புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 80%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 11:41 am

வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாட்டை மத்திய அரசு உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று, பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வற்புறுத்தினார்கள்.

இலங்கை தமிழர் பிரச்சினை

பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை நேற்று எதிரொலித்தது. இந்த பிரச்சினை மீது தமிழக எம்.பி.க்கள் பேசினார்கள். தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியதாவது:-

இலங்கையில் வாழும் தமிழர்கள் எங்கள் சகோதர-சகோதரிகள். தமிழ் ஈழத்துக்காக போராடிய ஒரே குற்றத்துக்காக ஏராளமான தமிழர்களை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று இருக்கிறார்கள். அங்கு தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

வங்காள தேசத்தை உருவாக்கியது போல

போரின் போது, பழமை வாய்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை, ராணுவத்தினர் இடித்து தள்ளி விட்டனர். அங்கிருந்த 97 ஆயிரம் அரிய புத்தகங்கள், கலை பொக்கிஷங்களை அழித்து விட்டனர். இதைத்தவிர 2 ஆயிரம் இந்து கோவில்களையும் சேதப்படுத்தி விட்டனர்.

கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் இருந்த பகுதியை, முக்தி பாகினி அமைப்புக்கு ஆதரவு கொடுத்து, இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டதால், அங்கு வங்காள தேசம் உருவானது. அது போல இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாட்டை இந்திய அரசு உருவாக்கி கொடுக்க முன் வர வேண்டும்.

இவ்வாறு டி.ஆர். பாலு பேசினார்.

அப்போது சபாநாயகர் மீரா குமார் குறுக்கிட்டு, "இலங்கை நமது நேச நாடாக இருக்கிறது. அவர்களுடன் நாம் நல்லுறவு வைத்து இருக்கிறோம். எனவே இரு நாட்டு உறவை பாதிக்காதபடி உறுப்பினர் பேச வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

தம்பித்துரை பேச்சு

அ.தி.மு.க.வை சேர்ந்த தம்பித்துரை பேசியதாவது:-

"தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை அரசு செயல்பட வில்லை. உண்மை என்ன வென்றால், இலங்கை அரசு, இந்திய அரசை மிரட்டி காரியத்தை சாதித்து வருகிறது என்றே கூற வேண்டும். `நீங்கள் தமிழர் பிரச்சினை பற்றி பேசினால், நாங்கள் சீனாவின் பக்கம் சென்று விடுவோம்' என்று இலங்கை கூறுவது பற்றி சிந்திக்க வேண்டும்.

இலங்கை அரசு, இந்தியாவை எப்போதும் நண்பராக கருதுவது இல்லை. அங்கு நமது மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி சென்ற போது, அவரை அவர்கள் ராணுவ அணிவகுப்பின் போது எப்படி `வரவேற்றார்கள்' என்பதை யோசிக்க வேண்டும். இதை நாம் மறந்து விடக்கூடாது.''

இவ்வாறு தம்பித்துரை பேசினார்.

என்.எஸ்.வி. சித்தன்

காங்கிரசை சேர்ந்த என்.எஸ்.வி சித்தன் பேசும்போது, "இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் முகாம்களில் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. மனிதர்கள் போல் அவர்கள் நடத்தப்பட வில்லை. அவர்கள் மனிதர்களாக வாழ, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

பாரதீய ஜனதா

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி யஷ்வந்த் சிங் பேசும்போது, "விடுதலைப்புலிகளுக்கும், தமிழர்களுக்கும் உள்ள வேறுபாட்டை இலங்கை அரசு உணர வேண்டும். இலங்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் துப்பாக்கி சூடு, உயிரிழப்பு போன்றவை தடுக்கப்பட வேண்டும்'' என்றார்.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசும்போது, "இலங்கையில் தமிழர்களின் கண்ணீர் இன்னும் துடைக்கப்பட வில்லை. அவர்கள் பட்ட காயம் இன்னும் ஆற வில்லை. தமிழர்களை பூண்டோடு அழிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.

அப்போது வெளி உறவுத்துறை ராஜாங்க மந்திரி இ.அகமது பதில் அளிக்க எழுந்தார். இதற்கு தி.மு.க. மற்றும் அ.தி.முக. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.`` கேபினட் மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாதான் பதில் அளிக்க வேண்டும்`` என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து மந்திரி அகமது அமர்ந்து விட்டார்.

ம.தி.மு.க. உறுப்பினர்

ம.தி.மு.க. உறுப்பினர் கணேச மூர்த்தி பேசும்போது, "இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு பின்பும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இலங்கைக்கு இந்தியா கொடுத்த ஆயுதங்களை, தமிழர்களுக்கு எதிராகவே இலங்கை பயன்படுத்தியது. இலங்கையுடன் உள்ள உறவு தேவையா? என்று மத்திய அரசு சிந்திக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பிரசன்னா பத்சானி, காங்கிரசை சேர்ந்த ஆதிர் ரங்சன் சவுத்திரி, ராஷ்டிரீய ஜனதா தளம் எம்.பி. ரகுவன்ஷ் பிரசாத்சிங், பார்வர்டு பிளாக் எம்.பி. என்.என். ராய் ஆகியோரும் பேசினார்கள்.

மேல்-சபையில்

மேல்-சபையிலும் இலங்கை பிரச்சினை எதிரொலித்தது. இந்திய கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா பேசியதாவது:-

இலங்கையில் போர் குற்றங்கள் பெருமளவில் நடந்து இருக்கிறது. இதற்கு ஐக்கிய நாட்டு சபை மூலம் இந்திய அரசு தீர்வு காண வேண்டும். போர் குற்றங்கள் பற்றி பாரபட்சம் அற்ற சர்வதேச விசாரணை நடத்த, மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அங்கு தமிழக மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.

இவ்வாறு டி.ராஜா பேசினார்.

அவர் மேலும் பேசுகையில், "இலங்கை தமிழர்களுக்காக அப்போதைய முதல்-மந்திரி 3 மணி நேரம் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போது உள்துறை மந்திரி ப.சிதம்பரம், `இலங்கையில் போர் நின்று விட்டது' என்று கூறியதால் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது'' என்று குறிப்பிட்டார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மைத்ரேயன்

அ.தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் மைத்ரேயன் பேசியதாவது:-

"2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த போர் முடிந்த பின்பும், ஆயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். ஆனால் அப்போது கூட மேல்-சபையில் ஒரு அனுதாப தீர்மானம் கூட நிறைவேற்ற வில்லை.

இலங்கை தமிழர்கள் அனாதையாக நிற்கிறார்கள். இலங்கை அரசால் அவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர். அவர்களின் நல்வாழ்வுக்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

இவ்வாறு மைத்ரேயன் கூறினார்.

திருச்சி சிவா

திருச்சி சிவா (தி.மு.க.) பேசியதாவது:-

அகதிகள் முகாமில் தமிழர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அங்கு போர் நடந்த போதும் இந்திய அரசு அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தது. இதை கண்டிக்கிறோம். இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சகோதரர் மற்றும் முன்னாள்ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் அமெரிக்க குடியுரிமையும் பெற்று இருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்காவையும் இந்தியா வற்புறுத்த வேண்டும்.

இவ்வாறு சிவா பேசினார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இ.எம்.எஸ். நாச்சியப்பன் பேசுகையில்,``இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் இருக்கும் தமிழர்களுக்கு சம உரிமை வழக்க வேண்டும் என்ற ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை இலங்கை அமல் படுத்த வேண்டும்`` என்று குறிப்பிட்டார்.

போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்

இலங்கை பிரச்சினை பற்றி பேசிய சில உறுப்பினர்கள், "அதிபர் ராஜபக்சேயை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். அவரை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த வேண்டும். அவர் மீது ஐக்கிய நாட்டு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வற்புறுத்தினார்கள்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், எஸ்.எஸ். அலுவாலியா (பா.ஜனதா), ஏ.ராஜன் (பகுஜன் சமாஜ்), நூத்தன் வாக்மாரே (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோரும் பேசினார்கள்.

தினத்ந்தி

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 11:59 am

இலங்கை தமிழர் பிரச்சினை

பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை நேற்று எதிரொலித்தது. இந்த பிரச்சினை மீது தமிழக எம்.பி.க்கள் பேசினார்கள். தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியதாவது:-

இலங்கையில் வாழும் தமிழர்கள் எங்கள் சகோதர-சகோதரிகள். தமிழ் ஈழத்துக்காக போராடிய ஒரே குற்றத்துக்காக ஏராளமான தமிழர்களை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று இருக்கிறார்கள். அங்கு தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி பேசிப்பேசியே அழித்து விட்டார்கள் எல்லாரும் சேர்ந்து இன்னும் என்ன இருக்கு அழிக்க என்ன கொடுமை சார் இது

உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக