ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் சேமிப்பில் சம்பாதிக்கும் மோசடி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்

Go down

மக்கள் சேமிப்பில் சம்பாதிக்கும் மோசடி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் Empty மக்கள் சேமிப்பில் சம்பாதிக்கும் மோசடி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்

Post by இளமாறன் Mon Aug 29, 2011 6:27 pm

மக்கள் சேமிப்பில் சம்பாதிக்கும் மோசடி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்

First Published : 29 Aug 2011 02:39:43 AM IST


சென்னை, ஆக. 28: நிலப் பறிப்பு புகார்கள் பற்றி நடவடிக்கை எடுத்து வரும் காவல் துறை, மாதாந்திர வசூல் திட்டம் மூலம் வீட்டுமனை தருவதாகக் கூறி ஏமாற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அடிமாட்டு விலை கொடுத்து மிரட்டி, பிறரின் நிலங்களைப் பறித்துக் கொண்டு மோசடி செய்தனர் என திமுக நிர்வாகிகள் சிலர் இப்போது கைதாகி சிறைகளில் உள்ளனர். இதேபோல், திமுக அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறிக் கொண்டு, மாதாந்திர சீட்டு போல நடத்தி சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மோசடி செய்து வருகின்றன.

மாதம் ரூ.1000 என 40 மாதங்கள் செலுத்தினால் குறிப்பிட்ட இடத்தில் அரை கிரவுண்ட் வீட்டுமனை விற்கப்படும் என்று முதலில் ரியல் எஸ்டேட் நிறுவனம் விளம்பரம் செய்யும். அந்த இடத்துக்கும் அழைத்துச் சென்று காட்டுவார்கள். அது 4 ஆண்டுகளில் அதிக மதிப்பு மிக்கதாக மாறும் வாய்ப்பு இருப்பதாகக் கருதி, மாதம் ரூ.1000 கட்டி வந்தால், 40 மாதங்கள் முடிந்த பிறகு, இப்போது விலை அதிகமாகிவிட்டதால், மேலும் ரூ.25 ஆயிரம் தர வேண்டும் என்று கூறுகின்றனர்.

விலை அதிகமாகும் என்கிற எதிர்பார்ப்பில்தான் நடுத்தர மக்கள் மாதத் தவணை திட்டத்தில் முதலீடு செய்யவே தொடங்குகின்றனர். ஆனால் தற்போதைய விலை மதிப்பு அதிகரித்துவிட்டது என்று கூறி கூடுதல் விலை கேட்பது எந்த வகையில் நியாயம் என முதலீடு செய்தவர்கள் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் கூறுவதில்லை.

மேலும் பத்திரம் பதிவு செய்வதற்கான செலவு என்று ரூ.15 ஆயிரம் வரை கேட்கிறார்கள். ஆனால் ரூ.3,000-க்கு மட்டுமே பத்திரம் வாங்குகின்றனர்.

இவ்வாறு மாதத் தவணை திட்டத்தில் உருவாக்கப்படும் மனைத் திட்டங்களில் 500, 1000 என்ற எண்ணிக்கையில் வீட்டுமனைகள் இருப்பதால் ஒவ்வொரு வீட்டுமனைத் திட்டத்திலும் பல கோடி ரூபாய் லாபம் பார்க்கின்றனர்.

கூடுதல் பணம் கட்ட வசதி இல்லை என்று கூறுவோருக்கு, அவர்கள் கட்டிய பணத்தில் ரூ.5,000 வரை பிடித்துக் கொண்டு மீதியைத் தருவதாகச் சொல்கிறார்கள். நிலத்தின் இப்போதைய மதிப்பு உயர்ந்திருப்பதாகச் சொல்லும் அந்த நிறுவனம் அதற்கேற்ற பணத்தை தருவதில்லை. கட்டிய பணத்துக்கு வட்டிகூட தருவதில்லை. மாறாக, கட்டிய பணத்திலும் பிடித்தம் செய்கிறார்கள்.

காவல் துறையில் புகார் கொடுத்தால், கவலைப்படாதீர்கள், அவர்களை மிரட்டி உங்கள் பணத்தை வாங்கித் தந்துவிடுகிறோம் என்கிறார்கள். முதலீடு செய்தவருக்கு ரூ.40 ஆயிரமும் கிடைத்தாலும்கூட, இப்போதைய சந்தை மதிப்புக்கு விற்பதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு பல மடங்கு அதிக லாபம் கிடைக்கிறது.

இவ்வளவு விவரங்களை காவல் துறை அதிகாரிகளிடம் விளக்கி, எனக்கு இடம்தான் வேண்டும் என வாதாடினால், அதே கிராமத்தில் வேறு பகுதியில் தருகிறோம் என்று சொல்லி ஊருக்கு வெளியே ஓர் இடத்தைத் தருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் பகுதியில் இவ்வாறு மனைகளை விற்ற ஒரு நிறுவனம் முன்னாள் முதல்வரின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் என்று கூறி, மக்களை மிரட்டி, இடங்களைக் கொடுத்து வருகின்றனர்.

இதேபோல சேலம் பகுதியிலும் மாதத் தவணைகள் முடிந்த பிறகும், கூடுதல் பணம் கேட்டு பலருக்கு இடம் பதிவு செய்து தராமல் இழுத்தடிக்கின்றனர்.

மாநிலத்தில் பல பகுதிகளில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இதுபோல மோசடி செய்து, மக்களின் மாத சேமிப்பில் பல கோடி அளவுக்கு சம்பாதிக்கின்றன.

இந்த மோசடிகள் குறித்தும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பிட்ட மாதங்கள் பணம் கட்டிய பிறகு, பத்திரச் செலவுக்கான தொகையைச் செலுத்தியதும் நிலத்தை பதிவு செய்து கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சிறுகச் சிறுக சேமித்த பணத்தை, அரசியல் பின்னணி உள்ள ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்கள் கபளீகரம் செய்தால், அவர்களையும் நில மோசடி வழக்கில் கைது செய்து மக்களுக்கு நிலம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவர்களின் வாழ்நாளில் வீடு கட்டுவதற்கான மனை கிடைத்த மகிழ்ச்சியில் ஆட்சியாளர்களை வாழ்த்துவார்கள் என்பது பணம் கட்டி ஏமாந்தவர்கள் கூறுகின்றனர்.
தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மக்கள் சேமிப்பில் சம்பாதிக்கும் மோசடி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» 1000 கோடி நில மோசடி வழக்கில் கைது ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் பெங்களூர் சிறையில் அடைப்பு
» கோட்டு சூட்டு போட்ட ரியல் எஸ்டேட் அதிபாராயிட்டேன் -
» 90 சதவீதம் இலாபம் சம்பாதிக்கும் பீஸா நிறுவனங்கள் ஓர் அதிர்ச்சி தகவல்
» திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் கோவையில் ஓட ஓட விரட்டிப் படுகொலை
» சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum