ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
நீ திருந்து, நாடே திருந்தும்..........நகைச்சுவை உரையாடல்.. - Page 2 Poll_c10நீ திருந்து, நாடே திருந்தும்..........நகைச்சுவை உரையாடல்.. - Page 2 Poll_m10நீ திருந்து, நாடே திருந்தும்..........நகைச்சுவை உரையாடல்.. - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ திருந்து, நாடே திருந்தும்..........நகைச்சுவை உரையாடல்..

+4
பாலாஜி
வின்சீலன்
dsudhanandan
சதாசிவம்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நீ திருந்து, நாடே திருந்தும்..........நகைச்சுவை உரையாடல்.. - Page 2 Empty நீ திருந்து, நாடே திருந்தும்..........நகைச்சுவை உரையாடல்..

Post by சதாசிவம் Wed Aug 24, 2011 5:04 pm

First topic message reminder :

சமுதாயத்தில் விழுப்புணர்வு வர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. அப்படி ஒரு கேள்விக்கு விடை அளிக்க இந்த கட்டுரை எழுதுகிறேன்.

நம் புராணங்களில் நிறைய தர்கங்கள் (எதிர் எதிர் உரையாடல், அல்லது கேள்வி, பதில்) நடந்ததாக கூறப்படுகிறது. இப்படி நடந்த தர்கங்கள் நமக்கு தெரிந்த விஷயங்களை மேலும் தெளிவாக்கவும், எது உண்மை, பொய் என்று உணரவும் பயன் பெறுகிறது. பிரகலாதன் vs இரன்னியகசிபு, விதுரர் vs திருதராஷ்டிரர், கிருஷ்ணன் vs துருயோதனன் சபை, ராமன் vs வாலி, ஆதி சங்கரர் Vs பிச்சைக்காரனாக வந்த சிவபெருமான், சுந்தரர் Vs சிவபெருமான் என்று இதற்கு பல உதாரணங்கள் உண்டு. இப்படி மகாபாரதத்தில் நடந்த முக்கியமான கேள்வி பதில் தர்மதேவன் (எமதர்மனுக்கும்) பாண்டவரில் மூத்தவரான தர்மருக்கும் நடந்த உரையாடல் மிகவும் பிரபலமானது. அப்படி நடந்த உரையாடலில் சாயலாக எழுதும் உரையாடல் இது.........

தர்மதேவன் : நீ யார்
தன்மான தமிழன் : தமிழ்நாட்டில் வாழும் குடிமகன்
தர்மதேவன் : உனக்கு உள்ள கஷ்டம் என்ன?
தன்மான தமிழன் : குடும்ப அரசியல் செய்து பணம் பறிக்கின்றனர், ஊழல் பெறுகிவிட்டது, இறை நம்பிக்கை குறைந்து விட்டது பிள்ளைகள் சரியில்லை, தமிழ் வளர ஒன்றும் செய்ய யாரும் முன் வரவில்லை, தமிழ் மெல்ல சாகிறது, தமிழ்நாட்டில் அறிவு நிறைந்தோர் குறைந்து விட்டனர்,
தர்மதேவன் : சரி உன் பிரச்சனை ஒன்று ஒன்றாக அலசுவோம்
தன்மான தமிழன் : சரி
தர்மதேவன் : குடும்ப அரசியல் யார் செய்கின்றனர், எப்படி செய்கின்றனர்
தன்மான தமிழன்: அது ஊர் அறிந்த விஷயம், மீடியா, திரைப்படம் என்று எல்லாத் துறையிலும் உள்ளனர்.
தர்மதேவன்: நீ அதிகம் பார்க்கும் டி‌வி சேனல் எது
தன்மான தமிழன்: மக்கள் அறிந்த சேனல் தான், சீரியலுக்கு பிரபலமான சேனல்
தர்மதேவன் : என்றாவது பொதிகை, டிஸ்கவரி, ஹிஸ்டரி சேனல் பார்த்ததுண்டா?
தன்மான தமிழன்: இல்லவே இல்லை, சேனல் மாற்றும் போது அவற்றை பார்த்திருக்கிறேன்.
தர்மதேவன்: சரி மீடியா மூலம் பணம் பறிக்கின்றனர் என்று கூறுகிறாயே, அந்த மீடியாவை நீ புறக்கணித்ததுண்டா?
தன்மான தமிழன்: இல்லவே இல்லை, அதில் தான் எனக்கு விருப்பமான சீரியல் வருகிறது.
தர்மதேவன் : அவர்கள் எடுக்கும் படத்தை பார்க்காமல் இருந்த உண்டா?
தன்மான தமிழன்: படம் பார்பதற்க்கும், அதற்கும் என்ன சம்பந்தம்? படம் பார்ப்பது என் பொழுது போக்கு
தர்மதேவன் : நீ என்ன வேலை செய்கிறாய்
தன்மானத் தமிழன் : ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்
தர்ம தேவன் : இந்த வேலை எப்படி கிடைத்தது
தன்மானத் தமிழன் :என் தந்தையின் சிபாரிசில் கிடைத்தது.
தர்ம தேவன்: தந்தையின் தயவில் வாழும் நீ குடும்ப அரசியல் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.
தன்மானத் தமிழன்: அது வேறு, இது வேறு,
தர்ம தேவன் : உன் தந்தை இல்லாவிட்டால்?
தன்மானத் தமிழன் : அக்கா வீட்டுக்காரர், அண்ணன், ஃப்ரெண்ட் என்று யாராவது ஒருவரின் சிபாரிசை பிடித்து வேலை வாங்கி இருப்பேன்.
தர்மதேவன்: இது தான் உன் தன் மானமா?
தன்மானத் தமிழன் : நீ திருந்து, நாடே திருந்தும்..........நகைச்சுவை உரையாடல்.. - Page 2 838572
தர்ம தேவன் : உன் வேலையில் என்ன பிரச்சனை?
தன்மானத் தமிழன்: வேலை தெரியாத ஆட்களை வேலைக்கு வைத்து என் உயிரை வாங்குகின்றனர்.
தர்ம தேவன் : சரி வேலைக்கு வரும் போது உனக்கு என்ன தெரியும் ?
தன்மானத் தமிழன் : ஒன்றும் தெரியாது, இங்கு வந்து தான் அனைத்தும் கற்று கொண்டேன்
தர்ம தேவன் : வேறு என்ன பிரச்சனை?
தன்மானத் தமிழன் : ஒருவரும் வேலை ஒழுங்காக செய்யவில்லை. எனக்கு கீழ் உள்ளவர்கள் ஒத்து உழைக்க வில்லை.
தர்ம தேவன் : சரி நீ ஒழுங்காக வேலை செய்கிறாயா? உன் மேலதிகாரிக்கு ஒத்து உழைக்கிறாயா?
தன்மானத் தமிழன் : அதுஎப்படி, வேலையில் பிகு செய்தால் தான் மதிப்பு வரும்.
தர்ம தேவன் : இதைதாணையா, உன் கீழ் உள்ளவனும் செய்கிறான்.
தன்மானத் தமிழன்: அதிர்ச்சி
தர்ம தேவன் : வேலையில் என்ன தெரியும்
தன்மானத் தமிழன்: அது, அது வந்து எல்லாம் தெரியும்..
தர்ம தேவன்: எல்லாம் என்றால் ?
தன்மானத் தமிழன் : எல்லாம் என்றால், எல்லாம் தெரிந்த மாதிரி நடிக்கத் தெரியும்.
தர்ம தேவன் : இப்படி இருந்தால்l கம்பெனி எப்படி உருப்படும்?
தன்மானத் தமிழன்: ஓவரா கேள்வி கேக்குறீங்க, ஒரு டீ சாப்பிட்டு வரேன்.
தர்ம தேவன்: காலையில் தானே இரண்டு டீ குடித்தாய் ?
தன்மானத் தமிழன் : see, எங்களுக்கு பதில் சொல்லத் தெரியலநா டீ குடிக்கரதா சொல்லி ஒரு ரவுண்ட் அடிச்சி அரட்டை அடிப்போம், அரை மணி நேர மீட்டிங்கு காலையில் இருந்து பில்ட்அப் செய்வோம், மீட்டிஙில் இருந்து வந்தால் அந்த கதையை வைத்து மீதி நாள ஒட்டி விடுவோம்.
தர்மதேவன் : சரி உனக்கு எத்தனை பிள்ளைகள், அவர்களின் பெயர் என்ன?
தன்மானத் தமிழன்: இரண்டு, மகனின் பெயர் அக்க்ஷை, மகளின் பெயர் மிருதுலா
தர்ம தேவன் : என்ன உலா , மிர்தூளா ? மிளகாய் தூளா
தன்மானத் தமிழன் : எதுக்கு கிண்டல் பண்றீங்க? மிருதுலா, நாக்கை மடக்கி சொல்ல வேண்டும்.
தர்மதேவன் : இது எனக்கு வேண்டும்,...அது சரி இது என்ன தமிழ் பெயரா?
தன்மானத் தமிழன்: அது எல்லாம் தெரியாது, ஆனால் மாடர்ன் நேம்
தர்மதேவன்: தமிழில் பெயர் வைக்கக்கூடாதா ?
தன்மானத் தமிழன்: பிள்ளைகள் கிண்டல் செய்வார்கள்
தர்மதேவன் :அனைவரும் தமிழ் பெயர் வைத்தால் யாரை யார் கிண்டல் செய்வார்கள், மிர்துளா என்ற பெயரை கிண்டல் செய்ய முடியாதா?
தன்மானத் தமிழன்: இது அரசாங்கம் எடுக்க வேண்டிய முடிவு
தர்ம தேவன் :உன் பிள்ளைக்கு பேர் வைக்க அரசாங்கம் ஏன் முடிவு செய்ய வேண்டும்
தன்மானத் தமிழன் : இப்படி எல்லாம் கேள்வி கேட்டக் கூடாது, எங்களுக்கு பதில் தெரியாவிட்டால் அரசாங்கம், அதிகாரிகள் என்று யார் மீதாவது குற்றம் சுமத்தி எங்கள் மேல் தவறு எதுவும் இல்லை என்று நாங்கள் சொல்லிக்கொள்வோம்.
தர்மதேவன் : எப்போதில் இருந்து?
தன்மானத் தமிழன் : சிறு வயது முதல், நாங்கள் வலிய சென்று நாற்காலியை இடித்து கொண்டால், நாற்காலியை என் அம்மா அடிப்பாள், ஊர் சுற்றி வந்தால் என்னை தவிர நண்பர்கள் அனைவரையும் திட்டுவார்கள். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு இல்லையா ?
தர்ம தேவன் : இதைதாணையா உங்கள் தலைவரும் செய்து கொண்டு இருக்கிறார், அவரை மட்டும் குறை சொல்கிறாய்?
தன்மானத் தமிழன் : அதிர்ச்சி
தர்மதேவன் : சரி பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்ன என்று தெரியுமா?
தன்மானத் தமிழன் : என்னது, பதி , நென்னா அப்படி என்றால்?
தர்ம தேவன் : கணக்கு என்றால் என்ன ?
தன்மாத் தமிழன் :கணக்கு என்றால் maths.
தர்ம தேவன் : வேறு ஏதாவது பொருள் உண்டா?
தன்மானத் தமிழன் : இம் இம் இம் . கண்டு பிடுசிட்டேன் பிகரை கரெட் பண்ணுவது
தர்ம தேவன் : அட ராமா .............
தர்ம தேவன் : நள வெண்பா தெரியுமா
தன்மானத் தமிழன் : இல்லை..நமீதா தெரியும்
தர்மதேவன் : சரி நமீதா யார்?
தன்மானத் தமிழன் : அவர் தமிழுக்கு திறந்த மனதுடன் தொண்டு செய்பவர், அவர்கள் இயற் பெயர், நட்சத்திரம், முதல் படம், கிசு கிசு என்று எல்லாம் தெரியும், அவர்கள் நடித்த படம் அத்தனை பெயரையும் தலை கீழாக சொல்லுவேன். ஏன் அவர்கள் ஜாதகம் கூட என்னிடம் இருக்கிறது.
தர்ம தேவன் : நாட்டுக்கு இது ரொம்ப முக்கியம், சரி தமிழில் உள்ள நூல்கள் 20 தெரியுமா?
தன்மானத் தமிழன் :திருக்குறள், மதுரை sorry மூதுரை, ஆத்திசூடி .....அவ்வளவு தான் எங்கள் தமில் மிஸ் சொல்லி கொடுத்தார்கள்
தர்ம தேவன் : முதலில் தமிழ் என்பதை சரியாக உச்சரிக்கக் கற்றுக் கொள்.
தன்மானத் தமிழன் : சரி பலக்க படுதுறேன்.
தர்ம தேவன் : ஆத்திச்சூடி பாடல் தெரியுமா ?
தன்மானத் தமிழன்: ஓ நன்றாக.. ஆத்திச்சூடி ஆத்திச்சூடி நீ தான் ஆத்திச்சூடி, அது தானே
தர்மதேவன் : நீ திருந்து, நாடே திருந்தும்..........நகைச்சுவை உரையாடல்.. - Page 2 56667 சரி நான்மணிக்கடிகை
தன்மானத் தமிழன் : நாக்கூ முக்கா நாக்கூ முக்க தெரியும் .........அப்புறம் நயந்தாரைத் நன்றாக தெரியும்.
தர்ம தேவன் :வல்லினம், மெல்லினம், இடையினம் தெரியுமா
தன்மானத் தமிழன்: ஓ நன்றாக தெரியுமே, இது ஒரு சூரியா நடித்த சினிமா பாட்டு
தர்ம தேவன் : நீ திருந்து, நாடே திருந்தும்..........நகைச்சுவை உரையாடல்.. - Page 2 56667 நீ திருந்து, நாடே திருந்தும்..........நகைச்சுவை உரையாடல்.. - Page 2 56667 நீ திருந்து, நாடே திருந்தும்..........நகைச்சுவை உரையாடல்.. - Page 2 56667 நீ திருந்து, நாடே திருந்தும்..........நகைச்சுவை உரையாடல்.. - Page 2 56667 நீ திருந்து, நாடே திருந்தும்..........நகைச்சுவை உரையாடல்.. - Page 2 56667
தர்ம தேவன் : சரி என்ன படிக்கிறாய்?
தன்மானத் தமிழன் : குமுதம் ரிப்போர்ட்டர் ?
தர்ம தேவன் : வேறு ஏதாவது படிக்கும் வழக்கம் உள்ளதா ?
தன்மானத் தமிழன்: ஓ , ஜூனியர் விகடன், நக்கீரன் , போலீஸ், வண்ணத்திரை, etc.,
தர்ம தேவன் : காலச்சுவடு, கணையாழி, கலைமகள், வைணவன் , சைவ சித்தாந்தம், வள்ளுவம், குறள் அமுதம், அமுதசுரபி, கலைக்கதிர், அறிவியல் சுடர் போன்ற இதழ்களை படித்ததில்லையா?
தன்மானத் தமிழன் : நீங்கள் நைட் அடித்த சரக் தெளியவில்லை என்று நினைக்கிறேன், நீங்கள் சொல்லும் ஒரு வார்த்தை கூட எனக்கு புரியவில்லை.
தர்ம தேவன் : சரக் என்றால் ?
தன்மானத் தமிழன்: சரக் என்றால் தெரியாத பாஸ்
தர்ம தேவன் : அது என்ன பாஸ் ?
தன்மானத் தமிழன் : சர்க்குனா தெரியல, பாஸ் இன்னா தெரியலா, உன்னக்கெல்லாம் எவன் தான் எமதர்மன் வேலை கொடுத்தனோ ?
தர்ம தேவன்: அதிர்ச்சி
தர்ம தேவன் : இப்படி இருந்தால் தமிழ் எப்படி வளரும்?
தன்மானத் தமிழன் :இது என் தவறு இல்லை.....பாட திட்டத்தில் உள்ள குறை.
தர்ம தேவன் : சரி எது தான் உன் தவறு? பள்ளிக்கூடம் உனக்கு ஏமாற்றவும், அடுத்தவனை காலை வாரவும் சொல்லி கொடுத்ததா, நீயாக கற்றுக் கொள்ளவில்லையா.
தன்மானத் தமிழன் :அது என் திறமை,, அப்படி இருந்தால் தான் பிழைக்க முடியும்
தர்ம தேவன் : உன் தலைவன் மட்டும் நாட்டுக்கும், தமிழுக்கும் உழைக்க வேண்டும் என்று கூறுகிறாயா ? அவன் மட்டும் பிழைக்கத் தெரிந்தவன் ஆக இருப்பது தவறா ?.....
தன்மானத் தமிழன்: அதிர்ச்சி
தர்மதேவன் : சரி கோவிலுக்கு செல்லும் பழக்கம் உண்டா? , திருநீறு, திருமண் இடும் வழக்கம் உள்ளதா, இறை நூல் படித்து இருக்காயா?
தன்மானத் தமிழன் : அதலாம் இல்லை.
தர்ம தேவன் : உனக்கு ஒரு நல்ல பழக்கம் இல்லையே, ஆனால் பிள்ளை மட்டும் அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று எண்ணுகிறாயே இது சரியா?
தன்மானத் தமிழன் : அதிர்ச்சி
தர்ம தேவன் : வரி ஒழுங்காக கட்டுகிறாயா?
தன்மானத் தமிழன் : அதலாம் கட்டுகிறேன்.
தர்ம தேவன்: போலி பில் கொடுத்து வரி குறைக்கச் செய்யவில்லை
தன்மானத் தமிழன் : அது கொஞ்சம் தானே, நாட்டுக்கு என்ன நஷ்டம்
தர்ம தேவன் : இதை தானே உன் தலைவனும் செய்கிறான், அது மட்டும் எப்படி நஷ்டம் ஆகும்?
தன்மானத் தமிழன் : இப்படி எல்லாம் மடக்கி மடக்கி கேள்வி கேட்க கூடாது. அப்புறம் நான் வெளி நடப்பு செய்து விடுவேன்.
தர்ம தேவன் : கேள்விக்கு பதில் தெரியாவிட்டால் வெளி நடப்பா ?
தன்மானத் தமிழன் : என் தலைவன் எவ்வழியோ அவ்வழி நான்
தர்ம தேவன் : இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு ?
தன்மானத் தமிழன் : சுமார் 100 கோடி
தர்ம தேவன் : இதில் அரசியலில் உள்ளோர் எத்தனை?
தன்மானத் தமிழன் : ஒரு pm, சுமார் 600 cabinet members, சுமார் 10000 எம்‌எல்‌ஏ-10 லக்ஷம் தொண்டர்கள்
தர்ம தேவன்: இது எத்தனை சதவீதம்
தன்மானத் தமிழன்: 0.1 % என்று நினைக்கிறேன்
தர்ம தேவன்: நாட்டில் 99.9 % சதவீதம் இருக்கும் நீ சரியாக இருந்தால் நாடு சரியாக இருக்கும் இல்லையா?
தன்மானத் தமிழன்: ஏதோ புரிவது போல் உள்ளது, சந்தேகம் இல்லை நீங்கள் தீவிரவாதி, தலைவர்களுக்கும் மக்களும் இடைய கலகம் செய்கிறீர்கள்.
தர்ம தேவன் : முட்டாளே , நீ தான் தீவிரவாதி இந்த நாட்டின் வளத்தை சுரண்டி, இந்த நாட்டுக்காக எதுவும் செய்யாமல் வெறும் அரட்டை அடிப்பதிலும், வீண் நேரத்தை செலவு செய்வதிலும் கழித்து விட்டு, அடுத்தவரை குறை சொல்கிறாய்
தன்மானத் தமிழன்: நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, எனக்கு தெரிந்தது அடுத்தவரை குறை சொல்வது, தவறு இருந்தாலும் ஒத்துக்கொள்ளமாள் வீரத்துடன் போரிடுவது, குறை சொல்ல யாரும் இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது விதி, ஊழ் வினை, கடவுள், ஜோதிடம்
தர்ம தேவன் : உன்னை திருத்த என்னால் முடியாது, ஆயிரம் ராமானுஜர் வந்தாலும், அண்ணா ஹஜாரே வென்றாலும், நீ திருந்தும் வரை நாடு திருந்தாது.........


Last edited by சதாசிவம் on Thu Nov 10, 2011 3:47 pm; edited 5 times in total


சதாசிவம்
நீ திருந்து, நாடே திருந்தும்..........நகைச்சுவை உரையாடல்.. - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down


நீ திருந்து, நாடே திருந்தும்..........நகைச்சுவை உரையாடல்.. - Page 2 Empty Re: நீ திருந்து, நாடே திருந்தும்..........நகைச்சுவை உரையாடல்..

Post by ரா.ரமேஷ்குமார் Fri Nov 11, 2011 7:38 am

அருமையான பதிவு... சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum