புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_m10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10 
61 Posts - 80%
heezulia
நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_m10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_m10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_m10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_m10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10 
397 Posts - 79%
heezulia
நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_m10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_m10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_m10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_m10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_m10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_m10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_m10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_m10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_m10நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்!


   
   
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Sep 07, 2011 7:02 am

நாம் ஒருவர் மீது கொண்டுள்ள அன்பையும், மரியாதையையும்
காட்டுவதற்காக அதன் அடையாளமாகக் கொடுப்பதே அன்பளிப்பாகும்..! உங்கள்
அன்பளிப்பு உன்னதமாக நட்பும், உறவும் பலப்பட சில யோசனைகள்...



அன்பு என்றால் மகிழ்ச்சியான உணர்வு. அன்பைப் பகிர்ந்துகொள்வதால்
மகிழ்ச்சி பெருகும். ஒருவரை முக மலர்ச்சியோடு உபசரிப்பதே அன்பு. பேச்சு
மட்டுமின்றி கைகுலுக்குதல், கட்டிப்பிடித்தல், தட்டிக்கொடுத்தல் மூலமும்
அன்பை பகிர்ந்துகொள்வது உண்டு.


பேச்சு, செயல், பார்வை ஆகிய மூன்றினாலும் அன்பை வெளிப்படுத்தலாம். இதில்
செயல் என்பது நேசத்துக்குரியவர்களுக்கு சில பொருட்களை வாங்கி கொடுத்து
அன்பை வெளிப்படுத்துவது. உண்மையான அன்போடு நாம் மற்றொருவருக்கு ஒரு பொருளை
வாங்கிக் கொடுத்தால் அதுதான் அன்பளிப்பு ஆகும்.


மெய்யான அன்பைக் காட்டுவதற்கு நாளும் தேவையில்லை, சமயமும் தேவையில்லை.
எப்போது வேண்டுமானாலும் தெரியப்படுத்தலாம். ஒரு காதலன் தன் காதலிக்கு சிறு
சிறு பரிசுகளை வழங்குவதற்கு நேரம் காலம் பார்ப்பதில்லை. அதேபோல கணவன் தன்
மனைவிக்கு சில அன்புப் பரிசுகளை வாங்கிக் கொடுப்பதற்கும் கால நேரம் பார்க்க
வேண்டியதில்லை.


ஆனால் காதலன்-காதலி, கணவன்-மனைவி இவர்களைத் தவிர உறவினர் மற்றும்
நண்பர்களை பொறுத்தவரை அன்பளிப்பு கொடுப்பது அரிதான ஒன்றாக உள்ளது. பிறந்த
நாள், திருமண நாள், பண்டிகை நாள், விழா நாள் போன்ற விசேஷமான காரணம் ஏதாவது
இருந்தால் தான் அன்பளிப்புகளை வாங்கிக் கொடுப்பார்கள்.


இப்படி அன்பளிப்புகளை வழங்குவதற்கு ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்
எத்தனையோ வாய்ப்புகளும், நாட்களும் வரத்தான் செய்கின்றன. அவ்வாறு வரும்
ஒவ்வொரு விசேஷ நாட்களுக்கும் என்னென்ன பொருட்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாம்
என்று இனி பார்க்கலாம்.


நாம் ஒருவர் மீது கொண்டுள்ள அன்பையும், மரியாதையையும் காட்டுவதற்கு
அடையாளமாக கொடுப்பதே அன்பளிப்பாகும். அப்படிப்பட்ட அன்பளிப்பு பொருட்கள்
எவை? என்ற கேள்விக்கு விடை அளிப்பது கடினமான விஷயம்தான். ஏனென்றால்
இன்னென்ன பொருட்களைத்தான் அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் என்று யாராலும்
வரையறுத்துக் கூறிவிட முடியாது. எனவே, நாம் பொதுவாக அன்பளிப்புக்குரிய சில
பொருட்களை பட்டியலிட்டுக் கூறலாமே தவிர, இவை மட்டும் தான் அன்பளிப்புக்கு
உரிய பொருட்கள் என்று கூற முடியாது.


ஒருவருக்கு அன்பளிப்பு செய்வதன் நோக்கம் என்ன? அவரை
மகிழ்விப்பதற்காகத்தான். எனவே ஆணோ, பெண்ணோ, யாராக இருந்தாலும் ஒருவருக்கு
அன்பளிப்பு செய்வதற்கு முன்னால் அவர்களுக்கு என்ன மாதிரி பொருளில்
விருப்பம் அதிகம் என்று தெரிந்து கொண்டு, அவருக்குப் பிடித்தமான பொருளை
வாங்கி அன்பளிப்புச் செய்தால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.


அன்பளிப்பு பொருட்களில் பரவலாக இடம் பெறத்தக்கவை வருமாறு:


பேனா செட்:


பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் முதல், அலுவலகப் பணியாளர், தொழிலாளி,
முதலாளி, தொழிலதிபர், வியாபாரி வரை எல்லாருக்குமே இன்றியமையாத ஒன்று பேனா
ஆகும். யாருக்கு அன்பளிப்பு செய்கிறோம் என்பதை எண்ணிப்பார்த்து, அவருக்கு
எப்படிப்பட்ட பேனாவை பரிசளித்தால் அது பயனுள்ளதாக இருக்கும் என்பதைக்
கருத்தில்கொள்வது நல்லது.


கைக்கடிகாரம்:


படித்தவர் முதல் பாமரர் வரை, ஏழை முதல் பணக்காரர் வரை எல்லா வயதினரும்
விரும்பி ஏற்கும் ஒரு பொருள் கடிகாரம் ஆகும். கைக்கடிகாரத்தில்
ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித்தனி டிசைன்களில் கடிகாரங்கள்
உள்ளன. உள்நாட்டுக் கடிகாரங்களோடு ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கக்
கடிகாரங்கள், வைரக்கல் பதித்த கடிகாரங்கள் என்று வகைவகையான கடிகாரங்கள்
உள்ளன. பேனாக்களைப் போலவே கடிகாரங்களைப் பரிசளிக்கும் போதும், யாருக்கு எது
பயன்படும் என்பதையும், யாருக்கு எது விருப்பம் என்பதையும் கவனித்து,
கருத்தில் கொண்டு பரிசளிக்க வேண்டும்.


சுவர்க் கடிகாரம்:


இந்தப் பட்டியலில் டைம்பீஸ் என்னும் கடிகாரமும், சுவர்க் கடிகாரமும்
அடங்கும். புதுமனை புகுவிழா போன்ற சமயங்களில் பரிசளிக்க ஏற்றவை சுவர்க்
கடிகாரங்கள். தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள், குறிப்பிட்ட நேரத்தில்
வேலைக்குச் செல்ல வேண்டிய தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு அலாரம் வைக்கும்
அமைப்பைக் கொண்ட டைம்பீஸ்கள் பயனுள்ளதாக அமையும். அவர்களுக்கு டைம்பீஸ்களை
பரிசளித்தால் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஏற்கனவே இந்தப் பொருட்கள்
இருப்பவர்களுக்கு இவற்றை வாங்கிப் பரிசளிப்பது தேவையற்றது. எனவே
கடிகாரங்களைப் பரிசளிப்பதற்கு முன்னர் இந்த விஷயத்தை கவனத்தில்கொள்ள
வேண்டும்.


கூலிங் கிளாஸ்:


அன்பளிப்புக்கு ஏற்ற பொருட்களில் மூக்குக் கண்ணாடியும் ஒன்று. கண்
குளுமைக்காகவும், தூசு, துரும்புகள் கண்ணில் படாமல் பாதுகாக்கவும், சூரிய
வெப்பம் கண்களைத் தாக்காமல் காக்கவும் இவற்றை பெரும்பாலானவர்கள்
அணிந்துகொள்கிறார்கள். கண்ணாடிகளை அன்பளிப்பாக அளிக்க விரும்புகிறவர்கள்,
அவற்றை யாருக்கு அளிக்கிறார்களோ அவர்களுடைய முக அமைப்புக்கும், அளவுக்கும்,
ஏற்றதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் பார்த்து வாங்கிப் பரிசளிப்பது
பயனுள்ளதாக இருக்கும்.


புத்தகங்கள்:


திருமணங்களின் போதும், சாதனை நிகழ்த்தும் மாணவ மாணவியரைப் பாராட்டும்
போதும் பரிசளிப்பதற்கு பெரிதும் உகந்த பொருள் நல்ல தரமான நூல்களாகும்.
மாணவர்களுக்கு வாழ்க்கை முன்னேற்றத்தை விளக்கும் நூல்களும், விஞ்ஞானம்,
வரலாறு, விளையாட்டு மற்றும் சாதனை நூல்களும் பரிசளிக்கலாம்.
முதியவர்களுக்கு இதிகாசம், புராணம், இலக்கியம், வரலாற்று நூல்களையும்,
பெண்களுக்கு அழகுக் குறிப்புகள், சமையற்கலை, குழந்தை வளர்ப்பு போன்ற
நூல்களையும் பரிசளிக்கலாம்.


ஆடை, அணிகள், சால்வைகள்:


அரசியல் தலைவர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் சால்வைகளும்,
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆடைகளையும் வாங்கி வந்து அன்பளிப்பு
செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த பழக்கத்தை தொடரலாம். குறிப்பாக
சொல்ல வேண்டுமானால் குழந்தைகளுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும் ஆடைகளை
வாங்கிக் கொடுத்தால் அவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் அகமகிழ்வார்கள்.


பொம்மைகள்:


பொம்மைகளைப் போலக் குழந்தைகளை மகிழ்விக்கும் அன்பளிப்புகள் வேறு எதுவும்
இல்லை என்றே கூறலாம். சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தைகள்
சம்பந்தப்பட்ட பிறந்த நாள் விழாக்களில் பொம்மைகளைப் பரிசளிப்பது மிகவும்
புத்திசாலித்தனம் ஆகும்.


வீட்டு உபயோகப் பொருட்கள்:


டி.வி, பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்றவைகளை திருமணம், புதுமனை புகுவிழா போன்றவைகளுக்கு அன்பளிப்புச் செய்யலாம்.


காமிராக்கள், கால்குலேட்டர்கள்:


சாதனைகள் புரியும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பெற்றோரும்,
உற்றார் உறவினர்களும், நண்பர்களும் காமிராக்களையும், கால்குலேட்டர்களையும்
அன்பளிப்பு செய்யலாம்.


வாழ்த்து அட்டைகள்:


பண்டிகைகள், விழாக்கள் போன்றவைகளுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பலாம்.
வாழ்த்து அட்டைகளை நண்பர்கள், உறவினர்கள், காதலர்கள் என அனைத்து
தரப்பினரும் பயன்படுத்தலாம்.


கலைப் பொருட்கள்:


காட்சிக்கு வைக்க வேண்டிய கலை நுணுக்கம் மிக்க பொருட்களை வசதியானவர்களுக்கு வழங்குவதே பொருத்தமானதாகும்.


செலவில்லாத அன்பளிப்பு:


அன்பளிப்புகள் எல்லாமே காசு கொடுத்து வாங்குவது தான் என்று
அர்த்தமில்லை. யாருக்கு எது பிடிக்குமோ, யாருக்கு எது தேவையோ, அதை
அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதுதான் வெற்றிகரமான அன்பளிப்பு கொள்கை
ஆகும். புன்னகையை கொடுங்கள், புன்னகையோடு வாழுங்கள். இந்தக் கொள்கையை
மறக்காமல் கடைப்பிடித்தால் நமக்குத் தெரிந்தவர்களிடமும், உறவினர் மற்றும்
நண்பர்களிடமும் நல்லவர் என்ற பெயர் எடுப்பது மிக சுலபம். இந்த சுலபமான வழி
இருக்கும்போது, அன்பளிப்பு கொடுக்க யோசிக்க வேண்டுமா என்ன?




நன்றி கூடல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக