புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_m10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10 
336 Posts - 79%
heezulia
இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_m10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_m10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_m10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_m10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_m10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_m10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_m10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_m10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_m10இந்தியா வரை நீளும் சீன மூக்கு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா வரை நீளும் சீன மூக்கு


   
   
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Fri Sep 02, 2011 1:01 am

இந்தியா வரை நீளும் சீன மூக்கு India-china_relations

பச்சை பசேல் என்ற புல்வெளி அதில் கலைநயமிக்க வெள்ளைநிற மாளிகை, நீல வான பின்னனி, ஒங்கி வளர்ந்த மரங்களுக்கிடையில் ஒய்யார குதியாட்டம் போடும் முயல்குட்டிகள், அழகான மனைவி, அறிவார்ந்த குழந்தைகள் இப்படி ஒரு ஆனந்த வாழ்வு ஒரு மனிதனுக்கு கிடைத்துவிட்டால் நிம்மதி என்பது தாமாக வந்துவிடுமா?

அதிக ரத்த அழுத்தம் , நானூறை தாண்டும் சக்கரை, நெஞ்சு படபடப்பு, இத்தனை நோய் ஒரு புறம் என்றால் எமன் மாதிரி வந்து உட்கார்ந்து கொண்ட புற்றுநோய் எப்படி வரும் சந்தோஷம். கோட்டை கட்டி வாழ்ந்தாலும் உடல் கூடெல்லாம் நோயால் சூழப்பட்டால் எங்கேயிருந்து மகிழ்ச்சி வரும். ஒட்டை வீட்டில் உறங்கினாலும், அடுத்த வேளைக்கு உணவு இல்லை என்றாலும், மாற்ற கூட துணியில்லையென்றாலும் ஆரோக்கியம் மட்டும் இருந்துவிட்டால் ஆனைகூட்டம் எதிரே வந்தாலும் பூனைகளை போல் தூக்கி போடலாம் அதனால் தான் நமது முன்னோர்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றார்கள்.

ஒரு தனிமனித சுகவாழ்வுக்கு ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ ஏன் அதை விட முக்கியமானது ஒரு தேசத்தின் பாதுகாப்பு. வெள்ளி பனிமலையில் தூங்காத இரவுகளை தினசரி ராணுவவீரன் எதிர்கொண்டால் தான் வீட்டு திண்ணையில் நாம் நிம்மதியாக தூங்க முடியும் என்ற வார்த்தை மிகைப்படுத்தப்பட்ட கருத்து அல்ல, கண் முன் நிஜமாக நிற்கும் உண்மையாகும்.

இந்தியா வரை நீளும் சீன மூக்கு Indian-army556

தேச பாதுகாப்பு என்றவுடன் நமது மனக்கண் முன்னால் காஷ்மீர் பள்ளத்தாக்குகளும் குஜராத் கடற்கரைகலும், ராஜஸ்தான் பாலைவனங்கலும் தான் நமக்கு நினைவுக்கு வரும். இந்தியாவின் விரோதி யாரென்று தெருவில் கோலி விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவனை கூப்பிட்டு கேட்டாலும், திண்ணையில் பல்லாங்குழி ஆடும் பாட்டியிடம் கேட்டாலும் பாகிஸ்தான் என்று பளிச்சென்று பதில் வரும், நிஜமாகவே நமது எதிரி நாடு பாகிஸ்தான் தானா? பாகிஸ்தான் மட்டும் தானா? நேரு காலம் தொடங்கி மன்மோகன்சிங் காலம் வரையில் காங்கிரஸ் அரசாங்கம் அப்படி தான் சொல்லி கொண்டு வருகிறது. அல்கொய்தா தாலிபான் இன்னும் என்னென்னவோ வாயில் நுழையாத அரபு பெயர்களில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தான் வழியாக தான் இந்தியாவிற்குள் நுழைகின்றன. நமது நாடெங்கும் குண்டுகளை வைப்பதும், பாரளுமன்றத்துகுள்ளேயே தாக்குதல் நடத்துவதும், மும்பை பெருநகரத்தில் ஆக்கிரமிப்பு செய்வதும் பாகிஸ்தான் உளவு படையின் கைங்கர்யம் தானே. அதனால் காங்கிரஸ் சொல்லுவது சரியாகத் தான் இருக்கும் என்று ஆடு மேய்க்கும் அண்ணாமலையிலிருந்து கணிப்பொறி தட்டும் கவிதா வரையிலும் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை உண்மையா?

நம்பிக்கை என்னவோ உண்மைதான் ஆனால் பாகிஸ்தான் மட்டும் தான் எதிரியென்று காங்கிரஸ் சொல்லுவது உண்மையல்ல. வடஎல்லையில் பாகிஸ்தானில் மட்டுமல்ல, ஆப்கானிஸ் தானிலிருந்தும் பயங்கரவாதிகள் உடுருவுகிறார்கள் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் சீனாவின் ஆக்கிரமிப்பு கரம் ரகசியமாக நீண்டு கொண்டுயிருக்கிறது. வங்கதேசத்தில் இருந்து அந்நிய அடிப்படைவாத அமைப்புகள் நாட்டிற்குள் குடியுரிமை பெற்று சுகந்திரமாக நடமாடுகிறார்கள். நேற்றுவரை நேபாளத்தில் இருந்த மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு பொதுவுடமை தீவிரவாதிகளின் சர்வதிகார அரசு பொறுப்பேற்று ஈரம் காய்வதற்குள்ளே இந்திய நக்சல்பாரி இயக்கங்களோடு கைகோர்க்க ஆரம்பித்துவிட்டது. இந்திய அரசின் பழிவாங்கும் போக்கால் இலங்கையின் இனவாத அரசு புத்துயிர் பெற்று சீன பங்காளிகளோடு உறவாடி அமைதி பூங்கவான இந்தியாவின் தெற்கு எல்லையில் பீரங்கி முழக்கங்கள் வருங்காலத்தில் கேட்க வழி ஏற்பட்டு இருக்கிறது. மக்மோகன் எல்லை கோட்டை பொருட்படுத்தாத சீனா அருணாச்சல பிரதேச மாநிலத்தையே தனக்கு சொந்தமென உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டது. பக்கத்து நாடான பர்மா கூட இன்று இந்தியாவுக்கு நண்பன் இல்லை. பூடானும், மாலத்தீவும் தொடர்ந்து நண்பர்களாகயிருப்பார்களா என்பதும் சந்தேகமே, ஆக இத்தனை எதிரிகள் நம்மை நாலாபுறமும் சுற்றி நின்று கொத்தி குதற முயற்சிக்கும் போது பாகிஸ்தானை மட்டும் பகையாளியாக காட்டுவது மக்களை திசை திருப்பும் முயற்சி ஆகும்.
இந்தியா வரை நீளும் சீன மூக்கு Indian_Army_T-72_image_2

ராணுவரீதியில் பார்க்கும் போது பாகிஸ்தான் என்பது நமது பெண்களின் பாவாடை நாடாவுக்கு சமமானது. அமெரிக்க அண்ணா மட்டும் அந்நாட்டை கண்ணெடுத்து பார்க்கவில்லையென்றால் வெறும் ஐந்து மணி நேர தாக்குதலிலே இஸ்லாமாபாத்தை டெல்லியோடு இணைத்து விடலாம். ஆனால் சீனா அப்படியல்ல பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் நம்மை விட பெரியது , என்று மட்டும் தான் நாம் நினைத்து கொண்டியிருக்கிறோம். உண்மையில் சீனாவின் ராணுவபலம் என்பது தற்போதைய சூழலில் பீம புஷ்டி கொண்டது என்றே சொல்லலாம். இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு அதன் ராணுவபலம் அமெரிக்காவுக்கு இணையாகிவிடுமாம்.

கடந்த 2009-தாம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருபத்தி முன்றாம்தேதியன்று சீனாவில் உள்ள கிங்டாவோ என்ற இடத்தில் முதலாவது சர்வதேச கப்பல் படை அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பில் பங்குபெற இந்தியாவிலிருந்து இரண்டு போர் கப்பல்கள் உட்பட பதினாலு நாடுகளிலிருந்தும் பல போர் கப்பல்கள் வந்து கலந்து கொண்டன. ஒலிம்பிக் போட்டியை நடத்தி முடித்த கையோடு இந்த அணிவகுப்பை நடத்தி சர்வதேச ராணுவ நிபுணர்களின் வியப்பிற்கு உரம் போட்டது, எனது பொருளாதார பலம் என்பது உலகம் நினைப்பது போல சாதாரணமானது அல்ல, ஒரே நேரத்தில் சர்வதேச விளையாட்டையும், சர்வதேச ராணுவ அணிவகுப்பையும் என்னால் நடத்த முடியும் என்று உலகத்தின் முகத்தில் ஒங்கி அறைந்து சொல்வது போல சொல்லி சீனா உலகை அதிர வைத்திருக்கிறது.

ராணுவ அணிவகுப்பு நடத்துவது பல நாடுகளில் வருடா வருடம் நடக்கும் நடைமுறை சடங்கு தானே அதை சர்வதேச அணிவகுப்பாக நடத்துவது கூட ஒன்றும் பெரிய விஷயமில்லையே இந்தியாவில் கூட இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு இதே போன்ற ஒரு சர்வதேச அணி வகுப்பு நடந்ததே அதில் சீன அணிவகுப்பில் கலந்து கொண்ட உலக நாடுகளை விட அதிகமான நாடுகள் பங்கெடுத்து கொண்டனவே, உருவத்தில் கூட சீன அணிவகுப்பு சுண்டெலிக்கு சமமானது இந்திய அணிவகுப்பு திமிங்கலம் போன்ற பிரம்மாணடமானது தானே என்று சிலர் கேட்கலாம்.
இந்தியா வரை நீளும் சீன மூக்கு Army-China-Regional_Security_Feminine_Pekin

வாஸ்தவம் தான் நம் அணிவகுப்பு சீனாவின் அணிவகுப்பை விட வண்ணத்திலும், எண்ணத்திலும் பெரியது தான், அதில் சந்தேகம் இல்லை, ஆனால் கவனிக்க வேண்டியது அணிவகுப்பை அல்ல, அணிவகுப்பில் பங்குபெற்ற ராணுவ தளவாடங்களை, இந்திய ராணுவ தளவாடங்கள் பெரும்பாலானவை உள்நாட்டில் தயாரானது அல்ல, அயல்நாட்டு இறக்குமதிகளே அதிகம், சீனாராணுவ தளவாடங்கள் மட்டுமல்ல அதிலுள்ள சின்ன நட்டு, போல்டு கூட அந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவைளே ஆகும். உள்நாட்டு தயாரிப்புகளின் நம்ப தன்மை என்பது வேறு அயல்நாட்டு பொருட்களின் மீது வைக்கும் நம்பிக்கை என்பது வேறு.

சீனாவின் ராணுவ பலத்திற்கு சரியான முறையில் ஈடு கொடுக்க வெளிநாடுகுளை சார்ந்த இருப்பதை தவிர்த்தால் தான் முடியும். சீனா கூட சில ராணுவ உதிரி பாகங்களை ரஷ்யாவில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. ஆனால் இந்தியா அமெக்க, ரஷ்யா உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இஸ்ரேலிருந்தும் கூட இறக்குமதி செய்கிறது. இதனால் நம் நாட்டு ராணுவ தொழில்நுட்பம் பல வகைகளில் ரகசியங்களை தொலைக்க வாய்யப்புள்ளது.

பொதுவுடமை சீனா உருவான காலத்திலிருந்தே அதற்கென்று தனியான அரசியல் பார்வையும் லட்சியமும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட காலகெடுவை தனக்கென்று ஏற்படுத்திக் கொண்டு அந்தந்த கால கட்டத்திற்குள் எப்பாடுபட்டாவது இலக்கை அடைந்து விடுவது சீனர்களின்ன இயல்பு. அவர்களின் தற்போதைய கணக்கு இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு முடிவதற்குள் பூகோளரீதியாக தன்னோடு சம்பந்தப்பட்ட நாடுகளை விட ராணுவ பலத்தில் வலு மிக்கதாக தனது தேசத்தை உருவாக்குவது. இரண்டாயிரத்து முப்பதாம் ஆண்டிற்கு துவங்கத்திலிருந்து நடுத்தர நிலையில் உள்ள எதிரி நாடுகளோடு வரம்புக்கு உட்பட்ட போர் நடத்தி தனது நிலையை சர்வதேச அரங்கில் உறுதிபடுத்தி கொள்வது இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டிற்குள் அமெக்காவுக்கு இணையான மாற்று சக்தியாக உலகில் உருவாவது இது தான் சீனாவின் இப்போதைய கணக்கு.
இந்தியா வரை நீளும் சீன மூக்கு Type_88_Chinese_Army_001
தனது தேசத்தின் இந்த வளர்ச்சிக்கான இந்த இலக்கை ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அடைவதற்கும், வெற்றி பெறுவதற்கும் சீனாவின் கைவசம் துல்லியமான திட்டம் உள்ளது. நமது நாட்டை பொறத்த வரை அப்படி எந்தொரு திட்டமும் கிடையாது என்பதை விட அதைப்பற்றிய எண்ணம் கூட நமது தலைவர்கள் எவருக்கும் துளி கூட இல்லை.
இந்தியா வரை நீளும் சீன மூக்கு 12
காலையிலிருந்து இரவு வரை தன்னுடைய எதாவது ஒரு செயல் சோனியாகாந்தியை கோபப்படுத்தி விட கூடாது என்ற கவலை தான் நமது பிரதமரை ஆட்டி வைக்கிறது, தேசத்தை பற்றி அக்கறை கொஞ்சமாவது நமது நாட்டு தலைவர்களுக்கு இருக்குமேயானால் இரவு பத்து மணிக்கு மும்பை தாஜ் ஒட்டலை ஆக்கிரமித்து கொண்ட பயங்கரவாதிகளை விரட்ட அடுத்த நாள் காலை 11 மணிக்கு தான் ஆலோசனை கூட்டம் நடத்துவார்களா? மத்திய அமைச்சர்களுக்கு இலாக்காகளை காப்பாற்றி கொள்வதும் இரவு பகலாக வசூல் வேட்டைகளை நடத்துவதிலும் தான் வழக்கமாக இருக்கிறதே தவிர நாட்டு பாதுகாப்பை பற்றி கவலைப்படுவதற்கோ வளர்ச்சிக்கான திட்டங்களை வகுப்பதற்கோ எங்கே நேரமிருக்கிறது.

சீனாவின் ராணுவ நிர்வாகம் என்பது மிகவும் கட்டு கோப்பானதாகும். ஒரே ஒரு தளபதியின் கீழ் அனைத்து ராணுவ பிவுகளும் வரையறுக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்திற்காக ராணுவ அதிகார கேந்திரங்கள் பல அடுக்குகளை கொண்டதாகவும் இருக்கிறது. ராணுவத்தின் செயல்பாடு இப்படி தான் இருக்க வேண்டுமென்று தீர்க்கமான முடிவு அரசாங்கத்திற்கும் உண்டு. ஆனால் நம் நாட்டில் காணப்படும் நிலவரம் தலைகீழானது. ராணுவ அதிகாரிகளின் முடிவுகளை விட அரசியல் தலைவர்களின் முடிவே இங்கு பிரதனமானது. களத்தில் இருக்கும் ராணுவ அதிகாகள் பாதுகாப்பு சூழலை பற்றி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கலாமே தவிர நிலைமைக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுக்க முடியாது, அதாவது எல்லை கோட்டில் எதிரிகளை சுட்டு கொன்டு இருக்கும் நேரம் நேருக்கு நேர் எதிகளை சுடாதே என்று அரசியல் தலைமையிடம் இருந்து கட்டளை வந்தால் குண்டடிப்பட்டு சாகலாமே தவிர பதில் தாக்குதல் நடத்த கூடாது.
இந்தியா வரை நீளும் சீன மூக்கு 29jul1987-1
இந்த கேவலமான நிலையில் தான் உலகின் தலைசிறந்த வீரர்களை கொண்ட இந்திய ராணுவம் இருந்து வருவதை இந்திய அமைதி காப்பு படை இலங்கையில் இருந்த போது நம்மால் அறிய முடிந்தது. ஆரத்தி காட்டி வரவேற்ற தமிழ் மக்களே துரத்தி அடிப்பதற்கு கூட்டமாக சேர்ந்ததும், வாவென்று கம்பளம் விரித்த இலங்கை அரசே போ என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவதற்கும், ஈழ தமிழர்களின் வாழ்வு இன்பமாக ஆகப்போகிறது என கனவு கண்ட தமிழகத்து தமிழர்களே முணுமுணுத்து முகத்தை துக்கி வைத்து கொண்டதற்கும், இந்திய அரசு தலைவர்களின் நிலையில்லாத புத்தியே காரணம், சீனாவில் உள்ளது போல் இந்தியாவில் ராணுவத்திற்கும் அரசிற்கும் திட்டமிட்ட ஒருங்கிணைப்பு இல்லை, அணு ஆயுதங்களாக இருக்கட்டும் வேறுவித படைகலன்களாக இருக்கட்டும் எல்லாமே வெவ்வேறு துறைகளின் கட்டுபாட்டிலே உள்ளன. அவசர காலத்தில் இந்திய ராணுவத்தால் துரிதமாக செயல்பட முடியாது என்ற எண்ணத்தில் தான் எல்லை பகுதிகளில் சீனாவும், பாகிஸ்தானும் பல ஆயிரம் முறைகள் ஊடுருவி முறைதவறி உள்ளன.

இந்தியா மற்றும் சீன ராணுவத்தோடு ஒப்பிடும் போது பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்பாடுகள் ஒன்றும்மோசமானது அல்ல என்பதை ஒத்து கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தானம் வழியாக பொருட்களை எடுத்து செல்வதற்கு அங்கு உள்ள குட்டியரசுகள் தடையாக இருப்பதற்காக ஒமர் அப்துல்லாவின் தாலிபன் என்ற சின்னசிறிய படைக்கு வீடியோ காஸட் முலமாகவே சரியான பயிற்சி கொடுத்து தாலிபான்கள் வெற்றியடைய வழிசெய்தது ஒரே ஒரு உதாரணமே அந்த நாட்டின் ராணுவத்தின் திறனை மெச்சதக்க விதத்தில் நமக்கு காட்டும், ஆனால் துரதிஷ்டவசமாக அங்கிருக்கும் ஒவ்வொரு ராணுவவீரனும் ஒரே ஒரு நாளாவது பாகிஸ்தான் அதிபராகி விட வேண்டும் என்பது தான் அந்த நாட்டின் சாபம். அதுவே நமக்கு கடவுள் கொடுத்த வரம்.
இந்தியா வரை நீளும் சீன மூக்கு AssamIndia19621
சீனாவின்போர் வியூகம் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அந்த விஷயத்தில் நாம் சூடுப்பட்ட பூனை. உலக நாடுகள் சிவப்பு சீனாவை அங்கிகரிக்க தயங்கிய போது ஜனநாயக நாடான இந்தியாவை பயன்படுத்தி கொண்ட போதும், ஐக்கிய நாட்டு சபையில் நிரந்தரமான இடம் வருவதற்க்காக நம் மூலமாக காய்களை நகர்த்திய போதும் பஞ்சசீல கொள்கையில் கையெழுத்து போட்ட பேனாவின் மை காய்வதற்கு முன்பே நம் மீது போர் தொடுத்த போதும் சீனாவின் முகம் இது தான் என நாம் தெளிவாகவே தெரிந்ததே வைத்திருக்கிறோம்.


சீனாவின் ராணுவ அணுகு முறையானது ஒரே நேரத்தில் பல எதிரிகளை குறி வைப்பது அல்ல. அப்படி செய்வது அமெக்கா மட்டும் தான், ரஸ்யாவை பயமுறுத்தி கொண்டியிருந்த அதே வேளையில் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வேட்டை நடத்திய கதையெல்லாம் அதற்கு உதாரணம். ஆனால் சீனா ஒரு நேரத்தில் ஒரு அண்டை நாட்டுடன் தான் பிரச்சனையை வளர்த்து கொள்ளும். சில காலத்துக்கு முன்பு வரை கூட தைவான் நாட்டுடன் குழாய் அடி சண்டை போட்டு கொண்டிருந்த சீனா இப்போது புன்முறுவல் காட்ட துவங்கியுள்ளது, இதை விட ஒரு படி கீழே இறங்கி உன்னை அடித்தது தவறு தான், வேண்டுமானால் வீக்கத்திற்கு மருந்து கூட தடவி விடுகிறேன் என்று ஒப்பந்தங்கள் எல்லாம் கூட போட ஆரமித்து விட்டது. இப்போது சீனா தனக்கு எதிரி என்று எந்த நாட்டை பார்கிறது தெரியுமா? அதிர்ச்சியே வேண்டாம். இந்தியாவை தான், அது தனது முதல் எதிரியாக குறி வைத்திருக்கிறது.
இந்தியா வரை நீளும் சீன மூக்கு 1
விடுதலைக்கு பிறகு கெடுதலையான தலைவர்கள் பலர் இந்தியாவை ஆண்டாலும் கூட இந்தியா பல வகையில் வளர்ந்து வருகிறது. இந்தியர்களின் தொழில் நுட்ப அறிவு சீனர்களை ஒப்பிடும் போது பல மடங்கு உயர்வாக உள்ளது. இந்தியாவின் கனிம வளங்கள், இயற்கை செழிப்புகள் அற்புதமானவை, ஆயிரம் முறை சர்வதேச பொருளாதார தடை இந்தியா மீது திணிக்கபபட்டாலும் கூட இந்திய கப்பல் தரை தட்டாது.

சீனர்களை போல் இந்தியர்கள் அடிமை புத்தியை அதிகம் கொண்டவர்கள் அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளாக அந்நிய அரசாட்சி இந்தியாவில் நடந்தாலும் மக்களின் கருத்து சுகந்திரம் அதிகமாக பாகிக்கப்பட்டதும் இல்லை. இந்தியர்கள் என்ன விலை கொடுத்தாவது கருத்து சுகந்திரத்தை காப்பாற்றியே தீருவார்கள். இது சீனர்களுக்கு மிக நன்றாக தெரியும். சீனநாட்டில் மன்னர்கள் ஆண்ட காலத்திலும் சரி, நிலபிரபுக்களின் ஆட்சி கொடி கட்டி பறந்த போதும் சரி, தற்போதைய பொதுவுடமை வாதிகளின் சர்வதிகார ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கும் போதும் சரி மக்கள் என்பவர்கள் களிமண் மொம்மைகள் தான் அரசாங்கம் பிடித்து வைத்தது போல உட்கார்ந்து இருக்க வேண்டியது தான் அவர்களின் வேலை. அரசாங்கத்தை கேட்காமல் சின்ன முணுமுணுப்பு கூட அவர்களிடமிருந்து வெளிவந்தால் அவ்வளவு தான், கதை முடிந்தது, பாதாள சுரங்கங்கறுக்குள் காலம் தள்ள வேண்டியது தான், இத்தகைய அடிமை வாழ்க்கை முறை சீனர்களுக்கு பழகிபோய் விட்ட ஒன்று தான் என்றாலும் கூட திறந்தவெளி சிறைச்சாலையான நாட்டிலிருந்தே சிறந்த பண்பாடையும் ஆச்சர்யப்படதக்க கலை முன்னேற்றத்தையும் அவர்கள் பெற்றிருந்தார்கள் என்று அறியும் போது நமக்கு வியப்பு ஏற்படுவது வேறு விஷயம்.

இந்தியர்களின் சுகந்திர உணர்வை உணர்ந்து தான் பொதுவுடமை சித்தாந்தம் இந்தியாவில் பரவ முடியாது என்று இடது சாரி இயக்கங்களை அந்நாடு இந்தியாவை பொறத்தவரை கைவிட்டு விட்டது. இல்லையென்றால் 1962-ல் சீன படையெடுப்பை வரவேற்று பரணி பாடியவர்கள் இந்தியாவை சிவப்பாக்கி இருப்பார்கள். நல்லவேளை கடவுள் நம்மை காப்பாற்றினார். ஆனாலும் கூட சீனா நக்சல்பாரி இயக்கங்களுக்கு மறைமுக உதவிகள் செய்வதை இன்னும் நிறுத்தவில்லை. சீனாவின் சிவப்பு விழிகள் இந்தியாவின் மீது திரும்பிய பிறகு தான் இங்கு பொதுவுடமை தீவிரவாதிகளின் அதிரடித் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளதை கவனிக்க வேண்டும். ஆனால் நமது அரசயல்வாதிகள் இந்த உண்மையை உணர்ந்து கொண்டார்களா? என்பது சந்தேகமாக இருக்கிறது. லாலு பிரசாத் யாதவ் போன்ற அதிமேதாவிகள், நக்சல்லைட்டுகள் அப்பாவி மக்களை தாக்கமாட்டார்கள் என்று சொல்வதிலிருந்தே சிவப்பு அபாயத்தை இவர்கள் சரிவர உணரவில்லை என்று தோன்றுகிறது.
இந்தியா வரை நீளும் சீன மூக்கு 2
நமக்கும் சீனாவுக்கும் இன்னும் தீர்க்கப்படாத தாவாக்கள் பல உண்டு, குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் நமது எல்லையில் உள்ள 4000 கிலோ மீட்டர் தொலைவை சீனா இன்னும் உரிமை கொண்டாடுகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க இருபத்தி ஒன்பது ஆண்டுகள் பேச்சு வார்த்தை நடத்தி போதும் சொல்லி கொள்கின்ற மாதிரி முன்னேற்றம் எதுவும் இல்லை, வேண்டும்யென்றே தொடர்ச்சியான முட்டுகட்டைகளை சீனா ஏற்படுத்தி வருகிறது. அருணாச்சல பிரதேச மக்களுக்கு வெள்ளைதாளில் விசா கொடுக்க துவங்கிய சீனா இதே திட்டத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கு வரையில் விரிவுப்படுத்தி விஷ விளையாட்டை ஆடி வருகிறது.

சீனாவின் இத்தகைய சீண்டல்களுக்கு மூலகாரணம் என்ன என்பதை தோண்டி எடுக்கும்போது அதிர்ச்சிகரமான பல விஷயங்கள் கிடைக்கின்றன. இந்தியாவின் வளர்ச்சி பல வகைகளில் நல்ல முறையில் இருந்தாலும், ராணுவத்தை பொறுத்த வரை இன்னும் சிறப்பான நிலையை அடையவில்லை ராஜ்வ்காந்தி, வாஜ்பாய் போன்ற பிரதமர்களை தவிர மற்றவர்கள் ராணுவ வளர்ச்சியில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை அல்லது ராணுவ முக்கியத்துவத்தை உணரவில்லை இந்திரா காந்தி யுத்த நேரங்களை தவிர மற்ற நேரங்களில் ராணுவத்தை உள்நாட்டிற்குள் பயன்படுத்துவதில் காட்டிய அக்கறையை அதன் வளர்ச்சியில் காட்டுவது கிடையாது. ரஷ்யாவில் இருந்து ஆயுதங்கள் இறக்குமதி செய்வதில் தான் இந்திராகாந்தி போன்ற அரசியல் தலைவர்கள் அக்கறை கொண்டிருந்தார்களே தவிர உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஈடுபாடு கொள்ளவில்லை ரஷ்யாவின் காலாவதியான ஆயுத தொழில்நுட்பம் பாகிஸ்தானை மிரட்டுவதற்கு சரியாக இருக்கமே தவிர சீனாவோடு மோத கூடிய அளவிற்கு தகுதி வாய்ந்தவைகள் அல்ல. காலம் கடந்த ஞானம் போல் சமீப காலங்களில் தான் அமெரிக்க ஆயுதங்களை இந்தியா வாங்க துவங்கியுள்ளது. வெளிநாடுகளிடமிருந்து அவசர அவசரமாக இறக்குமதி செய்தாலும் சீன அளவு தனது வலுவை உயர்த்தி கொள்ள இந்தியாவிற்கு குறைந்த பட்சம் 2015-வரையாவது ஆகலாம், அதற்குள் உள்நாட்டு பிரச்சனைகளில் இந்தியா மூழ்கும் படியும் எல்லை தகராறுகளில் தத்தளிக்கும் படியும் செய்துவிட்டால் தனது வல்லரசு கனவை சுலபமாக நிறைவேற்றி கொள்ளலாம் என சீனா என்ணுகிறது.

இத்தனைக்கும் சீனாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லையென்று சொல்லிவிடமுடியாது இந்திய பொதுவுடமைவாதிகள் கனவு காணுவது போல் சீனாவில் பாலும் தேனும் ஒடவில்லை. அதன் மறுபக்கம் பொதுவுடமையால் சிவப்பாக்கப்பட்டதல்ல வறுமையால் சிவப்பாக்கப்பட்டதாகும். வேலை இல்லாமல் பலர் கிடக்கிறார்கள். தெருத் தெருவாக பிச்சையெடுக்கும் சீனர்களும் அங்கு ஏராளமாக உண்டு. ஆனாலும் சீனா அதை சர்வதேச ரீதியில் மிக சாமார்த்தியமாக மறைத்து வருகிறது. நெருப்பை எத்தனை நாட்கள் தான் மடியில் சுட்டி பாதுகாக்க முடியும், உண்மை வெளிச்சத்திற்கு வந்தே தீரும், சீனாவிற்கும் திபெத்திற்கும் உள்ள பிரச்சனை அனுமார் வாலில் பற்றிய நெருப்புக்கு சமமானதாகும். சர்வதேச அரங்கில் தாலாய்லாமாவுக்கு உள்ள மதிப்பும் செல்வாக்கும், அமெக்காவின் கருணை பார்வையும் தாலாய்லாமா மீது சமீபத்தில் விழந்து வருவதும் சீனா என்ற வெடிமருந்து பீப்பாயில் வெகு சீக்கிரத்தில் நெருப்பு வைக்கப்பட்டாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

சீனாவில் கீழக்கே உள்ள கடலோர பிரதேசங்கள் மிக செழிப்பானதாகும். அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் மிக உயர்வான நிலையிலேயே இருக்கிறது. ஆனால் மேற்கு கடலோர பகுதிகள் வளமையற்ற, வறண்ட நிலங்களாகும். இங்குள்ள மக்களில் பலர் எல்லோரும் எல்லாமே பெறலாம் என்ற பொதுவுடமை தத்துவம் ஆட்சி செய்யும் நாட்டில் பட்டினியில்; கிடக்கிறார்கள். இப்படி ஒரு பகுதி வளமையும் மறுபகுதி வறுமையும் சூழ்ந்திருப்பது பல பொருளாதார ஏற்றத்தாழ்வையும் மனக்கசப்புகளையும் உள்ளுக்குள் வளர்த்து வருகிறது. தேசத்தின் பருவ நிலைக்கு ஏற்றவாறு தொழில் திட்டங்களை வகுக்காததால் இயற்கை அமைப்பு சீரழித்து பல சுற்றுசூழல் பிரச்சனைகளை சீனா எதிர்நோக்கி உள்ளது வெள்ளபெருக்கு, நில அதிர்வு கடல்மட்டம் உயருதல் போன்ற இயற்கை பேரிடர்களையும் அது சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி நிர்வாகத்தில் சர்வதிகார தன்மை மேலோங்கி நிற்பதால் தீழ்மானிக்கப்பட்ட ராணுவ இலக்குகளை மிக சுலபமாக அந்நாட்டால் எட்டி விட முடியும்.

இந்தியா வரை நீளும் சீன மூக்கு 3
நமது நாட்டிற்குள் உள்ள சவால்கள் நமக்கு நன்றாக தெரியும்.
சுயநலம் இல்லாத அரசியல் தலைவர்கள், தேசபக்தியுள்ள நிர்வாகிகள் அரசியல் விழிப்புணர்சி கொண்ட மக்கள் இந்தியாவில் குறைவு, நாட்டுவலம் கருதி முடிவுகளை எடுப்பதை விட தலைவர்களின் நலன் கருதியே இந்திய முடிவுகள் பல நேரங்களில் அமைந்து விடுகிறது, மிக சமீபத்திய உதாரணங்களை சொல்வதாக இருந்தால் இலங்கை தமிழர் விஷயத்தில் நம் நாடு மேற்கொண்ட முடிவுகளை சொல்லலாம்.

திருமதி. இந்திராகாந்திக்கு பல சுயநல ஆசைகள் உண்டு என்றாலும் கூட இந்தியாவை ஆசிய வல்லரசாக கொண்டு வர வேண்டும் என்ற கனவு இருந்தது, அந்த கணவின் வெளிப்பாடு தான் ஒருங்கிணைந்த பாகிஸ்தானை இரண்டாக பிரித்து பங்களாதேஷ் என்ற தனி நாடை உருவாக்கியது, இந்தியாவின் தென்பகுதியில் இருக்கும் இலங்கையால் வருங்காலத்தில் பிரச்சனைகள் வரும் என்று அவர் தீர்க்கமாக நம்பினார், இதன் அடிப்படை தான் தமிழ் ஈழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு மறைமுகமாகவும், நேர்முகமாகவும் ஆக்கபூர்வமான பல உதவிகளை செய்தார். பல போராளி குழக்கள் இலங்கûயில்இயங்கினாலும், புலிகள் அமைப்பை மட்டும் அவர் தேர்ந்தெடுத்ததிற்கு பல காரணங்கள் உண்டுயென்றாலும் அதில் முக்கியமான காரணம் எம்,ஜி. ஆர் ஆகும். பலவித விமர்சனங்கள் எம்.ஜி.ஆன் அரசியல் வாழ்க்கை பற்றி இருந்தாலும் கூட அவர் மனிதர்களை தரம் பிரிக்கும் விஷயத்தில் மிக கெட்டிக்காரர் என்பதை அவர் எதிரிகள் கூட ஒத்துகொள்வார்கள்.
இந்தியா வரை நீளும் சீன மூக்கு Mgr-veluppillai-prabhakaran
வேலுபிள்ளை பிரபாகரனிடம் உள்ள தலைமை பண்பு, சரியாக திட்டமிடும் இயல்பு, கட்டுகோப்பாக இயக்கத்தை வழி நடத்தும் பாங்கு போன்றவைகள் எம்.ஜி.ஆரின் கவனத்தை கவர்ந்ததன் அடிப்படையில் இந்திரா காந்தியிடம் மிக நல்ல அறிமுகத்தை பிரபாகரன் பெற நேரிட்டது. ராஜீவ்காந்தி கொலை விஷயத்தில் புலிகளை குற்றம் சாட்டாலாம் தவிர மற்றப்படி ஈழ தமிழர்களை பொறுத்தவரை அவர் சரியான முறையிலேயே பல நேரங்களில் நடந்து கொண்டார் எனலாம். ஆனால் வரலாற்று தெளிவும் அரசியல் தெளிவும் அறவே இல்லாத சோனியா காந்தியின் தவறான வழிகாட்டுதல் முலம் இந்திய அரசு இலங்கை பேரினவாத அரசுக்கு உதவி செய்து தமிழர்கள் வாழ்வில் மட்டுமல்ல இந்தியர்கள் வாழ்விலும் பலவிதமான தொல்லைகளை அணுபவிக்க வழி செய்து விட்டது.

சீன பொதுவுடமைவாதிகள் மதங்களின் விரோதிகள் போல காணப்பட்டாலும் கூட அரசியலுக்காக மதத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டார்கள். இலங்கை அரசு, பௌத்த அரசு, சீனமக்களும் பௌத்தத்திற்க்கு விரோதிகள் அல்ல. நீயும் பௌத்தன். நானும் பௌத்தன. இடையில் இந்திய இந்துகளுக்கு என்ன வேலை? உனக்கு துனையாக நான் வருகிறேன் என்று இலங்கையில் வந்து உறுதியாக சீனர்கள் காலூன்றி விட்டார்கள்.

இனி இந்தியாவின் தென்பகுதியில் உள்ள ராணுவ இலக்குகளை மிக சுலபமாக கண்காணிக்கவும் தாக்கவும் சீனாவால் முடியும். அந்நிய நாட்டு ஆக்கிரமிப்புகளை நேராக அனுபவித்து அறியாத தமிழக மக்களும், கேரள மக்களும் அனுபவிக்க போகிறார்கள். இமயம் மலையில்மட்டுமே தான் கேட்ட பீரங்கி முழக்கங்கள் குமரி கடற்கரையிலும் கேட்க போகிறது, எதிர்கால விளைவுகளை தீ்ர்மானிக்கும் திறனற்ற தலைவர்களிடம் பொறுப்பை கொடுத்தால் பிணம் தின்னும் கழகுகள் தான் அமைதி புறாக்களாக வேடமிட்டு அணிவகுக்கும்.
இந்தியா வரை நீளும் சீன மூக்கு 6278669
சீனாவிற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென்றால் ஜவகர்லால் நேருவை போல் காலம் கடந்து முடிவெடுத்து கவலைப்படுவதை விட்டுவிட்டு காலத்தே முடிவெடுக்க வேண்டும் பருவ நிலா காலத்தில் பயிரை போய் காக்காமல் அறுவடைக்கு சென்று பார்த்தால் அழாக்கும் மிஞ்சாது என்பதை நமது தலைவர்கள் உணர வேண்டும். முதல்கட்டமாக திபெத் பற்றி அதாவது அது சீனாவின் ஒருங்கினைந்த பகுதி அல்ல என்பதில் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அருணாச்சல பிரதேசத்தில் உள்ளவர்களுக்கும், காஷ்மீர் பள்ளதாக்கில் உள்ளவர்களுக்கும் வெள்ளை தாளில் சீனா விசா வழகங்குவது போல் திபெத்தில் உள்ள ஜில்ஜியாங் மாகாண மக்களுக்கு நாமும் வெள்ளை தாள் விசா வழங்க வேண்டும் அப்படி செய்தால் தான் அடுத்தவனின் வலி என்னவென்று சீனாவுக்கு புரியும், அதை விட்டுவிட்டு சீன தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதுவது, வேண்டுகோள் வைப்பது, எச்சரிக்கை விடுவது என்று இருந்தால் நிலைமை கெட்டு எல்லாம் கைமீறி விடும்.
இந்தியா வரை நீளும் சீன மூக்கு India-china-flag
பொருளாதார நிலை, தகவல் தொழில் நுட்ப நிலை, எரிசக்தி நிலை போன்வற்றில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றம் நிலையானதாக இரு்க்க இந்திய தேசிய ராணுவம் வலுவுடையதாக இருக்க வேண்டும். நமது ராணுவ பலத்தை கண்டு பக்கத்து நாடுகள் அச்சமடைவது நாகரிகமான செயல் அல்ல. என்று பலர் கருதினாலும் முயல் பேசுகின்ற சமாதானம் காற்றில் கரைந்து விடும். சிங்கம் பேசுகின்ற சமதானமே அம்பலத்தில் ஏறும் என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டு அண்டைநாடுகளுடன் உறவை வலுப்படுத்தவும், அந்நாட்டு மக்களுக்கான நியாமான அரசியல் தீர்வுகளுக்கு துணை நிற்கவும் கற்று கொண்டால் நமது எதிரிளான சிவப்பு சீனாவும், பச்சை பாகிஸ்தானும், நிச்சயம் யோசித்து தொல்லை கொடுப்பதை நிறுத்த முடிவெடுப்பார்கள்.

நன்றி : http://ujiladevi.blogspot.com/2010/07/blog-post_29.html

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 02, 2011 12:53 pm

நிதர்சனமான உண்மை கட்டுரை ..

இலங்கைக்கு சீனா உதவுவதற்கு முக்கிய காரணமே இந்தியாவின் தென்பகுதியில் உள்ள ராணுவ இலக்குகளை மிக சுலபமாக கண்காணிக்கவும் தாக்கவும் இனி சீனாவால் முடியும்.




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக