ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா!

Go down

உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா!  Empty உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா!

Post by அப்துல் Wed Sep 07, 2011 7:16 am

நீங்கள் யாரை அதிகமாக விரும்புவீர்கள்! அழகாக இருப்பவர்களையா! இனிமையாக
பேசுகிறவர்களையா! சிரித்த முகம் உள்ளவர்களையா! வெகுளியாக இருப்பவர்களையா!
இப்படி கவரக்கூடிய எதாவது ஒரு குணம் இருப்பவர்களைதான் நீங்கள்
விரும்புவீர்களா! உங்களிடம் கேட்டால் 'ஆம்' என்றுதான் சொல்வீர்கள், ஆனால்
சில வேளைகளில் இந்த குணங்கள் எதுவுமே இல்லாதவர்களையும் நீங்கள்
விரும்பியிருப்பீர்கள், அவர்களிடமும் மணிக்கணக்கில் பேசியிருப்பீர்கள்,
நீங்கள் எதிர்பார்க்கும் குணம் இல்லாத போதும் அவர் உங்களை விரும்ப
வைத்திருக்கிறார் அது எப்படி?

சிலர் இயற்கையிலேயே அழகில்லாதவர்களாக
இருக்கலாம், அது நீங்களாகவும் இருக்கலாம். சிலருக்கு இனிமையாக பேசுகின்ற
வரம் கிடைக்காமலிருக்கலாம், அதுவும் நீங்களாகவும் இருக்கலாம், பரவாயில்லை,
அழகு என்பது நம்மில் பிரதிபலிக்க வேண்டிய ஒன்று, அது உடம்பிலிருந்துதான்
பிரதிபலிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, நம் செயல்களில் பிரதிபலிக்கலாம்,
எண்ணங்களில் பிதிபலிக்கலாம், குணநலன்களில் பிரதிபலிக்கலாம்.

உங்கள்
உதடுகள் சில்லரைகளைப் போல சிணுங்கிக் கொண்டிருக்க மறுக்கலாம், பரவாயில்லை,
பேசுவது இரண்டு வார்த்தைகளாக இருந்தாலும் சில்லரையாக சிந்தாமல்
நோட்டுக்களாக அவிழ்த்து விட்டால், உங்கள் பேச்சுக்களே விரும்பப்படும்.
சிலரைப்போல சிரித்த மாதிரியான முகம் உங்களுக்கு இயற்கையாகவே இல்லாமல்
இருக்கலாம். பரவாயில்லை, சிரிப்பை தேவைக்கு சிந்தினாலே போதும் நீங்கள்
அனைவராலும் விரும்பப்படுவீர்கள்.

இப்படிதான் சிலருக்கு முக்கிய
தகுதிகள் தோற்றத்திலோ, உதடுகளிலோ, நடை உடை பாவனைகளிலோ, இருப்பதில்லை அவை
மறைந்திருந்து கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்களை
உங்களுக்கும் விரும்பத் தோன்றும். நண்பனாக்கிக் கொள்ளத் தோன்றும்.
நீங்களும் உங்களுக்கு பிடித்தமான ஒரு விசயத்தில் உங்களை வெளிப்படுத்திக்
கொண்டிருங்கள். உங்களுக்குள் இருக்கும் ஒரு அழகை வெளியே பிரதிபலித்துக்
காட்டுங்கள், எல்லாராலும் விரும்பப் படுவீர்கள்.

பிறருக்கு
பிடித்தமானவராக இருக்க தினம் தினம், புதுப்புதுத் துணிமணிகளை உடுத்த
வேண்டிய தேவையில்லை, அணிந்திருக்கும் உடை உங்களுக்கு பிடித்தமானதாகவும்,
சுத்தமானதாகவும் இருந்தாலே போதும். நாளுக்கு நாள் உங்களை கலர்கலராக
மாற்றிக்கொண்டிருந்தால் பார்ப்பவர்களின் மனம் ஆரம்பத்தில் விரும்பினாலும்
போகப்போக ஏளனமாக பார்க்க ஆரம்பிக்கும்.

மற்றவர்கள் உங்களை விரும்ப
வேண்டுமென்பது, உங்கள் தோற்றத்தை விரும்ப வேண்டும் என்ற முடிவிற்கு வந்து
விடாதீர்கள். நீங்கள் ஒரு படைப்பாளியாக இருந்தால், உங்களை விடவும் உங்கள்
படைப்பு விரும்பப் படுவதையே விரும்புவீர்கள். நீங்கள் ஒரு நிறுவனத்தை
ஆரம்பித்தீர்களானால், உங்களை விடவும் உங்கள் நிறுவனம் விரும்பப் பட
வேண்டுமென்றே எதிர்பார்ப்பீர்கள். உங்கள் உள்ளிருக்கும் அழகின்
வெளிப்பாடுதான் நீங்கள் ஆரம்பிக்கும் நிறுவனமாகவும், தொழிலாகவும்,
படைப்பாகவும் வெளிப்படும் போது, அவை விரும்பத்தக்கதாக இருந்தால் நீங்களும்
விரும்பத் தக்கவர்களாகவே இருப்பீர்கள்.

சில கல்லூரிகளின் கடைசி
நாட்களில், மாணவிகளிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த மாணவன் யார் என்ற
பட்டியல் கேட்கப்படும். அப்போது அந்த மாணவிகள் மிகவும் அழகான ஒரு மாணவனையோ
அல்லது இடைவிடாமல் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மாணவனையோ, யாரையாவது
கிண்டலடித்து சிரிப்பை வரவழைக்கின்ற மாணவனையோ மிகவும் பிடிக்கும் என்று
சொல்லமாட்டார்கள். அவர்களின் பட்டியலில் ஆத்மார்த்தமான வேறு ஒரு முடிவே
வரும். அமைதியாக இருந்தாலும், அழகில்லாமல் இருந்தாலும், தன்னுள் இருக்கும்
அழகான குணத்தை செயல்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் மாணவனையே மிகவும்
பிடிக்கும் என்ற பட்டியலை தயார் செய்வார்கள்.

ஏனைன்றால் அவன்
அமைதியாக இருந்தாலும், பொறுப்புகளை முன் கூட்டியே யோசித்து, செயல்பட்டுக்
கொண்டிருப்பவனாக இருப்பான். கல்லூரி பாடங்களில் மட்டுமல்ல, கல்லூரி
விழாவிலிருந்து சுற்றுலா வரையிலும் எவற்றையெல்லாம் மற்றவர்கள் எவற்றைச்
செய்யாமல் இருக்கிறார்களோ, அவைகளை முன்னதாகவே யோசித்து தன் அழகை
வித்தியாசமாக வெளிப்படுத்திக் கொண்டிருப்பான். இப்படி தன் விருப்பங்களில்,
திறமைகளில் இருக்கின்ற அழகினை செயல் வடிவமாக செதுக்கிக்
கொண்டிருப்பவர்களையே மற்றவர்கள் விரும்ப ஆரம்பிப்பார்கள்.

தோற்ற
அழகு மட்டுமே உள்ளவர்களை மற்றவர்கள் கண்களால் படம் பிடித்து, இதயத்தில்
எளிதாக சேமித்து வைப்பார்கள். அழகாக இருப்பவர்கள் மற்றவர்கள் இதயத்தில்
எளிதாக இடம்பிடித்து விடுவார்கள். ஆனால் அவர்களின் அழகு அட்டைப்படத்தைப்
போல வெளியில்தான் அழகாக இருக்கும், உள்ளே புரட்டிப் பார்க்கும் போது
ஒன்றுமிருக்காது. அதுவே அழகற்ற அட்டைப் படமாக இருந்தாலும் புரட்ட புரட்ட
இனிக்கும் புத்தகங்களைப் போல இருப்பவர்களே, மற்றவர்களின் இதயத்தில் அழிக்க
முடியாத தனி இடத்தைப் பிடித்தவர்களாக இருப்பார்கள்.
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum