ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம், உயிர்தெழுதல், நரகம்

+4
பிரகாஸ்
மீனு
ரூபன்
சிவா
8 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Empty மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Mon Sep 21, 2009 3:32 am

First topic message reminder :



ஹாருன் யஹ்யா


அறிமுகம்

மரணம்… அது எந்த நேரத்திலும் ஏற்படலாம். யாருக்கு தெரியும். நீங்கள் இந்த கட்டுரையை வாசித்து கொண்டு இருக்கும் இந்த வேளையிலும் ஏற்படலாம். அல்லது நீங்கள் எதிர் பார்க்கும் நேரத்திற்கு முன்பாகவும் ஏற்படலாம்.

இந்த வரிகள் - உங்களை மரணம் சுவைப்பதற்கு முன்பான கடைசி சந்தர்பமாகவோ அல்லது கடைசி நினைவூட்டலாகவோ அல்லது கடைசி எச்சரிக்கையாகவோ இருக்கலாம். நீங்கள் இந்த வரிகளை வாசிக்கும் போது அடுத்த மணித்தியாளத்தில் நீங்கள் உயிருடன் இருப்பீர்களா என்று உங்களுக்கு தெரியாது. அவ்வாறு நீங்கள் உயிருடன் இருந்தாலும் உங்களுக்கு இன்னொரு மணித்தியாளத்தை உத்தரவாதம் அளிக்க யாராலும் முடியாது. உங்கள் வாழ்கையை ஒரு மணித்தியாளத்தை கொண்டோ அல்லது ஒரு மணித்துளியை கொண்டோ உத்தரவாதம் அளிக்க முடியாது. நீங்கள் இந்த புத்தகத்தை முழுமையாக படித்து முடிப்பீர்களா என்று உங்களுக்கு தெரியாது. மரணம் அது எந்த நேரத்திலும் உங்களை வந்தடையும். அது நீங்கள் மரணத்தை பற்றி சிந்திப்பதற்கு சில துளிகளுக்கு முன்பாக வந்தடையும்.

நீங்கள் மரணமடைவது உறுதி. நீங்கள் நேசிப்பவர்களும் மரணத்தை சுவைத்தே தீர்வார்கள். நீங்கள் அவர்களுக்கு முன்பு அல்லது அவர்கள் உங்களுக்கு முன்பாகவோ மரணிப்பார்கள். இன்றிலிருந்து 100 ஆண்டுகளுக்கு பின்பு உங்களுக்கு தெரிந்த ஒரு ஆத்மாவும் இந்த உலகில் இருக்காது..

மனிதனின் எண்ணத்தை எல்லையில்லா கனவுகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பாடசாலை கல்வியை முடித்து – கல்லூரி – பட்டம் – நல்ல தொழில் - திருமணம் - பிள்ளைகள் - நிம்மதியான வாழ்கை. ……இவைதான் மனிதனின் விரிந்த சாதாரண ஆசைகளாக உள்ளது. இவை தவிர மனிதனின் சந்தர்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப இன்னும் ஆயிரக்கணக்கான ஆசைகள் மனிதனில் விரிந்து காணப்படுகின்றன.

மனித வாழ்வில் நடைபெறும் சில உறுதியான நிகழ்வுகளில் மரணமும் ஒன்று. இது 100 வீதம் உறுதி. பல வருட விடா முயற்சியின் காரணமாக கல்லூரியில் இடம் பிடித்த மாணவன் வகுப்பறைக்கு போகும் வழியில் மரணமாகிறான். தொழிலை பெற்று கொண்ட ஒருவர் முதல் நாள் வேளைக்கு போகும் வழியில் மரணமாகிறார். புது மண தம்பதியரின் வாழ்கையை சாலை விபத்து பறித்து கொள்கிறது. தனது நேரத்தை சேமிக்கும் நோக்கில் விமானத்தில் பறக்கும் வியாபாரி ஒருவர்-அந்த விமானமே அவரது வாழ்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை அறியமாட்டார்.

அத்தகைய சந்தர்பங்களில் ஆசைகள் நிறைவேறாமல் தேங்கி நிற்கின்றன. அவர்கள் அவர்களது ஆசைகளை ஒருபோதும் நிறைவேறாது என்ற நிலையில் விட்டு விட்டு - இனிமேல் ஒருபோதும் திரும்ப முடியாத ஒரு இலக்கை நோக்கி செல்கிறார்கள். அந்த இடம் அவர்கள் ஒருபோதும் நினைத்து பார்த்திடாத இடமாக இருக்கிறது. பல வருடங்கள் பல மணிநேரங்கள் செலவழித்து அவர்கள் தீட்டிய கற்பனைகள் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. ஆனால் அவர்கள் நிச்சயமாக நடக்க இருக்கும் ஒன்றை சிந்திக்க மறந்து விட்டார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் சிந்திக்கும் மனசாட்சியுள்ள மனிதன் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்? உறுதியாக நடக்க இருக்கும் ஒன்றுக்கா அல்லது சில வேளை நடக்ககூடும் என்ற ஒன்றுக்கா? ஆனாலும் பெரும்பான்மை மக்கள் உறுதியாக நடக்கும் என்று கூறமுடியாத ஒன்றுக்கே முன்னுரிமை வழங்குவதை நாம் பார்க்கிறோம். அவர்கள் வாழ்வின் எந்த நிலையில் இருந்த போதிலும் அதை விட சிறந்த வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடினமாக சிந்திக்கிறார்கள்.

மனிதன் சாகா வரம் பெற்றவனாக இருந்தால் அவனது ஆசைகளை நியாயப்படுத்தலாம். உண்மை என்னவென்றால் ஆசைகள் அனைத்திற்கும் மரணம் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. ஆகவே நடக்கவோ அல்லது நடக்காமல் போகக்கூடிய ஆசைகளுக்காக எமது முழு கவனத்தையும் செலுத்தி உறுதியாக நடக்ககூடிய மரணத்தை பற்றி சிந்திக்காமல் விடுவது மிகப்பெரும் மடமையாகும்.

இதற்கு காரணம் மனிதன் அவனது மனதை அடக்க முடியாத ஆசைகளை கொண்டு அடிமை படுத்தி இருப்பதால் இந்த தெளிவான உண்மையை கவனிக்காமல் விட்டுவிடுகிறான்.

இவ்வாறான சூழ்நிலையில் அவர்கள் தங்களது உண்மையான வாழ்கை மரணத்தின் பிறகு தொடங்குகிறது என்ற உண்மையை விளங்கி கொள்வதில்லை. அதற்காக தங்களை தயார் படுத்திக்கொள்வதுமில்லை. அதனால் அவர்கள் மீண்டும் உயிர்பெற்று எழுந்ததும் நரகத்தை தவிர வேறு எங்கும் செல்வதுமில்லை. அது அவர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட இடமாகும். இந்த புத்தகம் எழுதப்பட்ட நோக்கம் - மனிதன் சிந்திக்க மறுக்கும் ஒன்றை சிந்திக்க வைக்கவும் - நிச்சயமாக சத்தியமாக நடக்க இருக்கும் ஒன்றை பற்றி எச்சரிப்பதற்குமாகும். அதை சிந்திக்க மறுப்பது எந்த வகையிலும் தீர்வாக அமையாது.


Last edited by சிவா on Wed Mar 16, 2011 8:35 am; edited 1 time in total


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Wed May 26, 2010 4:09 am

ஆகவே முன்பு கூறியது போன்று மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க வேண்டும். குர்ஆனில் பல இடங்களில் அவநம்பிக்கையாளர்கள் மறுமையை மறுப்பதும் அந்த உண்மையை அறியாமல் இருப்பதை பற்றியும் விளக்குகிறது. உண்மையில் இந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் இறைவன் இருக்கிறான் என்பதை நம்புகிறார்கள். இருப்பினும் அவர்களை வழிதவற செய்தது அவனது தன்மைகளை பற்றிய சந்தேகங்களேயாகும். சுpலர் முதலில் இறைவன் அனைத்தையும் படைத்து மனிதனை அவனது சொந்த விருப்பத்திற்கு வாழ விட்டு விட்டான் என்று நம்புகிறார்கள். வேறுசிலர் இறைவன் மனிதனை படைத்தான் ஆனாலும் மனிதன் தனது விதியை நிர்ணயம் செய்கிறான் என்று நம்புகிறார்கள். இன்னொரு கூட்டத்தினர் இறைவனுக்கு மனிதனில் மனதிலுள்ள சிந்தனைகளையும் இரகசியங்களையும் புரிந்து கொள்ள முடியாது என்று நம்புகிறார்கள். வேறுசிலர் இறைவன் இருக்கிறான் என்று நம்பிய பொழுதும் மதத்தை ஏற்க மறுக்கிறார்கள்.

கடைசியாக கூறப்பட்ட கருத்துடையவர்களை பற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை ஏனெனில் அவர்கள், 'அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை" என்று கூறுகின்றனர் அவர்களிடத்தில் நீர் கூறும்: 'பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா கொண்டுவந்தாரே அந்த வேத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள் பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள் (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்." (நபியே! மேலும்) நீர் கூறுவீராக: 'அல்லாஹ்தான் (அதை இறக்கிவைத்தான்)" பின்பு அவர்களைத் தம் வீணான (தர்க்கத்)தில் விளையாடிக்கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக. (ஸ_றா அல்-அன்ஆம்: 91)

அதேநேரம்இ இறைவனை மறுக்காத போதிலும் இ றைவனை அவனது உண்மையான தன்மைகளை கொண்டு நம்பாமலிருப்பது அதாவது மறுமையை மறுப்பதுஇ நம்பிக்கையின்மை என்றே அழைக்கப்படும். உண்மையில் இறைவன் இருக்கிறான் என்பதை மறுக்கும் மக்களில் சிலர் அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளில் சந்தேகம் கொண்டுள்ளனர். அதனால் தான் குர்ஆனில் இறைவனை மறுப்பவர்களை பற்றி அவ்வளவாக குறிப்பிடப்படவில்லை. அதேநேரம் இறைவனுக்கு இணைகற்பித்தவர்கள் மரணித்த பின் மீண்டும் எழுப்பப்படுவதை மறுத்தவர்கள் நியாய தீர்ப்பு நாள் சுவர்க்கம் நரகம் மற்றும் மறுமை சம்பந்தப்பட்ட அனைத்து உண்மைகளையும் மறுப்பவர்களை பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுமை என்பது எமது ஐம்புலன்களாலும் உணரமுடியாத உண்மையாகும். எமது மனம் அதை இலகுவில் அறியக்கூடியவகையில் இறைவன் எண்ணிலடங்காத சான்றுகளை ஏற்படுத்தி வைத்துள்ளான். உண்மையில் இவ்வுலக பரீட்சையில் வெற்றியடையும் பொருட்டு ஒருவன் அவனது ஐம்புலன்களை கொண்டு பாராமல் அவனது மனசாட்சியையும் அறிவையும் கொண்டு பார்க்க வேண்டும். சாதாரண மனிதன் தானும் தன்னை சுற்றியுள்ளவைகளும் தற்செயலாக வரவில்லை மாறாக பேரறிவுள்ள பெரும் சக்தியுடைய அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய படைப்பாளனின் படைப்பு என்பதை இலகுவில் விளங்கி கொள்வான். ஆகவே மறுமையை படைப்பதும் இறைவனுக்கு இலகுவானது என்பதை அறிந்து கொள்வான். மேலும். இறைவனது அறிவும் நீதியும் மறுமை இருப்பதற்கான என்பதனை அவசியத்தை அவன் உணாந்து கொள்வான்.

இவை இவ்வாறு தெளிவாக இருந்தபோதிலும் இறைவனது கட்டளைகளுக்கு எதிராக செயல்பட்டவன் மரணத்திற்கு பிறகு உயிர் பெற்று எழுவதை விரும்பமாட்டான். தனது வாழ்வில் வீணாண மனோ இச்சைகளை பின்பற்றிய ஒருவன் இறைவனுக்கு முன்னால் நின்று அவனது வாழ்நாளில் அவன் செய்த காரியங்களை பற்றி கணக்கு கொடுக்க விரும்புவதில்லை. அதனால் தான் இறைவன் இருக்கிறான் என்பதை நன்கு அறிந்த பின்பும் அவனது மனசாட்சியை அடக்கி தன்னை தானே ஏமாற்றி கொள்கிறான். இத்தகைய நிலைபாட்டை ஏற்றுக்கொண்ட அவநம்பிக்கையாளன் மீண்டும் உயிர் பெற்று எழுதல் மற்றும் மறுமை ஆகியவற்றை மறுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் எத்தகைய நீண்ட சிந்தனையுமின்றி அறிவற்ற பகுத்தறிவற்ற வாதங்களை முன்வைக்கின்றான்.


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Wed May 26, 2010 4:10 am

மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான் 'எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?" என்று. (ஸ_றா யாஸீன் : 78 )

இருப்பினும் இத்தகைய கேள்லி உண்மையிலிருந்து தப்பித்து தன்னை தானே ஏமாற்றி கொள்ள உதவும்.

அதற்கான விடை


'முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக! (ஸ_றா யாஸீன் : 79)\
இத்தகைய வாதங்களை கூறுவது அவநம்பிக்கையாளர்களின் தன்மை என்று குர்ஆனில் இறைவன் தெளிவாக்குகிறான் எவர்கள் மறுமையின் மீது ஈமான் கொள்ளவில்லையோ அவர்களுக்கே கெட்ட தன்மை இருக்கிறது - அல்லாஹ்வுக்கோ மிக உயர்ந்த தன்மை இருக்கிறது மேலும் அவன் மிகைத்தவன் ஞானம் மிக்கவன். (ஸ_றா அன்-நஹல் : 60 )

மறுபக்கத்தில் சிலர் அவர்களது நிலைபாட்டை நியாயப்படுத்த சில விளக்கங்களை எடுத்துறைப்பார்கள். 'அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள். (ஸ_றா அன்-நாஸியா : 12 )

உண்மையில் இவ்வாறு தர்க்கம் செய்த போதிலும் அவர்களது வாழ்வின் குறிக்கோள்களுடன் மறுமை சம்பந்தப்படாமல் இருப்பதை ஏற்று கொள்ள தயங்குவதில்லை.

ஏக இறைவனை நிராகரிப்பவர்கள் அவர்களது அறிவை அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில் சுருக்கி கொள்கிறார்கள். அவர்களது வாதங்களின் காணப்படும் மடமையை பார்த்த பின்பும் இந்த வாதங்களை பிடிவாதமாக பின்பற்றுவதுடன் அதில் மனரீதியான திருப்தியடையும் பொருட்டு நீண்ட பயணம் மேற்கொள்கின்றனர்.

இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும் எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை. (ஸ_றா அன்-நஹல் :38)

அவர்களது விருப்பங்களையும் ஆசைகளையும் அவர்களது கடவுள்களாக ஏற்ற இந்த மக்கள் அவர்களது மனசாட்சியை சமாதானப்படுத்தி அதில் தஞ்சமடைகிறார்கள். இத்தகைய மக்கள் மறுமையை மறுக்கும் இம்மக்களை பற்றி இறைவன் இவ்வாறு விவரிக்கிறான்.


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Wed May 26, 2010 4:10 am

நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம் அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள் அவர்களுக்குக் கண்கள் உண்டு ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள் இவர்கள் தாம்(நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். (ஸ_றா அல்-ஆரப் : 179 )

குர்ஆனின் வேறுபகுதியில் இம்மக்களின் நிலை பற்றி இவ்வாறு விளக்குகிறான். (நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்:

'நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது நாம் இறக்கிறோம் ஜீவிக்கிறோம் 'காலம்" தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை" என்று கூறுகிறார்கள் அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை. (ஸ_றா அல்-ஐதியா : 23-24 )


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Wed May 26, 2010 4:12 am

இவ்வுலக வாழ்வின் உண்மை நிலை

அவநம்பிக்கையாளர்கள் சில விடயங்களை அறிவின் மூலம் புரிந்து கொள்வது முடியாத ஒன்று என்று வாதிடுகிறார்கள். அவற்றில் மரணத்தின் பின்பு உயிர் பெற்று எழுதல் மறுமை ஆகியவை அடங்கும்.

நாம் இவ்விடயங்களை தூக்கத்தோடும் கனவோடும் ஒப்பிடலாம். மரணத்தை பற்றி சிந்திக்காமல் இருக்கும் ஒருவன் மரணத்தின் பின்பு உயிர் பெற்று எழுவதை கடுமையாக ஆட்சேபிக்கிறான். உண்மையில் தினமும் இரவில் மரணத்தை சுவைக்கும் அவன் அதே போன்று காலையில் கண்விழித்து மரணத்திலிருந்து உயிர் பெற்று எழுவதை பற்றிய அறியமாட்டான். தூக்கத்தை பற்றிய குர்ஆனின் கருத்துகள் இந்த விடயத்தை பற்றி புரிந்து கொள்வதற்கு உதவுகிறது. இறைவன் தூக்கத்தை பற்றி குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்.

அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான் மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (ஸ_றா அஸ்-ஸுமர்: 42)

அவன் தான் இரவில் உங்களை மரிக்கச் செய்கிறான் இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான் மீண்டும் உங்களைக் குறிப்பட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான் பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான். (ஸ_றா அல்-அன்ஆம் : 60)

மேற்கூறிய வசனங்களில் தூக்கத்தை மரணத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. மரணத்திற்கும் தூக்கத்திற்குமிடையே எவ்வித வேறுபாடும் கிடையாது. அப்படியென்றால் மரணத்தோடு ஒப்பிடப்படும் தூக்கத்தின் போது என்ன நடக்கிறது?

விழித்திருக்கும் போது மனித உடலிலுள்ள ஆன்மா தூக்கத்தின் போது வெளியேறுகிறது. மறுபுறத்தில் கனவின் போது ஆன்மா முழுவதும் வித்தியாசமான உடலை பெற்று முழுவதும் வித்தியாசமான உணர்வுளை பெறுகிறது.


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Wed May 26, 2010 4:13 am

இவை களவு என்று எம்மால் பிரித்தறிய முடியாது. நாம் பயம் கவலை வலி உணர்ச்சி வசப்படுவது மற்றும் சந்தோஷமடைவது ஆகியவற்றை உணர்கிறோம். எமது கனவின் போது நடைபெறுவது உண்மை என்று உறுதியாக நம்பி நனவின் போது கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை கனவிற்கும் கொடுக்கிறோம்.

ஒருவரது கனவின் போது வெளியிலிருந்து நாம் குறிக்கிட்டு அவர் காண்பது மாயை அல்லது வெறும் உணர்வுகள் என்று கூறினால் அவர் இந்த எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் விடுவதுடன் மற்றவர்கள் அவரை கேலி செய்கிறார்கள் என்று நினைப்பார். இருப்பினும் உண்மையில் இந்த உணர்வுகளுக்கு வெளி உலகத்துடன் எவ்வித் தொடர்பும் இல்லை. நாம் கனவில் காண்பவைகள் அனைத்தும் இறைவனால் எமது ஆன்மாவிற்கு காட்டப்படும் காட்சிகளும் உணர்வுகளுமாகும். நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டிய மிக முக்கிய உண்மை என்னவென்றால் இதே இறைசட்டங்கள் நாம் விழித்து எழுந்த பின்பும் நடைமுறைபடுத்தப்படுகிறது. இறைவன் குர்ஆனில் கனவுகள் அவனது எண்ணப்படி கட்டுப்படுத்தப்படுகிறது என்று கூறுகிறான்.:” நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான் இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் - இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன”. (ஸ_றா அல்-அன்பால் : 44). துpனசரி வாழ்வின் போதும் இதே சட்டங்கள் அமுல்படுத்தப்படுகிறது என்பதை தெளிவாக விளங்குகிறது. உண்மை என்னவென்றால் உணர்வுகள் மற்றும் காட்சிகள் அனைத்தும் இறைவனது விருப்ப்படியே படைக்கப்படுகிறது . அதற்கு அப்பால் வெளி உலகம் என்பது கிடையாது. இதை பின்வரும் வசனம் கூறுகிறது.

(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர் இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான் நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது. (ஸ_றா ஆல-இம்றான் : 13)

கனவை போன்று தினசரி வாழ்கையில் நாம் காணும் வெளியுலக பொருட்கள் அனைத்தும் இறைவனால் எமது ஆன்மாவிற்கு காட்டப்படும் காட்சிகளாகும். அத்தோடு உணர்வுகளையும் உணர செய்கிறான். எமது உடலோடு சம்பந்தப்பட்ட காட்சிகளையும் செயற்பாடுகளையும் அதை போன்று மற்றவர்களின் செயல்களையும் நாம் காண்பது இறைவன் எமக்கு அதனோடு தொடர்புடைய காட்சிகளை ஒவ்வொரு காட்சியாக காட்டுவதாலாகும். இதை குர்ஆன் இவ்வாறு விளக்குகிறது.


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Wed May 26, 2010 4:16 am

(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான் (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான் முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான் நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான். (ஸ_றா அல்-அன்பால் : 17)


இதே இறை நியதியின் படி மறுமையும் அதனுடன் தொடர்புடைய காட்சிகளும் உணர்வுகளும் படைக்கப்படுகின்றன. மரணம் இவ்வுலகத்துடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்து விடுகிறது. ஆன்மா ரந்தரமானது ஏனெனில் இறைவன் அதில் தனது உயிரை ஊதியுள்ளான். இந்த வாழ்கை தொடர்பான மரணம் ண்டும் உயிர் பெற்று எழுதல் மறுமை வாழ்கை அனைத்து உணர்வுகளையும் இந்த ஆன்மா உணர்கிறது.


அதனால் தான் அடிப்படை சிந்தனை அடிப்படையில் இவ்வுலகம் படைக்கப்பட்ட விதத்திற்கும் சுவர்க்கம் மற்றும் ரகம் படைக்கப்பட்ட
விதத்திற்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.. அதைபோன்று இவ்வுலகத்திலிருந்துமறுமைக்கு செல்வதற்கும் தூக்கத்திலிருந்து எழுந்து அன்றாட வாழ்கையை தொடர்வதற்குமிடையே எந்த வேறுபாடும் இல்லை.



மீண்டும் உயிர் பெற்று எழுந்தவுடன் புது உடலுடன் ஒரு புது வாழ்கை மறுமையில் ஆரம்பமாகிறது. சுவர்க்கம் மற்றும் நரகம் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஆன்மாவிற்கு காட்டப்பட்டவுடன் ஒவ்வொரும் அதை அனுபவிக்க ஆரம்பிப்பார்கள். எல்லையற்ற காட்சிகளையும் சப்தங்களையும் வாசனைகளையும் சுவைகளையும் மற்றும் இவ்வுலக வாழ்கை சம்பந்தமான அனைத்தையும் படைக்ககூடிய வல்லமையுடைய இறைவன், இதை முறையில் சுவர்க்கம் மற்றும் நரகம் சம்பந்தமான நிரந்தர காட்சிகளையும் உணர்வுகளையும் படைப்பான். இவற்றை படைப்பது இறைவனுக்கு மிக எளிது.


(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான் அதனிடம் 'குன்" - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (ஸ_றா அல்-பகறா : 117)


இன்னொரு உண்மை என்னவென்றால் கனவை விட இவ்வுலக வாழ்கை எவ்வளவு வித்தியாசமோ அதை போன்று இவ்வுலக வாழ்கை விட மறுமை வித்தியாசமாக இருக்கும். அதை போன்று இவ்வுலக வாழ்கையோடு கனவை ஒப்பிடும் போது கனவு எவ்வளவு குறுகியதோ அதை போன்று இவ்வுல வாழ்கை மறுமை வாழ்வோடு ஒப்பிடபடும். முன்னர் கருதியது போன்று நேரம் நிலையானது அல்ல மாறாக அது தொடர்புடைய ஒன்று. இந்த உண்மையை இன்றைய விஞ்ஞானம் ஏற்று கொள்கிறது. கனவின் போது பல மணி நேரம் நடைபெற்றதாக கருப்படும் நிகழ்வுகள் உண்மையில் செவவிட்டது சில வினாடிகளே. பெரிய கனவுகள் என்று கூறப்படுபவைகளும் சில நிமிடங்களே எடுத்துக்கொள்ளும். இருப்பினும் கனவு கண்டவர் தான் முழுநாளும் அதற்காக செலவிட்டதாக நினைத்து கொள்வார். நேரத்தை பற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Wed May 26, 2010 4:19 am

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும் (ஸ_றா அல்-மாரிஐ; : 4) வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான் ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். (ஸ_றா அஸ்-ஸஐதா : 5)

மறுமை வாழ்வோடு சம்பந்தப்பட்ட நேரத்தோடு ஒப்பிடும் போது இவ்வுலகில் நீண்ட காலம் வாழ்ந்த மனிதனின் வாழ்கை மிக மிக குறுகியதாகும். மறுமையில் கேள்வி கணக்கின் போது நடைபெறும் உரையாடல் இதற்கு சிறந்த உதாரணமாக குறிப்பிடலாம்.

'ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்?" என்று கேட்பான் 'ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக!" என்று அவர்கள் கூறுவார்கள'ஒரு சொற்ப காலம் தவிர (பூமியில் அதிகம்) நீங்கள் தங்கவில்லை. நீங்கள் (இதை) அறிந்திருந்தால்!" என்று (இறைவன்) கூறுவான். 'நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?" (என்றும் இறைவன் கேட்பான்.) -(ஸ_றா அல்-முஃமினூன் : 112-115) ஆகவே நிரந்தர வாழ்கைக்கு பதிலாக இந்த தற்காலிக வாழ்கையை தேர்ந்தெடுப்பது மடமையாகும். மறுமையோடு இவ்வுலக வாழ்வை ஒப்பிடப்படும் மிக குறுகியதாக காணப்படுவதை ஒருவன் சிந்தித்தால் அவன் மேலும் தெளிவடைவான்.

சுருங்க கூறுவதானால், பொருள் என்றும் அதற்கு தோற்றம் இருப்பதாக நாம் நினைப்பவைகள் அனைத்தும் இறைவனால் மனித ஆன்மாவிற்கு காட்டப்படும் உணர்வுகளாகும். மனிதன் அவனது உடல் அவனுக்கு சொந்தம் என்று நினைக்கிறான். உண்மையில் உடலும் மனிதனின் ஆன்மாவிற்கு இறைவனால் காட்டப்பட்ட காட்சிகளே தவிர வேறு ஒன்றுமில்லை. இறைவன் நினைத்த நேரத்தில் காட்கிகளை மாற்றுகிறான். உடலின் காட்சி திடீரென மறையும் போது ஆன்மா புது காட்சிளை காணும். வேறுவகையில் கூறுவதானால் ஒருவன் மரணித்தவுடன் கண்களை மறைத்துள்ள திரை நீக்கப்பட்டு அவன் நினைத்ததை போன்று மரணம் என்பது மறைவது இல்லை என்பதை புரிந்து கொள்வான். இதை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.


'எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?" என்று அவர்கள் கேட்பார்கள் அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்). (ஸ_றா யாஸீன் : 52)


இதிலிருந்து அவநம்பிக்கையாளன் மிகப்பெறும் கவலை கொள்வான்- கவலைகளிளேயே மிகப்பெரியது.


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Wed May 26, 2010 4:28 am

இந்த உலகின் தற்காலிக வாழ்கை

மனிதன் அவனது உடலை எந்நேரமும் சுத்தமாக வைத்து கொள்ள அதிக நேரங்களை செலவிடுவது ஏன் என்று நீங்கள் எப்போதவது சிந்தித்து பார்ததுண்டா? அசுத்தமான உடல்இ துர்வாடை வீசக்கூடிய வாய், பிசுபிசுப்பான சருமம் அல்லது முடி போன்ற நிலைகள் ஏற்படுவது ஏன்? மனிதனின் உடலிலிருந்து நாற்றம் ஏற்படுவது ஏன்?

மனிதனை போலல்லாது தாவரங்கள் மிகவும் சிறப்பான நறுமணத்தை கொண்டுள்ளது. ரோஐ அல்லது வேறு எந்த பூவோ அவை மண்ணில் வளர்ந்து தூசியான அசுத்தமான சூழ்நிலையில் இருந்த போதிலும் அவை துர்வாடை வீசுவதில்லை. மனிதன் எவ்வளவு கஷ்டப்பட்டு அவனது உடலை பராமரித்தாலும் அவனால் நிரந்தர நறுமணத்தை பெற்று கொள்ளவே முடிவதில்லை.

மனிதன் ஏன் இவ்வளவு பலவீனங்களை உடையவனாக படைக்கப்பட்டுள்ளான் என்பதை பற்றி சிந்தித்து பார்ததுண்டா? பூக்களில் நறுமணம் வீச செய்த இறைவன் மனிதனில் உடலை ஏன் நாற்றம் வரக்கூடியதாக படைத்தான்? மனிதனின் பலவீனம் நாற்றத்தோடு மட்டும் வரையறுக்கப்படவில்லை. மாறாக அவனுக்கு சோர்வடைந்து பசிக்கிறதுஇ தளர்வடைகிறான்இ காயமடைகிறான்இ நோய் ஏற்படுகின்றன…. இவை அனைத்தையும் சேர்ந்து சாதாரண மனிதன் உண்டாக்கிய போதிலும் அவற்றில் ஏமாற்றக்கூடியவைகளும் இருக்கின்றன. சிவ நேரம் உடலிலிருந்து துர்வாடை வீசாமலிருக்கலாம். அதை போன்று ஒருவர் தலை வலி அல்லது வேறு எந்த நோயாலும் பாதிக்க படாமலிருக்கலாம். இந்த பலவீனங்கள் தற்செயலமாக ஏற்படுவது இல்லை மாறாக இறைவனால் ஏற்படுத்தப்படுகின்றன. இறைவன் மனிதனை ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்காக வேண்டுமென்றே அவனை பலவீனமானவனாக படைத்துள்ளான்.

அந்த திட்டம் இரண்டு காரணங்களை உள்ளடக்கியுள்ளது : முதலாவது மனிதன் அவன் பலவீனமான இறைவனின் அடிமை என்பதை உணரவேண்டும். எவ்வித பலவீனமும் இல்லாமல் இருப்பது இறைவனின் தன்மை. அவனது அடிமைகள் முற்றுமுழுதாக பலவீனமானவர்கள் அவர்கள் அவர்களது படைப்பாளனின் பால் தேவையுள்ளவர்களாக இருக்கிறார்கள். இதை குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள் ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன் புகழுக்குரியவன். அவன் நாடினால், உங்களைப் போக்கிவிட்டு, (வேறொரு) புதியபடைப்பைக் கொண்டு வருவான். இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல. (ஸ_றா அல்பாதிர் : 15-17)

பலவீனமான மனித உடல் அவன் பலவீனமானவன் என்பதை மனிதனுக்கு தொடர்ச்சியாக நினைவூட்டுகிறது. மனிதன் தன்னை மேலானவனாகவும் தன்நிறைவானவனாகவும் நினைக்ககூடும். ஆனாலும் ஒவ்வொரு நாளும் அவன் செல்லும் கழிவறை மற்றும் அங்கு அவன் காண்பவை அவனது உண்மையான நிலையை அவனுக்கு தெரியப்படுத்தும். இரண்டாவது நோக்கம் இத்தகைய பலவீனங்கள் மனிதனின் வாழ்வு தற்காலிகமானது என்பதை நினைவூட்டுகிறது. காரணம் இந்த உலகில் இத்தகைய பலவீனங்கள் உடலுக்கு விசித்திரமானதாக இருக்கும்.

மறுமையில் சுவர்க்கவாசிகளுக்கு முழுமையான உடல் கொடுக்கப்படும். இந்த உலகிலுள்ள நிறைவற்ற பலவீனமான உடலானது நம்பிக்கையாளனின் உண்மையான உடலல்ல மாறாக குறிப்பிட்ட காலத்திற்கு தங்கியுள்ள தற்காலிகமான உருவமாகும். அதனால் தான் இந்த உலகில் உண்மையான அழகை பெறமுடியாதுள்ளது. மிகவும் வசீகரமான அழகான ஒருவன் கழிவறைக்கு செல்கிறான் அவனுக்கு வியர்கிறது காலையில் துர்வாடை வீசுகிறது பிறகு வலியால் அவதிபடுகிறான். ஒருவன் தன்னை சுத்தமாக வைத்துகொள்ள முடிவில்லாத அன்றாட விடயங்களில் ஈடுபட வேண்டியுள்ளது. வசீகரமான முகத்தை கொண்ட சிலருக்கு உடல் அமைப்பு சீராக இருக்காது.. அழகான கண்களையுடைய சிலருக்கு மூக்கு பெரிதாக இருக்கும். இதை போன்று எண்ணிலடங்காத உதாரணங்களை கூறலாம். எல்லாம் சிறப்பாக உள்ள ஒருவன் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருப்பான்.


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சபீர் Wed May 26, 2010 11:32 am

சிவா wrote:இந்தக் கட்டுரையை தொடர நினைவூட்டியதற்கு நன்றி சபீர்!

இத்தனைகாலத்துக்கப்புறமும் இக்கட்டுரையை பாதுகாத்து வைத்து அப்படியோ தந்தமைக்கு முதல்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

தொடர்ந்து படித்தேன் பல நல்ல தகவல்களை அறிய கூடியதாக இருந்தது மிக்க மகிழ்ச்சி சகோதரா நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Wed Mar 16, 2011 8:36 am

இவற்றுக்கு மேலாக எல்லாம் சிறப்பாக அமைந்த ஒருவன் நிச்சயமாக வயோதிபத்தை அடைந்து மரணிப்பான். எதிர்பாராத சாலை விபத்தில் மறுசீரமைக்க முடியாத அளவிற்கு உடல் காயமடையலாம். இந்த உலகில் மனித உடல் மாத்திரம் நிலையில்லாத தற்காலிகமானது என்று கூறமுடியாது. அனைத்து பூக்களும் வாடுகின்றன. மிகவும் சுவையான உணவு அழுகி பயனற்று போகிறது. இவை அனைத்தும் இவ்வுலகின் அசாதாரணமானவை. இவ்வுலகில் எமக்கு மற்றும் இந்த உடலுக்கும் கொடுக்ப்பட்ட குறுகிய வாழ்கை இறைவனின் தற்காலிக அருளாகும். நிரந்தர வாழ்வும் நிறைவான படைப்பும் மறுமையில் தான் சாத்தியமாகும். இதை குர்ஆன் கூறும் போது:

உங்களிடம் தரப்பட்டிருக்கும் எப்பொருளும் (நிலையற்ற) இவ்வுலக வாழ்கையின் (அற்ப) சுகங்களே. இறைநம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடம் (தங்கள் காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கை கொள்வோருக்கு இறைவனிடத்தில் இருப்பது மிக்க மேலானதும் நிலையானதுமாகும். (ஸ_றா அஷ்-ஷ_றா: 36)

மற்றொரு வசனத்தில் இவ்வுலகின் உண்மை நிலையை விளக்குகிறது :

அறிந்து கொள்ளுங்கள்: 'நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும் மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும் பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும் (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும் (அதாவதுபுன்னகை அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர் பின்னர் அது கூளமாகி விடுகிறது (உலக வாழ்வும் இத்தகையதே எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (ஸ_றா அல்-ஹதீத் : 20)

சுருங்க கூறுவதாயின் இவ்வுலகில் இறைவன் அவனது எல்லையற்ற சக்திக்கும் அறிவிற்கும் அத்தாட்சியாக பல அழகான வியக்கத்தக்கவைகளையும் குறையுள்ளவகளையும் படைத்துள்ளான். நிரந்தரம் மற்றும் மேன்மை ஆகியவை இவ்வுலக நியதிக்கு எதிரானது. மனிதன் எவ்வளவு சிந்தனை செய்தாலும் அவனது நவீன தொழிநுட்பத்தை உபயோகித்தாலும் இறைவனின் நியதிகளை மாற்ற முடியாது. இதனால் தான் மக்கள் மறுமையை அடைந்து இறைவனுக்கு முறையான நன்றியையும் மரியாதையையும் செலுத்த முற்படுவர். மேலும் மக்கள் இவ்வுலகத்தில் நற்பேறுகளை அடையமுடியாது என்பதை உணர்ந்து அதற்கான நிரந்தர இடம் நம்பிக்கையாளர்களுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளது என்பதை உணரவேண்டும். இதை குர்ஆன் இவ்வாறு விளக்குகிறது :

எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும் என்றும் நிலைத்திருப்பதும் ஆகும். (ஸ_றா அல்- ஆஃலா : 16-17)

இன்னொறு வசனத்தில் “இன்னும், இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை - இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும் - இவர்கள் (இதை) அறிந்திருந்தால். “ (ஸ_றா அன் கபூத் : 64) தற்காலிக புகலிடமான இந்த உலகத்திற்கும் நிரந்தர வாழ்வான மறுமைக்கும் இடையே சிறிய இடைவெளியே இருக்கிறது. மரணம் எனும் கருவியை கொண்டு இந்த திரை நீக்கப்படுகிறது. மனிதன் மரணத்தோடு அவனது உடல் மற்றும் இந்த உலகத்தோடுள்ள அனைத்து பந்த பிணைப்புகளையும் துண்டித்து அவனுக்கு படைக்கப்பட்ட புது உடலுடன் அவனது நிரந்தர வாழ்வை ஆரம்பிப்பான்.


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 5 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum