புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிக் கதைகள் I_vote_lcapநீதிக் கதைகள் I_voting_barநீதிக் கதைகள் I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
நீதிக் கதைகள் I_vote_lcapநீதிக் கதைகள் I_voting_barநீதிக் கதைகள் I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நீதிக் கதைகள் I_vote_lcapநீதிக் கதைகள் I_voting_barநீதிக் கதைகள் I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
நீதிக் கதைகள் I_vote_lcapநீதிக் கதைகள் I_voting_barநீதிக் கதைகள் I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
நீதிக் கதைகள் I_vote_lcapநீதிக் கதைகள் I_voting_barநீதிக் கதைகள் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
நீதிக் கதைகள் I_vote_lcapநீதிக் கதைகள் I_voting_barநீதிக் கதைகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிக் கதைகள் I_vote_lcapநீதிக் கதைகள் I_voting_barநீதிக் கதைகள் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
நீதிக் கதைகள் I_vote_lcapநீதிக் கதைகள் I_voting_barநீதிக் கதைகள் I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
நீதிக் கதைகள் I_vote_lcapநீதிக் கதைகள் I_voting_barநீதிக் கதைகள் I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீதிக் கதைகள் I_vote_lcapநீதிக் கதைகள் I_voting_barநீதிக் கதைகள் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீதிக் கதைகள் I_vote_lcapநீதிக் கதைகள் I_voting_barநீதிக் கதைகள் I_vote_rcap 
18 Posts - 3%
prajai
நீதிக் கதைகள் I_vote_lcapநீதிக் கதைகள் I_voting_barநீதிக் கதைகள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நீதிக் கதைகள் I_vote_lcapநீதிக் கதைகள் I_voting_barநீதிக் கதைகள் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நீதிக் கதைகள் I_vote_lcapநீதிக் கதைகள் I_voting_barநீதிக் கதைகள் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நீதிக் கதைகள் I_vote_lcapநீதிக் கதைகள் I_voting_barநீதிக் கதைகள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நீதிக் கதைகள் I_vote_lcapநீதிக் கதைகள் I_voting_barநீதிக் கதைகள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிக் கதைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 16, 2008 1:34 am

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர* நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர... தனிமை.. தனிமை.. தனிமை..!

சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்..

"உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!"

கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்..

" நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!"

எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்..

சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..

"ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!"

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..

மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை... ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க.... அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்...?

மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..

செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..

"நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..!"

நீதி : தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறை கூறாதீர்கள்..!

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 16, 2008 1:36 am

கீதாவுக்கு அன்று பிறந்தநாள்.. மிகவும் பரபரப்பாக இருந்தாள். அவளுடன் படிக்கும் ரமேஷிடமிருந்து வாழ்த்து எஸ் எம் எஸ் அல்லது அழைப்பு வரும் என்று காத்திருந்தாள். யார் யாரோ வாழ்த்தினர். ஆனால் ரமேஷிடமிருந்து வரவில்லை. கீதா சற்று கலக்கமுற்றாள். அவளுக்கு அவனைப் பிடிக்கும்.. அவனுக்கு..? தெரியாது.

அப்போது, கீதாவின் குட்டித் தங்கை ரமா கையில் தன் பாடநோட்டுடன் வந்து கீதாவைக் கூப்பிட்டாள்.

"அக்கா..!"

கீதா குனிந்து பார்த்து, அலட்சியப்படுத்தினாள்.. இவளுக்கு இதே வேலை.. இது என்ன.. அது என்ன.. அதைச் சொல்லிக்கொடு என்று ஒரே தொல்லை. இரண்டாம் வகுப்பு படிக்கும் ரமாவுக்கு கீதா என்ன ட்யூஷன் மிஸ்ஸா..?

ரமா மீண்டும் அழைத்தாள்.. "அக்கா..!"

"ப்ஸ்ஸ்ஸ்ஸ்.. தொல்லை பண்ணாதே.. அப்புறம் வா..!"

இந்த ரமேஷுக்கு ரொம்ப கர்வம்.. ஒரு க்ரீட்டிங் அனுப்பினால் குறைந்தா போய்விடுவான்..? மனதுக்குள் சிந்தனை ஓடியதில் நேரம் போனது தெரியவில்லை.

இரவும் வந்தது. ஆனால் ரமேஷிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. கீதா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. 'திமிர் பிடித்த ராஸ்கல்.. அந்த ஷீலா பிறந்தநாளுக்கு உருகி உருகி கால் செய்தானே.. அவளுக்கு நான் என்ன குறைச்சலா..? மனம் குமைந்தது.

மீண்டும் ரமா.. "அக்கா.. ப்ளீஸ்.. இந்த நோட்டைப் பாரேன்..!"

கீதாவுக்கு இருந்த கடுப்பில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நோட்டைப் பிடுங்கி தரையில் விசிறி அடித்தாள். "போ சனியனே.. மூட் தெரியாமல் உயிரை வாங்காதே..!"

குழந்தை காயப்பட்டு போயிற்று. மெல்ல நோட்டைப் பொறுக்கி எடுத்து தன் அறைக்குத் திரும்பும் ரமாவின் கண்களில் கண்ணீர் கரை கட்டியது.

அப்புறமும் கொஞ்ச நேரம் ரமேஷுக்காக காத்திருந்தாள் கீதா. பலனில்லை.

வீட்டின் உள்ளே ஏதோ வேலையாக போகும்போது கீதா கவனித்தாள்.. ரமாவின் அறையில் விளக்கு எரியவில்லை. தூங்கிவிட்டாளோ..? பாவம் .. குழந்தையை ரொம்ப புண்படுத்திவிட்டேனோ..? கீதா மனம் கசிந்தது..

அறைக்குள் வந்து மெல்ல அழைத்தாள்..

ரமா...!

அக்கா..!

தூங்கிட்டியா..?

இல்லேக்கா..

சரி நோட்டை எடுத்துட்டு வா..

குழந்தை குதூகலத்துடன் கட்டிலில் இருந்து குதித்து ஓடி நோட்டை எடுத்துவந்து நீட்டியது.

எது உனக்கு புரியலே..? காட்டு.. சொல்லித் தரேன்..

இதைப் பார் அக்கா..

நோட்டை விரித்த கீதா வியந்து போனாள்.. குழந்தை தனக்குத் தெரிந்த முறையில் ஒரு பிறந்த நாள் வாழ்த்துப்படம் வரைந்து வைத்திருந்தாள்..!

என் அன்பு அக்காவுக்கு என்று பெரிய எழுத்துகளில் வண்ண வண்ண எழுத்துகளில் எழுதி, கீழே ஒரு பூங்கொத்து.. அதற்கும் கீழே பிறந்த நாள் வாழ்த்துகள் என்று மீண்டும் வண்ண எழுத்துகள்..!

நேற்றிரவு நீண்ட நேரம் ஏதோ படிக்கிறாள் என்று நினைத்தோமே.. இதைத்தான் வரைந்தாளா..? ஆசையுடன் வாழ்த்து தெரிவிக்க வந்த குழந்தையைத்தான் விரட்டி அடித்தேனா..?

"என் செல்லமே.." வாரியணைத்து முத்தமழை பொழிந்தாள் கீதா.

நீதி : கானல் நீருக்காக காலடியில் ஊற்றெடுக்கும் நறுஞ்சுவை நீரை உதாசீனம் செய்யாதீர்.

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 16, 2008 1:39 am

நபிகள் நாயகம் (அவர்மேல் சாந்தமும் அமைதியும் நிலவுவதாக) அவர்களின் சீடர் ஒருவருக்கு மேலே உள்ள குரான் வரிகளின் பேரில் மிகுந்த நம்பிக்கையுண்டு. அவர் செல்லுமிடங்களில் எல்லாம் இந்த வரிகளை உரத்து உச்சரிப்பார்.

அந்தச் சீடர்மீது ஒரு யூதப் பெண்மணி அழுக்காறு கொண்டிருந்தாள். ஏதாவது சதி செய்து சீடருக்கு அவப்பெயர் வாங்கித்தர முனைந்தாள். ஒருநாள் நிறைய பலகாரங்கள் செய்து அவற்றில் நஞ்சு கலந்து சீடருக்கு அனுப்பினாள். அவளுக்குத் தெரியும்; சீடர் தான் மட்டும் உண்ணாமல் மற்றவருக்கும் பகிர்ந்து தருவாரென்று.

சீடர் அவசர பணி நிமித்தம் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்ததால், பலகாரங்களையும் தன்னுடனே எடுத்துச் சென்றார். போகும்வழியில் இரு பயணிகள் எதிர்ப்பட்டனர். பசியால் மிகவும் களைத்திருந்தனர். சீடர் அவ்வளவு பலகாரங்களையும் அவர்களிடமே கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

நஞ்சு கலந்த பலகாரத்தை உண்ட இருவரும் இறந்துவிட்டனர். சீடர் கைது செய்யப்பட்டார். வழக்கு மதினாவில் வாழ்ந்துகொண்டிருந்த நபிகள் (ஸல்) அவர்கள் திருமுன்னருக்கு வந்தது. சதிகார யூதப் பெண்மணியும் விவரம் அறிந்துகொள்ள வந்திருந்தாள்.

அங்கே அவளுக்கு கடும் அதிர்ச்சி.. இறந்து கிடந்த இருவரும் அவளுடைய மகன்கள்..! வெளியூர் சென்று திரும்பும் வழியில் தன் தாயின் சதிக்கு தனயர்கள் இருவரும் பலியாகிவிட்டனர். யூதப் பெண்மணி அழுதாள், அரற்றினாள்.. தன் தவறை ஒப்புக்கொண்டாள்.


நீதி : தினை விதைத்தால் தினை கிடைக்கும். வினை விதைத்தால் வினை கிடைக்கும். (புனித குரான் : 17:7)


avatar
Guest
Guest

PostGuest Tue Dec 16, 2008 1:44 am

சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.
ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.
பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.

வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது.

பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் 'நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்' என்று சொன்னான்.

மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள்.

இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.

அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர்.

பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது.

மற்ற ஒன்பது விவசாயிகளும் "இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு" என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர்.

அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர்.

அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.

அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.

மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர்.

நீதி : கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய்.
தீர விசாரித்துத் தெளிவதே மெய்.


avatar
Guest
Guest

PostGuest Tue Dec 16, 2008 1:46 am

ஒரு நாட்டை ஆண்ட அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.

தலைமை மருத்துவன் "மன்னா! இதற்கு மருந்தே கிடையாது" என்று உண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான்.

ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான்.

மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர். "வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா" என்று கூறினர்.

நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியவில்லை.

அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமை மருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும் புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் "என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்" என்று கூறினான்.

வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள். அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.

அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.

அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். "மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம் முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்" என்றான்.

மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. "இப்போதே அந்தப்புரத்திற்குப் போய் தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்" என்று கிளம்பினான்.

அப்போது மருத்துவன் "மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!" என்றான்.

முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான். மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டே ஓடி விட்டார்கள்.

அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான். அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. "குரங்கை நினைக்கக் கூடாது" என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை.

மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான்.

ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது.

பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப் பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.

நீதி : பிடிவாதக்காரர்களையும், முட்டாள்களையும் திருத்த நேர்வழி பயன்படாது.


avatar
Guest
Guest

PostGuest Tue Dec 16, 2008 1:49 am

பேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில் இருந்தான். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது நான்கு தளபதிளையும் அழைத்து "உங்களுக்கு என்ன* வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினான்.

முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! என்க்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான்.

"உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்" என்றான் நெப்போலியன்.

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான்.

மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.

மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னான்.

கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் "உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்" என்றான்.

அவன் பணித்தவுடன் வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து "சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?" என்று ஏளனம் செய்தார்கள்.

அதற்கு அவன் "நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவன் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல் படுத்த அவனுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவனது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறான். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்" என்றான்.

மற்ற தளபதிகள் "அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே" என்றார்கள்.

யூதத் தளபதி சொன்னான் "நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ இப்போது என் கையில்"

இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான்.

நீதி : அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 16, 2008 2:18 am

ஒரு கல்லூரியில் வாழ்க்கைத் தத்துவ வகுப்பு.

பேராசிரியர் ஒரு பெரிய கண்ணாடி ஜாடியை எடுத்து மேசையில் வைத்தார். அதனுள்ளே வெல்லக்கட்டிகளை இட்டு நிரப்பினார்.. பின் மாணவர்களைக் கேட்டார்..

இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?

ஆம் அய்யா..!

பின்னர் பேராசிரியர் ஜாடிக்குள் சிறு சிறு கற்கண்டுகளைப் போட்டார்.. வெல்லக்கட்டிகளின் இடைவெளியில் கற்கண்டுகள் புகுந்து இடத்தை அடைத்துக்கொண்டன.. பின்னும் வினவினார்..

இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?

ஆம் அய்யா..!

அதன் பின்னர், சீனியை ஜாடிக்குள் விட்டார்.. மென் துகள்கள் வெல்லக்கட்டிகளுக்கும், கற்கண்டுகளுக்கும் இடையில் இருந்த வெளியை நிரப்பின.. மீண்டும் கேள்வி எழுப்பினார்..

இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?

இம்முறை, மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறினர்.. "ஆம் அய்யா..!"

புன்னகைத்த பேராசிரியர், இம்முறை ஜாடிக்குள் இரண்டு கோப்பை பாலை ஊற்றி, "இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?" என்று வினா எழுப்பினார்..

மாணவர்கள் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.. எவராலும் சரியாக பதில் சொல்ல இயலவில்லை.. ஏற்கனவே சிலமுறை கூறி, தவறாகிப் போய்விட்டதல்லவா..?

பேராசிரியர் இப்போது சொன்னார்..

மாணவச் செல்வங்களே.. இதுதான் வாழ்க்கை.. வெல்லக்கட்டிகள் உங்கள் வாழ்வின் மகத்தான விடயங்களை குறிப்பவை.. கடவுள், பெற்றோர், கல்வி, உறவுமுறை, நற்பழக்கங்கள் போன்றவை..

கற்கண்டுகள், உங்கள் வேலை, இல்லம், கார் போன்ற முக்கியமான அம்சங்களைக் குறிப்பவை.

சீனி, மற்ற சிறு சிறு விடயங்களின் மாதிரி வடிவம்.. திரைப்படம், கேளிக்கை, உல்லாசப்பயணங்கள் போன்றவை.

உங்கள் வாழ்வில் சீனிக்கே முன்னுரிமை கொடுத்தால், வெல்லக்கட்டிகளுக்கு இடமில்லாமல் போய்விடும்.. கற்கண்டுகளால் உங்கள் வாழ்வை இட்டு நிரப்ப வகையில்லாமல் போய்விடும்..

எனவே எதை முதலில் முக்கியத்துவம் கொடுத்து உங்கள் வாழ்வை நிரப்பிக்கொள்ளவேண்டும் என்று சரியாகத் திட்டமிடுங்கள்..!

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:11 am

ஜிங்ஜு ஒரு வித்தியாசமான பிறவி. தான் ஆணழகனாய், அறிவுள்ளவனாய் பிறந்திருந்தால்
இளவரசியை திருமணம் செய்திருக்கலாம் என்று பகல் கனவு காண்பவன். தன்னிடமுள்ள
குறைகளை எண்ணி எப்போதும் வருத்தத்திலேயே இருப்பவன். மருந்திற்கு கூட அவன்
முகத்தில் சிரிப்பை பார்க்க முடியாது. தெருவில் யாராவது சிரித்தால், அவர்கள்
தன்னைப் பார்த்துதான் சிரிப்பதாக நினைத்துக் கொண்டு கோபமடைந்து அவர்களிடம்
சண்டைக்கு செல்வான். இறுதியில் ஒருநாள் தனது குணத்தை புரிந்து கொள்ள இயலாமல்,
ஜென் மாஸ்டரிடம் கேட்டு மனத் தெளிவடைய நினைத்தான்.

"யார் சிரித்தாலும் எனக்கு கோபம் வருகிறது ஏன் அப்படி?'' என்று மாஸ்டரிடம்
கேட்டான். இதை கேட்டவுடன் ஜென் மாஸ்டர் `ஹாஹா' என்று சிரித்துக் கொண்டே
சென்றுவிட்டார்.

ஜென் மாஸ்டர் எதற்கு சிரித்தார்? என்ற காரணம் புரியாமல் ஜிங்ஜு மிகவும்
குழம்பினான். அதை நினைத்து, நினைத்து மூன்று நாட்களாக ஊண் உறக்கமின்றி
குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான்.

அடுத்த நாள் ஜென் மாஸ்டரிடம் சென்று, "அன்று என்னைப் பார்த்து ஏன் மாஸ்டர்
சிரித்தீர்கள்? நான் வருத்தத்தில் மூன்று நாட்களாக சாப்பிடவே இல்லை'' என்று
கூறினான். உடனே ஜென் மாஸ்டர், "முட்டாளே! இப்போதாவது உனக்கு புரிகிறதா? நீ
கோமாளியை விட சிறியவன், அது தான் உனது பிரச்சினை'' என்று கூறினார். இதைக் கேட்ட
ஜிங்ஜு அதிர்ந்து போனான்.

"நான் ஒரு கோமாளியை விட சிறியவன் என எக்காரணத்தால் குறிப்பிட்டீர்கள்?'' என்று
கோபத்துடன் கேட்டான்.

அதற்கு ஜென் மாஸ்டர், "கோமாளியாவது பிறர் சிரிப்பதைக் கண்டு மகிழும்
தன்மையுடையவன். ஆனால் நீ மற்றவர்கள் சிரிப்பதை எண்ணி வருந்தி குழப்பத்துடன்
இருக்கிறாய். இப்போது சொல், நீ கோமாளியை விட சிறியவன் தானே'' என்றார்.

இதைக் கேட்ட ஜிங்ஜு தனது தவறை உணர்ந்து, குழப்பம் தீர்ந்த சந்தோஷத்தில்
சிரித்தான்.

நீதி: என்ன நடந்தாலும், அதனால் விளையும் நன்மையை மட்டும் எடுத்துக் கொண்டு
மகிழும் தன்மை, வாழ்வில் மன அமைதி மற்றும் சந்தோஷத்தை பெற்றுத் தரும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:48 pm

கிழவரும், சிறுவனும், கழுதையும்

'முயலும் ஆமையும்' கதை படித்ததின் பாதிப்பு:

ஒரு கிழவர் தனது பேரனுடனும், தனது கழுதை ஒன்றுடனும் ஒர் கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தார்.

வழியிலே இவர்களைப் பார்த்த சிலர், "இந்தச் சிறுவனை வெயிலிலே நடத்திக் கூட்டி கொண்டு செல்கிறார் பார், இந்தப் பெரியவர்". என்று சொன்னார்கள்.

பேரன் கழுதை மீது அமர்ந்து கொண்டு செல்லலானான்.

வழியிலே இவர்களைப் பார்த்த சிலர், "வயதான மனிதரை நடக்க விட்டு, சிறுவன் சவாரி செய்து கொண்டு செல்கின்றானே", என்று சொன்னார்கள்.

உடனே, சிறுவன் கீழிறங்கித் தாத்தாவை, கழுதை மீது அமர வைத்தான்.

சிறிது நேரம் சென்றது.

இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர், "இரண்டு பேரும், கழுதை மீது ஏறிச் செல்லலாமே. எதற்குக் கஷ்டப்படுகிறீர்கள்?, என்றார்.

உடனே, இருவரும் கழுதை மீது பயணிக்கத் துவங்கினர்.

சிறிது நேரம் கூட ஆகியிருக்காது. ஜீவ காருண்யம் மிக்க நபர் ஒருவர், இவர்களைப் பார்த்து, "இந்த
அனியாயத்தை கேட்பார் இல்லையா? ஒரு வாயற்ற ஜீவனை இப்படித் துன்புறுத்தலாமா?", என்று புலம்பினார்.

கிழவரும், சிறுவனும், உடனே பதறிப் போய் கழுதையை விட்டுக் கீழே இறங்கினார்கள்; புதியதோர் யோசனை செய்தார்கள். பெரிய மூங்கில் ஒன்றினை எடுத்து, கழுதையை அதில் கட்டி, மூங்கிலின் இரு முனைகளையும் இருவரும், தத்தம் தோள்களின் மீது வைத்துக் கொண்டு கழுதையை சுமந்து கொண்டு சென்றார்கள்.

இவர்கள் ஒரு குறுகலான பாலத்தின் வழியே செல்ல வேண்டியிருந்தது. பாலத்தின் மீது செல்லும்போது, நிலை தடுமாறினார்கள். கழுதை பாலத்திலிருந்து துள்ளி, கீழே ஒடிக் கொண்டிருந்த ஆற்றில் விழுந்தது. இருவரும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.

கதை இத்துடன் முடியவில்லை...

பாலத்தின் மீது வந்து கொண்டிருந்த சிலர், கிழவரையும், சிறுவனையும், கண்டபடி திட்டினார்கள், "கழுதை ஆற்றில் அடித்துக் கொண்டு போகிறது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களே!", என்று.

சிறுவன் உடனே, பாலத்திலிருந்து, ஆற்றில் குதித்தான். ஆற்றில் நல்ல வெள்ளம். சிறுவனும் அடித்துக் கொண்டு செல்லப்படுகிறான்.

கதை இன்னமும் முடியவில்லை...

உடனே, மக்கள், கூச்சலிட்டார்கள். "கிழவா, பையனை வெள்ளம் அடித்துக் கொண்டு செல்கிறது. என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?",

கிழவர் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு, பாலத்திலிருந்து குதித்தார், தண்ணிருக்குள். ஆற்று வெள்ளம் அவரையும் அடித்துக் கொண்டு சென்றது.

கதையை இன்னமும் முடிக்க மனமில்லை.

ஐந்து, பத்து நிமிடங்கள் கழித்து, தட்டுத் தடுமாறி, நீந்திக் கரையேறிய கழுதை நிம்மதிப் பெருமூச்சு விட்டது. "அப்பாடி, ஒழிஞ்சாங்க, இரண்டு பேரும்!!".

கதை போதிக்கும் நீதி யாது?

முட்டாள்களிடம் வேலை பார்ப்பதை விட, ஆற்றில் குதிப்பதே மேல்.

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 08, 2009 10:32 am

ஒரு நீச்சல் தெரியாத சிறுவன் ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்தான். உயிர்பிழைத்தல் பொருட்டு "காப்பாத்துங்க. காப்பாத்துங்க.." கத்தினான். ஒரு மனிதாபிமானம் நிறைந்த இதைப்படிக்கும் உங்களைப்போன்ற ஒருத்தர் அந்த ஆற்றில் குதித்து நீரின்பிடியில் இருந்து அந்தச் சிறுவனைக் காப்பாற்றினார்.

(அந்த ஒருத்தர் ஆணா பெண்ணா என்பது முக்கியமில்லை).

அந்தச்சிறுவனும் தனது உயிரைக்காப்பாற்றியவரிடம் "என்னைக் காப்பாத்துனதுக்கு நன்றிகள்", என்றான். அவர் கேட்டார், "எதற்காகப்பா நன்றி சொல்கிறாய்".சிறுவன் - "என்னைக்காப்பாற்றியதற்காகத்தான்".

அவர் இப்பையனின் கண்பார்வையை ஊடுருவிக்கொண்டே மறுமொழிந்தார் " பையா. நான் உன்னைக் காப்பாற்றினேன் என்பதெல்லாம் இருக்கட்டும். நீ பெரியவனானதும் - உனது வாழ்க்கையை நல்லவிதமாக வாழ்ந்துகாட்டுவதில் மட்டுமே நீ எனக்கு நன்றி தெரிவிக்கவேண்டும். நீ நல்லவிதமான ஒரு சிறந்தகுடிமகனாக வாழ்ந்தால் மட்டுமே - நாலு பேருக்கு உதவி செய்து - ஊரில் நாட்டில் நல்லபெயர் எடுத்து நிரூபிப்பதில்தான் உனது உயிரைக் காப்பாற்றியதின் நன்றியை எனக்குத் தெரிவிக்கவேண்டும்."

"நான் உன்னை நினைத்து வருந்தும் அளவுக்கு நடந்துகொள்ளச் செய்து விடாதே. ஒரு மோசமானவனைக் காப்பாற்றிவிட்டோமே என்று நான் வருந்தும் நிலைக்கு என்னை ஆளாக்காமல் ஒரு சிறந்தவனைக் காப்பாற்றினோம் என்ற கவுரவத்தை - ஒரு தர்மவானைக் காப்பாற்றினோம் என்ற கர்வத்தை எனக்குக் கொடு" என்றார்.

நீதி : நன்றி மறப்பது நல்லதில்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக