ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்

+4
ரூபன்
ராஜா
Tamilzhan
வித்யாசாகர்
8 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 3 Empty ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்

Post by வித்யாசாகர் Mon Sep 21, 2009 1:31 am

First topic message reminder :

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 3 Loveheart

ஆம்!
அரைமணிநேர -
மின்சார அணைப்பில் தான்-
சுடர் விட்டு எரிந்தது
நம் காதல்;

"இருட்டில் என்ன
செய்கிறாய் - போ.. போயி
ஒரு மெழுகுவர்த்தி
வாங்கி வா" என்றாள் அம்மா.

மெழுகுவர்த்தி
வாங்க வந்த கடையில்
நீ -
மெழுகுவர்த்தி கொடுக்க

மனசெல்லாம் மின்சாரமும்
பாய்ந்தது;

சிரித்த உன் முகத்தையும்
நானுன்னை -
ஏனோ அப்படி பார்த்ததையும்
நீயும் ரசித்து விட -

தெருவெல்லாம் அசைபோட்ட
உன் நினைவில் -
மெல்ல வந்தது
காதல் ஆசை!

மறுநாள் விளக்கணைந்த போது
அம்மா சொல்லவில்லை -
நானாகவே கடைக்கு வந்தேன்,

நீ சிரித்தாய்..

"ஒரு மெழுகுவர்த்தி கொடு
என்றேன்;

கொடுத்தாய்..,

எனக்கு போக
மனம் வரவில்லைதான்-

"ஏன் வேறேதாவது வேண்டுமா
என்றாய்.,

"ஆம்., உன் மனது
வேண்டும்;
(மனதில் நினைத்துக் கொண்டேன்)

"என்ன?

உன் மனது
வேண்டும்;ஒருமுறை என்னை காதலிப்பாயா?

"என்ன வேணும்
ஏனப்படி பார்க்கிறாய்
என்றாய்.,

"இவ்வளவு அழகாய்
இருக்கிறாயே,
பார்க்காமல் என்ன செய்ய..

"அப்பா வரார் சொல்லு
என்ன வேணும்.,

உன் இதயம் வேணும்
ஒரேஒரு முறை
கொடேன்;

"என்ன தம்பிக்கு
என்ன வேணுமாம்;(அப்பா கேட்டார்)

"மெழுகுவர்த்திப்பா;
மெழுகுவர்த்தி வேணுமாம்..!!

"ஆமா.. அண்னாச்சி
மெழுகுவர்த்தி தான்
வேணும்.,

உன் மகளின் மனசென்று சொல்ல
தைரியம் -
வரவில்லை; எனக்கு.

வெறும் காதல் வந்தவனாய்
அவளை திரும்பி திரும்பி
பார்த்துக் கொண்டே வந்தேன்.,

'அப்பா வரார் சொல்லு
என்ன வேணும்' என்றாளே
அப்பா வரார் சொல்லு என்றாளே..

மனசு இரவெல்லாம் -
விளக்கனையுமா..
மீண்டும் மின்சாரம் போகுமா.. என
யாருக்கும் தெரியாமல்
பற்றிக்கொண்டு எரிந்தது;

மறுநாள் காலை எழுந்ததும்
"அம்மா கடைக்கு போகனுமா?

"ஏண்டா கேட்குற
அதலாம் வேணாம் -
நீ போ;போயி..படி

"போடி மோசக்காரி -
உனக்கென்ன தெரியும் என் காதல் பற்றி..

அம்மாவை திட்டுவிட்டு
உன் வீட்டு தெருவெல்லாம்
வந்து என் காதல் பூ
தூவினேன்;

உன் அப்பா என்னை
முறைத்த பார்வையை கூட
என் காதல் பக்கத்தில் -
வெற்றிக்கான குறிப்புகளென
எழுதிக் கொண்டேன்;

போகும் போதும்
வரும்போதும் -
நீ என்னை பார்க்கிறாய் என்று தெரிந்த
உன் ஒரு -பார்வைக்காய்
என் நாட்களை எல்லாம் உன்
கடை வாசலில் குவித்து
காதலி காதலி என்று கெஞ்சினேன்;

உனக்குத்தான் அதெல்லாம் புரியாமல்
சில்லரைகளோடு என் இதயத்தையும்
வாங்கி - உன்
கல்லாபெட்டியில் -
போட்டுக்கொண்டாய்;

'மோசக்காரி..
மோசக்காரி..,
திட்டிக் கொண்டே வீட்டிற்கு
வந்தேன்;

மின்சாரம் நிற்க,
விளக்கு அணைய..,
உள்ளே -
காதல் பூக்கள் பூக்கத் துவங்கின;

அம்மா நான் மெழுகுவர்த்தி வாங்கியாறேன்..

ஓடி வந்த ஓட்டத்தில்
மூச்சிரைக்க -
உன் கடை முன் வந்து நின்று
இருட்டிற்குள் எரியும் உன்
முக வெளிச்சத்தில்
அசந்து நிற்க-

"என்ன வேண்டும்?

"ஒரு மெழுகுவர்த்தி!

கொடுத்து விட்டு நீ-
அப்-புரம் திரும்பிக் கொண்டாய்;

என்னால் அங்கிருந்து நகர
முடியவில்லை,

அதற்குள் நீ-

"என்னவேண்டும்?

"மெழுகு வர்த்தி!

நீ-
மீண்டும் கொடுத்துவிட்டு என்னை பார்த்தாய்..
நான் அங்கிருந்து நகரவே இல்லை..

மீண்டும் நீ-
"என்ன வேண்டும் என்றாய் -
ஒன்றுமே தெரியாததை போல;

"இன்னொரு மெழுகுவர்த்திக் கொடு!

"அதான் இத்தனை வாங்கி
விட்டாயே இன்னுமெதற்கு
மெழுகுவர்த்தி???

"அப்போ உன் -
காதல் கொடு!!

"என்ன????

"உன் காதல் வேணும்-
என்னை காதலியேன்' என்றேன்.

"அப்பா..
அப்பா..
நீ கத்த, அப்பா ஓடிவர..

என்னவென்று விவரமறிந்து
என்னை-
தரதரவென்று என் வீடுவரை
இழுத்துவந்து அடித்து -
வீட்டின் வாசலில்
வீசிவிட்டு -

தெருவெல்லாம் என்னை
திட்டித் தீர்க்க குத்தகை
எடுத்தவரை போல
கத்திக் கொண்டே போக;

அவுமானத்தால் அம்மா கதறியழுது
என்னை வெளியே போடாவென
விரட்டியதில் -

நான் -
வெளியே வந்து நின்று
உன் கடை இருக்கும் தெருவை
பார்க்கிறேன்....,

நீ அங்கே எங்கோ
தொலைதூரம் நின்று

வருத்தத்துடன் என்னை பார்க்கிறாய்;

என் கண்கள் சற்று
கலங்கியது தான்,

கலகங்கட்டும்;

அதோ..
என் கண்ணீர் வழியே -
தரை தொட்ட என் காதல்
வருத்தங்களாய் -
உனக்குள்ளும் பூக்கிறது பார்!!
-----------------------------------
_வித்யாசாகர்


Last edited by vidhyasagar on Mon Sep 21, 2009 1:43 am; edited 2 times in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down


ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 3 Empty Re: ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்

Post by மீனு Mon Sep 21, 2009 12:02 pm

வித்யாசாகர்..இது கவிதயா ..இல்லை காதல் கவிதையா ..எனக்கு ரொம்ப பிடித்து இருக்கின்றது ..இப்படி எத்தனை காதலர்கள் காதலியை பார்க்கவென்று நடையா நடந்து இருப்பார்கள்..
காதல் என்றால் என்ன.. அது ஒரு உணர்வு ..சொல்லி புரிய வைக்க முடியாது ..அவர் அவர்கள் உணர்ந்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.. காதலித்து பார் காணும் எல்லாமே அழகா தோன்றும்..அதே நேரம் காதலித்து பார் ..இப்படி மெழுகு வர்த்தியா உருகி காதலியினதோ ,காதலனதோ வாழ்க்கைக்கு நாம உள்ளே உருகி வெளியே சிரிக்கணும் ..
இங்கு மீனு சொல்வது என்ன என்றால் ..நீங்களே பலர் இதை அனுபவிப்பீங்க..அதனால் மீனு சொல்ல வரது நல்லாவே புர்யும்..
அருமை வித்யாசாகர் ..கவிதை அருமை..பாராட்டுக்கள் ..இன்னும் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கின்றோம்..நன்றிகள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 3 Empty Re: ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்

Post by அபிராமிவேலூ Mon Sep 21, 2009 12:07 pm

[quote="meenuga"]வித்யாசாகர்..இது கவிதயா ..இல்லை காதல் கவிதையா ..எனக்கு ரொம்ப பிடித்து இருக்கின்றது ..இப்படி எத்தனை காதலர்கள் காதலியை பார்க்கவென்று நடையா நடந்து இருப்பார்கள்..

நடுவரே தடுமாறினால்
நாங்கள் என்ன சொல்வது
நடுவர் அவர்களே
இது கவிதயா ..இல்லை காதல் கவிதையா தலைப்பு ஓகே
திர்பூ சொல்லுங்கோ ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 3 Icon_eek ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 3 Icon_eek
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 3 Empty Re: ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்

Post by வித்யாசாகர் Mon Sep 21, 2009 12:19 pm

காதல்; உணர்வு அவ்வளவு தான்!

சந்தோசமாகவும் வலியாகவும் அதை பாவித்துக் கொள்ள முடிவதே காதலின் இளமை ரகசியம்.

காதலித்துப் பார்; அந்த காதலினுள்ளே இருக்கும் உன் வாழ்க்கையும் அர்த்தப் படுமெனில் காதலித்து பார்!
அர்த்தபடாமல் போவது காதலெனில், போகட்டும் விட்டுவிடு; வாழ்க்கை அர்த்தப் பட்டாலன்றி வாழ்க்கையும் வாழ்க்கையல்ல!

வலி தான், வலிக்கட்டும். வலி கவிதையாகும் பயணத்தில் என்றேனும் அவள் குறுக்கே வந்தால் ஏன் காதல் சற்றேனும் வருடங்களை தாண்டியாவது.. புரியுமில்லையா???
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 3 Empty Re: ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்

Post by அபிராமிவேலூ Mon Sep 21, 2009 12:24 pm

உன்னை மறக்கத்தான் நினைத்தேன்
இன்றுவரை மறந்து கொண்டுதான் இருக்கிறேன்
உன்னை மறக்க நினைத்ததை
இது தான் காதலா
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 3 Empty Re: ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்

Post by ரூபன் Mon Sep 21, 2009 12:25 pm

meenuga wrote:
இங்கு மீனு சொல்வது என்ன என்றால் ..நீங்களே பலர் இதை அனுபவிப்பீங்க..அதனால் மீனு சொல்ல வரது நல்லாவே புர்யும்..
அருமை வித்யாசாகர் ..கவிதை அருமை..பாராட்டுக்கள் ..இன்னும் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கின்றோம்..நன்றிகள்

எது பொன்னுவின் அப்பாகிட்டை அடிவாங்கிறதா என்ன நல்ல மனம் உங்களுக்கு ஒன்னும் புரியல
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 3 Empty Re: ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்

Post by மீனு Mon Sep 21, 2009 12:28 pm

வாழ்க்கை அர்த்த படும் எனில் காதலித்து பார்.. அருமை வித்யாசாகர் .,
ஆசைப் படுவதெல்லாம் கிடைத்து விட்டால் கண்ணீரின் மதிப்பு குறைந்து விடுமல்லவா ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 3 Empty Re: ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்

Post by அபிராமிவேலூ Mon Sep 21, 2009 12:29 pm

ரூபன் wrote:
meenuga wrote:
இங்கு மீனு சொல்வது என்ன என்றால் ..நீங்களே பலர் இதை அனுபவிப்பீங்க..அதனால் மீனு சொல்ல வரது நல்லாவே புர்யும்..
அருமை வித்யாசாகர் ..கவிதை அருமை..பாராட்டுக்கள் ..இன்னும் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கின்றோம்..நன்றிகள்

எது பொன்னுவின் அப்பாகிட்டை அடிவாங்கிறதா என்ன நல்ல மனம் உங்களுக்கு ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 3 838572
அனுபவம் பேசுதோ ரூபன்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 3 Empty Re: ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்

Post by ரூபன் Mon Sep 21, 2009 12:32 pm

நாங்கள் அனுபவப்பட்டுத்தான் எல்லாம் தெரிஞ்சுக்கனுமுன்னா ஆயுள்காலம் போதாது சாவின் ரணம் செத்துத்தான் புரிஞ்சுக்கனுமுன்னு இல்லை அபிராமி ஒன்னும் புரியல
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 3 Empty Re: ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்

Post by மீனு Mon Sep 21, 2009 12:37 pm

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 3 67637


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 3 Empty Re: ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்

Post by ரூபன் Mon Sep 21, 2009 12:39 pm

எதுக்கு மீனு இப்படி அழுகிறா மீனு பீர் தீர்ந்திடுச்சா என்ன
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 3 Empty Re: ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum