புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_m10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_m10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_m10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_m10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_m10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_m10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_m10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_m10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_m10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_m10மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Sep 09, 2011 10:17 am

குழந்தைகள் என்றால் அவர்கள் மீது பிரியம் கொள்ளாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதே போல குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் என்றால் கொள்ளைப்பிரியம் உண்டு.

குழந்தைகளும் அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு பொருட்கள் ஒரே இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும். அந்த இடத்தில் குழந்தைகளின் சந்தோஷ கூச்சலும், மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடத்தானே செய்யும்.

அப்படி குழந்தைகளை குதுகலிக்கச் செய்யும் எந்திர பொம்மைகள் (ரோபோ) அதிக அளவில் தயாரிக்கப் படுகிறது. அதாவது மனித உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்களின் கட்டளையை உணர்ந்து அதற்கு ஏற்ப செயல்படுவது போன்ற திறன் உள்ள ரோபோக்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

அத்தகைய ரோபோக்களில் ஒன்று 'குவாசி' என்று பெயரிடப்பட்டுள்ள ரோபோ ஆகும். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் இருக்கும் கார்னிஜ் மிலன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் இந்த குவாசி ரக ரோபோ குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது.

தனது உருண்டையான தலையை அசைத்து கண்கள் ஒளிர பார்வையாளர்களிடம் வெகு சகஜமாக உரையாடியது குவாசி. இது பார்வையாளர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன் அவர்களுடன் வந்த வாண்டுகளை மிகவும் குஷிப்படுத்தியது.

இந்த ரோபோவின் சிறப்பு என்ன என்றால் அது மனிதர்களிடம் உள்ள பல்வேறு உணர்வுகளில் 5 வகையான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும். கார்னிஜ் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த ரோபோ 76 சென்டி மீட்டர் உயரம் கொண்டது. சுமார் 12 வயது நிரம்பிய ஒரு சிறுவனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த குவாசி ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ A39-1
பொதுவாக மனித உணர்வுகள் அவர்களின் கண்களிலும் அங்க அசைவுகளிலும் வெளிப்படும். அதற்கு ஏற்ப குவாசியும் தனது உணர்வுக்கு ஏற்ப அதன் கண்களில் வண்ண விளக்கு ஒளிரும், அதன் அங்க அசைவுகளும் அமைந்து இருக்கும்

அதாவது மகிழ்ச்சியாக இருக்கும் போது குவாசியின் கண்கள் பச்சை நிறத்தில் ஒளிரும். சோகமாக இருக்கும் போது நீல நிறத்திலும், குழப்பத்தில் இருக்கும் போது மஞ்சள் நிறத்திலும், கோபமாக இருக்கும் போது சிவப்பு நிறத்திலும் அதன் கண்கள் ஒளிரும்.

அதோடு மட்டுமின்றி, அந்தந்த உணர்வுகளுக்கு ஏற்றவாறு தனது உடலின் அசைவுகளையும் மாற்றிக்கொள்ளும் வகையில் குவாசி உருவாக்கப்பட்டுள்ளது. தோள்களை உயர்த்தியும், குலுக்கியும் தனது இயலாமையை வெளிப் படுத்துதல், கையை நீட்டி ஒரு பொருளை சுட்டிக் காட்டுதல், தலையை திருப்பிக் கொள்ளுதல், மூக்கின் மீது விரல் வைத்தல் போன்ற பணிகளையும் இது செய்யும்.

குவாசி ரோபோ மொத்தம் 32 வகையான உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திறனை வெளிப்படுத்துவதற்கு ஏற்ப அதன் இரண்டு காதுகள், இரண்டு கண்கள், கை, கால்கள் ஆகியவற்றில் உணரி (சென்சார்) கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர அதன் கண்களில் சக்தி வாய்ந்த சிறிய வீடியோ கேமிராவும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் மைக்ரோபோன், ஆம்பிளிபையர், மிக்சர், சவுண்ட் பிராசசர், கம்பியில்லா ஆடியோ ரிசீவர் போன்றவையும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர 4 சிறிய கம்ப்யூட்டர்களும் இதில் உண்டு. இந்த 4 கம்ப்யூட்டர்கள் தான் குவாசியின் மூளையாக செயல்படுகிறது. மேலும் இந்த ரோபோவின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு என்று தனி மென்பொருள் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அதன் செயல்பாடுகள் இருக்குமாறு மென்பொருள் இயக்கம் இருக்கும்.

உதாரணமாக நாம் குவாசி ரோபோ அருகே சென்றதும் அது 'ஹலோ' சொல்லும். நாம் பதிலுக்கு 'ஹாய்' சொல்லா விட்டால் 'ஹலோ உங்களைத் தானே...", என்று மீண்டும் பேச்சுக் கொடுக்கும். அதன்பிறகும் நாம் கவனிக்கவில்லை என்றால் குட்மார்னிங் நண்பரே, என்னுடன் பேச விரும்புகிறீர்ளா? எனது பெயர் குவாசி... நான் ஒரு ரோபோ...உங்களை நான் மகிழ்விக்கிறேன்... என்ற ரீதியில் பேசும்.
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ A39-2

இத்தனைக்கு பிறகும் நாம் அதை கண்டுகொள்ளாமல் இருந்தால் குவாசி வருத்தம் அடைந்து விடும். உடனே அதன் கண்கள் நீல நிறமாக மாறிவிடும். தோள்களை சுருக்கிக் கொண்டு, தலையை தொங்கப் போட்டுக்கொண்டு 'உம்' என்று இருக்கும்.

இந்த செயல்களை செய்யும் அளவுக்கு அதில் உள்ள மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

அதே போல சிறுவர்களுடன் விளையாடும் போது குவாசி தோற்று விட்டால் கண்களை சிவப்பு நிறத்துக்கு மாற்றிக் கொண்டு தலையை கவிழ்ந்து கொள்ளும்.

12 வயது சிறுவன் எப்படியெல்லாம் தனது கோபம், மகிழ்ச்சி, சோகம், குழப்பம், ஆகியவற்றை வெளிப்படுத்துவானோ அது போல குவாசியும் தனது கோபம், மகிழ்ச்சி, சோகம், குழப்பம் ஆகியவைகளை தனது உடல் அசைவுகளின் மூலமாகவும் கண்களில் ஒளிரும் நிறத்தினைக்கொண்டும் தனது நிலையினை மாற்றிக் கொள்கிறது.

குவாசி ரோபோவை உருவாக்கிய ஆய்வுக்குழுவினர் கூறும் போது....

விழாக்கள், நிகழ்ச்சிகள் நடைபெறும் போது அதில் கலந்து கொள்ள வருபவர்களை வரவேற்று அவர்களுக்கு வாழ்த்து சொல்லும் வகையில் இருக்குமாறு முதலில் குவாசியை உருவாக்கினோம். குவாசியை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து ஆய்வுகளை உருவாக்கி வருகிறோம். மனித உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படும் வகையில் இனி வரும் கண்டுபிடிப்புகள் அமையும்.

வீடுகள், சிறிய அளவிலான அலுவலகங்கள் போன்றவற்றில் வரவேற்பு பணிகளுக்கும், சிறுவர்களுடன் விளையாடவும் அவர்களுடன் பொழுதைக்கழிக்கவும் குவாசியை பயன் படுத்தலாம்.

குவாசி ஒரு குழந்தையிடம் வித்தியாசமான தமாஷ் ஒன்றும் செய்தது. அதாவது ஒரு சிறுமி, 'அன்பாக பேசும் குவாசியே உனது குணாதிசயத்தை மாற்றிக்காட்ட உன்னால் முடியுமா? என்று குறும்பு செய்தாள்.

குவாசியும் ஓ என்னால் முடியுமே. இதோ பார் என்று முகம் மாறியது. தனது உடலை விரைப்பாக வைத்துக்கொண்டு, கைகளை கோபமாக தூக்கிக் கொண்டு 'நான் தான் உனது கோபக்கார தந்தை' என்று சத்தமாக கூறியது.

பொதுவாக குழந்தைகள் மீது கோபம் வரும் போது ஒரு தந்தையின் உடல் அசைவுகள் எப்படி இருக்குமோ? அது போல குவாசி நடித்துக்காட்டி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ A39-3

இது போன்ற கண்டுபிடிப்புகள் எல்லாம் சும்மா வேடிக்கை வினோதங்களுக்கு மட்டும் தானா? என்று நினைத்தால் அது தவறு. 'ஆர்டிபீசியல் இன்டலிஜென்ஸ்' எனப்படும் செயற்கை புத்திசாலித்தனம் தொடர்பான ஆய்வின் முன்னோடி தான் இது போன்ற தமாஷ் கண்டுபிடிப்புகள் எல்லாம். மனிதனைப் போன்ற புத்திசாலித்தனத்துடன் செயல்படும் வகையில் எந்திர மனிதனை உருவாக்க வேண்டும் என்பது தான் ரோபோ ஆராய்ச்சியாளர்களின் திட்டமாகும். அதற்கான ஆரம்பக் கட்ட முயற்சிகள் தான் இந்த குவாசி போன்ற ரோபோக்கள்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 09, 2011 10:51 am

சூப்பரா இருக்கே இந்த ரோபோ எவ்வளவு விலை இருக்கும் அதிர்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக