புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_m10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10 
41 Posts - 68%
heezulia
தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_m10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_m10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_m10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_m10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10 
206 Posts - 74%
heezulia
தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_m10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_m10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_m10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10 
8 Posts - 3%
prajai
தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_m10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_m10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_m10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_m10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_m10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10 
2 Posts - 1%
sram_1977
தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_m10தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 8:58 am

தொழில், வர்த்தகம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் நல்ல வளர்ச்சி பெற்று, முன்னேறிக் கொண்டிருக்கிறது. எண்ணற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தமது உற்பத்தி தொழிற்சாலையை இங்கு துவங்கியுள்ளன; பல நிறுவனங்கள், தொழில் துவங்கும் முனைப்பில் உள்ளன. இதன் காரணமாக, வேலைவாய்ப்பு அதிகரித்து உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களான பிகார், அசாம், ஒடிசாவிலிருந்து பல லட்சம் பேர் தமிழகத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் இடம்பெயர்ந்துள்ள இவர்கள் சென்னை, திருச்சி, திருவள்ளூர், சேலம், கரூர், நாமக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிகளவில் தங்கியுள்ளனர். சென்னை புறநகரிலுள்ள மிகப்பெரும் தொழிற்சாலைகள், திருவள்ளூரில் இயங்கும் ஸ்டீல் உள்ளிட்ட அதன் சார்புடைய தொழிற்சாலைகள், சேலத்தில் ஸ்டீல் தொழிற்சாலைகள், கரூரில் டெக்ஸ்டைல்ஸ் மில்கள், நாமக்கல்லில் கோழிப் பண்ணைகள், திருப்பூரில் பனியன் நிறுவனங்கள், கோவையில் பவுண்டரி தொழிற்சாலைகள், மில்கள், கட்டட கட்டுமான நிறுவனங்கள், நிலத்தடி கேபிள் பதிக்கும் நிறுவனங்கள் மற்றும் செங்கல் சூளைகளில் பணியாற்றுகின்றனர். பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதால், தாங்கள் பணியாற்றும் தொழிற்சாலையின் அருகிலேயே வாடகை வீடு பிடித்து ஒரே அறையில் நான்கு, ஐந்து நபர்களாக தங்கியுள்ளனர்.

உள்ளூர் குடும்பத்தினருக்கு வீட்டை வாடகைக்கு விட்டால், மாதம் தோறும் அதிகபட்சமாக 1,000 முதல் 1,500 ரூபாய் வாடகை மட்டுமே உரிமையாளருக்கு கிடைக்கிறது. அதேவேளையில், வெளிமாநில இளைஞர்களுக்கு வாடகைக்கு விடுவதன் மூலமாக "தலைக்கு' 750 முதல் 1,000 ரூபாய் வரை கிடைக்கிறது. இதனால், கோவை புறநகர் பகுதிகளில் சிறிய அளவிலான "ஆஸ்பெஸ்டாஸ் கூரை' வேயப்பட்ட அறைகளை கட்டி பலரும் வாடகைக்கு விட்டு அதிக வருவாய் ஈட்டத்துவங்கியுள்ளனர். குடியமர்த்தப்படும் இளைஞர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சொந்த மாநிலத்தில் அந்த நபர்களின் நிரந்தர முகவரி என்ன, சொந்த மாநிலத்தில் குற்றம் புரிந்துவிட்டு கோவைக்கு தப்பி வந்துள்ளனரா என்பது போன்ற கேள்விகளை யாரும் எழுப்புவதில்லை. வாடகை அதிகமாக கிடைக்கிறது என்ற காரணத்துக்காக எவ்விதமான விசாரணையுமின்றி வாடகைக்கு விட்டுவிடுகின்றனர்.

இதன்படி கோவை நகரில் சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி, வேலாண்டிபாளையம், சாயிபாபாகாலனி, செல்வபுரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளிலும், புறநகரில் கோவில்பாளையம், பேரூர், குனியமுத்தூர், சுந்தராபுரம், சிட்கோ, ஈச்சனாரி, மதுக்கரை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், அன்னூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பல ஆயிரம் வெளிமாநில இளைஞர்கள் முகாமிட்டுள்ளனர். மிகச்சிறிய வாடகை அறையில் நான்கு, ஐந்து நபர்களாக தங்கியிருக்கும் இவர்களுக்கு கழிப்பிடம், குடிநீர் வசதி பல இடங்களில் இல்லை. குடிநீர் தேவைக்கு பொதுக்குழாயையே நம்பியுள்ளனர்.

பொதுமக்கள் நடமாடும் வேளையில் பொதுக்குழாயில் அரை நிர்வாண கோலத்தில் நின்று குளிப்பது, அங்கேயே துணி துவைப்பது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதால், உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி பிரச்னைகளும் தலைதூக்கியுள்ளன. சமீபத்தில்,கோவை, சுந்தராபுரம் அடுத்த சிட்கோ அருகிலுள்ள கணேசபுரத்தில் வடமாநில இளைஞர்கள் கும்பல், கும்பலமாக வாடகை வீடுகளில் தங்கியிருந்தனர். இவர்கள், குடிபோதையில் பொதுஇடத்தில் நடத்திய அத்துமீறல்கள் உள்ளூர்வாசிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தின. இந்நிலையில், வீட்டு உரிமையாளரின் 9 வயது பெண் குழந்தையை வடமாநில இளைஞர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், இளைஞர்கள் தங்கியிருந்த வீடுகளில் புகுந்து பொருட்களை சூறையாடினர். மிரண்டுபோன இளைஞர்கள் இரவோடு, இரவாக காலி செய்துவிட்டு தலைமறைவாகினர்; மறுநாள், தாங்கள் பணியாற்றும் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லவில்லை. தொழிற்சாலைகளில் திடீர் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த தொழில்முனைவோர், வெளிமாநில இளைஞர்கள் மீதான தாக்குதலை தடுக்க கோவை கலெக்டரிடம் முறையிட்டனர். அதன்பின் வெளிமாநில இளைஞர்களுக்கு அந்தந்த தொழிற்சாலைகளின் நிர்வாகத்தினரே, பாதுகாப்பான தங்குமிடங்களை ஏற்பாடு செய்துகொடுத்து தீர்வு கண்டனர்.

இதேபோன்ற மற்றொரு பிரச்னை கோவை, பீளமேடு பகுதியிலும் தலைதூக்கியது. தனியார் கட்டட கட்டுமான பணிக்காக அப்பகுதியில் தற்காலிக "ஷெட்' அமைத்து தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் பொது இடங்களில் குளித்து, மலம் கழித்தனர். அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முடிவு செய்தனர். தகவலறிந்த, கட்டுமான நிறுவனத்தினர், தொழிலாளர்களுக்கான கழிவறை உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுத்து பிரச்னையை தீர்த்தனர். மூன்றாவது சம்பவமாக, கோவை நகரில் மேற்குவங்க இளைஞர், வாடகை வீட்டில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். உடன் தங்கியிருந்த வாலிபர்கள் மேற்கு வங்கத்துக்கு தப்பினர். விசாரணைக்குபின் அந்நபர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பூரில் வாடகை வீட்டில் தங்கி 1,000 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட மேற்குவங்க இளைஞர்கள் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

வடமாநில இளைஞர்களை பற்றிய விபரம், அவர்களை குடி வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் தெரிவதில்லை. சிலருக்கு, குடியிருக்கும் நபர்களின் பெயர் கூட தெரியாது. தனது வீட்டில் வசிக்கும் இளைஞர்களின் சொந்த ஊர் எது, இங்கு எந்த நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர், என்ன வேலை செய்கின்றனர் என்ற அடிப்படை தகவல்களைக்கூட அறியாதவர்களாக உள்ளனர். வீட்டு உரிமையாளர்களின் நிலை இப்படி என்றால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களின் நிலை இதைவிட மோசமாக உள்ளது; பெயரைத்தவிர வேறு எந்த வித தகவல்களையும் சேகரித்து வைத்திருப்பதில்லை. இந்நபர்கள் குற்றத்தில் ஈடுபட்டு விட்டு தலைமறைவாகும்போது தான் பிரச்னை பூதாகரமாகிறது. வீட்டு உரிமையாளர், தொழில் நிறுவனங்களில் விசாரிக்கும் போலீசுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

ஏஜன்ட்களுக்கு வருமானமே குறி: கோவையில் கடந்த ஐந்தாண்டுகளில் ரியல் எஸ்டேட் தொழில் அபரிமிதமான வளர்ச்சி பெற்று, கட்டட கட்டுமான பணிகள் அதிகளவில் நடக்கின்றன. கட்டுமான பணியில் உள்ளூரைச் சேர்ந்த தொழிலாளரை ஈடுபடுத்தினால் நாளொன்றுக்கு "மேசனுக்கு' குறைந்தது 450 ரூபாயும், சித்தாளுக்கு 300 ரூபாயும் தர வேண்டும். அதுவே, வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்தினால் 250 ரூபாய் வழங்கினால் போதும். தங்குமிடம், உணவுக்கு ஏற்பாடு செய்துகொடுத்தால் தினமும் 12 மணி நேரம் வரை கூட கடுமையாக உழைக்கின்றனர். திட்டமிட்ட காலத்துக்குள் கட்டட கட்டுமான பணியை முடிக்க முடிகிறது.

அதேபோன்று பவுண்டரி உள்ளிட்ட பல்வேறு வகை தொழிற்சாலைகளிலும் வடமாநிலத்தவரை வேலையில் ஈடுபடுத்துவதையே பலரும் விரும்புகின்றனர். காரணம், நேரம், காலம் பாராத அவர்களின் கடினமான உழைப்பு. இவ்வாறான தொழிலாளர்களை வடமாநிலங்களிலிருந்து ஏஜன்ட்கள் தமிழகத்துக்கு அழைத்து வருகின்றனர். வேலைவாய்ப்பற்ற, வறட்சி பாதித்த மாவட்டங்களிலிருந்து தொழிலாளர்களை திரட்டும் ஏஜன்ட்கள், முன்பணம் கொடுத்து தமிழகத்துக்கு அழைத்து வருகின்றனர்.தமிழகத்துக்கு அழைத்துவரப்படும் நபர்களிடம், சொந்த மாநிலத்தில் வசித்ததற்கான நிரந்தர முகவரி ஆவணம் ஏதும் இருப்பதில்லை; அதற்கான ஆவணங்களை கேட்டுப்பெற வேலை அளிப்போரும் முயற்சிப்பதில்லை. இது, பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. ஒரு நபர் இங்கு ஏதாவது பிரச்னையில் சிக்கினாலோ அல்லது வழக்கில் போலீசார் தேடினாலோ சொந்த மாநிலத்துக்கு பறந்துவிடுகின்றனர்; அவர்களின் பதுங்குமிடத்தை போலீசாரால் அவ்வளவு எளிதாக நெருங்க முடிவதில்லை.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வால்பாறை, நீலகிரி தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதாக கூறப்படுகிறது. இவர்களில் சிலர், ஆயுதம் தாங்கிய பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் தப்பி தமிழகம் வந்து வேறு பெயர்களில் பதுங்கியிருப்பதாகவும் போலீசாருக்கு உளவுத்தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, சமீபத்தில் நீலகிரி எஸ்டேட்களில் சோதனை நடத்திய போலீசார், தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். நக்சல்கள் ஊடுருவல் தொடர்பான எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லை. சில மாதங்களுக்குமுன் ஒசூரிலுள்ள "சிப்காட்' தொழிற்சாலைகள் வளாகத்தில் பணியாற்றி வந்த வட மாநில பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய நபரை, கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்தனர்.

வங்கதேசத்தினர் ஊடுருவல்?: கோவை நகரிலுள்ள 25 ஆயிரம் தங்க நகைப்பட்டறைகளில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களில், ஏறத்தாழ 6,000 பேர் மேற்குவங்க மாநிலத்தவர்கள். மேற்கு வங்கத்தினர் போர்வையில் வங்க தேசத்தினரும் ஊடுருவி பட்டறைகளில் பணியாற்றுவதாக பல ஆண்டுகளாகவே, இந்து அமைப்பினர் புகார் கூறி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததும் விழித்துக்கொண்ட போலீசார் கணக்கெடுப்பில் இறங்கினர்.நகைப்பட்டறை உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை நடத்திய போலீஸ் உயரதிகாரிகள், பட்டறை தொழிலாளர்களின் பெயர், சொந்த மாநிலம், அங்குள்ள நிரந்தர முகவரி, அதை நிரூபிப்பதற்கான வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணத்தின் நகலை தங்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தினர். இதன்படி, பல ஆயிரம் தொழிலாளர் பட்டியல் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.

"சுவாமி விவேகானந்தா கல்ச்சுரல் அசோசியேஷன்' துணைத்தலைவரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவருமான சுப்ரத்தோர் பாரிக் கூறுகையில், ""எமது சங்கத்தில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 80 பட்டறை உரிமையாளர்கள் உறுப்பினராக உள்ளனர்; எங்களது பட்டறைகளில் நூற்றுக்கணக்கான மேற்கு வங்கத்தினரும் பணியாற்றுகின்றனர். பத்து, 15 ஆண்டுகளுக்கு முன்பே கோவைக்கு வந்து குடும்பத்துடன் வசிக்கும் எங்களில் பெரும்பாலானோர் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளோம். எமது அமைப்பு தவிர, "பெங்காலி வொர்க்கர்ஸ் அசோசியேஷன்' உள்ளிட்ட அமைப்புகளும் செயல்படுகின்றன. மேற்கு வங்கத்தினர் என்ற பெயரில் வங்கதேசத்தினர் ஊடுருவியிருப்பதாக கூறப்படுவது தொடர்பாக போலீசார் முன்பே விசாரணை நடத்தினர்; எங்களை அழைத்து கைரேகை எடுத்து விபரங்களையும் பெற்றனர். தற்போது, அதுபோன்ற பிரச்னைகள் எதுவும் இல்லை,'' என்றார்.

"நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லை':மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., வன்னியபெருமாள் கூறியதாவது:திருப்பூர் பனியன் கம்பெனிகள் மற்றும் அவற்றை சார்ந்துள்ள நிறுவனங்களில் வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றுகின்றனர். இவர்களை பற்றிய விபரங்களையும், முகவரி ஆவணங்களையும் போலீசாரிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியும், பலரும் ஒத்துழைக்கவில்லை. விபரம் அளிப்பதில் நிலவும் ஏதோ சில பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது. தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களை பற்றிய விபரங்களை ஏதோ ஒரு காரணத்தால் போலீசுக்கு அளிக்க தயங்குகின்றனர். இருப்பினும், தகவல் திரட்டுவதற்கான முயற்சியை நாங்கள் கைவிட்டு விடவில்லை.சமீபத்தில், திருப்பூரில் தங்கியிருந்த பிகார் வாலிபர் களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டார். உடனிருந்த நபர்களை பற்றிய விபரம் இல்லாததால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

சத்தியமங்கலம் பகுதி பெட்ரோல் பங்க்கில் நடந்த கொள்ளை முயற்சியில் வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2008ல் ஒசூரில் வடமாநிலத்தவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். உடனிருந்த நபர் தப்பி ஓடிவிட்டார்; இதுவரை பிடிபடவில்லை. தமிழகத்தில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் குறித்த பட்டியல் இந்த நபர்களை பணியிலும் ஈடுபடுத்தும் நிறுவனங்களிடம் கூட இல்லாதது பாதுகாப்புக்கு விடப்பட்டிருக்கும் சவாலாக விளங்குகிறது. இப்பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும். இவ்வாறு, ஐ.ஜி., தெரிவித்தார்.

ஆவணப்படுத்தும் பணி தீவிரம் : கோவை போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி கூறியதாவது:உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, பிகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கோவையில் அதிகளவில் தங்கியுள்ளனர். இவர்களது போட்டோ, சொந்த மாநிலத்திலுள்ள நிரந்தர முகவரியை உறுதிப்படுத்தும் வகையிலான ஏதாவது ஒரு அடையாள அட்டையின் நகல், மொபைல் போன் நம்பர் உள்ளிட்ட விபரங்களை, வேலை அளிக்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் கான்ட்ராக்டர்கள் வாயிலாக சேகரித்து வருகிறோம். அனைத்து விபரங்களும் திரட்டப்பட்டபின், போலீஸ் அலுவலக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு தகவல்கள் ஆவணப்படுத்தப்படும். மேற்கண்ட நபர்களால் குற்ற சம்பவம் நிகழும்பட்சத்தில், மின்னணு ஆவணங்கள் ஆராயப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவர்.

வெளிமாநிலத்தைச் சேர்ந்த உடலுழைப்பு தொழிலாளர்கள் பெரும்பாலும் குழு, குழுவாகவே கோவை நகரில் தங்கியுள்ளனர். இவர்கள் எந்த பகுதியில் தற்காலிக முகாமில் தங்கியிருக்கிறார்களோ, அந்தப் பகுதிக்குரிய போலீஸ் இன்ஸ்பெக்டர் அவ்வப்போது நேரில் சென்று, புதிய நபர்கள் வந்திருக்கிறார்களா என ஆய்வு செய்வார். அவ்வாறு, தங்கியிருந்தால் அந்நபர்களை பற்றிய விபரங்களையும் சேகரிப்பார். வெளிமாநில நபர்களை பற்றிய தகவல் சேகரிப்பு மற்றும் கம்ப்யூட்டர் ஆவணமாக்கும் பணி 15 நாட்களில் நிறைவு பெறும்.இவ்வாறு, அமரேஷ் புஜாரி தெரிவித்தார்.

" அரசு உஷாராக வேண்டும்':ஓய்வு பெற்ற, மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வெளிமாநிலத்தவர் வேலை தேடி தமிழகத்துக்கு வருவதை யாரும் குறை கூறவோ அல்லது எதிர்க்கவோ முடியாது. இந்திய குடிமகனான ஒருவர், நாடு முழுவதும் தங்குதடையின்றி சுதந்திரமாக உலாவும் உரிமையை பெற்றிருக்கிறார். அதேவேளையில் ஆயிரம், இரண்டாயிரம் பேராக தினமும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றோர் மாநிலத்துக்கு இடம் பெயரும்போது சமூக, பொருளாதாரம் மற்றும் கலாசாரம் சார்ந்த பிரச்னைகள், சட்டம் - ஒழுங்கு சார்ந்த விளைவுகள் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. 100, 200 தொழிலாளர்களை ஏஜன்ட் மூலமாக தமிழகத்துக்கு வரவழைத்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்து வேலை வாங்கும் தனியார் நிறுவனங்கள், அந்நபர்களின் முழு விபரத்தையும் ஆவணமாக பரமாரிப்பது அவசியம்; விசாரணைக்காக போலீஸ் கேட்கும் போது ஒப்படைக்க வேண்டும். இது, இடம்பெயர்ந்து வந்துள்ளோருக்கும் பாதுகாப்பானது. குடும்ப உறுப்பினர் காணாமல் போகும்போது, அடையாளம் கண்டுபிடித்து மீட்க போலீசுக்கு உதவும். தவிர, குற்றத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடும் நபர்களையும் விரைந்து பிடிக்க முடியும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மாநிலம் முழுவதும் சீரிய முறையில் அமல்படுத்தினால், தமிழகத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் பலப்படுத்த முடியும். இவ்வாறு, முன்னாள் உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தினருக்கு கிராக்கி ஏன்?கோயமுத்தூர் நகை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முத்துவெங்கட்ராம் கூறியதாவது:மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் நெக்லஸ், கொடி, ஆரம் போன்ற ஆபரணங்களை தயாரிக்கும் ஆற்றல் பெற்றவர்கள், மேற்குவங்கத் தொழிலாளர்கள்.அதனால், அவர்களின் தொழில் திறனுக்கு கோவை பட்டறைகளில் நல்ல வரவேற்புள்ளது. மேற்கு வங்கத்தினர் தவிர, தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தினரும் கோவை நகரிலுள்ள பட்டறைகளில் பணியாற்றுகின்றனர். இங்குள்ளவர்கள், மிகக்குறைந்த எடையிலான தங்கத்தில், பெரிய தோற்றம் கொண்ட நகைகளை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்கள். இதன்காரணமாகவே, நுணுக்கமான தங்க வேலைகளுக்கு மேற்கு வங்கத்தினரையே நகை தயாரிப்பாளர்கள் நாடுகின்றனர். வெளிமாநிலத்தினரை பணியமர்த்தும் பட்டறை உரிமையாளர்கள், பணியமர்த்தப்படும் நபரின் அனைத்து விபரங்களையும் சேகரித்து வைத்திருக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, முத்துவெங்கட்ராம் தெரிவித்தார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 9:01 am

வேற்று மாநில மக்களுக்கு உழைக்க மனம் இருக்கிறது அவர்கள் ஊர் விட்டு ஊர் வந்து உழைகிறார்கள். எங்கள் தமிழக மக்களுக்கு, சமசீர் போராட்ட்டம், ராஜீவ் கொலையாளிகளுக்கு விடுதலை, ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு, அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் அதரவு, ரஜினி குணமாக பழனி பாதயாத்திரை இந்த மாதிரி மூச்சை முட்டும் அளவுக்கு போரட்டங்கள் இருக்கிறது. மேலும் வேலை செய்து பிழக்க வேண்டும் என்கிற தலை எழுத்து இல்லையே?

இங்க தான் எல்லாமே 'இலவசமாக' கிடைக்கிறதே, 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு 100 நாள் வேலை செய்து விட்டு பாக்கி நாளை இலவசத்தை வைத்துக்கொண்டு ஓட்டலாமே ? கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 29, 2011 10:27 am

krishnaamma wrote:வேற்று மாநில மக்களுக்கு உழைக்க மனம் இருக்கிறது அவர்கள் ஊர் விட்டு ஊர் வந்து உழைகிறார்கள். எங்கள் தமிழக மக்களுக்கு, சமசீர் போராட்ட்டம், ராஜீவ் கொலையாளிகளுக்கு விடுதலை, ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு, அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் அதரவு, ரஜினி குணமாக பழனி பாதயாத்திரை இந்த மாதிரி மூச்சை முட்டும் அளவுக்கு போரட்டங்கள் இருக்கிறது. மேலும் வேலை செய்து பிழக்க வேண்டும் என்கிற தலை எழுத்து இல்லையே?

இங்க தான் எல்லாமே 'இலவசமாக' கிடைக்கிறதே, 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு 100 நாள் வேலை செய்து விட்டு பாக்கி நாளை இலவசத்தை வைத்துக்கொண்டு ஓட்டலாமே ? தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? 44296

யார் சொன்னது தமிழர்களுக்கு உழைக்க மனம் இல்லை என்று , நல்ல வேடிக்கை இது.......

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 10:32 am

ராஜா wrote:
krishnaamma wrote:வேற்று மாநில மக்களுக்கு உழைக்க மனம் இருக்கிறது அவர்கள் ஊர் விட்டு ஊர் வந்து உழைகிறார்கள். எங்கள் தமிழக மக்களுக்கு, சமசீர் போராட்ட்டம், ராஜீவ் கொலையாளிகளுக்கு விடுதலை, ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு, அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் அதரவு, ரஜினி குணமாக பழனி பாதயாத்திரை இந்த மாதிரி மூச்சை முட்டும் அளவுக்கு போரட்டங்கள் இருக்கிறது. மேலும் வேலை செய்து பிழக்க வேண்டும் என்கிற தலை எழுத்து இல்லையே?

இங்க தான் எல்லாமே 'இலவசமாக' கிடைக்கிறதே, 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு 100 நாள் வேலை செய்து விட்டு பாக்கி நாளை இலவசத்தை வைத்துக்கொண்டு ஓட்டலாமே ? தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? 44296

யார் சொன்னது தமிழர்களுக்கு உழைக்க மனம் இல்லை என்று , நல்ல வேடிக்கை இது.......

உழைக்க மனம் உள்ள தமிழர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்குமற்றும் வெளி மாநிலங்களுக்கு பிழப்பு தேடி போயிட்டாங்க ராஜா, இப்ப இலவசத்துக்கு அடிமையானவங்க தான் பெரும்பாலும், அங்க இருக்காங்க சோகம் சோகமான உண்மை இது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Aug 29, 2011 1:36 pm

krishnaamma wrote:வேற்று மாநில மக்களுக்கு உழைக்க மனம் இருக்கிறது அவர்கள் ஊர் விட்டு ஊர் வந்து உழைகிறார்கள். எங்கள் தமிழக மக்களுக்கு, சமசீர் போராட்ட்டம், ராஜீவ் கொலையாளிகளுக்கு விடுதலை, ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு, அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் அதரவு, ரஜினி குணமாக பழனி பாதயாத்திரை இந்த மாதிரி மூச்சை முட்டும் அளவுக்கு போரட்டங்கள் இருக்கிறது. மேலும் வேலை செய்து பிழக்க வேண்டும் என்கிற தலை எழுத்து இல்லையே?

இங்க தான் எல்லாமே 'இலவசமாக' கிடைக்கிறதே, 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு 100 நாள் வேலை செய்து விட்டு பாக்கி நாளை இலவசத்தை வைத்துக்கொண்டு ஓட்டலாமே ? கோபம்
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
உண்மைதான் இங்க இருக்கும் தமிழர்கள் வேலை பார்க்க கிளம்பிட்டா யார் இந்த போராட்டங்களை எல்லாம் எடுத்து நடத்துவது



தமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Uதமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Dதமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Aதமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Yதமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Aதமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Sதமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Uதமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Dதமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? Hதமிழகத்துக்கு வடமாநிலத்தவரால் அச்சுறுத்தல்? A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 7:05 pm

நன்றி சுதா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக