ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம், உயிர்தெழுதல், நரகம்

+4
பிரகாஸ்
மீனு
ரூபன்
சிவா
8 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் Empty மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Mon Sep 21, 2009 3:32 am



ஹாருன் யஹ்யா


அறிமுகம்

மரணம்… அது எந்த நேரத்திலும் ஏற்படலாம். யாருக்கு தெரியும். நீங்கள் இந்த கட்டுரையை வாசித்து கொண்டு இருக்கும் இந்த வேளையிலும் ஏற்படலாம். அல்லது நீங்கள் எதிர் பார்க்கும் நேரத்திற்கு முன்பாகவும் ஏற்படலாம்.

இந்த வரிகள் - உங்களை மரணம் சுவைப்பதற்கு முன்பான கடைசி சந்தர்பமாகவோ அல்லது கடைசி நினைவூட்டலாகவோ அல்லது கடைசி எச்சரிக்கையாகவோ இருக்கலாம். நீங்கள் இந்த வரிகளை வாசிக்கும் போது அடுத்த மணித்தியாளத்தில் நீங்கள் உயிருடன் இருப்பீர்களா என்று உங்களுக்கு தெரியாது. அவ்வாறு நீங்கள் உயிருடன் இருந்தாலும் உங்களுக்கு இன்னொரு மணித்தியாளத்தை உத்தரவாதம் அளிக்க யாராலும் முடியாது. உங்கள் வாழ்கையை ஒரு மணித்தியாளத்தை கொண்டோ அல்லது ஒரு மணித்துளியை கொண்டோ உத்தரவாதம் அளிக்க முடியாது. நீங்கள் இந்த புத்தகத்தை முழுமையாக படித்து முடிப்பீர்களா என்று உங்களுக்கு தெரியாது. மரணம் அது எந்த நேரத்திலும் உங்களை வந்தடையும். அது நீங்கள் மரணத்தை பற்றி சிந்திப்பதற்கு சில துளிகளுக்கு முன்பாக வந்தடையும்.

நீங்கள் மரணமடைவது உறுதி. நீங்கள் நேசிப்பவர்களும் மரணத்தை சுவைத்தே தீர்வார்கள். நீங்கள் அவர்களுக்கு முன்பு அல்லது அவர்கள் உங்களுக்கு முன்பாகவோ மரணிப்பார்கள். இன்றிலிருந்து 100 ஆண்டுகளுக்கு பின்பு உங்களுக்கு தெரிந்த ஒரு ஆத்மாவும் இந்த உலகில் இருக்காது..

மனிதனின் எண்ணத்தை எல்லையில்லா கனவுகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பாடசாலை கல்வியை முடித்து – கல்லூரி – பட்டம் – நல்ல தொழில் - திருமணம் - பிள்ளைகள் - நிம்மதியான வாழ்கை. ……இவைதான் மனிதனின் விரிந்த சாதாரண ஆசைகளாக உள்ளது. இவை தவிர மனிதனின் சந்தர்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப இன்னும் ஆயிரக்கணக்கான ஆசைகள் மனிதனில் விரிந்து காணப்படுகின்றன.

மனித வாழ்வில் நடைபெறும் சில உறுதியான நிகழ்வுகளில் மரணமும் ஒன்று. இது 100 வீதம் உறுதி. பல வருட விடா முயற்சியின் காரணமாக கல்லூரியில் இடம் பிடித்த மாணவன் வகுப்பறைக்கு போகும் வழியில் மரணமாகிறான். தொழிலை பெற்று கொண்ட ஒருவர் முதல் நாள் வேளைக்கு போகும் வழியில் மரணமாகிறார். புது மண தம்பதியரின் வாழ்கையை சாலை விபத்து பறித்து கொள்கிறது. தனது நேரத்தை சேமிக்கும் நோக்கில் விமானத்தில் பறக்கும் வியாபாரி ஒருவர்-அந்த விமானமே அவரது வாழ்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை அறியமாட்டார்.

அத்தகைய சந்தர்பங்களில் ஆசைகள் நிறைவேறாமல் தேங்கி நிற்கின்றன. அவர்கள் அவர்களது ஆசைகளை ஒருபோதும் நிறைவேறாது என்ற நிலையில் விட்டு விட்டு - இனிமேல் ஒருபோதும் திரும்ப முடியாத ஒரு இலக்கை நோக்கி செல்கிறார்கள். அந்த இடம் அவர்கள் ஒருபோதும் நினைத்து பார்த்திடாத இடமாக இருக்கிறது. பல வருடங்கள் பல மணிநேரங்கள் செலவழித்து அவர்கள் தீட்டிய கற்பனைகள் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. ஆனால் அவர்கள் நிச்சயமாக நடக்க இருக்கும் ஒன்றை சிந்திக்க மறந்து விட்டார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் சிந்திக்கும் மனசாட்சியுள்ள மனிதன் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்? உறுதியாக நடக்க இருக்கும் ஒன்றுக்கா அல்லது சில வேளை நடக்ககூடும் என்ற ஒன்றுக்கா? ஆனாலும் பெரும்பான்மை மக்கள் உறுதியாக நடக்கும் என்று கூறமுடியாத ஒன்றுக்கே முன்னுரிமை வழங்குவதை நாம் பார்க்கிறோம். அவர்கள் வாழ்வின் எந்த நிலையில் இருந்த போதிலும் அதை விட சிறந்த வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடினமாக சிந்திக்கிறார்கள்.

மனிதன் சாகா வரம் பெற்றவனாக இருந்தால் அவனது ஆசைகளை நியாயப்படுத்தலாம். உண்மை என்னவென்றால் ஆசைகள் அனைத்திற்கும் மரணம் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. ஆகவே நடக்கவோ அல்லது நடக்காமல் போகக்கூடிய ஆசைகளுக்காக எமது முழு கவனத்தையும் செலுத்தி உறுதியாக நடக்ககூடிய மரணத்தை பற்றி சிந்திக்காமல் விடுவது மிகப்பெரும் மடமையாகும்.

இதற்கு காரணம் மனிதன் அவனது மனதை அடக்க முடியாத ஆசைகளை கொண்டு அடிமை படுத்தி இருப்பதால் இந்த தெளிவான உண்மையை கவனிக்காமல் விட்டுவிடுகிறான்.

இவ்வாறான சூழ்நிலையில் அவர்கள் தங்களது உண்மையான வாழ்கை மரணத்தின் பிறகு தொடங்குகிறது என்ற உண்மையை விளங்கி கொள்வதில்லை. அதற்காக தங்களை தயார் படுத்திக்கொள்வதுமில்லை. அதனால் அவர்கள் மீண்டும் உயிர்பெற்று எழுந்ததும் நரகத்தை தவிர வேறு எங்கும் செல்வதுமில்லை. அது அவர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட இடமாகும். இந்த புத்தகம் எழுதப்பட்ட நோக்கம் - மனிதன் சிந்திக்க மறுக்கும் ஒன்றை சிந்திக்க வைக்கவும் - நிச்சயமாக சத்தியமாக நடக்க இருக்கும் ஒன்றை பற்றி எச்சரிப்பதற்குமாகும். அதை சிந்திக்க மறுப்பது எந்த வகையிலும் தீர்வாக அமையாது.


Last edited by சிவா on Wed Mar 16, 2011 8:35 am; edited 1 time in total


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Mon Sep 21, 2009 3:39 am

மூடநம்பிக்கைகளும் உண்மைகளும்

மனிதன் வரலாற்றில் மிக கடினமான பிரச்சினைகளை சாதுர்யமாக சமாளித்து வந்துள்ளான். ஆனால் மரணத்தை மட்டும் அவனால் வெல்ல முடியவில்லை. சிலர் இளமையிலும் மற்றும் சிலர் குழந்தை நிலையிலும் மரணிக்கிறார்கள். வேறு சிலர் வாழ்வின் அனைத்து நிலைகளையும் கடந்து அவர்களது இறுதி காலத்தில் மரணிக்கிறார்கள். மனிதனை அவனது சொத்துகளோ - பதவிகளோ - புகழோ - மகத்துவமோ - செல்வாக்கோ அல்லது அவனது அழகிய தோற்றமோ அவனை வந்தடையும் மரணத்தை விட்டும் அவனை காப்பாற்றாது. மனிதர்கள் அனைவரும் எந்த பாகுபாடின்றி மரணத்திற்கு முன்னால் உதவியற்றவர்களாகவே உள்ளனர். அவ்வாறெ கடைசி வரை இருப்பார்கள்.

மனிதர்களில் பெரும்பாலானவர்கள் மரணத்தை சிந்திப்பதிலிருந்து தவிர்ந்து விடுகிறார்கள். ஆனால் ஒருநாள் அந்த உண்மையான முடிவு அவர்களை வந்தடையும். மரணத்தை பற்றி நினைக்காமல் இருப்பது அவர்களை மரணத்தை விட்டும் பாதுகாக்கும் என்ற மூடநம்பிக்கையில் இருக்கிறார்கள். தினமும் நடைபெறும் கலந்துரையாடல்களில் யார் ஒருவர் மரணத்தை பற்றி பேச முற்பட்டாலும் அவர் பேச்சை தொடரவிடாமல் தடுக்கப்படுகிறார். எவர் மரணத்தை பற்றி பேசுகிறாறோ – அவர் அறிந்தோ அறியாமலோ - இறைவனது அத்தாட்சிகளை நினைவு கூர்ந்து – மனிதர்களின் பார்வையை மூடியுள்ள கடினமான திரையை சற்று அகற்றுகிறார். துணிவான வாழ்கை வாழ கூடியவர்களிடம் இந்த உண்மை கூறப்பட்டால் அவர்கள் கவலைபடுகிறார்கள். அவர்கள் மரண பயத்திலிருந்து தப்பிக்க முற்பட்ட போதிலும் மரணம் அவர்களை விட்டுவிடுவதில்லை. எதற்கும் கவலை படாமல் இருக்கும் மனப்பான்மையானது அவர்கள் மரணிக்கும் போதும் - நியாய தீர்ப்பு நாளிலும் - முடிவில்லா வேதனையின் போதும் பயத்தை அதிகரிக்கும்.

நேரம் மனிதனுக்கு எதிராகவே செயல்படுகிறது. வயோதிபத்தையும் மரணத்தையும் எதிர்த்த மனிதனை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது மரணத்தை பார்திடாத எவரையாவது உங்களுக்கு தெரியுமா ? இது சாத்தியமற்ற ஒன்று ! சாத்தியமற்றது என்பதன் பொருள் மனிதனுக்கு அவனது உடல் அல்லது அவனது வாழ்கையின் மீது எவ்வித கட்டுப்பாடும் இல்லை. மனிதன் அவனது பிறப்பை தீர்மானிக்கவில்லை என்பதன் மூலம் உண்மை தெளிவாகிறது. மேலும் அவனால் மரணத்தை வெல்லமுடியாமல் இருப்பது இன்னொறு சான்றாக உள்ளது. வாழ்கையின் சொந்தக்காரனெ மனிதனுக்கு வாழ்வை கொடுக்கிறான். அவன் விரும்பும் நேரத்தில் அதை திரும்ப பெற்று கொள்கிறான். வாழ்வின் சொந்தக்காரனான இறைவன் - அவனது தூதருக்கு அருளிய வேதத்தில் இதை மனிதனுக்கு அறிவிக்கிறான் (நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் என்றென்றும் வாழப்
போகிறார்களா? (ஸ_றா அன்பியா : 34)

இந்த சந்தர்பத்தில் உலகில் கோடிக்கணக்கான மக்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் முதல் மனிதன் படைக்கப்பட்டதிலிருந்து எண்ணிலடங்காத மக்கள் தோன்றி மறைந்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். அவர்கள் அனைவரும் விதி விலக்கின்றி மரணித்துள்ளார்கள். ஆகவே முன் சென்ற மக்களுக்கும் இன்னும் உயிருடன் இருப்பவர்களுக்கும் மரணம் நிச்சயமான ஒன்றாக உள்ளது. இந்த உண்மையான முடிவை யாராலும் தவிர்க்க முடியாது.

குர்ஆன் கூறுகிறது :
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும் அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும் எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார் இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (ஸ_றா ஆல-இம்ரான். :185) மரணத்தை கெட்ட சகுணமாக அல்லது தற்செயலான செயல் என நினைத்தல் மரணம் தற்செயலான ஒன்றல்ல. அது மற்ற அனைத்து நிகழ்வுகளை போன்று இறைவனது கட்டளைக்கு ஏற்ப நடைபெறுகிறது. மனிதனுடைய பிறந்த திகதி தீர்மானிக்கப்பட்டதை போன்று அவனது மரணத்தின் கடைசி நிமிடமும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவனுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு மணிநேரத்தையும் ஒவ்வொரு நிமிடத்தையும் கடந்து அவனது கடைசி நிமிடத்தை நோக்கி விரைந்து செல்கிறான். ஒருவனது மரணம் - இடம் - நேரம் - மரணிக்கும் இடம் ஆகியவை முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

மரணத்தை பற்றிய முழு அறிவும் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உள்ள நிலையில் அதிகமான மக்கள் மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற பல நிகழ்வுகளின் இறுதி நிலையே மரணம் என்கின்றனர். மரண செய்திகள் ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகளில் வந்து கொண்டேயிருக்கிறது. இவற்றை படித்து முடிக்கும் போது – “ தகுந்த முன் எச்சரிக்கை எடுத்திருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருப்பார்” அல்லது “இவ்வாறு நடந்திருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார்” போன்ற அறிவற்ற வாதங்களை செவியுறுவீர்கள். மனிதனுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டால் - அவன் ஒரு நிமிடம் முந்தவும் மாட்டான் பிந்தவும் மாட்டான். ஆனால் நம்பிக்கையற்ற
மக்கள் மரணத்தை தற்செயலான செயல் என்றே கருதுகிறார்கள். இறைவன் குர்ஆனில் இத்தகைய பகுத்தறிவற்ற விளக்கங்களை எச்சரிக்கின்றான். இது ஏக இறைவனை நிராகரிப்பவர்களுக்கு புதிய விடயமாகவே இருக்கும்.


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by ரூபன் Mon Sep 21, 2009 3:43 am

"மரணம்… அது எந்த நேரத்திலும் ஏற்படலாம். யாருக்கு தெரியும். நீங்கள் இந்த கட்டுரையை வாசித்து கொண்டு இருக்கும் இந்த வேளையிலும் ஏற்படலாம். அல்லது நீங்கள் எதிர் பார்க்கும் நேரத்திற்கு முன்பாகவும் ஏற்படலாம்.

இந்த வரிகள் - உங்களை மரணம் சுவைப்பதற்கு முன்பான கடைசி சந்தர்பமாகவோ அல்லது கடைசி நினைவூட்டலாகவோ அல்லது கடைசி எச்சரிக்கையாகவோ இருக்கலாம். நீங்கள் இந்த வரிகளை வாசிக்கும் போது அடுத்த மணித்தியாளத்தில் நீங்கள் உயிருடன் இருப்பீர்களா என்று உங்களுக்கு தெரியாது. அவ்வாறு நீங்கள் உயிருடன் இருந்தாலும் உங்களுக்கு இன்னொரு மணித்தியாளத்தை உத்தரவாதம் அளிக்க யாராலும் முடியாது"

அடப்பாவிகளா இன்று நான் தூங்கினமாதிரித்தான் இதை வாசித்தால் எப்படி தூக்கம் வரும்
சொல்லுங்கள் மகா ஜனங்களே சொல்லுங்கள்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Mon Sep 21, 2009 3:44 am

படித்ததை அழித்து விடுங்கள்: Shift + Delete


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by ரூபன் Mon Sep 21, 2009 3:46 am

நான் என்ன கணினியா அதிர்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Mon Sep 21, 2009 4:17 am

விசுவாசிகளே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்: 'அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்" என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான் மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான் அவனே மரிக்கச் செய்கிறான் இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான். (ஸ_றாஆல இம்ரான்:156)

மரணம் தற்செயலானது என்ற வாதம் அறிவற்றதாகும். மேலே குறிப்பிடப்பட்ட இறை வாக்கின் அடிப்படையில் இது மனிதனுக்கு மிகப்பெரும் ஆன்மீக துன்பத்தையும் வேதனையையுமே தருகிறது. நிராகரிப்பாளர்களுக்கும் அல்லது குர்ஆனை நம்ப மறுப்பவர்களுக்கும் தங்களது அன்புக்குரிய ஒருவரை இழப்பதானது மிக கடினமான வேதனையாகவே இருக்கும். மரணத்தை கெட்ட சகுணத்தோடு அல்லது கவனமின்மையோடு சம்பந்தப்படுத்துவதன் மூலம் மரணத்தை வெல்லலாம் என்று நினைகிறார்கள். இத்தகைய சிந்தனை அவர்களது துன்பத்தையும் வேதனையையும் அதிகரிக்கிறது. இது அவர்களது நம்பிக்கையின்மையால் ஏற்பட்ட வேதனையாகும்.

மரணம் ஏற்பட விபத்துகளோ நோய்களோ அல்லது வேறு எதுவும் காரணமல்ல. இவை அனைத்தையும் செய்பவன் இறைவன் மட்டுமே. நம்முடைய நேரம் முடிந்தவுடன் மேற்கூறப்பட்ட காரணிகளை கொண்டு எமது வாழ்வு முடிவு பெறுகிறது. ஒருவனது சேமிப்புகளை கொண்டு ஒரு முச்சு காற்றை வாங்க முடியாது. இறைவன் தனது வேதத்தில் இதை தெளிவாக குறிப்பிடுகிறான். எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹ்வின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம் இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம் நன்றியுடையோருக்கு அதி சீக்கரமாக நற்கூலி கொடுக்கிறோம். (ஸ_றா ஆல இம்ரான் :145)

ஏக இறைவன் மீது நம்பிக்கை கொண்டவர்களக்கு இவ்வுலகம் தற்காலிகமானது என்று தெரியும். அவன் இவ்வுலகில் அனுபவிக்கும் அனைத்தும் இறைவனது கருணை என்று நினைக்கிறான். இறைவன் நினைக்கும் நேரத்தில் அவனது உயிரை கைப்பற்றி இறைவன் நினைக்கும் நேரத்தில் அவனது செயல்களுக்கான கணக்குகளை கேட்பான் என்று அவனுக்கு தெரியும். அவன் இறைவனது நற்கருணையை பெரும் பொருட்டு அவனது வாழ்வை வாழ்ந்ததன் காரணமாக – அவன் மரணத்தை கண்டு அஞ்சுவதில்லை. நமது தூதர் இவ்வாறு குறிப்பிடுகிறார்

ஐபிர் பின் அப்துல்லா அறிவிக்கிறார்கள்: இறைவனுடைய தூதர் தொழ தொடங்கிய போது இவ்வாறு கூறினார்கள், “இறைவன் மிகப்பெரியவன். பிறகு நிச்சயமாக எனது வணக்கம் எனது வாழ்வு எனது மரணம் அனைத்தும் அனைத்து உலகங்களினதும் இறைவனுக்கே என்றார்கள். (திர்மிதி : 262) விதி பற்றி தவறான கொள்கை மனிதர்களிடையே விதி பற்றி பல தவறான கருத்துகள் காணப்படுகின்றன. அதாவது ஒருவர் “விதியை மாற்றலாம்” அல்லது “விதியை வெல்லலாம்” போன்ற பல அறிவற்ற எண்ணங்கள் காணப்படுகின்றன. மனிதர்கள் தங்களுடைய எதிர்பார்புகளும் எண்ணங்களுமே விதி என்று நினைக்கிறார்கள். சில அறிவற்றவர்கள் அவர்கள் நினைத்தவாறு ஒன்று நடைபெறாவிட்டால் விதி மாறிவிடும் என்று நம்புகிறார்கள். அவர்கள் விதியை முன்கூட்டியே அறிவதன் மூலம் அவற்றை தவிர்த்து விடலாம் என்று சிந்தித்து செயல்படுகிறார்கள். இவை விதி என்றால் என்ன என்று அறியாத குறுகிய சிந்தனை கொண்டவர்களின் மாசுபட்ட சிந்தனையாகும்.

விதி என்பது கடந்த கால மற்றும் எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளை பற்றிய இறைவனது மதிநுட்ப படைப்பாகும். ஓன்றுமில்லாத (ழெவாiபெடநளள) ஒரு நிலையில் இறைவனே இடத்தையும் (ளியஉந) காலத்தையும் (வiஅந) படைத்தான். அவனே இடத்தையும் காலாத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளான். ஆனால் இவை இரண்டும் இறைவனை கட்டுப்படுத்தாது. பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளும் எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் நிகழ்வுகளும் ஒவ்வொரு நிமிடமும் இறைவனால் நன்கு திட்டமிடப்பட்டு படைக்கப்பட்டுள்ளன.

நேரத்தை படைத்தவன் இறைவனே. ஆனால் அது அவனை கட்டுப்படுத்தாது. அதைபோன்றுஇ அவன் படைத்தவற்றை அவன் கண்காணிக்கிறான். இதனடிப்படையில் இறைவன் ஒரு நிகழ்வு முடிவுறும் வரை காத்திருப்பான் என்று கூறுவது தவறாகும். ஏனெனில் அவனது கண்ணோட்டதிதில் ஒரு நிகழ்வின் ஆரம்பமும் முடிவும் சமமாகவே இருக்கும். அதைபோன்று இந்த நிகழ்வின் விதி எந்த பகுதியில் அமைந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எல்லாமும் ஏற்கனவே நிகழ்ந்து முடிந்து விட்டது. இதை படச்சுருள் ஒன்றுடன் ஒப்பிடலாம். படச்சுருளில் பதியப்பட்ட படங்களால் (iஅயபநள) படச்சுருளுக்கு எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தமுடியாது. இந்த விதியின் சுருளில் பதியப்பட்ட தொடர் நிகழ்வுகளை அன்றாட வாழ்க்கை வாழக்கூடிய மனிதனால் மாற்ற முடியாது. மனிதனால் விதிக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. அதற்கு மாறாக மனிதனின் வாழ்கையை தீரிமானிக்கும் காரணியாக இருக்கிறது. மனிதன் விதியின் ஒரு அங்கமே தவிர அதிலிருந்து விடுபட்டு சுயமாக செயல்படக்கூடியவன் அல்லன். மனிதனால் விதியின் எல்லையை தாண்டி செல்ல முடியாது. இதை புரிந்து கொள்ள திரைபடத்தில் நடிக்கக்கூடிய நடிகனோடு மனிதனை ஒப்பிடலாம். திரையில் தோன்றக்கூடிய நடிகன் திரைபடத்திலிருந்து வெளியே குதித்து அவனுக்கு பிடிக்காத காட்சிகளை நீக்கிவிட்டு புதிய காட்சிகளை சேர்த்து கொள்வது போன்றதாகும். இது உண்மையில் அறிவற்ற வாதமாகும். இதை போன்று விதியை வெல்வது அல்லது நிகழ்வுகளை திசைதிருப்புதல் போன்ற கருத்துகள் தவறானவை.
“நான் எனது விதியை வென்றவன்” என்று சொல்பவன் - அவன் தன்னை தானே ஏமாற்றி கொள்கிறான். அவன் அவ்வாறு சொல்வதும் விதியின் காரணமாகவே.
ஒருவர் கோமா நினைவாற்றல் அற்ற நிலையில் பல நாட்கள் இருக்கலாம். அவர் சுகமடைவது கடினமாக தோன்றலாம். சிலவேலை அவர் குணமடைந்தால் அவர் விதியை வென்றுவிட்டார் என்றோ அல்லது வைத்தியர்கள் அவரது விதியை மாற்றி விட்டார்கள் என்று அர்த்தம் கொள்ள முடியாது. இதன் பொருள் அவரது நேரம் இன்னும் முடியவில்லை என்பதாகும். அவர் குணமடைவது அவரது எழுதப்பட்ட விதி. அவரது விதி மற்ற மனிதர்களை போன்று இறைவனது கண்காணிப்பில் எழுதப்பட்டதாகும்.
அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான் பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும். (ஸ_றா பாஃதிர் : 11)


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by மீனு Mon Sep 21, 2009 12:39 pm

மிக மிக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ஷிவா அண்ணா ..சொல்லப் பட்டு இருப்பவை நிஜமே..எல்லாமே நமக்கே ..கண்ணை மூடிநா எல்லாம் இருட்டுதான் ..கண்ணை திறந்து எல்லாவற்றையும் எதிர் கொள்ளணும். ..மரணம் கூட நாம தெரிஞ்சுக்கணும் ..அருமை அண்ணா ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by ரூபன் Mon Sep 21, 2009 12:42 pm

அதுக்காக இப்படி எல்லாம் படிக்காமலேவா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by மீனு Mon Sep 21, 2009 2:04 pm

ரூபன் wrote:அதுக்காக இப்படி எல்லாம் படிக்காமலேவா

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் Icon_eek


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by பிரகாஸ் Mon Sep 21, 2009 2:05 pm

meenuga wrote:மிக மிக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ஷிவா அண்ணா ..சொல்லப் பட்டு இருப்பவை நிஜமே..எல்லாமே நமக்கே ..கண்ணை மூடிநா எல்லாம் இருட்டுதான் ..கண்ணை திறந்து எல்லாவற்றையும் எதிர் கொள்ளணும். ..மரணம் கூட நாம தெரிஞ்சுக்கணும் ..அருமை அண்ணா ..


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் 678642


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum