ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகத் தகவல்கள்

2 posters

Go down

ஆன்மீகத் தகவல்கள் Empty ஆன்மீகத் தகவல்கள்

Post by Admin Sun Aug 28, 2011 8:16 am

இறைவனை வழிபட கோவிலுக்கு செல்ல வேண்டுமா?


இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தாலும் வெயிலில் ஒரு காகிதத்தையோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது நன்றாகக் காயுமே அன்றி தீப்பற்றாது.

அதே வெயிலில் ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் காகிதம் அல்லது பஞ்சு தீப்பற்றி எரியும். அதாவது, எங்கும் பரந்துள்ள சூரிய ஒளிக்கதிர்களை சூரியகாந்தக் கண்ணாடியானது சேர்த்து ஒன்றாக்கி அனுப்புவது போல, எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இறையருளானது மந்திர, யந்திர சக்திகளினால் ஒன்றாக திரட்டி ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ளது.

அதனால் ஆலயங்களில் சென்று இறைவனை வணங்கும் பொழுது நாம் செய்த ஊழ்வினைகள் யாவும் வெதும்பி, அவற்றின் வேகம் குறைந்து போய்விடும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீகத் தகவல்கள் Empty Re: ஆன்மீகத் தகவல்கள்

Post by Admin Sun Aug 28, 2011 8:16 am

திருமண வரம் தரும் விநாயகர்

முன்னொரு காலத்தில் வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சேர்ந்து சிவபெருமானிடம் வந்து முறையிட்டனர்.

அவரோ ஸ்ரீபாலமுருகனைப் போருக்கு அனுப்பினார். அரக்கியைக் கண்டு பயப்படுவதுபோல் நடித்த பாலமுருகன், அண்ணனை அனுப்பி வைத்தார். தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை.

அவளை அப்படியே துதிக்கையால் தூக்கி, தனது மடியில் அமர்த்திக்கொண்டார் கணபதி. மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று அறிந்திருந்த வல்லபை, அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள். ஸ்ரீவிநாயகரையே மணம் புரிந்தாள்.

இந்த புராண வரலாற்றின்படி அமைந்த கோவில்தான் தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் கோவில்.

திருமணமாகாத பெண்கள் இங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு, விநாயகரைத் தரிசித்து, மாங்கல்யச்சரடு பெற்றுக்கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோவிலில் விநாயகருக்குள் (மூலவர்) வல்லபா தேவி ஐக்கியமாகி, அரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீகத் தகவல்கள் Empty Re: ஆன்மீகத் தகவல்கள்

Post by Admin Sun Aug 28, 2011 8:17 am

மீண்டும் பிறவா வரம் தரும் `மணித்துளி தரிசனம்'

மகாவிஷ்ணுவின் இருப்பிடம் வைகுண்டம். சிவபெருமானுக்குரியது கயிலாயம். பக்தர்கள் பிறவாநிலை (மோட்சம்) கிடைக்க, இந்த இரு உலகங்களிலும் இடம் கேட்டு சுவாமியை வணங்குகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி கோவிலில் சுவாமியே, வைகுண்டநாதராக அருளுவதால், இங்கு வேண்டிக்கொள்பவர்களுக்கு வைகுண்டத்தில் இடம் கிடைப்பதாக நம்பிக்கை.

இதுதவிர, இந்த ஊரிலேயே கயிலாசநாதர் (நவகைலாய தலம்) கோவிலும் உள்ளது. இந்தக் கோவிலில் வேண்டிக்கொள்பவர்களுக்கு கயிலாயத்தில் இடம் கிடைக்கும் என்கிறார்கள்.

இவ்வாறு, ஒரே ஊரில் வைகுண்டம், கயிலாயம் என இரண்டையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.

இங்குள்ள வைகுண்டநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறும் மணித்துளி தரிசனம் சிறப்புமிக்கது.

அதாவது, வைகுண்ட ஏகாதசியன்று உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு செல்வர். இவ்வேளையில் சன்னதியை அடைத்துவிடுவர். பின் சிறிது நேரத்திற்குள் நடை திறந்து, சுவாமிக்கு தீபாராதனை காட்டி உடனே அடைத்து விடுவர்.

ஒருசில மணித்துளிகளுக்குள் இந்த வைபவம் நடந்து முடிந்து விடும். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால் பிறப்பில்லா நிலை கிடைப்பதாக நம்பிக்கை.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீகத் தகவல்கள் Empty Re: ஆன்மீகத் தகவல்கள்

Post by Admin Sun Aug 28, 2011 8:17 am

உருவ வழிபாடு ஏன்?

இறைவன் உருவம் இல்லாதவர் என்றாலும் நாம் அவரை நினைப்பதற்காகவும் வணங்குவதற்காகவும் உருவ வடிவங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. யோகிகள், ஞானிகள் அல்லாத சாதாரண மனிதர்கள் மத்தியில், அவர்கள் மனங்களில் இறைவனை நிறுத்துவதற்கு உருவ வழிபாடு இன்றியமையாததாக கருதப்படுகிறது.

இப்படி உருவான உருவங்கள் இறைவனின் தன்மைகளைக் குறிப்பவையாக அமைவதால் ஆரம்பத்தில் இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள உருவ வழிபாடு முக்கியமானதாகிறது.

அப்படியென்றால், இறைவனை வெவ்வேறு உருவங்களில் தரிசிக்க காரணம் என்ன?

இறைவன் ஒருவரே தான். அவர், வடிவம் உள்ளிட்டவைகளுக்கு அப்பாற்பட்டவராயினும், சக்தியினால் பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத் தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம்.

இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக குறிப்பிடுகிறார். `தங்கம் ஒன்று தான் என்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது அல்லவா?' என்று கேட்கிறார் வாரியார்.

கோவிலின் உள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுழைவாயில்களில் துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி நிற்கின்றார்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீகத் தகவல்கள் Empty Re: ஆன்மீகத் தகவல்கள்

Post by Admin Sun Aug 28, 2011 8:18 am

பக்தர்கள் செல்ல முடியாத கோபுர வாசல்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படைவீடான திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.

அந்த வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

நன்றி: தினதந்தி
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீகத் தகவல்கள் Empty Re: ஆன்மீகத் தகவல்கள்

Post by kitcha Sun Aug 28, 2011 9:31 am

திருச்செந்தூர் சிறப்புகள்

•இந்தக் கோவிலில் பன்னீர் இலையில் விபூதி வழங்கப்படுகிறது. சூரபத்மனை வதம் செய்த பின்பு தம்மை சூழ்ந்து நின்ற பரிவாரங்களுக்கு சுப்ரமணிய சுவாமி தன் பன்னிரு கைகளாலேயே விபூதி பிரசாதம் வழங்கினார். பன்னிரு கைகளின் நிலைதான் பன்னீர் இலைகள். இந்த இலை விபூதிகளின் மகத்துவம் குறித்து ஆதிசங்கரரின் புஜங்க ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.

•விஸ்வாமித்ர முனிவரும், ஆதிசங்கரரும் காசநோயால் அவதிப்பட்டனர். திருச்செந்தூர் கோயிலில் சுப்ரமணியர் தனது திருக்கரங்களால் அவர்களுக்கு பன்னீர் இலையில் விபூதியை கொடுத்து அருள் புரிந்தார் என்றும் சுப்ரமணியருடைய விபூதியின் சக்தியால் அவர்களுடைய வியாதி குணமடைந்தது. இதில் மகிழ்ச்சியடைந்த ஆதிசங்கரர் சுப்ரமணியரைப் போற்றிப் புகழ்ந்து சுப்ரமணியர் புஜங்கம் என்ற பாடலைப் பாடியுள்ளார்.

திருச்செந்தூரில் கோவில் கொண்டுள்ள ஆறுமுகப் பெருமான் விக்கிரகம் தங்கத்தால் அமைந்தது என்பதைக் கேள்விப்பட்ட டச்சுக்காரர்கள் அதை நள்ளிரவில் திருடி மரக்கலம் மூலம் கடத்திச் செல்ல முயன்றனர். மரக்கலம் சிறிது தூரம் சென்றதும் சூறாவளிக் காற்று பலமாக விசியதுடன் கடலும் கொந்தளித்ததால் மரக்கலம் அபாயத்தில் சிக்கியது. மரக்கலத்திலிருந்த விக்கிரகத்தால்தான் இப்படி ஏற்படுகிறது என்பதை உணர்ந்த அவர்கள் அந்த விக்கிரகத்தை நடுக்கடலில் வீசி விட்டனர். அக்காலத்தில் தென்பாண்டிய நாட்டை மதுரை நாயக்க மன்னர்களின் பிரதிநிதியாக ஆண்டு வந்த வடமலையப்பன் பிள்ளை என்பவர் திருச்செந்தூர் முருகனின் பக்தர். இவர் விக்கிரகம் காணாமல் போன செய்தி கேட்டு துடித்துப் போனார். அன்றிரவு அவரின் கனவில் தோன்றியதுடன் கடலில் தான் இருக்குமிடத்தைத் தெரிவித்தார். வடமலையப்பன் கடலுக்குச் சென்று அந்த விக்கிரகத்தை மீட்டு வந்தார் என்று திருச்செந்தூர் மாசித் திருவிழாவில் பாடப்படும் தமிழ்ப்பாடலில் தெரிவிக்கப்படுகிறது.

•திருச்செந்தூர் சுப்ரமணியரிடம் பக்தி கொண்டவர்களாக ஆதிசங்கரர், நக்கீரர், கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், குமரகுருபரர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பகழிக்கூத்தர், வென்றிமாலைக் கவிராயர், கந்தசாமிப் புலவர், பாம்பன் சுவாமிகள், சேரந்தையப் புலவர் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

•திருச்செந்தூர் நவகிரகக் கோயில்களில் ஒரு தலமாக விளங்குகிறது இந்தத் தலத்தில் சூரபத்மனைக் கொன்றதால் தேவர்கள் பிரஸ்பதி (குரு பகவான்) சுப்ரமணியரின் திறமையை பாராட்டி மகிழ்ந்தார்கள். எனவே இந்தத் திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் குரு பகவானின் அருளையும் கூடுதலாகப் பெற்றுச் செல்கிறார்கள்.

•இக்கோவில் சுவரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு துவாரத்தில் காது வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் சப்தம் ஓம் என்பது போல் கேட்கிறது.

•வீரபாண்டிய கட்டபொம்மன்கூட திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமியின் தீவிரமான பக்தர்களில் ஒருவர்.

•கோவிலின் அருகே கடற்பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள வள்ளி குகையில் வள்ளியை வழிபட நல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளது


natpu


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆன்மீகத் தகவல்கள் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஆன்மீகத் தகவல்கள் Empty Re: ஆன்மீகத் தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum