புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_m10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_m10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10 
31 Posts - 36%
prajai
இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_m10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_m10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10 
3 Posts - 3%
Jenila
இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_m10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10 
2 Posts - 2%
jairam
இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_m10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_m10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_m10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_m10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_m10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_m10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_m10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10 
7 Posts - 5%
prajai
இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_m10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10 
6 Posts - 4%
Jenila
இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_m10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10 
4 Posts - 3%
Rutu
இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_m10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_m10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_m10இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!!

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Aug 26, 2011 2:51 pm

இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Mahatma%20gandhi-bhagat%20singh-947

நாம் தவிர்க்கவோ விலத்தவோ நினைத்தாலும் தவிர்க்கமுடியாதபடி எமக்கு இடப்பட்ட ஒரு புவியியல் சாபம் போல அது எமக்கு அருகில் அசையாத ஒரு பெரு நிலமாக இருக்கின்றது. அதுதான் இந்தியா என்ற பெயரால் அழைக்கப்படும் நிலப்பரப்பு. இந்தவாரம் அதன் அறுபத்திநான்காவது சுதந்திரதினம் ஆகஸ்ட் 15ம் நாள் வந்துள்ளது. பிரித்தானிய காலனி ஆட்சியாளர்களின் வருகை இந்தியாவுக்கு செய்த மிகப்பெரிய நன்மை என்னவென்றால் நானூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாகவும், சிறிய தேசங்களாகவும் சிதறிக்கிடந்த ஒரு நிலப்பரப்பை இந்தியா என்ற பெயரில் தமது நிர்வாக தேவைக்காக ஒன்றிணைத்தது ஆகும். இந்தியா என்பது அதற்கு முன்னர் ஒருபோதுமே ஒரே தேசமாக இருந்தது கிடையாது. இந்தியா எங்கும் மண்ணுக்கு வெளியிலும் மண்ணுக்கு கீழேயும் விளைந்துகிடந்த பொருட்கள் காலகாலமாக அந்த நிலப்பரப்பை நோக்க சக்கரவர்த்திகளையும், மன்னர்களையும், கடற்பயணக்காரர்களையும் ஈர்த்துக் கொண்டே இருந்தது. வாசனைத்திரவியங்களும், வைரங்களும், பொன்னும் அயலில் இருந்த மொகலாய மன்னர்களை மட்டுமல்லாமல் கொஞ்சம் தூரத்தில் இருந்து பாரசீக சக்கரவர்த்திகளையும், மிக எட்டத்திலிருந்து மகாஅலெக்சாண்டர்களையும் கூட அந்த பாரதத்தை நோக்கி படையுடன் வரவைத்திருந்தது.
நாடுகளை தேடும் கடற்பயணங்கள் எல்லாம் ஒருவகையில் காலனிகளை உருவாக்கும் முயற்சிகளாகவே ஐரோப்பியரால் நடாத்தப்பட்டன. அந்த வகையில் 1498 போத்துக்கேசிய கடற்பயணக்காரரான வாஸ்கொட காமாவின் கப்பல் இந்தியாவின் கோழிகோடு துறைமுகத்துள் வந்தபோதே இந்தியாவுக்கான ஐரோப்பிய காலனி ஆட்சி ஆரம்பித்தது எனலாம். அதன்பின் ஒல்லாந்திய, பிரென்சிய, பிரித்தானிய என்று நீண்ட காலனி ஆட்சிகள் நான்கு நூற்றாண்டுகளாக நீடித்து இறுதியில் உலகம் முழுதும் காலனி ஆட்சிகள் பொல பொலவென உதிர்ந்துகொண்டிருந்த காரணத்தாலும், இரண்டாம் உலக யுத்தத்தின் சுமையும் பாதிப்புகளும் ஐரோப்பிய காலனி ஆட்சியாளர்களை மிகவும் பாதித்தபடியாலும் போனால் போகிறது என்று பல ஆசிய நாடுகளை விட்டு அவர்கள் வெளியேறினார்கள்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Aug 26, 2011 2:52 pm

அப்படி ஒரு பொழுதுதான் இந்தியாவின் சுதந்திரதினமாக 1947 ஆகஸ்ட் 15ல் வழங்கப்பட்டது. ஆனால் மிகவும் தந்திரமாகவே இந்த இந்திய சுதந்திரம் என்பது சாத்வீக போராட்டம் ஓன்றினாலே கிடைத்தது என்றும் தனிமனித உண்ணாவிரதமும், கடற்கரையில் உப்பு அள்ளியதாலும்தான் சூரியனே அஸ்தமிக்காத பிரித்தானிய சாம்ராஜ்யம் வெளியேறியதாக ஒரு கருத்துருவாக்கம் காங்கிரஸ் பெருந்தலைகளால் காலகாலமாக செய்யப்பட்டு வருகின்றது. காந்திகள் இந்தியாவை தொடர்ந்து ஆளுவதற்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மீதான இந்த பிம்பங்கள் மிக அவசியமாக அவர்களுக்கு இருக்கின்றது. ஆனால் வரலாற்றின் மிகவும் மறைக்கப்பட்ட பக்கங்களாக இந்திய விடுதலைக்கான எண்ணற்றவர்களின் வீரமிகு போராட்டமும், அவர்களின் உயிர்த்தியாகங்களும் இருக்கின்றன.
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தினுள் எந்தவிதமான தீவிரமும் கவனிப்பும் காட்டாத காந்தி தென்னாப்பிரிக்காவில் புகையிரதவண்டியில் இருந்து நிறவெறியனால் வெளியே தள்ளி விழுத்தப்பட்ட பின்னரே இந்தியாவின் விடுதலை அரங்கினுள் 1915ல் வருகிறார். ஆனால் அதற்கு பல பத்து வருடங்களுக்கு முன்னரே ஐம்பத்தி ஏழு வருடங்களுக்கு முன்னரே பிரித்தானியருக்கு எதிராக உருவான சிப்பாய்க்கலவரத்தின் வீரமிகு புதல்வர்களை பற்றிய விபரங்கள் ஏறத்தாள முழுமையாக மறைக்கப்பட்டே இருக்கின்றன. அதில் ஒரு உருக்கமான கட்டம் என்னவென்றால் 1857ம் ஆண்டு பாரக்புரி என்ற இடத்தில் பிரித்தானிய ராணுவ அதிகாரியை தாக்கினான் என்பதற்காக மங்கள் பாண்டே என்ற இந்திய வீரனை கைது செய்யும்படி பிரித்தானிய படையில் இருந்த ஒரு இந்திய ஜமேதாருக்கு பிரித்தானிய தளபதி ஜெணரல் கார்சே உத்தரவிட்டான். தனது தேசத்தவன் ஒருவனை கைதுசெய்ய மறுத்த ஜமேதாரும், மங்கள் பாண்டேயும் 1857 ஏப்ரல் 7ம் தேதி ஒன்றாக தூக்கிலிடப்பட்டார்கள்.
இதன் தொடர்ச்சியாக எழுந்த கலவரத்தை அடக்குவதற்கு பிரத்தியேக படைகளை சீனாவை நோக்கி சென்று கொண்டிருந்த தமது ஐரோப்பிய படைப்பிரிவில் இருந்தும் பெற்றுக்கொண்டு போராட வேண்டிய அளவுக்கு இந்தியர்களின் எழுச்சி எழுந்திருந்தது. இறுதியில் 1858 ஜூலை 20ம் தேதி குவாலியரில் நடந்த மோதலில் ராணி லட்சுமிபாய் கொல்லப்பட்டு குவாலியர்கோட்டை பிரித்தானியரால் மீட்கப்பட்டதுடன் தற்காலிகமாக ஓய்ந்தது. வெறும் வர்த்தக கம்பெனியான கிழக்கிந்திய கம்பெனியை வைத்து இனியும் இந்தியாவை ஆளமுடியாது என்று பிரித்தானியர் முடிவெடுத்த தருணம் இதுதான். இந்திய விடுதலைக்கான முதற்புரட்சி, முதல் எதிர்வினையின் மூலவர்களை பற்றிய பக்கங்கள் ஏனோதானோ என்று விரிவாக இல்லாமலும், மறைத்தும் வைத்துக்கொண்டு இந்தியாவின் சுதந்திரதினம் தனது அறுபத்திநான்கு வருடத்தை கடந்து வந்திருக்கிறது.
இதோ இந்தியாவின் விடுதலையை மானுட விடுதலையை மானுட விடுதலையாகவும், சமதர்ம விடுதலையாகவும் கனவுகண்டு அதற்காகவே போராடி தூக்குக்கயிற்றை முத்தமிட்ட பகத்சிங்கின் வரலாற்றை பாருங்களேன். எத்தனை உன்னதமானது அவனது வாழ்வு. இருபத்து மூன்று வயதுக்குள் முடிந்துபோன அவனின் வாழ்வு எங்கும் காணப்படும் இலட்சிய உறுதியும், சுதந்திரத்தின் மீதான வாஞ்சையும்தான் இன்றைய இந்தியாவின் விடுதலை. இன்றைக்கும் அவனின் நினைவு தினத்தன்றைக்கு (மார்ச்23) அரசியல்வாதிகள் வந்து மலர்மாலை வைப்பதுடன் அவனின் நினைவுகள் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டுள்ளது. இன்றைக்கும் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் சட்லெஜ் நதியின் கரையில் இருக்கும் அவனின் நினைவிடம் விடுதலைக்கு போராடும் அனைத்து மக்களுக்கும் ஆயிரம் செய்திகளை சொல்லியபடிக்கு அமைதியாக நின்றுகொண்டிருக்கிறது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Aug 26, 2011 2:53 pm

இந்தியா விடுதலை அடையவேண்டும் என்பதற்கும் மேலாக அது அனைவரையும் சமனாக நடத்தும் ஒரு சமதர்ம தேசமாக மலரவேண்டும் என்பதற்பகாக இந்துஸ்தான் சோசலிச குடியரசு ஒன்றை அமைக்கும் அமைப்பு ஒன்றை கட்டியெழுப்பி புரட்சியை விதைத்தவன் அவன். லாலாலஜபதி ராய் என்ற மிதவாத தலைவருடன் ஆயிரம் முரண்பாடுகளும், கருத்துவேறுபாடுகளும் பகத்சிங்குக்கு இருந்தபோதிலும் லாலாலஜபதிராய் பிரித்தானிய காவல்துறையால் கொல்லப்பட்போது அதற்கு பதில்சொல்ல பகத்சிங் முடிவெடுத்தார். அதற்கு காரணமான அதிகாரி சாண்டிரஸை அழித்த வழக்கில் பகத்சிங்கிற்கும் நண்பர்களுக்கும் மரணதண்டனை கிடைத்தது.
பகத்சிங்கிற்கும் நண்பர்களுக்கும் தூக்குத்தண்டனை கொடுக்கக்கூடாது என்று நாடு முழுவதிலும் மக்கள் கூட்டமாக தெருக்களில் எழுச்சி கொண்டிருந்தபோது இன்று இந்தியாவின் தேசத்தந்தையாக உருவகப்படுத்தப்படும் காந்தி இந்தியாவின் வைசிராய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.(வைசிராய் என்பவர் இங்கிலாந்து ராணியின் பிரதிநிதியாக இந்தியாவை ஆளுபவர்). பகத்சிங்கின் தூக்குதண்டனைக்காக பிரித்தானியர் நிர்ணயித்த தேதிக்கு மூன்றுநாட்கள் முன்னதாகவே அந்த தண்டனையை வழங்குங்கள் என்று கேட்டிருந்தார். ஏனென்றால் தூக்குத்தண்டனை நிறைவேற்ற நிர்ணயிக்கப்பட்ட நாளில் அவருக்கு வேறு முக்கிய அலுவல் இருந்ததாம். பகத்சிங் காந்தியையோ அவரின் போராட்ட முறைகளையோ, அவரின் இந்துமத சனாதன முறைகளையோ ஏற்றுக்கொண்வராக இருந்தது கிடையாது. அதனால் அந்த அற்புத மானவீரனின் அறமும், விடுதலைக்கான பிரகடனமும் பெரிய அளவில் இன்றளவும் இந்தியாவில் வெளிப்படுத்தப்படவில்லை.
ஆனால் பகத்சிங் இத்தகைய அங்கீகாரங்களையோ, அடிபணிவுகளையோ ஒருபோதும் பொருட்டாக நினைக்காமல் போரடிய வீரன். அவன் மிகவும் தெளிவாக தன்னை யார் என்றும் தான் யாருக்காக போராடுகிறேன் என்றும் தெளிவாக இருந்தவன். "நான் ஒரு மனிதன். மனித சமூகத்தை பாதிக்கும் அனைத்தும் என்னோடும் சம்பந்தப்பட்டவையே" என்று தனது இருபத்திஇரண்டு வயத்துக்குள் பிரகடனப்படுத்தியவன் அவன். பகத்சிங்கின் முயற்சிகள் இருபத்துமூன்று வயத்துக்குள் முடிந்திருக்கலாம். ஒரு தூக்குகயிற்றின் இறுக்கத்துடன் அவனின் வாழ்வு முடிந்திருக்கலாம். பகத்சிங் தனது இறுதிக்கணம்வரைக்கும் தனது தாயகத்தின் மீதான பற்றுதலை, தனது மண்ணின் மீதான சமரசம் செய்யமுடியாத தாகத்துடனும் இருந்தவன். அவனுக்கு தூக்குதண்டனை கொடுத்தபோதும் அவர் அதனை ஏற்காமல் தன்னை துப்பாக்கியால் சுட்டோ, பீரங்கியால் சுட்டோ கொல்லும்படி கேட்டவர்.
ஏன் அப்படி கேட்கிறாய் என்று அதிகாரிகள் கேட்டபோது தூக்கிலே போட்டால் உயிர் பிரியும்போது தனது கால்கள் தனது தாய்மண்ணில் படாமல் அந்தரத்தில் இருக்கும் என்றும், துப்பாக்கியால் சுட்டால் தனது உயிர்போகும்போது தனது கால்கள் தனது மண்ணை தீண்டியபடியே போகும் என்றும் எந்தவிதமான சலனமும் இல்லாமல் வீரமுடன் கூறியவன் அவன். இந்திய சுதந்திரம் என்பது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் காந்தியின் முயற்சியாக இருக்கலாம். ஆனால் அடிமைப்பட்ட ஒரு இனத்தின் மக்கள் என்ற முறையிலும், விடுதலைக்காக போராடவேண்டி கட்டாயத்துக்குள் வாழும் ஒரு மக்கள் என்ற முறையிலும் எமக்கு பகத்சிங்கின் வாழ்வுதான் இந்திய சுதந்திரமாக தெரிகிறது. பகத்சிங் போன்ற பல்லாயிரம் வீரர்களினதும், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய சுபாஸ்சந்திரபோசின் படையில் போராடிய பல ஆயிரம் இந்திய வீரர்களின் கனவாகவே எமக்கு இந்திய சுதந்திரம் தெரிகிறது.
பகத்சிங் தனது சிறையின் சுவரில் எப்போதும் எழுதிவைத்திருந்த சார்ல்ஸ் மகாய் அவர்களின் கவிதை பகத்சிங்கின் ஆன்மத்தை அழகாகவே காட்டுகிறது.
"பகைவர்களே இல்லை என்கிறாயா..?
அந்தோ என் நண்பனே
இப்பெருமிதம் மிக அற்பமானது
உனக்கு எதிரிகளே இல்லாது போனால்
நீ செய்திருப்பது அற்ப சொற்பமானது
துரோகி யாரையும் வீழ்த்தியிருக்கமாட்டாய்
போராட்டத்தில் கோழையாக இருந்திருப்பாய்.."
என்று நீளும் இந்த கவிதையை போலவே பகத்சிங்கிற்கு அவர் வாழும் போது எதிரிகளாக பிரித்தானிய பேரரசு இருந்தது. அவர் மரணித்த பிறகு அவரின் நினைவையும் அவரின் கருத்துகளையும் மறைக்கும் இந்தியாவை ஆளும் காந்திகள் இருக்கிறார்கள்.

நன்றி! ச.ச . முத்து
கூடல்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 26, 2011 2:59 pm

வரலாற்றின் மிகவும் மறைக்கப்பட்ட பக்கங்களாக இந்திய விடுதலைக்கான எண்ணற்றவர்களின் வீரமிகு போராட்டமும், அவர்களின் உயிர்த்தியாகங்களும் இருக்கின்றன.

உண்மைதான் அருண்,

அதே போல் வெள்ளைக்காரன் போட்ட நிபந்தனையில் ஒன்று, நேதாஜி சுபாஷ் சந்திர போசை உயிருடனோ அல்லது பிணமாகவோ அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று.

நமது தலைவர்கள் அதை ஏற்றுக் கொண்டுதான் ஒப்பந்தக் கையெழுத்து போட்டார்கள்.
அதனால் தான் அவரின் முடிவு கூட முற்றுப் பெறாமல் இருக்கிறது.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 26, 2011 3:00 pm

kitcha wrote:

உண்மையாகவா அண்ணா.....நமக்கு நாமே எதிரிதான் போல இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! 56667

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 26, 2011 3:03 pm

kitcha wrote:
வரலாற்றின் மிகவும் மறைக்கப்பட்ட பக்கங்களாக இந்திய விடுதலைக்கான எண்ணற்றவர்களின் வீரமிகு போராட்டமும், அவர்களின் உயிர்த்தியாகங்களும் இருக்கின்றன.

உண்மைதான் அருண்,

அதே போல் வெள்ளைக்காரன் போட்ட நிபந்தனையில் ஒன்று, நேதாஜி சுபாஷ் சந்திர போசை உயிருடனோ அல்லது பிணமாகவோ அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று.

நமது தலைவர்கள் அதை ஏற்றுக் கொண்டுதான் ஒப்பந்தக் கையெழுத்து போட்டார்கள்.
அதனால் தான் அவரின் முடிவு கூட முற்றுப் பெறாமல் இருக்கிறது.
சோகம் சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Aug 26, 2011 3:05 pm

நன்றி கிச்ச அண்ணா..! மகிழ்ச்சி
சுதந்திரத்துக்கு உள்ளே எண்ணற்ற உயிர் பலிகளும் சோகங்களும் தியாகங்களும் புதைந்து கிடைக்கின்றன..!
அப்படி யெல்லாம் வாங்கி கொடுத்த சுதந்திர இந்தியா நாடு இப்ப ஊழலால் நிறைந்து காணப்படுகிறது..! என்ன கொடுமை சார் இது

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 26, 2011 3:06 pm

இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! 678642 இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! 678642

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 26, 2011 3:06 pm

ரேவதி wrote:
kitcha wrote:
வரலாற்றின் மிகவும் மறைக்கப்பட்ட பக்கங்களாக இந்திய விடுதலைக்கான எண்ணற்றவர்களின் வீரமிகு போராட்டமும், அவர்களின் உயிர்த்தியாகங்களும் இருக்கின்றன.

உண்மைதான் அருண்,

அதே போல் வெள்ளைக்காரன் போட்ட நிபந்தனையில் ஒன்று, நேதாஜி சுபாஷ் சந்திர போசை உயிருடனோ அல்லது பிணமாகவோ அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று.

நமது தலைவர்கள் அதை ஏற்றுக் கொண்டுதான் ஒப்பந்தக் கையெழுத்து போட்டார்கள்.
அதனால் தான் அவரின் முடிவு கூட முற்றுப் பெறாமல் இருக்கிறது.
உண்மையாகவா அண்ணா.....நமக்கு நாமே எதிரிதான் போல இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! 56667

எவ்வளவோ உண்டு, ரேவ்,

நிறைய பேரின் தியாகம் மறைக்கப் பட்டுவிட்டது.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! Image010ycm
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 3:24 pm

அருண் wrote:நன்றி கிச்ச அண்ணா..! இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! 677196
சுதந்திரத்துக்கு உள்ளே எண்ணற்ற உயிர் பலிகளும் சோகங்களும் தியாகங்களும் புதைந்து கிடைக்கின்றன..!
அப்படி யெல்லாம் வாங்கி கொடுத்த சுதந்திர இந்தியா நாடு இப்ப ஊழலால் நிறைந்து காணப்படுகிறது..! இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! 56667
இன்னும் விடியாத நள்ளிரவுச் சுதந்திரம்!!! 359383 எங்க அருண் காணோம்

உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக