ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு

Go down

சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Empty சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு

Post by Guest Mon Sep 12, 2011 12:57 pm

இந்த மாதத்தின் நடுப்பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தனது 18 ஆவது கூட்டத்தொடரை நடத்தவுள்ளது. இந்த கூட்டத்தொடர் குறித்து சிறீலங்கா அரசும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் தமது நகர்வுகளை ஆரம்பித்துவிட்டன.

கடந்த மே மாதம் இடம்பெற்ற 17 ஆவது கூட்டத்தொடரில் ஐ.நாவின் அசைவுகளை இந்திய மத்திய அரசின் உதவியுடன் சிறீலங்கா அரசு முறியடித்திருந்தது. தான் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பில் தானே விசாரணைகளை மேற்கொள்ளும் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அவகாசம் வழங்குவதாக தெரிவித்த மேற்குலகம் தமிழ் மக்களை ஏமாற்றவும் முனைந்திருந்தது.

ஆனால் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு என்பது ஒரு விசாரணைக்குழு அல்ல என்பதைக் கூட புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு தமிழர்கள் முட்டாள்கள் என மேற்குலகம் கணக்குப் போட்டது தான் தவறானது. எனினும் மேற்குலகத்தின் இந்த ஏமாற்றுத்தனத்திற்கு தமிழகத்தின் சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் சாட்டை அடியாக வீழ்ந்திருந்ததுடன், அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளரையும் சென்னைக்கு இழுத்திருந்தது.

ஆனால் அதனை ஈடுசெய்து சிறீலங்கா அரசை மகிழ்ச்சிப்படுத்த இந்திய அரச தலைவர் தனது அடுத்த வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருந்தார். அதுதான், ராஜீவ் காந்தியின் வழக்கில் சோடிக்கப்பட்டு குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்ட மூன்று தமிழர்கள் மீதான து£க்குத் தண்டனையின் உறுதி. இதனை நாம் நீதிக்குப்புறம்பான படுகொலை எனக் கூறினாலும் தவறில்லை. எனினும் அதனையும் ஈழத்தமிழ் மக்களினதும், தமிழக மக்களினதும் ஒருங்கிணைந்த முயற்சியும், செங்கொடியின் தியாகமும் தகர்த்துவிட்டது.

எனினும் தமிழினத்திற்கு எதிராகவே தனது வளங்கள் அனைத்தையும் விரையம் செய்துவரும் இந்திய மத்திய அரசும், அதற்கு துணைபோகும் தமிழின விரோதிகளும் ஓயப்போவதில்லை. ஆனால் அவர்களின் அடுத்த நகர்வுக்கு முன்னர் தமிழினம் தனது அடுத்த நகர்வை துரிதப்படுத்த வேண்டும். அதற்கான பாதையாக இந்த மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

செப்டெம்பர் மாதம் வரையிலும் தவணை கேட்டே, மே மாதம் நடைபெற்ற கூட்டத்தில் இருந்து சிறீலங்காவை இந்தியா காப்பாற்றியிருந்தது. எனினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை செப்டெம்பர் மாதம் நடைபெறும் கூட்டத்தில் முன்வைக்கப்போவதாக அமெரிக்காவும் தன்னைத் தானே ஆறுதல் படுத்தியிருந்தது. தற்போது, நவம்பர் மாதம் வரையிலும் தமது அறிக்கையை சமர்ப்பிக்க முடியாது என சிறீலங்கா அரசு எழுதிக்கொடுத்த அறிக்கையை நல்லிணக்க ஆணைக்குழு வாசித்துள்ளது. சிறீலங்காவை மிரட்டப் போவதாக புறப்பட்ட அமெரிக்காவின் தென்ஆசியா மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக்கும், அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் வெள்ளத்தால் விமானம் புறப்படவில்லை என பின்னடித்துள்ளார்.

ஆனால் அனைத்துலக தகவல்களின்படி அமெரிக்காவின் விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் பறந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால் பிளேக் புறப்பட்ட விமானம் மட்டும் ஏன் பறக்கவில்லை என்பது தான் புரியாதா புதிராக உள்ளது. சிறீலங்காவை மிரட்ட
வேண்டாம் என பிளேக்கை தடுத்தது யார்? மீண்டும் இந்திய மத்திய அரசா? அவ்வாறானால், செப்டெம்பர் மாதம் சிறீலங்கா மீது அழுத்தங்கள் ஏற்படுத்தப்படும், தீர்மானங்கள் கொண்டுவரப்படும் என அமெரிக்க அதிகாரிகள் போட்ட கூச்சல்கள் எல்லாம் வெற்று வேட்டுக்களாகப் போகின்றனவா? எம்மைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள் அதனைத் தான் கூறுகின்றன.

ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கைகள் மறுபடியும் சிதறடிக்கப்படலாம், நாம் மீண்டும் ஏமாற்றப்படலாம். ஆனால் இந்த ஏமாற்றங்களை தகர்த்து, சிறீலங்கா அரசின் மீதான அழுத்தங்களை ஏற்படுத்தி எமது உரிமைகளை பெறுவதற்கான சிறந்த தெரிவாக தமிழகத்துடன், ஈழத்தமிழ் மக்கள் ஏற்படுத்திக் கொள்ளும் வலுவான உறவுதான் உள்ளது. சிறீலங்கா அரசுக்கு எதிராக தனியாக போராடும் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு தமிழகத்தின் உதவிகள் இன்றியமையாதது. தாயகத்து அரசியலை பொறுத்தவரையில் ஐ.நா மனித உரிகைள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் தொடர்பாகவோ, சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாகவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முனையவில்லை.

சிறீலங்கா அரச படையினரின் உதவியுடன், வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் மீது கிறீஸ் பூசப்பட்ட பூதங்களை ஏவிவிடும் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளை கூட முழுமையாக எதிர்க்கமுடியாத அடிபணிவு நிலையில் கூட்டமைப்பு உள்ளபோது, அவர்களால் எவ்வாறு அரசியல் உரிமைகள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் குறித்து பேசமுடியும்? கிறீஸ் பூதங்கள் குறித்து காகித அறிக்கைகளை வெளியிட்டுவரும், கூட்டமைப்பு இது தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேசப்போவதாக ஒரு மாதத்திற்கு முன்னர் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அவர்கள் சிறீலங்கா அரச படையிரின் இந்த நடவடிக்கை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுடன் பேசியதாக இதுவரை தகவல்கள் இல்லை. ஏன்? இதற்கான விடையை தமிழ் மக்கள் தான் தேடவேண்டும். தமிழ் மக்கள் அனுபவிக்கும் வன்முறைகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கே அறிக்கை வெளியிடுவதன் மூலம் நாம் எதனைச் சாதிக்க முடியும்? எனவே தான் புலம்பெயர் தமிழ் மக்கள் இந்திய மத்திய அரசை புறம்தள்ளுவதுடன், தமிழகத்தை தம்முடன் இணைத்துக்கொள்வது, தற்போதைய இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பூகோள அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நகர்வாக அமையும் என கணிக்கப்படுகின்றது.

மீன் பிடிக்கும் றோலர் படகை நவீன வேவுப் படகாக மாற்றியமமைத்து பாக்கு நீரிணையினுள் புகுந்து இந்தியாவின் ஏவகணை மற்றும் அணுவாயுத இருப்பிடங்களை துல்லியமாக அறிந்துகொண்ட சீனாவின் நடவடிக்கையும், அதற்கு தனது பூரண ஆதரவுகளை வழங்கிய சிறீலங்காவின் நடவடிக்கையும் மிக முக்கியமானவை.

தனது எஃப்-7 ரக போர் விமானங்களுக்கு தேவையான வெடிகுண்டுகளை கொண்டுவந்த சிறீலங்கா வான்படையின் அன்ரனோவ்-32 ரக விமானம் சென்னையில் தரையிறங்கியதிலும் சில இராணுவ இரகசியங்கள் அடங்கியுள்ளன. போர் நிறைவடைந்த பின்னர் எஃப்-7 விமானத்திற்கு தேவையான வெடிகுண்டுகள் எதற்கு? மன்னார் கடலில் நடைபெற்ற ‘கடற்காகம்’ என்ற சிறீலங்கா அரசின் படைத்துறை பயிற்சிகள் திருமலையில் தற்போது நடப்பது ஏன்? தற்போதுள்ள சிறீலங்கா இராணுவம் எந்த நாட்டின் இராணுவமான தொழிற்படுகின்றது? பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட இந்திய இராணுவம் தனது பாதுகாப்பான எல்லை என கணிப்பிட்ட தென்பகுதியில் 300,000 அன்னிய இராணுவம் மறைமுகமாக குவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவின் இந்த இராணுவமயப்படுத்தல்களுக்கு எதிராக 1987 களை போல இந்திய இராணுவத்தால் ஒரு உள்நுழைவை வருங்காலத்தில் ஏற்படுத்த முடியுமா? என்றால் அதுவும் தற்போது கேள்விக்குறியானதே.

ஓர் உறைக்குள் இரு கத்திகள் ஆகாது என்ற சீனாவின் தத்துவம் மெல்ல மெல்ல நடைமுறைச்சாத்தியமாகிவருவது கண்கூடு. ஆனால் இதனை விட்டுப்பிடிப்பதில் தான் மேற்குலகம் அதிக கரிசனை காட்டும், தமிழ் மக்களும் இதனை அனுமதிப்பதன் ஊடாகத் தான் சிறீலங்கா அரசின் வன்முறைக் கட்டுக்களில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முடியும்.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய குடிமக்கள் யார்? மத்திய அரசு விளக்கம்
» டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு!
» ஐஐடி மாணவர் உருவாக்கிய இந்திய ரூபாய்க்கான சின்னம்-மத்திய அரசு வெளியிட்டது
»  2050 -ஆண்டில் 60 சதவீத இந்திய மக்கள் நகரங்களில் வாழ்வார்கள்: மத்திய அரசு தகவல்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum