ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை?

+4
கார்த்திக்.எம்.ஆர்
மாணிக்கம் நடேசன்
பேகன்
சிவா
8 posters

Go down

காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை? Empty காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை?

Post by சிவா Thu Sep 15, 2011 2:53 am

"காதல்" இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் `அவனும், அவளும்' பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள். பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை எத்தனை?

கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது, குட்டிக்கரணம் அடிப்பது, கலையாத தலையை கலைத்துவிட்டு சீவிக் கொள்வது, சோகமாக இருக்கும் அவன் முகம் அவளைக் கண்டதும் மலர்ந்துவிடுவது என எத்தனை `ரொமான்டிக்' காட்சிகள் ஒவ்வொரு இளைஞனின் வாழ்விலும்.

அப்படி, நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம். உங்கள் `ரொமான்டிக்' செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எத்தகையது என்பதை விவரிக்கிறார்கள் இங்கே...

மன்மதன் காதல்

காதல் பாடல் பாடிக் கொண்டிருக்கிறீர்களா? அதிலும் உணர்ச்சி ஊட்டும் வரிகளை அழுத்தமாக உங்கள் உதடுகள் உச்சரிக்கிறதா? அப்படியெனில் உங்களுக்கு காதல் உணர்வுகள் அதிகம். காதல்வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம். உங்கள் கட்டுக்கடங்காத விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக காதலியின் விருப்பத்தை எதிர்பார்த்து பாடலாக பாடி அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இந்த வகை ரொமான்டிக்கை ஆய்வாளர்கள் `மன்மதன் காதல்' என்கிறார்கள். இந்த வகையில் உள்ள ஒரே ஒரு குறைபாடு காதலர் இருவரில் ஒருவரது ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனாலும் உங்களுக்குள் நல்ல புரிதலும், மற்றவர் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி விட்டுக் கொடுத்தலும் நிகழும். இப்படி தீவிர காதலுணர்வு கொண்ட காதலர்கள் மகிழ்ச்சியாகவும், கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்.

கவன ஈர்ப்பு காதல்

நீங்கள் காதலிக்கும் பெண்ணை தினமும் பார்க்கிறீர்கள். ஓரளவுதான் பழக்கம். ஆனால் நெருக்கமில்லை. மற்றவர்களோடு கூட்டத்தோடு கூட்டமாக மட்டுமே சந்திக்க முடிகிறது. அப்போது அவளை கவருவதற்காக, அவள் விரும்பும்படியாக அல்லது அவள் கேட்கும் படியாக பாடுவது, பேசுவது என்று கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறீர்களா? உங்கள் பேச்சை அவளும் ரசித்து புன்னகைக்கிறாள். ஆனால் பதில் எதுவும் சொல்வதில்லை. இப்படி இருக்கிறதா? உங்கள் நிலைமை.

ஆராய்ச்சியாளர்கள் இதனை `கவனஈர்ப்பு காதல்` என்கிறார்கள். இது முழுமையான காதல் அல்ல. உங்களுக்குள் காதல் உணர்வுகள் நிரம்பி இருக்கிறது. ஆனால் அவளுக்குள் அதுபோன்ற உணர்வு நிறைய இருக்காது. நிலைமை இப்படி இருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் ரசிப்பீர்கள். அவள் தனிமையில் சந்திப்பதையோ, நெருக்கத்தை அனுமதிப்பதையோ விரும்பமாட்டாள். இது பொழுதுபோக்கு காதலென்கிறார்கள் ஆய் வாளர்கள்.

சேமிப்பு காதல்


அவள் மீது அன்பு, அக்கறை, மரியாதை எல்லாமே இருக்கிறது. இளமையின் குறுகுறுப்பு இல்லாத பார்வையே பார்க்கிறீர்கள். பேசவும் செய்கிறீர்கள். அதில் உள்ளர்த்தமோ, ரகசியமோ எதுவுமில்லை. அவளும் அப்படியே பழகுகிறாள். `இது எந்த வகை காதல்?' என்றுதானே கேட்கிறீர்கள்.

இப்படிப்பட்ட காதலை, ஆய்வாளர்கள் `சேமிப்பு காதல்' என்று வகைப்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட இது ஆழமான நட்புணர்வே. இருவரும் ஆழமான அன்பு வைத்திருப்பார்கள். காதல் உணர்வையும் புரிந்து வைத்திருப்பீர்கள். `காதலி கிடைத்தால் இவளைப்போல கிடைக்கவேண்டும்' என்று ஏங்கவும் செய்வீர்கள். ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அளவுக்கு நேசம் வைத்திருப்பீர்கள். நீங்கள் விரும்பினால் இந்த நட்பை வாழ்க்கை முழுவதும் நீடிக்கவும் செய்யலாம்.

திட்டக்காதல்


`உங்களை பிடித்திருக்கிறது' என்று உங்கள் காதலி சொல்லிவிட்டாள். உங்களுக்கும் அவளைப் பிடித்திருக்கிறது. நன்றாகவே பேசிக் கொள்கிறீர்கள். ஆனால் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் எல்லை மீறல் இல்லவே இல்லை. காமத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள் ஆனால் விரசம் இல்லை. பிரச்சினையைப் பற்றி பேசுகிறீர்கள், உங்கள் குறையை அவளும், அவளது குறையை நீங்களும் சுட்டிக்காட்டி பேசிக் கொள்கிறீர்கள், முரண்பாடு ஏற்பட்டாலும் முட்டிக் கொள்வதில்லை...!

உங்கள் காதல் இந்த நிலையில் இருக்கிறதா?

இது `திட்டக் காதல்'. வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுக்கவும், வாழவும் விரும்பும் ஜோடி நீங்கள். உங்கள் உணர்வுகளும் கூட எல்லைக்குட்பட்டதுதான். உங்கள் அன்பும் என்றும் நீடித்திருக்கும்.

இனிப்பு காதல்

அடிக்கடி தீண்டிக் கொண்டும், சீண்டிக் கொண்டும் இருப்பார்கள் சில காதலர்கள். பெரும்பாலும் சீண்டல்கள் எல்லைமீறும். இருந்தாலும் ஒருவரை ஒருவர் தடுப்பதில்லை. அந்த சீண்டலை அனுமதிக்கிறீர்கள்.

- இப்படிப்பட்ட காதலராக நீங்கள் இருந்தால்?

இதனை `இனிப்பு காதல்' என்று வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இவர்களுக்குள் ஆழமான காதல் உணர்வு இருக்கும். அதிக உணர்ச்சி கொண்டவராகவும், கொஞ்சம் கூச்சம் உடையவராகவும் இருப்பார்கள். இவர்கள் காதலில் காமம் கலந்திருப்பதால், ஒருவரின் தீண்டலை இன்னொருவர் தடுக்கமாட்டார். இவர்களுக்குள் தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும், சில ஒளிவு மறைவு ரகசியங்களும் இருக்கும். ஆனால் காதலை கடைசிவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

வெற்றிக்காதல்

காதலி போனில் பேசும்போது லேசாக இருமும் சத்தம் கேட்டால் போதும் உடனே ஆபீசுக்கு விடுமுறை எடுத்துவிட்டு காதலியை நேரில் பார்க்க கிளம்பிவிடுகிறீர்களா? அவள் விளையாட்டுக்காக `உடனே பார்க்க வேண்டும் போலிருக்கிறது வருவாயா?' என்றால் என்ன வேலையிருந்தாலும் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு அவளிடம் போய் ஆஜராகி விடுகிறீர்களா? இதுபோன்ற ஆழ்ந்த காதலை அவளும் உங்களிடம் வைத்திருக்கிறாளா?

உங்கள் காதல் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இதனை `வெற்றிக் காதல்' என்கிறார்கள், ஆய்வாளர்கள். இப்படிப்பட்ட காதலர்கள் ஒருவருக் கொருவர் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள். பிரச்சினை என்றால் தன்னையே தரவும் தயாராவார்கள்.

சரி.. இதில் உங்கள் காதல் (காதலி) எந்த வகை என்று நீங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதும்!

தினதந்தி


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை? Empty Re: காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை?

Post by பேகன் Tue Dec 27, 2011 4:17 pm

மற்ற காதல் வகை எல்லாம் தொடருமா??
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை? Empty Re: காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை?

Post by மாணிக்கம் நடேசன் Tue Dec 27, 2011 4:34 pm

காதல் இளமையில மட்டும் இனிக்காது சார், முழுமையிலதான் அது முழுமையா இனிக்கும். இளமையில் அது நுனி கரும்புமாரி சார், முதுமைழிலதான் அது அடிக்கரும்பு சார்.

இதெல்லாம் அனுபவத்துல கண்ட உண்மை சார்.

இளமையில சாப்பிட்டீயா கேக்க கூட மாட்டாங்க சார், ஆனா முதுமையில என்ன சாப்பிடுரீங்கன்னு பாசமா கேப்பாங்க சார்.
முதுமைக் காதல் முழுசானது சார், இளமைக் காதல் இன்றைக்கு இருக்கும், நாளைக்கு காணாமல் போயிடும் சார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை? Empty Re: காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை?

Post by கார்த்திக்.எம்.ஆர் Tue Dec 27, 2011 6:58 pm

நன்றி சார்.. நல்லா புரிஞ்சுது.. சூப்பருங்க சூப்பருங்க


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

[You must be registered and logged in to see this link.]
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை? Empty Re: காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை?

Post by முகம்மது ஃபரீத் Tue Dec 27, 2011 7:33 pm

மாணிக்கம் நடேசன் wrote:
காதல் இளமையில மட்டும் இனிக்காது சார்,
முழுமையிலதான் அது முழுமையா இனிக்கும்.
இளமையில் அது நுனி கரும்புமாரி சார்,
முதுமைழிலதான் அது அடிக்கரும்பு சார்.

இதெல்லாம் அனுபவத்துல கண்ட உண்மை சார்.

இளமையில சாப்பிட்டீயா கேக்க கூட மாட்டாங்க சார்,
ஆனா முதுமையில என்ன சாப்பிடுரீங்கன்னு
பாசமா கேப்பாங்க சார்.

முதுமைக் காதல் முழுசானது சார்,
இளமைக் காதல் இன்றைக்கு இருக்கும்,
நாளைக்கு காணாமல் போயிடும் சார்.

கவிதை கவிதை....!கருத்தை கவிதை வடிவில் கொடுத்த மாணிக்கம் நடேசன் சாருக்கு நன்றி சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை? Empty Re: காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை?

Post by jesudoss Tue Dec 27, 2011 7:58 pm

காதல் என்றாலே வெறுப்பாக வருகிறது.......இது எந்த வகை காதல்....
ரிலாக்ஸ்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]



கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
[You must be registered and logged in to see this image.] ஒருவர் கருவறையில்
[You must be registered and logged in to see this image.] மற்றொருவர் கல்லறையில்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை? Empty Re: காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை?

Post by மாணிக்கம் நடேசன் Tue Dec 27, 2011 8:01 pm

கவிதையா, நானா சும்மா பொய் சொல்லாதீங்க முகமது ஐயா,
நான் சும்மா சும்மாதான் கிறுக்கினது.
எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூதூதூதூரம் ஐயா.
கண்ணு வேற சரியா தெரியல அதான் ரொம்ப எழுத்துப் பிழைகள்.
மனசில பட்டது எழுதிட்டேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை? Empty Re: காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை?

Post by Aathira Tue Dec 27, 2011 8:06 pm

ஆழமான ஆய்வு... நல்ல பதிவு..
பகிவுக்கு நன்றி சிவா.


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை? Empty Re: காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 28, 2011 8:06 am

மாணிக்கம் நடேசன் wrote:
முதுமைக் காதல் முழுசானது சார்,
இளமைக் காதல் இன்றைக்கு இருக்கும்,
நாளைக்கு காணாமல் போயிடும் சார்.
மிகவும் நன்றாகச் சொன்னீர்கள்...மாணிக்கம் சார். முகமது பிரீத் சொன்னது மிகவும் சரியே...நீங்கள் ஒரு கவிஞன் ஆக மாரிவருகின்றீர் என்பது திண்ணம். வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சிவாவின் ஆய்வு மிகவும் அருமை. மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை? Empty Re: காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காதலில் ஆறு வகை… அதில் நீங்கள் எந்த வகை?
» நீங்களும் ஜீனியஸ்தான்...அறிவாளிகள் ஒன்பது வகை. அதில் நீங்கள் எந்த வகை ?
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
» காதலில் ஆறு வகை… உங்கள் காதல் எந்த வகை?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum