ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணும் எழுத்தும் "கண்'ணெனத் தகும்! - இதைப் படிங்க முதலில்

Go down

எண்ணும் எழுத்தும் "கண்'ணெனத் தகும்! - இதைப் படிங்க முதலில்  Empty எண்ணும் எழுத்தும் "கண்'ணெனத் தகும்! - இதைப் படிங்க முதலில்

Post by kitcha Fri Aug 19, 2011 12:01 pm

சென்னை: பல்லாவரம் அரசு பள்ளியில் கண் பார்வையற்ற ஆசிரியர் ஒருவர், தாம் எடுக்கும் பாடத்தில், மாணவர்களை நூறு சதவீத தேர்ச்சி அடைய வைத்து சாதனை செய்து வருகிறார். பல்லாவரம் மறைமலையடிகளார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த பத்தாண்டுகளாக சமூக அறிவியல் ஆசிரியராகப் பணி யாற்றி வருபவர் கோவில் பிள்ளை, 52. கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவரிடம் பயிலும் 9,10 ஆம் வகுப்பு மாணவர்கள், இதுவரை தொடர்ந்து நூறு சதவீத தேர்ச்சி அடைந்து வருகின்றனர். இவரிடம் அன்பாகவும் நடந்து கொள்கின்றனர். குறைபாடற்ற ஆசிரியர்களை யே கிண்டலடித்து, கீழ்படியாமல் போகும் மாணவர்கள் மத்தியில் இது எப்படி சாத்தியமானது? திருநெல்வேலி யாக்கோபுரத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கோவில்பிள்ளை. பார்வையற்ற பிள்ளை என்பதால், அனைவரிடமும் செல்லம் அதிகம். எட்டாம் வகுப்பு வரை மற்ற பிள்ளைகளைப் போலவே பள்ளி சென்று, அங்கு "வாய்மொழி' கல்வி மட்டும் கற்றிருக்கிறார். "படித்து என்ன செய்யப் போகிறோம், வீட்டில் தான் நம்மை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்களே' என்கிற எண்ணம் வர படிப்புக்கு, "குட்பை' சொல்லிவிட்டு, பாய் முடையவும், பிளாஸ்டிக் ஒயர்களில் நாற்காலிகள் பின்னவும் கற்றுக்கொண்டிருக்கிறார். சில வருடங்கள் கழித்து படிப்பு தான் முக்கி
யம் எனப்பட, மார்த்தாண்டம் அருகில் ஐரேனிபுரத்திலுள்ள பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில், ஏழாம் வகுப்பு சேர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட பள்ளிப் படிப்பு முடிக்கவேண்டிய வயதில், கோவில்பிள்ளையின் கல்வி பயணம் மறுபடியும் தொடர்ந்தது. அதற்கடுத்து கல்வியின் ருசி பிடித்துப்போய் விட, ஒன்பதாம் வகுப்பை பூந்தமல்லியிலும், கல்லூரிப்படிப்பை மாநிலக் கல்லூரியிலும் முடித்திருக்கிறார். இவரது தற்போதைய கல்வித்
தகுதி எம்.ஏ.,எம்.எட்., ராமேசுவரத்தில் தன் ஆசிரியப் பணியை துவக்கிய கோவில்பிள்ளை, அதன் பின் கல்பாக்கம் கூவத்தூரிலும் தற்போது பல்லாவரத்திலுமாக 17 வருடங்களாகப் பணியாற்றிவருகிறார். மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு முன், தன் கதையை முதல் பாடமாக எடுத்து வைக்கிறார். "ஏழைக்குடும்பத்தில், பார்வையில்லாமல் பிறந்து, முறையற்ற வயதில் கல்வி கற்ற நானே ஆசிரியராக, உயர முடியுமென்றால், எந்த அங்கஹீனமும் இல்லாமல், தன் பிள்ளையை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என எண்ணும் பெற்றோருக்கு குழந்தையாய்ப் பிறந்து, சரியான வயதில் கல்வி கற்கும் உங்களால் எவ்வளவு சாதிக்க முடியும்?' எனக் கேட்டவுடன், ஒவ்வொருமாணவ இதயமும் முறுக்கேறிக் கொள்கிறது. இத்தோடு, ஆதரவற்ற குழந்தைகளுக்கான அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார் கோயில் பிள்ளை. இதற்கான தேவைகளை நன்கொடைகள் மூலமாக சமாளிக்கின்றனர். இதில் மாற்றுத் திறனாளிகளும், பெற்றோரை இழந்த குழந்தைகளுமாக 15 பேர் உள்ளனர். இதை நிர்வகித்து வருபவர் கோவில்பிள்ளையின் மனைவி
நவமணி. இவர் எம்.ஏ.,பி.எட்., பட்டதாரியும் கூட. கோயில்பிள்ளையின் மாணவியாயிருந்து, பின் அவர்பால் ஈர்க்க ப்பட்டு, குடும்பத்தை எதிர்த்து அவரது மனைவியானவர். இத்தம்பதிக்கு பிளஸிங், 10, பிளஸி ஜெபராணி, 7, என இரண்டு குழந்தைகள் உள்ளனர். "எல்லா மாணவர்களுக்கும் அரசு புத்தகம் கொடுக்கும் போது, கண் பார்வையற்ற மாணவர்களுக்கும் "பிரெய்லி' புத்தகங்களை வழங்கினால், அவர்களாகவே, படித்துக் கொள்வார்கள்தானே?' என்று எதார்த்தமாக கேட்ட கோயில்பிள்ளையின் வார்த்தைகளில் ஆதங்கம் எதிரொலித்தது.

எப்படி பாடம் நடத்துகிறார்? : கோயில் பிள்ளையின் மனைவி நவமணி அவருக்கு மனைவியாக மட்டும் சேவை செய்யவில்லை. ஒரு தாயாகவும், வழிகாட்டியாகவும், பாடங்களை படித்துக்காட்டும் ஆசிரியராகவும் விளங்குகின்றார். நவமணி ஒருமுறை பாடங்களைப் படித்துக் காட்ட அவற்றை மனனம் செய்து விட்டு, பின் மாணவர்களுக்கு நடத்துகிறார். தின, "டெஸ்டுகளை' நன்றாகப் படிக்கும் மாணவியர் திருத்திவிட, மற்ற தேர்வுத்தாள்களை திருத்துவது நவமணியே. சமச்சீர்க் கல்வி புத்தகத்தை படித்துக் காட்டிய போது, "நல்லா இருக்கில்ல... ஆனா, "கொஸ்டின் ஸ்டைல்' தான் மாறல' என்று அலுத்துக் கொண்டார் என்கிறார் நவமணி.


தினமலர்

எண்ணும் எழுத்தும் "கண்'ணெனத் தகும்! - இதைப் படிங்க முதலில்  Large296943


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எண்ணும் எழுத்தும் "கண்'ணெனத் தகும்! - இதைப் படிங்க முதலில்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum