Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரமக்குடியில் வரலாறு காணாத கலவரம்: 144 தடை: ஆறு பேர் பலி
Page 1 of 1
பரமக்குடியில் வரலாறு காணாத கலவரம்: 144 தடை: ஆறு பேர் பலி
பரமக்குடி:தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கலவரம் வெடித்தது. இதில், ராமநாதபுரம் டி.ஐ.ஜி., சந்தீப் மிட்டல், சென்னை போலீஸ் துணை கமிஷனர் செந்தில்வேலன் உட்பட அதிகாரிகள் தாக்கப்பட்டனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் பலியாகினர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
பரமக்குடியில், இமானுவேல் சேகரன் நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. பல மாவட்டங்களிலிருந்து, அஞ்சலி செலுத்த வாகனங்களில் ஏராளமானோர் வந்தனர். தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன் வருகையை எதிர்பார்த்து, பரமக்குடியில் பலர் காத்திருந்தனர்.தூத்துக்குடியில், பகல் 12 மணிக்கு ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்ததும், அவரது ஆதரவாளர்கள், பரமக்குடி ஐந்துமுனை ரோட்டில், மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் செந்தில்வேலன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதை, மறியலில் ஈடுபட்டவர்கள் ஏற்கவில்லை.அந்தக் கும்பலில் இருந்த ஒருவர், செந்தில்வேலன் சட்டையைப் பிடித்து இழுத்தார். பதிலுக்கு, செந்தில்வேலன் கையை ஓங்கினார்.இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள், போலீசார் மீது கற்களை வீசினர். இதனால், பதட்டம் ஏற்பட்டு, பின் கலவரமாக மாறியது. இதில், சிதறி ஓடிய சிலர், பரமக்குடி டி.எஸ்.பி., கணேசனை கீழே தள்ளிவிட்டனர். விழுந்த அவர் தலை மீது, ஒரு கும்பல் பெரிய கல்லைப் போட்டு விட்டு, தப்பி ஓடிவிட்டது. தலையில் காயமடைந்த கணேசனை, அங்கிருந்த போலீசார் பரமக்குடி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பல இடங்களில் இருந்து, பலர் கற்களை வீசியதில், ராமநாதபுரம் டி.ஐ.ஜி., சந்தீப் மிட்டல், எஸ்.பி., செந்தில்வேலன் உட்பட ஏராளமான போலீசார் காயமடைந்தனர். காயத்தால் சுயநினைவை இழந்த சந்தீப் மிட்டல், மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கலவரம் பெரிதானதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த, வஜ்ரா (தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்) வாகனம் கொண்டு வந்தனர். கலவரக்காரர்கள் அந்த வாகனத்திற்கு தீ வைத்ததால், அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
சிதறி ஓடிய கும்பல், பல இடங்களில் இருந்து, போலீசார் மீது கற்களை வீசியதுடன், அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீ வைத்தது. இதையடுத்து, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ஓட்டப்பாலம், ஜெயபால், 20. பரமக்குடி, காந்திநகர், பன்னீர்செல்வம், 50. பரமக்குடி, கணேசன். கீழகொடுமனூர் தீர்ப்பு கனி, 25, உட்பட ஆறு பேர் பலியாகினர்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகும், பரமக்குடி மெயின் ரோடு உட்பட, பல பகுதிகளில், கலவரம் தொடர்ந்தது. தீயணைப்பு வண்டியும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து, பரமக்குடி ஸ்தம்பித்தது. பரமக்குடியின் நான்கு திசைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மதுரை - ராமேஸ்வரம் சென்ற வாகனங்கள், சிவகங்கை, திருவாடனை, ராமநாதபுரம் வழியாக திருப்பி விடப்பட்டன.
நேற்று மாலை 4 மணி வரை தொடர்ந்த கலவரத்தில், ரோட்டில் நடமாடியவர்கள், உயிருக்குப் பயந்து ஓடி, அருகேயிருந்த வீடுகளில் தஞ்சமடைந்தனர். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். காயமடைந்த போலீசார், சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பரமக்குடியில், ஆங்காங்கே அரசு டவுன் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன.பரமக்குடி சம்பவத்தைத் தொடர்ந்து, முதுகுளத்தூரில் கடையடைப்பு நடந்தது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை தவிர, பிற ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பரமக்குடி தாலுகாவில், நேற்று மாலை 4 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மருத்துவமனையில்போலீசார்: பரமக்குடி கலவரத்தில் காயமடைந்த ராமநாதபுரம் டி.ஐ.ஜி., சந்தீப் மிட்டல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அப்பல்லோ மருத்துவமனையிலும், சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் செந்தில்வேலன் மதுரை பிரித்தி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் முனியசாமி, மணியன், பூமிநாதன், டெய்சி நிர்மலா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெண் போலீஸ்மானபங்கம்:பரமக்குடியில் நடந்த கலவரத்தில், பெண் போலீஸ் டெய்சி, மானபங்கம் செய்யப்பட்டார். ரயில்வே சிக்னல்கள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து ரயில்கள் நிறுத்தப்பட்டன.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், போலீசார் பற்றாக்குறையால், நேற்று நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கலவரக்காரர்கள், பரமக்குடி பொன்னையாபுரத்தில் உள்ள ரயில்வே சிக்னல்களையும், ரயில்வே கேட்டையும் உடைத்தனர். கேட்-கீப்பர் அறையையும் தாக்கி நொறுக்கினர். இதையடுத்து, ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் - மதுரை பாசஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான ஆறு பேர்:மொபைல் போன் மூலம் அடையாளம் தெரிந்தது:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், நேற்று நடந்த கலவரத்தில் இறந்த நால்வர் அடையாளம் தெரிந்தது; மற்றொருவர் விவரம் தெரியவில்லை. பரமக்குடி கலவரத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஐந்து பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் மூன்று பேரின் உடல்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன. இருவரது பையிலிருந்த மொபைல் போன்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.இதைக் கேட்ட ராமநாதபுரம் டி.எஸ்.பி., முரளிதரன், போன்களில் பேசியவர்களிடம் கேட்ட போது, ஒருவர் பரமக்குடி ஓட்டப்பாலத்தைச் சேர்ந்த ஜெயபால், 20. இவர், ஒரு மாதத்திற்கு முன் கலப்புத் திருமணம் செய்தவர் என்றும், மற்றொருவர், பரமக்குடி காந்திநகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 50, என்றும் மூன்றாவது நபர் பரமக்குடியைச் சேர்ந்த கணேசன் என்றும் தெரியவந்துள்ளது. இன்று காலை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலியானதை தொடரந்து பலி எண்ணிக்கை ஆறு ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர் பற்றிய விபரம் இது வரை தெரியவில்லை.
குண்டு காயமடைந்தவர்களில் எட்டு பேர், இளையான்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், தலையில் குண்டு காயத்துடன் இருந்த பரமக்குடி அருகேயுள்ள கீழகொடுமனூரைச் சேர்ந்த தீர்ப்பு கனி, 25, பலியானார்.அதேபோல், மதுரை அரசு மருத்துவமனையில் குண்டு காயத்துடன் அனுமதிக்கப்பட்ட மற்றொருவரும் பலியானார். இவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.
தினமலர்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Similar topics
» ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
» ஆந்திராவில் வரலாறு காணாத குளிர்: 2 நாட்களில் 15 பேர் பலி
» சீனாவில் வரலாறு காணாத வெள்ளத்துக்கு 700 பேர் பலி 350 பேரை காணவில்லை
» பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு
» எகிப்து நாட்டில் மீண்டும் கலவரம்; ராணுவம் சுட்டதில் 8 பேர் பலி 260 பேர் காயம்
» ஆந்திராவில் வரலாறு காணாத குளிர்: 2 நாட்களில் 15 பேர் பலி
» சீனாவில் வரலாறு காணாத வெள்ளத்துக்கு 700 பேர் பலி 350 பேரை காணவில்லை
» பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு
» எகிப்து நாட்டில் மீண்டும் கலவரம்; ராணுவம் சுட்டதில் 8 பேர் பலி 260 பேர் காயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|