புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஷ்டவர்க்க பரல்கள்  I_vote_lcapஅஷ்டவர்க்க பரல்கள்  I_voting_barஅஷ்டவர்க்க பரல்கள்  I_vote_rcap 
56 Posts - 74%
heezulia
அஷ்டவர்க்க பரல்கள்  I_vote_lcapஅஷ்டவர்க்க பரல்கள்  I_voting_barஅஷ்டவர்க்க பரல்கள்  I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அஷ்டவர்க்க பரல்கள்  I_vote_lcapஅஷ்டவர்க்க பரல்கள்  I_voting_barஅஷ்டவர்க்க பரல்கள்  I_vote_rcap 
8 Posts - 11%
mohamed nizamudeen
அஷ்டவர்க்க பரல்கள்  I_vote_lcapஅஷ்டவர்க்க பரல்கள்  I_voting_barஅஷ்டவர்க்க பரல்கள்  I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஷ்டவர்க்க பரல்கள்  I_vote_lcapஅஷ்டவர்க்க பரல்கள்  I_voting_barஅஷ்டவர்க்க பரல்கள்  I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
அஷ்டவர்க்க பரல்கள்  I_vote_lcapஅஷ்டவர்க்க பரல்கள்  I_voting_barஅஷ்டவர்க்க பரல்கள்  I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
அஷ்டவர்க்க பரல்கள்  I_vote_lcapஅஷ்டவர்க்க பரல்கள்  I_voting_barஅஷ்டவர்க்க பரல்கள்  I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
அஷ்டவர்க்க பரல்கள்  I_vote_lcapஅஷ்டவர்க்க பரல்கள்  I_voting_barஅஷ்டவர்க்க பரல்கள்  I_vote_rcap 
8 Posts - 3%
prajai
அஷ்டவர்க்க பரல்கள்  I_vote_lcapஅஷ்டவர்க்க பரல்கள்  I_voting_barஅஷ்டவர்க்க பரல்கள்  I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அஷ்டவர்க்க பரல்கள்  I_vote_lcapஅஷ்டவர்க்க பரல்கள்  I_voting_barஅஷ்டவர்க்க பரல்கள்  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அஷ்டவர்க்க பரல்கள்  I_vote_lcapஅஷ்டவர்க்க பரல்கள்  I_voting_barஅஷ்டவர்க்க பரல்கள்  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அஷ்டவர்க்க பரல்கள்  I_vote_lcapஅஷ்டவர்க்க பரல்கள்  I_voting_barஅஷ்டவர்க்க பரல்கள்  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
அஷ்டவர்க்க பரல்கள்  I_vote_lcapஅஷ்டவர்க்க பரல்கள்  I_voting_barஅஷ்டவர்க்க பரல்கள்  I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
அஷ்டவர்க்க பரல்கள்  I_vote_lcapஅஷ்டவர்க்க பரல்கள்  I_voting_barஅஷ்டவர்க்க பரல்கள்  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஷ்டவர்க்க பரல்கள்


   
   
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Sep 06, 2011 6:00 pm

இறைவன் கருணை வடிவானவர். உலகில் உள்ள ஜீவராசிகள்
அனைத்தும் - மனிதன் உட்பட - அனைத்துமே அவருக்குச்
சமமானவை தான்.

அவருக்கு வேண்டியது - வேண்டாதவை என்று எதுவும்
கிடையாது.

தன்னை நம்புகிறவனும் அல்லது நம்பாதவனும், மேலும்
தன்னை நம்புகிறவனை முட்டாள் என்று சொல்கிறவனும்
அவருக்கு ஒன்றுதான்.

தன்னை மறுத்துப் பேசுகிறவனையும் அவர் முகம் மலர்ந்து
ஏற்றுக் கொள்கிறார். அவனுக்கும் கருணை காட்டுகிறார்.
அவனுக்கும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறார்.

இல்லையென்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்?

நம்பினாலும் அல்லது நம்பாவிட்டாலும் பாதிப்பு ஒன்றும்
அவருக்கில்லை.

சரி, அப்படியென்றால் இருவருக்கும் (நம்புகிறவன் - நம்பாதவன்)
என்ன வித்தியாசம்?

நம்புகிறவன், ஒரு பிரச்சினை வரும்போது - அதை இறைவன்
பார்த்துக் கொள்வார் என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு
நிம்மதியாக இருப்பான். நம்பாதவன் பிரச்சினையோடு, கவலையையும்
கை பிடித்துக்கொண்டு அல்லல் படுவான்

"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"

(விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனின் அடிகளை
இடைவிடாமல் நினைப்பவர்க்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும்
துன்பம் இல்லை)

என்று வள்ளுவப் பெருந்தகை எழுதிவைத்தார்.

வள்ளுவர் எழுதியதில் விருப்பு வெறுப்பு இல்லதவர் இறைவன்
என்ற முதல்வரி முக்கியம்

இறைவன் விருப்பு, வெறுப்பின்றி எல்லா மனிதர்ளையும்
சமமாகப் படைத்தார்.

நீங்கள் கேட்கலாம் - அப்படியென்றால் வாழ்க்கையில் ஏன்
பலவிதமான ஏற்றத்தாழ்வுகள்?

ஒரு குழந்தை ஏன் செல்வந்தர் வீட்டில் பிறக்கிறது?
ஒரு குழந்தை ஏன் அன்றாடம் வயிற்றுப்பசிக்கு அல்லல் படும்
ஏழைவீட்டில் பிறக்கிறது?

ஒரு குழந்தை பார்ப்பவர்கள் மகிழும் விதமாக அழகாக
பிறக்கையில், ஒரு குழந்தை ஏன் உடல் ஊனத்துடன் பிறக்கிறது?

அதைத்தான் நம் முன்னோர்கள் வாங்கி வந்த வரம் என்று
ஒரே வரியில் சொல்லியுள்ளார்கள். நாம் முன் ஜென்மத்தில்
செய்த நல் வினைகள், தீவினைகளுக்குத் தகுந்த மாதிரி
இந்தப் பிறவி அமைகிறது.

முன் பிறவியில் தான தர்மங்கள், சேவைகள் செய்தவனுக்கு
இந்தப்பிறவி அற்புதமாக அமைகிறது. அல்லாதவனுக்கு
வாழ்க்கை அல்லல் படும் விதமாக அமைகிறது.

பிறந்த மூன்றாவது நாளே, ஒரு குழந்தை தன் பெற்ற தாயாரால்
குப்பைத் தொட்டியில் போடப்படும் நிலைக்கு ஆளாகிறது என்றால்,
முன் பிறவியில் அந்தக்குழந்தை தன் தாய் தந்தையரை உதாசீனப்.
படுத்திய பாவத்தைச் செய்திருக்கும். இந்தப் பிறவியில் அந்தப்
பாவத்தைக் கழிக்க அதனுடைய பிறப்பு அப்படி அமையும்.

எல்லாமே முன் ஜென்மப் பாவ புண்ணியங்களின்படிதான்
என்றால், இங்கே - அதாவது இந்தப் பிறவியில் இறைவனின்
பங்காற்றல் என்ன?

He will give you standing power to face any situation

இறைவனின் பங்காற்றல் இல்லையென்றால் ஒருவன்
மனிதனாகவே பிறந்திருக்க முடியாது. ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும்
அதைத்தாங்கும் விதமாக நஷ்ட ஈட்டைக் கொடுத்துத்தான்
அவர் நம்மைப் படைத்திருக்கிறார்

அந்த நஷ்ட ஈடும் சேரும் போதுதான் அனைவருக்கும்
337 பரல்கள் என்ற சம நிலைப்பாடு கிடைத்திருக்கிறது.

ஒருவனுக்குப் பத்தாம் வீட்டில் - அதாவது ஜீவன ஸ்தானத்தில்
தேவையான பரல்கள் இன்றி அந்தவீடு அடிபட்டுபோய்
இருந்தால், நல்ல உத்தி யோகம் கிடைக்காமல் அவதிப்பட்டுக்
கொண்டிருப்பான். அதே நேரத்தில் அவனுக்கு நான்காம் வீடு
நன்றாக அமைந்திருக்கும் (சுக ஸ்தானம்)
அவனுக்கு ஒரு உறவினனோ அல்லது நண்பனோ உதவி
செய்து அடிப்படைத் தேவைகளுக்கு கேடு இல்லாமல் பார்த்துக்
கொள்வான்


ஆகவே அஷ்டகவர்க்கம் கற்றுக்கொண்டபின் உங்களுக்குத்
தெரியவரும் - யாருக்கும் நீங்கள் தாழ்ந்தவரில்லை - அதேபோல
யாருக்கும் நீங்கள் உயர்ந்தவருமில்லை

உங்களுக்கு எதெது மறுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு ஈடாக
வேறொன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஜாதகத்தின் 12 வீடுகளும், 36 பாக்கியங்களும் மிக நன்றாக
அமைவதற்கு வாய்ப்பே கிடையாது. சரி பாதி நன்றாக அமையும்.
இருப்பதை வைத்துத் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

Health இருக்கும் இடத்தில் Wealth இருக்காது. Wealth இருக்கும்
இடத்தில் Health இருக்காது. இரண்டும் நன்றாக இருக்க வேண்டு
மென்றால் 1, 2, 6, 8, 9, 11, 12 ஆகிய வீடுகளில் 30 பரல்களுக்கு
மேல் அமைந்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் கோடியில்
ஒருவருக்குக்கூட அமையாது!

கைவண்டி இழுப்பவன், இரண்டாள் சாப்பாட்டைக் கொடுத்தால்
ஒரு வெட்டு வெட்டிவிட்டு கட்டாந்தரையில் படுத்து நன்றாகத்
தூங்குவான்.அதே சாப்பாட்டில் கால் பகுதியைக் கூட ஒரு
செல்வந்தனால் ரசித்துச் சாப்பிடமுடியாது. கேட்டால்
Blood Pressure, Sugar, என்று தனக்கிருக்கும் வியாதிகளின் பெயர்
களையும், விழுங்கும் மாத்திரைகளின் பெயர்களையும் அடுக்கிச்
சொல்வான்.

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இரண்டே வரிகளில் சுருக்கிச்
சொன்னார்.

"அது இருந்தால் இது இல்லை,இது இருந்தால் அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்,அவனுக்கு இங்கே இடமில்லை!"

ஆமாம் எல்லாம் சேர்ந்து கிடைக்கப் பெற்றவனுக்கு ஆயுள் அதிகம்
இருக்காது.மேலே போய்விடுவான்.

இதையெல்லாம் உணர்ந்து நம்மை நாமே சமாதானப் படுத்திக்
கொண்டு சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதுதான்
உண்மையான வாழ்க்கை


கிராமத்தில் பெரியவர்கள் சொல்வார்கள், " டேய் சோற்றைக்
கீழே சிந்தாதே - சிந்தினால் அடுத்த ஜென்மத்தில் நீ ஈயாகப்
பிறப்பாய்"

ஈயாகப் பிறந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யும்
சிறுவன் நிச்சயாமாக அடுத்து சோற்றைச் சிந்தாமல் உண்ணப்
பழகிவிடுவான்.

"டேய் சாமி இல்லேன்னு சொல்லாதே - சொன்னா, இப்போ
வெள்ளி, சனிக்கிழமைகள்ல கோவில் வாசல்ல தாட்டோட
உக்காந்திருக்கானுங்கள்ல அவனுங்க மாதிரி அடுத்த பிறவியில்
நீயும் தட்டோட உக்கார வேண்டியதிருக்கும்" இப்படியும்
சொல்லிக் கிராமத்துப் பெரியவர்கள் தங்கள் குழந்தைகளை
நெறிப்படுத்துவார்கள்.

அந்த நெறிப்படும் மனது தான் முக்கியம். அது எத்தனை
வயதில் உங்களுக்கு நெறிப்படுகிறது என்பது அதை விட முக்கியம்.

முப்பது அல்லது நாற்பது வயதிற்குள் மனது நெறிப்பட வேண்டும்.
எழுபதுவயதில் நெறிப்படுவதால் ஒன்றும் பயனில்லை!

இருபது வயதில் நண்பன் சொல்கிறான் என்பதற்காக இரண்டு
பெக் சீவாஸ் ரீகல் விஸ்கி அடித்துப் பார்ப்பது இயற்கை.
அதையே எழுபது வயது வரை செய்வதை எப்படி ஒப்புக்கொள்ள
முடியும்? நல்லது என்று எடுத்துக் கொள்ளமுடியும்? எல்லாவற்றிற்கும்
ஒரு காலகட்டம், வரைமுறை உண்டல்லவா?

சரி, மனது எதற்காக நெறிப்பட வேண்டும்?

நல்லது, கெட்டது, இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம், வறுமை, செழுமை,
பெறுமை, சிறுமை என்று வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும்
சமமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் இருந்தால் அல்லவா வாழ்க்கை
சீராக இருக்கும். மனது எந்தச் சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருக்கும்.
அதைவிட முக்கியமாக நிம்மதியாக இருக்கும். அதற்குத்தான் நெறிப்படுத்தப்
பெற்ற மனது வேண்டும் Like a seasoned wood!

அதைச் சொல்லித்தருவதுதான் இந்தத் தொடரின் முக்கிய நோக்கமாகும்
--------------------------------------------------------------.

சரி, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

அஷ்டகவர்க்கம் என்பது உங்களுடைய பிறப்பின் மதிப்பெண் சான்றிதழ்
என்று நீங்கள் வைத்துக் கொள்ளலாம். அந்தச் சான்றிதழ் பிறந்த
ஷணத்திலேயே உங்களுக்குக் கொடுக்கப்பட்டு விடுகிறது. அதை மாற்றி
எழுத யாரலும் முடியாது. எந்தக் கொம்பனுக்கும் அதிகாரமில்லை.

உங்களுடைய ஜாதகத்தின் 12 பாவங்களுக்கும் அல்லது வீடுகளுக்கும்
அந்த வீடுகளுக்கு அதிபதிகளான 7 கிரகங்களுக்கும், அவை அமைந்
துள்ள அமைப்பின்படி கணக்கிட்டு வருவதாகும். அதன் முக்கியமான
சிறப்பு யாராயிருந்தாலும் மொத்த மதிப்பெண் 337 மட்டுமே.

அதாவது எல்லோருக்குமே 337/337 தான். கூடுதல் குறைச்சலுக்கெல்லாம்
இடமில்லை.

337 வகுத்தல் 12 என்னும்போது ஒரு வீட்டின் சராசரி மதிப்பெண் 28
அந்த சராசரி மதிப்பெண்ணிற்கு மேல் இருக்கும் வீடு நல்ல நிலைமையில்
உள்ளது என்றாகிவிடும். அதேபோல ஒரு கிரகத்தின் தனி மதிப்பெண்
எட்டு. சராசரி மதிப்பெண் நான்கு. நான்கிற்கு மேல் மதிப்பெண்களுடன்
நிற்கும் கிரகம் வலுவானதாக இருக்கும். அது தன்னுடைய கோச்சாரத்
திலும் (Transit) தசா புக்தியிலும் நல்ல பலன்களைத் தரும். இல்லை
யென்றால் தீமையான பலன்களே நடைபெறும்.

Timing of events ஐக் கணக்கிடுவதற்கு இந்த அஷ்டவர்க்கம் பயன்படும்
தமிழில் இந்த மதிப்பெண்களைப் பரல்கள் என்பார்கள்.

1. 25 பரல்களுக்குக் கீழே உள்ள வீடுகள் நல்லதல்ல. அவற்றிற்குரிய
பலன்கள் சாதகமாக இருக்காது.

2. 30 பரல்கள் உள்ள வீடுகள் நல்ல பலன்களைத் தரும்.

3. 30 பரல்களுக்கு மெலே இருந்தால் மிகச் சிறந்த பலன்களைத் தரும்

4. ஆட்சி, உச்ச பலன்களோடும் அல்லது கேந்திர, திரிகோண அமைப்
போடும் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள்கூட தங்கள் சுய வர்க்கத்தில்
குறைந்த பரல்களோடு இருந்தால் அவைகள் நல்ல பலன்களைத் தராது

உதாரணத்திற்கு ஒரு ஜாதகனுடைய நான்காம் வீட்டில் 30 அல்லது
அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகன் நன்றாகப் படிப்பான்.

அதேபோல ஒருவனுடைய ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் 30ற்கும்
மேற்பட்ட பரல்கள் இருந்தால் அவனுக்கு நல்ல மனைவி கிடைப்பாள்.
உரிய காலத்தில் திருமனமாகும். பெண்ணாக இருந்தால் நல்ல அன்பான,
அவளைப் போற்றி வைத்துக்கொள்ளக்கூடிய கணவன் கிடைப்பான்.

இப்படி ஒவ்வொருவீட்டின் பலனையும் அதிகமான பரல்களை
வைத்துச் சிறப்பாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அதுபோல ஒருவனுடைய லக்கினத்தில் நாற்பது அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்கள் இருந்தால், தலைவனாகி விடுவான். அவனுக்குத்
தலைமை தாங்கும் யோகம் தேடி வரும்.

சரி ஒரு இடத்தில் 40 என்னும்போது - அங்கே 12 பரல்கள் கூடிப்
போய் விடுவதால் வேறு இடங்களில் அது குறைந்து விடுமல்லவா?
மொத்தம் 337தானே? எங்கே குறைந்து உள்ளது என்று பார்க்க
வேண்டும்!

பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் தலைமை ஸ்தானத்தில் அதிகம்
பரல்கள் உள்ள தலைவர்களுக்குக் குடும்பஸ்தானத்தில் பரல்கள்
குறைவாக இருக்கும், அதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தை
மறந்து விட்டு தேசம, தேசம் என்று நாட்டுக்காகப் பாடு பட்டிருப்பார்கள்.

குறைந்த அளவு ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு பரல்கள் இருக்க வேண்டும்?

அட்டவணையைப் பாருங்கள்.
===========================================
அஷ்டவர்க்க பரல்கள்  Paralchart

=========================================
செய்யும் தொழிலுக்கு (10ஆம் வீட்டிற்கு) 30 பரல்களுக்கு மேல்
இருந்தால் சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும் அல்லது நல்ல தொழில்
அமையும். ஆனால் 36 ம் அதற்கு மேலும் இருந்தால் செய்யும்
வேலையில் ஒரு சபீர் பாட்டியாகவோ, அல்லது நாராயண மூர்த்தி
யாகவோ அல்லது பில் கேட்ஸா கவோ உச்சத்தைத் தொட முடியும்

நன்றி : வகுப்பறை வாத்தியார் சுப்பையா

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 6:20 pm

உங்களுக்கு எதெது மறுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு ஈடாக
வேறொன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பிறந்த மூன்றாவது நாளே, ஒரு குழந்தை தன் பெற்ற தாயாரால்
குப்பைத் தொட்டியில் போடப்படும் நிலைக்கு ஆளாகிறது என்றால்,
முன் பிறவியில் அந்தக்குழந்தை தன் தாய் தந்தையரை உதாசீனப்.
படுத்திய பாவத்தைச் செய்திருக்கும். இந்தப் பிறவியில் அந்தப்
பாவத்தைக் கழிக்க அதனுடைய பிறப்பு அப்படி அமையும்.

பாவம் புண்ணியம் பற்றி நிறைய பகிர்ந்து உள்ளீர்கள்.

ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால், மறுபிறவி என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு உலகம்.அந்த கண்ணுக்குத் தெரியாத உலகத்தை விட கண்ணுக்குத் தெரிகின்ற இந்த உலகத்தில், எல்லோரும் எல்லோருக்கும் நல்லது செய்ய சக்தி இருக்கின்றதோ இல்லையோ, ஆனால் முடிந்தவரை பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் இருந்தாலே போதும்.



நல்ல பதிவு .ஆராய வேண்டிய கட்டுரை அஷ்டவர்க்க பரல்கள்  224747944 அஷ்டவர்க்க பரல்கள்  2825183110 அஷ்டவர்க்க பரல்கள்  677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அஷ்டவர்க்க பரல்கள்  Image010ycm
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Sep 06, 2011 6:24 pm

kitcha wrote:[

ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால், மறுபிறவி என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு உலகம்.அந்த கண்ணுக்குத் தெரியாத உலகத்தை விட கண்ணுக்குத் தெரிகின்ற இந்த உலகத்தில், எல்லோரும் எல்லோருக்கும் நல்லது செய்ய சக்தி இருக்கின்றதோ இல்லையோ, ஆனால் முடிந்தவரை பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் இருந்தாலே போதும்.


மிக சிறந்த கருத்து தங்களுடையது , மகிழ்ச்சி

இவ்வாறே ஒவ்வொரு மனிதனும் நினைக்கவேண்டும் ,
அவ்வாறு நினைத்தால் உலகம் சொர்க்கம் ஆகிவிடும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக