ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம், உயிர்தெழுதல், நரகம்

+4
பிரகாஸ்
மீனு
ரூபன்
சிவா
8 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 6 Empty மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Mon Sep 21, 2009 3:32 am

First topic message reminder :



ஹாருன் யஹ்யா


அறிமுகம்

மரணம்… அது எந்த நேரத்திலும் ஏற்படலாம். யாருக்கு தெரியும். நீங்கள் இந்த கட்டுரையை வாசித்து கொண்டு இருக்கும் இந்த வேளையிலும் ஏற்படலாம். அல்லது நீங்கள் எதிர் பார்க்கும் நேரத்திற்கு முன்பாகவும் ஏற்படலாம்.

இந்த வரிகள் - உங்களை மரணம் சுவைப்பதற்கு முன்பான கடைசி சந்தர்பமாகவோ அல்லது கடைசி நினைவூட்டலாகவோ அல்லது கடைசி எச்சரிக்கையாகவோ இருக்கலாம். நீங்கள் இந்த வரிகளை வாசிக்கும் போது அடுத்த மணித்தியாளத்தில் நீங்கள் உயிருடன் இருப்பீர்களா என்று உங்களுக்கு தெரியாது. அவ்வாறு நீங்கள் உயிருடன் இருந்தாலும் உங்களுக்கு இன்னொரு மணித்தியாளத்தை உத்தரவாதம் அளிக்க யாராலும் முடியாது. உங்கள் வாழ்கையை ஒரு மணித்தியாளத்தை கொண்டோ அல்லது ஒரு மணித்துளியை கொண்டோ உத்தரவாதம் அளிக்க முடியாது. நீங்கள் இந்த புத்தகத்தை முழுமையாக படித்து முடிப்பீர்களா என்று உங்களுக்கு தெரியாது. மரணம் அது எந்த நேரத்திலும் உங்களை வந்தடையும். அது நீங்கள் மரணத்தை பற்றி சிந்திப்பதற்கு சில துளிகளுக்கு முன்பாக வந்தடையும்.

நீங்கள் மரணமடைவது உறுதி. நீங்கள் நேசிப்பவர்களும் மரணத்தை சுவைத்தே தீர்வார்கள். நீங்கள் அவர்களுக்கு முன்பு அல்லது அவர்கள் உங்களுக்கு முன்பாகவோ மரணிப்பார்கள். இன்றிலிருந்து 100 ஆண்டுகளுக்கு பின்பு உங்களுக்கு தெரிந்த ஒரு ஆத்மாவும் இந்த உலகில் இருக்காது..

மனிதனின் எண்ணத்தை எல்லையில்லா கனவுகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பாடசாலை கல்வியை முடித்து – கல்லூரி – பட்டம் – நல்ல தொழில் - திருமணம் - பிள்ளைகள் - நிம்மதியான வாழ்கை. ……இவைதான் மனிதனின் விரிந்த சாதாரண ஆசைகளாக உள்ளது. இவை தவிர மனிதனின் சந்தர்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப இன்னும் ஆயிரக்கணக்கான ஆசைகள் மனிதனில் விரிந்து காணப்படுகின்றன.

மனித வாழ்வில் நடைபெறும் சில உறுதியான நிகழ்வுகளில் மரணமும் ஒன்று. இது 100 வீதம் உறுதி. பல வருட விடா முயற்சியின் காரணமாக கல்லூரியில் இடம் பிடித்த மாணவன் வகுப்பறைக்கு போகும் வழியில் மரணமாகிறான். தொழிலை பெற்று கொண்ட ஒருவர் முதல் நாள் வேளைக்கு போகும் வழியில் மரணமாகிறார். புது மண தம்பதியரின் வாழ்கையை சாலை விபத்து பறித்து கொள்கிறது. தனது நேரத்தை சேமிக்கும் நோக்கில் விமானத்தில் பறக்கும் வியாபாரி ஒருவர்-அந்த விமானமே அவரது வாழ்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை அறியமாட்டார்.

அத்தகைய சந்தர்பங்களில் ஆசைகள் நிறைவேறாமல் தேங்கி நிற்கின்றன. அவர்கள் அவர்களது ஆசைகளை ஒருபோதும் நிறைவேறாது என்ற நிலையில் விட்டு விட்டு - இனிமேல் ஒருபோதும் திரும்ப முடியாத ஒரு இலக்கை நோக்கி செல்கிறார்கள். அந்த இடம் அவர்கள் ஒருபோதும் நினைத்து பார்த்திடாத இடமாக இருக்கிறது. பல வருடங்கள் பல மணிநேரங்கள் செலவழித்து அவர்கள் தீட்டிய கற்பனைகள் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. ஆனால் அவர்கள் நிச்சயமாக நடக்க இருக்கும் ஒன்றை சிந்திக்க மறந்து விட்டார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் சிந்திக்கும் மனசாட்சியுள்ள மனிதன் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்? உறுதியாக நடக்க இருக்கும் ஒன்றுக்கா அல்லது சில வேளை நடக்ககூடும் என்ற ஒன்றுக்கா? ஆனாலும் பெரும்பான்மை மக்கள் உறுதியாக நடக்கும் என்று கூறமுடியாத ஒன்றுக்கே முன்னுரிமை வழங்குவதை நாம் பார்க்கிறோம். அவர்கள் வாழ்வின் எந்த நிலையில் இருந்த போதிலும் அதை விட சிறந்த வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடினமாக சிந்திக்கிறார்கள்.

மனிதன் சாகா வரம் பெற்றவனாக இருந்தால் அவனது ஆசைகளை நியாயப்படுத்தலாம். உண்மை என்னவென்றால் ஆசைகள் அனைத்திற்கும் மரணம் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. ஆகவே நடக்கவோ அல்லது நடக்காமல் போகக்கூடிய ஆசைகளுக்காக எமது முழு கவனத்தையும் செலுத்தி உறுதியாக நடக்ககூடிய மரணத்தை பற்றி சிந்திக்காமல் விடுவது மிகப்பெரும் மடமையாகும்.

இதற்கு காரணம் மனிதன் அவனது மனதை அடக்க முடியாத ஆசைகளை கொண்டு அடிமை படுத்தி இருப்பதால் இந்த தெளிவான உண்மையை கவனிக்காமல் விட்டுவிடுகிறான்.

இவ்வாறான சூழ்நிலையில் அவர்கள் தங்களது உண்மையான வாழ்கை மரணத்தின் பிறகு தொடங்குகிறது என்ற உண்மையை விளங்கி கொள்வதில்லை. அதற்காக தங்களை தயார் படுத்திக்கொள்வதுமில்லை. அதனால் அவர்கள் மீண்டும் உயிர்பெற்று எழுந்ததும் நரகத்தை தவிர வேறு எங்கும் செல்வதுமில்லை. அது அவர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட இடமாகும். இந்த புத்தகம் எழுதப்பட்ட நோக்கம் - மனிதன் சிந்திக்க மறுக்கும் ஒன்றை சிந்திக்க வைக்கவும் - நிச்சயமாக சத்தியமாக நடக்க இருக்கும் ஒன்றை பற்றி எச்சரிப்பதற்குமாகும். அதை சிந்திக்க மறுப்பது எந்த வகையிலும் தீர்வாக அமையாது.


Last edited by சிவா on Wed Mar 16, 2011 8:35 am; edited 1 time in total


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 6 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Wed Mar 16, 2011 8:36 am

மரணத்தின் பின் உண்மையான வாழ்கை ஆரம்பமாவதால் உண்மையான இயற்கையின் சட்டங்களும் அவ்வாறே மறுமைக்கு ஏற்றவாறு அமையும். இவ்வுலகிலுள்ள சட்டங்கள் அனைத்தும் குறையுள்ள நிறைவற்ற நிரந்தரமற்றவைகள் இருப்பினும் அவை உண்மையல்ல அவை மாறக்கூடியவை. உண்மையான சட்டங்கள் எல்லையற்ற தன்னிகரற்ற மரணமடையாதவைகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்படும். வேறுவகையில் கூறுவதானால் சாதாரணமானது என்னவென்றால் வாடாத பூக்கள்இ வயோதிபத்தை அடையாத மனிதன், அழுகாத பழங்கள். உண்மையான சட்டங்கள் மனிதனின் ஒவ்வொரு ஆசைகளும் உடனே பூர்தியாக வேண்டும். அவனுக்கு நோய்கள் வரக்கூடாது. மேலும் குளிரையோ அல்லது வியர்வையையோ உணரவும் கூடாது.

தற்காலிக சட்டங்கள் இந்த தற்காலிக உலகில் நடைமுறையில் உள்ளன ஆனால் உண்மையான சட்டங்கள் மறுமை வாழ்கையில் வரும். இவ்வுலகில் காணப்படும் அனைத்து குறையுள்ள நிறைவற்றவைகளும் வேண்டுமென்றே மாசுப்படுத்தப்பட்ட உண்மையான சட்டங்களாகும். உண்மையான சட்டங்களை கொண்டுள்ள மறுமை நினைப்பதை போன்று மிக தொலைவிலில்லை. இறைவன் அவன் நாடும் எந்த வேளையிலும் மனிதனின் வாழ்வை முடித்து அவனை மறுமைக்கு அனுப்புவான். இந்த நிலை மாற்றம் கண் சிமிட்டும் எடுத்து கொள்ளும் மிக குறுகிய காலத்தில் நடைபெறும். இது ஒருவர் கனவிலிருந்து எழும்புவதற்கு ஒப்பிடலாம்.

ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்?" என்று கேட்பான். 'ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக!" என்று அவர்கள் கூறுவார்கள். 'ஒரு சொற்ப காலம் தவிர (பூமியில் அதிகம்) நீங்கள் தங்கவில்லை. நீங்கள் (இதை) அறிந்திருந்தால்!" என்று (இறைவன்) கூறுவான். 'நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?" (என்றும் இறைவன் கேட்பான்.) (ஸ_றா அல் மூஃமின்: 112-115)

மரணம் வரும் வேனைஇ கனவுகள் முடிவிற்கு வந்து மனிதன் அவனது உண்மையான வாழ்வை ஆரம்பிக்கிறான். இந்த உலகில் கண்சிமிட்டும் நேரம் இருந்த மனிதன் இறைவனுக்கு முன் உலகில் அவன் செய்தவைகளுக்கான கணக்குகளை காட்ட வருவான். அவன் வாழ்நாள் முழுவதும் மரணத்தை மனதில் வைத்து இறைவனின் அருளை நாடியவனாக வாழ்ந்திருந்தால் அவன் காப்பாற்றப்படுவான். குர்ஆன் இவர்களை வலக்கரத்தில் பட்டோலை கொடுக்கப்பட்டவர்கள் என்று அழைக்கிறது. ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), 'இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்" எனக் கூறுவார். 'நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்." (ஸ_றா அல்-ஹாக்கா :19-20)


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 6 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Wed Mar 16, 2011 8:37 am

மரணத்திலிருந்து பாடம் படிக்க தவறியவர்களின் நிலை

பெரும்பாலனவர்களிடம் மரணத்தைபற்றி சரியான சிந்தனை இல்லை. “ வாழ்வின் முடிவு மரணம்” என்பது அதில் ஒன்று. ஒருபடி முன் சென்றால் மரணம் என்பது அடுத்த வாழ்வின் ஆரம்பம் என்பதை புரிந்து கொள்வான். இந்த மறைமுகமான தோற்றமானது ஏக இறைவனை மறுப்பவர்களை குறுகிய காலத்திற்குள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தூண்டுகிறது. அதனால் தான் மறுமை பற்றி உண்மைகளை உணராதவர்கள் இவ்வுலக வாழ்நாளிலேயே அனைத்தையும் அனுபவித்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து அறியாமல் அவர்களுடைய அனைத்து ரசனைகளையும் ருசித்து விட வேண்டும் என்று துடிக்கிறார்கள். இவர்கள் இவ்வாறு நடந்மு கொள்ள காரணம் மரணத்தோடு இவ்வுலகின் அனைத்து சுகங்களும் முடிந்து விடும் என்ற சிந்தனையே.. அவர்களுக்கு இன்னும் பல காலம் உயிருடன் இருப்பார்கள் என்ற சிந்தனையின் காரணமாக நீண்ட கால திட்டங்களை தீட்டுகிறார்கள். அவர்கள் தங்களை அறிவாளிகளாக நினைப்பதோடு இறைவனையும் மறுமையையும் உறுதியாக நம்பி அதற்காக தங்களை தயார்படுத்துகின்ற நம்பிக்கையாளர்களை முட்டாள்கள் என்று கருதுகிறார்கள். இது சாத்தானால் மனிதனை ஏமாற்ற கையாளும் பழமையான முறையாகும். இந்த பழமையான முறையை எச்சரிக்கும் விதமாக இறைவன் இவ்வாறு கூறுகிறான்.

நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான். (ஸ_றா முஹம்மது : 25)

ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான் அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான் மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. (ஸ_றா அன் நிசா: 120)

வாழ்கை நிரந்தரமானது என்று அதிஷ்டம் இவ்வுலகில் இருக்குமானால் ஏக இறைவனை மறுப்பவர்கள் வாழ்வை போட்டியாகவே கருதுவார்கள். அவர்களது வாழ்கை முழுவதும் குழந்தைகளிலும், உடமைகளிலும் பெருமை அடைவார்கள். இந்த பெருமை அவர்களுக்கு போலி கௌரவத்தை கொடுப்பதால் மறுமைனய சிந்தனை விட்டும் அவர்கள் முழுமையாக விலகி சென்று விட்டார்கள். அவர்களின் பெரும் தவறின் காரணமாக அவர்களின் கடைசி இலக்கு எவ்வாறு அமையும் என்று குர்ஆன் விளக்குகிறது. அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்? அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல அவர்கள் (இதை) உணர்வதில்லை. (ஸ_றா அல்-மூஃமின் : 55-56.)

அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்கள் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம் அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான். (ஸ_றா அத்-தவ்பா: 55)

இறைவன் மனிதனுக்கு மரணத்தையும் மறுமையையும் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதற்காகவு பல எச்சரிக்கைகளையும் இறைசெய்திகளையும் கொடுக்கிறான். இன்னொரு வசனத்தில் இறைவன் மனிதனுக்கு சோதனைகள் எச்சரிக்கையாகவே கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறான் ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்" என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா செய்து மீள்வதுமில்லை(அது பற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை. (ஸ_றா அத்-தவ்பா : 126)

உண்மையாகவே மக்களில் பெரும்பான்மையானவர்கள் பல சோதனைகளை சந்திக்கிறார்கள். அதனால் அவர்கள் அடிக்கடி பாவ மன்னிப்பு கேட்டு நல்லுணர்ச்சி பெறுகின்றனர். இந்த செயல் நடப்பது அரிது அதாவது வருடத்தில் ஒருமுறையோ அல்லது இருமுறையோ நடக்கும். இதற்கு மாற்றமாக சிறியதாக அன்றாடம் நடைபெறுகின்ற தொல்லைகளாகவும் இருக்கலாம். மனிதன் மரணங்களையும், காயங்களையும், விபத்துகளையும் தினமும் சந்திக்கிறான். பத்திரிக்கைகள் மரணசெய்திகளாலும் மரண அறிவித்தல்களாலும் நிறைந்து காணப்படுகின்றன. இத்தகைய நிகழ்வுகளோடு இயற்கை அழிவுகள் எந்நேரமும் வந்து மனிதனது பரீட்சை நேரத்தை முடித்துவிடும் என்று நினைக்க வேண்டும். இத்தகைய விழிப்புணர்வு ஒருவனை இறைவனை ஞாபகமூட்டி அவனிடத்தில் அடைக்கலம் தேடி அவனிடத்தில் பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 6 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Wed Mar 16, 2011 8:39 am

சோதனைகளின் மூலம் பாடம் கற்று கொள்ளும் நம்பிக்கையாளன் உறுதியடைகிறான். இருப்பினும் இதே நிகழ்வு ஏக இறைவனை மறுப்பவர்களுக்கு வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். மரண பயத்தால் திகிலடைந்து மரணத்தின் உண்மைகளை யோசிக்காமல் அதனை மறக்க முற்படுவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் பாதுகாப்பு தேடுகிறார்கள். இருப்பினும் இத்தகைய ஏமாற்றும் முறை அவர்களுக்கு கேடு விளைவிக்கும். காரணம் இறைவன் அவர்களது நேரம் வரும் வரை அவர்களை விட்டுவைக்கிறான். இந்த தவணை அவர்கள் சிந்திப்பதற்கு மாற்றமாக அவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. (ஸ_றா அன் நஹல் :61).; குர்ஆனில் வேறொரு இடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறது.

இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம் (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப்படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.”(ஸ_றா ஆல-இம்றான்: 178) தனது நெருங்கியவரின் மரணத்தின் மூலம் நல்லுணர்ச்சி பெறாத சிந்தனையற்ற மனிதன் அவன் மரணத்தை நெருங்கும் சந்தர்பத்தில் இறைவனிடத்தில் மிகவும் அருளை வேண்டியவனாக மாறுவான். அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான் (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)" என்று எண்ணுகிறார்கள் அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், 'நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்" என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள். (ஸ_றா யூனூஸ் : 22)

இத்தகைய மக்கள் அவர்களது சோதனைகள் நீக்கப்பட்ட பின்னர் அவர்களது பழைய நிலைக்கு மாறிவிடுகின்றனர். அவர்களுடைய வாக்குறுதிகளை மறந்து சிறிதளவேனும் மனசாட்சியின்றி போலியான நிலையில் சென்றுவிடுகின்றனர். இத்தகைய பொய்யானவைகள் நியாய தீர்ப்பு நாளில் அவர்களுக்கு எதிராக சாட்சியமளிக்கும்.

அவன் அவர்களைக் காப்பாற்றி விட்டதும் அவர்கள் பூமியின் மேல் நியாயமில்லாது அழிச்சாட்டியம் செய்கிறார்கள் மனிதர்களே! உங்கள் அழிச்சாட்டியங்கெல்லாம் உங்களுக்கே கேடாகமுடியும் உலக வாழ்க்கையில் சிறிது சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் இதன் பின்னர் நம்மிடமே நீங்கள் திரும்ப வர வேண்டியதிருக்கிறது. அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு நாம் அறிவிப்போம். (ஸ_றா யூனூஸ் : 23)

மரணத்தின் போதும் மனிதன் இதே முறையை கையாள முற்படுவான் இருப்பினும் அவனுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது. மேலும், இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், 'எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டும் கொண்டோம் - ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாய் நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்" என்று சொல்லும்போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்). மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம் ஆனால் 'நான் நிச்சயமாக நரகத்தை - ஜின்களையும், (தீய) மனிதர்களையும் - ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்" என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது. ஆகவே, உங்களுடைய இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்திருந்ததின் (பலனை) அனுபவியுங்கள், நிச்சயமாக நாமும் எங்களை மறந்து விட்டோம் மேலும் நீங்கள் செய்த (தீ) வினையின் பயனாக என்றென்றும் நிலையான வேதனையை அனுபவியுங்கள்' (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்). (ஸ_றா அஸ் ஸஜதா : 12-14)


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 6 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Wed Mar 16, 2011 8:44 am

இந்த பயனற்ற முயற்சிகள் நரகத்திலும் தொடரும்:

இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: 'எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்" என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) 'சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார் ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள் ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை" (என்று கூறுவான்). (ஸ_றா அல்-பாதிர் : 37)

மறுமையில் இத்தகைய பயனற்ற முயற்சிகளும்அதனது வேதனையான முடிவும் ஏற்பட காரணம் பூமியில் மனிதனின் வாழ்வும் அதன் தாப்பரியங்களின் உண்மைiயாண நிலையை அவனால் புரிந்து கொள்ளாததன் விளைவாகும். நம்பிக்கை கொள்ளாதவன் அவனை சுற்றி நடப்பவைகளை கொண்டு நல்லுணர்ச்சி பெறுவதில்லை. இறைவனால் அனுப்பப்பட்ட எச்சரிக்கைகளை செவிசாய்பதில்லை. அவனது மனசாட்சி குரலை அசட்டை செய்து அல்லது அவற்றை மதிக்காமல் மரணத்தை நடக்க கூடாத ஒன்றாக பார்கிறான். அவன் அவனது ஆன்மாவின் பிழையான யோசனைகளை மதித்து கட்டுப்பட்டு .இறைவனின் திருப்தியை பெற முயல்வதில்லை. இவை அனைத்தும் மரணம் சடுதியாக வந்து அவனை பிடித்து கொள்ளும் போது மேற்கூறிய வசனங்களில் குறிப்பிட்டதை போன்று அவன் மோசமான சூழ்நிலையில் மாட்டிக்கொள்வான். ஆகவே ஒருவனுக்கு மரணம் வரு முன்னர் அவனது மறதி எனும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் மரண நேரமானது அவனுக்கு திருந்துவதற்கான எந்த சந்தர்பத்தையும் கொடுக்காது: உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள் (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்) 'என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான். ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான். (ஸ_றா அல்-மூனாபிகூன் : 10-11 )

அறிவுடையவர்கள் மரணத்தை அதிகமாக சிந்திக்கவேண்டும். அதன் சிந்தனையை தவிர்க்க முயலகூடாது. இதன் மூலமே இறைவனது விருப்பப்படி செயல்பட முடியும். அவனது ஆன்மாவின் மோசமான பக்கத்தை போலியான வாழ்கையை கொண்டு ஷைத்தான் ஏமாற்றமால் தடுக்க முடியும.;. உண்மையில் உலக வாழ்கையை ஒருவனது முக்கிய குறிக்கோள்களாக மாற்றுவது மக்களுக்கு மிகப்பெரும் ஆபத்தாகும். இதை பற்றி எமது தூதர் கூறும்போது “ எமது உலக விடயங்கள் எமது முக்கிய குறிக்கோள்களாக மாறாமல் எம்மை காத்துகொள்ள வேண்டும் என்றார்கள். .(அப்துல்லா இப்னு உமர் அறிவிக்கிறார். நூல் திர்மிதி :783)


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 6 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by Manik Wed Mar 16, 2011 11:05 am

நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 6 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 16, 2011 2:57 pm

அருமையான பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 6 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 6 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum