புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
51 Posts - 43%
heezulia
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
3 Posts - 3%
prajai
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
417 Posts - 49%
heezulia
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
286 Posts - 33%
Dr.S.Soundarapandian
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
28 Posts - 3%
prajai
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தாய்க் கோழி Poll_c10தாய்க் கோழி Poll_m10தாய்க் கோழி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்க் கோழி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 08, 2011 3:22 pm

தூக்கம் வராத கண்களுக்கு இரவு நீண்டு கொண்டே போவது போலிருந்தது, குமரேசனுக்கு. அருகில் மனைவி சாந்தி ஆழ்ந்த தூக்கத்தில் மூச்சை இழுத்து விடும் சப்தம் மட்டுமே கேட்டுக்கொண்டேயிருக்க அருகருகே குழந்தைகள்... அவள் வயிற்றின் மேல் காலையும், கழுத்தின்மேல் கையையும் போட்டு, தூரிகைக்கு அகப்படாத ஒரு ஓவியம் போல் கிடந்தன.

மறுபடியும்ஒரு தடவையாக அந்தக்காட்சி குமரேசனின் நினைவில் வந்துபோனது.

அது ஒரு அந்தி நேரம். கொல்லைப்புற வாசலில் உட்கார்ந்திருந்தான். வீட்டுக்கோழி தன் குஞ்சுகளுக்கு மண்ணைக்கிளறி உணவு உண்ணும் வித்தையை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது.

அதேநேரம் எங்கிருந்தோ வந்த ஒரு பருந்து, குஞ்சொன்றை கவ்விக் கொண்டு பறக்க முற்பட்டது. எங்கிருந்துதான் இந்த தாய்க்கோழிக்கு அப்படி ஒரு அசாத்திய துணிச்சலும், சக்தியும் வந்ததோ சடுதியில் அந்தப் பருந்தை பறந்து துரத்தத் தொடங்க, கோழியின் ஆக்ரோஷத்தைக் கண்ட பருந்து பதட்டத்தில் தனது பிடியிலிருந்த குஞ்சை விடுவிக்க...

கீழே விழுந்த குஞ்சை புரட்டிப் புரட்டிப் பார்த்து... வானத்தை நோக்கி கொக்கரித்தது, கோழி.

நெஞ்சே பதறிப்போனது குமரேசனுக்கு... இந்த கோழியின் கொக்கரிப்பு பருந்தைப் பார்த்து திட்டுவது போலிருந்தது.

பறந்து போய் தாக்கக்கூடிய இத்தனை ஆற்றல் கொண்டதா இந்த கோழி... இத்தனை போராட்ட குணத்தோடு இருக்கும் கோழிதான் இத்தனை பவ்யமாய்... தரையைக் கிளறி, தனது பசிக்கு புழுக்களோடு போரிட்டுக்கொண்டிருக்கிறதா...?

இல்லை..! இதையெல்லாம் மீறிய ஒரு இணக்கம், தனது பிள்ளையான குஞ்சு

களோடு இருக்கும் ஒரு பற்றுதல்... ஒரு பாசம்... ரத்த உறவு... இதையெல்லாம் இணைத்த மகத்தான, தாய்மை..!

மறுநாள்.

தான் பார்த்த கோழியின் வீரப்போர் பற்றி மனைவி சாந்தியிடம் சொன்னான்.

``இதுல என்ன பெருசா கண்டீங்க...?'' வார்த்தையில் அலட்சியம் வெளிப்பட்டது சாந்தியிடம்.

``என்னோட அம்மாவும் அந்த கோழிபோல தான். சாந்தி...!'' தாழ்ந்த குரலில் பேசினான் குமரேசன்.

``உங்க அம்மா மட்டுமில்ல... ஊரு உலகத்தில இருக்கிற எல்லா அம்மாவும் அப்படித்தான். என் பிள்ளைகளுக்கு ஒண்ணுன்னா, நானும் அப்படித்தான் போராடுவேன்!''

வார்த்தையை, சட சடவென பொரிந்தாள்.

ஊரு உலகத்தில் இருக்கிற தாயை எல்லாம், புகழ்ந்தாலும், தனது தாயை மட்டும்... தாழ்த்திப் பேசுவதையே, குறிக்கோளாக, கொண்டிருப்பவளுக்கு எப்படி புரிய வைப்பது..? குழம்பினான்.

``எல்லா, குடும்பத்திலேயும், சாதாரணமா நடக்கிற சண்டை போலதான் சாந்தி...!'' பவ்யமாகப் பேசினான்.

``இப்போ என்ன சொல்ல வர்றீங்க..? புத்தருக்கு, மரத்துக்கு கீழே, போதனை கிடைச்ச மாதிரி, கோழி வந்து உங்களுக்கு புத்தியைக் கொடுத்திடுச்சோ..? சாதாரண சண்டைக்கு, அத்தை ஏன் கோபிச்சுகிட்டுப் போகனும்.. சரி போனாங்கல்ல.. கோபம் தீர்ந்தப்புறமாச்சும்... வரணுமில்ல.. ஏன் முதியோர் இல்லத்தில சேர்ந்து அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க என்னை ஏளனமா பேசுற அளவுக்கு ஏன் விட்டாங்க..!''

``ஆனா அடுத்த மாசமே அப்பாவோட பென்சன் பணத்தை நம்ம பிள்ளைகளோட படிப்பு செலவுக்காக தர்றதா சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தாங்கல்ல.. நீ கூப்பிட்டிருக்கலாமே. இப்படியே `ஈகோ' பார்த்தா.. கடைசியில எதுவுமே மிஞ்சாது சாந்தி... ஒரு பொம்மைக்கு, ரெண்டு சின்னப்பிள்ளைங்க சண்டை போட்டுக்கிற மாதிரி இருக்கு, என்னவெச்சு நீங்க ரெண்டு பேரும் போட்ட சண்டை..! உனக்குப் புருஷன் வேணும்... புருஷன் சார்ந்த உறவுகள் வேணாம்...! அவங்களுக்குப் பிள்ளை வேணும்... பிள்ளை சார்ந்த உறவுகள் வேணாம்..!

சாந்தியின் மனசை அவன் வார்த்தைகள் கொஞ்சம் அசைக்கத்தான் செய்தது.

ஒரு சில தினங்களுக்குப் பிறகு ஒரு நாள்... காலிங்பெல் ஒலிக்க, சாந்தி வந்து கதவைத் திறந்தாள். வாசலில்

பொன்னுத்தாயி...``வாங்கத்த...!'' என்று சொல்லிவிட்டு உள்ளே வந்தாள் சாந்தி, விபரமறிந்த குமரேசன் வாசலுக்குவருவதற்குள் முயல்குட்டிகள்போல் முந்திக்கொண்டு ஓடிவந்து அப்பத்தாவின் மடியில் போட்டி போட்டு புரண்டனர் குழந்தைகள். அவர்களின் கன்னங்களை வருடி உச்சி முகர்ந்த பொன்னுத்தாயை குமரேசனின் `அம்மா' குரல் கலைத்தது.

``என்னடா... முகம் வாட்டமா இருக்கு..?'' என்று வினவியவள்... ``செல்லங்களா... நல்லா படிக்கிறீங்களா.. படிக்கணும்... அதுதான் முக்கியம்..'' என்றாள். கையில் வைத்திருந்த பழங்களை பேரன்' பேத்திகளிடம் நீட்டினாள். இந்த பாசம் பார்த்து கண் கலங்கிப்போனான் குமரேசன்.

"ஏண்டா அழுவுற...? நான் நல்லா சமைக்கிறேன்னு அந்த முதியோர் இல்லத்துல சமைக்கச் சொல்லி சம்பளமும் தர்றாங்க... சம்பளம் வேணாம்னு எவ்வளவோ சொன்னேன். யாரும் கேட்கல..! சரி.. பரவால்ல... பேரப் பிள்ளைகளோட பெரிய படிப்பு செலவுக்காக.. நீ ஒத்தக் கட்டையா கிடந்து அல்லாடுவியே... அதான் அதை மாச டெபாசிட்ல போட்டுட்டு வர்றேன். அதை எடுக்க முடிஞ்சா எடுத்து தரவா..?''

சொல்லிக்கொண்டே போன பொன்னுத்தாயை... அம்மா..!' என்ற கதறலோடு காலைப் பிடித்தான் குமரேசன். "என்னடா சின்னப் பிள்ளையாட்டம்..!'' என்ற பொன்னுத்தாயி, அவன் தாடையை பிடித்து நிமிர்த்தினாள்.

இதை கதவு மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த சாந்தி, "அத்தே! என்னையும் மன்னிச்சிடுங்க.. உங்க பிள்ளை எப்பவும் உங்க நெனைப்பாதான் இருந்தாரு அவரோட தாய்ப்பாசத்துக்கு முன்னால நான் தோத்துப்போய்ட்டேன்..!'' விசும்பினாள் சாந்தி.

``அது ஒண்ணும் இல்ல சாந்தி..! மாத்துறதுக்கும் மறைக்கிறதுக்கும், காசா, பணமா..? ரத்தம் இல்லியா.. அந்த ரத்தத்துல கலந்த உசுரு இல்லியா... கருத்தரிச்சதும், கருவா கடவுளா நெனைச்சது அவனத்தானே... அவன் இல்லன்னா தாய்ங்கிற பதவி எனக்கு எப்படி கிடைச்சிருக்கும்? அப்படி ஒரு உறவை மாத்துறது என்ன சாதாரணமா...!'' என்று நெஞ்சம் நெகிழ கூறிய பொன்னுத்தாயி, முந்தானையில் முடிந்து வைத்திருந்த கத்தை பணத்தை எடுத்துக் கொடுத்தாள்.

``அம்மா..! இங்க இருந்திடும்மா..! என்னோட குற்ற உணர்வு.. என்னை நாளுக்கு நாள் கொன்னுகிட்டே.. இருக்கும்மா..!'' என்று குமரேசன் வார்த்தையை முடிப்பதற்குள், ``ஆமா அத்தை...!'' என்றாள் சாந்தியும் குரலைத் தழைத்தபடி.

பேரன் பேத்திகளை, கொஞ்சிக் கொண்டே பேசினாள் பொன்னுத்தாயி.

``செல்லங்களா... நீங்க எல்லாம் சின்னப்பிள்ளைங்க. உங்களுக்கு, அப்பா, அம்மா, இருக்காங்க.. அந்த முதியோர் இல்லத்துல அம்பதிலேர்ந்து என்பது வயசுப் பிள்ளைங்க வரைக்கும் இருக்குதுங்க. அப்பத்தா போய்தான் சமைச்சுப் போடணும். அவங்களுக்கு யாருமே இல்லடா..! எனக்காவது நீங்க எல்லாம் இருக்கீங்க.! தாத்தாவோட பென்சன் வரும்போதெல்லாம் வந்து பார்த்துக்கிறேன். குமரேசா வர்றேன்டா..! முடியாத காலத்துல வந்து ஏதாவதொரு மூலையில முடங்கிக்கிறேன்.!'' என்ற பொன்னுத்தாயி.. மெதுவாக கைïன்றி எழுந்தாள். அம்மாவின் வைராக்கிய குணம் குமரேசனுக்கு தெரியும்... இதற்குமேல் அவளைத் தடுக்கவும் முடியாது.

``சாந்தி வரவாம்மா..!''

``அத்தே..! என ஏதோ பேச வந்தவளை...

``விடலை வயசுல மனசு காதலுக்கு ஏங்கும்.. கல்யாண வயசுல உடம்பு தாம்பத்தியத்துக்கு ஏங்கும்... பொறுப்பு வரும் போது, மனசு பொருளாதாரத்துக்கு ஏங்கும்.. முதுமையில மனசு, உறவுகளுக்கு ஏங்கும்.. சூழலுக்கு சூழல் சூழ்நிலைகள் மாறுமே ஒழிய.. மனசு ஒண்ணுதான்.. அப்போ எதையும் உதறிடாம அனுசரிக்கணும்.. அதுதான் வாழ்க்கை..!

-என்றவள் ஒரு எட்டு எடுத்து வைத்து விட்டு ``செல்வங்களா வரட்டுமாடா..!'' என்று வாரி அணைத்து முத்தங்களை பொழிந்து விட்டு நடந்தாள்.பொன்னுத்தாயின் நடையில் ஒரு கம்பீரம் இருப்பது போல் தெரிந்தது, தடுமாறிப் போயிருந்த குமரேசனுக்கும், சாந்திக்கும்!

- நாகை.பி.எஸ்.தனமுருகன்



தாய்க் கோழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 08, 2011 3:28 pm

``விடலை வயசுல மனசு காதலுக்கு ஏங்கும்.. கல்யாண வயசுல உடம்பு தாம்பத்தியத்துக்கு ஏங்கும்... பொறுப்பு வரும் போது, மனசு பொருளாதாரத்துக்கு ஏங்கும்.. முதுமையில மனசு, உறவுகளுக்கு ஏங்கும்.. சூழலுக்கு சூழல் சூழ்நிலைகள் மாறுமே ஒழிய.. மனசு ஒண்ணுதான்.. அப்போ எதையும் உதறிடாம அனுசரிக்கணும்.. அதுதான் வாழ்க்கை..!



வாழ்க்கையைப் புரியவேண்டிய அருமையான வரிகள்.தாய்க் கோழி 224747944 தாய்க் கோழி 2825183110

நன்றி தல



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தாய்க் கோழி Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக