ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுர டி‌வி -- காதல் நோய் (2000வது பதிவு)

+13
கே. பாலா
தாமு
ரா.ரமேஷ்குமார்
இளமாறன்
அருண்
பாலாஜி
ஜாஹீதாபானு
உமா
நட்புடன்
பூஜிதா
ராஜா
ரேவதி
dsudhanandan
17 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சதுர டி‌வி -- காதல் நோய் (2000வது பதிவு)  - Page 3 Empty சதுர டி‌வி -- காதல் நோய் (2000வது பதிவு)

Post by dsudhanandan Thu Aug 25, 2011 10:56 am

First topic message reminder :

சதுர டி‌வி -- காதல் நோய் (2000வது பதிவு)  - Page 3 Eegaraitvlogo


சதுர டிவியில் டாக்டர் "E"


சதுரம் : வணக்கம் நேயர்களே! இது உங்கள் அபிமான சதுரம் டிவியின் "டாக்டர் E" நிகழ்ச்சி! இன்றைய தினம் ஆண்களுக்கு ஏற்படும் காதல் என்ற தீராத வியாதி குறித்து நேயர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிக்க டாக்டர். காதலூர் மன்மதன் வந்திருக்கிறார்! நேயர்கள் தங்கள் சந்தேகங்களை தொலைபேசி மூலம் கேட்டுப் பயனடையலாம். வணக்கம் டாக்டர்....

டாக்டர் : வணக்கம்

சதுரம் : சமீபகாலமாக காதல்நோயால் நிறைய ஆண்கள் அவதிப்படுவதாக ஆல் இந்தியா லவ்வாலஜிஸ்ட் அசோசியேஷன் வெளியிட்டுள்ள புள்ளி விபரம் கவலை தெரிவிக்கிறது. இந்தக் காதல் நோய்க்கு உண்டான ஆரம்ப அறிகுறிகள் என்னவென்று சொல்ல முடியுமா டாக்டர்?

டாக்டர் : இட்டிஸ் வெரி சிம்பிள்! வேலைக்குப் போகாத இளைஞர்களுக்கு காதல் வந்தா, வீட்டிலே அடிக்கடி பணம் காணாமப் போகும். வேலைக்குப் போகிற இளைஞர்களுக்குக் காதல் வந்தா, அடிக்கடி அவங்களே காணாமப் போயிருவாங்க…

சதுரம் : நல்ல பதில் டாக்டர்! நேயர் ஒருவர் தொலைபேசியில் அழைக்கிறார்! ஹலோ! வணக்கம்! சதுரம் டிவியின் டாக்டர் "E"

நேயர் : ஹலோ டாக்டருங்களா? என் பையன் ஒரு நாளைக்கு நூறுவாட்டி கண்ணாடி முன்னாலே நின்னுக்கிட்டு தலை சீவிட்டிருந்தானுங்க! இப்போ ரொம்ப அதிகமாகவே தலைசீவ ஆரம்பிச்சுட்டான்! பார்க்கிறவங்கெல்லாம் திருப்பதியா? பழநியா?-ன்னு கேட்கிற அளவுக்கு, தலை சீவி சீவி முடியெல்லாம் கொட்டிருச்சுங்க! இதுக்கென்னங்க பண்ணலாம்?

டாக்டர் : இது ஆரம்பகால அறிகுறி மாதிரித்தான் தெரியுது... முடிஞ்சா சீப்பை ஒளிச்சு வையிங்க, இல்லாட்டி கண்ணாடியை ஒளிச்சு வையிங்க... ரெண்டும் முடியாட்டி பையனையே ஒளிச்சு வச்சிருங்க... சரியாப் போயிரும்...

நேயர் : ரொம்ப நன்றி டாக்டர்...

சதுரம் : டாக்டர்… இப்போ கான்சர் வந்தா இரத்தப் பரிசோதனை பண்ணிக் கண்டுபிடிக்கிறா மாதிரி, காதலைக் கண்டுபிடிக்க ஏதாவது பரிசோதனை இருக்குங்களா?

டாக்டர் : இப்பத்தான் டெவலப் பண்ணிட்டிருக்காங்க... கான்சரைக் கண்டுபிடிக்கிற பரிசோதனைக்கு "ஹிஸ்டபதாலஜி" (Histopathology) -ன்னு சொல்லுறோமில்லையா? அதே மாதிரி காதலுக்கு "கஷ்டபதாலஜி"-ன்னு ஒண்ணு கண்டு பிடிச்சிருக்காங்க... ஆனா, ஆரம்ப காலத்துலேயே பண்ணனும்; இல்லாட்டி ஊசி போட்டு எடுத்தா இரத்தத்துக்கு பதிலா பீர் தான் வரும்!

சதுரம் : இது தவிர பார்த்தாலே கண்டுபிடிக்கிற மாதிரி ஏதாவது அறிகுறி இருக்குங்களா?

டாக்டர் : நிறைய இருக்கு! அது ஏரியாவுக்கு ஏரியா மாறுபடும்... ரொம்ப காமன் ஆன சிம்ப்டம் என்னான்னா, முகத்தைப் பார்த்தீங்கன்னா டைனோசருக்கு டயரியா வந்தது மாதிரி ரொம்ப வெளிறிப் போயிருக்கும்... திடீர்னு உடம்பு இளைச்சிடும்... ஒரே பேண்ட்டைக் கிழிச்சு ஆல்டர் பண்ணினா மூணு தைக்கலாம்...

சதுரம் : ரொம்ப உபயோகமான தகவலெல்லாம் சொல்றீங்க… இப்போ அடுத்த நேயரோட தொலைபேசி அழைப்பைக் கேட்கலாமா? வணக்கம், சதுரம் டிவி! சொல்லுங்க...

நேயர் : என்னங்க... நூறு கிராம் கடுகு, நூறு வெந்தயம், சின்ன வெங்காயம் அரைக்கிலோ, புளி கால் கிலோ எல்லாத்தையும் பத்தாம் நம்பர் வீட்டுக்கு அனுப்பி வையுங்க…

சதுரம் : ஹலோ... இது டிவி ஸ்டேஷன்... மளிகைக் கடையில்லை…

நேயர் : டிவி ஸ்டேஷனா? சரி, அப்படியே "கல்யாண சமையல் சாதம்" பாட்டுப் போடுங்க... கேட்டுட்டு சமைக்கப்போறேன்.

சதுரம் : போனை வையுங்கம்மா... சாரி டாக்டர்... ராங் நம்பர்…

டாக்டர் : பரவாயில்லீங்க... அடிக்கடி என் கிளீனிக்குக்குக் கூட இந்த மாதிரி ராங் நம்பர் வரும்.. யாராவது நல்ல டாக்டர் இருக்காங்களான்னு கேட்பாங்க…

சதுரம் : டாக்டர், இந்த கவிதை எழுதுறது கூட காதலோட அறிகுறின்னு சொல்லுறாங்களே, அது பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

டாக்டர் : அப்படி உறுதியாச் சொல்ல முடியாது... எல்லாக் காதலாலேயும் கவிதை வராது... சில பேரு கவிதை எழுதி கொஞ்சம் சுமாரா வந்தா, அதை வேஸ்ட் பண்ண வேண்டாமேன்னு காதலிக்கிறதும் உண்டு... இந்த மாதிரி கவிதை எழுதுறவங்களுக்கு தினமும் ரெண்டு வேளை "லவோசின்" மாத்திரை தொடர்ந்து பத்து வருசம் கொடுத்தா நோய் தீவிரமடையாது...

சதுரம் : ஏன் டாக்டர், இப்போ கான்சருக்கு இருக்கிற மாதிரியே காதலுக்கும் இரத்தப் பரிசோதனை இருக்கிறதா சொன்னீங்க... அதே மாதிரி கான்சரை குணப்படுத்த "கீமோதெரபி" (Chemotherapy) இருக்கிற மாதிரி காதலுக்கு ஏதாவது இருக்கா டாக்டர்?

டாக்டர் : ஓ!! இருக்கே! அதுக்குப் பேரு "மாமோதெரபி"... அதாவது பையன் எந்தப் பொண்ணை காதலிக்கிறானோ அந்தப் பொண்ணோட அப்பா காதுலே விஷயத்தைப் போட்டுட்டா அவரு குணப்படுத்த வேண்டிய விதத்துலே குணப்படுத்திருவாரு! அதுனாலே தான் இதுக்குப் பேரு மாமோதெரபி... இதைத் தொடர்ந்து பையனுக்கு நிறைய எக்ஸ்-ரேயெல்லாம் எடுக்க வேண்டி வரும். சிலருக்கு ஆபரேஷன் வரை கூட போகலாம்...

சதுரம் : இதுக்கு உத்தேசமா எவ்வளவு செலவாகும் டாக்டர்?

டாக்டர் : அதெல்லாம் பொண்ணோட அப்பாவோட சக்தியைப் பொறுத்தது. குத்துமதிப்பா எதுவும் சொல்லுறதுக்கில்லை... ஆனா, பெரும்பாலான கேசுலே பார்த்தீங்கன்னா அதுக்கப்புறம் இந்த வியாதி திரும்ப வரவே வராது... நல்ல சக்ஸஸ் பர்சன்டேஜ்... வில்லேஜ் பக்கமெல்லொம் இந்த ட்ரீட்மெண்ட் தான் ரொம்ப பாப்புலர்...

சதுரம் : அருமையான தகவல்! இப்போ இன்னொருத்தர் தொலைபேசியிலே தொடர்பு கொள்ளுறாரு! வணக்கம்... சதுரம் டிவி... டாக்டர் "E"... உங்க கேள்வியென்ன சொல்லுங்க?

நேயர் : வணக்கம் டாக்டர்! என் பேரு அழகுராணி! எங்க தெருவிலே ஒரு பையனுக்கு காதல் நோய் வந்திருச்சுங்க! 'உன்னைக் காதலிக்கிறேன்; நீ கல்யாணம் பண்ணிக்கலேன்னா தற்கொலை செய்துக்குவேன்'-னு மிரட்டறாருங்க! இதுக்கு என்னங்க பண்ணுறது?

டாக்டர் : அதாவது காதல் வேறே, கல்யாணம் வேறேங்குறது அவருக்கு இன்னும் புரியலே போலிருக்கு! இந்த மாதிரி பேசுறவங்க 'எதுக்கும் இருக்கட்டும்'-னு உங்க கிட்டே சொன்ன மாதிரி இன்னும் ரெண்டு மூணு பேருகிட்டேயாவது சொல்லியிருப்பாருங்க... இந்த மாதிரி அறிகுறியிருந்தா வியாதி தானாகவே கூட குணமாயிடறதுக்கு சான்ஸ் இருக்கு... பயப்படாதீங்க!

நேயர் : டாக்டர், கல்யாணம் பண்ணிக்கிடலேன்னா தற்கொலைன்னு பயமுறுத்தறாரு... பயமாயிருக்கு... டாக்டர்!

டாக்டர் : பயப்படாம புத்திசாலித்தனமா டீல் பண்ணுங்க... கல்யாணத்துக்கும் தற்கொலைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ரொம்ப ப்ரெஷர் கொடுத்தா 'வா, கல்யாணம் பண்ணிக்கலாம்'-னு சொல்லுங்க! கல்யாணமும் வேண்டாம், தற்கொலையும் வேண்டாமுன்னு போனாலும் போயிருவாங்க…

நேயர் : ரொம்ப நன்றி டாக்டர்

சதுரம் : சமீபத்துலே இந்தியாவிலே பணவீக்கம் அதிகமானதுக்கு காதல்நோய் அதிகமா பரவியிருக்கிறது தான் காரணம்னு உலக வங்கியிலேருந்து ஒரு அறிக்கை விட்டிருக்காங்களே... இது பத்தி என்ன சொல்றீங்க?

டாக்டர் : கண்டிப்பா இருக்கும்... காதல் நோய் பரவிச்சுன்னா சேமிப்பு குறைஞ்சிடுது இல்லையா? செல்போன், பெட்ரோல், சினிமா, ஷாப்பிங், ஹோட்டல்னு எவ்வளவு செலவு இருக்குது? இதுலே... சில பேரு ஒண்ணுக்கு மூணு நாலு சிம்கார்டு வச்சிருப்பாங்க, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நம்பர் கொடுத்திருப்பாங்க... எல்லாம் செலவுதானே? எனக்குத் தெரிஞ்ச ஒரு பேஷண்ட் பெட்ரோல் செலவுக்காக வண்டியையே அடமானம் வச்சிட்டாருன்னா பாருங்களேன்!

சதுரம் : உண்மையிலேயே ரொம்ப பயங்கரமான வியாதிதான் டாக்டர்...

(டெலிபோன் மணி அடிக்கிறது)

சதுரம் : ஹலோ வணக்கம், இது மளிகைக்கடையில்லை; சதுரம் டிவி! சொல்லுங்க…

டெலிபோனில் பெண்குரல்: சதுரம்! யூ ஆர் அட்ரோஷியஸ்! செல்போனை சுவிட்ச்-ஆஃப் பண்ணிட்டா கண்டுபிடிக்க முடியாதுன்னா நினைச்சே? நேத்து ஈவ்னிங் ஷோவுக்குப் போலாமுன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டியே! உனக்காக நான் அஞ்சு மணியிலேருந்து ரெண்டரை நிமிஷம் கால்கடுக்கக் காத்திட்டிருந்தேன் தெரியுமா? என் செல்போனுக்கு டாப்-அப் பண்ணச் சொன்னேன். அதையும் மறந்திட்டே இல்லே நீ? ஐயம் ஃபெட் அப் வித் யூ!

சதுரம் : ஹலோ டார்லிங்... நான் சொல்றதைக் கேளு!

பெண்குரல் : ஓஹோ! நீ சொல்றதை நான் கேட்கணுமா? இது எப்போலெருந்து? ஆளை விடு… நான் பாய் ஃபிரண்டை மாத்திக்கிட்டேன்... ஐ ஹேட் யூ!

(டெலிபோன் துண்டிக்கப்படுகிறது)

டாக்டர் : சதுரம்... இது கொஞ்சம் அட்வான்ஸ் ஸ்டேஜிலே இருக்கும் போலிருக்கே?

சதுரம் : ஏன் டாக்டர் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்க? இப்பெல்லாம் இந்த மாதிரி சட்டுன்னு மெடிக்கேஷனை மாத்திக்கிறாங்களே? இதுக்கு என்ன பண்ணலாம் டாக்டர்?

டாக்டர் : காதல்நோயைப் பத்தி பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தணும் சதுரம்... இந்தக் காதல் சினிமா டிக்கெட் மாதிரி... கிடைச்சதும் பத்திரமா பாக்கெட்டுலே போட்டுக்கணும்... கேட்டுலே பாதியைக் கிழிச்சிருவாங்க... படம் முடிஞ்சதும் சுருட்டிக் குப்பையிலே போட்டுட்டு சுத்தமா மறந்திடணும்... இப்பல்லாம் நூத்துக்கு தொண்ணூத்தி அஞ்சு பேஷண்ட்ஸ் இப்படித்தான் பண்ணுறாங்க... இதுக்குப் பேரு "பொய்யாலிசிஸ்"... இப்படி இருந்தா பிரச்சினையே கிடையாது...

சதுரம் : ஏதாவது மேஜர் சர்ஜரி பண்ணி குணப்படுத்த முடியுமா டாக்டர்?

டாக்டர் : பண்ணலாம், ஆனா எதுக்கு வீண்செலவு? அதுக்குப் பேசாம கல்யாணத்தைப் பண்ணி வச்சிரலாம்... ரெண்டும் கிட்டத்தட்ட ஒண்ணு தான்... ரெண்டுலேயுமே பொழைக்கிற சான்ஸ் ரொம்ப கம்மி…

சதுரம் : டாக்டர்... உங்க பரந்த அனுபவத்திலே எத்தனையோ பேஷண்ட்களை காதல் நோயிலேருந்து குணப்படுத்தியிருப்பீங்க... அதுலே குறிப்பிடத்தக்க ஒரு கேஸ் பத்தி சொல்லுங்களேன்…

டாக்டர் : ஓ யெஸ்! அழகன் என ஒரு 'அக்யூட் லவ் சிண்ட்ரோம்' கேஸ்... எங்க ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணி ட்ரீட்மெண்ட் கொடுத்திட்டிருந்தோம்... காதலி கைவிட்டுட்டா சோர்ந்து போகக் கூடாது... இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லாயிருன்னு கவுன்சலிங் பண்ணினோம்... எங்க ட்ரீட்மெண்ட்லே அந்தப் பையன் குணமடைஞ்சதோட இல்லாம, எங்க ஆஸ்பத்திரிலேருந்தே ஒரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு பில் கூட செட்டில் பண்ணாம ராத்திரியோட ராத்திரியே ஓடிப்போயிட்டான்...

சதுரம் : அட பாவமே... நிறைய பணம் நஷ்டமாயிருச்சுன்னு சொல்லுங்க…

டாக்டர் : பணம் போனாப் போகுது சதுரம்! அவன் யாரைக் கூட்டிக்கிட்டு ஓடிப்போனானோ அந்த நர்ஸைத் தான் நான் ஒன்-ஸைடா லவ் பண்ணிட்டிருந்தேன். இப்படி அடிமடியிலேயே கைவச்சிட்டானே, அவன் உருப்படுவானா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

சதுரம் : டாக்டர்... நேயர்களெல்லாம் பார்த்திட்டிருக்காங்க... அழாதீங்க... நீங்க ஒரு டாக்டர்...

டாக்டர் : போய்யா... யோவ்... டாக்டருன்னா லவ் பண்ணக்கூடாதா? அந்தப் பொண்ணை நினைச்சு நான் பிரிஸ்கிருப்ஷன் பேட்லே கவிதையெல்லாம் எழுதியிருந்தேன் சதுரம்...

உளுந்து ஊறினா தோசை
உள்ளம் ஊறினா ஆசை
உதட்டுக்கு மேலே மீசை
உடனே கொடுத்திடு பீஸை


- ன்னு எதுகை மோனையெல்லாம் வச்சுக் கவிதை எழுதினேன்... இப்படிப் பண்ணிட்டாளேய்யா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! (டாக்டர் அழுகையைத் தொடர்கிறார்...)

சதுரம் : நேயர்களே, தவிர்க்க முடியாத காரணங்களால், இந்த நிகழ்ச்சி இத்துடன் நிறைவு பெறுகிறது. வணக்கம்...

(நிகழ்ச்சி நிறைவு)


[குறிப்பு : ஸ்பெக்ட்ரம் ஊழல் கமிஷன் தொகை... மிரட்டி வாங்கும் விளம்பரங்கள்... அதிகார துஷ்ப்ரயோகம்... ஆகியன இல்லாததால் இந்த தொல்லைக்காட்சி உங்களிடம் இருந்து பெரும் நன்கொடை (வேறென்ன... பின்னூட்டங்கள்தான்) மூலம் அவ்வப்போது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் என தெரிவித்துக் கொள்கிறேன் -- சதுர செயலாளர், ஈகரை இணையதளம்]


Last edited by dsudhanandan on Wed Aug 31, 2011 5:20 pm; edited 3 times in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down


சதுர டி‌வி -- காதல் நோய் (2000வது பதிவு)  - Page 3 Empty Re: சதுர டி‌வி -- காதல் நோய் (2000வது பதிவு)

Post by dsudhanandan Fri Aug 26, 2011 11:00 am

பதிவை ரசித்த ரமேஷ், பாலா, பிரபு, தாமு, அட்மின் மற்றும் அஞ்சலிக்கு என் நன்றிகள் அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சதுர டி‌வி -- காதல் நோய் (2000வது பதிவு)  - Page 3 Empty Re: சதுர டி‌வி -- காதல் நோய் (2000வது பதிவு)

Post by aathma Sat Oct 01, 2011 12:04 am

dsudhanandan wrote:
டாக்டர் : [/color] போய்யா... யோவ்... டாக்டருன்னா லவ் பண்ணக்கூடாதா? அந்தப் பொண்ணை நினைச்சு நான் பிரிஸ்கிருப்ஷன் பேட்லே கவிதையெல்லாம் எழுதியிருந்தேன் சதுரம்...

கடைசீல, பேய்க்கே , பேய் பிடிச்ச கதையா போச்சே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

SUPER SUDHA மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சதுர டி‌வி -- காதல் நோய் (2000வது பதிவு)  - Page 3 Empty Re: சதுர டி‌வி -- காதல் நோய் (2000வது பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum