ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யதார்த்தமாய் வாழுங்கள்!!!

+7
உதயசுதா
ayyamperumal
kitcha
பிரசன்னா
அப்துல்
கே. பாலா
ந.கார்த்தி
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

யதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Empty யாதார்த்தமாய் வாழுங்கள்!!

Post by ந.கார்த்தி Tue Sep 13, 2011 8:54 pm

First topic message reminder :

மகிழ்ச்சியும், துக்கமும் இணைந்ததுதான் வாழ்க்கை. இதனை உணர்ந்து கொள்பவர்களின் பயணம் தெளிந்த நீரோடையாக நகர்ந்து கொண்டிருக்கும். ஆனால் எதற்கெடுத்தாலும் கண்டிசன் போடும் இன்றைய இளம் தலைமுறையினர்தான் செய்வதறியாது தடுமாறி நிற்கின்றனர். ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் இருக்கிறது வாழ்க்கைக்கான வெற்றியின் ரகசியம்.

புனிதமான பந்தம்

சீர்வரிசையும், வரதட்சணையும் கொடுத்துதான் திருமணம் நடைபெறுகிறது என்றாலும் இது பண்டமாற்று வியாபாரமல்ல. புனிதமான உறவின் தொடக்கம் என்பதை இருவருமே புரிந்து கொள்ள வேண்டும். எல்லோருக்குமே ஆசைகள், லட்சியங்கள் இருப்பது போல நம்மை திருமணம் செய்துகொண்டவருக்கும் கனவுகள் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனை சிதைத்து விடவும் கூடாது. திருமணத்திற்கு முன்பே சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை.

எல்லையற்ற அன்பு

வாழ்க்கைத்துணையை கரம் பற்றிய நிமிடத்திலேயே இருவரும் ஒருவருக்கொருவர் சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். எந்த சூழ்நிலையிலும் உன்னைக் கைவிட மாட்டேன் என்ற உறுதிமொழியே தடுமாற்றம் இன்றி பயணம் செல்ல வழிவகுக்கும்.

மகிழ்ச்சியுடன் தொடங்கும் மணவாழ்க்கை இறுதி வரை சந்தோஷமாக இருப்பது என்பது மணமக்களின் கைகளில்தான் உள்ளது. வெவ்வேறு பழக்க வழக்கங்கள் உள்ள குடும்ப சூழ்நிலையில் இருந்து வந்திருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து எல்லையற்ற அன்பு பாராட்டுங்கள்.

நம்பிக்கைதான் எல்லாமே

மணவாழ்க்கையில் ஒன்றாக இணைந்த இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் வாழத் தொடங்கவேண்டும். ஏனென்றால் நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி. தாம்பத்யத்தில் இருவரின் உடலும் சங்கமிப்பது போல லட்சியப்பயணத்தில் தடையாக நில்லாமல் துணையாக இருப்பது அவசியம். அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அஸ்திவாரம்.

யாதார்த்தமாய் வாழுங்கள்

சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ்வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.சின்னச்சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தாமல் சிக்கல்களை தீர்ப்பதில் மட்டுமே திறமையை காட்ட வேண்டும்.

சிறு சிறு கருத்து வேற்றுமையின்போது தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்திருப்பேன்’️ என்று உறுதி ஏற்று செயல்பட்டால் அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக வந்துவிடும்.

அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்

திருமணம் முடிந்ததும் கணவனோ, மனைவியோ இருவருமே ஒருவரைப் பற்றி ஒருவர் ஆராயத் தொடங்கக் கூடாது. ஏனென்றால் உறவுப்பாலம் சிதைவதற்கான முதல் வித்து இதில்தான் தொடங்குகிறது.

இருவருமே வெவ்வேறு சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதால் அவரவரின் குறை நிறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். யாரும் யாருக்காகவும் மாறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காலச் சூழலில் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும். மகிழ்ச்சி குடியேறும்.
TMT நன்றி நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


யதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down


யதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Empty Re: யதார்த்தமாய் வாழுங்கள்!!!

Post by உதயசுதா Sat Sep 17, 2011 2:48 pm

மன்னிக்கனும் இது ஏற்கனவே படிச்சா மாதிரி இருக்கே.இந்த பதிவையும் அதோட இனைச்சுடறேன்


யதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Uயதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Dயதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Aயதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Yயதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Aயதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Sயதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Uயதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Dயதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Hயதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

யதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Empty Re: யதார்த்தமாய் வாழுங்கள்!!!

Post by krishnaamma Sat Sep 17, 2011 3:28 pm

நல்ல பகிர்வு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Empty Re: யதார்த்தமாய் வாழுங்கள்!!!

Post by செய்தாலி Sat Sep 17, 2011 4:11 pm

புனிதமான பந்தம்

திருமண பந்தம் புனிதம்தான்
கூடும் இரண்டு உறவில்
களங்கப் விழாமல் இருந்தால்

எல்லையற்ற அன்பு

அன்பு என்பதே எல்லையற்றதுதான்
அன்புக்கு நூல்வேலி இட்டுக்கொள்ளுங்கள்
அறுந்து விழாமலும் கவனித்துக்கொள்ளுங்கள்


நம்பிக்கைதான் எல்லாமே


வாழ்கையில் கருப்பொருளே இதுதான்
நம்பிக்கையின் மரணத்தில் தான்
அவநம்பிக்கை பிறக்கிறது


யாதார்த்தமாய் வாழுங்கள்

இந்த இயந்தர வாழ்க்கையில்
அதிக மனிதர்களிடம் தொலைந்துபோனது
குடும்ப உறவில் சிதைந்துபோனதும்


அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்

புரிதல் உறவில் முக்கியம்
புரிதல் நாதியற்று நிற்கையில்தான்
உறவில் சலனங்கள் தொடங்குகிறது


நல்ல பதிவு தம்பி நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

யதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Empty Re: யதார்த்தமாய் வாழுங்கள்!!!

Post by ayyamperumal Sat Sep 17, 2011 4:17 pm

செய்தாலி wrote:புனிதமான பந்தம்

திருமண பந்தம் புனிதம்தான்
கூடும் இரண்டு உறவில்
களங்கப் விழாமல் இருந்தால்

எல்லையற்ற அன்பு

அன்பு என்பதே எல்லையற்றதுதான்
அன்புக்கு நூல்வேலி இட்டுக்கொள்ளுங்கள்
அறுந்து விழாமலும் கவனித்துக்கொள்ளுங்கள்


நம்பிக்கைதான் எல்லாமே


வாழ்கையில் கருப்பொருளே இதுதான்
நம்பிக்கையின் மரணத்தில் தான்
அவநம்பிக்கை பிறக்கிறது


யாதார்த்தமாய் வாழுங்கள்

இந்த இயந்தர வாழ்க்கையில்
அதிக மனிதர்களிடம் தொலைந்துபோனது
குடும்ப உறவில் சிதைந்துபோனதும்


அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்

புரிதல் உறவில் முக்கியம்
புரிதல் நாதியற்று நிற்கையில்தான்
உறவில் சலனங்கள் தொடங்குகிறது
நல்ல பதிவு தம்பி நன்றி

இந்த பதிவை பதிந்தவரை நானும் பாராட்டுகிறேன். ஆனால் நான் உங்களை பாராட்ட மாட்டேன் செய்தலி.

இது சமூக கவிஞக்கு அழகல்ல !!

தங்கள் தடம் படிக்க வேண்டிய ஒன்றில் தடம் பதிக்கவில்லை.

நன்றி !!


யதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

யதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Empty Re: யதார்த்தமாய் வாழுங்கள்!!!

Post by செய்தாலி Sat Sep 17, 2011 4:21 pm

இந்த பதிவை பதிந்தவரை நானும் பாராட்டுகிறேன். ஆனால் நான் உங்களை பாராட்ட மாட்டேன் செய்தலி.

இது சமூக கவிஞக்கு அழகல்ல !!

தங்கள் தடம் படிக்க வேண்டிய ஒன்றில் தடம் பதிக்கவில்லை.

நன்றி !!

நேரம் இன்மையால் அதிகம் பதிவுகளை வாசிக்க நேரிடுவதில்லை அது என்னவோ சொல்லுங்கள் உறவே தெரிந்து கொள்கிறேன்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

யதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Empty Re: யதார்த்தமாய் வாழுங்கள்!!!

Post by ரகு . B Sat Sep 17, 2011 4:26 pm

யதார்த்தமான கவிதை அன்பு மலர்
ரகு . B
ரகு . B
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

யதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Empty Re: யதார்த்தமாய் வாழுங்கள்!!!

Post by ayyamperumal Sat Sep 17, 2011 4:27 pm

செய்தாலி wrote:
இந்த பதிவை பதிந்தவரை நானும் பாராட்டுகிறேன். ஆனால் நான் உங்களை பாராட்ட மாட்டேன் செய்தலி.

இது சமூக கவிஞக்கு அழகல்ல !!
தங்கள் தடம் படிக்க வேண்டிய ஒன்றில் தடம் பதிக்கவில்லை.
நன்றி !!
நேரம் இன்மையால் அதிகம் பதிவுகளை வாசிக்க நேரிடுவதில்லை அது என்னவோ சொல்லுங்கள் உறவே தெரிந்து கொள்கிறேன்

கார்த்திக் தம்பி நல்ல பிதிவைதான் பதிந்திருக்கிறார்.

ஆனாலும் அவர் பதிவில்
சீர்வரிசையும், வரதட்சணையும் கொடுத்துதான் திருமணம் நடைபெறுகிறது என்றாலும் இது பண்டமாற்று வியாபாரமல்ல. புனிதமான உறவின் தொடக்கம்


வரத்ட்சனையை நியாய படுத்துவதுபோல இது கூறுகிறது. இதை நீங்கள் எதிர்ப்பீர்கள் என்று நினைத்துதான் ஆசையாய் படித்தேன்.

நீங்கள் எதிர்ப்பதல் உலகம் திருந்திவிடாது .. ஆனாலும் அதை பதிந்த கார்த்திக் தம்பி .. நான் வரதட்சணை வங்க மாட்டேன் என முடிவு எடுப்பதற்க்கு அடித்தளமாய் இருக்குமே !!! ( அவரோடு இன்னும் சிலரவது )


யதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

யதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Empty Re: யதார்த்தமாய் வாழுங்கள்!!!

Post by செய்தாலி Sat Sep 17, 2011 4:52 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
செய்தாலி wrote:
இந்த பதிவை பதிந்தவரை நானும் பாராட்டுகிறேன். ஆனால் நான் உங்களை பாராட்ட மாட்டேன் செய்தலி.

இது சமூக கவிஞக்கு அழகல்ல !!
தங்கள் தடம் படிக்க வேண்டிய ஒன்றில் தடம் பதிக்கவில்லை.
நன்றி !!
நேரம் இன்மையால் அதிகம் பதிவுகளை வாசிக்க நேரிடுவதில்லை அது என்னவோ சொல்லுங்கள் உறவே தெரிந்து கொள்கிறேன்

கார்த்திக் தம்பி நல்ல பிதிவைதான் பதிந்திருக்கிறார்.

ஆனாலும் அவர் பதிவில்
சீர்வரிசையும், வரதட்சணையும் கொடுத்துதான் திருமணம் நடைபெறுகிறது என்றாலும் இது பண்டமாற்று வியாபாரமல்ல. புனிதமான உறவின் தொடக்கம்


வரத்ட்சனையை நியாய படுத்துவதுபோல இது கூறுகிறது. இதை நீங்கள் எதிர்ப்பீர்கள் என்று நினைத்துதான் ஆசையாய் படித்தேன்.

நீங்கள் எதிர்ப்பதல் உலகம் திருந்திவிடாது .. ஆனாலும் அதை பதிந்த கார்த்திக் தம்பி .. நான் வரதட்சணை வங்க மாட்டேன் என முடிவு எடுப்பதற்க்கு அடித்தளமாய் இருக்குமே !!! ( அவரோடு இன்னும் சிலரவது )


உங்கள் ஆதங்கம் புரிகிறது நண்பா தவறை உணர்கிறேன்

தம்பி கார்த்திக்
புனிதம் என்ற ஒரே தலைப்பில் இரண்டையும் சொல்லிவிட்டார்

வரதட்சணை

பழைய சம்பிரதாய நோய்
மருந்து இருந்தும் உண்ணாதவர்கள்
இன்றும் நீடிக்கிறது சிலரிடம்


அடிவேரறுத்து எந்த நோயும் துடைத்து எறிந்ததாக சரித்திரம் இல்லை
புதிய புதிய நோய்கள்தான் பிறக்கிறது
உங்களைபோன்ற நவ தலைமுறை பழைய நோய்களை வேருடன் அறுத்து எரியட்டும்

உன்தாய் வயிற்று மைந்தனும்
உன் நற்சொல்லை புறம்தள்ளும்
கலி நவ யுகத்தில்
மாற்றான் செவி மடுப்பானோ. . . ?


இது குற்றம் சாடல் என்ற கிறுக்கலில் நான் கிறுக்கியது


கூட பிறந்தவனே நம் சொல் கேட்காத கலியுகம்
நாலு பேர் கேட்பார்கள் திருந்துவார்கள் என்று எண்ணிச் சொல்லவதல்ல
என் கடமை அதை நான் செய்கிறேன்
தாய் பிள்ளையை வளர்ப்பது பலனை எதிபார்த்து அல்ல
கடவுளை வணங்காத பக்தனுக்கும் இறைவன் உணவுப் படி அளபதுண்டு

நன்றி நண்பா
என்றும் தோழமையுடன்
செய்தாலி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

யதார்த்தமாய் வாழுங்கள்!!! - Page 2 Empty Re: யதார்த்தமாய் வாழுங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum