ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 Empty சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை

Post by balakarthik Mon Sep 05, 2011 2:51 pm

First topic message reminder :

புதுமணத் தம்பதிகள், பச்சிளம் குழந்தைக்கு ஆரத்தி எடுப்பது ஏன்?

ஆரத்தி எடுப்பதற்காக பயன்படுத்தும் பொருட்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, கற்பூரம், நீர். ஒருவரை தண்ணீரால் சுழற்றி திருஷ்டி கழிக்கும் போது அவர் மீதான அனைத்து வகை கண் திருஷ்டியும் அகன்றுவிடும். இதனை நீர் வலம் விடுதல் என்று கூறுவர்.

பழங்காலத்தில் வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக அந்த உணவை நீர் கொண்டு ஆராதித்து விட்டு அதன் பின்னரே சாப்பிடத் துவங்குவர். இதுபோன்று செய்வதால் நாம் உண்ணும் உணவு புனிதப்படுவதாக அவர்கள் நம்பினர்.

புதுமணத் தம்பதிகள் திருமணம் முடிந்து மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வரும் காலத்தில் காத்து, கருப்பு உள்ளிட்ட தீவினைகள், சில கெட்ட சக்திகள், கண் திருஷ்டி உள்ளிட்டவையும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, புதுமணத் தம்பதிகள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக அவர்களுடன் வந்திருக்கலாம் எனக் கருதப்படும் தீய சக்திகளை அகற்ற திருஷ்டி கழிக்கப்படுகிறது.

இதேபோல் வீட்டின் வாரிசை சுமந்து வரும் தாயின் மீதும், குழந்தையின் மீதும் கண் திருஷ்டி இருக்கும் என்பதால் அந்த குழந்தை முதன் முதலாக தந்தை வீட்டிற்கு வரும் போது ஆரத்தி எடுக்கின்றனர். இதனை கவுரவிக்கும் விதமாகவும் கருதலாம்.

ஆரத்தி எடுக்கும் போது பயன்படுத்தப்படும் நீர், நெருப்பு (கற்பூரம்), இலை (வெற்றிலை) ஆகியவற்றுக்கு எந்த தீய சக்தியையும் விரட்டும் ஆற்றல் உண்டு. திலகம் இடும் பழக்கமும் சங்க காலம் முதலே இருந்து வந்தததும் குறிப்பிடத்தக்கது.


ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 Empty Re: சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை

Post by அன்பு தளபதி Mon Sep 05, 2011 3:02 pm

balakarthik wrote:
maniajith007 wrote:என்னைக்குண்ணே கல்யாணம்

கூடிய விரைவில் கட்டாயம் ஒருமுறை மட்டுமே ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

அதே நாமெக்கெல்லாம் அதிகம்ணே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 Empty Re: சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை

Post by பிளேடு பக்கிரி Mon Sep 05, 2011 3:02 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:நன்றி தல தகவலுக்கு...
பாலா உனக்கு எப்படி இப்படி திடீர்ன்னு ஜானோதயம் பொறந்துச்சு?

எப்படி வந்துச்சு எதுக்கு வந்துச்சுனு தெரியல ஆனா வரக்கூடாத நேரத்துல ஏடாகூடமா வந்துருசு

வரும் வரும் மண்டையில் அடி



சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 Empty Re: சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை

Post by balakarthik Mon Sep 05, 2011 3:02 pm

விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் அர்த்தம் என்ன?

பூர்வ ஜென்மத் தொடர்பையே ‘விட்டகுறை தொட்டகுறை’ என்று கூறுகின்றனர். ஒரு சிலர் பெண்களை மையப்படுத்தி இதனைப் பொருள் கொள்கின்றனர். ஒரு பெண்ணைத் தொட்டு விட்டு, அநாதையாக விட்டு விட்டதால் அவருக்கு பாவம் ஏற்பட்டு விட்டது என்றும் கூறுகின்றனர். இது தவறான அர்த்தம் கற்பிக்கிறது.

தொட்டு வந்த துறை, விட்டு வந்த துறை என்று கூறுவதே இந்தப் கூற்றுக்கு சரியான அர்த்தமாக அமையும். கடந்த பிறவியில் என்ன கர்ம வினைகள் செய்தோமோ அதற்குத் தகுந்தார் போல் இந்தப் பிறவியில் பலனை (நல்லது/கெட்டது) அனுபவிப்பதையே விட்டகுறை தொட்டகுறை என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

வாழ்க்கை என்பது தனிப்பிறவி எடுப்பது அல்ல. பூர்வ ஜென்மத்தில் எந்த இடத்தில் விட்டு வந்தோமோ அதனை மறுபிறவில் வேறு உடலில் இருந்து தொடர்கிறோம் என்பதே விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் உண்மையான உட்பொருள்.


ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 Empty Re: சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை

Post by அன்பு தளபதி Mon Sep 05, 2011 3:03 pm

இது அத்தனையும் மிக நல்ல விஷயங்கள் மேலும் தொடருங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 Empty Re: சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை

Post by balakarthik Mon Sep 05, 2011 3:04 pm

விதிப்படி நடக்கும் என்ற பழமொழி மனிதன் முயற்சிக்கு தடை ஏற்படுத்துகிறதா?

ஜோதிடத்தைப் பொறுத்தவரை உதிக்கும் போது விதிக்கப்பட்டது மற்றும் விதிப்படி நடக்கும் என்ற கூற்றும், விதியை மதியால் வெல்ல முடியும் என்று கூற்றும் பரவலாக கூறப்படுகிறது.

இதில் விதியை மதியால் வெல்ல முடியும் என்ற கூற்று ஜோதிடத்தில் வந்தது எப்படி என்பதை முதலில் பார்ப்போம். விதி என்றால் லக்னம் என்றும், மதி என்றால் ராசி (சந்திரன்). லக்னத்தால் ஏற்படும் பாதிப்புகளை, ராசி (சந்திரன் நின்ற நிலை) நன்றாக இருந்தால் தவிர்த்துவிட முடியும்.

சக்தி வாய்ந்த சில பரிகாரங்கள் மூலமாக தலைவிதியையும் மாற்றிவிட முடியும் என சில ஜோதிட நூல்கள் கூறுகின்றன. உதாரணமாக பூர்வ புண்ணிய ஸ்தானம் ஓரளவு நன்றாக இருந்து, சந்திரனின் நிலையும் நன்றாக இருந்தால் எல்லா விஷயத்திலும் வெற்றி பெறலாம்.

பொதுவாக நிறைய சங்கடங்களை ஒருவர் சந்திப்பதற்கு, அவரது பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இல்லாமல் இருப்பதே காரணம். இதுபோன்றவர்களுக்கு எப்படி பரிகாரம் செய்ய முடியும் என சிலர் கேள்வி எழுப்பலாம்.

ஒவ்வொரு ஆண்டிலும் புர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சில மாதங்கள் அல்லது சில நாட்கள் ஆட்சியோ, உச்சமோ (கோச்சாரத்தில்) அடையும். அந்தக் காலகட்டத்தை பரிகாரம் செய்வதற்கு ஏற்றதாக தேர்வு செய்து, அந்த ஜாதகருக்கு ஆகம விதிகளின்படி பரிகாரம் செய்யும் போது நல்ல பலன் கிடைக்கும்.

அதனால் ஒருவரது ஜாதகத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க பரிகாரங்கள் இருக்கின்றன. ஆனால் தற்போது அவை ஏமாற்றுத்தனமாக மாற்றப்பட்டுள்ளதால் மக்களுக்கு பரிகாரங்கள் மீதான மதிப்பு குறைந்து வருகிறது.

எந்த கிரகம் சரியில்லாமல் இருக்கிறது என்பதைப் பார்த்து, அதற்கான மந்திரங்கள், கோயில்களைத் தேர்வு செய்து குறிப்பிட்ட காலகட்டத்தில் பரிகாரம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.


ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 Empty Re: சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை

Post by அருண் Mon Sep 05, 2011 3:20 pm

அதிகாலையில் கண்ட அதிகாலையில் கனவு பலிக்கும் என்று கூறுவது உண்மையா?

இன்னைக்கு அதிகாலையில் பி‌எம்‌டபில்யு கார் வாங்குரா மாதிரி கனவு கண்டேன் பலிக்குமா..! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 Empty Re: சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை

Post by பிளேடு பக்கிரி Mon Sep 05, 2011 3:32 pm

அருண் wrote:
அதிகாலையில் கண்ட அதிகாலையில் கனவு பலிக்கும் என்று கூறுவது உண்மையா?

இன்னைக்கு அதிகாலையில் பி‌எம்‌டபில்யு கார் வாங்குரா மாதிரி கனவு கண்டேன் பலிக்குமா..! ஜாலி

கடன் வாங்குற மாதிரியா? சிரி சிரி



சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 Empty Re: சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை

Post by balakarthik Mon Sep 05, 2011 4:51 pm

பிறந்த உடன் மாமன்/தந்தையை விழுங்கி விட்டது என்று கூறுவதில் உண்மை உள்ளதா?

இப்படிக் கூறுவதில் அடிப்படை உண்மை இல்லாமல் இல்லை. பாலாரிஷ்டதோஷம் போன்ற நூல்களில் இதற்கென்று சில அத்தியாயங்கள் உள்ளது. பிறந்தவுடன் தாயை இழக்கும் ஜாதகம், தந்தையை இழக்கும் ஜாதகம், உறவினர்களை அழிக்கும் ஜாதகம், தாய்மாமனுக்கு ஆகாத ஜாதகங்கள் என பலவகை ஜாதகங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

சித்திரையில், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு சூரியன் பலவீனமாகி, 9வது இடத்தில் ராகு/கேது/சனி ஆகியவற்றில் ஏதாவது இருந்தால், அந்தக் குழந்தையால் அதன் தந்தைக்கு கண்டம் ஏற்படும். மருத்துவமனையில் பிறந்த குழந்தையை பார்க்க செல்லும் தந்தை வழியிலேயே விபத்தில் சிக்கி உயிரிழக்கலாம்.

இதுபோன்ற கண்டங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முற்காலத்தில் குழந்தை பிறந்தவுடன் அதனை முதலில் குடும்பத்துப் பெரியவர்களிடம் (பேரன், பேத்தி எடுத்த மூத்தவர்களிடம்) கொடுத்து ஆசீர்வாதம் பெறச் செய்வர். இதன் காரணமாக அந்தக் குழந்தையின் தோஷம் குறையும் என்பது நம்பிக்கை.

இதேபோல் சந்திர கிரகணத்தில் பிறந்த குழந்தைக்கு, ஏழரைச் சனி/ அஷ்டமச் சனி இருந்து தாய் ஸ்தானம் வலுவாக இல்லாமல் இருந்தால் தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

குழந்தையின் தோஷத்தால் மட்டும் தந்தை, தாய், உறவினர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. அவரவர் ஜாதகத்திலும் அந்தக் காலகட்டத்தில் ஆயுள் குறைவான தசா புக்தி நடக்கலாம். உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் 5ஆம் இடத்தில் பாதகாதிபதி அமர்ந்திருந்தால் அவருக்கு குழந்தை பிறந்தவுடன் இறந்துவிடுவார் என ஜோதிடம் கூறுகிறது.

இதுபோன்ற ஜாதக அமைப்பை உடைய தம்பதியர், குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்வதன் மூலம் கண்டத்தில் இருந்து தப்ப முடியும். இதை ஏற்றுக்கொள்ளாமல் விவாதம் செய்யும் தம்பதிகளிடம் ஜாதக அமைப்பின் காரணமாக ஏற்படும் நிகழ்வுகளையும் தெளிவாக விளக்கிக் கூறுவோம்.

ஒரு சில தம்பதிகள் ஒரு குழந்தை போதும் என்ற மனநிலையுடன் இருப்பார்கள். ஆனால் அவர்களில் சிலருக்கு முதல் குழந்தையின் தசாபுக்தி வளர்ச்சியளிக்கும் வகையில் இருக்காது. இதனால் மேலும் ஒரு குழந்தை இருப்பது நல்லது என்று அறிவுரை கூறுவோம்.

மேலும் ஒரு சில தம்பதிகள் முதல் குழந்தை இருந்தாலும், மேலும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுவதாகக் கூறுவர். இதில் முதல் குழந்தையின் ஜாதகத்தில் சகோதர ஸ்தானம் வலுவில்லாமல் இருக்கும்பட்சத்தில் அவர்கள் 2வது குழந்தைக்கு முயற்சிக்காமல் இருப்பது நல்லது.

ஏனெனில் முதல் குழந்தையின் ஜாதகத்தில், மனவளம் குன்றிய அல்லது ஊனமுற்ற சகோதர/சகோதரி இருப்பதற்கான கிரக அமைப்பு காணப்படும். அதனால் 2வது குழந்தையை தவிர்த்து விட வலியுறுத்துவோம்.

வாரி வழங்கும் குழந்தைகளின் அமைப்பு: ஒரு சில தம்பதிகளுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில், அறிவு, அழகு, லட்சுமிகடாட்சம் பொருந்திய குழந்தைகள் பிறப்பதுண்டு.

நல்ல யோகமான தசாபுக்தியில் ஒரு குழந்தை பிறக்கும் போது அது வெள்ளிதட்டில் உணவு உண்டு, சகல சம்பத்துகளையும் கொண்டு வாழும் தன்மை பெற்றிருக்கும். எனவே, அந்த வசதிகளை குழந்தைக்கு அளிக்கக் கூடிய அளவுக்கு பெற்றோரின் வாழ்வில் திடீர் ஏற்றம் ஏற்படும். தொழில் சிறக்கும், செல்வச் சேர்க்கை அதிகரிக்கும்.


ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 Empty Re: சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை

Post by balakarthik Mon Sep 05, 2011 4:53 pm

பழங்காலத்தில் தானமாக வழங்க பச்சரிசியை அதிகம் பயன்படுத்தியது ஏன்?

உணவு வகைகளிலேயே சைவம், அசைவம் என்று உள்ளது போல் காய்கறிகளில் கூட அசைவம், சைவம் என்று முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர்.

அந்த வகையில் தேன், ரத்தத்திற்கு இணையானது என அதர்வண வேதத்தில் கூறப்பட்டு உள்ளது. ரத்தத்தை வழங்க முடியாதவர்கள் தேனை வழங்கி அதற்குண்டான பலனைப் பெற முடியும். ஹோம குண்டங்களில் தேன் வார்ப்பது தற்போதும் நடைமுறையில் உள்ளது. அதேபோல் பேரிச்சம்பழம், மாமிசத்திற்கு சமம் என்றும் பழங்கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

பச்சரிசி மிகவும் சக்தி வாய்ந்தது. திருமணத்தின் போது முனை முறையாத பச்சரிசியைத்தான் அட்சதைக்காக பயன்படுத்த வேண்டும். இதனைக் கைக்குத்தல் அரிசி என்றும் கூறுவர். எனவே கடைகளில் பச்சரிசி வாங்கி வந்து அட்சதை தயார் செய்வது கூடாது. மாறாக விவசாயிகளிடம் சென்று அறுவடையின் போது சேகரித்து வைத்த முனை முறியாத பச்சரிசியை வாங்கி வந்து அட்சதை தயாரிப்பதுதான் சரியான முறையாகும்.

கைக்குத்தல் அரிசியைத்தான் தானமாக வழங்கவும் பயன்படுத்த வேண்டும். ஞானத்தில், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களுக்கு பச்சரிசியை தானமாக வழங்கினால் சிறந்த பலன் கிடைக்கும். இதற்கு காரணம் பச்சரிசிக்கு என்று தனி மகத்துவம் உள்ளது. புழுங்கல் அரிசி போல் அதை அவிப்பதில்லை.

எனவே, முனை முறியாத பச்சரிசியை உயர்ந்தவர்களுக்கு தானமாக வழங்கினால் அதைக் கொடுப்பவருடைய தோஷங்கள் அனைத்தும் கழிந்துவிடும் என்று பழங்கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் பூஜைகளுக்கு வாழைப்பழம் (கதளி) பயன்படுத்த வேண்டும். கேரளாவில் பகவதி அம்மன் கோயில்களில் கதளி இல்லாமல் பூஜைகள் நடத்தப்படாது. பச்சை வாழை, கற்பூர வாழை என பல்வேறு வகையான வாழைகளை பூஜைகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குணங்களும், பலன்களும் உள்ளது.

குறிப்பாக பச்சை வாழையை வன/காவல் தெய்வங்களுக்கும், பூவன் வாழையை வீட்டு தெய்வங்களுக்கும் பூஜை செய்ய பயன்படுத்தலாம்.

வாழைக்காய்/பழங்களை கைகளால் தொட்டு அந்தணர்களுக்கு வழங்கும் போது கொடுப்ப்வருக்கு உள்ள கர்ம வினைகள் பாதி தீர்ந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னோர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் போது கூட வேதம் ஓதும் அந்தணர்களுக்கு வாழைக்காய்/பழம் மற்றும் பச்சரிசி வைத்து வழங்குவர்.

இது சம்பந்தப்பட்ட வீடு (உயிரிழந்தவர்) மற்றும் அதில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் தோஷத்தைப் போக்கவே. அந்தணர்களும் அவற்றை பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களுடைய தோஷத்தை ஏற்றுக் கொண்டு அதை கழிப்பதாகவே பழங்காலத்தில் கருதினர்.

பழங்காலத்தில் ஒரு ஊரில் வசிக்கும் மற்ற குடும்பங்களுக்கு ஏற்படும் தோஷத்தை கழிக்கவே அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர். அதற்காக மக்களிடம் இருந்து எதையும் அவர்கள் எதிர்பார்த்ததில்லை. மாறாக அந்நாட்டின் அரசன் அந்தணர்களுக்கு தேவையான அனைத்து வசதிகள், செல்வங்களையும் அளித்ததாக வரலாறுகள் எடுத்துரைக்கின்றன.

எனவே, முனை முறியாத பச்சரிசி, வாழைப்பழம் ஆகியவற்றிற்கு பல பூர்வீக குணங்கள் உண்டு. முக்கியமான சில பூஜைகளின் போது; கலச பூஜை உட்பட முனை முறியாத பச்சரிசியை பயன்படுத்தப்படுவதை தற்போதும் பார்க்கிறோம்.

கோயில்களில் நெய்வேத்தியம் செய்ய முழுக்க முழுக்க பச்சரிசியே பயன்படுத்தப்படுகிறது. வீடுகளில் மாக்கோலம் இடுவதற்கும் பச்சரிசியை பயன்படுத்தினால் தெய்வீகத்தன்மை கிடைக்கும்.


அட்சய திருதியை தினத்தன்று முனை முறியாத பச்சரிசியை வாங்குவதும், தானமாக வழங்குவதன் மூலமும் லட்சுமியின் அருளைப் பெற முடியும்.


ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 Empty Re: சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை

Post by balakarthik Mon Sep 05, 2011 4:54 pm

மணமகனுக்கு மணமகளை விட வயது குறைவாக இருப்பது ஏற்கத்தக்கதா?

இதற்கு சில பாடல்கள் எல்லாம் உண்டு. ஏழாம் அதிபதி சனியின் பார்வை பெற்று, 7ம் இடத்தில் பாவ கிரகம் இருந்தால் தன்னை விட வயதில் மூத்த பெண்ணை மணப்பான் என்று சொல்லப்பட்டுள்ளது.

மாடு, ஆடு, பெண்டிர், மனைவி, மக்கள் அவனவன் கிரக விதி என்றும் ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே இதில் எந்த தவறும் இல்லை என்று சொல்லியிருக்கிறோம். எவருக்குமே என்ன விதிக்கப்பட்டுள்ளதோ அதுதான் கிடைக்கும். இதைத்தான் உதிக்கும் போது விதிக்கப்பட்டது என்று சொல்லுகிறோம்.

அதனால் பொதுவாக சனி ஏழாம் இடத்தில் இருந்தாலோ, சனி ஏழாம் இடத்தைப் பார்த்தாலோ தன்னை விட வயதில் மூத்த பெண் அல்லது பார்ப்பதற்கு விகாரமான தோற்றம் கொண்ட பெண்ணை மணமுடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. 7க்கு உரியவர் சனியுடன் சேர்ந்தாலும் இதுபோன்று ஏற்படும்.

கும்ப லக்னம் ஏழாம் வீட்டிற்குரியவன் சூரியன். அந்த சூரியனுடன் சனி சேர்ந்து ஏழாம் இடத்தையும் சனி பார்த்தால் வயதில் மூத்த பெண்ணை மணம் முடிப்பார்கள். அதில் தவறு இல்லை.

சமீபத்தில் ஒரு தம்பதியினர் தனது மகனுக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்க கொண்டு வந்தனர். பெண்ணுக்கும், பையனுக்கும் பொருத்தம் இருந்தது. சரி திருமணத்தை நடத்துங்கள் என்று கூறினேன்.

ஆனால் அந்த பெண்ணுக்கு பையனை விட 2 வயது கூடுதல். அதனை பெற்றோர் சுட்டிக் காட்டினார்கள். ஆனால், அந்த பையனுக்கு சனி ஏழாம் இடத்தில் இருப்பதால் எப்படிப் பார்த்தாலும் அவனுக்கு வயதில் மூத்த பெண்ணுடன்தான் திருமணம் நடைபெறும் என்று கூறி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன்.

மேலும் அந்த பெண்ணின் நட்சத்திரமும் நல்ல நட்சத்திரமாக இருந்தது. இதனால் அந்தப் பெண்ணைப் பார்த்தால் வயதில் மூத்தவர் போலத் தெரியாது என்று சொன்னதற்கு அவர்களும் அதனை ஒத்துக் கொண்டார்கள்.

சில நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதாவது ரேவதி, கேட்டை, விசாகம், ரோகிணி நட்சத்திரப் பிள்ளைகள், பெண்கள் பார்த்தால் இளமையாகவே இருப்பார்கள். வயதானதே தெரியாது. இதெல்லாம் யெளவன நட்சத்திரங்கள் ஆகும். 28 வயதானவர்களைப் பார்த்தால் 23 வயதானவர் போல இருப்பார்கள். எனவே அந்த மாதிரி அமைப்பு இருப்பவர்களுக்கு அப்படித்தான் ஆகும். இதில் தவறு இல்லை.


ஈகரை தமிழ் களஞ்சியம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை  - Page 2 Empty Re: சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஆராய்சி கட்டுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum