புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_m10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10 
155 Posts - 79%
heezulia
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_m10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_m10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_m10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_m10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_m10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10 
3 Posts - 2%
Pampu
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_m10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_m10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_m10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10 
320 Posts - 78%
heezulia
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_m10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_m10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_m10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_m10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_m10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_m10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_m10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_m10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_m10சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீதனம் சோம்பேறிகளின் வேதனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 8:50 pm

சீதனம் முதுகெலும்பில்லாதவர்களின் முகவரி இதை நான் சொல்லவில்லை அண்மையில் இலங்கையின் தனியார் வானொலி ஒன்றில் நடைபெற்றிருந்த சீதனம் சம்பந்தமாக நேயர்களின் தொலைபேசிவாயிலான கருத்துப்பரிமாற்றத்தின்போது நேயர் ஒருவர் தெரிவித்த கருத்து. வித்தியாசமாக ஒருபெண் கூறியகருத்து என்னவென்றால் சீதனம் வாங்குபவர்களுக்கு மரணதண்டனை (இது ரொம்பவும் ஓவர்) கொடுக்க வேண்டும் என்பதுதான். எது எப்படியிருந்தபோதிலும் அன்று எவரும் சீதனம் வாங்கப்படுவது ஒரு நியாயமானதான செயலாக குறிப்பிட்டிருக்கவில்லை.

சமூகத்தில் சீதனத்துக்கு எதிராக இப்படி ஒரு எதிர்ப்பு நிலவிக்கொண்டிருக்கும் காலத்தில் ஏன், எப்படி இந்த சீரழிவு தொடர்ந்து கொண்டிருக்கின்றது? இது பெண்களுக்கு எதிரான ஒரு கொடுமை என பலராலும் சுட்டிக்காட்டப் ;படுகின்றபோதிலும் உண்மையில் இது தனியே பெண்களுக்கு எதிரான கொடுமை என பச்சை குத்திவிட முடியாது. இது ஒரு சமூகக்கொடுமை இதனால் பாதிக்கப்படுபவர்களில் கூடுதலானவர்கள் பெண்கள் என்றபோதிலும் ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை ஒரு தகப்பன் தன் மகளை திருமணபந்தத்தில் இணைத்துவைக்க (நாட்டுப்புற வழக்கில் கரை சேர்த்தல் என குறிப்பிடப்படலாம்) ஒரு தம்பி தன் அக்காவை, ஒரு அண்ணன் தன் தங்கையினை, கரை சேர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டங்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கிறது.

இது இத்தோடு நின்றுவிட்டதா? இல்லையே! கரை சேர்த்துவைக்க கணவன் ஏதோ அசம்பாவிதத்தால் இறந்துவிட அல்லது இயலாத நிலையில் இருக்க அவளின் மகளைக்கரைசேர்க்கவேண்டிய தேவையும் சிலருக்கு ஏற்படுகின்றது. இப்படியே ஒரு தொடராக வளர்ந்துகொண்டிருக்கிறது.எத்தனை ஆண்கள் இந்த சீதனப்பிரச்சினையால் தங்கள் உறவுகளைக் கரைசேர்க்க முடியாதநிலையில் பிரம்மச்சாரிகளாக இருக்கிறார்கள். காலங்கடந்து கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்கள். கடன்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

என்னடா இது ஒரே ஆண்களுக்குரிய புராணமாக இருக்கிறதே என விசனப்படுகிறீர்கள் கொஞ்சம் பொறுங்கள். ஒரு விடயத்தை ஆராய வேண்டுமானால் தீர ஆராய வேண்டுமல்லவா பெறுமனே சீதனம் பெண்களுக்கு எதிரான கொடுமை என கோவிந்தா போட்டுவிட்டால் சரியாகிவிடுமா? சரி இனிபெண்கள் பக்கம் வருவோம்!

இவர்களின் சோகம் கொடுமையானது தனக்காக உறவுகள் கஷ்டப்படுவதனை கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். பின் கரை சேர்ந்த பின் கட்டிய கணவனிடமிருந்து, இன்னும் கொண்டுவா போ என்ற கொஞ்சமும் ஈவிரக்கமற்ற கட்டளைகள். இதனால் மனமுடைந்து எத்தனை பெண்கள் தற்கொலை செய்கிறார்கள். இத்தனை கடினப்பட்டு என்னைக்கரைசேர்த்தவர்களிடம் போய் இன்னும் தாருங்கள் என்று எந்த முகத்துடன் கேட்பது என்பது தான் இவர்களின் முடிவுக்கு காரணம். தற்கொலை என்பதை எந்த மனிதனாகப்பிறந்த ஜீவனும் எடுக்கக்கூடிய முடிவாக ஏற்றுக்கொள்ள முடியாத வேளையிலும் வேறு என்ன செய்வது? இதைவிட எத்தனை பெண்கள் இந்தச் சீதனத்தினால் தமது உணர்வுகளைக்கருக்கி காலம் முழுக்க கன்னிகளாக காலங்கடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

கல்யாணம் ஒன்றே கன்னியர்க்கு ஒரு நல்ல பாதுகாப்புக் கவசம் என்ற ஒரு நம்பிக்கை (ஒரு வகையில் நியாயம்தான்) காலம் காலமாக நிலவிவருகின்றது. அப்படியானால் மேற்சொன்னவர்களின் பாதுகாப்புக்கு யார்பொறுப்பு? சீதனத்தை திரட்டுபவர்களில் பெரும்பாலும் ஆண்களே சம்பந்தப்படுகின்றபோதிலும் சில சந்தர்ப்பங்களில் பெண்களும் இதில்பெரும் பங்கு வகிக்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாது.குடும்பத்தில் ஆண்கள் இல்லாத ஒரு நிலையில் தனது தங்கையின் ,அக்காவின் திருமணத்தினை நிறைவேற்ற எத்தனையோ பெண்கள் தம்மை அர்ப்பணித்தும் இருக்கிறார்கள்.

திருமணத்தின் பின்னரான சீதனக்கொடுமை இன்னும் சோகமானது இதனால் பாதிக்கப்படுவது முற்றிலுமாக பெண்கள் தான் என்றால் மிகையில்லை. சீதனம் கொண்டுவராமல் வந்தவள்@ கொண்டுவந்த சீதனம் பற்றாது இன்னும் கொண்டுவரவேண்டி இம்சிக்கப்படுபவள் என பெண்கள் படும் அவஸ்தை இருக்கிறதே, அப்பப்பா அது கொடுமையிலும் கொடுமை. இதற்காக இவள் தற்கொலை செய்யப்படுவதையும் காண்கின்றோம். இது இலங்கையில் குறைவாக இருக்கின்ற போதிலும் இந்தியாவில் இது கட்டுப்படுத்த முடியாத ஒரு நோயாக இருக்கிறது. இத்தனைக்கும் சீதனத்துக்கு எதிரான சட்டம் இந்தியாவில் அமுலில் இருக்கிறது. ஆனால் இலங்கையில் இல்லை.

சீதனக்கொடுமையால் எத்தனையோ பெண்கள் கையில் குழந்தைகளுடன் விதவைகளாக்கப்பட்டிருக்கும் இது போன்ற எண்ணுக்கணக்கற்ற வித்தியாசமான பாதிப்புக்கள் எமது கண்ணெதிரே சமூகத்தில் நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இங்கு சுவாரஸ்யமான ஒரு விடயம் ஒன்று இருக்கின்றது. சீதனம் என்னும் கொடுமையான திரைப்படத்தில் வில்லன் வில்லிகள் எல்லோரும் இருக்கிறார்கள். பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடிய சித்திரவதைகளில் வில்லிகளாக பெண்களாக இருப்பதே அது. மாமியார் கொடுமை, மச்சினிச்சி கொடுமை என இங்கு இருவேறு காட்சிகள்.

என்ன இந்த உலகமோ தெரியவில்லை. ஒரு மனிதப்பிறவி துன்பப்படுவதை இறக்க இன்னம் ஒரு மனிதப்பிறவி இருக்கிறதே.வெளிப்படையாக சீதனத்தின்கொடுமைகளையும் அதன் பாரதூரமான விளைவுகளையும் எம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருந்தும் ஏன் இந்த சீதனம் ஒழியவில்லை. நாம் என்ன சிந்திக்கமுடியாத சித்தப்பிரமை பிடித்த ஜடங்களா? இதனால் நாம் அடைந்த இலாபம் என்ன? நட்டம் என்ன?இதனால்தான் என்னவோ அன்று பட்டுக்கோட்டை திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பாடிவைத்தானோ? பட்டுக்கோட்டை இன்றிருந்தால் எப்படிப்பாடியிருப்பானோ? என்று நான் கேட்க மாட்டேன் ஏனென்றால் இந்தக்கொடுமை அவன் காலத்திலும் தலைவிரித்துக் கொண்டுதானிருந்தது.

சீதனம் வாங்குபவர்களை பிடித்து மரணதண்டனை வழங்கவேண்டும் என்று கூறிய இந்த பெண் சார்ந்த வர்க்கத்தில்வந்த இன்னும் ஒரு பெண்தான் ஒரு இளைஞனின் தாயாக இருந்துகொண்டு பெண்ணுக்குமாமியாராக இருந்துகொண்டு சீதனம் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள் என்றால் நகைப்பாக இருக்கிறதல்லவா. ஆனால் இது தான் உண்மை. எந்தப்பெண் சீதனக்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாளோ அதேபெண்தான் சீதனம் தரவேண்டும் என தனது மகனுக்காக வாதாடுகிறாள். எந்த ஆண் தன் உறவுகளுக்கு சீதனம் கொடுப்பதற்காக இடர்ப்பட்டாளோ அதே ஆண்தான் மகனுக்கு வீடுவேண்டும் மோட்டார் வண்டிவேண்டும், இருபத்தைந்து இலட்சம்வேண்டும் என பிடிவாதமாக இருக்கின்றான். என்ன செய்வது இது கலிகாலம் நான்பெற்ற இன்பம்(?) பெறுக இவ்வையகம் என்ற பெருந்தன்மையோ தெரியவில்லை.

இவர்கள் கலியுகத்து அன்னம்போலும் அதாவது பாலில் அழுக்கிருந்தால் பாலைவிட்டு அழுக்கை உட்கொள்கின்றனர். இவர்கள் காலங்காலமாக பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஊடகங்கள் திரைப்படங்கள் வாயிலாக இவர்களை நல்வழிப்படுத்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றபோதிலும் இவர்கள் கொஞ்சமேனும் அவற்றை சட்டை செய்வதாக இல்லை. சிலர் பிரச்சாரத்தில் தாமும் பங்கெடுத்துக் கொள்வதோடு சரி. ஊருக்கடி உபதேசம் உனக்கல்லடி என்பது இவர்கள் எண்ணம் போலும்! எனக்கென்னவோ உங்களைத் திருத்தவே முடியாதடாஎன்று ஜனங்களின் கலைஞன் விவேக் இனது பாணியில் சொல்லவேண்டும் போலிருக்கிறது.



சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 8:50 pm

இந்த சீதனம், அதன் பாதிப்புக்கள் எல்லாம் ஒரு சுற்றுவட்டம் என்றே கூறலாம் அதாவது நாம் பாடங்களில் படிக்கின்றோமே நைதரசன் வட்டம், காபன் வட்டம் என்று அவை போல இதுவும் சுழற்சி முறையிலான ஒரு செயற்பாடாகவே இருக்கின்றது.தகப்பன் மகளைக் கரைசேர்க்க மகள் தன் மகளைக் கரைசேர்க்க இன்னும் ஒரு தகப்பன் தன் மகனுக்கு என இந்த சீதனம் எந்த வேளையிலும் அடிபடும் ஒரு கரப்பந்தாக சுழன்றுகொண்டிருக்கின்றது. இந்தக்கரப்பந்து சுற்றுப்போட்டிக்கு முடிவென்பது கிடையாது ஒருவீரர் களைத்துவிட்டால் இன்னும் ஒரு வீரர் களமிறங்கிவிடுவார். இதனை நிறுத்தவேண்டும் எனில் அணுக்குண்டு (?) ஜமனச்சாட்சிஸ தான் போடவேண்டும்.

எது எப்படியிருப்பினும், இந்த சீதனத்தை வாங்குபவர்களாக இருப்பவர்கள் சிந்திக்க வேண்டிய ஓரிடம் இருக்கிறது. சீதனம் என்ற ஒரு தொகைப் பணத்தை,பொருளைப்பெற்று ஆண்களை நிபந்தனைக்குட்பட்ட விபச்சாரத்திற்காகவிற்கின்றார்கள். அல்லது தாமே விபச்சாரிகளாக விலைபோகிறவர்களாக இருக்கிறார்கள். பெண்களினை பணங்கொடுத்து ஏற்பாடுசெய்தால் அதுவிபச்சாரம் என்பதுபோல இதுவும் ஒரு நீண்ட கால விபச்சாரமாக ஏன்கொள்ள முடியாது?

இவர் பொறியியலாளர் இவருக்கு எழுபத்தைந்து லட்சம் இவர் மருத்துவர் இவருக்கு ஐம்பது லட்சம் என ஒவ்வொரு ஆண்களும் விலைபேசப்படுகிறார். வேலையில்லாவிட்டால் என்ன பரவாயில்லை அவருக்கு பத்துலட்சம் தரலாம். ஐந்து லட்சம் அந்த அற்புதமகனை ஈன்ற பெற்றோருக்கு ஐந்துலட்சம் வங்கியில் போட்டு உன் வயிற்றை நிரப்பிக்கொள் என சந்தை நிலவரம் போகிறது. பெண் விபச்சாரம் ஆனது ஓரளவுக்கேனும் மறைமுகமாகவே இருக்கிறது ஆயினும் இந்த ஆண் விபச்சாரம் (சீதனம் சம்பந்தப்பட்டது) இருக்கின்றதே அது பட்டப்பகலில் நிறைவேற்றப்படுகிறது.

தெருவில் கந்தையா வருகிறார் எதிரில் முருகேசுவருகிறார். என்ன கந்தையா புது மாப்பிளை போல வருகின்றாய் யாரின்ர கல்யாணம்? என்று கேட்க இவன் செல்லையா இருக்கிறானே அவனின்ர கடைசிப்பெட்டைக்கு கல்யாணம் என்றார் கந்தையா. யாருபொடியன் எவ்வளவு சீதனமாம்? இது முருகேசரின் ஆவலான கேள்வி. இது சாதாரணமாக தெருவில் இன்று சம்பவிக்கக்கூடிய உரையாடல் அந்தளவுக்கு சீதனம் வேரூன்றி இருக்கின்றது என்றால் மறுப்பீர்களா?

திருமணம் - உலகத்தில் நாம் பிறந்து வாழப்போகும் காலப்பகுதியில் பெரும் பகுதி இதன்பின்தான் ஆரம்பிக்கின்றது. இதற்கு நாம் விலை பேசுவதா உலகில் மனி;தப்பிறவிகளுக்கு இரண்டு ஜாதி தான் இருக்கிறது ஒன்று பெண் மற்றது ஆண். இதையெல்லாம் நீங்கள் சொல்லியா நாங்க தெரியவேண்டும் என நீங்கள் நினைப்பது எனக்குப்புரிகிறது என்ன செய்வது அது அதுவா வருகுது. இந்த இரு இனங்களும் கூடிவாழும் போது உள்ள சுகம் எங்கு கிடைக்கும். ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தி, விட்டுக்கொடுத்து வாழும் போது கிடைக்கும் இனிமையினை யாரால் விலை பேசமுடியும். ஒரு பெண் தனது இறுதி அத்தியாயத்துக்காக தன் உறவுகளைப்பிரிந்து கணவனே கதியென கால் எடுத்து வைக்கும்போது அவளைப்பார்க்காமல் அவள் அன்பைப்புரியாமல் அவள் என்ன கொண்டுவருகிறார் என்று பார்ப்பது என்ன மடத்தனம்.

அவளுக்கு அவனும் அவனுக்கு அவளும் சீதனம் தானே அதை விடுத்து அவள் கழுத்தில் எவ்வளவு கையில் எவ்வளவு கட்டிவருவது எவ்வளவு என்று பார்க்கிறானே ஒரு ஆடவன். கட்டிய மனைவியினை கண்கலங்காது கட்டிக்காப்பது கணவனின் கடமை என்று உணராமல் அதற்கு கூலிதரவேண்டும் என்று கேட்பதற்கு செய்யப்படும் பந்தத்துக்கு பெயர் திருமணமா? இதற்கு அவர்கள் பெண்களை கலங்காது காப்பாற்றுவோம் என்று ஒரு புதிய சேவையினை தொடங்கியிருப்பார்களானால் சிலவேளை ஏற்கக்கூடியதாயிருக்குமே.

அண்மையில் இதுபற்றி ஒரு பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்க கூட்டத்தில் ஒருவர் குரல்கொடுப்பது எனக்கு கேட்கிறது. நாங்கள் எவ்வளவு கஸ்டப்பட்டுப்படித்து இந்நிலைக்கு வந்து இருக்கின்றோம். எம்மை இந்நிலைக்கு வரச்செலவழித்த பெற்றோருக்கு நாம் என்ன கைம்மாறு செய்வது அதற்கு இந்த சீதனம் தானே பதில் என்று அவர் கூறுகிறார். அதோ மற்றவரும் சொல்லவருகிறார் கேட்போம். நாம் வாழ்க்கையின் பெரும்பாகத்தை உறவுகளுக்கு ஒரு நல்ல வரன் (மாப்பிள்ளை) கிடைப்பதற்கும் அவனுக்கு சீதனம் கொடுக்கவும் செலவழித்துவிட்டோம். இனி எமக்கு என்று ஒன்றும் இல்லை. அப்படி இருக்க எமது வாழ்கையினை தொடக்க ஒரு முதலாக இந்த சீதனத்தை வாங்குகிறோம் என்கிறார் ஆதங்கத்துடன்.

என்னடா இது கொஞ்சம் விட்டால் எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள் இதோ கூட்டத்தின் முன்னாலிருந்து ஒரு குரல் பார்த்தால் படித்தவர் போல் இருக்கிறார். அவர் என்ன சொல்கிறார்? நாம் என்ன இளிச்சவாயன்களா? நான் இன்று மருத்துவராயிருக்கிறேன் வயது 30 ஆகிறது வீட்டில் கல்யாண வயசில் மூன்று சகோதரிகள் நான் என்ன செய்வது இன்றுவரை நான் உழைத்து ஏதுமில்லை. எல்லாம் வீட்டில் வாங்கியது தான் இனி அந்த சகோதரிகளை கரைசேர்க்க நான் சீதனம் வாங்கத்தானே வேண்டும். கொஞ்சமும் இரக்கமில்லாமல் கதையாக்கின்றீர்களே அப்படியானால் நீங்கள் எனது சகோதரிகளை கரை சேருங்கள். நான் சீதனம் வாங்கவில்லை. போட்டாரே ஒரு போடு.(இது என்னடா ஒரு புதுச்சிக்கல்) சரி சரி அமைதி என்று குரல் கொடுத்தேன்.

அப்போது கூட்டத்தின் மூலைப்பக்கத்தில் இருந்த ஒருவர் எழுந்து நான் என்ன செய்ய எனக்கு சீதனம் வாங்காமல்விட விருப்பம் தான் ஆனால் என்ன செய்ய அம்மாவும் அப்பாவும் பிடிவாதமாய் இருக்கின்றனர் வாங்காவிட்டால் தற்கொலை செய்யப்போவதாய் மிரட்டுகினம் என்றார் தொங்கிய முகத்துடன்.அந்தவேளையில் அங்கு இன்னும் ஒரு கூட்டம் கையில் வீச்சரிவாள்களோடு. யாரடா அவன் என்ர பொடியனை சீதனம்வாங்க வேண்டாம் என்றுசொன்னவன் என்று பாய்ந்து வந்து கொண்டிருந்தார் ஒரு பெரியவர் கையில் வாளுடன். பிறகென்ன நான் விவேக்கின் பாணியில் எஸ்கேப்(தப்பிவிட்டேன்)

வெள்ளைக்காரனிடம் நாம் பெற்றுக்கொண்டவற்றில் நல்லவைகள் மிகக்குறைவே. உண்மையில் பெரிய விஞ்ஞானிகள் எல்லாரும் வெள்ளைக்காரர்கள் தான் அவர்கள் சீதனம் கேட்டா திருமணம் செய்தார்கள் மிகவும் எளிமையாகவல்லவா வாழ்ந்தார்கள். அவர்கள் கேட்டிருந்தால் சந்தை நிலவரம் எவ்வளவாக இருந்திருக்கும் என கற்பனை செய்து பார்த்தால் தலை சுற்றுகின்றதல்லவா?



சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 8:51 pm

இந்தியாவிலும் இலங்கையிலும் தான் இந்த சீதனத்தின் தாக்கம் அதிகம் எனலாம். மேலும் தமிழர்கள் பெரும்பாலான தொகையில் வாழும் நாடுகளில் அவர்களிடையிலும் இது காணப்படுகின்றது. சிங்களவர்கள், முஸ்லிம்கள் மத்தியில் இது பெரியதாக்கம் தருமளவில் இல்லை ஆயினும் தமிழர்களிடையே தான் இது பெரியளவில் பரவி இருக்கிறது.

நான் முற்சொன்னவாறு இது ஒரு சுற்றுவட்டத்தில் தான் இருக்கிறது. ஓரிடத்தில் சீதனம் வழங்கப்படுகிறது அந்தச்சீதனம் பகுதியாகவோ முழுமையாகவோ இன்னும் ஒரு இடத்திற்கு வழங்கப்படுகிறது. மொத்தத்தில் கூட்டிக்கழித்துப்பார்த்தால் ஒரு குறித்த தொகைப்பணம் கைமாறிக்கொண்டிருக்கின்றது. இது எந்தவித சிரமமும் இன்றி நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்க பக்கவிளைவுகளாக இடையில் சில நபர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். எந்த இயக்கமும் சீராக இருக்க வேண்டும் என்பதில்லைத்தானே. ஒருவர்வாங்குகிறார் அவரிடம்வாங்க இன்னுமொருவர் தயாராகஇருக்கிறார் அவரிடம் வாங்க இன்னும் ஒருவர் இருக்கிறார்.

இந்தச் சுழற்சிப்பரிமாற்றத்தைக் குழப்ப ஒருசிலர் இருப்பார்கள். (அவர்கள் தான் உறவுகள் இல்லாதவர்கள், இவர்கள் இந்த சீதனத்தில் குளிர்காய்கின்றவர்கள் அதனை தமக்கு சாதமாக்கி பிழைக்கத்தெரிந்தவர்கள்(?) இவர்களை விட வேறு காரணங்களும் இந்த சுழற்சி பரிமாற்றத்தினை சிக்கலுக்குள்ளாக்கி சிலர் பாதிக்ககாரணமாயிருக்கின்றன. அவை குடும்பத்தில் சீதனத்தின்தேவையுடன் உள்ளவர்களின் எண்ணிக்கை, சீதனத்தின் சந்தை பெறுமதிகள் (தொழில்களுக்கு ஏற்ப மாறுபடும்) இந்த சிக்கலான செயற்பாடுகளுடன்கூடிய இந்த சீதனக்கொடுமையினை நிறுத்தமுடியுமா? முடியும் மனமுன்டானால் இடமுண்டு. எல்லோரும் ஒரே நேரத்தில் சீதனம் வாங்குவதையும் வழங்குவதையும் நிறுத்திக்கொண்டால் தீர்வு கிடைக்காதா? ஏன் ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டிருக்கவேண்டும்? குளிர்காயவேண்டிய, வாங்கவேண்டிய தேவைகள் இல்லாதபோது இடர்ப்படவேண்டிய, வழங்கவேண்டிய தேவைகள் அற்றுப்போகும் தானே?

இறைவன்மனிதனை வாயுடன் வயிற்றுடன் படைக்கும்போது கால்களையும் கைகளையும் படைத்தான் தானே ஏன் அவை மூலம் தேவையானதைப்பெற்று வாய் வழி வயிற்றில் கொட்டத்தானே. இதனைவிடுத்து வாய்மூலம் சீதனம் கேட்டு வாங்கி வயிற்றை வளர்த்துவைத்து கையிலும் காலிலும் கனக்க கனக்க அணிகலன்போடவா இறைவன் படைப்பை அர்த்தம் கொள்வது?

காதலிக்கும்போது பெற்றவர்கள் எதிர்ப்பிருந்தால் காதலியைக் கூட்டிக்கொண்டு கண்மண் தெரியாமல் ஓடுவீர்கள். ஆனால் சீதனம் விடயத்தில் பெற்றோர் வற்புறுத்தின் கொண்டவளையும் கொடுமைப்படுத்த தயங்கமாட்டீர்கள். இது எந்த வகையில் நியாயம். இங்கு காதலைப்பற்றி கதைக்கும் போது ஒன்றைக்குறிப்பிடவேண்டும் சீதனத்தை சிதைத்து வெற்றிகாணும் ஆயுதங்களில் இது கூராயுதம் எனினும் அந்தக்காதலை தமது காமத்துக்கும் காரியங்களுக்கும் இரையாக்குபவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.மூலதனம் வேண்டுமா கிடைப்பதனை கடனாகக்கருதி அதனை திருப்பி கொடுப்பதை உறுதிப்படுத்தின் அது சீதனம் என்றபெயரை பெறுவதை தடுக்கலாமல்லவா?

சும்மா சும்மா சொன்னால் கேட்கமாட்டார்கள் ஆனால் மணிகட்டின ஆடு சொன்னால் கேட்பார்கள் இது தான் மனிதஇயல்பு. ஈழத்தைப்பொறுத்தவரை வடக்குக்கிழக்கில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இதன் தாக்கம் வெகுவாகக்குறைந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. அதற்கு மேற்சொன்னகாரணம்தான். மேலதிகமாய் இருந்தால் எமக்குத்தாருங்கள் வீட்டுக்குதவாத சோம்பேறிகளை உருவாக்குவதை விடுத்து நாட்டுக்குதவும் வீரர்களை உருவாக்குவதே சிறந்தது என்பது அவர்களது கண்டிப்பானவாதம். இதனை அவர்கள் இயன்றவரை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். போராட்டம் எமக்கு தந்த பரிசுகளில் பட்டினி, உறவுகளின் பிரிவு, அழிவு என்பனவற்றுடன் இந்த சீதனப்புரட்சி, பெண்மைப்புரட்சி, சாதிப்புரட்சியும் உள்ளடங்கும் என்பது சற்றே ஆறுதலளிக்கும் உண்மை.

திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தமது வேலையை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு காலம்தான் பதில்சொல்லவேண்டும்.சீதனம் வாங்குவது நல்லது அல்ல என புரிகிறது. ஆனால் நிறுத்த மனமில்லை அல்லது நிலைமை விடவில்லை. எந்த நல்லதையும் செய்ய ஒரு சில தியாகங்களை செய்யவேண்டும் தானே ஒன்றைப் பெற ஒன்றை இழப்பது அவசியம்தான். அவர் வாங்கினவர் தானே ஆனபடியால் நானும் வாங்கவேண்டும் என சொல்வது தவறு. இதுபோன்ற விதண்டாவாதங்களால்தான் ராக்கிங் இன்னும் தொடர்ந்து கொண்டிக்கின்றது.

இன்னும், சீதனம் வாங்குவது குற்றம் எனினும் வசதியான இடத்தில் வாங்கலாம். தேவையிருந்தால் வாங்கலாம் என்றெல்லாம் புகைக்குண்டுகளை எறிவது அவ்வளவு நல்லதல்ல. அது நிச்சயமாக இருந்த கொடுமையினை முன்னெடுத்துச் செல்பவர்களாக எம்மை இனங்காட்டுமேயன்றி வேறொன்று மில்லை. வெறுமனே குண்டக்கா மண்டக்கா விவாதங்களை ஓரங்கட்டிவிட்டு இளைஞர்களே, யுவதிகளே, பெற்றோர்களே, பெரியோர்களே சீதனப்புரட்சியில் இன்றே இணைவோம்.

- ஊரோடி -



சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Sep 17, 2009 11:35 pm

இதற்க்கு நான் தரும் தீர்ப்பு
வரதட்சனை வாங்குவது ஒரு நல்ல ஆண் மகனுக்கு அழகல்ல
அப்படி வரதச்சனை கொடுக்க வேண்டும் என்றால் ஒரு ஆண் தான் பொண்ணுக்கு கொடுத்து அவளை திருமணம் பண்ண வேண்டும்
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் 938222

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 11:37 pm

சீதனம் சோம்பேறிகளின் வேதனம் 677196



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 11:43 pm

mathans wrote:இதற்க்கு நான் தரும் தீர்ப்பு
வரதட்சனை வாங்குவது ஒரு நல்ல ஆண் மகனுக்கு அழகல்ல
அப்படி வரதச்சனை கொடுக்க வேண்டும் என்றால் ஒரு ஆண் தான் பொண்ணுக்கு கொடுத்து அவளை திருமணம் பண்ண வேண்டும்
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் 938222

உங்கள் மனைவிக்கு எவ்வளவு வரதட்சனை கொடுத்தீர்கள் மதன்ஸ்!!!



சீதனம் சோம்பேறிகளின் வேதனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 11:43 pm

அப்படி போடு .......................;;



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 11:54 pm

சிவா wrote:
mathans wrote:இதற்க்கு நான் தரும் தீர்ப்பு
வரதட்சனை வாங்குவது ஒரு நல்ல ஆண் மகனுக்கு அழகல்ல
அப்படி வரதச்சனை கொடுக்க வேண்டும் என்றால் ஒரு ஆண் தான் பொண்ணுக்கு கொடுத்து அவளை திருமணம் பண்ண வேண்டும்
சீதனம் சோம்பேறிகளின் வேதனம் 938222

உங்கள் மனைவிக்கு எவ்வளவு வரதட்சனை கொடுத்தீர்கள் மதன்ஸ்!!!

சியர்ஸ்

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sun Sep 20, 2009 4:35 am

எனது காதலி மனைவி ஆனதும் சொல்லுறேன் சிவா அண்ணா சரியா???

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 20, 2009 5:02 am

அப்ப வரதட்சனை வங்க மாட்டிங்களா ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக