ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

+14
பாலாஜி
ஸ்ரீஜா
தாமு
ayyamperumal
உமா
ராஜா
பிளேடு பக்கிரி
சின்றெல்லா
dsudhanandan
SK
ரேவதி
அருண்
anjali.vanitha
krishnaamma
18 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 2 Empty விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Thu Aug 25, 2011 7:27 pm

First topic message reminder :

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர்  1 ம தேதி வருகிறது.  அந்த நன்னாளில் செய்யவேண்டிய நைவேத்தியங்கள்  பற்றி இங்கு பார்போம்.புன்னகை விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 2 Images?q=tbn:ANd9GcS4m88vzRfqLh-SF0s04BhoiW67leAXddXZMI8-_9CGeiKDvsLh


Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:50 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 2 Empty உளுந்து (கார) கொழுக்கட்டை

Post by krishnaamma Thu Aug 25, 2011 8:45 pm

தேவையானவை:

உளுந்து 1 கப்
பச்சை மிளகாய் 4 -5
சிவப்பு மிளகாய் 4 -5
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
எண்ணை 1 டேபிள் ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்

செய்முறை:

உளுந்தை நான்கு களைந்து, ஒரு 1/2 மணி ஊரவைக்கவும்.
உரின உளுந்து, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், பெருங்காயம், உப்பு போட்டு கார கரப்பாக அரைத்து எடுக்கக்வும்.
குக்கர் இல் இட்லி போல் ஆவி இல் வேகவைத்து எடுக்கவும்.
மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (அப்ப தான் கட்டிகள் இல்லாமல் பூந்துருவலாய் வரும் புன்னகை)
வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்து வைத்துள்ள பூரணத்தை போடவும்.
நன்கு கிளறி (உப்புமா போல் உதிர் உதிராய் இருக்கணும் )இறக்கவும்.
ஆறினதும், நீள் உருண்டைகள் பிடித்து வைக்கக்வும்.
சோப்பு செய்து, இந்த நீள் உருண்டைக ளை அதில் வைத்து, ஜஸ்ட் இரண்டாக மடித்து ஓரங்களை ஒட்டவும்.
தித்திப்பு மற்றும் கார கொழுக்கட்டைகளை பிரித்து காட்டவே இந்த வித்தியாசம் புன்னகை
ஆவி இல் வேக வைத்து எடுக்கவும்.
கார உளுந்து கொழுக்கட்டைகள் தயார்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 2 Empty மணி கொழுக்கட்டை

Post by krishnaamma Thu Aug 25, 2011 8:49 pm

தேவையானவை:

உளுந்து 1 கப்
பச்சை மிளகாய் 4 -5
சிவப்பு மிளகாய் 4 -5
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
எண்ணை 1 டேபிள் ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்


செய்முறை:

உளுந்தை நான்கு களைந்து, ஒரு 1/2 மணி ஊரவைக்கவும்.
உரின உளுந்து, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், பெருங்காயம், உப்பு போட்டு கார கரப்பாக அரைத்து எடுக்கக்வும்.
குக்கர் இல் இட்லி போல் ஆவி இல் வேகவைத்து எடுக்கவும்.
மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (அப்ப தான் கட்டிகள் இல்லாமல் பூந்துருவலாய் வரும் புன்னகை)
வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்து வைத்துள்ள பூரணத்தை போடவும்.
நன்கு கிளறி (உப்புமா போல் உதிர் உதிராய் இருக்கணும் )இறக்கவும்.
கொழுக்கட்டை மாவை சின்ன சின்ன சீடைகளாய் உருட்டி ஆவி இல் வேக வைத்து எடுக்கவும்.
வாணலி இல் பூரணத்துடன் போடவும்.
நன்கு கிளறி இறக்கவும்.
கார உளுந்து கொழுக்கட்டைகள் தயார்

குறிப்பு: கொழுக்கட்டை மேல் மாவு மீந்து போனாலும்  இப்படி செயலாம்


Last edited by krishnaamma on Sat Aug 23, 2014 10:39 pm; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 2 Empty மணி கொழுக்கட்டை

Post by krishnaamma Thu Aug 25, 2011 8:57 pm

செய்முறை:

கொழுக்கட்டை மாவை சின்ன சின்ன சீடைகளாய் உருட்டி ஆவி இல் வேக வைத்து எடுக்கவும்.
வாணலி இல் கடுகு, கறிவேப்பிலை உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
வெந்த உருண்டைகளை போட்டு கிளறவு.
அடுப்பை சின்னதாக்கவும் .
தோசை மிளகாய் பொடி தூவி கிளறி இறக்கவும்
'மணி  கொழுக்கட்டைகள்'  தயார்
ரொம்ப சுவையாக இருக்கும்.

குறிப்பு: இது வும் மேல் மாவு மீந்து போனால் செய்யக்கூடியது. அல்லது நீங்கள் இதில் பால் கொழுக்கட்டை கூட செயலாம் புன்னகை
பால் கொழுக்கட்டை


Last edited by krishnaamma on Fri Aug 29, 2014 10:25 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 2 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by அருண் Thu Aug 25, 2011 9:02 pm

krishnaamma wrote:நன்றி அருண் புன்னகை நன்றி அன்பு மலர்

அந்த புதிய பெண், இங்கு ஒரு திரி பதிந்து இருக்கிறாள், அதை நடத்துனர்கள் தான் மற்றணும் அருண் புன்னகை
கு

ஆமாம் அம்மா..! நீங்கள் மட்டும் இந்த திரி பயன் படுத்துவதால் தலைமை நடத்துனர் கீழ் இந்த திரி கவனிக்க படும்..! அதனால் நாம நினைத்தால் மாற்ற முடியாது..! சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 2 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by krishnaamma Thu Aug 25, 2011 9:05 pm

ஆமாம் அருண், 1 1/2 மணி நேரத்தில் 100 பேருக்கு மேல் இந்த திரியை பார்த்துள்ளார்கள், ஆனால் பதில் போட தான் மனம் வரலை. போகட்டும் atleast படிக்கிறார்களே, அந்த மட்டுக்கும் எனக்கு சந்தோசமேபுன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 2 Empty அப்பம்

Post by krishnaamma Thu Aug 25, 2011 9:09 pm

அப்பம் - இது ரொம்ப நல்ல நைவேத்யம் . நான் எப்பவும் இதை நெய் இல் தான் செய்வது வழக்கம் . இதை கரைத்தும் அரைத்தும் செயலாம் முதலில் கரைத்து செய்வது.

தேவையானவை:

கோதுமை மாவு 1 கப்
அரிசி மாவு 3/4 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினது 3 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு 1 சிட்டிகை
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
பொறிக்க நெய்
பூவன் வாழை பழம் 2

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 2 IaVqeVkBQ5SZxcTH4hRw+fywc

செய்முறை:

மேலே சொன்ன எல்லா மாவுகளையும் ஒரு பேசினில் போடவும்.
வாழை பழத்தை துருவவும்.
அதில் போடவும்.
ஏலப்பொடி போடவும்
சோடா உப்பு போடவும்
வெல்லத்தை துருவி போடவும்.
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினத்தை போடவும்
எல்லா வற்றையும் நன்கு அழுத்தி பிசையவும்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலக்கவும்.
பால் வேண்டுமானாலும் விடலாம்.
திக் ஆன தோசை மாவு படத்தில் இருக்கணும்.
அடுப்பில் அப்ப காரலை வைத்து எல்லா குழிகளிலும் நெவிடவும்.
உருகி சுட்டதும், அப்ப மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் விடவும்.
மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும், அப்ப குச்சியால் அல்லது இரண்டு ஸ்பூங்களால் எடுக்கவும்.
பந்து போல் அழகாய் மெத் என்று இருக்கும்.

குறிப்பு: அப்ப மாவு எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு மெத் என்று வரும். எனவே காலை இல் முதல் வேலையாக கரைத்து வைக்கணும். எல்லா பக்ஷணமும் பண்ணின பிறகு கடைசியாய் அப்பம் குத்தணும். சரியா? இதை 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம்.


Last edited by krishnaamma on Sat Aug 23, 2014 11:05 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 2 Empty அப்பம் 2

Post by krishnaamma Thu Aug 25, 2011 9:15 pm

தேவையானவை:

கோதுமை மாவு 1 டேபிள் ஸ்பூன்
அரிசி 1 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினது 3 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு 1 சிட்டிகை
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
பொறிக்க நெய்
பூவன் வாழை பழம் 2

செய்முறை:

அரிசியை ஒரு 1/2 மணி ஊறவைத்து அரைக்கணும், மட்டாய் தண்ணீர் விடணும்.
கடைசி இல் வெல்லம்,வாழை பழம,ஏலப்பொடி,கோதுமை மாவு போடவும்.
சோடா உப்பு போடவும்
நன்கு அரைத்து எடுக்கவும்.
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினத்தை போடவும்.
பால் வேண்டுமானாலும் விட்டு அரைக்கலாம்.
திக் ஆன தோசை மாவு பதத்தில் இருக்கணும்.
அடுப்பில் அப்ப காரலை வைத்து எல்லா குழிகளிலும் நெய் விடவும்.
உருகி சுட்டதும், அப்ப மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் விடவும்.
மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும், அப்ப குச்சியால் அல்லது இரண்டு ஸ்பூன் களால் எடுக்கவும்.
பந்து போல் அழகாய் மெத் என்று இருக்கும்.

குறிப்பு: அப்ப மாவு எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு மெத் என்று வரும். எனவே காலை இல் முதல் வேலையாக கரைத்து வைக்கணும். எல்லா பக்ஷணமும் பண்ணின பிறகு கடைசியாய் அப்பம் குத்தணும். சரியா? இதை 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 2 Empty வடை

Post by krishnaamma Thu Aug 25, 2011 9:16 pm

பண்டிகை நாட்களில் உளுந்து வடை செய்யும்போது கொஞ்சம் கடலை பருப்பு கொஞ்சம் துவரம் பருப்பு சேர்த்து நனைக்கணும்.

தேவையானவை:

உளுந்து 1 கப்
கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
துவரம் பருப்பு 1/2 ஸ்பூன்
உப்பு
பச்சைமிளகாய் 2 -4
பெருங்காயம் 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - நறுக்கி வைக்கவும்
பொறிக்க எண்ணை

செய்முறை:

பருப்புகளை நன்கு களைந்து , ஒரு 1/2 மணி ஊறவைக்கணும்.
மிக்சி இல் பச்சைமிளகாய் ,பெருங்காயம், கறிவேப்பிலை , உப்பு போட்டு நல்லா மசிய/ மட்டாய் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கணும்.
கிரைண்டர் இல் அரைத்தால் ரொம்ப நல்லா வடை பண்ணலாம்.
வாணலி இல் எண்ணை வைத்து , நிறையா மாவு எடுத்து நடுவில் கட்டை விரலால் ஓட்டை போட்டு வடை யை எண்ணை இல் போடணும்.
மெதுவாக போடணும்., இல்லாவீட்டால் எண்ணை மேலே தெறிக்கும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விடணும்.
நல்லா பவுன் கலரில் வந்ததும், எடுத்துடனும்.
வடி தட்டில் போட்டு , எண்ணை வடிந்ததும், தனியே எடுத்து வைக்கவும்.
இப்ப வடையும் தயார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 2 Empty கொத்துக்கடலை சுண்டல்

Post by krishnaamma Thu Aug 25, 2011 9:31 pm

தேவையானவை:

கொத்துக்கடலை 1 கப்
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
பெருங்காயபொடி 1 /2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
சிவப்பு மிளகாய் 2 - 4
உப்பு
தாளிக்க எண்ணை
சோடா உப்பு 1 சிட்டிகை (தேவையானால் )

செய்முறை:
முதல் நாள் இரவே கொத்துக்டலையை சுத்தம் செய்து ஊரவைக்கவும்
காலை இல் குக்கர் இல் சோடா உப்பு போட்டு நன்கு வேக வைக்கவும்
ஆறினதும், வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
வெந்த கொத்துக்கடலையை , நீரை வடித்துவிட்டு போடவும்.
நன்கு கிளறவும்.
தேங்காய் துருவல் , உப்பு மற்றும் பெருங்காயப்பொடி போட்டு மறுபடி கிளறி இறக்கவும்.
இப்ப கொத்துக்கடலை சுண்டல் தயார் புன்னகை

குறிப்பு: கொத்துக்கடலை லிருந்த் வடித்த தண்ணீரை, குழம்புக்கு ஊற்றலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 2 Empty மற்ற நைவேத்யங்கள்

Post by krishnaamma Fri Aug 26, 2011 9:11 am

மற்றபடி, விநாயகருக்கு, அவல், பொரி, சோளம், விளாம்பழம், பிரப்பம் பழம் முதலியவையும் எப்போதும் போல் தேங்காய், வெற்றிலை பாக்கு வைக்கலாம்.
பாயசம் செயலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி ! - Page 2 Empty Re: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum