ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமால் சக்கரம்

4 posters

Go down

திருமால் சக்கரம் Empty திருமால் சக்கரம்

Post by திவ்யா Mon Aug 22, 2011 3:19 pm





திருமால் சக்கரம் ST_180231000000
ஒருசமயம்,
லட்சுமி தாயார் திருமாலிடம், பெருமாளே! பக்தனுக்குரிய தகுதி என்ன?
என்றாள். தேவி! இறைவனுக்காக தன்னையே அர்ப்பணிக்க தயாராக இருப்பது தான்
பக்தனின் லட்சணம். இதை நானும், சிவபெருமானுமே செய்து காட்டியுள்ளோம்,
என்றார். அப்படியா! அந்த சம்பவத்தை விளக்குங்களேன், என லட்சுமி தாயார்
கேட்க, அதை ஆர்வமாக எடுத்துரைத்தார் திருமால். தேவி! சலந்தரன் என்னும்
அசுரன் தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனது தந்தை
சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே
இல்லாமல் இருந்தது. இந்திரனை ஓடஓட விரட்டிய அவன், விதியை நிர்ணயிக்கும்
பிரம்மாவின் விதியையே கூட சிறிது நேரம் மாற்றி விட்டான். அவரை ஒருமுறை
பிடித்த அவன், கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டான். பிரம்மா,
அவனிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. இதையடுத்து,
அவன் என்னைக் குறிவைத்தான். என்னை அவனால் வெல்ல முடியவில்லை. அதே நேரம்,
அவனையும் கொல்ல என்னால் முடியவில்லை.

அந்தளவுக்கு அவனது தவபலம் இருந்தது. எனவே, அவனுக்கு வரமருளிய சிவனால்
தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற் கேற்ப, அவனும்
ஒருமுறைகைலாயம் சென்றான். அங்கே, சிவபெருமான் ஒரு முதியவரின் வேடத்தில்
இருந்தார். அவரிடம் சலந்தரன், சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம்
செய்து, கைலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன், என்றான். சிவன் அவனிடம்,
நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான்
வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி
உறுதி,என்றார். தாராளமாக! தேர்வைத்துவக்கலாம், என்றான். சிவன் தன் கால்
விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டார். இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம்,
என்றார். சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்றவன், வட்டம்
போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக்
கொண்டான். அந்த வட்டச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு
துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான், என்று முடித்தார்
பெருமாள்.

லட்சுமி தொடர்ந்தாள். சக்தி வாய்ந்த அந்த சக்கரம் இப்போது யாரிடம்
உள்ளது? என்றாள். இதோ! என் கையில் சுழல்கிறதே! அது தான் அந்த சக்கரம்.
எதிரிகளின் தலையை இது கொய்து விடும், என்றார் பெருமையாக. ஆமாம்! அசுரனைக்
கொன்ற சக்கரம் உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்றாள் லட்சுமி. அன்பே! இந்த
சக்கரத்தைப் பெறுவதற்காக நான் ஒரு கண்ணையே இழந்து திரும்பப் பெற்றேன்,
என்றார் பெருமாள். அப்படியா! அதைப் பற்றி சொல்லுங்களேன், என்றாள் தாயார்.
லட்சுமி! இந்த சக்கரம் என்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் அசுரர்களைக்
கொல்வதற்கு பயன்படும் என்று உணர்ந்தேன். சிவனிடம் அதைக் கேட்டேன்.
பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் லிங்க வடிவில் தான்
இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால், சக்கரம் கிடைக்குமென்றும்
சிவன் கூறினார். நானும் அங்கு சென்றேன். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால்
லிங்க பூஜை செய்தேன். ஒருநாள், ஒரு பூ குறைந்தது. நான் சற்றும்
யோசிக்காமல் என் கண்ணை மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் வைத்தேன்.
என் பூஜையை மெச்சிய சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தைப் பரிசாக
அளித்தார், என்றார். கோயில்களில் கண்மலர் நேர்ச்சை நடக்கிறதல்லவா! அது,
இந்த சம்பவத்தின் அடிப்படையில் தான் செய்யப்படுகிறது.



திருமால் சக்கரம் Dove_branch
திருமால் சக்கரம் Dதிருமால் சக்கரம் Iதிருமால் சக்கரம் Vதிருமால் சக்கரம் Yதிருமால் சக்கரம் Aதிருமால் சக்கரம் Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

திருமால் சக்கரம் Empty Re: திருமால் சக்கரம்

Post by kitcha Mon Aug 22, 2011 3:22 pm

அருமையான பதிவு.தெய்வீகமான கட்டுரை. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
தெரியாத விஷயத்தை தெரிந்து கொண்டேன்.

பதிவு செய்தமைக்கு நன்றி திவ்யா


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருமால் சக்கரம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

திருமால் சக்கரம் Empty Re: திருமால் சக்கரம்

Post by திவ்யா Mon Aug 22, 2011 3:24 pm

kitcha wrote:அருமையான பதிவு.தெய்வீகமான கட்டுரை. திருமால் சக்கரம் 224747944 திருமால் சக்கரம் 2825183110 திருமால் சக்கரம் 677196
தெரியாத விஷயத்தை தெரிந்து கொண்டேன்.

பதிவு செய்தமைக்கு நன்றி திவ்யா
திருமால் சக்கரம் 678642 திருமால் சக்கரம் 154550


திருமால் சக்கரம் Dove_branch
திருமால் சக்கரம் Dதிருமால் சக்கரம் Iதிருமால் சக்கரம் Vதிருமால் சக்கரம் Yதிருமால் சக்கரம் Aதிருமால் சக்கரம் Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

திருமால் சக்கரம் Empty Re: திருமால் சக்கரம்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 22, 2011 4:15 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி திவ்யா நன்றி நன்றி



திருமால் சக்கரம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருமால் சக்கரம் Empty Re: திருமால் சக்கரம்

Post by பூஜிதா Mon Aug 22, 2011 4:24 pm

தெய்வீக கட்டுரை பகிர்ந்தமைக்கு நன்றி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

திருமால் சக்கரம் Empty Re: திருமால் சக்கரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum