புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றதெல்லாம் Poll_c10பெற்றதெல்லாம் Poll_m10பெற்றதெல்லாம் Poll_c10 
21 Posts - 70%
heezulia
பெற்றதெல்லாம் Poll_c10பெற்றதெல்லாம் Poll_m10பெற்றதெல்லாம் Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
பெற்றதெல்லாம் Poll_c10பெற்றதெல்லாம் Poll_m10பெற்றதெல்லாம் Poll_c10 
1 Post - 3%
viyasan
பெற்றதெல்லாம் Poll_c10பெற்றதெல்லாம் Poll_m10பெற்றதெல்லாம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பெற்றதெல்லாம் Poll_c10பெற்றதெல்லாம் Poll_m10பெற்றதெல்லாம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றதெல்லாம் Poll_c10பெற்றதெல்லாம் Poll_m10பெற்றதெல்லாம் Poll_c10 
213 Posts - 42%
heezulia
பெற்றதெல்லாம் Poll_c10பெற்றதெல்லாம் Poll_m10பெற்றதெல்லாம் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
பெற்றதெல்லாம் Poll_c10பெற்றதெல்லாம் Poll_m10பெற்றதெல்லாம் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெற்றதெல்லாம் Poll_c10பெற்றதெல்லாம் Poll_m10பெற்றதெல்லாம் Poll_c10 
21 Posts - 4%
prajai
பெற்றதெல்லாம் Poll_c10பெற்றதெல்லாம் Poll_m10பெற்றதெல்லாம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பெற்றதெல்லாம் Poll_c10பெற்றதெல்லாம் Poll_m10பெற்றதெல்லாம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பெற்றதெல்லாம் Poll_c10பெற்றதெல்லாம் Poll_m10பெற்றதெல்லாம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பெற்றதெல்லாம் Poll_c10பெற்றதெல்லாம் Poll_m10பெற்றதெல்லாம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெற்றதெல்லாம் Poll_c10பெற்றதெல்லாம் Poll_m10பெற்றதெல்லாம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெற்றதெல்லாம் Poll_c10பெற்றதெல்லாம் Poll_m10பெற்றதெல்லாம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றதெல்லாம்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 10:24 am

மேஜை மீது மகாதேவனின் படம் புதிதாக ஃப்ரேம் போட்டு வைக்கப்பட்டிருந்தது. சந்தன குங்குமம் இட்டு பூ மாலை போட்டிருந்தது.

சியாமளா கீழே தரையில் படுத்துக் கிடந்தாள். கையே தலையணையாகியிருந்தது. இந்த முப்பத்தைந்து வருட இணைபிரியா வாழ்க்கையில் இப்போது ஒரு துணை பிரிந்துவிட்டது. மனத்தில் வெறுமை. "என்னையும் அழைத்துப் போயிருக்கலாமே, எனக்கு இங்கே என்ன இருக்கிறது?' என்று அவள் மனம் புலம்பிக்கொண்டிருந்தது.

மகாதேவனின் சிரித்த முகம் மனத்திலேயே நின்றது. மிகவும் சாந்த சுபாவம். மாணவர்களுக்கு அவர் செல்ல ஆசிரியர். ஊர்க்காரர்களும் வாத்தியார் ஐயா என்று மிகுந்த மரியாதையுடன் இருப்பார்கள்.

இத்தனை நல்லவருக்கு ஏன் கடைசி காலத்தில் இப்படி ஒரு நிலை. எத்தனை ஏழை மாணவர்களுக்கு, ஏழைக் கல்யாணங்களுக்கு உதவியிருக்கிறார்? பவானி பாட்டி குடும்பத்தால் ஒதுக்கப்பட்டு திண்ணையில் கிடந்தபோது, அவர்கள் வீட்டில் பேசிப் பார்த்து, பயனில்லாது போனபோது முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டார். இப்படிப்பட்டவருக்கு அவரது முதுமை காலத்தில் ஏனிந்த இடி? மிருதுவான குணம் கொணடிருந்ததால்தான் அவரால் தன் ஒரே பிள்ளையின் நம்பிக்கை துரோகத்தைப் பொறுத்துக் கொள்ளவே முடியாமல் போய் விட்டதோ?

திருமணமாகி நான்கு வருடங்களுக்குப் பின் பிறந்தான் வெங்கட் ரமணி. அவன் மீது கொள்ளை ஆசை அவருக்கு. மேல் படிப்புக்காக சென்னைக்குப் போனவன் அங்கேயே வேலை கிடைத்து தங்கிவிட, அவன் பிரிவு, அவன் தாயைவிட மகாதேவனைத்தான் அதிகமாக வாட்டியது. ரிடையரானதும் பிள்ளையிடம் போய்விட வேண்டியதுதான் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால், அந்தக் கொடுப்பினை அவருக்கு இல்லாமலே போய்விட்டது.

"அம்மா!' என்றவாறு அருகில் வந்து பிள்ளை ரமணி உட்கார, கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள். அவிழ்ந்திருந்தக் கூந்தலை எடுத்து முடிந்தவாறு சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள் சியாமளா.

"நீ ஒண்ணுமே சாப்பிடலையேம்மா. காபியாவது குடிக்கிறாயாம்மா?' என்று கேட்ட பிள்ளையிடம் "வேண்டாம்' öன்பது போல் தலையாட்டிவிட்டு "பேச்சு கேட்டதே. யாரு வந்திருந்தா?' என வினவினாள்.

"சாம்பு மாமா வந்திருந்தார். "மகாதேவன் என் உயிர்த்தோழன். இந்த வீட்டை விக்கறதா இருந்தா அவன் ஞாபகமா நானே வாங்கிக்கறேன்'னார்' என்றான் ரமணி.

சடாரென்று பிள்ளையைத் திரும்பிப் பார்த்தாள் சியாமளா.

"இந்த வீட்டை விக்கப் போறதா யார் சொன்னது?'

"நான்தாம்மா. இனிமே இந்த வீட்டை வெச்சுக்கிட்டு என்ன பண்றது? என்னால வந்து வந்து பார்த்துக்க முடியாது. அதான் வித்துடலாம்னு முடிவு பண்ணி சொல்லி வெச்சிருந்தேன்.'

"என்னை என்னப் பண்ணப் போறே? முதியோர் இல்லத்துல சேர்த்துடப் போறியா?' அவனைப் பார்க்காமலே கேட்டாள்.

"ஏம்மா இப்படிக் கேக்கறே? நான் உன்னை என்னோட அழைச்சுக்கிட்டுப் போறேன்' என்றவனைக் கூர்ந்து பார்த்தாள் சியாமளா. அவள் மனக் கண்ணில் ஒரு காட்சி ஓடியது.

ஊஞ்சலில் உட்கார்ந்து மெள்ள ஆடிக்கொண்டிருக்கிறார் மகாதேவன். சனி, ஞாயிறு லீவில் சென்னையிலிருந்து வந்திருந்த ரமணி திரும்புவதற்காக புறப்பட்டுக் கொண்டிருக்க, இட்லி பேக் பண்ணிக் கொண்டு வந்து அவனிடம் கொடுக்கிறாள் சியாமளா.

"ரமணி, நான் ரிடையர் ஆயாச்சு. இன்னமும் ஏன் பிரிஞ்சு இருக்கணும்? உனக்கு கல்யாணத்துக்கு வேற பார்க்கணும். எல்லாத்துக்கும் ஒண்ணா இருந்தா சௌகர்யமாத்தானே இருக்கும்? பெரிய வீடா பார்த்துட்டேன்னா நானும் இங்க எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு வந்துடுவேன். வாடகை ஜாஸ்தியாயிடுமேன்னு கவலைப்படாதே; எனக்கு பென்ஷன் வருது. ரிடையர் ஆனப்போ வந்த பணமெல்லாம் போஸ்டாஃபீஸிலே போட்டிருக்கேன் அதுக்கும் வட்டி வரும்' என்றார் மகாதேவன் உற்சாகமாக.

அதே உற்சாகத்தோடு "சரிப்பா' என்று சொல்ல வேண்டிய பிள்ளை வெறுமே தலையை ஆட்டிவிட்டுச் சென்றபோதே, சியாமளாவுக்கு மனசுக்குள் சிறு உறுத்தல். போனவுடனே போன் செய்பவனிடமிருந்து அழைப்பு ஏதும் வரவில்லை. அதற்கு பதில் கடிதம் ஒன்று வந்தது.

"ஓஹோ! பிள்ளை வீடே பார்த்துவிட்டு லெட்டர் போட்டிருக்கிறான் போலிருக்கிறது' என்று சந்தோஷமாகப் பிரித்தவர், படிக்கப் படிக்க முகம் மாறி அந்தக் கடிதத்தை அவள் பக்கம் வீசி எறிந்துவிட்டு வெளியே போய்விட்டார். பதற்றத்துடன் எடுத்துப் படித்தாள் சியாமளா. அதில் இருந்த விஷயம் இதுதான்.

"ஆறு மாதங்களுக்கு முன் நான் பதிவுத் திருமணம் செய்து கொண்டுவிட்டேன். என்னுடன் வேலை பார்க்கும் மராட்டிப் பெண். ஒவ்வொரு முறை வரும்போதும் சொல்லத்தான் நினைப்பது. ஆனால், சொல்ல தைரியம் வரவில்லை. எப்படியும் சொல்லித் தான் ஆக வேண்டும். அதனால்தான் இந்தக் கடிதம்.

அப்புறம் அவள் வளர்ந்த விதமே வேறு, மொழி பிரச்னையிருக்கும். உங்களுக்கு சரிபட்டு வராது. அதனால் நீங்கள் அங்கிருப்பதே சரி. நான் அவ்வப்போது அங்கே வந்து பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் சம்மதித்தால் அவளை அங்கு ஒரு முறை அழைத்து வர முயற்சிக்கிறேன் அவளும் சம்மதித்தால், ஏனெனில் கிராமம் அவளுக்கு பழக்கமில்லை.'

அன்றிலிருந்துதான் மகாதேவனின் முகத்தில் சதா குடிகொண்டிருக்கும் சிரிப்பு காணாமலே போனது.

சியாமளா அழுது புலம்பினால், அவர் வீட்டை விட்டு எழுந்து வெளியே போய்விடுவார். ஆனால், மனசுக்குள் நிலை குலைந்து போயிருந்தார் போலும். வெளியே சொல்லாமல் மனசுக்குள் மருகியதாலோ என்னவோ நாளாவட்டத்தில் உடல்நலம் கெட்டு நடமாட்டம் குறைந்து பின் படுக்கையில் விழுந்தார்.

இது மாதிரியே இரண்டு வருடம் ஓடிப் போயிற்று. அதன்பின் அவர் படுத்த படுக்கையானார். பேச்சும் நின்று போயிற்று. இறப்பதற்கு முதல்நாள் வாய் திறந்து பேசினார்.

"என்னம்மா? யோசனை பண்றே?' ரமணியின் குரல் இந்தக் காலத்துக்கு அவளை இழுத்து வந்தது.

"அம்மா நான் சென்னையில் சொந்த வீடு வாங்க இருக்கேன். சிட்டிக்குள்ள வாங்கறதுன்னா எக்கச்சக்கமா ஆகுது. முழுசா லோன் போட முடியாது. இந்த வீட்டை வித்து, அப்பாவுக்கு ரிடையர் ஆனப்போ பணம் வந்திருக்குமே. அதையும் சேர்த்து முதல்ல கட்டிட்டா பாக்கியை நான் லோன் போட்டு வாங்கிப்பேன்.'

"ஏம்ப்பா, இப்போ மட்டும் எனக்கும் உன் பொண்டாட்டிக்கும் ஒத்துப் போகுமா?' என்று அப்பாவி போல் கேட்டாள் சியாமளா.

தர்மசங்கடமாக உணர்ந்தாலும், "சட்' என சமாளித்துக்கொண்டே "அம்மா, நீ எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போறவளாச்சே. நீ சமாளிச்சிப்பே. இனிமே இங்க நீ தனியா இருக்க முடியுமா? சொல்லு. நீ அங்க வந்துட்டா எங்களுக்கும் சௌகரியமாயிருக்கும். மூணு வருஷம் கழிச்சு அவளுக்கு இப்போ மூணு மாசம் ஆயிருக்கு. டாக்டர் ரொம்ப வீக்கா இருக்கா; ஓய்வு தேவைன்னு சொல்லியிரக்கார். குழந்தை பிறந்த பிறகும் நீ இருந்தா குழந்தையைப் பார்த்துக்கவும் சௌகர்யமாக இருக்கும்' என்றான் குழைந்த குரலில்.

"ஓஹோ... நீ இதையெல்லாம் பிளான் பண்ணிக்கிட்டுத்தான் வந்தியாக்கும்? நான் இங்க தனியா இருக்கப் போறதா யார் சொன்னா? நம்ப வீட்டுல சமையல் பண்ணிக் கிட்டு இருக்காங்களே கோமதி மாமி, அவங்களும் அவங்க வீட்டுக் காரரும் ஆறு மாசமா இங்கதான் இருக்கா. வசதி இல்லாதவங்க. குழந்தை குட்டி கிடையாது. என்ன நாங்க இருந்தும் இல்லாதவங்க. அவங்களுக்கு இல்லவே இல்லை. இதான் வித்தியாசம். இவர் படுத்துக்கிட்டபோது நான் தனியா கஷ்டப்பட்டதைப் பார்த்து தானே வந்து ஒத்தாசை பண்ணுவாங்க. இங்கேயே இருங்கன்னு சொல்லிட்டேன். ஒருத்தருக்கொருத்தர் உதவி. அவ்வளவுதான்..'

"இன்னொண்ணும் சொல்லிடறேன்' என்று தொடர்ந்தாள், "இந்த வீட்டை நீ விற்க முடியாது இது அவர் சம்பாத்தியத்தில் கட்டிய வீடு. இதை எனக்குப் பிறகு முதியோர் இல்லத்துக்குன்னு எழுதி வச்சுட்டார். போஸ்டாபிஸ்ல ஃபிக்ஸட்ல இருக்கற பணத்தோட வட்டியை நான் உயிரோட இருக்குமட்டும் நான் எடுத்துக்கலாம். அப்புறம் அது முதியோர் இல்ல பராமரிப்புக்குப் போய் சேரும்னு எழுதிட்டார். இதெல்லாம் கடைசியா அவர் பேசும்போது சொன்னபோதுதான் எனக்கே தெரியும். நான் இப்பவே அவர் எண்ணத்தைச் செயல்படுத்த ஆரம்பிச்சுட்டேன். அது கோமதி. கோவிந்து மாமாவிலிருந்து ஆரம்பம் ஆயாச்சு. என் கணவரோட ஆத்மா சாந்தி அடைஞ்சுடும். அப்புறம், உன் பெண்டாட்டியை பார்த்துக்கணும்னா இங்க கொண்டு விடு; பிரசவம் பார்த்து அனுப்பறேன்' சொல்லிவிட்டு "இனி பேச எதுவுமில்லை' என்பதுபோல கண்களை மூடிக் கொண்டாள் சியாமளா.

மீரா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 24, 2011 12:17 pm

மனைவிக்கு வேலைக்காரியாக அம்மா வேணுமா
சரியான சவுக்கடி கொடுத்தாங்க மகனுக்கு .........
இப்படி எல்லோர் வீட்டிலும் நடந்தால் நல்லா இருக்கும்.
முதியோர் இல்லம் போகும் பெற்றோர்கள் படும் வேதனை குறையும்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக