புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10 
7 Posts - 5%
eraeravi
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை - பைபிள்


   
   

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 04, 2011 12:05 am

First topic message reminder :

நண்பர்களே

இன்றைய சிந்தனை என்னும் தலைப்பில் தினமும் பைபிளில் இருந்து வாசகம் ஒன்று இடலாம் என்று எண்ணுகிறேன் உங்கள் கருத்துக்கள் சொல்லுங்களேன்


உதாரணமாக 03/செப்டம்பர் 2011

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1:
21-23


சகோதரர் சகோதரிகளே, முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய்
இருந்தீர்கள்; அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்த் தீச்செயல்கள் புரிந்து
வந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு
ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக்
கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப்
பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில்
உறுதியாக நிலைத்திருங்கள்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Ila

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 16, 2011 11:17 am

நன்றி பகிர்தமைக்கு இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 806360



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 16, 2011 11:32 am

சிந்தனை தூண்டும் பைபிள் வசனத்தில் இன்று மனிதன் கட்டாயம் கடைபிடிக்க கூடிய செயல் அண்ணா..! மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 18, 2011 12:19 am

17/09/2011

லூக்கா 8:4-15

பொதுக்காலம், வாரம் 24 சனி



4 பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் அவரிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது;

5 "விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.

6 வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின.

7 மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கிவிட்டன.

8 இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன." இவ்வாறு சொன்னபின், "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்று உரக்கக் கூறினார்.

9 இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர்.

10 அதற்கு இயேசு கூறியது; "இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே "அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்துகொள்வதில்லை. "

11 "இந்த உவமையின் பொருள் இதுவே; விதை, இறைவார்த்தை.

12 வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது.

13 பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்; சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள்.

14 முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.

15 நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.


''விதைப்பவர் உவமை'' மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தி நூல்களிலும் உள்ளது. இந்த உவமையின் விளக்கமாக அமையும் பகுதியும் ஒர் உவமைபோலவே உள்ளது. அதை நாம் ''இறைவார்த்தை உவமை'' எனலாம் (காண்க: லூக் 8:11-15). மனிதர் கடவுளின் வார்த்தையை எவ்வாறு கேட்கிறார்கள், ஏற்கிறார்கள், வாழ்வில் பலன் விளையச் செய்கிறார்கள் என்பதை நான்கு விதமான நிலங்களை உருவகமாக்கி விளக்குகிறார் இயேசு. வழியோரம், பாறை நிலம், முட்செடி நிறைந்த நிலம் என்பவை வார்த்தை என்னும் விதையை முளைக்க விடுவதில்லை; அப்படியே அந்த விதை முளைத்தாலும் சரியாக வேரூயஅp;ன்றாமலும் முட்செடிகளால் நெருக்கப்பட்டும் பலன் தராமல் போய்விடுகிறது. ஆனால் நல்ல, பண்பட்ட நிலத்தில் விதைக்கப்பட்ட விதை நல்ல பலன் தரும். இதை இயேசு மூன்று நிலைகளாக விளக்குகிறார். முதலில் கடவுளின் வார்த்தையை நாம் ''சீரிய, நல்ல உள்ளத்தோடு கேட்க வேண்டும்'' (லூக் 8:15). அக்கால மக்கள் மனித உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் பிறப்பிடமாகக் கருதியது ''உள்ளம்'' (இதயம்) ஆகும். அதோடு கண்களும் தொடர்புடையவை. மனித உணர்வுகளும் சிந்தனைகளும் வெளிப்படுகின்ற வாயில்களாக வாய், காது, நா, உதடு ஆகியவை கருதப்பட்டன. உணர்வுகளும் சிந்தனைகளும் செயல் வடிவம் பெறுவது புயம், கை, கால், காலடி ஆகியவற்றின் வழியாக. சிந்தனைகளையும் உணர்வுகளையும் தோன்றச் செய்து, அவற்றை வெளிப்படுத்தி, அவற்றிற்குச் செயல்வடிவம் கொடுக்கும்போதுதான் அங்கே முழு மனித ஈடுபாடு உள்ளது. எனவே, திறந்த மனத்தோடு, தாராள இதயத்தோடு (''சீரிய நல் உள்ளத்தோடு'') கடவுளின் வார்த்தையைக் கேட்பபது முதல் நிலை. கேட்ட வார்த்தையைப் போற்றிப் பேணுவதும் அதைக் கரிசனையோடு ''காப்பதும்'' இரண்டாம் நிலை. நல்ல நிலத்தில் விழுகின்ற விதையை அந்நிலம் தன்னுள் ஏற்றுக் கொள்வதை இவண் நாம் கருதலாம்.

-- மூன்றாம் நிலை ''மன உறுதியுடன் பலன் தருவது'' ஆகும் (லூக் 8:15). இங்கே ''மன உறுதி'' எனக் குறிக்கப்படுவது துன்பங்களும் எதிர்ப்புகளும் வருகின்ற வேளையில் துவண்டுவிடாமல் நிலைத்து நிற்கின்ற பண்பு ஆகும். ''நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்'' (லூக் 21:19) என இயேசு தம் சீடர்களுக்குக் கூறியதையும் நாம் கருதலாம். ஆக, கடவுளின் வார்த்தையைக் கேட்பவர்கள் திறந்த, நேர்மையான உள்ளத்தோடு அதைக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்ட வார்த்தையை அவர்கள் கரிசனையின்றி விட்டுவிடாமல் அன்போடு ஏற்று, போற்றிப் பேண வேண்டும். எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் கடவுளின் வார்த்தை தங்கள் வாழ்வில் பலன் நல்கும் விதத்தில் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் செயல்பட்டால் இறைவார்த்தைக்குச் சான்று பகர்கின்ற மக்களாகத் திகழ்வோம்.






நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 18, 2011 12:01 pm

மத்தேயு 20:1-16

ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு



1 "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார்.

2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.

3 ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.

4 அவர்களிடம், "நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்" என்றார்.

5 அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.

6 ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், "நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

7 அவர்கள் அவரைப் பார்த்து, "எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை" என்றார்கள். அவர் அவர்களிடம், "நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்" என்றார்.

8 மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், "வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்" என்றார்.

9 எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர்.

10 அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.

11 அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து,

12 "கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே" என்றார்கள்.

13 அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, "தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா?

14 உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்.

15 எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்றார்.

16 இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்" என்று இயேசு கூறினார்.


நாள் முழுதும் வேலைசெய்தவர்களுக்கும் ஒரு மணி மட்டுமே வேலை செய்தவர்களுக்கும் ஒரே சமமான கூலி கொடுக்கப்பட்டால் அது அநீதி என்றுதான் நாம் எண்ணுவோம். ஆனால் இயேசு வெறும் உலகப் பார்வையில் செய்யப்படுகின்ற மதிப்பீடுகள்படி கடவுள் செயல்படுவதில்லை என இந்த உவமை வழி நமக்கு உணர்த்துகிறார். உவமையில் வருகின்ற நிலக்கிழார் (தோட்ட உரிமையாளர்) கடவுளுக்கு உருவகம். அவர் தம் மக்களின் தேவைகளை உணர்ந்தவர். அவர்களை அவர் வேறுபடுத்திப் பிரித்துப் பார்த்து, ஒருவரை உயர்த்தவோ மற்றவரைத் தாழ்த்தவோ செய்வதில்லை. எல்லா மனிதரும் கடவுளுக்கு முன் சமமானவர்களே. விடியற்காலையிலேயே வந்து தோட்ட வேலை செய்தவர்கள், ''கடைசியில் வந்த இவர்களையும் நாள் முழுதும் வேலை செய்த எங்களையும் இணையாக்கிவிட்டீரே'' (மத் 20:12) என்று கேட்டது உலகப் பார்வைப் படி நியாயமான கேள்விதான். ஆனால் கடவுளின் நீதி இரக்கமும் பரிவும் தோய்ந்த அன்பு இதயத்திலிருந்து பிறக்கும் ஒன்று. கடவுளின் இரக்கத்திற்கு எல்லை கிடையாது. கடவுளின் இரக்கத்திற்கு நாம் மனித கணிப்புப்படி வேலி கட்ட முடியாது. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்னும் தத்துவம் கடவுளைப் பொறுத்தமட்டில் உண்மை ஆகாது. முதலில் வந்தாலும் சரி, கடைசியில் வந்தாலும் சரி எல்லாருக்கும் சம உரிமையே என்பதே கடவுளின் நீதி. கடவுள் நம்மை எவ்வாறு நடத்த வேண்டும் என நாம் அவருக்கு ஆலோசனை கூற நமக்கு உரிமையில்லை. அவர் ''தாராள உள்ளத்தோடு பிறருக்கு நன்மை செய்கிறாரே என நினைத்து நாம் பொறாமைப்படுவதும் முறையாகாது'' (காண்க: மத் 20:15). மாறாக, எல்லா மக்களையும் சமமாக நடத்துகின்ற ''நம் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும்'' (காண்க: மத் 5:48).





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 19, 2011 9:53 pm

19/09/2011

லூக்கா 8:19-21

பொதுக்காலம், வாரம் 25 செவ்வாய்



16 "எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர்.

17 வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.

18 ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும். "

எரியாத விளக்கு விளக்கல்ல. விளக்கு என்றால் அது சுடர்விட்டு பிரகாசிக்க வேண்டும். இதனால் இருள் அகல வேண்டும். விளக்கின் ஒளியில் மனிதன், மிருகம், பறவை மற்றும் படைப்புகள் அனைத்தும் பயன்பெற வேண்டும்.

ஏற்றிய விளக்கையும் பாத்திரத்தால் மூடுபவன் அந்த விளக்கு எரிவதன் பயனைப் n;பறவில்லை. அவ்வாரே விளக்கை ஏற்றி கட்டிலின் கீழ் வைப்பவனை என்ன சொல்ல. அறிவுள்ளவன் தன்னிடம் உள்ள விளக்கை ஏற்றி, விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.

கடவுள் உனக்கு கொடுத்துள்ள விளக்கை ஏற்றி வைத்துள்ளாயா? ஏற்றிய விளக்கை தூண்டி துலக்கி சுடர்விட்டு எரியும்படி கவனமுடன் கண்காணிக்கிறாயா? விளக்குடன் ஏனத்தில் எண்ணெய்யும் வைத்துள்ளாயா? ஏற்றிய விளக்கை விளக்குத்தண்டின்மேல் உயர்த்தி வைத்துள்ளாயா?

நீ ஒரு விளக்கு. உன் வாழ்க்கை ஒரு விளக்கு.உன் குடும்பம் ஒரு விளக்கு. உன் தொழில் ஒரு விளக்கு. உன் ஆன்மீகம், உன் செல்வம், உன் ஆற்றல், இன்னும் பல பல உண்டு. இந்த விளக்ககளை எல்லாம் ஏற்றி விளக்குத்தண்டின் மீது வைத்துள்ளாயா?

வைத்திருந்தால் "உள்ளவனுக்கு கொடுக்கப்படும்" . வைத்தராவிட்டால் "தனக்கு உண்டென்று அவன் நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்".





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Ila
sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Tue Sep 20, 2011 6:19 am

நல்ல சிந்தனை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 21, 2011 12:12 am

20/09/2011

லூக்கா 8:19-21

பொதுக்காலம், வாரம் 25 செவ்வாய்





19 இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை.

20 "உம்தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்" என்று அவருக்கு அறிவித்தார்கள்.

21 அவர் அவர்களைப் பார்த்து, "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார்


இந்தக் காட்சியை இரண்டு கோணங்களில் அணுகலாம். இயேசுவின் கோணம் மற்றும் அன்னை மரியா மற்றும் சகோதரர்களின் கோணம். இயேசுவின் கோணத்திலிருந்து பார்த்தால், சொந்தத் தாயும், உறவினர்களும் வந்திருந்தும்கூட அவர்களைக் காண இயலாதபடி பெருந்திரளான மக்களுக்கு அவர் போதித்துக்கொண்டிருந்தார். தன் சொந்த குடும்பத்தினரைவிட தந்தை இறைவன் தந்த பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை அறியலாம்.

அன்னை மரியாவின் கோணத்திலிருந்து பார்த்தால், பரபரப்பான இறைப் பணியில் ஈடுபட்டிருந்த தம் மகனைப் பற்றி அந்தத் தாய் பெருமிதம் அடைந்திருப்பார். அத்தோடு, அவரது பணிக்கு இடையூறு செய்யாமல், ஆவலுடன் வெளியே காத்துக்கொண்டிருக்கவும் முன் வந்தார். இது அன்னையின் எளிமையையும், இறைத் தந்தைக்கு அவர் காட்டிய பணிவையும், தமது மகனின் போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள்மீது அவர் கொண்ட பரிவையும் ஒருசேரக் காட்டுகிறது. என்னே அன்னையின் பெருந்தன்மை! என்னே அன்னையின் எளிமை! உரிமை கொண்டாடாமல், ஒதுங்கி நின்றுகொண்டிருக்கும் இந்தக் காட்சி நமக்கும் தாழ்ச்சியையும், பற்றிக்கொள்ளா தன்மையையும், நிறை அன்பையும் கற்றுத் தரட்டும்




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 24, 2011 11:38 am

24/09/2011

லூக்கா 9:43-45

பொதுக்காலம், வாரம் 25 சனி



43 இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம்,

44 "நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்" என்றார்.

45 அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.

இயேசு பல புதுமைகள் செய்து மக்களின் பிணிகளைப் போக்கினார்; அவர்களுக்கு நலம் கொணர்ந்தார். அதே பணியைத் தொடர்ந்து ஆற்றும் பொறுப்பையும் அதற்கான வல்லமையையும் அவர் தம் சீடர்களுக்கு அளித்தார் (காண்க: லூக் 9:1-6). வலிப்பு நோய்க்கு ஆளான ஒரு சிறுவனை இயேசுவின் சீடர்களால் குணப்படுத்த இயலவில்லை. ஆனால் இயேசு அச்சிறுவனின் பிணியை நீக்கி அவனுடைய தந்தையிடம் அவனை ஒப்படைத்தார் (லூக் 9:37-42). இந்த அதிசயம் மக்களின் கண்முன்னால் நிகழ்ந்ததும் ''அவர்கள் எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்துநின்றார்கள்'' என லூக்கா குறிப்பிடுகிறார் (லூக் 9:43அ). இயேசு புரிந்த அதிசய செயல்கள் மக்களிடையேயும் சீடர்களிடையேயும் பெரும் வியப்பை ஏற்படுத்தின (லூக் 9:43ஆ). மலைப்பும் வியப்பும் எல்லாரையும் ஆட்கொண்டதைக் குறிப்பிட்ட உடனேயே, இயேசு தாம் துன்புறப்போவதாக இன்னுமொரு முறை முன்னறிவித்தது பற்றி லூக்கா பேசுகிறார். தீய சக்திகளை அடக்குகின்ற அதிகாரம் இயேசுவுக்கு இருக்கிறது; மக்களின் பிணி போக்குகின்ற வல்லமையும் அவரிடம் உண்டு. ஆனால் இத்தகு வல்லமை கொண்டவர் ''மக்களின் கைககளில் ஒப்புவிக்கப்பட்டு'' துன்பங்களை அனுபவிப்பார் (லூக் 9:44).

-- இயேசுவின் சீடர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது இன்று நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, கடவுளின் வல்லமையால் மக்களுக்கு வாழ்வளிக்க வந்த இயேசு தம் உயிரையே நமக்காகக் கையளிக்கின்றார். தீய சக்திகளைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த இயேசு தீயோரின் கைகளில் ஒப்படைக்கப்படுகின்றார். இதுவே ''சிலுவையின் முரண்பாடு'' என அழைக்கப்படுகிறது. கடவுளின் வல்லமை துலங்குவது அதிகாரத்தின் வழியாகவோ, அடக்கி ஆளுவதன் வழியாகவோ அல்ல. மாறாக, கடவுளின் வல்லமை அவர் நமக்காகத் தம்மையே காணிக்கையாக்குவதில் துலங்குகிறது. அக்காணிக்கையின் உச்சக் கட்டம் தான் இயேசுவின் சிலுவைச் சாவு. இயேசு தாம் துன்புற்று இறக்கப் போவதை அறிவித்ததும் சீடர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அவருக்கு இத்தகைய இழிநிலை ஏற்படக் கூடாது என்று கூறிப் பார்த்தார்கள். அதே நேரத்தில் ''அவர் சொன்னது பற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்'' (லூக் 9:45). ஏன் இந்த அச்சம்? தம் குருவாக, ஆசிரியராக விளங்கிய இயேசுவுக்கு எத்தீங்கும் ஏற்படக் கூடாது என அவர்கள் நினைத்ததால் எழுந்தது இந்த அச்சமா அல்லது குருவின் நிலையே சீடனின் நிலையாக மாறிவிடுமோ என்ற அச்சமா? எவ்வாறாயினும், இயேசு கடவுளின் அன்பை நமக்கு வெளிப்படுத்தும்போது அந்த அன்பு தன்னையே நமக்குப் பலியாகத் தருகின்ற அன்பு என்பதை வெளிப்படுத்துகிறார். தன்னை அழித்துக் கொண்டு பிறருக்கு ஒளி தருகின்ற மெழுகு திரி போன்றது கடவுளின் அன்பு. அதே அன்பு நம் வாழ்விலும் துலங்கிட வேண்டும்.







நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 25, 2011 12:05 pm

25/09/2011

மத்தேயு 21:28-32

திருவருகை காலம்-மூன்றாம் வாரம், செவ்வாய்



28 மேலும் இயேசு, "இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், "மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்" என்றார்.

29 அவர் மறுமொழியாக, "நான் போக விரும்பவில்லை" என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.

30 அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, "நான் போகிறேன் ஐயா!" என்றார்; ஆனால் போகவில்லை.

31 இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?" என்று கேட்டார். அவர்கள் "மூத்தவரே" என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், "வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறiயாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

32 ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை" என்றார்.

ஒரு தந்தைக்கு இரு புதல்வர்கள். ஆனால் அவர்களுடைய பண்பும் போக்கும் முற்றிலும் மாறுபட்டிருந்தன. மூத்த மகன் முதலில் தந்தையை மதிக்காமல் பேசுவதுபோலத் தெரிந்தாலும் பின்னர் தந்தை கேட்டுக்கொண்டபடி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்தார். ஆனால் அடுத்த மகனோ முதலில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதுபோலக் காட்டிக்கொள்கிறார்; ஆனால் உண்மையில் தந்தையின் விருப்பப்படி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்ய அவர் முன்வரவில்லை. இந்த இரு மகன்களும் நடந்துகொண்ட முறையை ஒரு கதையாகச் சொன்ன இயேசு நமக்கும் ஒரு பாடம் புகட்டுகிறார். அதாவது, கடவுளின் திருவுளம் என்னவென்று அறிந்த பிறகும் நாம் அதை நிறைவேற்றாமல் போய்விடுகிறோம். இது சரியல்ல என்பது இயேசுவின் போதனை. இயேசுவின் எதிரிகளின் நடத்தை அவ்வாறுதான் இருந்தது. அவர்களுக்குக் கடவுளின் திட்டம் மோசே வழங்கிய சட்டம் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. கடவுள் தாம் தேர்ந்துகொண்ட மக்களோடு நட்பின் அடிப்படையில் அமைந்த ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அந்த அன்பு உறவுக்கு உரிய பதில் மொழியைத் தர அம்மக்களில் பலர் தவறிவிட்டார்கள். மாறாக, யூத சமூகத்திற்குப் புறம்பானவர்கள் எனக் கருதப்பட்ட பிற இனத்தார் முதல் கட்டத்தில் கடவுளின் விருப்பப்படி நடக்க முன்வராமல் இருந்தாலும், நற்செய்தியைப் பெற்றுக்கொண்ட பிறகு மனமுவந்து கடவுளின் பணியில் ஈடுபட்டார்கள். உண்மையிலேயே கடவுளின் தோட்டத்தில் பணிசெய்யச் சென்றார்கள்.

-- இயேசு நம் உதவியை நாடுகிறார். கடவுளின் பணி மனிதரின் துணையோடுதான் நிகழமுடியுமே தவிர வேறு வழியால் நடக்காது. ஆகவேதான் கடவுளின் திட்டத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட அன்போடு கைவிரித்து ஏற்பவர் நம் கடவுள். இத்தகைய ஆழ்ந்த நட்பினை நம்மேல் பொழிகின்ற கடவுள் நம்மிடம் கேட்பதெல்லாம் நாம் அவருடைய தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதே. இத்தோட்டம் திருச்சபையைக் குறிக்கும்; பரந்து விரிந்த பாருலகில் வாழ்கின்ற மக்களைக் குறிக்கும். யாராக இருந்தாலும் மனிதர் அனைவரும் கடவுளின் படைப்புக்களே என்பதால் நாம் உலக மக்கள் அனைவருக்கும் பணியாளராகத் துலங்குவது தேவை. தோட்டத்தில் நன்கு வேலை செய்தால் அதன் பலன் நம் சிந்தனையெல்லாம் கடந்தது. கடவுளோடு நாம் என்றென்றும் இணைந்திருப்போம். இதுவே கடவுள் நமக்கு அளிக்கின்ற உயரிய மாண்பு




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 27, 2011 10:41 pm

லூக்கா 9:46-50

பொதுக்காலம், வாரம் 26 திங்கள்



51 இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,

52 தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

53 அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

54 அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?" என்று கேட்டார்கள்.

55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.

56 பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.


இயேசு எருசலேம் நோக்கிப் பயணம் மேற்கொள்கிறார். கலிலேயாவிலிருந்து எருசலேம் செல்லும் வழியில் சமாரியர் வாழும் பகுதிகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். ஆனால் சமாரியருக்கும் யூதருக்கும் இடையே நல்லுறவு இல்லை. எனவே இயேசுவையும் அவருடைய சீடர்களையும் சமாரியர் தங்கள் ஊர் வழியாகச் செல்ல அனுமதிக்கவில்லை. அப்போது சீடருக்குக் கோபம் எழுகிறது. தங்கள் தலைவராகிய இயேசுவைத் தடுக்க இவர்கள் யார் என அவர்கள் எண்ணுகின்றனர். எனவேதான் ''ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா?'' என்று கேட்கின்றனர்.

-- நம் விருப்பத்திற்கு ஏற்ப எல்லாம் நடக்க வேண்டும் என நாம் பொதுவாக விரும்புகின்றோம். ஏதோ காரணத்தால் நாம் விரும்பியது நடக்கவில்லை என்றால் நமக்குக் கோபம் வருகிறது. இயேசுவின் சீடர்களும் இவ்வாறே கோபமுற்று, தங்களைத் தடுத்தவர்களைத் தண்டிக்க எண்ணுகின்றனர். பழிக்குப் பழி என்னும் தத்துவத்தைச் செயல்படுத்த அவர்கள் துடிக்கின்றனர். ஆனால் இயேசு அவ்வாறு எண்ணவில்லை. ஆத்திரத்தில் ஒரு காரியத்தைச் செய்யும்போது ஆபத்தான விளைவுகள் ஏற்படக் கூடும். ஆனால் ஆர அமர சிந்தித்துச் செயல்படும்போது நம் செயல்களின் விளைவுகள் எவ்வாறு இருக்கலாம் என்பதை நாம் தெளிவாக உணர முடியும். அப்போது நம் செயல்களும் நல்லவையாக அமைந்திட வாய்ப்புப் பிறக்கும்




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 3 Ila
Sponsored content

PostSponsored content



Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக