புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
4 Posts - 3%
prajai
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
4 Posts - 3%
Jenila
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
2 Posts - 2%
jairam
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
1 Post - 1%
M. Priya
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
1 Post - 1%
kargan86
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
8 Posts - 5%
prajai
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
6 Posts - 4%
Jenila
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
4 Posts - 2%
Rutu
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
3 Posts - 2%
Baarushree
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
2 Posts - 1%
manikavi
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_m10சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு


   
   

Page 1 of 2 1, 2  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 9:23 am

தமிழ்ப்புத்தாண்டு பற்றிய தி.மு.க. அரசின் சட்டம் ரத்து, சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு. புதிய மசோதா நிறைவேறியது

தை மாதத்தை தமிழ் புத்தாண்டாக மாற்றி தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டம் தமிழக சட்டசபையில் நேற்று ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்படும்.

கடந்த பல ஆண்டுகளாக சித்திரை மாதத்தின் (ஏப்ரல் மாதம்) முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்தது. இதை, முந்தைய தி.மு.க. அரசு மாற்றியது.

தை மாதம் (ஜனவரி மாதம்) முதல் தேதியில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று அறிவித்து, 2008-ம் ஆண்டு அதற்கான சட்டத்தை (தமிழ்ப் புத்தாண்டு விளம்புகைச் சட்டம்) அப்போதைய அரசு நிறைவேற்றியது.

அ.தி.மு.க. முடிவு

இந்த நிலையில் புத்தாண்டு தினத்தை பழையபடி சித்திரை மாதத்தில் கொண்டாடுவதற்கு அ.தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு வழிவகை செய்வதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

2011-ம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை) நீக்கச் சட்ட முன்வடிவு என்ற சட்ட மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் நேற்று சட்டசபையில் அறிமுகம் செய்தார். முன்னதாக அவர் சட்டசபையில் அதற்கான அனுமதி கோரினார்.

தாக்கல் செய்தார்

அனுமதி அளிக்கப்பட்டதும், அந்த சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2008-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை) சட்டம், தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு நாளாக கொண்டாட வேண்டும் என்று அறிவித்தது. இந்த மசோதா மூலம், 2008-ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு சட்டம் நீக்கப்படுகிறது.

அறிஞர் கருத்துகள்

பொதுமக்களும், தொல்பொருள் ஆராய்ச்சி அறிஞர்களும், வானியல் வல்லுனர்களும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள அறிஞர்களும் 2008-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தைப் பற்றி, `தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடிவரும் வழக்க நடைமுறைக்கு அது மாறாக உள்ளது' என்ற தங்களது கருத்துகளை வெவ்வேறு ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.

2008-ம் ஆண்டு சட்டத்தை நீக்க வேண்டும் என்று சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் பழமை வாய்ந்த நடைமுறையை மீட்டுத்தர வேண்டும் என்றும் அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

நீக்க முடிவு

மேலும், தை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக பின்பற்றுவது, பொதுமக்களிடையே நடைமுறை இடர்பாடுகள், தடை, எதிர்ப்பு போன்றவற்றை 2008-ம் ஆண்டு சட்டம் ஏற்படுத்தியுள்ளது.

எனவே சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் முந்தைய வழக்கத்தை மீட்பதற்காக, 2008-ம் ஆண்டு சட்டத்தை நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து சட்டமசோதாவை அறிமுகம் செய்வதற்கான தீர்மானத்தை எம்.எல்.ஏ.க்களின் குரல் ஓட்டுக்கு சபாநாயகர் டி.ஜெயக்குமார் விட்டார். அந்தத் தீர்மானத்துக்கு ஏகோபித்த ஆதரவு தெரிவிக்கப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அ.தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மேஜையைத் தட்டி உற்சாக ஒலி எழுப்பினர்.

ஜெயலலிதா

பின்னர் மதியம் தமிழ்ப்புத்தாண்டு நீக்க சட்டமசோதா மீது விவாதம் நடைபெற்றது. இதன் மீது செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி), ஏ.சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு) ஆகியோர் பேசினார்கள்.

பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

இந்த சட்டத்தினால் மக்களுக்கு, எந்த வித நன்மையும் இல்லை. மாறாக, ஆண்டாண்டு காலமாக சித்திரை மாத பிறப்பை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடிக்கொண்டு இருக்கும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்த சட்டம் அமைந்துள்ளது.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாக கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு, இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாக கொண்டமைந்த ஆண்டு கணக்கீடு தான் பூர்வீகத்தமிழ் மரபாக இருக்க முடியும். மேலும், பல்வேறு கல்வெட்டுகளும், எண்ணற்ற இலக்கியங்களும், சித்திரை மாதம் முதல் நாளன்று தமிழ்ப்புத்தாண்டு தொடங்குவதை உறுதிப்படுத்துகின்றன.

சட்டம் இயற்றப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், சித்திரை திங்கள் முதல் நாளையே கோடான கோடி தமிழ் மக்கள் தமிழ்ப்புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. எனவே, தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்த சட்டத்தினை ரத்து செய்வது தான் பொருத்தமாக இருக்கும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்

மசோதா நிறைவேறியது

பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து இனி சித்திரை 1-ந் தேதி தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்படும்.

தினதந்தி

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 9:32 am

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழ்ப்புத்தாண்டு தினம் மாற்றப்படுகிறது - சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு

மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் தமிழ்ப்புத்தாண்டு தினம் மாற்றப்படுவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சட்ட மசோதா

சட்டசபையில் நேற்று வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. துறையின் அமைச்சர்கள் பி.தங்கமணி, முகமது ஜான் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார்கள்.

பின்னர் தமிழ்ப்புத்தாண்டு நீக்க சட்ட மசோதா மீது உறுப்பினர்கள் பேசினர். அப்போது பேசிய உறுப்பினர் செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) தை 1-ந் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தை மீண்டும் சித்திரை 1-ந் தேதிக்கு மாற்றுவது சரிதான் என்று கூறினார். ஆனால், ஏ.சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு) பேசும்போது, ``இந்த சட்டமசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்'' என்று குறிப்பிட்டார். அப்போது தமிழ்ப்புத்தாண்டு நீக்க சட்ட மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்புத்தாண்டு தினம்

தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும், தனக்கு மட்டுமே அக்கறை இருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை பொதுமக்கள் மத்தியில் உருவாக்குவதற்காக, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு தமிழ்ப்புத்தாண்டு (விளம்புகை) சட்டம், 2008-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டம், ஒரு சுய விளம்பரத்திற்காக இயற்றப்பட்டதே தவிர, இந்த சட்டத்தினால் மக்களுக்கு, எந்த வித நன்மையும் இல்லை. மாறாக, ஆண்டாண்டு காலமாக சித்திரை மாத பிறப்பை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடிக்கொண்டு இருக்கும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்த சட்டம் அமைந்துள்ளது.

ஒரு நாட்டிலே, ஒரு சட்டம் இயற்றப்படுகிறது என்றால், அந்த சட்டம், அந்த நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் அல்லது இது போன்ற சட்டம் தேவை என்று மக்கள் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், அந்த சட்டம் இயற்றப்படுவதற்கான காரணங்கள் தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும். இவை எதுவுமே இல்லாமல், யாருக்கும் பயனளிக்காத ஒரு சட்டத்தை முந்தைய தி.மு.க. அரசு ஏற்படுத்தி உள்ளது. இந்த சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து, உடனடியாக சென்னையில் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சித்திரை முதல் நாள்

கருணாநிதியின் துதிபாடிகள் அனைவரும் அவரைப் போற்றினர். இதை தவிர, வேறு யாருக்கும் எந்த வித நன்மையும் இந்த சட்டத்தினால் ஏற்படவில்லை. தமிழக மக்கள் மத்தியில் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதற்காக, தமிழுக்கு மிகப்பெரிய சிறப்பினை செய்தது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்காக, இது போன்ற சட்டத்தை கருணாநிதி இயற்றியுள்ளார் என்பது தான் உண்மை.

தமிழர் காலக்கணிப்பு முறையின்படி, ஒரு ஆண்டுக்குரிய 12 மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். இது சூரியனின் நகர்வை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகிறது. சூரியன், மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதம் ஆகும். ஆண்டின் தொடக்கம் வசந்தமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், சித்திரை மாதத்தை ஆண்டு தொடக்கமாக நம் மூதாதையர்கள் கணக்கிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. பல்லாண்டு காலமாக, சித்திரை முதலாம் நாளையே புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பண்டை தமிழர்கள்

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாக கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு, இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாக கொண்டமைந்த ஆண்டு கணக்கீடு தான் பூர்வீகத்தமிழ் மரபாக இருக்க முடியும். கோடைக்காலமே முதலாவது பருவம் என சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளது.

"சித்திரையே வா! நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா!'' என்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தால், சித்திரை மாதமே தமிழ்ப்புத்தாண்டுக்கு உரிய, பொருத்தமான நாள் ஆகும் என தெய்வத்திரு மதுரை ஆதினம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். சித்திரைத்திங்கள் முதல் நாளை ஆண்டின் தொடக்க நாளாக கொண்டாடலாம் என பல அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பண்டைத்தமிழர் வானவியல் ஆதாரப்படி, தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் சித்திரை மாதம் தான்.

வரலாற்று சான்றுகள்

சங்க இலக்கியத்தின் மிகப் பழைய இலக்கியமான, பத்துப்பாட்டு இலக்கியத்தின் நெடுநல்வாடையில், சூரியன் மேஷத்தில் சஞ்சாரம் செய்து சுழற்சியைத் தொடங்கும் உண்மையை நக்கீரனார் தெளிவுபடுத்தி இருக்கிறார். சென்னை பல்கலைக்கழகத்தால் 1912-ம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் பேரகராதியிலும் சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசவைக் கவிஞராக இருந்த நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையும் "சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்'' என்ற தனது வாழ்த்துப்பாடலின் மூலம் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், பல்வேறு கல்வெட்டுகளும், எண்ணற்ற இலக்கியங்களும், சித்திரை மாதம் முதல் நாளன்று தமிழ்ப்புத்தாண்டு தொடங்குவதை உறுதிப்படுத்துகின்றன. இந்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட போது, இதை வரவேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி உறுப்பினர் என்.நன்மாறன், தமிழ்ப்புத்தாண்டை மாற்றி அமைத்ததற்கான காரணங்கள் இருந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். ஆனால், கடைசி வரையில் அதற்கான காரணங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை.

மக்கள் நம்பிக்கை

மேற்படி சட்டம் இயற்றப்படும் போது, அதற்கான நோக்க காரண விளக்க உரையில், தை திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்பதால், தைத்திங்கள் முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் என அறிவித்து, நடைமுறைப்படுத்திட அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் பொருட்டு சட்டம் இயற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் இயற்றப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், சித்திரை திங்கள் முதல் நாளையே கோடான கோடி தமிழ் மக்கள் தமிழ்ப்புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. மக்கள் நம்பிக்கையை சட்டம் மூலம் மாற்றுவது சரியல்ல.

மசோதா நிறைவேறியது

எனவே, தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், யாருக்கும் பயனளிக்காத, காலங்காலமாக போற்றி பாதுகாத்து வந்த மரபுகளை மீறுகின்ற, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துகின்ற, இந்த சட்டத்தினை ரத்து செய்வது தான் பொருத்தமாக இருக்கும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்டமசோதா ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேறியது.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Aug 24, 2011 9:33 am

இதை தவிர அம்மையார் ஒன்னும் உருப்படியா செய்ய போறதில்லை.. தமிழ்நாட்டின் கேடு...



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 9:34 am

தமிழ்ப்ரியன் விஜி wrote:இதை தவிர அம்மையார் ஒன்னும் உருப்படியா செய்ய போறதில்லை.. தமிழ்நாட்டின் கேடு...

இது மிகவும் முக்கியமானதுதானே விஜி.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Aug 24, 2011 9:38 am

Admin wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote:இதை தவிர அம்மையார் ஒன்னும் உருப்படியா செய்ய போறதில்லை.. தமிழ்நாட்டின் கேடு...

இது மிகவும் முக்கியமானதுதானே விஜி.

எதுக்கு சிவா அண்ணா ?



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 9:41 am

காலம் காலமாக சித்திரைதானே நமக்குப் புத்தானடு. அதை ஏன் தைப்புத்தாண்டு என மாற்ற வேண்டும்?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 9:46 am

தமிழ் புத்தாண்டு மாற்றம் : கருணாநிதி கண்டனம்

சென்னை: தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றி சட்டம் கொண்டு வந்ததற்கு, கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள, "கேள்வி-பதில்' அறிக்கை:

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு பதிலாக, சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் வகையில் அ.தி.மு.க., அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளதே?

மறைமலையடிகள் தலைமையில் 1921ம் ஆண்டு, ஐநூறு புலவர் பெருமக்கள் கூடி, அவர்கள் ஆழமாக விவாதித்து, ஆய்ந்தறிந்து அறிவிக்கப்பட்ட ஒன்று தான், திருவள்ளுவர் ஆண்டு என்பதும், ஆண்டு தொடக்கம் தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் நாளில் தான் என்றும் முடிவு செய்தனர். அந்த ஐநூறு புலவர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவின்படி, தி.மு.க., ஆட்சியில், தை முதல் நாளை தமிழாண்டு தொடக்க நாள் என்றும், அதையொட்டித் தான், திருவள்ளுவர் ஆண்டு என்றும் வரையறுத்து கொண்டாடி வருகிறோம். தி.மு.க., அரசின் சட்டத்தை ரத்து செய்து, அ.தி.மு.க., அரசு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த போது, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சியினரும் அதை எதிர்த்துள்ளனரே?

அவர்களின் தமிழ் உணர்வுக்கு நான் தலைவணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 9:53 am

சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு: சமத்துவ மக்கள் கட்சி நன்றி - சரத்குமார் அறிக்கை

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சித்திரை திருநாள் தமிழ் மக்களின் பாரம்பரியத்தோடு இணைந்துவிட்ட திருநாளாகும். எனவே தான் சித்திரை திருநாளை தமிழ் புத்தாண்டு தினம் என்று அனைத்து தமிழ் மக்களும் கொண்டாடி வருகிறார்கள். எந்த ஒரு தேவையும் இன்றி, அவசியமும் இன்றி தமிழ்ப்புத்தாண்டு தினத்தை தி.மு.க. ஆட்சியாளர்கள் மாற்றி அறிவித்தனர். இதனை கேட்டு தமிழ் மக்கள் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

அந்த வேதனையை தீர்க்கும் அருமருந்தாக முதல்-அமைச்சரின் ஆலோசனையின்பேரில் சித்திரை திருநாள் தான் தமிழ்ப்புத்தாண்டு தினம் என்று மீண்டும் அறிவித்திருப்பது தமிழர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 9:54 am

சித்திரை முதல் நாள் மீண்டும் தமிழ்ப்புத்தாண்டா? கி.வீரமணி கண்டனம்

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நாகபட்டினத்தில், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் தை மாதம் முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டுவரப்பட்ட சட்டம் நடைமுறையில் உள்ளது. மறைமலை அடிகள், கா.சு.பிள்ளை, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களால் ஏற்கப்பட்டு வலியுறுத்தப்பட்டதுதான் `தை' மாதம் முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு தொடக்கம் என்பதாகும்.

அதை மாற்றி மீண்டும் சித்திரை முதல் தேதி தான் தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு என்று அ.தி.மு.க. அரசு, சட்டம் இயற்றுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

இவ்வாறு கி.வீரமணி கூறினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 9:57 am

தமிழ்ப்புத்தாண்டு மாற்றத்துக்கு பா.ஜ.க. வரவேற்பு - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சித்திரை மாதம் முதல் தேதியை தமிழ்ப்புத்தாண்டு என்ற தமிழக அரசு அறிவிப்பை முழுமனதோடு வரவேற்பதாக பா.ஜ.க.தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இது குறித்து, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தை மாதம் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கடந்த தி.மு.க.ஆட்சியில் அறிவிக்கப்பட்டபோது அதை பா.ஜ.க. எதிர்த்தது. மக்கள் பாரம்பரியமாக கடைப்பிடித்துவரும் ஒரு நிகழ்வை திடீரென மாற்றக்கூடாது என்றும், சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.

இப்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு சித்திரை மாதம் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதை பா.ஜ.க. முழுமனதோடு வரவேற்கிறது.

இந்த சட்டத்தை எதிர்காலத்தில் ஆட்சிக்கு வருவோர் மீண்டும் மாற்றம் செய்யாதபடி தகுந்த சட்ட திருத்தங்களையும் அதற்கான சட்ட நடவடிக்கைகளையும் இந்த அரசு இப்போதே நிறைவேற்ற வேண்டும்.

அதற்கு பா.ஜ.க. உறுதுணைபுரியும், இந்த சட்ட திருத்தம் தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

அரசு பஸ்களில் பொறிக்கப்பட்டிருந்த தமிழக அரசின் `கோபுரம்' சின்னத்தை மீண்டும் இடம்பெறச்செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக