ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களே

2 posters

Go down

மக்களே  Empty மக்களே

Post by கண்ணன்3536 Sun Aug 28, 2011 9:21 am

தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்ற முயற்சி
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 ஆகஸ்ட், 2011 - 18:01 ஜிஎம்டி

விசாரணையின் போது நளினி மற்றும் முருகன்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை காப்பாற்ற சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடி வரும் வழக்கறிஞர் புகழேந்தி, இந்த தண்டனைக்கு எதிரான தடைக் கோரிக்கை மனுவுடன் ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்தும் திங்கட் கிழமையன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்புடைய விடயங்கள்
ராகுல் காந்தி, சோனியா காந்தி, மனித உரிமை, காங்கிரஸ், விடுதலைப் புலிகள்
இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மூவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை நிறுத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹரித்ரா முருகன்

மாற்று மீடியா வடிவில் இயக்க
இந்நிலையில், தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள முருகன் மற்றும் இந்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்று பின்னர் தண்டனைக் குறைப்பினால் ஆயுட் தண்டனை பெற்ற நளினி தம்பதிகளுக்கு சிறையில் பிறந்த மகள் ஹரித்ரா முருகன், இந்த தண்டனையை குறைக்க வேண்டும் என்று மனுச் செய்துள்ளார்.
தனது தந்தையை விடுவிக்காவிட்டாலும் அவரின் தண்டனையை ஆயுட் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
தற்போது லண்டனில் மருத்துவப் படிப்புக்காக தயாராகிக் கொண்டிருக்கும் ஹரித்ரா முருகன், தனது பெற்றோருடன் கடிதம் மூலமாகவே தொடர்புகளை பல ஆண்டுகளாக பேணி வந்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது பெற்றோரை பார்க்கவில்லை என்றும் தற்போது இந்தியா செல்ல வீசா அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்
http://www.bbc.co.uk/tamil/india/2011/08/110827_deathlegalaction.shtml
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

மக்களே  Empty Re: மக்களே

Post by கண்ணன்3536 Sun Aug 28, 2011 9:40 am

“ராஜிவ் கொலை கேஸ் தடயங்களில், ‘பொட்டு’ வந்தது எப்படி?”

Viruvirupu, Sunday 28 August 2011, 03:58 GMT
சென்னை, இந்தியா: “ராஜிவ் காந்தி கொலைவழக்கில், புலனாய்வாளர்கள் செய்த குளறுபடிகள்தான், தற்போது மூன்றுபேரை தூக்குத் தண்டனைவரை கொண்டு வந்துள்ளது” என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார் திருச்சி வேலுசாமி. நிஜமான குற்றவாளிகளை விட்டுவிட்டு இவர்களைத் தண்டிக்கிறார்கள் என்பது இவரது கோணம்.

ராஜிவ் காந்தி கொலை விவகாரத்தில், நீண்டகாலமாகக் குரல்கொடுத்துவரும் வேலுசாமி, ராஜிவ் கொலை பற்றிய விசாரணை கமிஷனால் 7 தடவைகள் விசாரிக்கப்பட்டவர். ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் மேற்கொண்ட சில நடவடிக்கைகளுக்கு, இவரின் வாக்குமூலமே காரணமாக அமைந்திருந்த அளவுக்கு, இவர் முக்கியமானவர்.

ராஜிவ் கொலை விசாரணைகளின்போது, இவர் வழங்கிய சில உறுதியான வாக்குமூலங்கள், உண்மையில் ராஜிவ் கொலை வழக்கையே திசை திருப்பியிருக்க முடியும். ஆனால் ‘ஏதோ காரணங்களுக்காக’ அப்படி நடைபெறவில்லை. அதற்குக் காரணம், இவரது வாக்குமூலங்களில் பல வி.வி.ஐ.பி.களின் பெயர்கள் இருந்தன என்பதாக இருக்கலாம்.

ராஜிவ் கொலை விசாரணைகளின்போது, புலனாய்வாளர்கள் கேஸை தாம் விரும்பிய ஒரு திசையின் செலுத்திச் சென்றார்கள் என்று கூறும், திருச்சி வேலுசாமி, “பேரறிவாளன், திராவிடர் கழகத்தில் இருந்தவர். ராஜிவ் காந்தியைக் கொன்ற பெல்ட் பாம் தயாரிக்க பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் கைதுக்குக் காரணம் சொல்கிறார்கள் அதிகாரிகள். பெங்களூரு ரெங்கநாத் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில், “அதே பெல்ட் பாமை யாகத்தில் வைத்து சந்திரா சாமி ஆசீர்வதித்தார்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால், புலனாய்வாளர்கள் சந்திரா சாமியை இதுபற்றி விசாரித்ததில்லை. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நேரத்தில் சந்திரா சாமி எங்கே இருந்தார் என்ற கேள்விக்கு, இன்றுவரை யாரிடமும் பதில் இல்லை.

தற்போது தூக்குத் தண்டனை பெற்றுள்ள சாந்தன், ஆள்மாறாட்டத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். ‘திருச்சி சாந்தன்’ என்பவர் மீதான குற்றச்சாட்டுகளை, இந்த சாந்தன்மீது சுமத்தி, இவரைச் சிக்க வைத்துள்ளார்கள். நளினியின் கணவர் என்ற ஒரே காரணத்தால், முருகன் அகப்பட்டுக் கொண்டார்” என்கிறார்.

(எமது குறிப்பு: வேலுசாமி குறிப்பிடும் ‘திருச்சி சாந்தன்’ என்பவர், 1980களின் மத்தியில் விடுதலைப்புலிகள் வட்டாரங்களில் ‘குண்டு சாந்தன்’ என்று அறியப்பட்டவர். ஸ்ரீலங்காவில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், அரசியல் வேலைகள் செய்வதற்காக தமிழகம் அனுப்பப்பட்டவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவைச் சேர்ந்த நபர்.

ராஜிவ் கொலை புலனாய்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஸ்பெஷல் டீம் ஒன்று இவரை தமிழகம் முழுவதும் வலை வீசித் தேடியது நிஜம். அவர்களது கையில் சிக்குமுன் இவர் இறந்து போனதும் நிஜம். இந்த சம்பவங்கள் பல பெரிய மர்ம முடிச்சுக்களை உடையவை. விறுவிறுப்பு.காம் தொடராக வெளியிடும் ‘ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை’ தொடரில் இனி வரவுள்ள சில அத்தியாயங்களில், திருச்சி சாந்தன் அல்லது குண்டு சாந்தன் பற்றிய பல விபரங்களைக் காணலாம்)

ராஜிவ் காந்தி கொலைவழக்கில், புலனாய்வாளர்கள் செய்த குளறுபடிகள் பற்றி வேலுசாமி குறிப்பிடும் மற்றொரு விஷயம், ராஜிவ் காந்தியைக் கொலை செய்ததாக விசாரணைகளில் குறிப்பிடப்பட்ட மனித வெடிகுண்டு தனு இறந்த நிலையில் எடுக்கப்பட்ட போட்டோவில், அவரது நெற்றியில் இருந்த பொட்டு பற்றியது.

இதுபற்றி வேலுசாமி, “ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காட்டியதே சில போட்டோக்கள்தான். இந்த போட்டோக்கள், ராஜிவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு செய்யப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன், ஹரிபாபு என்ற போட்டோகிராபரால் எடுக்கப்பட்டவை. ராஜிவ் கொல்லப்பட்ட குண்டு வெடிப்பின்போது இந்த ஹரிபாபுவும் கொல்லப்பட்டார். (அதுபற்றிப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

இந்த போட்டோக்களை வைத்துதான், சிவராசன், தனு, மற்றும் கொலை நடைபெற்ற நேரத்தில் அங்கிருந்த மற்றையவர்களின் முகங்கள் அடையாளம் காணப்பட்டன. அந்த போட்டோக்களில், தனுவின் நெற்றியில் பொட்டு கிடையாது. ஆனால், குண்டு வெடிப்பின்பின் இறந்த நிலையில் காணப்பட்ட தனுவின் நெற்றியில் குங்குமப் பொட்டு இருந்தது. அது எப்படி?

‘ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர் ஒரு இந்து, தமிழ்ப் பெண்’ என்று வெளியே காட்டுவதற்காகவே நடந்த சதிதான் அது. இப்படித்தான் புலனாய்வு செய்வதா? பிணத்தின் நெற்றியில் பொட்டு வைத்த இவர்கள், இன்னும் என்னவெல்லாம் செய்து இருப்பார்களோ?” என்று கூறுகின்றார்.

(மற்றொரு குறிப்பு: எமது தொடரில் இடம்பெறுவதாக நாம் குறிப்பிட்ட குண்டு சாந்தன், புலிகளின் அரசியல் பிரிவு நபர். ஆனால், ராஜிவ் கொலையில் சம்மந்தப்பட்டது புலிகளின் உளவுப் பிரிவு என்கிறது கார்த்திகேயன் தலைமையிலான புலனாய்வு குழுவின் அறிக்கை. பிரதான குற்றவாளிகள் பட்டியலில், புலிகளின் உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மானை புலனாய்வுக் குழு இணைத்ததும் அதை வைத்துத்தான்.

குண்டு சாந்தனும், ‘ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை’ அத்தியாயம் 4ல் குறிப்பிடப்பட்ட ஹரிபாபுவும், அரசியல் பிரிவோடு சம்மந்தப்பட்ட ஆட்கள்.

ராஜிவ் கொலை திட்டமிடல் தமிழகத்தில் புலிகளின் உளவுப் பிரிவால் செய்யப்படும் விஷயம், தமிழகத்தில் அப்போது இயங்கிவந்த புலிகளின் அரசியல் பிரிவுக்குகூட தெரியாது என்பதும், கார்த்திகேயனின் புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியிருக்கையில், கொலை நடப்பதற்குமுன், திட்டமிடல் பற்றியே தெரியாது என்று குறிப்பிடப்பட்ட குண்டு சாந்தனுடன் ஆள்மாறாட்டத்தில் கிளாஷ் ஆன மற்றைய சாந்தனுக்கு தற்போது, தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது!)

இந்த கொலை விவகாரத்தில், அப்போதைய சட்ட அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமிக்கும் பங்கு இருப்பதாகக் கூறுகிறார் வேலுசாமி. “மே 21-ம் தேதி இரவு ராஜீவ் கொலை நடந்தது. அடுத்த நாள் காலை 9 மணிக்குத்தான் விசாரணை தொடங்கியது. ஆனால், விசாரணை தொடங்கும் முன்னரே, ‘ராஜீவைக் கொன்றது புலிகள்தான்’ என்று சுப்பிரமணியன் சுவாமி அறிவித்தது எப்படி?” என்றும் கேட்கிறார் வேலுசாமி.

திருச்சி வேலுசாமியின் கேள்விகள் ஒருபுறம் இருக்க, உண்மையில் ராஜிவ் காந்தி கொலை விசாரணை இத்தனை வருடமாகியும், இன்னமும் முடிவடையவில்லை. பல கேள்விகளுக்கு இன்னமும் தெளிவான பதில் கிடையாது. நாளைக்கே இந்த விசாரணையைத் தொடரும் முடிவு எடுக்கப்பட்டால், என்னாகும்? தற்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரில் ஒருவரது சாட்சியம் அப்போது தேவைப்பட்டால் என்னாகும்?

இந்த மூவரின் தூக்குத் தண்டனைகளும் செப்டெம்பர் 9ம் தேதி நிறைவேற்றப்பட்டு விட்டால், பிற்காலத்தில் ஒருவேளை அவர்களது சாட்சியம் தேவைப்பட்டால், அவர்களை எப்படிக் கொண்டுவர முடியும்?

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

மக்களே  Empty [solved]“ராஜிவ் கொலை கேஸ் தடயங்களில், ‘பொட்டு’ வந்தது எப்படி?” தூக்குதண்டனை பெற்றவர்களை காப்பாற்ற, இதைப் படியுங்கள்!

Post by sabesan37 Sun Aug 28, 2011 10:04 am

“ராஜிவ் கொலை கேஸ் தடயங்களில், ‘பொட்டு’ வந்தது எப்படி?”

------------------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.கொம், Sunday 28 August 2011, 03:58 ஜி‌எம்‌டி

• ராஜிவ் கொலை வழக்கில் மூவருக்கு தூக்கு தண்டனை கொடுப்பது நியாயமற்றது என்று நீங்கள் கருதினால், இந்தக் கட்டுரையை இயன்றவரை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி வையுங்கள். இது பற்றிய ஒரு தெளிவு, பலரைச் சென்றடைய உதவுங்கள்.

நன்றி: விறுவிறுப்பு.காம்
http://viruvirupu.com/2011/08/28/8094/

Last edited by sabesan37 on Sun Aug 28, 2011 10:09 am; edited 1 time in total (Reason for editing : தலைப்பு)
sabesan37
sabesan37
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011

Back to top Go down

மக்களே  Empty Re: மக்களே

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum