ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_m10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்;

Go down

குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Empty குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்;

Post by இளமாறன் Sat Sep 10, 2011 7:15 pm

சென்னை, செப். 10-


சட்டசபையில் இன்று முதல் - அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

உண்டி
கொடுத்து, உயிர் கொடுக்கும் உழவுத்தொழிலே உலகத்தின் உன்னதத் தொழில் என்பதை
இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி விவசாயி!

முன்னேற்றப் பாதையிலே
மனதை வைத்து முழு மூச்சாய் அதற்காகத் தினம் உழைத்து மண்ணிலே
முத்தெடுத்துப் பிறர்வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி என்று இதய தெய்வம்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடியபடி, நீரிலே முத்தெடுக்காமல் நிலத்திலே
முத்தெடுத்து ஊருக்கு உணவூட்டும் உன்னதத் தொழிலாளி தான் விவசாயி.

பயிர்
வளர்த்து, உயிர் வளர்க்கும் விவசாயப் பெருமக்களின் வாழ்வு வளம் பெற எனது
தலைமையிலான அரசு பல முன்னோடித் திட்டங்களைத் தீட்டி செயல் படுத்தி
வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும்,
சிறு / குறு விவசாயிகளுக்கும், வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பு அளிக்கும்
பொருட்டு, கருவறை முதல் கல்லறை வரை பயன் அளிக்கக் கூடிய தமிழக
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் என்ற சமூகப் பாதுகாப்புத்
திட்டம், எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், 15.8.2005 முதல் நடை
முறைப்படுத்தப்பட்டது. ஆனால், அதன் பின்னர், 2006 ஆம் ஆண்டு, முந்தைய
மைனாரிட்டி தி.மு.க. அரசு, இந்தத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு
விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்)
சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றியது. இந்த நிலையில், இந்தத் திட்டத்தின்
கீழ், ஏதாவது ஒரு இனத்தின் கீழ் உதவித் தொகையின் அளவு மாற்றம் செய்யப்பட
வேண்டும் என்றால் கூட, சட்டமன்றத்தைக் கூட்டி, இந்தச் சட்டத்திற்கு
திருத்தம் கொண்டு வந்தாக வேண்டும்.

இவ்வாறு, 2006
ஆம் ஆண்டு தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் (சமூகப்
பாதுகாப்பு மற்றும் நலம்) சட்டம் நடைமுறைச் சிக் கல்கள் நிறைந்ததாக
இருந்ததால், அந்தச் சட்டத்தை ரத்து செய்வதற்காக, 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு
விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் (சமூகப் பாது காப்பு மற்றும் நலம்)
நீக்கச் சட்டம் இந்த மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆளு
நரின் ஒப்புதல் பெறப்பட்டு, இதற்கான அரசு அறிவிக்கை 27.8.2011 நாளிட்ட
தமிழ் நாடு அரசிதழில் வெளி யிடப்பட்டது. தமிழ்நாட்டில், விவசாயத்
தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும்
அவர்களது குடும்பத் தினருக்கு வாழ்நாள் முழு வதும் உறுதுணையாக இருக்கும்
வகையில், புதிய, விரிவுபடுத்தப்பட்ட, சமூக பாதுகாப்புத் திட்டம் ஒன்றை எனது
தலைமையிலான அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புதிய திட்டம்
Òமுதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் என்று அழைக்கப்படும். இந்தத்
திட்டத்தின் கீழ், (அ) 2.5 ஏக்கருக்கு மேற்படாத நன்செய் நிலம் அல்லது 5
ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலம் முதலிய வற்றை உடமையாகக் கொண்டு, அந்த
நிலத்தில் நேரடியாக பயிர் செய்யும், 18 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்ட
குறு மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் (ஆ) விவசாயம் சார்ந்த தொழிலில்
ஊதியத்திற் காகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள 18 முதல் 65
வயது வரை உள்ள அனைத்து விவசாய குத்தகைதாரர்கள் / தொழிலாளர்கள் மற்றும் (இ)
இவர்களைச் சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் பயன் அடைவர்.

இத்திட்டத்தின்
கீழ், ஒரு குடும்பத்தில், விவசாயத் தொழிலில் ஈடுபடும் கணவன் மற்றும் மனைவி
இருவருக்கும் பண்பேறிய சிவப்பு வண்ணத்திலும், அவர்களைச் சார்ந்து வாழும்
பிற குடும்ப உறுப்பினர்களுக்கு சாம்பல் நிறத்திலும் அடையாள அட்டைகள்
வழங்கப்படும். இவ்வாறு அடையாள அட்டை பெறுபவர்கள் அனைவரும் அரசின் திட்ட
உதவிகளைப் பெற தகுதி உடையவர்கள் ஆவர்.

இதுவரை
குடும்பத் தலைவருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்த நிலை மாறி
இந்தப் புதிய உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் குடும்ப உறுப்பினர் ஒவ்
வொருவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படுவதால், எவ்வித விடுபடுதலும் இன்றி,
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் திட்ட உதவிகளைப் பெற வழிவகை ஏற்படும்.
விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள்
கல்லூரிக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில், இவர்கள்
வேறு எந்த கல்வி உதவித் திட்டத்தின் கீழ் உதவி பெற்றாலும், இந்தத்
திட்டத்தின் கீழும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு வழி வகை
செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கு கீழ்க்கண்ட வாறு உதவித் தொகைகள் வழங்கப்படும்:-

*
தொழிற்பயிற்சி நிறு வனம் (ஐ.டி.ஐ.), பல்தொழில் நுட்ப பயிற்சி நிறுவனம்
(பாலிடெக்னிக்) மற்றும் இதர பட்டயப் படிப்புகளுக்கு 1,250 ரூபாய் முதல்
1,950 ரூபாய் வரை ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

* இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு 1,750 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

* முதுகலை பட்டப் படிப்புகளுக்கு 2,250 ரூபாய் முதல் 3,750 ரூபாய் வரை ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

*
சட்டம், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை அறிவியல் போன்ற
தொழிற்கல்வி படிப்புகளுக்கு இளங்கலையில் 2,250 ரூபாய் முதல் 4,750 ரூபாய்
வரையிலும், முதுகலையில் 4,250 ரூபாய் முதல் 6,750 ரூபாய் வரையிலும் ஆண்டு
ஒன்றுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

2006
ஆம் ஆண்டு, முந்தைய தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்தில், வேறு
ஏதேனும் மத்திய அல்லது மாநில அரசு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை
பெறப்பட்டால், இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெற முடியாது
என்ற நிலைமை தற்போது மாற்றப்பட்டு, வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்
தொகை பெற்றாலும், இந்தத் திட்டத்திலும் கல்வி உதவித் தொகை பெற இயலும்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூகநலத்
துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திருமண உதவி திட்டத்தின் கீழ் உதவித்
தொகை பெற தகுதி உள்ளவர்கள் அத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவர்.
அவ்வாறு திருமண உதவி திட்டங்களின் கீழ் உதவித் தொகை பெற இயலாதவர்களுக்கு
இந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்
கீழ் திருமண உதவித் தொகையாக, ஆணுக்கு 8,000 ரூபாயும், பெண்ணுக்கு 10,000
ரூபாயும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பதிவு
பெற்ற உறுப்பினருக்கு சுகா தாரம் மற்றும் குடும்ப நலத் துறையால் மகப்பேறு
உதவிக்கென செயல் படுத்தப்படும் திட்டத்தின் மூலம் இந்த உதவித் தொகை
வழங்கப்படும். மகப்பேறு உதவித் தொகையினை எளிதாகப் பெறும் வகையில் தனி
வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மூலம் தேவையான சான்றிதழ்களை
ஒருமுகப் படுத்தி வழங்க இத்திட்டத்தின் கீழ் வசதிகள் செய்து தரப்படும்.
60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள்
மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாய் ஓய்வூதியமாகப் பெறுவர்.

முந்தைய
தி.மு.க. அரசால் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், இயற்கை மரணம் மற்றும்
விபத்து போன்ற நிகழ்வுகளில் குடும்பத் தலைவருக்கு பாதிப்பு ஏற் பட்டால்
மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டது. அது தற்போது மாற்றப்பட்டு, ஒரு
குடும்பத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள
நிலையில், இவர்கள் இருவருக்கும் தனித் தனியே அடையாள அட்டைகள்
வழங்கப்படுவதால், இந்த இருவரில் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் நிவாரணம்
வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் உறுப்பினரோ
அல்லது அவரைச் சார்ந்தவரோ இறக்க நேரிட்டால், அந்தக் குடும்பத்திற்கு ஈமச்
சடங்கிற்கான உதவித் தொகை உடனடியாக வழங்கப்படும். ஈமச் சடங்கு நிவாரணம் பெற
இறப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படுவதுடன்,
குடும்பத் தலைவர் இறந்தால் மட்டுமே ஈமச் சடங்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற
நிபந்தனையும் தற்போது மாற்றப்பட்டுள்ளது என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக்
கொள்கிறேன்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மாவட்ட அளவில் ஆட்சித் தலைவர்கள்
மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மூலமாக செயல்படுத்தப்படும். திட்டச்
செயல்பாட்டினை மேற்பார்வை இடுவதற்கு அரசு அளவில் ஒரு உயர்நிலைக் குழு
அமைக்கப்படும். முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் என்ற இந்த
விரிவுபடுத்தப்பட்ட புதிய திட்டம், தமிழக விவசாயிகள் மற்றும் விவசாயத்
தொழிலாளர்கள் ஆகியோருக்கு மிகுந்த பயன் அளிக்கக் கூடிய திட்டமாக இருக்கும்
என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்: பிரதமர் தொடங்கி வைப்பு
» ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி?
» ஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை...மார்ச் 1–ந் தேதி முதல் அமல்
» டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்
» அஞ்சுகம் அம்மையார் திருமண உதவி திட்டம் பெயர் மாற்றம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயர் சூட்டப்பட்டது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum