ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுடடா என் மார்பில்.. - டாக்டர் அப்துல் கலாம்

Go down

சுடடா என் மார்பில்.. - டாக்டர் அப்துல் கலாம் Empty சுடடா என் மார்பில்.. - டாக்டர் அப்துல் கலாம்

Post by mgopalak Sun Sep 20, 2009 1:26 pm

சுடடா என் மார்பில்.. - டாக்டர் அப்துல் கலாம் Kalam

ஆழ்கடலின் அமைதிப் பரப்புக்குள் அந்த நீர்மூழ்கிக் கப் பல் திமிங்கிலம் போல் நீந்திக் கொண்டிருந் தது. கடலுக்கடியில் இருக்கும் உணர்வே எனக்கு ஏற்படவில்லை. சிறுவயதில் நான் பார்த்த சில உலகப்போர் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் ஞாபகத்துக்கு வந்தன.

அந்தப் படத்தின் பெயர் நினைவில் இல்லாவிட்டாலும் அதன் காட்சிகள் இன்னும் பசுமையாக இருக்கின்றன. நாஜிக் களுக்கு சொந்தமான ஒரு நீர் மூழ்கிக் கப்பல் தன்னுடைய தகவல் தொடர்புகள் துண்டிக்கப் பட்ட நிலையில் அனாதை யாக ஆழ்கடலில் சுற்றிச் சுற்றி வரும். அதன் தலைக்கு மேல் பல எதிரி போர்க் கப்பல்கள் வட்டமிட்டுக் கொண்டே இருக்கும். எந்த நேரமும் தாக்குதல் நிகழ்ந்து கப்பல் நிர்மூலமாகும். இயந்திரங்கள் எல்லாமே பழுதடைந்து விட்ட நிலையில் அதில் உள்ள பணியாளர்கள் எப்படிப்பட்ட மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள் என்பதை விவரிக்கும் படம் அது.

யுத்தகாலங்களில் எந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கும் அப்படிப்பட்ட நிலை வரலாம். உளவு சாட்டிலைட்டுகள் டெக்னாலஜி எங்கோ போய் விட்ட இந்த காலகட்டத்தில் நீர்மூழ்கிக் கப்பலின் நடமாட்டத்தைக் கூட விண்ணிலிருந்து கண்காணிக்க முடியும். அதன் மூலம் சுலபமாக தாக்குதல் நடத்த முடியும் என்றாலும், இன்றைக்குப் பெரும்பாலான நீர்மூழ்கிக் கப்பல்கள் நியூக்ளியர் எரிசக்தியின் மூலம் இயங்கிக் கொண்டிருப்பது விஞ்ஞான முன்னேற்றத்தின் சாதனைதான்.

நான் பயணம் செய்த நீர்மூழ்கிக் கப்பல் டீஸல் மூலம் இயக்கப்பட்ட ஒன்று. ஆயுதக்கிடங்கு அறையில் இருந்து என்னை நீர்மூழ்கிக் கப்பலின் அடுத்த அறைகளுக்கு அழைத்துச் சென்றார்கள் இளம் கடற்படை வீரர்கள். கப்பலின் உள்ளே சுமார் 90 இளம் ஆபிஸர்கள் தேனீக் களைப் போல் சுறுசுறுப்பாகப் பணிபுரிந்து கொண்டி ருந்தார்கள்.

ஏழு பேர் மட்டுமே அமரக்கூடிய ஒரு சிறிய அறைக்கு என்னை அழைத்துச் சென்ற அவர்கள் ஓர் அருமையான வெஜிட்டேரியன் சாப்பாட்டை பரிமாறினார்கள். அந்தக் கப்பலின் உள்ளேயே சமைக்கப்பட்ட சுவையான உணவு. சாப்பாட்டின் நடுவிலேயே அடுத்த 30 வருடங்களுக்கான நீர்மூழ்கிக் கப்பல் படையின் முன்னேற் றங்கள் எப்படி இருக்கும் என் பதைப் பற்றிய ஒலி-ஒளி பிர ஸண்டேஷன் காட்சி காட்டப் பட்டது.

வயிற்றுக்கு அருமையான உணவு, காது களுக்கும் கண்களுக்கும் விருந்தாக அற்புதமான பிரஸண்டேஷன் என்று அந்த மதிய விருந்து அட்டகாசமாக இருந்தது. விருந்து முடிந்ததும் அந்த நீர்முழ்கிக் கப்பலின் எல்லா டிபார்ட்மெண்டுகளையும் சுற்றிப் பார்த்தேன். டெக்னாலஜியின் வளர்ச்சி என்னை பிரமிப்புக்குள்ளாக்கியது.

கடலுக்கடியில் இயற்கையின் படைப்பான திமிங்கலம் எவ்வளவு சுலபமாக நீந்தி சுற்றி வருகிறதோ, அதைப் போலவே மனிதனின் படைப்பான இந்த நீர்மூழ்கிக்கப்பலும் கடலை ஒரு செயற் கைத் திமிங்கலமாகச் சுற்றி வந்தது. மூன்று மணிநேரங்கள் என்னுடைய ஆழ்கடல் பயணம் நீடித்தது. அது ஒரு தனி உலகம். தண்ணீரினால் சூழப்பட்ட உலகம். “"நீரின்றி அமையாது உலகு'’என்கிற வைர வரிகளை எனக்கு நேரடியாக உணர்த்திய உலகம்.

நீர்மூழ்கிக் கப்பல் மெதுவாக ஆழ்கடலை விட்டு மேலெழும்ப ஆரம் பித்தது. அந்த அழுத்த உணர்வு என் உடலிலும் மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்தியதை என்னால் உணர முடிந்தது. ஒரு இரும்பு ஏணியின் வழியாக மேலேறி நீர்மூழ்கிக் கப்பலின் முகப்புப் பகுதியில் வந்து நின்றேன்.

அப்போது நான் கண்ட காட்சி கண் கொள்ளாதது. இத்தனை நேரம் இந்தக் கடல் பரப்பின் அடியிலா நாம் பயணம் செய்து கொண்டிருந்தோம் என்பதையே நம்ப முடியாமல் இருந்தது. நீலக்கடல், தளும்பிக்கொண்டிருந்த அமைதிப் பிரதேசம். வானில் கடல் மேல் சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தான். என் னைச் சுற்றிலும் கடல்... கடல்..கடல்... சீகல்ஸ் பறவைகள் வட்டமடித்துக் கொண்டிருந்தன. தண்ணீரைத் தவிர வேறு எதையுமே என்னால் அங்கே பார்க்க முடியவில்லை. “ஜ்ஹற்ங்ழ்..ஜ்ஹற்ங்ழ் ங்ஸ்ங்ழ்ஹ்ஜ்ட்ங்ழ்ங்..க்ஷன்ற் ய்ர்ற் ஹ க்ழ்ர்ல் ற்ர் க்ழ்ண்ய்ந்’என்கிற கவிஞர் கோல்ரிட்ஜின் கவிதை வரிகள் ஞாகபத்துக்கு வந்தன. பூமியின் மூன்று பங்கான அந்த தண்ணீர் பரப்புதான் சுகோய் கடற்படை விமானத்தில் பறந்தபோது எனக்குள் ஏற்பட்ட சிந்த னையையே மறுபடி ஏற்படுத்தியது.

இயற்கையின் மாபெரும் ஆளு கைக்கு முன்னால் நாம் ஒரு புள்ளி தான்.

கொஞ்சம் கொஞ்சமாக தூரே நிலம் தெரிவதைக் கண்டேன். நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலம். அங்கே இருப்பவர்கள் எல்லாம் அறியாத வேறொரு உலகம் வானிலும் கடலிலும் இருக்கிறது, அதைப் பற்றிக் கொஞ்சமேனும் அறிந்து கொள்ளும் வாய்ப்பே அரியதுதான் என்கிற எண் ணம் தோன்றிய போது மனதுக்கு நிறைவாக இருந் தது.

மறக்க முடியாத கடல்பயணம்!

அந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நான் விடை பெற்ற போது, இளம் நேவல் ஆபிஸர்கள் எனக்கு சல்யூட் கொடுத்து விடை கொடுத்தார் கள்.

அப்போது அவர் களின் முகத்தில் தெரிந்த ஜொலிப்பும் வீரமும் எனக்கு ஓர் ஒப்பற்ற வீரரை நினைவுபடுத்தியது. நமக்கெல்லாம் மிகவும் தெரிந்தவர் அவர்.

அது இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற சமயம். இந்தியாவுக்கு அருகே பர்மாவில் ஜப்பானிய ராணுவம் முன்னேறி விட்டது. இந்தியாவை நோக்கி அது பெரும் ஆபத்தாக நடந்து வந்த வேளையில் அதனை நேருக்கு நேர் எதிர்கொண்டது இந்திய ராணுவம். இந்திய இளம் ராணுவப் படைக்குத் தலைமை தாங்கிய அந்த இளம் ஆபிஸர். சற்றும் பயமின்றி, ""சுடடா என் மார்பில்''’என்று கர்ஜித்தபடி தன் படையோடு முன் னேறினார். அந்த வீரத்தைக் கண்டு மிரண்ட ஜப்பானிய ராணுவம் பின் வாங் கியது. இந்திய ராணு வமும் தன்னுடைய கடுமையான எதிர் தாக்குதலை ஆரம் பித்தது. சிதறியோடி யது ஜப்பானியப் படை.

ஆனால் அப் போது புதர்மறை வில் ஒளிந்திருந்த ஒரு ஜப்பானிய படை வீரன் முன் னேறி வந்த இந் தியப் படையின் தலைவனை நோக்கிச் சுட்டான். அந்தத் தோட்டா அவர் வயிற்றில் பாய்ந்தது. அவர் சுருண்டு விழுந் தார்.

ஓடோடி வந்து அவரைத் தாங்கினார் சீனியர் மேஜர் ஜெனரலான எம்.டி. கோவன். துப்பாக்கி குண் டின் தாக்குதலில் நிலை குலைந்து போயிருந்த அந்த இளம் ஆபிஸரின் கையில், தன்னுடைய “மிலிட்டரி கிராஸ்’’ எனப்படும் மரியாதைக்குரிய பட்டையை எடுத்து, அவர் கைகளில் சுற்றி விட்டார்.

“""இந்த மரியாதைக்குரிய விருது உயிரோடு இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுவது..அதனால்தான் உனக்குக் கொடுத்தேன்..நீ நிச்சயம் உயிர் பிழைப்பாய் மை சன்...''’என்று நெக்குருகிச் சொன்னார் மேஜர் ஜெனரல் கோவன்..

அப்படிப்பட்ட வீரப்பெருமையைக் கொண்டவர் வேறு யாருமல்ல, நம்முடைய ஃபீல்டு மார்ஷல் மானெக்க்ஷா!
avatar
mgopalak
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum