ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருதுநகரில் அரசு பஸ்சுக்கு தீ வைப்பு : ராமநாதபுரத்தில் 7 பஸ்கள் உடைப்பு

4 posters

Go down

விருதுநகரில் அரசு பஸ்சுக்கு தீ வைப்பு : ராமநாதபுரத்தில் 7 பஸ்கள் உடைப்பு Empty விருதுநகரில் அரசு பஸ்சுக்கு தீ வைப்பு : ராமநாதபுரத்தில் 7 பஸ்கள் உடைப்பு

Post by சிவா Mon Sep 12, 2011 4:07 pm

பரமக்குடி: மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இவர்களது உடல்களை இன்று அடக்கம் செய்யவிருப்பதால் மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த முதல்வர் ஜெ., சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷன் அமைக்கப்படுவதாக சட்டசபையில் அறிவித்தார். இதற்கிடையில் இன்று ( திங்கட்கிழமை) மதியம் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் சாத்தூர் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சுக்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர். ராமநாதபுரத்தில் இன்று ஒரே நாளில் 7 பஸ்கள் கல்வீச்சில சேதமடைந்தன.

மறியலின்போது வெடித்த கலவரம் : இம்மானுவேல்சேகரன் நினைவு நாளில் பங்கேற்க பரமக்குடி புறப்பட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் வல்லநாடு அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து எதிர்ப்பு தெரிவித்து பரமக்குடியில் இவரது ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். கலைந்து செல்ல வலியுறுத்தியபோது போலீசாருக்கும், அந்த கும்பலுக்கும் இடையே மோதல் வெடித்தது. போலீசார் மீது கற்கள் கம்பு வீசப்பட்டது. போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தொடர்ந்து வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி, கண்ணீர்புகை வீசினர். இருந்தும் பயனில்லை. இதனையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் போலீஸ் டி.ஐ.ஜி., டி.எஸ்.பி., உள்ளிட்ட 8 போலீசார் காயமுற்றனர். மதுரை ரிங் ரோட்டிலும் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. இந்த இரு வன்முறையில் ஈடுபட்ட 6 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாயினர். பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் போலீசாரின் தாக்குதலில் காயமுற்ற பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவ வட்டாரம் தெரிவிக்கிறது.

ஆஸ்பத்திரிகளில் கூட்டம்: இந்நிலையில் பலியானவர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. தொடர்ந்து அடக்கம் செய்யப்படும் போது வன்முறை ஏதும் வெடிக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம், பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இங்கும் பதட்டம் நிலவுகிறது.

பலர் மாயம்; போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் உறவினர்கள்: நேற்று நடந்த கலவரத்தின்போது பல பகுதிகளிலும் இருந்து நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க பலர் வந்திருந்தனர். இதில் சிக்கியவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. இதனால் மதுரை ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விசாரித்து வருகின்றனர். பலர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு அழுதபடி உள்ளனர்.

ரயில்வே பொருட்கள் நாசம் : பரமக்குடியில் ரயில்வே பொருட்கள் கடும் சேதமுற்றிருக்கிறது. வன்முறை காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்ப வேண்டிய ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. லெவல் கிராசிங்கில் கம்பிகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே துறை வைத்திருந்த டெட்டனேட்டர்கள், எமர்ஜென்சி பாக்ஸ்கள், கொடிகள், மற்றும் லைட்டுகள் வன்முறைக்கும்பலால் சூறையாடப்பட்டது. பொன்னையாபுரம் ரயில்வே கேட்டில் உள்ள ஆவணங்கள் தீக்கிரையாகின. இதனையடுத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ பாதுகாப்புடன் ரயில்கள் இயக்கப்பட்டன.

இறந்தவர்கள் யார் ? யார் ? : துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் பெயர் விவரம் வருமாறு: ராமநாதபுரம் மாவட்டம் நைனார்குளம் அருகே உள்ள பல்வராயனேந்தல் பகுதியை சேர்ந்த கணேசன் , பரமக்குடியை சேர்ந்த வெள்ளைச்சாமி ( 65 ) , பன்னீர்செல்வம் (50) , ஜெயபால்,, கீழக்கொடுமலூரை சேர்ந்த தீர்ப்புக்கனி (32) , மேல் ஆய்க்குடியை சேர்ந்த செல்வக்குமார் ஆகியோரது உடல்கள் பரமக்குடி, ராமநாதபுரம், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிரதேச பரிசோதனை நடக்கிறது. பரிசோதனை முடிந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

பள்ளி- கல்லூரிகள் விடுமுறை:
மாவட்டத்தில் மேலும் கலவரம் ஏற்படாமல் இருக்க பள்ளி- கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, காளையர்கோவில், திருப்புவனம், மானாமதுரை பள்ளி- கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் பேர் மீது வழக்கு:
பரமக்குடி கலவரம் தொடர்பாக ஆயிரம் பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டி.ஜி.பி., ஜார்ஜ் இன்று ராமநாதபுரம் மாவட்டம் செல்கிறார்.

மதுரையில் 94 பேர் கைது : துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து ஏற்பட்ட கல்வீச்சு, பஸ்கள் உடைப்பு உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்ட 94 பேர் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் காயமுற்ற ஜெயபிரசாத் என்பவர் மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். வன்முறையில் காயமுற்று மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து மார்க்., கம்யூ., தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சம்பத் நகர நிர்வாகி விக்கிரமன் ஆறுதல் தெரிவித்தனர். இவர்கள் நிருபர்களிடம் கூறுகையில்; ஜான்பாண்டியனை முதிர்ச்சியற்ற முறையில் கைது செய்து பிரச்னை மீண்டும் பெரிதாக்கப்பட்டுள்ளது. போலீசாரின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் மற்றும் காயமுற்றவர்களுக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

விசாரணை கமிஷன் சட்டசபையில் ‌ஜெ., அறிவித்தார்: பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதி‌பதி தலைமையிலான கமிஷன் விசாரிக்கும் என முதல்வர் ஜெ., உத்தரவிட்டார். இன்று காலை சட்டசபை கூடியதும் பரமக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு தமிழக அரசின் போலீசே காரணம் என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் எழுப்பினர். இது தொடர்பாக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினர்.

தொடர்ந்து பதில் அளித்து பேசிய முதல்வர் ஜெ., இந்த துயரச்சம்பவம் துரதிருஷ்டவசமானது. நடந்த பின்னணி என்னவெனில், ஒருபிரிவினர் ஒரு தலைவரை பற்றி தவறாக எழுதியுள்ளனர். இதனை தொடர்ந்து மாணவன்‌கொலை, தொடர்‌ந்து ஜான்பாண்டியன் கைது, துப்பாக்கிச்சூடு என சங்கிலி தொடர்போல நடந்திருக்கிறது. இனக்கலவரம் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. கலவரம் மூண்டு வரும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அமைதிக்கமிட்டி அமைத்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும். கடந்த தி.மு.க., ஆட்சயில் இது நடக்கவிலல்லை. தற்போதும் மீண்டும் அமைதிக்குழு உருவாக்கப்படும். பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கமிஷன் அமைக்கப்படுவதாக தெரிவித்தார். ஆனால் எதிர்கட்சியினர் நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். தொடர்ந்து முதல்வர் ஜெ., ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷனுக்கு உத்தரவிடப்படுவதாக அறிவித்தார். விசாரணை கமிஷன் அறிக்கை வந்தபின்னர் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமலர்


விருதுநகரில் அரசு பஸ்சுக்கு தீ வைப்பு : ராமநாதபுரத்தில் 7 பஸ்கள் உடைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விருதுநகரில் அரசு பஸ்சுக்கு தீ வைப்பு : ராமநாதபுரத்தில் 7 பஸ்கள் உடைப்பு Empty Re: விருதுநகரில் அரசு பஸ்சுக்கு தீ வைப்பு : ராமநாதபுரத்தில் 7 பஸ்கள் உடைப்பு

Post by ஜாஹீதாபானு Mon Sep 12, 2011 4:12 pm

நேற்று இதை தொலைக்காட்சியில் பார்த்தேன் . ரொம்ப கொடுமை
எங்கள் ஊரிலும் ஒருவர் பலி அதிர்ச்சி சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விருதுநகரில் அரசு பஸ்சுக்கு தீ வைப்பு : ராமநாதபுரத்தில் 7 பஸ்கள் உடைப்பு Empty Re: விருதுநகரில் அரசு பஸ்சுக்கு தீ வைப்பு : ராமநாதபுரத்தில் 7 பஸ்கள் உடைப்பு

Post by ரபீக் Mon Sep 12, 2011 4:12 pm

என்ன கொடுமை சார் !! இன்னுமா இதுபோல ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விருதுநகரில் அரசு பஸ்சுக்கு தீ வைப்பு : ராமநாதபுரத்தில் 7 பஸ்கள் உடைப்பு Empty Re: விருதுநகரில் அரசு பஸ்சுக்கு தீ வைப்பு : ராமநாதபுரத்தில் 7 பஸ்கள் உடைப்பு

Post by kitcha Mon Sep 12, 2011 4:14 pm

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷனுக்கு உத்தரவிடப்படுவதாக அறிவித்தார்.



கமிஷன் அமைப்பதினால் போன உயிர் திரும்ப வந்திடாது.அதேபோல் இனிமேல் கலவரம் வராமல் தடுத்திடவும் முடியாது.



ஜெயலலிதாவின் ஆட்சியில் தலித்துகள் அதிகம் தாக்கப்படுவதும், அவர்கள் பொதுச் சொத்தை சேதப்படுத்துவதும் , ரொம்ப வேதனைக்குரிய விஷயம்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,விருதுநகரில் அரசு பஸ்சுக்கு தீ வைப்பு : ராமநாதபுரத்தில் 7 பஸ்கள் உடைப்பு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

விருதுநகரில் அரசு பஸ்சுக்கு தீ வைப்பு : ராமநாதபுரத்தில் 7 பஸ்கள் உடைப்பு Empty Re: விருதுநகரில் அரசு பஸ்சுக்கு தீ வைப்பு : ராமநாதபுரத்தில் 7 பஸ்கள் உடைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: சேலத்தில் 11 பஸ்கள் கல்வீசி உடைப்பு
» உக்ரைனில் போர் நிறுத்த அறிவிப்பு மக்களை மீட்க பஸ்கள் அனுப்பி வைப்பு
» ராமநாதபுரத்தில் சர்வதேச மீனவர் சந்தை: அரசு அனுமதிக்கு காத்திருப்பு
» பாடாவதி நிலையில் 10,000 அரசு பஸ்கள்
» அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum