புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விதியால் விரட்டப்பட்டு பலியான தூத்துக்குடி இன்ஜினியர்
Page 1 of 1 •
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
டில்லியில் நடந்த குண்டுவெடிப்பில், தூத்துக்குடி இன்ஜினியர் பாத்திரன் என்பவர் சிக்கி, உயிரிழந்த சம்பவத்தின் பின்ணனி மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மரணத்தை, தானே வலியத் தேடிச் சென்று ஏற்றுக் கொண்டாரா அல்லது மரணம் இவரை விடாமல் துரத்தி வந்து உயிரை பறித்துக் கொண்டதா என்கிற அளவில், மிகவும் கொடுமையாகவும் பரிதாபமாகவும் உள்ளது.
டில்லியில், கடந்த புதன்கிழமை அன்று ஐகோர்ட் நுழைவு வாயிலில் சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஏற்கனவே 12 பேர் பலியாகியுள்ள நிலையில், 13வது நபராக தமிழர் ஒருவரும் பலியாகியுள்ளார்.இந்த குண்டுவெடிப்பில், தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் பணியாற்றும் பாத்திரன் என்ற இன்ஜினியர் ஒருவரும் பலியாகியுள்ளார். அங்கு, கண்காணிப்புப் பிரிவில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றும் இவருக்கு வயது 55 ஆகிறது. டில்லி குண்டுவெடிப்பில் இவர் சிக்கி, படுகாயங்களுடன் ஆர்.எம்.எல்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு, வலது காலில் 2 முறிவுகளும், இடது காலில் ஒரு முறிவும் ஏற்பட்டது. ஆர்.எம்.எல்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்று இரவே, இவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. ஆயினும், நேற்று முன்தினம் மாலையில், இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பின்னர், அது படிப்படியாக அதிகமாகி, இதயத்துடிப்பு அதிகமானது. மிகவும் சிரமப்பட்ட அவருக்கு, கடைசியில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உயிர் இரவு 7.37 மணி அளவில் பிரிந்தது.
தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் டெண்டர் பிரச்னை ஒன்றுக்காக, டில்லிக்கு பாத்திரன் வந்திருந்தார். புதன் கிழமை அன்று காலை, டில்லி சுப்ரீம் கோர்ட்டிற்கு அவர் சென்றிருக்கிறார். அங்கு, நெடுமாறன் என்ற வழக்கறிஞரை சந்தித்த பத்ரன், துறைமுகப் பொறுப்புக் கழக வழக்கு தொடர்பாக, டில்லி ஐகோர்ட்டில் ஆஜராகி உதவும்படி கேட்டுக் கொண்டார். அவரும், பாத்திரனையும் தனது உதவியாளர் ராஜபாண்டியன் என்பவரையும், தனது காரில் ஏற்றிக்கொண்டு, சுப்ரீம்கோர்ட்டில் இருந்து கிளம்பி, ஐகோர்ட்டிற்கு வந்துள்ளார். வந்தவர் பாத்திரனையும், ராஜபாண்டியனையும் நுழைவு வாயில் அருகே இறக்கிவிட்டு விட்டு, பார்வையாளர் நுழைவுச் சீட்டை பெற்றுக் கொண்டு இருவரும் உள்ளே வரும்படியும், தான் முன்னால் சென்று வழக்கு தொடர்பான ஆயத்த வேலைகளை ஆரம்பிக்கிறேன் என்றும் கூறிவிட்டு, கோர்ட்டிற்குள் சென்றுவிட்டார்.
ராஜபாண்டியனும், பாத்திரனும் அங்குள்ள 5ம் எண் நுழைவு வாயில் அருகே, நுழைவுச் சீட்டு பெறுவதற்காக, பார்வையாளர்களுக்கான வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தான், படுபயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. குண்டுவெடிப்பில் இருவரும் சிக்கி, படுகாயங்கள் அடைந்தனர். உடனடியாக, காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு, மருத்துவமனைகளுக்கு சிலர் விரைந்துள்ளனர். அப்போது, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், ஆம்புலன்சில் படுத்தபடியே இருந்த பாத்திரன், தனது செல்போனில் இருந்து தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் சுப்பையாவை தொடர்பு கொண்டார். தான் குண்டுவெடிப்பில் சிக்கி விட்டதாகவும், தனது கால்கள் பலமாக அடிபட்டிருப்பதாகவும், கால்கள் மிகவும் கனமாக இருப்பதால், தூக்கக் கூட முடியவில்லை என்றும் கூறி அழுதிருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுப்பையா, கவலைப்படாதீர்கள். வேண்டிய ஏற்பாடுகளை விரைந்து செய்கிறேன் என்று ஆறுதல்படுத்தியுள்ளார். பின்னர், உடனடியாக பாத்திரனின் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு, அவரது மனைவி வதிவூரணியையும், மகன் பிரதீப் குமாரையும் டில்லிக்கு அனுப்பி வைக்க சுப்பையா ஏற்பாடு செய்தார். அதோடு நிற்காமல், டில்லியில் உள்ள மத்திய போக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டு, விஷயத்தை தெரிவித்த சுப்பையா, அங்கிருக்கும் இரண்டு அதிகாரிகளை, உடனடியாக ஆர்.எம்.எல்., மருத்துவமனைக்கு விரைந்து அனுப்பி, உடனிருந்து கவனித்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும், தூத்துக்குடியில் இருந்தே இரண்டு டாக்டர்களை டில்லிக்கு அனுப்பி, விரைந்து சென்று பாத்திரனை குணப்படுத்துவதற்கு உண்டான ஏற்பாடுகளையும் செய்தார். இருப்பினும், இந்த ஏற்பாடுகள் எதுவுமே பலனளிக்காமல், பாத்திரனின் உயிர் பிரிந்துவிட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உயிரிழந்த பாத்திரனின் உடல், லேடி ஹார்டிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைத்து பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. பின், மாலை 4.30 மணியளவில், இண்டியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக, தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த பாத்திரன், திருநெல்வேலியை அடுத்த வல்லநாட்டைச் சேர்ந்தவர். படுகாயமடைந்த இன்னொருவரான ராஜபாண்டியன் என்பவர், இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வந்ததன் பின்ணனி விதியின் வசமோ: பாத்திரன் டில்லிக்கு வந்து உயிரை பறிகொடுத்ததற்கான காரணமே கூட வினோதமாக உள்ளது. தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் சார்பில், மூன்றாவது கார்கோ டெர்மினல் கட்டப்பட்டு வருகிறது. 332 கோடி ரூபாய் செலவில், தனியாருடன் அரசாங்கம் இணைந்து கட்டப்படும் இந்த திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டு இருந்தது. இதற்கு, பலரும் விண்ணப்பித்திருந்த நிலையில், தூத்துக்குடியில் ஏற்கனவே டெர்மினல் வைத்துள்ள ஒரு நிறுவனம் சார்பில், டெண்டர் கேட்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனத்திற்கு டெண்டர் கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்நிறுவனம் சார்பில், டில்லி கப்பல்போக்குவரத்து அமைச்சகத்தின் கூடுதல் செயலரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரை விசாரித்த அமைச்சகம், டெண்டர் அளிக்கப்படாதது சரிதான் என்று கூறி, அந்தப் புகாரை நிராகரித்துவிட்டது. இதையடுத்து, அந்நிறுவனம் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட், இந்த வழக்கு விஷயங்கள் எதுவும் டில்லி ஐகோர்ட் வரம்பிற்குள் வராது. உரிய வரம்பிற்குள் உள்ள கோர்ட்டை (மதுரை ஐகோர்ட்) அணுகவும் என்று கூறிவிட்டது. இந்த வழக்கிற்காகவே, பத்திரன் டில்லிக்கு வந்து சேர்ந்துள்ளார். பாத்திரன் டில்லிக்கு வந்து உயிரைப் பறிகொடுக்க வேண்டுமென்று, விதி இருந்திருக்குமோ என்றே தோன்றுகிறது.
தவறாக எழுதப்படும் தமிழர்களின் பெயர்கள்:
பாத்திரனின் பெயர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் பட்டியலில், பாத்ரா என்று எழுதப்பட்டு இருந்தது. இவருடன், ராஜபாண்டியன் என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரத்தைச் சேர்ந்த அவரது பெயரை, பாண்டே என்று டாக்டர்கள் எழுதியுள்ளனர். இதனால், படுகாயமடைந்து சிசிக்சை பெறுபவர்களில் தமிழரும் இருக்கிறார் என்ற தகவல், டில்லி வாழ் தமிழர்களுக்கோ மீடியாக்களுக்கோ தெரியாமலேயே போனது. இத்தனைக்கும் மருத்துவமனையில் அட்மிட் ஆகி 24 மணி நேரங்கள் வரை, பாத்திரன் சுயநினைவுடன் தான் இருந்துள்ளார். சரியான பெயர் எழுதப்பட்டு இருக்கலாம். ஆனால், தமிழர்களின் பெயர்கள், வடஇந்தியர்களின் வாயிலும் நுழையாது; எழுத்திலும் வராது. தமிழர்களின் பெயர்களை சரிவர எழுத, பேச வேண்டுமென்பதில் அக்கறையோ, ஆர்வமோ வட இந்தியர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை என்பதற்கு, இது ஒரு உதாரணம்
மத்திய அமைச்சர் வாசன் இரங்கல்:
டில்லி குண்டுவெடிப்பில் சிக்கி, தூத்துக்குடி வ.உ.சி., துறைமுக அதிகாரி பலியானதற்கு, மத்திய அமைச்சர் வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இத்துறைமுகத்தில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றியவர் பத்ரன், 57. வழக்கு தொடர்பாக, செப்., 7ல் டில்லி ஐகோர்ட்டிற்கு சென்றபோது, அங்கு பயங்கரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில், படுகாயமடைந்தார். நேற்று முன்தினம் இரவு, அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் பலியானதற்கு, மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசன், இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கப்பல்துறை அமைச்சகம், பத்ரன் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும் உறுதியளித்துள்ளார். துறைமுகத்தலைவர் சுப்பையாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே, பத்ரன் உடல் இன்று காலை அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஆழ்வார்கற்குளத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கு இறுதிச் சடங்கு நடக்கிறது.

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1