ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை - பைபிள்

+10
கா.ந.கல்யாணசுந்தரம்
sino
ரேவதி
வின்சீலன்
jesudoss
பிளேடு பக்கிரி
அருண்
ராஜா
சிவா
இளமாறன்
14 posters

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

Go down

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Empty இன்றைய சிந்தனை - பைபிள்

Post by இளமாறன் Sun Sep 04, 2011 12:05 am

First topic message reminder :

நண்பர்களே

இன்றைய சிந்தனை என்னும் தலைப்பில் தினமும் பைபிளில் இருந்து வாசகம் ஒன்று இடலாம் என்று எண்ணுகிறேன் உங்கள் கருத்துக்கள் சொல்லுங்களேன்


உதாரணமாக 03/செப்டம்பர் 2011

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1:
21-23


சகோதரர் சகோதரிகளே, முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய்
இருந்தீர்கள்; அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்த் தீச்செயல்கள் புரிந்து
வந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு
ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக்
கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப்
பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில்
உறுதியாக நிலைத்திருங்கள்.


Last edited by இளமாறன் on Sun Sep 04, 2011 1:52 pm; edited 1 time in total


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Empty Re: இன்றைய சிந்தனை - பைபிள்

Post by இளமாறன் Tue Oct 11, 2011 10:34 am

லூக்கா 11:37-41

பொதுக்காலம், வாரம் 28 செவ்வாய்



37 இயேசு பேசிக்கொண்டிருந்த போது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக் கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.

38 உணவு அருந்து முன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார்.

39 ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது; "பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன.

40 அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா!

41 உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்.

தூய்மையைப் பற்றிய இயேசுவின் போதனை இன்று நம் கவனத்தைக் கவர்கிறது. இயேசுவின் பார்வையில் புறத்தூய்மையை விட அகத் தூய்மையே மேலானது, அதிகக் கவனத்துக்குரியது. எனவே, வெளித் தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், உள்ளத் தூய்மைக்கு, தூய மனநிலைக்கு அதிக அழுத்தம் கொடுக்க ஆண்டவர் இன்று நம்மை அழைக்கிறார். அதற்கான ஆலோசனையையும் அவரே தருகிறார். உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும் என்கிறார் இயேசு. உட்புறத்தில் இருப்பவை எவை? மனநிலை, எண்ணங்கள், ஆலொசனைகள், சிந்தனைகள், நன்றியுணர்வு, மகிழ்ச்சி... இவை அனைத்துமே நமது உட்புறத்தில் இருப்பவைதாம். இவற்றைத் தர்மமாகக் கொடுக்க இயேசு அறைகூவல் விடுக்கிறார். பிறரோடு பகிர்ந்துகொண்டால், நமது உள்ளமும், மனநிலையும் நிச்சயம் தூய்மை அடையும் என்பதில் சந்தேகமே இல்லை.





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Empty Re: இன்றைய சிந்தனை - பைபிள்

Post by இளமாறன் Wed Oct 12, 2011 10:47 am

லூக்கா 11:42-46

பொதுக்காலம், வாரம் 28 புதன்



42 "ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா,கறியிலை, மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; ஆனால் அவற்றையும் விட்டு விடலாகாது.

43 "ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே.

44 ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள்போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள். "

45 திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து, "போதகரே, இவற்றைச் சொல்லி எங்களை இழிவுபடுத்துகிறீர்" என்றார்.

46 அதற்கு அவர், "ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்.


யூத மக்களின் சமய வாழ்வையும் சமூக வாழ்வையும் வழிப்படுத்தியது ''திருச்சட்டம்''. அது வெறும் சட்டத் தொகுப்பு அல்ல, மாறாக ஒரு வாழ்க்கை நெறி. மக்கள் அதை மகிழ்ச்சியோடும் நிறைவான உள்ளத்தோடும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். ஆனால் திருச்சட்டத்தை விளக்கிய ''அறிஞர்கள்'' பல துல்லியமான நுணுக்கங்களை அதில் புகுத்தினார்கள். எடுத்துக்காட்டாக, ''ஓய்வுநாளைப் புனிதமாகக் கடைப்பிடி'' (காண்க: இச 5:12) என்னும் கட்டளைக்கு விளக்கம் அளித்த அறிஞர்கள் அந்த நாளில் மக்கள் 39 வகையான வேலைகளைச் செய்யலாகாது என்று கற்பித்தார்கள். இது ''மனித சட்டம்'' எல்லைமீறிப் போனதையே காட்டுகிறது. எனவே, இயேசு இத்தகைய விளக்கங்களை ''மக்கள்மீது சுமத்தப்பட்ட சுமையாக''க் காண்கிறார் (லூக் 11:46). இத்தகைய சட்டங்களும் சடங்குமுறை சார்ந்த துல்லியமான விளக்கங்களும் ''சுமக்க இயலாத நுகமாக'' மாறிவிட்டிருந்தன (காண்க: திப 15:10).

-- இவ்வாறு மக்களுடைய வாழ்க்கையைக் கடினமாக மாற்றிய திருச்சட்ட அறிஞர்கள் அந்த மக்களுக்கு உதவி புரிவதற்கு மாறாக அவர்களுக்குக் கொடுமைதான் இழைத்தார்கள். ஒருவேளை அந்த திருச்சட்ட அறிஞர்கள் சட்டத்தைத் துல்லியமாகக் கடைப்பிடித்திருக்கலாம் என்றாலும் அவர்கள் சட்டத்திற்கு அளித்த விளக்கம் மக்களுக்குத் துன்பத்தையே கொணர்ந்தது. கடவுள் காட்டுகின்ற வழியில் நடந்துசெல்வது மனிதருக்கு ஒரு சுகமான அனுபவமாக மாற வேண்டும். அந்த வழியில் நடப்பது எப்போதும் எளிதாக இல்லாமல் இருக்கலாம்; ஏன், சில வேளைகயில் நாம் தியாகம் செய்வதும் தேவையாகலாம். ஆனால் கடவுள் நமக்கு அளித்துள்ள நெறியைக் கடைப்பிடிப்பது நம் உள்ளத்திற்கு நிறைவையும் நம் வாழ்வுக்கு மகிழ்ச்சியையும் தருவதாக இருக்க வேண்டும். கவலை தோய்ந்த முகத்தோடு கடவுளின் நெறியில் நடப்பதற்கு மாறாக, மகிழ்ச்சி கலந்த உணர்வுகளோடு அவரை அன்புசெய்து அவர் காட்டுகின்ற வழியில் பயணம் செய்வதே நமக்கு அழகு.





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Empty Re: இன்றைய சிந்தனை - பைபிள்

Post by இளமாறன் Thu Oct 13, 2011 10:52 am

லூக்கா 11:47-54

பொதுக்காலம், வாரம் 28 வியாழன்



47 "ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால் அவர்களைக் கொலை செய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே.

48 உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்; அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலை செய்தார்கள்; நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள்.

49 இதை முன்னிட்டே கடவுளின் ஞானம் இவ்வாறு கூறுகிறது; நான் அவர்களிடம் இறைவாக்கினரையும் திருத்தூதரையும் அனுப்புவேன். அவர்களுள் சிலரைக் கொலை செய்வார்கள்; அவர்களுள் சிலரைத் துன்புறுத்துவார்கள்.

50 ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே கொலை செய்யப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காகவும் இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும்.

51 ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும்.

52 "ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்" என்றார்.

53 இயேசு அங்கிருந்து புறப்பட்டபோது மறைநூல் அறிஞரும் பரிசேயரும் பகைமையுணர்வு மிகுந்தவராய்

54 அவரது பேச்சில் அவரைச் சிக்கவைக்குமாறு பல கேள்விகளைக் கேட்டனர்.



தனி மனிதரும் சமூகங்களும் எத்தகைய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அவர்களுக்குக் கடவுளின் பெயரால் உணர்த்தியவர்கள் இறைவாக்கினர்கள். அவர்கள் ஒருவிதத்தில் மனித குலத்தின் ''மனச் சான்றாக'' விளங்குபவர்கள். இஸ்ரயேல் மக்களின் வரலாற்றில் இறைவாக்கினர் வழியாகக் கடவுள் பேசினார். அதுபோலவே இன்றைய உலகிலும் மனிதரின் மனச்சான்றைத் தொட்டுப் பேசிய மகான்கள் வாழ்ந்துள்ளார்கள். தீண்டாமை ஒழிய வேண்டும் என்று பாடுபட்ட காந்தியடிகள், கருப்பரானாலும் வெள்ளையரானாலும் எல்லாருமே மனிதர் என்னும் முறையில் சம உரிமை கொண்டவர்களே என காந்தி வழியில் நின்று போராடிய மார்ட்டின் லூத்தர் கிங், ஏழையரின் முகத்தில் இயேசுவைக் கண்ட அன்னை தெரேசா போன்றோர் இக்கால இறைவாக்கினர்கள். சாவுக்குப் பிறகும் அவர்கள் நம்மிடையே வாழ்ந்துவருகிறார்கள் எனலாம். ஆனால் கடந்த கால இறைவாக்கினரைப் போற்றிவிட்டு, அவர்கள் கற்பித்ததைக் காற்றில் விட்டுவிட்டால் நமக்கு என்ன பயன்?

-- இந்த உண்மையைத்தான் இயேசு உணர்த்தினார். இறைவாக்கினர் உயிர் வாழ்ந்த போது அவர்களுடைய போதனையை ஏற்காமல் அவர்களைத் துன்புறுத்திக் கொன்றுபோட்டார்கள்; அத்தகைய கொடிய செயலைப் புரிந்தவர்களின் வாரிசுகளாக வந்தவர்களோ முற்காலத்தில் இகழப்பட்ட இறைவாக்கினர்களுக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறார்கள். இந்த முரண்பாட்டை இயேசு சுட்டிக்காட்டுகிறார். இன்றும்கூட, காந்தியடிகளின் சிலைகளுக்குத் தவறாமல் மாலை அணிவிக்கிறவர்கள் காந்தி வழங்கிய போதனையைக் காற்றில் பறக்க விடுவதை நாம் காணவில்லையா? சடங்குமுறைக்காகத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்துபவர்கள் அத்தலைவர்கள் காட்டிய நல்வழியை விட்டு விலகிச் செல்வதில்லையா? இந்த முரண்பாடு நம்மோடு இருப்பதை நாம் கருத வேண்டும். இயேசு காட்டிய வழியில் நடப்பதற்கு மாறாக, அவரைப் பெயரளவில் போற்றி, வாயாரப் புகழ்ந்து பாடுவதோடு நின்றுவிடாமல் இறைவார்த்தையைச் செயல்படுத்துவோராக நாம் வாழ்ந்திட வேண்டும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Empty Re: இன்றைய சிந்தனை - பைபிள்

Post by இளமாறன் Fri Oct 14, 2011 11:04 am

லூக்கா 12:1-7

பொதுக்காலம், வாரம் 28 வெள்ளி



1 ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார். அவர் அவர்களிடம் கூறியது; "பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.

2 வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.

3 ஆகவே நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய்ப் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும்.

4 நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்; உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.

5 நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரமுள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

6 இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே.

7 உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.

விவிலியத்தில் பல இடங்களில் ''அஞ்சாதீர்கள்'' என்னும் சொல் ஆளப்படுவதை நாம் காணலாம். இதோ ஒருசில எடுத்துக்காட்டுகள்: எசாயா 43:1-2; நீதிமொழிகள் 3:25-26; லூக்கா 1:30; மத்தேயு 10:29-30. மனிதரின் வாழ்க்கையில் அச்சம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நமக்கு ஏதோ ஆபத்து நிகழப்போகிறதோ என்னும் எண்ணம் மேலோங்குகின்ற வேளையில் நாம் அச்சமடைகிறோம். நமக்கு ஏற்படுகின்ற பயம் பிற மனிதர் நமக்குத் தீங்கிழைக்கப் போகிறார்களோ என நாம் நினைப்பதால் ஏற்படலாம். அல்லது இயற்கை நிகழ்வுகள் நம் உள்ளத்தில் பயத்தை எழுப்பலாம். அன்றாட உணவும், வாழ்வதற்குத் தேவையான பொருளாதாரமும் நமக்கு இல்லையே என்னும் உணர்வினால் பயம் தோன்றலாம். நோய்நொடிகள் ஏற்படும்போதும், நம்மைச் சார்ந்திருப்போருக்குத் தீங்கு ஏற்பட்டுவிடுமோ என நாம் நினைப்பதாலும் அச்சம் தோன்றலாம். மனித வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் அச்சம் ஏற்படக் கூடும். ஆனால் விவிலியம் நமக்குத் தருகின்ற செய்தி, ''எதைக் கண்டும் நீங்கள் அஞ்சவேண்டாம்'' என்பதே. நாம் உண்மையிலேயே அஞ்சவேண்டிய ஒருவர் உண்டு. அவர்தான் நம்மை அன்புசெய்கின்ற கடவுள்.

-- கடவுளுக்கு அஞ்சி நாம் நடக்கவேண்டும் என்றதும் கடவுள் நம்மைத் தண்டிக்கப்போகிறார் என்னும் எண்ணத்தால் நாம் பயந்து நடுங்க வேண்டும் என்று சிலர் தவறாகப் பொருள்புரிந்துகொள்வது உண்டு. கடவுள் நம்மைத் தண்டிக்கக் காத்திருக்கும் ''நீதிபதி'' அல்ல; மாறாக, அவர் நம் அன்புத் தந்தை. எனவேதான், சிட்டுக் குருவிகளைக் காக்கின்ற கடவுள் நம்மைக் காக்காமல் கைவிடமாட்டார் என இயேசு அறிவுறுத்துகிறார். கடவுளின் பராமரிப்பும் காவலும் நமக்கு என்றுமே உண்டு என்னும் உணர்வு நம்மில் வளர்ந்து வேரூயஅp;ன்ற வேண்டும். அப்போது நமக்கு ஏற்படுகின்ற அல்லது ஏற்படக்கூடும் என நாம் நினைக்கின்ற தீமைகள் குறித்து நாம் அஞ்சமாட்டோம். ஏனென்றால் கடவுளை முழுமையாக நம்பி நாம் வாழ்ந்தால் நமக்குத் தீமைகள் ஏற்பட்டாலும் அவை நம்மைக் கடவுளின் அன்பிலிருந்து பிரித்துவிட முடியாது. அப்போது தீமையை எதிர்த்து நாம் போராடவும், நன்மை செய்வதன் வழியாகத் தீமையை வென்றிடவும் கடவுள் நமக்கு வல்லமை தருவார். எதைக் கண்டும் அஞ்சாத உள்ளம் நம்மில் உருவானால் நாமும் பிறருக்குத் துணிவூட்டுகின்ற மனிதராக மாறுவோம். சாதாரண சிட்டுக்குருவியைப் பாதுகாக்கின்ற கடவுளின் பார்வையில் மண்வாழ் மனிதார் மாபெரும் மாண்புமிக்கவர் என்னும் உண்மையை நம் வாழ்வின் வழியாகப் பறைசாற்றுவோம்.





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Empty Re: இன்றைய சிந்தனை - பைபிள்

Post by அருண் Fri Oct 14, 2011 11:26 am

சிந்தனையை தூண்டும் பைபிள் வரிகளுக்கு நன்றி அண்ணா! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Empty Re: இன்றைய சிந்தனை - பைபிள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 14, 2011 11:43 am

இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே.

பைபிளின் அற்புத வரிகள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Empty Re: இன்றைய சிந்தனை - பைபிள்

Post by இளமாறன் Sat Oct 15, 2011 1:27 pm

லூக்கா 12:8-12

பொதுக்காலம், வாரம் 28 சனி



8 "நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை மானிடமகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக் கொள்வார்.

9 மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார்.

10 மானிடமகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்.

11 தொழுகைக் கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதிலளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

12 ஏனெனில் நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.

தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் மன்னிப்புப் பெற மாட்டார்கள் என்னும் போதனை மத்தேயு நற்செய்தியிலும் மாற்கு நற்செய்தியிலும் உண்டு (காண்க: மத் 12:32; மாற் 3:28-29). தீய ஆவிகளின் பிடியிலிருந்து மக்களை விடுவித்த இயேசு பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலின் சக்தியைக் கொண்டே அவ்வாறு செயல்பட்டார் என யூத மறைநூல் அறிஞர் குற்றம் சாட்டினர். இயேசுவிடம் கடவுளின் சக்தி துலங்குகிறது என்பதை அவர்கள் ஏற்க மறுத்தனர். இத்தகைய மனப்பான்மைதான் ''தூய ஆவிக்கு எதிரான பாவம்'' என மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் உள்ளது. ஆனால் லூக்கா நற்செய்தியிலோ இப்போதனை இன்னொரு சூழலில் வழங்கப்படுகிறது. அதாவது, இயேசுவைப் பின்செல்கின்ற சீடர்கள் அவரைப் பற்றியும் அவர் அறிவித்த இறையாட்சி பற்றியும் எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு எதிர்ப்புகள் எழக் கூடும். அந்த நேரங்களிலும் சீடர்கள் மன உறுதி தளர்ந்துவிடக் கூடாது.

-- துணிந்து நற்செய்தியை அறிவிப்போருக்குத் தூய ஆவியின் துணை எப்போதுமே இருக்கும். இந்தத் தூய ஆவி நம் உள்ளத்தில் கடவுள் பற்றிய சிந்தனைகளைத் தூண்டி எழுப்புகிறார்; நாம் நற்செய்தி வழியில் நடந்திட நமக்கு மன உறுதி தருகிறார்; நம் வாழ்க்கைச் சூழலில் நாம் தடைகளைக் கண்டு துவண்டுவிடாமல் இருக்க நமக்கு சக்தி வழங்குகின்றார். இந்தத் தூய ஆவியைப் பழித்துப் பேசுவோர் கடவுளின் செயல்பாட்டையே எதிர்ப்போர் ஆவர். எனவே, அவர்கள் உளமார மனம் வருந்தி, கடவுளின் பக்கம் திரும்பாவிட்டால் அவர்கள் கடவுளின் துணை தங்களுக்குத் தேவை இல்லை என முடிவுசெய்துவிட்டார்கள் எனவே நாம் கருத வேண்டும். எனவேதான் இயேசு ''தூய ஆவியைப் பழித்துரைப்போர் மன்னிப்புப் பெற மாட்டார்'' (லூக் 12:10) என்றுரைத்தார். நம் வாழ்விலும் தூய ஆவி வல்லமையோடு செயலாற்றுகின்றார். அவருடைய தூண்டுதல்களுக்குச் செவிமடுத்து, அவரால் வழிநடத்தப்பட நாம் திறந்த உளம் கொண்டவர்களாக மாறிட வேண்டும். ''தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்கவேண்டாம்'' (1 தெச 5:19) என்று பவுல் கூறுவது இவண் கருதத் தக்கது.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Empty Re: இன்றைய சிந்தனை - பைபிள்

Post by இளமாறன் Sun Oct 16, 2011 1:08 pm

மத்தேயு 22:15-21

போதுக்காலம் 29ஆம் ஞாயிறு,



மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 15-21

அக்காலத்தில் பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாம் எனச் சூழ்ச்சி செய்தார்கள். தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, ``போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட் படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்'' என்று அவர்கள் கேட்டார்கள். இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்துகொண்டு, ``வெளி வேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்'' என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், ``இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?'' என்று கேட்டார். அவர்கள், ``சீசருடையவை'' என்றார்கள். அதற்கு அவர், ``ஆகவே சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்'' என்று அவர்களிடம் கூறினார்.


சீசர் என்றும் கடவுள் என்றும் இயேசு வேறுபடுத்திக் கூறுகிறார் எனப் பொருள்கொண்டு அரசியலுக்கும் சமயத்திற்கும் இடையே உறவு இருக்கக் கூடாது என்று இயேசுவின் சொற்களுக்குச் சிலர் தவறாகப் பொருள்விளக்கம் தருவதுண்டு. அரசியலில் சமயக் கருத்துக்கள் நுழையும்போது சமயச் சார்பற்ற தன்மை ஆபத்துக்கு உள்ளாகக் கூடும் என்பது தெளிவு. அதே நேரத்தில், கடவுள் மனிதரிடம் எதிர்பார்க்கின்ற நற்பண்புகள் அரசியலில் துலங்கவேண்டும் என்பதையும் நாம் மறத்தலாகாது. எனவேதான் காந்தியடிகள் சமயத்தில் ஊன்றியிராத அரசியல் மக்களைச் சுறண்டுகின்ற அரசியலாகும் என்றார். உரோமைப் பேரரசர்களுக்கு ''சீசர்'' என்னும் சிறப்புப் பெயர் உண்டு. அதற்கு ''அரசர்'' என்று பொருள். இயேசுவின் காலத்தில் பாலஸ்தீனப் பகுதி உரோமையரின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது. எனவே, உரோமைக்கு வரிசெலுத்தப் பயன்படுத்தப்பட்ட நாணயத்தில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது, சீசரின் நாணயத்தை சீசருக்குக் கொடுப்பது சரியே என்றாலும் கடவுளின் சாயலை (''உருவை'') மனிதர் தாங்கியிருப்பதால் (காண்க: தொநூ 1:27) மனிதர் கடவுளுக்கே சொந்தமானவர்கள் என்னும் ஆழ்ந்த உண்மையை இயேசு உணர்த்தினார்.

-- கடவுளுக்கு நாம் காணிக்கையாகக் கொடுப்பது வெறும் நாணயத்தை அல்ல, மாறாக நம்மையே நாம் கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றோம். ஏனென்றால் நாம் கடவுளின் உருவிலும் சாயலிலும் உண்டாக்கப்பட்டிருக்கின்றோம். கடவுளின் சாயலாக மனிதர் இருப்பதால் மனிதருக்கு இயல்பாகவே மாண்பு உண்டு. அந்த மாண்பினை நமக்கு அளிப்பது இந்த உலகில் ஆதிக்கம் செலுத்துகின்ற யாரும் அல்ல, மாறாக கடவுளே மனித மாண்புக்கு அடிப்படையாக உள்ளார். எனவே, நாம் கடவுளின் சாயலைத் தாங்கியிருப்பதுபோலப் பிறரும் கடவுளின் அன்புக்கு உரியவர்கள் என்பதை உணர்ந்து நாம் ஒருவரை ஒருவர் மனித மாண்போடு நடத்திட அழைக்கப்படுகிறோம்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Empty Re: இன்றைய சிந்தனை - பைபிள்

Post by இளமாறன் Mon Oct 17, 2011 10:44 am

லூக்கா 12:13-21

பொதுக்காலம், வாரம் 29 திங்கள்



13 கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், "போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்" என்றார்.

14 அவர் அந்த ஆளை நோக்கி, "என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?" என்று கேட்டார்.

15 பின்பு அவர் அவர்களை நோக்கி, "எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது" என்றார்.

16 அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்; "செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.

17 அவன், "நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!" என்று எண்ணினான்.

18 "ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன் ".

19 பின்பு, "என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" எனச் சொல்வேன்" என்று தனக்குள் கூறிக்கொண்டான்.

20 ஆனால் கடவுள் அவனிடம், "அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?" என்று கேட்டார்.

21 கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.


''அறிவற்ற செல்வன்'' உவமை உண்மையான செல்வம் எதில் அடங்கியிருக்கிறது என விளக்குகிறது (லூக் 12:13-21). இந்த உவமையைக் கூறிய இயேசு நம்மைப் பார்த்து, ''கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்த்துவைக்க'' கேட்கிறார் (லூக் 12:21). உலகப் பார்வையில் செல்வம் சேர்;த்து வைக்கும் மனிதர் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றலாம். பணம் பாதாளம் வரைப் போகும் என்றொரு கூற்றும் உண்டு. ஆனால் பாதாளத்தையும் எட்டுகின்ற சக்தி வாய்ந்த பணம் நம்மைப் பாதாளத்திற்கே இழுத்துச் சென்றுவிடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். மனித வாழ்வு நிறைவு பெற வேண்டும் என்றால் அதற்குச் செல்வம் மட்டும் போதாது. மாறாக, செல்வம் நம்மைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடக் கூடும். செல்வத்தையே தெய்வமாகக் கொள்வோரும் உண்டு. இவர்கள் செல்வம் திரட்டுவதற்காக எந்தவிதமான தியாகங்களையும் செய்யத் தயங்குவதில்லை. ஏன், ஏமாற்று வழிகளையும் ஏய்ப்பு முறைகளையும் கையாண்டு கூட இவர்கள் செல்வம் குவிக்க நினைப்பார்கள். ஆனால் இத்தகைய முயற்சிகள் எல்லாம் ஒருநாள் முடிவுக்கு வரும். அதுவே நம்மைவிட்டு நம் உயிர் பிரிகின்ற நாள். இறப்பு எல்லா மனிதருக்கும் உண்டு. அதை முறியடிக்கின்ற சக்தி மனிதருக்கு இல்லை. வள்ளுவரும் இதை ''நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு'' எனக் கூறிப் போந்தார் (காண்க: குறள் 336). இவ்வளவுதான் இவ்வுலகத்தின் ''பெருமை'' என வள்ளுவர் கூறுவதில் எதிர்ப்பொருளணி துலங்குவதையும் நாம் காணலாம். நிலையாமைதான் மனித வாழ்க்கையின் முடிவா அல்லது நிலையாமைக்கு அப்பாற்பட்ட நிலைவாழ்வு ஒன்று உளதா?

-- கிறிஸ்தவ நம்பிக்கைப்படி, கடவுள் நமக்கு எந்நாளும் நிலைத்துநிற்கின்ற வாழ்வை வாக்களித்துள்ளார். அதுவே இம்மண்ணக வாழ்வின் உண்மையான, உயரிய குறிக்கோளாகவும் நம் உள்ளத்தில் இருக்க வேண்டும். இவ்வுலகச் செல்வத்தைக் கொண்டு நாம் ''கடவுள் முன்னிலையில்'' செல்வம் சேர்த்துவைக்க முடியும். இதற்கான வழியையும் இயேசு நமக்குக் காட்டுகிறார். ''உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப் பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்'' (லூக் 12:33) என இயேசு நமக்குக் கற்பிக்கின்றார். ஆகவே, சுய நலப் போக்கும் பேராசையும் நம்மை ஆட்கொண்டுவிட்டால் நாம் இவ்வுலகச் செல்வங்களைக் குவிப்பதிலேயே கருத்தாய் இருப்போம். அச்செல்வங்களால் நமக்கு நிலையான மன அமைதியைத் தர இயலாது. ஆனால் பிறரன்பு என்னும் இலட்சியம் நம்மில் உறதியாக இருந்தால் நாம் தேவையில் உழல்வோரோடு நம் செல்வத்தைப் பகிர்ந்துகொள்வோம். அப்போது ''கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்த்துவைப்போம்'' (லூக் 12:21). அதுவே உண்மையான செல்வம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Empty Re: இன்றைய சிந்தனை - பைபிள்

Post by இளமாறன் Tue Oct 18, 2011 10:51 am

லூக்கா 10:1-9

தூய லூக்கா நற்செய்தியாளர் திருவிழா



1 இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

2 அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது; "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.

3 புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்.

4 பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

5 நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், "இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!" என முதலில் கூறுங்கள்.

6 அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.

7 அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம்.

8 நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்.

9 அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.

இயேசுவின் பணியை ஆற்றுவதற்குச் சீடர்கள் தேவைப்பட்டார்கள். அவர் எழுபத்திரண்டு பேரை அனுப்பி இறையாட்சி பற்றிய நற்செய்தியை அவர்கள் அறிவிக்க வேண்டும் எனப் பணிக்கின்றார். அப்பணியை ஆற்றச் செல்வோர் எளிமையான முறையில் தோற்றமளிக்க வேண்டும் எனவும், ஒரு மாற்றுக் கலாச்சாரப் பாணியில் மக்கள் முன் செயல்பட வேண்டும் எனவும் ( (லூக் 10:4) இயேசு அறிவுறுத்துகிறார். மேலும் இயேசுவால் அனுப்பப்பட்ட தூதர்கள் எதிர்ப்புகளையும் தடைகளையும் சந்திக்க வேண்டி வரும் என்பதையும் இயேசு அவர்களுக்குக் கூறுகிறார். ''ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப் போல'' (லூக் 10:3) அவர்கள் செல்வார்கள். இவ்வாறு பணியாற்றும் போது அவர்கள் ''ஊர்களுக்கும்'' ''வீடுகளுக்கும்'' சென்று இறையாட்சி பற்றி அறிவிக்க வேண்டும். குறிப்பாக வீடுகளில் நிகழ்கின்ற பணி லூக்கா நற்செய்தியில் முதன்மை பெறுகிறது. வழியில் சந்திக்கின்றவர்களிடம் பேச்சுக் கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டாம் (லூக் 10:4) என்று கூறிய அதே இயேசு தாம் அனுப்பிய சீடர்கள் ''எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறும்படி'' கேட்கின்றார் (காண்க: லூக் 10:5). இங்கே குறிப்பிடப்படுகின்ற ''அமைதி'' என்னும் சொல் வழக்கமான வாழ்த்துச் சொல் மட்டுமல்ல. அமைதி என்பது சண்டை சச்சரவு இல்லாத நிலை என்பதும் அல்ல. மாறாக, இயேசு குறிப்பிடுகின்ற ''அமைதியும்'' அவர் வழங்குகின்ற ''மீட்பும்'' ஒன்றே. கடவுள் தம் மக்களைத் தேடி வந்து அவர்களுக்கு முழு நலன் வழங்கி, அவர்களைக் கடவுளோடு உறவாடச் செய்கின்ற நிலையே ''அமைதி'' ஆகும். இத்தகைய நல்ல செய்தியை மக்கள் ஒன்றில் ஏற்பார்கள் அல்லது அதை வேண்டாம் என்று ஒதுக்குவார்கள்.

-- இயேசு வழங்குகின்ற அமைதியும் நல வாழ்வும் மீட்பும் அவருடைய சீடர்கள் வழியாக மக்களுக்கு எப்போதும் பறைசாற்றப்படுகிறது. கடவுளின் கொடையை விரும்பி ஏற்போர் உள்ளத்தில் உண்மையான மாற்றம் நிகழும். அவர்களும் கடவுளோடு நல்லுறவில் இணைந்து மகிழ்ச்சியடைவார்கள். கடவுளின் கொடையை நன்மனத்தோடு ஏற்காத மனிதருக்கு எந்தவொரு பயனும் ஏற்படாது. ''இந்த வீட்டுக்கு அமைதி'' என்பது ''இந்தக் குடும்பத்திற்கு அமைதி'' என்றே பொருள்படும். லூக்கா எழுதிய நற்செய்தி நூலிலும் திருத்தூதர் பணிகள் நூலிலும் ''குடும்பத் திருச்சபை'' அல்லது ''வீட்டுத் திருச்சபை'' என்னும் கருத்து முக்கியமானது. அதாவது, தொடக்க காலத் திருச்சபை நற்செய்திப் பணி ஆற்றியது தொழுகைக் கூடங்களிலோ கோவில்களிலோ அல்ல, மாறாக, வீடுகளில் மக்கள் கூடி வந்து, ஒரு குடும்பமாக இணைந்து, இறைவேண்டலில் ஈடுபட்டார்கள்; கடவுளின் வார்த்தைக்குச் செவிமடுத்தார்கள்; நற்கருணை விருந்தைக் கொண்டாடினார்கள்; அன்புப் பணி ஆற்றினார்கள். இன்றைய திருச்சபையும் அடித்தள கிறிஸ்தவ சமூகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுவது போற்றற்குரியது. நற்செய்திப் பணியும் குடும்பச் சூழலில் நிகழும்போது அதிக பயன் நல்கும் என்பது அனுபவ உண்மை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 5 Empty Re: இன்றைய சிந்தனை - பைபிள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum