும் இதிகாசங்களையும் எடுத்துரைக்கவேண்டும்; பகவத்கீதையையும் ராமாயணத்தையும் விவரிக்க வேண்டும். அந்தக் கடமை, ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. ஆனால், செய்பவர்தான் மிகமிகக் குறைவு!

சரி… பகவத்கீதை படிப்பதற்கும், பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?

நிலாவைக் காட்டிச் சோறூட்டுகிறபோது அல்லது டி.வி-யில் கார்ட்டூனைக் காட்டி இட்லியைப் புகட்டுகிறபோது, ”இதுதான் பகவானின் திருநாமம். இதையும் கடந்து கடவுளுக்கு ஏகப்பட்ட பெயர்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பகவத்கீதையில் இரண்டெழுத்தில் உள்ள திருநாமம், மூன்றெழுத்தில் உள்ள திருநாமம், நான்கெழுத்து திருநாமம் என்று எத்தனை உள்ளன தெரியுமா? பகவத்கீதையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் குறித்து, ஒரே திருநாமம் இரண்டு முறை வந்திருக்கிறது; அந்தத் திருநாமம் இதுதான்…” என்றெல்லாம் குழந்தைகளுக்கு ஆன்மிகத்தையும் கொஞ்சம் ஊட்டலாமே! அப்படி ஊட்டினால், அந்தக் குழந்தை, பக்தி மார்க்கத்தை அறிந்து, சாஸ்திர- சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கிற, எதிலும் ஓர் ஒழுங்கைக் கொண்டிருக்கிற அற்புதமான மனிதனாக வருவது உறுதி.

அதுமட்டுமா? பகவானின் திருநாமங்களையும், அந்தத் திருநாமங்களுக்கான காரணங்களையும், ஓரெழுத்து, ஈரெழுத்து, மூன்றெழுத்து… என இருக்கிற திருநாமங்களையும் அந்தக் குழந்தைகள் மிக அழகாக புத்தியில் ஏற்றிக்கொள்ளும். இப்படியாக… நாம் சொல்கிற விஷயங் களையெல்லாம் உள்வாங்கிக் கொள்கிற, கிரகித்துக்கொள்கிற திறனானது சிறு வயதிலேயே வந்துவிட்டால், எல்.கே.ஜி படிப்பதில் துவங்கி, 6-வது, 7-வது படிக்கும்போது அந்தத் திறன் இன்னும் அதிகமாகி, பள்ளியிறுதிப் படிப்பில் மிகத் தெளிவாக உள்வாங்கிக்கொண்டு, கல்லூரிப் படிப்பை மிகச் சுலபமாக எட்டுவார்கள். அப்போது, விரும்பிய படிப்பைக் கல்லூரியில் தொடர்வதற்கு அதிக மதிப்பெண்களை எடுக்கிற புத்திக்கூர்மையும், ஞாபக சக்தியும், மனனம் செய்து உள்ளே உருவேற்றிக் கொள்கிற சாதுர்யமும் மூளையின் எல்லா மூலைகளிலும் பரவி, வியாபித்திருக்கும். ஆகவே, வீட்டில் குழந்தைகளிடத்தில், புராண- இதிகாச- காப்பிய- காவியங்களை சொல்லிக் கொடுங்கள்; அறிவும் மேம்படும்; ஆன்மிகமும் தழைக்கும்!

பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஒரே திருநாமம், இரண்டு முறை வந்திருக்கிறது என்று சொன்னேன். அந்தச் சிறப்புக்கு உரிய திருநாமம் என்ன தெரியுமா? வசுப்ரதஹா!

இந்தத் திருநாமத்தின் அருமை- பெருமையைப் பார்ப்பதற்கு முன்பு, பகவானின் திருமேனியை ஆழ்வார் எப்படி விவரிக்கிறார் என்பதைப் பார்ப்போம். இதுவும், இன்றைய குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டிய ஒன்றுதான்!

ஜோதிமயமானவன் ஸ்ரீகிருஷ்ணர் என்று பார்த்தோம், அல்லவா! பகவான் எனப்படுபவர் ஒளிமயமான, தேஜஸ் நிறைந்த, பரஞ்சோதி என்பதில் யாருக்குத்தான் சந்தேகம் வரும்?! சரி… அவருடைய திருமேனியை, பொன்னுக்கு நிகராக ஜ்வலிப்பதாகச் சொல்கிறார் ஆழ்வார். ஆனால், அத்துடன் நின்றுவிடவில்லை அவர். தகதகத்து மின்னுகிற பொன்னைச் சொல்லியும் மனதுள் நிறைவு தராததால், ‘நன்பொன்’ என்று பாடுகிறார். ‘மாசறு பொன்னே…’ என்கிறோமே, அப்படி நன்பொன் எனப் பாடுகிறார். அப்போதேனும் நிறைவுற்றாரா அவர்?!

‘உரைத்த நன்பொன்’ என்கிறார். அதிலும் மனம் சமாதானமாகவில்லை அவருக்கு. பொன் என்று சொல்லியாயிற்று; நன்பொன் என்று சான்றிதழும் கொடுத்தாகிவிட்டது; ‘உரைத்துப் பார்த்துதான் சொல்கிறேன்’ என்கிற உறுதியையும் தந்தாகிவிட்டது. இறுதியாக, ‘சுட்டுரைத்த நன்பொன்’ என்று, தங்கத்தைச் சுட்டு, உரைத்துப் பார்த்து, நல்ல பொன் எனத் தெரிந்துகொண்டேன் என்று சொல்லிச் சிலாகிக்கிறார். அப்படியும், அவருக்குள் ஒரு சந்தேகம்… ’இது சரிதானா? பகவானின் திருமேனிக்கு இது சரிசமம்தானா?’ என்று உள்ளுக்குள்ளிருந்து கேள்வி வந்து உசுப்ப… சட்டென்று, ‘சுட்டு உரைத்த நன் பொன் ஒவ்வாது’ என்று பாடிவிட்டார் ஆழ்வார். ‘அடடா… பகவானே! உன்னுடைய ஜோதிமயமான திருமேனிக்கு, சுட்டுரைத்த நல்ல பொன்கூட இணையாகாது’ என்று பாடி முடித்து, வணங்குகிறார். இதுதான் தமிழின் அழகு; இதுதான், ஆழ்வார் பெருமக்களின் பூரணத்துவமான இறை பக்திக்குச் சான்று! தமிழையும் பக்தியையும் கலந்து, உள்ளிருந்து பாடல்களாகத் தந்திருக்காவிட்டால், நமக்கெல்லாம் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமெல்லாம் கிடைத்திருக்குமா, சொல்லுங்கள்!

இப்படித்தான் பராசர பட்டர், ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார். ‘என்னையும் என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ நீர்?’ என அரங்கன் கேட்க… ‘முதலில், உம்முடைய ஆதிசேஷனைப்போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாருங்கள், பார்க்கலாம்’ என்றாராம் பராசரர்.

‘அட… ஆயிரம் நாக்குகள் இருந்தால்தான் பாடுவீரோ?’ என்று சிரித்த அரங்கன், கருணையும் வாஞ்சையும் மேலிட… பராசரபட்டருக்கு, ஆயிரம் நாக்குகளை வழங்கினான்.

ஆனந்தத்தில் கைகள் குவித்து, சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பராசரர். ”மன்னிக்கவும் ரங்கா! என்னால் உன்னை பாட முடியாது!” என்று சொல்லிவிட்டு, அமைதியாகிவிட்டார். ஆச்சரியம் தாங்கவில்லை அரங்கனுக்கு!

பின்னே… பாடு என்று உத்தரவு போட்டாகிவிட்டது. பராசரர் கேட்டபடி, ஆயிரம் நாக்குகளையும் அவருக்கு வழங்கியாகிவிட்டது. அப்படியும் ‘பாட முடியாது’ என்று மறுத்தால், அரங்கனுக்கு ஆச்சரியம் எழத்தானே செய்யும்?

”என்ன விளையாடுகிறாயா? ஆயிரம் நாக்குகள் கேட்டாய்; கொடுத்தேன். பிறகென்ன… பாடவேண்டியதுதானே? முடியாது என்கிறாயே!” என்றான் அரங்கன்.

பராசர பட்டர், மீண்டும் கைகளைக் குவித்துக்கொண்டார்; மொத்த உடலையும் இன்னும் குறுக்கிக்கொண்டார்; முதுகை வளைத்து இன்னும் கூனாக்கிக்கொண்டு, ”அரங்கா… உன் ஒளி பொருந்திய அழகை என்னால் பாடமுடியாது என்று சொல்வதற்கே, எனக்கு ஆயிரம் நாக்குகள் தேவையாக இருக்கும்போது, பரஞ்சோதியாகத் திகழும் உன்னையும் உனது பேரழகையும் பாடுவதற்கு, எனக்கு இன்னும் எத்தனை எத்தனை நாக்குகள் தேவையோ?!” என்று சொல்லிப் புகழ்ந்தாராம் பராசரர்.

என்னவொரு அற்புதமான உவமை, பாருங்கள்! பகவானின் பேரழகுத் திருமேனியை விவரிப்பதற்கு எப்படியெல்லாம் சிந்தித்து, அவனுடன் இரண்டறக் கலந்திருக்கின்றனர் அடியவர்கள்! அப்பேர்ப்பட்டவனது திருநாமத்தைச் சொல்வது, எத்தனை வல்லமையை நமக்கு வழங்கும் என யோசியுங்கள்.

முடிந்தால்… இதையும் உங்களின் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஏனெனில், பகவான் எப்போதுமே நம்மைவிட குழந்தைகளுக்கு இன்னும் நெருக்கமானவன்!

நன்றி: gmail

senthilmask80
senthilmask80
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Postsenthilmask80 Tue Sep 20, 2011 11:02 am

சப்த பூதங்களால் ஆனது நம் உடல். அதேபோல், பரப்பிரம்மத்துக்கு பஞ்சப் பிராகாரங்கள் உள்ளன. அவற்றை, பரரூபம், வியூக மூர்த்தம், விபவாதாரம், அந்தர்யாமி, அர்ச்சாவதாரம் என ஐந்து நிலைகளாக உள்ளன என்று பார்த்தோம், இல்லையா?!

மேலும், பரரூபம் என்பது ஸ்ரீவைகுண்டநாதனின் திருக்கோலம்; அதாவது ஸ்ரீமந் நாராயணன். வைகுண்டத்தில் பரந்தாமன் எழுந்தருளியுள்ள நிலை. வியூக மூர்த்தம் என்பது, திருப்பாற்கடலில் திருமாலின் திருக்கோலம்; அதாவது அவதாரங்களுக்கு முந்தைய திருமேனி. விபவாதாரம் என்பது, திரு அவதாரத் திருக்கோலங்கள். அந்தர்யாமி என்பது, நமக்குள் குடிகொண்டிருக்கிற இறைத் தன்மையின் அரூப நிலை. ஆலயங்களில் இன்றைக்குத் தரிசிக்கக் கிடைக்கிற திருமேனிதான், அர்ச்சாவதாரக் கோலம் என்றும் பார்த்தோம்!

இதையடுத்து, 147-வது திருநாமத்தில் இருந்து இறுதி வரைக்கும், விபவாதாரத்தைப் பற்றி மிக அருமையாக, ஆத்மார்த்தமாக விவரிக்கப்பட்டுள்ளன.கீதையில், முதலாவது திருநாமம் துவங்கி, 122-வது திருநாமம் வரை, பரரூபமாக இருக்கிற ஸ்ரீவைகுண்டநாதனைப் பற்றியும், அவனது பெருமைகளையும் விவரிக்கின்றன. அடுத்ததாக, 123-வது திருநாமத்தில் இருந்து 146-வது திருநாமங்கள் வரை, திருப்பாற்கடலில் எழுந்தருளியுள்ள பரந்தாமனின் வியூகாவதாரத்தை எடுத்துரைக்கின்றன.

‘சரி.. அப்படியெனில், அந்தர்யாமியையும் அர்ச்சாவதாரத்தையும் சொல்லவில்லையா? விவரிக்கவில்லையா?’ என நீங்கள் கேட்பது புரிகிறது.

அதாவது, அந்தர்யாமி என்கிற உள்ளுக்குள் இருக்கிற அரூப நிலையை, பரரூபத்துடனும்… அர்ச்சாவதாரத்தை விபவரூபத்துடனும் சேர்த்து, திருநாமங்களாக அழகுறத் தரப்பட்டுள்ளது.

எத்தனை அவதாரங்கள்… எவ்வளவு திருநாமங்கள்! ஆனால் என்ன… 697-ல் துவங்கி 770 வரைக்கும்; அதையடுத்து 989 முதல் 992 வரைக்கும் எந்த அவதாரத்தின் மகிமையையும் மகோன்னதத்தையும் விவரித்துள்ளார்கள், தெரியுமா? கிட்டத் தட்ட 78 திருநாமங்களில், பகவான் ஸ்ரீகிருஷ்ணரையே சிலாகித்துள்ளது கீதை. பின்னே… பாட்டுடைத் தலைவன் ஸ்ரீகிருஷ்ணன்தானே?!

அதில் முக்கியமானதும் முதலாவதுமான திருநாமம், வசுரேதாஹ! வசுரேதன் என்பது ஸ்ரீகண்ணனைக் குறிக்கும் திருநாமம். வசு என்றால் ஜோதி என்று பொருள். வசுரேதன் என்றால், திவ்வியமான ஜோதி வடிவினன் என்று அர்த்தம்.

பராசர பட்டர், தன்னுடைய சீடன் மைத்ரேயரிடம் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத்தை விவரிக்கிறார். அப்போது, ‘கம்சனின் தொல்லை தாங்க முடியவில்லை. அவனால் தேசத்தில் அனைவருக்கும் நிம்மதியே போய்விட்டது. நீங்கள்தான் அருளவேண்டும்’ என்று ஸ்ரீமந் நாராயணனிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாம்! அப்போது, திருமால்… ”என் தலையில் இருந்து, வெளுத்த முடி ஒன்றையும் கறுத்த முடி ஒன்றையும் கிள்ளிப் போடுகிறேன். வெளுத்த முடி, ஸ்ரீபலராமனாகத் தோன்றுவான். கறுத்த முடி, நானாகவே அவதரிப்பேன்” என்று சொல்லி அருளியதுடன், அப்படியே பிறப்பெடுத்தாராம் ஸ்ரீமந் நாராயணன். ஆக, பகவானின் தலைமுடியானது கூட தேஜஸ் பொருந்தியதாக, ஒளி படைத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தன்னுடைய சீடனுக்கு அற்புதமாக விளக்கியுள்ளார் பராசர பட்டர்.

ஆக மொத்தத்தில், ஸ்ரீகிருஷ்ண பகவான் ஒளிமயமானவன்; தேஜஸ் நிரம்பியவன் என்பதையே அட்சரம் பிசகாமல் வலியுறுத்துகின்றனர் சான்றோர்!

நம்மாழ்வார் மட்டும் சும்மா இருந்துவிட்டாரா, என்ன? ஒளி, ஒளி, ஒளி… ஒளிமயமானவன் ஸ்ரீகிருஷ்ண பகவான் என்பதை தன்னுடைய பத்துப் பாடல்களில் மிகப்பிரமாதமாக எடுத்துரைத் திருக்கிறார். ‘ஆதி எம் சோதி உருவை அங்கு வைத்தாற் போன்று’ என்று பாடுகிறார்.

அதாவது, ஆதியும் ஜோதியுமான உருவம் கொண்டிருக்கிற பரந்தாமன், பரமபதத்தில் இருக்கிற நிலையைப் போலவே இங்கேயும் ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்தான் என்று உருகுகிறார் நம்மாழ்வார். அதுமட்டுமா? எத்தனை இடர்கள் வந்தாலும், ஸ்ரீகண்ணனின் நாம சங்கீர்த்தனங்களைச் சொல்லி வந்தோமானால், வாழ்வில் உய்யலாம் என்றும் நமக்கு அறிவுறுத்துகிறார்.

அதுவும், பகவானின் திருநாமங்களை எப்படிச் சொல்ல வேண்டுமாம்?

ஆடிக்கொண்டே திருநாமங்களைச் சொல்ல வேண்டுமாம்! அந்த ஆட்டம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? தலை காலைத் தட்டவேண்டும்; கால்கள் தலையைத் தட்ட வேண்டும். ‘என்னடா இவன்… தலை கால் புரியாம ஆடுறானே…’ என்போமே! அந்த அர்த்தத்தில், தன்னையே மறந்து இறைவன் ஒருவனையே நினைந்து, ஆடவேண்டும் என்கிறார் நம்மாழ்வார்.

‘இந்தக் காலத்தில், இப்படி ஆடினால், சுற்றியிருப்பவர்கள் சும்மா இருப்பார்களா? கை கொட்டிச் சிரிக்கமாட்டார்களா?’ எனும் கேள்வி எழலாம். இப்போது நம்மிடையே தோன்றியுள்ள வினாவுக்கு, அப்போதே விடை அளித்துவிட்டார் நம்மாழ்வார்.

எப்படி?

பகவானின் திவ்விய நாமங்களைச் சொல்லியபடி தன்னையே மறந்து ஆடும்போது, எவரேனும் கை கொட்டிச் சிரிக்கிறார்கள் என்றால், அதற்காகக் கவலைப் படாதீர்கள்; வெட்கப்படாதீர்கள்; சட்டென்று ஆட்டத்தை நிறுத்திவிட்டு, நாமசங்கீர்த்தனம் சொல்வதையும் நிறுத்திவிட்டு, உடைந்துவிடாதீர்கள். அவர்கள் கைத்தட்டுகிறார்கள், அல்லவா? அந்தக் கைத்தட்டலுக்குத் தக்கபடி, உங்களின் ஆட்டத்தை மாற்றி ஆடுங்கள்; திவ்விய நாமங்களைச் சொல்லிக் கொண்டே ஆடுங்கள். உங்களின் ஆட்டமும் பாட்டமும் பார்த்து, மலைத்துப் போய், வியந்தும் நெகிழ்ந்துமாக, அவர் களும் உங்களுடன் சேர்ந்து ஆடுவதற்கு வந்துவிடுவார்கள்; பகவானின் திவ்விய நாமங்களைச் சொல்லத் துவங்குவார்கள் என குழம்பிய மனத்துக்குத் தெளிவூட்டுகிறார் நம்மாழ்வார்.

ஒரு விஷயத்தைத் துவங்குவதுதான் நம்முடைய வேலை; அதைக் கைப்பிடித்து அழைத்துச் செல்வது இறைவனின் கடமை. திருப்பதிக்குப் போய், க்யூவில் நிற்பதுதான் நம்முடைய வேலை. அந்தக் கூட்டம் நெட்டித் தள்ள, நெட்டித் தள்ள… திருவேங்கடமுடையானுக்கு அருகில் போய்த்தானே ஆகவேண்டும்?! அதேபோல், பகவானின் நாமசங்கீர்த்தனம் செய்து பாடிக் கொண்டிருப்பது தான் நம்முடைய பணி; தன்னுடைய திருவடியில் நம்மைச் சேர்த்துக் கொள்வது இறைவனின் கடமை! நம்முடைய பணியைச் செம்மையாகச் செய்து கொண்டிருந்தால், இறைவன் தனது கடமையை, கருணையும் வாஞ்சையும் பொங்க, சீக்கிரமே நிறைவேற்றுவான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!

கீதையில் ஸ்ரீகிருஷ்ணன் தெரிவிக்கிறான்…”நான் பிறக்காதவனாகவே; நான் சரீரத்துடன் பிறக்காதவனாகவே; அப்படிப் பிறந்தாலும், சர்வேஸ்வரத்தை விடாதவனாகவே…” என அருள்கிறார்.

அதாவது, மனிதர்களைப் போல் உடம்புடனோ அவர்களுக்கு உண்டான கர்ம நியதிகளுடனோ பிறக்கவில்லை. அப்படி மனித உருவெடுத்து வந்தபோதிலும், என் குணங்களை, எந்தத் தருணத்திலும் விட்டுவிலகவில்லை என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

ஆக, தன்னுடைய குணங்களை எந்தத் தருணத்திலும் விட்டு விலகாத ஸ்ரீகிருஷ்ணர், அவருடைய குழந்தைகளான நம்மை மட்டும் விட்டுவிட்டு, விலகிவிடுவாரா என்ன?

பகவானை நோக்கி நாம் ஓரடி எடுத்து வைப்போம்; அவர் நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைப்பார்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 2:47 am

சிறந்த திரி, மேலும் தொடர்ந்திருக்கலாம் செந்தில்..!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்! — வேளுக்குடி கிருஷ்ணன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக